Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு Questions and Answers, Notes.
TN Board 7th Social Science Solutions Term 2 History Chapter 2 முகலாயப் பேரரசு
7th Social Science Guide முகலாயப் பேரரசு Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஹீமாயூன்
ஆ) பாபர்
இ) ஜஹாங்கீர்
ஈ) அக்பர்
விடை:
ஆ) பாபர்
Question 2.
அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?
அ) பானிபட்
ஆ) சௌசா
இ) ஹால்டிகட்
ஈ) கன்னோசி
விடை:
இ) ஹால்டிகட்
Question 3.
ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?
அ) பாபர்
ஆ) ஹிமாயூன்
இ) இப்ராஹிம் லோடி
ஈ) ஆலம்கான்
விடை:
ஆ) ஹிமாயூன்
Question 4.
மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஷெர்ஷா
ஆ) அக்பர்
இ) ஜஹாங்கீர்
ஈ) ஷாஜஷான்
விடை:
ஆ) அக்பர்
Question 5.
அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?
அ) பீர்பால்
ஆ) ராஜா பகவன்தாஸ்
இ) இராஜ தோடர்மால்
ஈ) இராஜா மான்சிங்
விடை:
இ) இராஜ தோடர்மால்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
ராணா பிரதாப்பின் குதிரையின் பெயர்…………………. ஆகும்.
விடை:
சேத்தக்
Question 2.
பதேபூர் சிக்ரியிலுள்ள. …………………… அரங்கில் அனைத்து சமய வல்லுநர்களும் கலந்துரையாடினார்கள்.
விடை:
இபாதத் கானா
Question 3.
அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி. ………………
விடை:
சலீம் சிஸ்டி
Question 4.
ஜப்தி என்னும் முறை …………………. ஆட்சிகாலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.
விடை:
ஷாஜகான் .
Question 5.
…………….. வரியில்லா நிலங்கள் மதவல்லுநர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
விடை:
சுயயுர்கள்
III. பொருத்துக
விடை:
IV. சரியா? தவறா?
Question 1.
பாபர் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார்.
விடை:
சரி
Question 2.
ஹிமாயூன் 1565இல் டெல்லியைக் கைப்பற்றினார்.
விடை:
தவறு
Question 3.
ஒளரங்கசீப், ராஜபுதனப் பெண்ணைத் திருமணம் செய்தார்.
விடை:
தவறு
Question 4.
தன் மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தலைவர் குரு அர்ஜூனைத் தூக்கிலிடும்படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.
விடை:
சரி
Question 5.
ஔரங்கசீப் காலக்கட்டத்தில், முகலாய கட்டடக்கலை சிறப்பு பெற்றது.
விடை:
தவறு
V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்
Question 1.
கூற்று : ஆங்கிலேயர் தங்களது முதல் வணிக மையத்தை சூரத்தில் துவங்கினர்
காரணம் : ஜஹாங்கீர் ஆங்கிலேயருக்கு வணிக உரிமையை வழங்கினார்.
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
ஆ) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
Question 2.
கூற்று : ஒளரங்கசீப் மற்ற மதங்களை வெறுத்ததனால் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது.
காரணம் : ஔரங்கசீப் இந்துக்கள் மீது மீண்டும் ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை விதித்தார்
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
ஆ) கூற்றிற்குக் காரணம் சரியான விளக்கமல்ல
இ) கூற்று தவறு, காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
Question 3.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
I. கம்ரான் ஆப்கானியரின் மகனாவார் ஹசன் சூரி பீகாரில் உள்ள சசாரத்தின் ஆட்சியாளர் ஆவர்.
II. அக்பர் இந்துக்களின் மீதான ஜெசியா மற்றும் பாதயாத்திரை வரியை ரத்து செய்தார்.
III. ஒளரங்கசீப் தமது மூன்று சகோதரர்களை கொன்றுவிட்டு, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
IV. இளவரசர் அக்பர், சிவாஜியின் மகனான சாம்பாஜியோடு தக்காணத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
அ) I, II மற்றும் III சரி
ஆ) II, III மற்றும் IV சரி
இ) I, III மற்றும் IV சரி
ஈ) II, III, IV மற்றும் 1 சரி
விடை:
ஆ) II, III மற்றும் IV சரி
Question 4.
காலவரிசைப்படி போர்களை வரிசைப்படுத்துக.
1. கன்வா போர்
2. சௌசா போர்
3. கன்னோசி போர்
4. சந்தேரி போர்
விடை:
Question 5.
கீழ்க்காணும் நிர்வாகப் பிரிவை இறங்கு வரிசையில் அமைத்திடுக.
i) சர்க்கார்
ii) பர்கானா
iii) சுபா |
விடை:
VI. பொருத்துக
விடை:
VII. குறுகிய வினா
Question 1.
1526 இல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழலை எழுதுக.
விடை:
1524 வரையிலும் பஞ்சாப்பைக் கடந்து பாபர் வேறு எதற்கும் ஆசைப்படவில்லை. அச்சமயத்தில் தௌலத்கான் லோடியின் மகன் தில்வார்கான், டெல்லி சுல்தானின் மாமனார் ஆலம்கான் ஆகிய இருவரும் காபூல் வந்தனர்.
டெல்லி சுல்தான் இப்ராகிம் லோடியைப் பதவியை விட்டு நீக்க பாபரின் உதவி கேட்டு வந்தனர். இதுவே 1526 ல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழல் ஆகும்.
Question 2.
ஹிமாயூன் 1555 இல் டெல்லியை மீண்டும் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிடுக.
விடை:
ஷெர்ஷாவால் தோற்கடிக்கப்பட்ட ஹிமாயூன் பாரசிக அரசர் சபாவிட் வம்சத்தை சேர்ந்த ஷா-தாமஸ்ப் என்பவரின் உதவியால் 1555 ல் டெல்லியை மீண்டும் கைப்பற்றினார்.
Question 3.
மன்சப்தாரி முறையைப் பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
மன்சப்தாரி முறையை அக்பர் அறிமுகம் செய்தார். இம்முறையின் கீழ் பிரபுக்கள், ராணுவ அதிகாரிகள், குடிமைப் பணி அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரே பணியாக மாற்றப்பட்டது. இப்பணியிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு மன்சப் (படிநிலை, தகுதி அந்தஸ்து) வழங்கப்பட்டது. அப்படியான தகுதியைப் பெற்றவர் மன்சப்தார் ஆவார்.
VIII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
Question 1.
முகலாயர்களின் நிலவருவாய் முறையைப் பற்றி விவரி
விடை:
அக்பரின் ஆட்சியின்போது நிலவருவாய் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது.
அக்பரின் வருவாய்த்துறை அமைச்சரான ராஜா தோடர்மால் அறிமுகம் செய்த முறையை பின்பற்றினார். அம்முறையை மேலும் சீர் செய்தார்.
தோடர்மாலின் ஜப்த் முறை வடக்கு, வடமேற்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையின்படி நிலங்கள் அளவை செய்யப்பட்டு அவற்றின் இயல்புக்கும் வளத்திற்கும் ஏற்றவாறு வகைப்படுத்தப்பட்டன.
பத்தாண்டு காலத்திற்குச் சராசரி விளைச்சலில் மூன்றில் ஒரு பங்கு அரசுக்கு வரியாக செலுத்தப்பட வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டது. ஷாஜகானின் காலத்தில் ஜப்த் அல்லது ஜப்தி முறை தக்காண மாகாணங்களுக்கும் நீடிக்கப்பெற்றது.
முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறையை ஜாகீர் எனப் பெயரிட்டு செயல்படுத்தினார். இந்நிலவுரிமை ஒப்பந்த காமுறை டெல்லி சுல்தான்கள் காலத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதாகும். இம்முறையின் கீழ் குறிப்பிட்ட ஒரு பகுதியின் நிலவரி வசூல் செய்யும் பொறுப்பும் அப்பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் ராணுவ அல்லது சிவில் அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய பெயர் ஜாகீர்தார் ஆகும்.
தங்களது ஊதியத்தை பணமாக பெறாத ஒவ்வொரு மன்சப்தாரும் ஜாகீர்தார் ஆவார்.
ஜாகீர்தார் தம் அதிகாரிகள் மூலம் நிலவரியை வசூல் செய்தார். மாவட்ட அளவிலான அதிகாரி அமில் சூஜார் ஆவார்.
அவருக்கு பொட்டாடார், கனுங்கோ, பட்வாரி, முக்காதம் போன்ற துணைநிலை அதிகாரிகள் உதவி செய்தனர்.
Question 2.
அக்பர் கற்றலின் பாதுகாவலன் மதிப்பிடுக.
விடை:
- அக்பர் கல்வியைப் பெரிதும் ஆதரித்தார். அவருடைய சொந்த நூலகத்தில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன.
- பல்வேறு விதமான நம்பிக்கைகளையும், கருத்துக்களையும் கொண்டிருந்த அறிஞர்களை அவர் ஆதரித்தார்.
- அபுல்பாசல், அப்துல் பெய்சி, அப்துர் ரகீம் கான் – இ-கான் ஆகிய நூலாசிரியர்கள் சிறந்த கதை ஆசிரியரான பீர்பால், திறமையான அதிகாரிகளான ராஜா தோடர்மால், ராஜா
பகவன்தாஸ், ராஜா மான்சிங் ஆகியோர் அப்பரின் அவையில் இடம் பெற்றிருந்தனர். - பாடலாசிரியரும் இசை மேதையுமான தான்சென், ஒவியர் தஷ்வந் ஆகியோர் அக்பரின் அவையை அலங்கரித்தனர்.
IX. உயர் சிந்தனை வினா
Question 1.
முகலாயர் ஆட்சியில் ஷாஜகானின் காலத்தை மற்ற முகலாய ஆட்சியாளர்களோடு ஒப்பிடுக.
விடை:
- முகலாயப் பேரரசும், அதன் புகழும் உன்னதமும் ஷாஜகான் காலத்தில் உச்சத்தை எட்டியது. பேரரசர் அமர்வதற்காக விலையுயர்ந்த நவரத்தினக் கற்கள் பதிக்கப் பெற்ற மயிலாசனம் தயாரிக்கப்பட்டது.
- யமுனை நதிக்கரையில் புகழ்பெற்ற தாஜ்மஹால் எழுப்பப்பட்டது.
- ஆக்ராவிலுள்ள முத்து மசூதி, டெல்லியிலுள்ள மிகப்பெரிய ஜீம்மா மசூதி ஆகியவை ஷாஜகானால் கட்டப்பட்டவையாகும்.
X. வரைபடம்
Question 1.
முகலாயப் பேரரசில் அக்பர் மற்றும் ஒளரங்கசீப்பின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளைப் குறிக்கவும், முகலாயர்களின் முக்கிய போர்களைக் குறிக்கவும்.
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)
XI. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)
Question 1.
அக்பரின் அவையில் இருந்த வல்லுநர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுக.
Question 2.
மாதிரி இபாத்கானவை வகுப்பறையில் நடத்திக்காட்டுக
7th Social Science Guide முகலாயப் பேரரசு Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்நதெடுத்து எழுதுக.
Question 1.
பாபர் தமக்கு பிடித்த தன் மூத்த மகன் ………………… தம் வாரிசாக அறிவித்தார்.
அ) ஹிமாயூன்
ஆ) ஹிண்டல்
இ) கம்ரான்
ஈ) ஜஹாங்கீர்
விடை:
அ) ஹிமாயூன்
Question 2.
முகலாய மாமன்னர்களில் கடைசி அரசர் ……………..
அ) ஷாஜகான்
ஆ) ஷெர்சா
இ) ஒளரங்கசீப்
ஈ) ஜஹாங்கீர்
விடை:
இ) ஔரங்கசீப்
Question 3.
முகலாயப் பேரரசர்களின் வாழ்விடமான …………….. ஷாஜகானால் கட்டப்பட்டது.
அ) ஜிம்மா மசூதி
ஆ) மோதி மசூதி
இ) முத்து மசூதி
ஈ) செங்கோட்டை
விடை:
ஈ) செங்கோட்டை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
பாபர் முகலாய ஆட்சியை தொடங்கிய ஆண்டு ……………..
விடை:
1526
Question 2.
முதல் பானிபட் போரில் பாபர் ………………… ஜத் தோற்கடித்தார்.
விடை:
இப்ராஹிம் லோடி
Question 3.
…………………. ல் உள்ள அக்பரின் கல்லறை கட்டப் பணிகளை ஜஹாங்கீர் நிறைய செய்தார்.
விடை:
சிக்கந்தராவில்
Question 4.
செங்கோட்டை ……………….. கட்டப்பட்டுள்ளது.
விடை:
சிவப்பு நிறக் கற்களால்
Question 5.
மன்சப்தார் ………………….. எனும் இருவிடயங்களைச் சார்ந்திருந்தன.
விடை:
சாட், சவார்
III. பொருத்துக
IV. சரியா? / தவறா?
Question 1.
நகரங்களும், பெருநகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வாகிக்கப்பட்டன
விடை:
சரி
Question 2.
ஜஹாங்கீர் மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தார்.
விடை:
தவறு
Question 3.
சவார் என்பது மன்சப்தார் பராமரிக்க வேண்டிய யானைகள், யானைகளின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும்.
விடை:
தவறு
Question 4.
முகலாய வம்சத்தின் ஆட்சி பாபர் இந்தியாவிற்கு வந்தவுடன் தொடங்கப்பட்டது
விடை:
சரி
Question 5.
அக்பர்அனைத்து மதங்களைச்சார்ந்தோரையும் சமமாகவும் பெருந்தன்மையோடும் நடத்தினார்
விடை:
சரி
V. கீழ்க்காணும் வாக்கியங்களில் பொருத்தமானதை (✓) டிக் செய்யவும்
Question 1.
கூற்று : சில மராத்திய போர்த் தளபதிகள் குறிப்பாக ஷாஜி பான்ஸ்லே போன்றோர் தக்காண அரசர்களிடம் பணியில் சேர்ந்தனர். இவர்கள் மரத்திய வீரர்களைக் கொண்ட அணிகளுக்குப் பயிற்சியளித்து முகலாயர்களுக்கு எதிராகப் போரிடச் செய்தனர்.
காரணம் : இதனால் தக்காணத்தில் மராத்தியர்களையும் சேர்த்து முகலாயர்களுக்கு எதிராக ஒரு நீண்ட நெடிய எதிர்ப்பு உருவாகியது.
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
ஆ) காரணம் கூற்றிற்கான தவறான விளக்கம்
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணமும் தவறு
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
Question 2.
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்க
i) 1556 ல் ஷெர்ஷா இயற்கை எய்திய பின்னர், அரசராக முடிசூட்டப் பெற்றார்.
ii) நல்ல பயணத்தரும் ஒரு நிலவருவாய் முறையினை அறிமுகம் செய்தார்
iii) படையெடுப்பின் மூலமாகவும் நட்புறவின் மூலமாகவும் அக்பர் இந்தியாவின் பெரும் – பகுதியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
iv) 1556 ல் டெல்லியில் தமது நூலகத்தின் படிக்கட்டுகளில் இடறி விழுந்த பாபர் மரணத்தைத் தழுவினார்.
அ) i, ii மற்றும் iii சரி
ஆ) ii, iii சரி
இ) i, iii மற்றும் iv சரி
ஈ) ii, iii, iv மற்றும் 1 சரி
விடை:
ஆ) ii, iii சரி
Question 3.
காலவரிசைப்படி அரசர்களை வரிசைப்படுத்துக.
விடை:
ஹிமாயூன், பாபர், ஜஹாங்கீர், அக்பர், ஷாஜஹான், ஔரங்கசீப்
பாபர் – 1526 – 1530
ஹிமாயூன் – 1530 – 1540
அக்பர் – 1556 – 1605
ஜஹாங்கீர் – 1605 – 1627
ஷாஜஹான் – 1627 – 1658
ஒளரங்கசீப் – 1658 – 1707
Question 4.
பொருத்துக
விடை:
VI. சுருக்கமான விடையளி
Question 1.
முகலாயர்களின் உள்ளாட்சி நிர்வாகம் எப்படி இருந்தது?
விடை:
- நகரங்களும், பெருநகரங்களும் கொத்தவால் எனும் அதிகாரிகளால் நிர்வாகிக்கப்பட்டன கொத்தவால் சட்டம் ஒழுங்கை பராமரித்தார்.
- கிராம நிர்வாகம் கிராம பஞ்சாயத்துகளிடம் வழங்கப்பட்டிருந்தது.
- பஞ்சாயத்து உறுப்பினர்கள் தீர்ப்புகளை வழங்கினார்.
Question 2.
முகலாயர்களின் படைநிர்வாகம் குறித்து சிறு குறிப்பு வரைக.
விடை:
முகலாய இராணுவமானது காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, பீரங்கிப்படை ஆகிய பிரிவுகளைக் கொண்டிருந்தன.
அரசர் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, சிறப்பு வாய்ந்த ஆயுதங்களை ஏந்திய எண்ணிக்கையிலும் அதிகமான பாதுகாப்பு வீரர்களையும், அரண்மனைக் காவலர்களாகவும் பராமரித்தார்.
VII. விடையளி
Question 1.
முகலாயர்களின் சமயக்கொள்கை குறித்து எழுதுக?
விடை:
- முகலாயப் பேரரசர்கள் இஸ்லாமைப் பின்பற்றினர்
- அக்பர் தம்முடைய சமயக்கொள்கையில் தாராள மனப்பாங்கு கொண்டவராக இருந்தார்
- அக்பர் அனைத்து மதங்களிலுமுள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைத்து தீன்-இலாகி என்னும் ஒரே சமயத்தை உருவாக்க முயன்றார்
- அக்பருடைய கொள்கையை ஜஹாங்கீரும் ஷாஜகானும் பின்பற்றினர்.
- ஒளரங்கசீப்தன்னுடைய முன்னோர்களின் தாராளக் கொள்கையை மறுத்தார். இந்துக்களின் மீது ஜிசியா வரியையும், யாத்ரீகர்களின் மீதான வரியையும் விதித்தார்.
- ஏனைய மதங்களின் மீதான அவரின் சகிப்புத்தன்மை இன்மை மக்களிடையே அவரை விரும்பத்தகாதவராக ஆக்கியது.
மனவரைபடம்