Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

7th Social  Science Guide டெல்லி சுல்தானியம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
_______________ மாம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
அ) முகமதுகோரி
ஆ) ஜலாலுதீன்
இ) குத்புதீன் ஐபக்
ஈ) இல்துமிஷ்
விடை:
இ) குத்புதீன் ஐபக்

Question 2.
குத்புதீன் தனது தலைநகரை ___________ லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
அ) லாகூர்
ஆ) புனே
இ) தௌலதாபாத்
ஈ) ஆக்ரா
விடை:
அ) லாகூர்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 3.
______________ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.
அ) ரஸ்ஸியா
ஆ) குத்புதீன் ஐபக்
இ) இல்துமிஷ்
த ஈ) பால்பன்
விடை:
இ) இல்துமிஷ்

Question 4.
டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ______________ ஆவார்.
அ) முகமது பின் துக்ளக்
ஆ) பிரோஷ் ஷா துக்ளக்
இ) ஜலாலுதீன்
ஈ) கியாசுதீன்
விடை:
ஈ) கியாசுதீன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் ___________ ஆவார்
விடை:
கியாசுதீன் துக்ளக்

Question 2.
முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து ___________ க்கு மாற்றினார்.
விடை:
தேவகிரி

Question 3.
புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை __________ ஆதரித்தார்.
விடை:
பால்பன்

Question 4.
டெல்லியிலுள்ள குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதியை ___________ கட்டினார்.
விடை:
குத்புதீன் ஐபக்

Question 5.
இந்தியாவிற்கு செங்கிஸ்கான் தலைமையிலான மங்கோலியரின் அச்சுறுத்தல் _____________ ஆட்சியின் போது ஏற்பட்டது.
விடை:
இல்துமிஷ்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 2

IV. சரியா, தவறா?

Question 1.
குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்
விடை:
தவறு (குதிரையிலிருந்து கீழே விழுந்து இறந்தார்)

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 2.
ரஸ்ஸியா திறமை மிக்க, மனவலிமை கொண்ட போர்வீரர்.
விடை:
சரி

Question 3.
ஐபக்கின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகன் இல்துமிஷைத் துருக்கியப் பிரபுக்கள் சுல்தானாகத் தேர்வு செய்தனர்.
விடை:
தவறு (இல்துமிஷ் ஐபக்கின் மருமகன்)

Question 4.
தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ்ஷா மறுத்துவிட்டார்.
விடை:
சரி

V. சரியான விடையை (✓) டிக் செய்யவும். கூற்றைக் காரணத்தோடு ஒப்பிடுக.

அ) கூற்று : மங்கோலியருடன் பால்பன் சுமூகமான உறவை மேற்கொண்டார்.
காரணம் : செங்கிஸ்கானின் பேரனான மங்கோலிய அரசன், சட்லஜ் நதியைக் கடந்து மங்கோலியர் படையெடுத்து வரமாட்டார்கள், என உறுதி கூறியிருந்தார்.

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) காரணமும் கூற்றும் தவறானவை.
ஈ) கூற்று தவறு; காரணம் சரி.
விடை:
அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.

ஆ) சரியான இணையைத் தேர்வு செய்க.
1. ஹொய்சாளர் – தேவகிரி
2. யாதவர் – துவாரசமுத்திரம்
3. காகதியர் – வாராங்கல்
4. பல்லவர் – மதுரை
விடை:
3) காகதியர் – வாராங்கல்

இ) தவறான கூற்றினை கண்டறியவும். தம்

  1. 1206 இல் கோரி முகமதுவின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய அடிமையான குத்புதீன் ஐபக், இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்குத் தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டார்.
  2. ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்.
  3. மங்கோலியரின் தாக்குதலிலிருந்து தனது நாட்டைப் பாதுகாக்கப் பால்பன் கோட்டைகளைக் கட்டினார்.
  4. இப்ராகிம் லோடி 1526 இல் பாபரால் தோற்கடிக்கப்பட்டார்.

விடை:
2) ரஸ்ஸியா, தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரைப் பற்றியும் இடையூறு ஏற்படுத்துவோர் பற்றியும் செய்திகள் சேகரிக்க ஒற்றர்கள் துறையொன்றை நிறுவினார்.

VI. கீழ்க்காண்பனவற்றிற்கு ஒரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
முறையான ஊதியத்திற்கு மாற்றாக ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் பெயரென்ன?
விடை:
ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் பெயர் இக்தா’

Question 2.
ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?
விடை:
ஆக்ரா நகரத்தை சிக்கந்தர் லோடி நிர்மாணித்தார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 3.
கி.பி (பொ. ஆ) 12 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவியர் யார்?
விடை:
முகமது கோரி 12 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவினார்.

Question 4.
‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:
மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர் கொள்வதற்காக இல்துமிஷ் – துருக்கியப் பிரபுக்கள் நாற்பது பேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அக்குழு சகல்கானி அல்லது நான்பதின்மர் எனப்பட்டது.

Question 5.
அலாவுதீன் கில்ஜி எவ்வாறு டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்தார்?
விடை:
அலாவுதீன் கில்ஜி வடக்கே பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தை தன் வசமாக்கினார்.

அவரது படைத் தளபதியான மாலிக் கபூர் மூலம் தெற்கே தேவகிரியை ஆண்ட யாதவர்கள், துவார சமுத்திரத்தின் ஹொய்சாலர்கள், வாராங்கல்லின் காகதீயர்கள் மற்றும் மதுரைப் பாண்டியர்கள் ஆகியோர் அவரது ஆதிக்கத்தின் கீழ் வந்தனர். இவ்வாறு டெல்லி சுல்தானியத்தை ஒருங்கிணைத்தார்.

Question 6.
பிரோஷ்ஷா துக்ளக்கின் சாதனைகளைப் பட்டியலிடுக.
விடை:

  • பிரோஷ்ஷா துக்ளக் கல்லூரிகள், மசூதிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றைக் கட்டினார்.
  • பல மனிதாபிமான நடவடிக்கைகளையும் அவர் மேற் கொண்டார்.
  • மனிதாபிமானமற்ற கொடூரமான தண்டனைகளை ஒழித்தார்.
  • அநேக வரிகளை ரத்து செய்தார்.
  • விவசாயிகளின் கடன்களை ரத்து செய்தார்.
  • பல நீர்ப்பாசனக் கால்வாய்களை வெட்டினார்.
  • 1200 புதிய தோட்டங்களை உருவாக்கினார்.

VII. கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிக்கவும்.

Question 1.
1398 ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.
விடை:

  • தைமூர் சாமர்கண்ட் பகுதியை ஆட்சி செய்தார்.
  • இவர் வட இந்தியாவுக்கு மேற்கில் சில இடங்களைக் கைப்பற்றினார்.
  • 1938 ல் இந்தியாவிற்குள் படையெடுத்து நுழைந்தார்.
  • டெல்லி மற்றும் பஞ்சாப் பகுதிகளைக் கொள்ளையடித்தார்.
  • தங்கம், வெள்ளி, நகைகள் எனப் பெரும் செல்வத்தைக் கொள்ளையடித்து எடுத்துச் சென்றார்.
  • திரும்பிச் செல்லும் போது தச்சு வேலை செய்வோர் மற்றும் கட்டடக் கலைஞர்கள் போன்ற இந்தியக் கலைஞர்களை சாமர்க்கண்டிற்கு அழைத்துச் சென்றார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
முகமது பின் துக்ளக்கை டெல்லியின் சுல்தானாக நீ எவ்வாறு மதிப்பீடு செய்வாய்?
விடை:

  • முகமது பின் துக்ளக் மிகவும் கற்றறிந்த மனிதர். ஆனாலும் அவர் குரூரம் நிறைந்தவராய் இருந்தார்.
  • இந்தியா முழுவதையும் தனது நாடாக்க வேண்டும் என கனவு கண்டார்.
  • தலைநகரை மாற்றிய அவரது திட்டம் தோல்வி கண்டது.
  • துக்ளக் நிலவரியை உயர்த்தியதோடு, வரியை பணமாகவே செலுத்த வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார். இதுவும் மக்களுக்கு பெரும் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியது.
  • முகமது பின் துக்ளக் ஏற்படுத்திய திட்டங்கள் அனைத்துமே சிறந்தவைகளாகும். ஆனால் சூழ்நிலையை அறிந்து அவைகள் நடைமுறைப் படுத்தப் படவில்லை. எனவே அவரது திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன,
  • அவரது அவசர கொள்கை முடிவுகளும், சில நடைமுறைப்படுத்த இயலாத திட்டங்களும் துக்ளக் மரபின் வீழ்ச்சிக்குக் காரணமாயின.

IX. வரைபட வினா

Question 1.
இந்திய ஆறுகள் வரைபடத்தில் துக்ளக் வம்சத்தின் ஆட்சி எல்லையையும் கீழ்க்காணும் பகுதிகளையும் குறிப்பிடுக.
(வரைபடப் பயிற்சி புத்தகத்தை பார்க்கவும்)

  1. டெல்லி
  2. தேவகிரி
  3. லாகூர்
  4. மதுரை

X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
பொருத்துக
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 4

Question 2.
டெல்லி சுல்தானியத்தின் இஸ்லாமிய கலை, கட்டடக் கலை தொடர்பான படங்களைக் கொண்டு செருகேடு (ஆல்பம் ) ஒன்றைத் தயார் செய்யவும்.

7th Social  Science Guide டெல்லி சுல்தானியம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்

Question 1.
மம்லுக் என்ற அராபிய வார்த்தையின் பொருள்
அ) எஜமான்
ஆ) அடிமை
இ) சக்தி
ஈ) வெற்றி
விடை:
ஆ) அடிமை

Question 2.
இபன் பதூதா _______________ நாட்டுப் பயணி
அ) சீனா
ஆ) கிரீஸ்
இ) மொராக்கோ
ஈ) போர்ச்சுகல்
விடை:
இ) மொராக்கோ

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 3.
தைமூர் இந்தியாவின் மீது படையெடுத்த ஆண்டு
அ) 1398
ஆ) 1368
இ) 1389
ஈ) 1498
விடை:
அ) 1398

Question 4.
சையது வம்சத்தைத் தோற்றுவித்தவர்
அ) ஆலம்ஷா
ஆ) முகமது ஷா
இ) முபாரக் ஷா
ஈ) கிசிர்கான்
விடை:
ஈ) கிசிர்கான்

Question 5.
முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1556
ஆ) 1526
இ) 1625
ஈ) 1562
விடை:
ஆ) 1526

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை நாட்டியவர் ____________
விடை:
குத்புதீன் ஐபக்

Question 2.
குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டியவர் ____________
விடை:
குத்புதீன் ஐபக்

Question 3.
கில்ஜி வம்சத்தின் முதல் அரசர் __________
விடை:
ஜலாலுதீன் கில்ஜி

Question 4.
முகமது பின் துக்ளக் தேவகிரியின் பெயரை __________ என மாற்றினார்.
விடை:
தௌலதாபாத்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 5.
இப்ராகிம் லோடி ___________ என்பவரின் மகன் ஆவார்.
விடை:
சிக்கந்தர் லோடி

III. பொருத்துக வாதம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 5

IV. சரியா, தவறா?

Question 1.
பால்பன் பாரசீகக் கவிஞரான அமிர்குஸ்ரு என்பவரை ஆதிரித்தார்.
விடை:
சரி

Question 2.
முகமது பின் துக்ளக்கின் இயற்பெயர் ஜானாகான்.
விடை:
சரி

Question 3.
முகமது பின் துக்ளக் கல்வி அறிவற்றவர்
விடை:
தவறு (கற்றிந்தவர்)

Question 4.
பிரோஷ் ஷா துக்ளக்கின் இறுதி நாட்கள் மகிழ்ச்சி நிறைந்தவையாக இல்லை.
விடை:
சரி

Question 5.
தைமூர் டெல்லியைக் கொள்ளையடித்த போதிலும், அவர் அம்மக்களை துன்புறுத்தவில்லை
விடை:
தவறு (மக்களைக் கொன்றார்)

V. அ) கூற்றைக் காரணத்தோடு ஒப்பிடுக. சரியான விடையைக் (✓) டிக் செய்யவும்

Question 1.
கூற்று 1 : துருக்கிய பிரபுக்கள் ரஸ்ஸியாவுக்கு எதிராகக் கலகம் செய்து அவரைக் கொலை செய்தனர்.
கூற்று 2 : ரஸ்ஸியா ஒரு எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி உதவியாளராக நியமித்து அவரைப் பெரிதும் நம்பினார்.

அ) கூற்றும் காரணமும் தவறு.
ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
ஈ) கூற்று சரி. காரணம் தவறு.
விடை:
ஆ) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

ஆ) தவறான கூற்றினைக் கண்டறியவும்.

1. முகமது கோரிக்கு மகன்கள் இல்லை
2. குவ்வத் – உல் – இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதி இந்தியாவிலுள்ள மிகப்பழமையான மசூதி எனக்கருதப்படுகிறது.
3. அலாவுதீன் கில்ஜி ஜலாலுதீன் கில்ஜியின் மகன் ஆவார்.
4. சிக்கந்தர் லோடியின் தலைநகர் ஆக்ரா ஆகும்.
5. பாபர் டெல்லி சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
விடை:
3) அலாவுதீன் கில்ஜி ஜலாலுதீன் கில்ஜியின் மகன் ஆவார்

VI. தவறான இணையைக் கண்டு பிடிக்கவும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 6
விடை:
3) பகலூல் லோடி

VII. பொருந்தாததைக் கண்டுபிடி

Question 1.
பிரோஷாபாத், ஜான்பூர், காரா, ஹிசார்.
விடை:
காரா

Question 2.
குத்புதீன் ஐபக், இல்துமிஷ், பால்பன், அமிர்குஸ்ரு
விடை:
அமிர்குஸ்ரு

VIII. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
இல்துமிஷ் எவ்வாறு தன் நாட்டை மங்கோலியப் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தார்?
விடை:
ஏற்கனவே செங்கிங்கானால் தோற்கடிக்கப்பட்டு, விரட்டப்பட்டிருந்த குவாரிஜம் ஷா ஜலாலு தீன் என்பவர் இல்துமிஷிடம் அடைக்கலமும் பாதுகாப்பும் கேட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளை இல்துமிஷ் மறுத்துவிட்டார். இதனால் மங்கோலியர் இல்துமிஷ் மீது படையெடுக்கவில்லை.

Question 2.
ஜவ்ஹர் பற்றி சிறுகுறிப்பு வரைக..
விடை:

  • ஜவ்ஹர் என்பது ராஜபுத்திரர்களிடையே நிலவிய ஒரு சடங்கு ஆகும்.
  • இதன்படி ஆடவர் கோட்டையை விட்டு வெளியேறிப் போர்க்களத்தில் மாளவர். பெண்கள் அதன் தீப்புகுந்து தங்களை மாய்த்துக் கொள்வர்.

Question 3.
அலாவுதீனின் வரிவசூல் முறை பற்றி கூறு.
விடை:

  • அலாவுதீன் வரிகளை வசூல் செய்யும் பணியை ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
  • அவர் கட்டாய உணவு தானியக் கொள் முதல் முறையை அறிமுகம் செய்தார்.
  • கொள்முதல் விலை சுல்தானால் நிர்ணயம் செய்யப்பட்டது. வரியாக வசூலிக்கப்பட்ட தானியம் அரசாங்க பண்டக சாலையில் சேர்த்து வைக்கப்பட்டது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 4.
சையது வம்சத்தின் தோற்றம் பற்றி எழுதுக.
விடை:
தைமூர் டெல்லியை விட்டுச் செல்வதற்கு முன்பாக, தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு (டெல்லி, மீரட், பஞ்சாப்) கிசிர்கான் என்ற தனது பிரதிநிதியை ஆளுநராக நியமித்துச் சென்றார். அவர் தோற்றுவித்த அரசே சையது அரசவம்சம் ஆகும்.

Question 5.
முதல் பானிபட் போர் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • முதல் பானிபட் போர் 1526 ஆம் ஆண்டு பாபருக்கும் இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்றது.
  • இப்போரில் பாபர் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்தார்.
  • இதனால் லோடி அரச வம்சத்திற்கும், டெல்லி சுல்தானியத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
  • பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினார்.

IX. விடையளிக்கவும்

Question 1.
இஸ்லாமியக் கலை மற்றும் கட்டக்கலையை விவரி.
விடை:

  • முஸ்லீம் பிரபுக்களும் அதிகாரிகளும் நகரங்களிலும், கிராமங்களிலும் தங்கள் குடியிருப்புகளைக் கட்டிக் கொண்டனர்.
  • பின் அவற்றைச் சுற்றி அழகு மிக்க மசூதிகளைக் கட்டினர்.
  • மசூதிகள் மற்றும் மதரசாக்களின் சுவர்களிலும் கதவுகளிலும் குரானிலுள்ள வரிகளைச் செதுக்கியிருந்தனர்.
  • கட்டடங்களின் வடிவங்கள் பாரசீகப் பாணியிலும், அலங்கார வேலைப்பாடுகள் இந்தியப் பாணியிலும் அமைந்திருந்தன. எனவே அப்பாணி இந்தோ – சாராசானிக் கலை வடிவம் என அழைக்கப்பட்டது.
  • குதுப்மினார், அலெய் தாவாசா, மோத்தி மசூதி, இல்துமிஸ் மற்றும் பால்பன் ஆகியோரின் கோட்டைகள் ஆகியவை அப்பாணியில் அமைக்கப்பட்டவையாகும்.

Question 2.
பால்பனின் பெருமைகளை வெளிக் கொணர்.
விடை:

  • பால்பன் ஒரு மிகச் சிறந்த அரசர்.
  • நாற்பதின்பர் என்று அழைக்கப்பட்ட துருக்கியப்பிரபுக்கள் குழு அவரோடு பகைமை பாராட்டியதால் அவ்வமைப்பை அவர் ஒழித்தார்.
  • தனது ஆட்சிக்கு எதிராகச் சதி செய்வோரையும், இடையூராய் இருப்போரையும் கண்டறிய ஒரு ஒற்றர் துறையை நிறுவினார்.
  • அரசு அதிகாரத்திற்குக் கீழ்ப்படியாமை, எதிர்த்தல் போன்றவற்றைக் கண்டித்தார்.
  • வங்காள ஆளுநராக இருந்த துக்ரில்கான பால்பனுக்கு எதிராகக் கலகம் செய்ததால் அவர் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.
  • அவர் தனது எதிரிகளிடம் கருணையில்லாமல் நடந்து கொண்டார்.
  • மங்கோலியரிடம் இணக்கமான உறவு கொண்டிருந்தார்.
  • அமிர்குஸ்ரு என்ற பாரசீகக் கவிஞரை ஆதிரித்தார்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம்

Question 3.
முகமது பின் துக்ளக்கின் நாணயச் சீர்திருத்தத்தை விவாதி.
விடை:

  • முகமது பின் துக்ளக் நிலவரி பணமாக வசூலிக்கப்பட வேண்டும் என ஆணை பிறப்பித்தார். இது மக்களை அதிகமாகப் பாதித்தது.
  • போதுமான அளவுக்கு நாணயங்களோ, புதிய நாணயங்களை வெளியிடும் அளவுக்கு வெள்ளியோ கைவசம் இல்லை. இதை உணர்ந்த துக்ளக் செப்பு நாணயங்களை வெளியிட்டார்.
  • இதனால் கள்ள நாணயங்கள் பெருகிவிட்டன. ஒட்டு மொத்த வருவாய் நிர்வாக முறை சீர்குலைந்தது.
  • இதனால் வணிகம் பாதிக்கப்பட்டது.
  • எனவே செப்பு நாணயங்களைப் பெற்றுக் கொண்டு அதற்கு மாறாக தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களைக் கொடுத்தார். இதனால் அரசு திவாலானது.
  • இதனால் மீண்டும் நிலவரியை உயர்த்தினார். இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு நாட்டில் அடிக்கடி பஞ்சம் ஏற்பட்டது.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 History Chapter 4 டெல்லி சுல்தானியம் 7