Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

7th Social  Science Guide மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
காக்கச இனத்தை _____________ என்றும் அழைக்கலாம்.
அ) ஐரோப்பியர்கள்
ஆ) நீக்ரோய்டுகள்
இ) மங்கோலியர்கள்
ஈ) ஆஸ்திரேலியர்கள்
விடை:
அ) ஐரோப்பியர்கள்

Question 2.
_____________ இனம் ஆசிய அமெரிக்க இனமாகும்.
அ) காக்கச இனம்
ஆ) நீக்ரோக்கள்
இ) மங்கோலியர்கள்
ஈ) ஆஸ்திரேலியர்கள்
விடை:
இ) மங்கோலியர்கள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
உலக மக்கள் தொகை தின ______________ ஆகும்.
அ) தொகை 1
ஆ) ஜூன் 1
இ) ஜூலை 11
ஈ) டிசம்பர் 2
விடை:
இ) ஜூலை 11

Question 4.
கிராமப்புறக் குடியிருப்புகள் ____________ அருகில் அமைந்துள்ளது.
அ) நீர்நிலைகள்
ஆ) மலைப் பகுதிகள்
இ) கடலோரப் பகுதிகள்
ஈ) பாலைவனப் பகுதிகள்
விடை:
அ) நீர்நிலைகள்

Question 5.
அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக.
1) நகரம்
2) மீப்பெருநகரம்
3) தலைநகரம்
4) இணைந்த நகரம்

அ) 4, 1, 3, 2
ஆ) 1, 3, 4, 2
இ) 2, 1, 3, 4
ஈ) 3, 1, 2, 4
விடை:
ஆ) 1, 3, 4, 2

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
தென் ஆப்பிரிக்காவின் ___________ பாலைவனத்தில் புஷ்மென்கள் காணப்படுகிறது.
விடை:
கலஹாரி

Question 2.
மொழியின் பங்கு என்பது __________ குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் தொகுப்பாகும்.
விடை:
மொழிக்

Question 3.
____________ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.
விடை:
நகர

Question 4.
_____________ நகரங்கள் பொதுவாக கிராமப்புற நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்.
விடை:
செயற்கைகோள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 5.
______________ குடியிருப்பானது வழிபாட்டுத்தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும்.
விடை:
யாத்திரைக்

III. அ. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 2

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 3
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 4

IV. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை (✓) செய்யவும்

Question 1.
கூற்று : உலகில் அநேக மொழிகள் பேசப்படுகின்றன.
காரணம் : மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : பழனி தமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
காரணம் : அங்கு இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது.

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு காரணம் சரி
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

V. பொருந்தாதை வட்டமிடுக.

Question 1.
மீன்பிடித்தல், மரம் அறுத்தல், விவசாயம், வங்கி அலுவல்
விடை:
வங்கி அலுவல்

Question 2.
இமயமலை, ஆல்பஸ், ராக்கி, கங்கை
விடை:
கங்கை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
சென்னை, மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம்
விடை:
காஞ்சிபுரம்

VI. கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும்

Question 1.
இனங்களின் வகைகள்யாவை?
விடை:
இனங்களின் வகைகள் : > காக்க சாய்டு (ஐரோப்பியர்கள்) > நீக்ராய்டு (ஆப்பிரிக்கர்கள்) > மங்கோலாய்டு (ஆசியர்கள்) > ஆஸ்ட்ரலாய்டு (ஆஸ்திரேலியர்கள்)

Question 2.
மொழி என்றால் என்ன?
விடை:
மொழி:
சமுதாய அமைப்பிற்கு மொழி கலாச்சாரத்தைப் பரப்பும் ஒரு பிரதான கருவியாகும். ஒருவர் மற்றாருவருடன் தொடர்பு கொள்வதற்கு (எழுத்து வடிவம் அல்லது ஒலி வடிவம்) பயன்படுத்தப்படுகிறது.

Question 3.
குடியிருப்பு வரையறு.
விடை:
குடியிருப்பு:
குடியிருப்பு என்பது மனித வாழ்விடமாகும். அங்கு விவசாயம், வாணிபம்மற்றும்பொழுதுபோக்கு ஆகிய செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றனர்.

Question 4.
நகர்ப்புற குடியிருப்புகள் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
விடை:
நகர்ப்புற குடியிருப்புகள் வகைப்படுத்தலின் அடிப்படை

  • மக்கள் தொகையின் அளவு
  • தொழில் அமைப்பு
  • நிர்வாகம்

Question 5.
பொலிவுறு நகரம் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
பொலிவுறு நகரம் :
நகர்ப்புறப் பகுதியில் உள் கட்டமைப்பு வசதி, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, எளிதாகக் கிடைக்கக் கூடிய சந்தை உள்ள இடங்களே பொலிவுறு நகரமாகும்.

தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.

VII. காரணம் கூறுக

Question 1.
மும்பை ஒரு மிகப்பெரிய நகரம்.
விடை:
மும்பை ஒரு மிகப்பெரிய நகரம்.
ஏனெனில்

  • மும்பை 10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமான மிகப்பெரிய நகரமாகும்.
  • மும்பை ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படுகிறது.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 2.
இமயமலைப் பகுதியில் சிதறிய குடியிருப்பு காணப்படுகிறது.
விடை:
இமயமலைப் பகுதியில் சிதறிய குடியிருப்பு காணப்படுகிறது.
ஏனெனில்

  • இமயமலைப் பகுதியில் காலநிலை, மலைப்பாதை, அடர்ந்த காட்டுப் பகுதி, புல்வெளிகள், தீவிர சாகுபடி பிரதேசங்கள் காணப்படுகிறது.
  • வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படுகிறது.

VIII. வேறுபடுத்துக.

Question 1.
மொழி மற்றும் மதம் – மொழி
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 5

Question 2.
நீக்ரோ இனம் மற்றும் மங்கோலிய இனம்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 6

Question 3.
பெருநகரம் மற்றும் நகரம்
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 7

Question 4.
நகர்ப்புற குடியிருப்பு மற்றும் கிராமப்புறக் குடியிருப்பு
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 8

IX. பத்தியளவில் விடையளி

Question 1.
நான்கு முக்கிய மனித இனங்களைப் பற்றி விவரிக்கவும்.
விடை:
நான்கு முக்கிய மனித இனங்கள்:
ஒரே பண்புகள் மற்றும் பழக்க வழக்கங்களைக் காலங்காலமாக பின்பற்றக் கூடிய மக்கள் குழுக்கள் மனித இனம் ஆகும்.

காக்கசாய்டு:

  • ஐரோப்பிய இனத்தவர்கள்
  • யூரேஷியாவில் காணப்படுகிறார்கள்.
  • வெள்ளை நிறத்தோல், அடர்பழுப்பு நிறக் கண்கள், அலை போன்ற முடி, நீளமான மூக்கு உடையவர்கள்.

நீக்ராய்டு:

  • ஆப்பிரிக்க இனத்தவர்கள்,
  • ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் காணப்படுகிறார்கள்.
  • கருமை நிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, தடித்த உதடுகள் கொண்டவர்கள்.

மங்கோலாய்டு:

  • ஆசிய அமெரிக்க இனத்தவர்கள்
  • ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.
  • வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தோல் , நீளமான முடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை, மத்திமமான மூக்கு உடையவர்கள்.

ஆஸ்ட்ரலாய்டு:

  • ஆஸ்திரேலிய இனத்தவர்கள்.
  • ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறார்கள்.
  • அகலமான மூக்கு, சுருள் முடி, கருப்புநிறத் தோல் மற்றும் குறைவான உயரம் உடையவர்கள், ‘குட்டையானவர்கள்.

Question 2.
கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை?
விடை:
கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள்:

  • இயற்கையான நிலத்தோற்றம்
  • உள்ளூர் தட்பவெப்பநிலை
  • மண்வளம் மற்றும் நீர்வளங்கள்
  • சமூக நிறுவனங்கள்
  • பொருளாதார நிலை

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள் யாவை? ஏதாவது மூன்றினைப் பற்றி விரிவாக எழுதவும்.
விடை:
கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள்:
கிராமப்புறக் குடியிருப்புகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் நேர்கோட்டு, செவ்வகமான, வட்டமான, நட்சத்திர வடிவமான கிராமம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

நேர்கோட்டு குடியிருப்பு:
சாலைகள், இருப்புப்பாதைகள், ஆறு அல்லது கால்வாய், பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு நேர்கோட்டு குடியிருப்பு எனப்படும்.

எடுத்துக்காட்டு :
இமயமலை, ஆல்ப்ஸ், ராக்கி மலைத்தொடர்.

செவ்வக வடிவக் குடியிருப்பு:
இவ்வகைக் குடியிருப்புகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் ஒன்றையொன்று நேர்கோணத்திலும் சந்தித்துக் கொள்ளும். செவ்வக வடிவக் குடியிருப்புகள் சமவெளிப் பகுதிகள், மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டு : சட்லஜ்
வட்டவடிவக் குடியிருப்பு:
ஒரு மையப்பகுதியை சுற்றி வட்ட வடிவமாகக் காணப்படும் குடியிருப்புகளை வட்டவடிவக் குடியிருப்புகள் என்கிறோம். இவை ஏரிகள், குளங்களைச் சுற்றிக் காணப்படும்.

X. செயல்முறைகள்

ஆராய்க
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 9
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 10

7th Social  Science Guide மக்கள் தொகையும், குடியிருப்புகளும் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
____________ பொதுவாக ஆசிய அமெரிக்க இனத்தவர்களாவார்.
அ) காக்கசாய்டு
ஆ) நீக்ராய்டு
இ) மங்கோலாய்டு
ஈ) ஆஸ்ட்ரலாய்டு
விடை:
இ) மங்கோலாய்டு

Question 2.
______________ ஒரு நாடோடிகள் மதம்.
அ) இந்து மதம்
ஆ) ஷாமானிஸம்
இ) இஸ்லாம்
ஈ) ஷிண்டோயிசம்
விடை:
ஆ) ஷாமானிஸம்

Question 3.
இந்திய அரசால் __________ மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அ) 18
ஆ) 20
இ) 22
ஈ) 24
விடை:
இ) 22

Question 4.
மிகப்பெரிய நகரம் ஒன்றுக்கு எடுத்துக்காட்டு ___________
அ) டோக்கியோ
ஆ) கோயம்புத்தூர்
இ) சூரத்
ஈ) பரிதாபாத்
விடை:
அ) டோக்கியோ

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 5.
தமிழ்நாட்டில் _____________ முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.
அ) 12
ஆ) 14
இ) 16
ஈ) 18
விடை:
அ) 12

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது __________ எனப்படும்.
விடை:
புலம்பெயர்வு

Question 2.
_____________ அமைப்பிற்கு மொழி ஒரு பிரதான கருவியாகும்.
விடை:
சமுதாய

Question 3.
குழுமிய குடியிருப்பை ___________ எனவும் அழைக்கலாம்.
விடை:
மையக் குடியிருப்பு

Question 4.
_____________ தொழிலுக்கு ஏற்ப ஆற்றுப் பள்ளத்தாக்குகளையும் கடற்கரைச் சமவெளிகளையும் வாழ்வதற்கு ஏற்ற இடமாகக் கருதுகிறார்கள்
விடை:
விவசாய

Question 5.
ஹஜிப்பூர் ஒரு __________ நகரம்.
விடை:
செயற்கைக்கோள்

III. அ) பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 11
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 12

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
காக்கசாய்டு என்பவர்கள் ஐரோப்பிய இனத்தவர்கள்.
விடை:
சரி

Question 2.
ஆஸ்திரேலியர்கள் அகலமான மூக்கு, கருப்புநிறத் தோல் உடையவர்கள்.
விடை:
சரி

Question 3.
மதம் ஒரு குழுவின் அடையாளம்.
விடை:
சரி

Question 4.
பண்டைய வீடுகளில் பெரிய முற்றம், திறந்த வெளிக்காற்றுப் பகுதிகள் இருந்தன.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 5.
கல்கத்தா ஒரு மீப்பெரு நகரமாகும்.
விடை:
சரி

V. கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கருத்தில் கொண்டு சரியானதை தேர்வு செய்யவும்.

Question 1.
கூற்று : பல்வேறு வகையான மரபு வழிக் கடத்தல் மூலம் மனித உயிரினம் வகைப்படுத்தப்படுகிறது.
காரணம் : மனித இனத்தை மனித உயிர்களுக்குள்ளே பல்வேறு குழுக்களாக வரையறுத்துள்ளனர்.

அ) கூற்றும் காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று தவறு காரணம் சரி.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : கேரள கடற்கரையோரத்தில் வறண்ட (அல்லது) உயர்நிலைக் குடியிருப்புகள் காணப்படுகின்றன.
காரணம் : நீர் ஆதாரங்களாலும் நிலத்தோற்ற அமைப்பாலும் உயர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை.

அ) கூற்றும் காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்றும், காரணமும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

VI. பொருந்தாதை கண்டுபிடி

Question 1.
சிறு கிராமம், கிராமம், இணைந்த நகரம், சிறு சந்தை
விடை:
இணைந்த நகரம்

Question 2.
பஞ்சாபி, ராஜஸ்தானி, குஜராத்தி, கன்னடா
விடை:
கன்னடா

VII. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

1. ஜுடாய்ஸம் – சினகாக்
2. சமணம் – அகியாரி
விடை:
2. சமணம் – அகியாரி

VIII. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
திராவிட அரசுகளையும், திராவிட மொழிகளையும் பெயரிடு.
விடை:
திராவிட அரசுகள் (மூவேந்தர்கள்):

  • சேரர்
  • சோழர்
  • பாண்டியர்

திராவிட மொழிகள் :

  • தமிழ்
  • தெலுங்கு
  • கன்னடம்
  • மலையாளம்
  • துளு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 2.
‘யாத்திரைக் குடியிருப்பு’ – சிறுகுறிப்பு வரைக..
விடை:
யாத்திரைக் குடியிருப்பு:
கதை யாத்திரைக் குடியிருப்பு வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியும் (அல்லது) மத முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் அமையும்.
எ.கா: தமிழ்நாட்டில் உள்ள பழனி – முருகன் கோயில்.

Question 3.
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் – விளக்குக.
விடை:
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் :
நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் சாலைகள் ஒன்று சேரும் இடங்களிலிருந்து, சாலைகளின் இருபக்கங்களிலும் எல்லா திசைகளிலும் பரவி நட்சத்திர வடிவில் காணப்படும்.
எ.கா: பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள சிந்து, கங்கை சமவெளிகள்.

Question 4.
சிதறிய குடியிருப்புகளுக்கு எடுத்துக்காட்டுகள் தருக.
விடை:
சிதறிய குடியிருப்புகள் :

  • கோசி மலைப் பாதையின் வடக்குப் பகுதி
  • கங்கைச் சமவெளி
  • ராஜஸ்தானின் பாலைவனப் பகுதி
  • இமயமலை மற்றும் நீலகிரியின் மலையடிவாரம்.

Question 5.
‘மிகப்பெரிய நகரம்’ குறித்து குறிப்பு வரைக.
விடை:
மிகப்பெரிய நகரம் :

  • 10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமே மிகப்பெரிய நகரங்களாகும். மிகப்பெரிய நகரம் ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படும்.
  • கேன்டன், டோக்கியோ, டெல்லி, மும்பை முதலியவை மிகப்பெரு நகரங்களாகும்.

IX. விரிவான விடையளி

Question 1.
‘இந்திய மொழிகள் ‘ குறித்து எழுதுக.
விடை:

  1. இந்தியா பலவகையான மொழிகளைக் கொண்ட நாடு. இந்திய மாநிலங்கள் மொழிகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.
  2. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி இருந்தாலும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் 97% மக்களால் இந்த அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகள் பேசப்படுகின்றன.
  3. தென்னிந்தியாவின் முக்கிய மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம். இவை திராவிட மொழிகள் என்றழைக்கப்படுகின்றன.

Question 2.
“செயற்கைக் கோள் நகரம்” குறித்து எழுதுக.
விடை:
செயற்கைக் கோள் நகரம்:

  • அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட முக்கியமான பெரு நகரங்களில் நகர்ப்புறங்களுக்கு வெளியே வடிவமைக்கப்படும் வீடுகளே செயற்கைக் கோள் நகரமாகும்.
  • பொதுவாக செயற்கைக் கோள் நகரங்கள் கிராம, நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும். இந்தியாவின் அநேக செயற்கைக் கோள் நகரங்கள் குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டதாகவே உள்ளது.
  • செயற்கைக் கோள் நகரங்கள் சில நேரங்களில் பீகாரின், ரோஷ்டாஸ்மாவட்டத்தில் உள்ள டெஹ்ரி மற்றும் டால்மியா நகர் போல் இரட்டை நகரங்களாக காணப்படும்.
  • இந்நகரங்கள் சாலைகளோடு இணைக்கப்பட்டிருக்கும்.
    எ.கா: பாட்னா, பரோவ்னி, வாரணாசி, ஹஜிப்து

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும்

Question 3.
விளக்குக: “நீர் நிலைக் குடியிருப்புகள் மற்றும் வறண்ட (அல்லது) உலர்நிலைக் குடியிருப்புகள்
விடை:
நீர் நிலைக் குடியிருப்புகள்:

  • இவ்வகையான குடியிருப்புகளை அவற்றின் பெயரைக் கொண்டே (நீர் நிலை) அறிந்து கொள்ள முடியும்.
  • நீர் நிலைகளான கிணறுகள், ஏரி, குளம், ஆறு, குட்டைகள் ஆகியவற்றை ஒட்டிய இடங்களின் அடைந்திருப்பதே நீர்நிலைக் குடியிருப்புகள் ஆகும்.

வறண்ட /உலர்நிலைக் குடியிருப்புகள் :

  • வறண்ட இடம் என்பது சுற்றியுள்ள நிலத்தைக் காட்டிலும் சற்று உயரத்தில் அமைந்துள்ள இடமாகும்.
  • நீர் ஆதாரங்களாலும், நிலத்தோற்ற அமைப்பாலும் உலர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை.
  • இந்நிலையில் கேரளக் கரையோரத்திலும் மற்றும் டெல்டா கரையோரப் பகுதிகளிலும் இவ்வகையான குடியிருப்புகள் காணப்படுகின்றன.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 3 மக்கள் தொகையும், குடியிருப்புகளும் 13