Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 2 Geography Chapter 1 வளங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 2 Geography Chapter 1 வளங்கள்

7th Social  Science Guide வளங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்துதெடுக்க

Question 1.
கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் ______________
அ) தங்கம்
ஆ) இரும்பு
இ) பெட்ரோல்
ஈ) சூரிய ஆற்றல்
விடை:
ஈ) சூரிய ஆற்றல்

Question 2.
மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
அ) கமுதி
ஆ) ஆரல்வாய்மொழி
இ) முப்பந்தல்
ஈ) நெய்வேலி தென்
விடை:
அ) கமுதி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
மனிதனால் முதலில் அறி உலோகங்களில் ஒன்று ____________
அ) இரும்பு
ஆ) தாமிரம்
இ) தங்கம்
ஈ) வெள்ளி
விடை:
ஆ) தாமிரம்

Question 4.
____________ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களுள் ஒன்று. ஒன்று .
அ) சுண்ணாம்புக்கல்
ஆ) மைக்கா
இ) மாங்கனீசு
ஈ) வெள்ளி
விடை:
ஆ) மைக்கா

Question 5.
நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ___________
அ) வெப்பசக்தி
ஆ) அணுசக்தி
இ) சூரிய சக்தி
ஈ) நீர் ஆற்றல்
விடை:
ஆ) அணுசக்தி

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
நீர் மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர் __________.
விடை:
சீனா

Question 2.
தமிழ்நாட்டில் இரும்பு தாதுக்கள் காணப்படும் இடம் __________.
விடை:
கஞ்சமலை

Question 3.
பாக்ஸைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் __________.
விடை:
அலுமினியம்

Question 4.
மின்சார பேட்டரிகள் தயாரிக்க __________ பயன்படுகிறது.
விடை:
மாங்கனீசு

Question 5.
பெட்ரோலியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறுபவை __________ என அழைக்கப்படுகிறது.
விடை:
கருப்புத் தங்கம்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 2

IV. பின்வரும் கூற்றினை கருத்தில் கொண்டு பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கூற்று : காற்றாற்றல் ஒரு தூய்மையான ஆற்றல்
காரணம் : காற்று விசையாழிகள் எந்த உமிழ்வையும் உற்பத்தி செய்யாது

அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
கூற்று : இயற்கை வாயு பெட்ரோலிய படிவங்களுடன் காணப்படுகிறது
காரணம் : வீடு மற்றும் தொழிற்சாலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்தலாம்

அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

V. பின்வருவனவற்றிற்கு விடையளிக்கவும்

Question 1.
வளங்கள் – வரையறு
விடை:
மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவை வளங்கள் என அழைக்கப்படுகின்றன.

Question 2.
இரும்பின் பயன்கள் யாவை?
விடை:

  • இயந்திர கட்டுமானப்பணி
  • இயந்திர கருவிகள்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • கப்பல் கட்டுமானப் பணி, பாலம் மற்றும் கட்டட கட்டுமானப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Question 3.
உலகில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் முதன்மையான நாடுகள் யாவை?
விடை:

  • இந்தியா
  • சீனா
  • ஜப்பான்
  • இத்தாலி
  • அமெரிக்க ஐக்கிய நாடு

Question 4.
கார்பன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நிலக்கரியின் வகைகளைக் கூறு
விடை:

  • ஆந்த்ரசைட்
  • பிட்டுமினஸ்
  • லிக்னைட்
  • பீட்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 5.
துராலுமின் குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:
அலுமினியத்துடன் சிறிய அளவிலான பிற உலோகங்களைச் சேர்ப்பதன் மூலம், இது தூய அலுமினியத்தைவிட உயர்ரக (அலாயினை) உலோகக் கலவையை உருவாக்குகிறது. எ.கா.: துராலுமின்

VI. பின்வருவனவற்றை வேறுபடுத்தி எழுதுக

Question 1.
உயிருள்ள வளங்கள் – உயிரற்ற வளங்கள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 3

Question 2.
புதுப்பிக்கக் கூடிய வளங்கள் – புதுப்பிக்க இயலா வளங்கள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 4

Question 3.
உலோக வளங்கள் – அலோக வளங்கள்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 5

VII. காரணம் கூறுக

Question 1.
அலுமினியம் மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும்போது பரவலான பயன்பாட்டினைக் கொண்டுள்ளது.
விடை:

  • அலுமினியம் எடை குறைந்தது.
  • கடினமான மற்றும் விலை குறைந்தது.
  • அலுமினியம் மின்சாரம் மற்றும் வெப்பத்தினை எளிதில் கடத்தக்கூடியது.
  • அரித்தல் செயலினை அதிகரிக்க தாங்கிக் கொள்ளக்கூடியது.

Question 2.
நீர் ஒரு சிறந்த ஆற்றல் மூலமாக கருதப்படுகிறது.
விடை:

  • நீரானது ஒரு முக்கிய ஆற்றல் ஆதாரமாகக் கருதப்படுகிறது.
  • நீர் மின்சக்தியானது மலிவானதாகவும் மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும்.
  • இது புதுப்பிக்கக் கூடிய வளமாகும்.

VIII. விரிவாக விடையளிக்க

Question 1.
புதுப்பிக்கக்கூடிய வளங்களின் வெவ்வேறு வகைகளை விளக்குக
விடை:
புதுப்பிக்கக்கூடிய வளங்கள் இயற்கையான செயல்பாடுகளாலோ, காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்யப்படக்கூடியனவாகவோ அமையும்.

  • சூரிய ஆற்றல்
  • காற்றாற்றல்
  • நீர் ஆற்றல்

சூரிய ஆற்றல் :

  • சூரியன் தனது ஆற்றலை வெப்பமாகவும், ஒளியாகவும் வெளிவிடுகிறது.
  • சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காது.
  • சூரியகலமானது நேரடியாக சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றக்கூடியது.
  • இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்றவை உலகிலேயே மிகப்பெரிய அளவில் சூரிய ஒளி உற்பத்தி செய்யப்படுகிறது.
  • எ.கா.: கமுதி, சூரிய ஒளி மின்திட்டம்.

காற்றாற்றல் :

  • காற்றாற்றல் என்பது ஒரு துய்மையான ஆற்றலாகும்.
  • சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை.
  • இந்தியாவின் முக்கிய காற்றாலைப் பண்ணைகள் உள்ளது.
  • எ.கா.: முப்பந்தல், கன்னியாகுமரி, தமிழ்நாடு
  • காற்றாலை பண்ணைகள் காணப்படும் நாடுகள் : அமெரிக்கா, சீனா,
  • ஜெர்மனி, ஸ்பெயின், இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் பிரேசில்

நீர்மின் சக்தி:

  • நீரானது நீர்மின்சக்தி உற்பத்திக்குப் பயன்படுகிறது.
  • நீர்மின்சக்தி மலிவானதாகவும் மிகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவும் உள்ளது.
  • சீனா, கனடா, பிரேசில், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, இந்தியா, நார்வே மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் நீர்மின்சக்தி உற்பத்தி செய்கிறது.
  • எ.கா.: அதிக அளவில் நீர்மின்சக்தி உற்பத்தி செய்யும் நாடு சீனா ஆகும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
புதுப்பிக்க இயலா வளங்கள் – குறித்து விரிவாக எழுதுக.
விடை:
புதுப்பிக்க இயலா வளங்கள் என்பவை இயற்கையாக மீண்டும் புதுப்பிக்க முடியாத அல்லது காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்ய இயலாத இயற்கை வளங்கள் ஆகும்.

எ.கா.: புதைபடிம எரிப்பொருள்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கைவாயு மற்றும் தாது வளங்களான இரும்பு, தாமிரம், பாக்ஸைட், தங்கம், வெள்ளி.

நிலக்கரி:

  • தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும்.
  • நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது அனல் மின்சக்தி எனப்படுகிறது.
  • கார்பன் அளவினைக் கொண்டு ஆந்த்ரசைட், பிட்டுமினஸ், லிக்னைட், பீட் என நான்கு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
  • உலகில் நிலக்கரி உற்பத்தி செய்யும் முன்னணி நாடு சீனா ஆகும். இந்தியாவில் மேற்கு வங்கத்தில் ராணிகஞ்ச், தமிழகத்தில் நெய்வேலியிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

பெட்ரோலியம் :

  1. பாறை அடுக்குகளுக்கு இடையேயும், கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள எண்ணெய் வயல்களில் இருந்து பெட்ரோலியம் எடுக்கப்படுகிறது.
  2. பெட்ரோலியம் மற்றும் அதன் உபபொருள்கள் மதிப்புமிக்கதாக உள்ளதால் “கருப்புத் தங்கம்” என அழைக்கப்படுகிறது.
  3. மும்பை டெல்டாப் பகுதிகள் இந்தியாவில் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் பகுதியாகும்.

இயற்கை வாயு:

  1. பெட்ரோலியப் படிவுகளுடன் காணப்படுகிறது.
  2. உலக அளவில் 50%க்கும் அதிகமான இயற்கை வாயு இருப்புகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ரஷ்யா, ஈரான் மற்றும் கத்தாரில் உள்ளது.
  3. இந்தியாவில் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மற்றும் மும்பை கடலோரப் பகுதியில் இயற்கை வாயு வளம் உள்ளது.

Question 3.
புதை படிம எரிபொருள் வளங்கள் யாவை? அவற்றை விளக்குக.
விடை:

  • புதை படிம எரிபொருள் வளங்களானது இறந்து போன தாவர மற்றும் விலங்குகளின் எச்சங்களிலிருந்து உருவானவை.
  • புதை படிம எரிபொருள்கள் ஹைட்ரோ கார்பனிலிருந்து உண்டானவை எனப் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.
  • இவை எரிக்கப்படும் போது வெப்ப ஆற்றலுக்கான ஒரு சிறந்த ஆதாரமாகிறது.
  • நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு ஆகியவை புதை படிம எரிபொருள்கள் ஆகும்.

IX. செயல்பாடு

Question 1.
கொடுக்கப்பட்டுள்ள உலக நில வரைபடத்தில் உலோக வளங்கள் பரவிக் கிடைக்கும் இடங்களைக் குறித்திடுக.
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 6
விடை:
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

Question 2.
குறுக்கெழுத்துப் புதிர்
இடமிருந்து வலம்:
2. உலகின் முன்னணி உற்பத்தியாளர்கள்
4. ஒரு சிறந்த ஆற்றல் மூலமாகக் கருதப்படுவது
5. தங்கம் போன்ற விலை மதிப்பற்ற உலோகம்
6. மின்தொழிற்சாலைகளில் காப்புப்பொருளாகப் பயன்படுத்தப்படுவது

மேலிருந்து கீழ் :
1. மின்சார பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படுகிறது
3. வெப்பம் மற்றும் மின்சாரத்தினை எளிதில் கடத்துவது
7. இந்தியாவில் தங்கம் அளவு உற்பத்தி செய்யப்படும் இடம்
8. ஆற்றலை வெப்பம் மற்றும் ஒளியாக உற்பத்தி செய்வது விடைகள்:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 7
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 8

7th Social  Science Guide வளங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு _____________
அ) சீனா
ஆ) சிலி
இ) கனடா
ஈ) காங்கோ
விடை:
ஆ) சிலி

Question 2.
பாக்சைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படுவது ___________
அ) மாங்கனீசு
ஆ) அலுமினியம்
இ) தாமிரம்
ஈ) வெள்ளி
விடை:
ஆ) அலுமினியம்

Question 3.
உலகில் பாக்சைட் உற்பத்தி செய்யும் முன்னணி நாடு ___________
அ) ஆஸ்திரேலியா
ஆ) சீனா
இ) இந்தியா
ஈ) பிரேசில்
விடை:
அ) ஆஸ்திரேலியா

Question 4.
உலகில் வெள்ளி உற்பத்தி செய்யும் முன்னணி நாடு. ___________
அ) பெரு
ஆ) சீனா
இ) மெக்ஸிகோ
ஈ) ரஷ்யா
விடை:
இ) மெக்ஸிகோ

Question 5.
தென் ஆப்பிரிக்கா உலகின் முன்னணி _________ உற்பத்தி நாடாகும்.
அ) தாமிரம்
ஆ) அலுமினியம்
இ) வெள்ளி
ஈ) மாங்கனீசு
விடை:
ஈ) மாங்கனீசு

Question 6.
சீனா ___________ உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் உள்ளது.
அ) மைக்கா
ஆ) வெள்ளி
இ) தங்க ம் பாத்தா
ஈ) லிக்னைட்
விடை:
அ) மைக்கா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
____________ மற்றும் ஆகியவை மைக்காவின் தாதுக்கள் ஆகும்.
விடை:
மஸ்கோவைட் மற்றும் பயோடைட்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 2.
நிலக்கரி உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு ___________
விடை:
சீனா

Question 3.
உலகின் பாதிக்கு மேற்பட்ட சுண்ணாம்புக்கல் உற்பத்தி _________ல் நடைபெறுகிறது.
விடை:
சீனா

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 9

IV. பின்வரும் கூற்றினை கருத்தில் கொண்டு பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
கூற்று : மஸ்கோவைட் மற்றும் பயோடைட் ஆகியவை மைக்காவின் தாதுக்கள் ஆகும்.
காரணம் : மின் மற்றும் மின்னணு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கனிமங்களில் இதுவும் ஒன்று.

அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

Question 2.
கூற்று : நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது வெப்ப சக்தி என அழைக்கப்படுகிறது.
காரணம் : கார்பன் அளவினைக் கொண்டு நிலக்கரியினை 4 வகையாக பிரிக்கலாம்.

அ) கூற்று, காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) கூற்று சரி, காரணம் தவறு
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது

V. சுருக்கமான விடையளி

Question 1.
இயற்கை வளங்களின் முக்கியத்துவம் என்ன?
விடை:

  • இயற்கை வளமானது ஒரு மனிதனின் அன்றாட உணவு, உடை, இருப்பிடத் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
  • ஒரு நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதில் இயற்கை வளங்களின் பங்கு மகத்தானது.

Question 2.
இயற்கை வளங்களை வகைப்படுத்துக.
விடை:
உருவாகும் விதத்தின் அடிப்படையில் வளங்கள் இருவகையாக பிரிக்கப்படுகின்றன. அவை,

  • உயிரியல் வளங்கள்
  • உயிரற்ற வளங்கள்

புதுப்பிக்கும் தன்மையின் அடிப்படையில் வளங்கள் இருவகைப்படும். அவை,

  • புதுப்பிக்கத்தக்க வளங்கள்
  • புதுப்பிக்க இயலா வளங்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள்

Question 3.
புதுப்பிக்க இயலா வளங்களின் வகைகள் யாவை?
விடை:

  • உலோக வளங்கள்
  • அலோக வளங்கள்
  • புதை படிம எரிபொருள்கள்

VI. வேறுபடுத்துக

Question 1.
அனல் மின்சக்தி மற்றும் காற்று சக்தி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 10

VII. காரணம் கூறுக

Question 1.
பெட்ரோலியம் கருப்புத் தங்கம் என அழைக்கப்படுகிறது.
விடை:
பெட்ரோலியம் மற்றும் அதன் உபப்பொருள்கள் மதிப்புமிக்கதாக உள்ளதால் கருப்புத் தங்கம் என அழைக்கப்படுகிறது.

VIII. விரிவான விடையளி

Question 1.
உலோக வளங்களை விவரித்து அதில் ஏதேனும் ஒன்றை மட்டும் விளக்குக.
விடை:

  • உலோக வளங்கள் என்பவை உலோகத்தால் ஆன வளங்கள் ஆகும்.
  • இவை வெப்பம் மற்றும் மின்சாரத்தினை எளிதில் கடத்தும் கடினப் பொருள்களாகும்.
  • எ.கா. இரும்பு, தாமிரம், தங்கம், பாக்ஸைட், வெள்ளி மற்றும் மாங்கனீசு இன்னும் பிற.

இரும்பு:

  • எஃகு உற்பத்திக்கு மூலப்பொருளாக இரும்பு விளங்குகிறது.
  • இரும்பானது மலிவு விலை மற்றும் வலிமையினாலும் இன்ஜினியரிங் தொழில்துறையில் அதாவது இயந்திரக் கட்டுமானப்பணி, இயந்திரக் கருவிகள், ஆட்டோமொபைல்ஸ், கப்பல் கட்டுமானப் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • தமிழகத்தில் கஞ்சமலையில் இரும்புத்தாது கிடைக்கிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 2 Geography Chapter 1 வளங்கள் 11