Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

7th Social  Science Guide மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?
அ) தாதாஜி கொண்ட தேவ்
ஆ) கவிகலாஷ்
இ) ஜீஜாபாய்
ஈ) ராம்தாஸ்
விடை:
அ) தாதாஜி கொண்ட தேவ்

Question 2.
மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?
அ) தேஷ்முக்
ஆ) பேஷ்வா
இ) பண்டிட்ராவ்
ஈ) பட்டீல்
விடை:
ஆ) பேஷ்வா

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 3.
சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?
அ) ஷாகு
ஆ) அனாஜி தத்தா
இ) தாதாஜி கொண்ட தேவ்
ஈ) கவிகலாஷ்
விடை:
ஈ) கவிகலாஷ்

Question 4.
சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது.
அ) பீரங்கிப்படை
ஆ) குதிரைப்படை
இ) காலட்படை
ஈ) யானைப்படை
விடை:
இ) காலட்படை

Question 5.
குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்து விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்
அ) பாலாஜி விஸ்வநாத்
ஆ) பாஜிராவ்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) ஷாகு
விடை:
ஆ) பாஜிராவ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மகாராஷ்டிராவில் பரவிய ………………………….. இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
விடை:
பக்தி

Question 2.
பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர்………………….
விடை:
காமவிஸ்தார்

Question 3.
மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு …………………… இடத்தில் சோகமாய் முடிந்தது.
விடை:
பானிபட்

Question 4.
அஷ்டபிரதானில் இடம் பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ………………..
விடை:
சுமந்த் /துபிர்

Question 5.
சிவாஜியைத் தொடர்ந்து ……………………. வுடனான சச்சரவிற்குப் பின்னர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.
விடை:
அனாஜி தத்தோ

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 2

IV. சரியா? தவறா?

Question 1.
மலை மற்றும் மலைப்பள்ளத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப்பாளர்களிடமிருந்து பாதுகாத்தது.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 2.
பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன.
விடை:
தவறு

Question 3.
சிவாஜி புரந்தரை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்.
விடை:
சரி

Question 4.
தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 200 வரையிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
விடை:
சரி

Question 5.
அப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு பத்து முறை படையெடுத்தார்
விடை:
தவறு

V. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.
காரணம் : மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அ) கூற்றிற்கான காரணம் சரி
ஆ) கூற்றிற்கான காரணம் தவறு
இ) கூற்று சரி, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு
விடை:
ஆ) கூற்றிற்கான காரணம் தவறு

Question 2.
வாக்கியம் -1 : செய்திப்பரிமாற்றக் கடிதங்கள் அடங்கிய கோப்புகளையும், கணக்குப் பதிவேடுகளையும் மதிப்பீடு செய்கையில், ஆவணங்களைத் துல்லியமாகப் பராமரிப்பதில் பேஷ்வாக்கள் கவனமுடன் இருந்தனர்.
வாக்கியம் – II : இரண்டாம் பானிப்பட் போரில் பீரங்கிப்படை முக்கியத்துவம் பெற்றிருந்தது.

அ) சரி
ஆ) II சரி
இ) I மற்றும் II சரி
ஈ) I மற்றும் II தவறு
விடை:
அ) சரி

Question 3.
பொருந்தாததைக் கண்டுபிடிக்க ரகுஜி, ஷாஜி போன்ஸ்லே , சிவாஜி, சாம்பாஜி, ஷாகு
விடை:
ரகுஜி, போன்ஸ்லே

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 4.
தவறான இணையைக் கண்டுபிடிக்க.
1. கெய்க்வாட் – பரோடா
2. பேஷ்வா – நாக்பூர்
3. ஹோல்கா – இந்தூர்
4. சிந்தியா – குவாலியர்
விடை:
பேஷ்வா – நாக்பூர்

Question 5.
காலவரிசைப்படி நிகழ்வுகளை வரிசைப்படுத்துக.
I. சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
II. பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்.
III. சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
IV. பாலாஜி விஸ்வநாத் பேஷ்வாவாக பொறுப்பேற்றார்.
விடை:
1649 – சிவாஜி, தம் பாதுகாவலர் இறந்தவுடன் சுதந்திரமான அரசரானார்.
1656 – சிவாசியின் தந்தை இறந்தவுடன் ஜாவலியின் மீது படையெடுத்தார்.
1713 – பாலாஜி விஸ்வநாத் பீஷ்வாவாக பொறுப்பேற்றார்
1749 – பாலாஜி பாஜிராவ் அரசப்பதவி ஏற்றார்

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்

Question 1.
மராத்தியர்களிடத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்.
விடை:

  • மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
  • மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.

Question 2.
சௌத் மற்றும் சர்தேஷ்முகி
விடை:
சௌத் – மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு 1/4 பாதுகாப்பு கட்டணமாக சர்தேஷ்முகி – பத்தில் ஒரு பங்கு 1/10 அரசருக்கான கட்டணமாக

Question 3.
மராத்தியர்களின் வருவாய் நிர்வாகத்தில் காமவிஸ்தரின் பங்கு
விடை:

  • பீஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் காமவிஸ்தாரி எனும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது.
  • அவர் பீஷ்வாவால் பணியமர்த்தப்பட்டார்.
  • வருவாய்த்துறை ஆவணங்களைப் பராமரிப்பதற்காக சில எழுத்தர்களும் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

Question 4.
சாம்பாஜிக்கு எதிராக முகலாய இராணுவத்தின் தாக்குதல்.
விடை:
முகலாயப் படைகள் சாம்பாஜியைக் கைது செய்தபோது கவிகலேஷீம் உடனிருந்தார். ஆகவே இருவரும் ஔரங்கசீப்பின் கட்டளையின்படி அனைத்து வகைப்பட்ட சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

Question 5.
1761 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போர்.
விடை:
மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761ல் டெல்லிக்கு அருகேயுள்ள பானிபட்டில் முடிந்தது. பஞ்சாபைக் கடந்த தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவடையச் செய்ய மராத்தியர்கள் மேற்கொண்ட முயற்சி ஆப்கானியர்களின் அரசர் அகமது ஷா அப்தலியால் தடுக்கப் பெற்றது.

VII. கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிக்கவும்

Question 1.
மராத்தியர்களின் ஆட்சியில் சிவாஜியின் சிறப்பு அம்சங்களை மதிப்பிடுக.
விடை:

  • சிவாஜியின் அரசியல் முறை மூன்று வட்டங்களைக் கொண்டிருந்தது.
  • முதல் வட்டத்தில் மக்களின் மீது அக்கறை கொண்ட அவர் எந்த வகையிலும் மக்கள் துண்புறுத்தப்படுவதை அனுமதிக்கவில்லை.
  • இரண்டாவது வட்டத்தில் அவர் மேலாதிக்கம் செலுத்தினாலும் நேரடி நிர்வாகத்தை மேற்கொள்ளவில்லை.
  • கொள்ளையடிக்கப் படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களை காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத், சர்தேஷ்முகி ஆகிய வரிகளை செலுத்த வேண்டும்.
  • மூன்றாவது வட்டத்தில் கொள்ளையடிப்பது மட்டுமே சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
  • கிராமங்கள் தேஷ்முக் என்பவர்களால் நிர்வாகிக்கப்பட்டது.
  • ஒவ்வொரு கிராமத்திலும் அதிகாரம் மிக்க ஒரு கிராமத்தலைவர் இருந்தார். அவருக்கு உதவ கணக்கரும், ஆவணக் காப்பாளர் ஒருவரும் பணியாற்றினார்.
  • மைய அரசு இல்லாத நேரத்தில் உள்ளூர் சமுதாய அளவிலான அதிகாரிகள் உண்மையான அரசாய்ச் செயல்பட்டனர்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக.
விடை:
கொள்ளையடிக்கப்படுவதிலிருந்தும், சூறையாடப்படுவதிலிருந்தும் மக்களைக் காப்பாற்றினார். அதற்காக அம்மக்கள் சௌத் (மொத்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு (1/4) பாதுகாப்பு கட்டணமாக) சர்தேஷ்முகி (பத்தில் ஒரு பங்கு (1/10) அரசருக்கான கட்டணமாக) ஆகிய வரிகளைச் செலுத்த வேண்டும்.

பீஷ்வாக்களின் வருவாய்த்துறை நிர்வாகம் காமவிஸ்தார் என்னும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது. அவர் பீஷ்வாவால் பணியமர்த்தப்பட்டார். கப்பமோ, வரியோ வசூலிக்கப்பட வேண்டிய பகுதியில் பாதுகாப்பிற்காக சில வீரர்கள் அடங்கிய படைப்பிரிவை வைத்துக்கொள்ள இவர் அதிகாரம் பெற்றிருந்தார்.

வருவாய்த்துறை ஆவணங்களைப் பராமரிப்பதற்காக சில எழுத்தர்களும் பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டனர். இந்த ஆவணங்களைப் பீஷ்வா அலுவலகம் அங்கொன்று இங்கொன்றாகச் சரி பார்த்தது. வருவாய் வசூலுக்கான ஒப்பந்தங்கள் வருடமொருமுறை ஏலம் விடப்பட்டன.

‘குறிப்பிட்ட ஒரு பகுதியிலிருந்து கடந்த ஆண்டு பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் வசூல் செய்யப்பட வேண்டிய தொகை பீஷ்வாவின் அதிகாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தில் வெற்றி பெற்று எதிர்கால வாய்ப்பினைப் பயன்படுத்த நினைக்கும் வரி அல்லது வருவாய் வசூலிப்பாளர் சொத்துக்கள் உடையவராகவும், நேர்மையானவராகவும் இருத்தல் வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் மொத்த வசூல் தொகையில் மூன்றில் ஒரு பகுதி முதல் சரிபாதிவரை அவர் முதலில் செலுத்திட வேண்டும். தமது சொந்தப் பணத்திலிருந்து அவர் அதைச் செலுத்தலாம் அல்லது வட்டிக்கு கடன் தருவோரிடமிருந்து பெற்றுக் கட்ட வேண்டும்.

IX. வரைபடம்

Question 1.
மராத்தியப் பேரரசின் முக்கிய நகரங்கள் மற்றும் கோட்டைகளைக் குறிப்பிடுக.
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும் )

X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பொருத்துக.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 4

Question 2.
குழுச் செயல்பாடு:
தஞ்சாவூர் மராத்தியர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும் குறிப்பாக அவர்கள் கல்வி, கலை மற்றும் கட்டடக் கலைக்கு ஆற்றிய பங்களிப்புகள்

7th Social  Science Guide மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
அப்தலி இறுதியாக டெல்லியின் மீது படையெடுத்து வருவதற்கு முன் ………………. முறை படையெடுத்துள்ளார்.
அ) 10
ஆ) 8
இ) 6
ஈ) 12
விடை:
ஆ) 8

Question 2.
சாம்பாஜியின் பாதுகாவலராய் இருந்தவர் …………………..
அ) சாகு
ஆ) பாஜிராவ்
இ) கவிகலாஷ்
ஈ) ராஜா ஜெய் சிங்
விடை:
இ) கவிகலாஷ்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 3.
சாதாரண வருவாய்த்துறை அலுவலகராகப் பணியைத் தொடங்கிய …………….. 1713ல் பீஷ்வா ஆனார்.
அ) பாஜிராவ்
ஆ) பாலாஜி விஸ்வநாத்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) அகமது ஷா அப்தலி
விடை:
ஆ) பாலாஜி விஸ்வநாத்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
காமவிஸ்தார் ……………………. ஆல் பணியமர்த்தப்பட்டார்
விடை:
பீஷ்வா

Question 2.
கவிகலாஷ் …………….. செய்பவராகவுமிருந்தார்
விடை:
மாந்திரீகம்

Question 3.
சிவாஜியின் பாதுகாவலரான ……………………. இயற்கை எய்தியபின் முழுமையான சுதந்திரம் பெற்றவரானார்.
விடை:
கொண்டதேவ்

Question 4.
மாரத்திய பிரதம அமைச்சர் ………………. என்று அழைக்கப்பட்டார்
விடை:
பீஷ்வா

Question 5.
சிவாஜியின் தந்தை ………….
விடை:
காஜி போன்ஸ்லே

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 5

IV. சரியா? / தவறா?

Question 1.
தொடக்கத்தில் காலட்படையே சிவாஜியின் இராணுவத்தில் முதுகெலும்பாய்த் திகழ்ந்தது
விடை:
சரி

Question 2.
மராத்தியப் பேரரசில் நியாயதிஸ் என்பவர் நவீனகால பிரதமருக்கு இணையானவர்
விடை:
தவறு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி

Question 3.
சத்ரபதி எனும் சமஸ்கிருத சொல் அரசன் அல்லது பேரரசன் என்பதற்கு இணையானது. இச்சொல்லைமராத்தியர்கள் குறிப்பாகசிவாஜிபயன்படுத்தினார்
விடை:
சரி

V. கூற்றைக் காரணத்தோடு பொருத்துக. பொருத்தமான விடையை (✓) டிக் இட்டுக் காட்டவும்

Question 1.
கூற்று : மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம், மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
காரணம் : மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.

அ) கூற்றிற்கான காரணம் தவறு
ஆ) கூற்று சரி காரணம் தவறு
இ) கூற்றிற்கான காரணம் சரி
ஈ) கூற்றும் மற்றும் காரணம் தவறு
விடை:
இ) கூற்றிற்கான காரணம் சரி

Question 2.
பொருந்தாததைக் கண்டுபிடிக்க பாலாஜி விஸ்வநாத், பாஜிராவ், பாலாஜி பாஜிராவ், அகமது ஷா அப்தாலி –
விடை:
அகமது ஷா அப்தாலி

Question 3.
தவறான இணையைக் கண்டுபிடிக்க.
அமத்யா – நிதியமைச்சர்
சேனாபதி – தலைமைத் தளபதி
வாக்குய் – நாவிஸ் – உள்துறை அமைச்சர்
துபிர் – தலைமை நீதிபதி
விடை:
துபிர் – தலைமை நீதிபதி

VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
மராத்தியர்களுக்கு விசுவாசமாய் இருந்த குடும்பங்களின் பெயர்களை கூறுக.
விடை:
1. கெய்க்வாட் – பரோடா
2. பான்ஸ்லே – நாக்பூர்
3. ஹோல்கார் – இந்தூர்
4. சிந்தி அல்லது சிந்தியா – குவாலியார்
5. பீஷ்வா – புனே

Question 2.
அஷ்டப்பிரதான் என்றால் என்ன?
விடை:

  • அஷ்டப்பிரதான் என்பது மராத்தியப் பேரரசில் இருந்த எட்டு அமைச்சர்கள் ஆவர்
  • இந்த அமைச்சர் குழு 1674 ல் சத்ரபதி சிவாஜியால் அமைக்கப்பட்டது.

VII. விரிவான விடையளி

Question 1.
மராத்தியரின் எழுச்சிக்கான காரணங்கள் யாவை?
விடை:

  • மராத்திய நாட்டின் புவியியல் கூறுகள் மராத்தியர்களிடையே சில தனித்தன்மை வாய்ந்த பண்புகளை வளர்த்திருந்தன. அவை இந்தியாவின் ஏனைய மக்களிடமிருந்து மராத்திய மக்களை வேறுபடுத்திக் காட்டின.
  • பாறைகளும், குன்றுகளும் அடங்கிய நிலப்பகுதி, அந்நிய படையெடுப்பாளரிடமிருந்து மராத்தியருக்கு பாதுகாப்பளித்தது.
  • கொரில்லாப் போர் முறைக்கு உகந்ததாய் விளங்கியது.
  • மகாராஷ்டிராவில் பரவிய பக்தி இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.
  • மராத்திய மக்களிடையே ஒற்றுமையைக் குறிப்பாக சமூகச் சமத்துவத்தை மேம்படுத்தியது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 History Chapter 3 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி 6