Students can Download Tamil Chapter 2.6 திருக்குறள் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள்

அழுக்காறாமை

1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
தெளிவுரை : ஒருவர் தன் நெஞ்சில் பொறாமையில்லாத குணத்தையே ஒழுக்க
நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.

2. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
தெளிவுரை : பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை
இல்லாதவருடைய வறுமையும் சான்றோரால் ஆராயப்படும்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள்

புறங்கூறாமை

3. கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.
தெளிவுரை : ஒருவருக்கு நேர்நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும்
சொல்லலாம். ஆனால், அவர் இல்லாதபோது புறங்கூறுதல் கூடாது.

4. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
தெளிவுரை : பிறருடைய குற்றத்தைக் காண்பது போல், தன்னுடைய குற்றத்தையும்
காண்பவருடைய வாழ்வில் துன்பம் இல்லை.

அருளுடைமை

5. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
தெளிவுரை : அருளாகிய செல்வமே செல்வங்களுள் சிறந்த செல்வமாகும்.
பொருட்செல்வம் இழிந்தவரிடத்திலும் உள்ளது.

6. வலியார்முன் தன்னை நினைக்காதான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து.
தெளிவுரை : ஒருவர் தன்னைவிட மெலிந்தவரை துன்புறுத்தும்போது, தன்னைவிட
வலிமையுடையவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள்

வாய்மை

7. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
தெளிவுரை : வாய்மை எனப்படுவது மற்றவர்க்கு ஒரு தீங்கும் தராத சொற்களைச்
கூறுதல் ஆகும்.

8. தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
தெளிவுரை : ஒருவர் தன் நெஞ்சறிய பொய் சொல்லக்கூடாது. அவ்வாறு கூறினால்
அவர் நெஞ்சமே அவனை வருத்தும்.

9. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
தெளிவுரை : உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில்
எல்லாம் இருப்பவர் ஆவார்.

இறைமாட்சி

10. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.

தெளிவுரை : பொருள் வரும் வழிகளை அறிதலும், அவ்வழிகளில் பொருள்களைச் சேர்த்தலும், சேர்த்த பொருளைப் பாதுகாத்தலும், காத்த பொருளைப் பயனுள்ள வகையில் திட்டமிட்டுச் செலவிடுதலும் சிறந்த அரசின் செயலாகும்.
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வாய்மை எனப்படுவது.
அ) அன்பாகப் பேசுதல்
ஆ) தீங்குதராத சொற்களைப் பேசுதல்
இ) தமிழில் பேசுதல்
ஈ) சத்தமாகப் பேசுதல்
Answer:
ஆ) தீங்கு தராத சொற்களைப் பேசுதல்

Question 2.
……… செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
அ) மன்ன ன்
ஆ) பொறாமை இல்லாதவன்
இ) பொறாமை உள்ளவன்
ஈ) செல்வந்தன்
Answer:
ஈ) பொறாமை உள்ளவன்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள்

Question 3.
‘பொருட்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) பொரு + செல்வம்
ஆ) பொருட் + செல்வம்
இ) பொருள் + செல்வம்
ஈ) பொரும் + செல்வம்
Answer:
இ) பொருள் + செல்வம்

Question 4.
‘யாதெனின்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) யா + எனின்
ஆ) யாது + தெனின்
இ) யா + தெனின்
ஈ) யாது + எனின்
Answer:
ஈ) யாது + எனின்

Question 5.
தன் + நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது ……..
அ) தன் நெஞ்சு
ஆ) தன்னெஞ்சு
இ) தானெஞ்சு
ஈ) தனெஞ்சு
Answer:
ஆ) தன்னெஞ்சு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள்

Question 6.
தீது + உண்டோ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……….
அ) தீதுண்டோ
ஆ) தீது உண்டோ
இ) தீதிண்டோ
ஈ) தீயுண்டோ
Answer:
அ) தீதுண்டோ

சிறந்த அரசின் பணிகளை வரிசைப்படுத்தி எழுதுக.

அ) பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.
ஆ) பொருள் வரும் வழிகளை அறிதல்.
இ) சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்.
ஈ) பொருள்களைச் சேர்த்தல்.
Answer:
1. பொருள் வரும் வழிகளை அறிதல்
2. பொருள்களைச் சேர்த்தல்
3. சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்
4. பொருளைப் பிரித்துச் செலவு செய்தல்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள்

குறுவினா

Question 1.
எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும்?
Answer:
(i) ஒருவர் தன் நெஞ்சறிய பொய் சொல்லக் கூடாது.
(ii) அவ்வாறு கூறினால் அவர் நெஞ்சமே அவனை வருத்தும்.

Question 2.
வாழும் நெறி யாது?
Answer:
ஒருவர் தன் நெஞ்சில் பொறாமை இல்லாத குணத்தையே ஒழுக்க நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.

Question 3.
உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவன் யார்?
Answer:
உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர்  ஆவார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள்

கீழ்க்காணும் சொற்களைக் கொண்டு திருக்குறள் அமைக்கSamacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள் - 01
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள் - 1

1) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்  செல்வத்துள் எல்லாம் தலை.
2) அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்  பூரியார் கண்ணும் உள.

பின்வரும் பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடு

அறவழி என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் தேசத்தந்தை காந்தியடிகள். அவர் தம் சிறு வயதில் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்தார். அதில் அரிச்சந்திரன் என்னும் மன்னர் பொய் பேசாமை’ என்னும் அறத்தை எத்தகைய சூழ்நிலையிலும் தவறாமல் கடைப்பிடித்தார். இந்த  தக் கண்ட காந்தியடிகள் தாமும் பொய் பேசாமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். அதனைத் தம் வாழ்நாள் முழுவதும் பின்பற்றினார். இப்பண்பே காந்தியடிகள்  எல்லார் இதயத்திலும் இடம் பிடிக்கக் காரணமாக அமைந்தது.

1. ஒழுக்காறக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
2. வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
Answer:
3. உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள்

கூடுதல் வினாக்கள்

Question 1.
தமிழ் நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் எது?
Answer:
தமிழ் நூல்களில் ‘திரு’ என்னும் அடைமொழியோடு வருகின்ற முதல் நூல் திருக்குறள்.

Question 2.
திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது.
Answer:
அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள்

Question 3.
திருக்குறள் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது.
Answer:
திருக்குறள் 133 அதிகாரங்களைக் கொண்டது.

Question 4.
திருக்குறளில் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
Answer:
திருக்குறள் 1330 குறட்பாக்களைக் கொண்டது.

Question 5.
அறத்துப்பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
Answer:
அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் உள்ளன.

Question 6.
திருக்குறளின் வேறு பெயர்கள் குறிப்பிடுக.
Answer:
முப்பால், தெய்வநூல், பொய்யாமொழி போன்ற பிற பெயர்களும் உள்ளன.\

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள்

Question 7.
சான்றோரால் ஆராயப்படுபவை எவை?
Answer:
பொறாமை கொண்டவருடைய செல்வமும், பொறாமை இல்லாதவருடைய வறுமையும்  சான்றோரால் ஆராயப்படும்.

Question 8.
புறங்கூறுதல் கூடாது? வள்ளுவர் வழிநின்று எழுதுக.
Answer:

  • ஒருவருக்கு நேராக நின்று கடுமையான சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம்.
  • ஆனால், அவர் இல்லாதபோது புறங்கூறுதல் கூடாது என்கிறார் திருவள்ளுவர்.
  • புறங்கூறுதல் என்பதன் பொருள் குறை சொல்லுதல்.

Question 9.
ஏவர் வாழ்வில் துன்பம் இல்லை ?
Answer:
பிறருடைய குற்றத்தைக் காண்பதைப் போல தன்னுடைய குற்றத்தையும் காண வேண்டும். அப்படிக் காண்போருடைய வாழ்வில் துன்பம் இல்லை என்கிறார் திருவள்ளுவர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள்

Question 10.
செல்வங்களுள் சிறந்த செல்வம் எது?
Answer:
அருளாகிய செல்வமே செல்வங்களுள் சிறந்த செல்வமாகும். பொருள் செல்வத்தை விட
அருள் செல்வமே சிறந்த செல்வமாகும்.

Question 11.
வாய்மை என்றால் என்ன? வள்ளுவர் வழிநின்று கூறுக.
Answer:
வாய்மை அதாவது உண்மை என்பது மற்றவர்க்கு ஒரு தீங்கும் நேராத நல்ல சொற்களைச் சொல்லுதல் ஆகும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.6 திருக்குறள்

Question 12.
சிறந்த அரசின் செயல்கள் பற்றி வள்ளுவர் வழிநின்று விளக்குக.
Answer:
சிறந்த அரசின் செயல்கள் :

  • பொருள் வரும் வழிகளை அறிதல்,
  • பொருள்களைச் சேர்த்தல்,
  • சேர்த்த பொருளைப் பாதுகாத்தல்,
  • காத்த பொருளைப் பயனுள்ள வகையில் திட்டமிட்டு செலவு செய்தல்.