Students can Download Tamil Chapter 1.1 கலங்கரை விளக்கம் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.1 கலங்கரை விளக்கம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
வேயாமாடம் எனப்படுவது ………..
அ) வைக்கோலால் வேயப்படுவது
ஆ) சாந்தினால் பூசப்படுவது
இ) ஓலையால் வேயப்படுவது
ஈ) துணியால் மூடப்படுவது
Answer:
ஆ) சாந்தினால் பூசப்படுவது

Question 2.
உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்
அ) காற்று
ஆ) வானம்
இ) கடல்
ஈ) மலை
Answer:
இ) கடல்

Question 3.
கடலில் துறை அறியாமல் கலங்குவன …….
அ) மீன்கள்
ஆ) மரக்கலங்கள்
இ) தூண்க ள்
ஈ) மாடங்கள்
Answer:
ஆ) மரக்கலங்கள்

Question 4.
தூண் என்னும் பொருள் தரும் சொல் …..
அ) ஞெகிழி
ஆ) சென்னி
இ) ஏணி
ஈ) மதலை
Answer:
ஈ) மதலை

குறுவினா

Question 1.
மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது எது?
Answer:

 • மரக்கலங்களைத் துறை நோக்கி அழைப்பது கலங்கரை விளக்கம்.
 • கடலில் துறை அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன்னை நோக்கி கலங்கரை விளக்கம் அழைப்பதாகக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் தம் பாடலில் அழகாக சிறப்பித்துக் கூறுகிறார்.

Question 2.
கலங்கரை விளக்கில் எந்நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்?
Answer:
கலங்கரை விளக்கில் இரவு நேரத்தில் விளக்கு ஏற்றப்படும்.

சிறுவினா

கலங்கரை விளக்கம் பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறும் கருத்துகளை எழுதுக.
Answer:

 • கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழாமல் தாங்கிப் பிடிக்கும் தூண் போலத் தோற்றமளிக்கிறது.
 • ஏணி கொண்டு ஏற முடியாத அளவிற்கு உயரமாக உள்ளது.
 • திண்மையான அதாவது திடமான கலவைச் சாந்து கொண்டு பூசப்பட்ட வானத்தை முட்டும் மாடத்தை உடையது.
 • இந்த கலங்கரை விளக்கத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு , திசை தெரியாமல் தவிக்கும் மரக்கலங்களைத் தன் துறை நோக்கி அழைப்பதாக புலவர்தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

சிந்தனை வினா

கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளைத் தவிர வேறு யாருக்கெல்லாம் பயன்படும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:

 • கடலில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் மீன் பிடித்து திரும்பவும் கரை சேரவும் இக்கலங்கரை விளக்கம் பெரிதும் துணை புரிகின்றது.
 • கடற்பயணம் சென்று கரை திரும்பும் பயணிகளுக்கு இக்கலங்கரை விளக்கம் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறது.

கற்பவை கற்றபின்

Question 1.

கடற்கரைக்குச் சென்று அங்குள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்க.
Answer:

 • நம்முடைய விடுமுறையை மகிழ்ச்சியாக கழிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கும் ஒரு முக்கிய இடம் கடற்கரை.
 • பல இயற்கைச் சூழல்கள் கலந்த நம்முடைய நாட்டில் பல மாநிலங்கள் கடற்கரையோடு ஒட்டியுள்ளன.

மெரினா கடற்கரை :

 • தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கிலோ மீட்டராகும்.
 • தமிழகக் கடற்கரைகளிலேயே எல்லா நாள்களிலும் அதிக அளவு மக்கள் கூடும் கடற்கரையாக மெரினா கடற்கரை உள்ளது.
 • இதன் அருகில் அண்ணா நினைவிடம், எம்.ஜி.ஆர் நினைவிடம், ஜெயலலிதா நினைவிடம், கலைஞர் கருணாநிதி நினைவிடம் ஆகியவை உள்ளன.

கன்னியாகுமரி கடற்கரை :

 • இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் இந்தக் கடற்கரை அமைந்துள்ளது.
 • உள்ளூர் மட்டுமல்லாது உலகிலுள்ள வெளிநாட்டுப் பயணிகளும் வந்து செல்லும் கடற்கரை இது.
 • இங்கு வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் இணையும் முக்கடல் சங்கமம் உள்ளது.
 • கடலுக்குள் பாறையில் அமைந்திருக்கும் விவேகானந்தர் சிலை மற்றும் 133 அடி 6 உயரத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை ஆகியவை மிகவும் புகழ்பெற்றவை.
 • இங்கு சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காண தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் வருகின்றனர்.

Question 2.
‘கலங்கரை விளக்கம்’ – மாதிரி ஒன்று செய்து வருக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 3.
கடலும் கலங்கரை விளக்கமும் – ஓவியம் வரைந்து வண்ண ம் தீட்டுக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 1.1 கலங்கரை விளக்கம் - 1

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. மதலை – தூண்
2. சென்னி – உச்சி
3. ஞெகிழி – தீச்சுடர்
4. உரவுநீர் – பெருநீர்ப் பரப்பு
5. அழுவம் – கடல்
6. கரையும் – அழைக்கும்
7. வேயா மாடம் – வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாது. திண்மையாகச் சாந்து பூசப்பட்ட மாடம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
‘மதலை’ என்னும் சொல்லுக்குப் பொருள் ………….
அ) தூண்
ஆ) உச்சி
இ) தீச்சுடர்
ஈ) கடல்
Answer:
அ) தூண்

Question 2.
‘ஞெகிழி’ என்னும் சொல்லுக்குப் பொருள்.
அ) தீச்சுடர்
ஆ) பெருநீர்ப் பரப்பு
இ) உச்சி
ஈ) அழைக்கும்
Answer:
அ) தீச்சுடர்

Question 3.
‘அழுவம்’ என்னும் சொல்லுக்குப் பொருள் ……..
அ) அழைக்கும்
ஆ) தூண்
இ) கடல்
ஈ) தீச்சுடர்
Answer:
இ) கடல்

Question 4.
‘சென்னி’ என்னும் சொல்லுக்குப் பொருள் …………
அ) உச்சி
ஆ) தீச்சுடர்
இ) அழைக்கும்
ஈ) கடல்
Answer:
அ) உச்சி]

Question 5.
‘உரவுநீர்’ என்னும் சொல்லுக்குப் பொருள்
அ) பெருநீர்ப் பரப்பு
ஆ) தீச்சுடர்
இ) உச்சி
ஈ) தூண்
Answer:
அ) பெருநீர்ப் பரப்பு

Question 6.
‘கரையும்’ என்னும் சொல்லுக்குப் பொருள் ………
அ) அழைக்கும்
ஆ) கடல்
இ) தீச்சுடர்
ஈ) உச்சி
Answer:
அ) அழைக்கும்

விடையளி:

Question 1.
கலங்கரை விளக்கம் என்றால் என்ன?
Answer:

 • தமிழர் தம்முடைய மதிநுட்பத்தால் தொழில்நுட்ப அறிவினைக் கொண்டு கலம் படைத்து அதாவது, முதலில் படகைத் தயாரித்தனர். படிப்படியாக பாய்மரக்கப்பல், கப்பல் ஆகியவற்றை உருவாக்கினர்.
 • படகுகளைக் கொண்டு மீன் பிடித்தும் வணிகம் செய்தும் வாழ்ந்து வந்தனர்.
 • கடற்பயணம் சென்று கரை திரும்புவதற்குத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே கலங்கரை விளக்கமாகும்.

Question 2.
பத்துப்பாட்டு நூல்களைப் பட்டியலிடுக.
Answer:

 •  திருமுருகாற்றுப்படை
 • பொருநராற்றுப்படை
 • பெரும்பாணாற்றுப்படை
 • சிறுபாணாற்றுப்படை
 • முல்லைப்பாட்டு
 • மதுரைக்காஞ்சி
 • நெடுநல்வாடை
 • குறிஞ்சிப்பாட்டு
 • பட்டினப்பாலை
 • மலைபடுகடாம்

Question 3.
பெரும்பாணாற்றுப்படையின் நூலாசிரியர் பெயர் என்ன?
Answer:
பெரும்பாணாற்றுப்படையின் நூலாசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.

Question 4.
கடியலூர் உருத்திரங்கண்ண னார் சங்கப் புலவரா?
Answer:
ஆம். இவர் சங்கப் புலவர்தான். இவர் கடியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவர்.

Question 5.
கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய நூல்கள் யாவை?
Answer:

 • பெரும்பாணாற்றுப்படை
 • பட்டினப்பாலை

Question 6.
பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் பெயர் என்ன?
Answer:
தொண்டைமான் இளந்திரையன்.

Question 7.
ஆற்றுப்படை என்றால் என்ன?
Answer:
வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசு பெற, பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படையாகும்.

Question 8.
பத்துப்பாட்டில் இடம் பெறும் ஆற்றுப்படை நூல்களைப் பட்டியலிடுக.
Answer:

 • திருமுருகாற்றுப்படை
 • பொருநராற்றுப்படை
 • பெரும்பாணாற்றுப்படை
 • சிறுபாணாற்றுப்படை

பாடலின் பொருள்

கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போலத் தோற்றமளிக்கிறது; ஏணி கொண்டு ஏறமுடியாத உயரத்தைக் கொண்டிருக்கிறது; வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது. அம்மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு, கடலில் துறை அறியாமல் கலங்கும் மரக்கலங்களைத் தன் துறை நோக்கி அழைக்கிறது.