Students can Download Tamil Chapter 2.3 வாழ்விக்கும் கல்வி Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 வாழ்விக்கும் கல்வி
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம் …
அ) கல்வி
ஆ) காலம் அறிதல்
இ) வினையறிதல்
ஈ) மடியின்மை
Answer:
ஆ) காலம் அறிதல்
Question 2.
கல்வியில்லாத நாடு ……………………… வீடு.
அ) விளக்கில்லாத
ஆ) பொருளில்லாத
இ) கதவில்லாத
ஈ) வாசலில்லாத
Answer:
அ) விளக்கில்லாத
Question 3.
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்’ என்று பாடியவர் ………….
அ) திருக்குறளார்
ஆ) திருவள்ளுவர்
இ) பாரதியார்
ஈ) பாரதிதாசன்
விடை:
இ) பாரதியார்
Question 4.
‘உயர்வடைவோம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது … ……
அ) உயர் + வடைவோம்
ஆ) உயர் + அடைவோம்
இ) உயர்வு + வடைவோம்
ஈ) உயர்வு + அடைவோம்
Answer:
ஈ) உயர்வு + அடைவோம்
Question 5.
இவை + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………….
அ) இவை எல்லாம்
ஆ) இவையெல்லாம்
இ) இதுயெல்லாம்
ஈ) இவயெல்லாம்
Answer:
ஆ) இவையெல்லாம்
சொற்றொடரில் அமைத்து எழுதுக
1. செல்வம் – கல்விச் செல்வமே ஒருவன் பெற வேண்டிய சிறந்த செல்வம்.
2. இளமைப்பருவம் – கல்வி கற்பதற்கு ஏற்ற பருவம் இளமைப்பருவம்.
3. தேர்ந்தெடுத்து – நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படித்திட வேண்டும்.
குறுவினா
Question 1.
மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?
Answer:
- உலகிலுள்ள உயிரினங்களுள் மனிதப் பிறவிக்கு மட்டுமே தனித்தன்மை உண்டு
- ஏனெனில் எதிர்காலத்தைப் பற்றி அறிய இயலாத அருமையான பிறவியே மனிதப் பிறவி
- மற்ற உயிரினங்கள் எதிர்காலத்தில் இவ்வாறுதான் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆனால் மனிதனின் நிலையோ மாற்றம் நிறைந்தது
Question 2.
கல்வி அறிவு இல்லாதவர்கள் பற்றி வள்ளுவர் கூறுவது யாது?
Answer:
- கல்வி அறிவு இல்லாதவர்களை விலங்கோடு ஒப்பிடுகிறார் வள்ளுவர்.
- விலங்குகள் நல்ல செயல்களைத் தாமாகச் செய்வதில்லை.
- அதுபோல கல்வியறிவு இல்லாதவர்கள் நல்லனவற்றைச் செய்வதில்லை என்கிறார்.
Question 3.
நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?
Answer:
படிக்க வேண்டிய நூல்களை ஆழ்ந்து ஆராய்ந்து படிக்க வேண்டும் என்பதே வள்ளுவர் கூறும் கருத்தாகும்.
சிறுவினா
Question 1.
கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.
Answer:
கல்வியே அழியாத செல்வம் :
- இவ்வுலகில் உள்ள செல்வங்கள் அனைத்து அழியும் தன்மையுடையன்: என்றுமே அழியாத செல்வம் கல்விச் செல்வம் ஆகும்.
- அள்ள அள்ளக் குறையாதது, அழிக்கவே முடியாதது அழியாப்புகழைத் தருவது கல்விச் செல்வமே.
- கல்விச் செல்வம் கற்கும் போது கசக்கும்; கற்ற பின் கரும்பாய் இனிக்கும். வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும்.
- இத்தகைய செல்வத்தை என்றும் போற்றிக் காத்திடக் கசடறக் கற்றிடுவோம்.
Question 2.
கல்வியையும் விளக்கையும் திருக்குறளார் எவ்வாறு ஒப்பிடுகிறார்?
Answer:
- விளக்கானது தன்னையும் தன்னைச் சுற்றியுள்ள இடத்தையும் ஒளி வீசச் செய்கிறது.
- அதுபோல கல்வி ஓர் ஒளி விளக்கு , அவ்விளக்கானது; தான் இருக்கும் இடத்தை ஒளிமயமாக மாற்றுகிறது. எனவே ஒருவன் கற்ற கல்வி பலருக்கும் பயன்தர வேண்டும்.
- கல்வியில்லாத நாடு விளக்கில்லா வீடு போன்றது. விளக்கில்லா வீட்டில் குடியிருக்க யாரும் விரும்பாததைப் போலவே, கல்வியில்லாத குடும்பத்தை யாரும் மதிப்பதில்லை.
- நன்மதிப்பைத் தந்து நல்வழியில் வாழச் செய்யும் கல்வியைக் கற்று, கலங்காமல் வாழ்வோம்
சிந்தனை வினா
Question 1.
நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவன யாவை?
Answer:
நல்ல நூலின் இயல்புகள் :
- கருத்துகளை எளிய நடையில் எடுத்துரைத்தல்.
- கூற வந்த செய்தியைச் சுருக்கமாகக் கூறி விளங்க வைத்தல்.
- படிப்பவர்கள் விரும்பிப் படிக்கும் வண்ண ம் இனிய நடையில் இருத்தல்.
- கருத்தாழம் மிக்கதாக இருத்தல் வேண்டும்.
- பயனற்றதை விடுத்து பயனுள்ள கருத்தைத் தருதல்.
- சிறு சிறு கதைகள், எடுத்துக்காட்டுகள் அளித்தல்.
- சான்றோர்களின் கருத்தை மேற்கோள் காட்டுதல்.
- சமுதாயத்திற்கேற்றபடி இருத்தல்.
- இன்றைய சூழலுக்குத் தக்கபடி கருத்தளித்தல்.
கற்பவை கற்றபின்
Question 1.
கல்வி தொடர்பான பாடல் வரிகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
– (எ.கா.) கல்வி கரையில ; கற்பவர் நாள் சில.
(i) மூதுரை
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு. ………. – ஔவையார்
(ii) சிறுபஞ்சமூலம்
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு. …………….. – காரியாசான்