Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Social Science Guide Pdf Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் Questions and Answers, Notes.

TN Board 7th Social Science Solutions Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

7th Social  Science Guide நிலத்தோற்றங்கள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
மலை அடிவாரத்தில் ஆறுகளால் படியவைக்கப்படும் வண்டல் படிவுகள் ____________ ஆகும்.
அ) உட்பாயத் தேக்கம்
ஆ) வண்டல் விசிறி
இ) வெள்ளச் சமவெளி
ஈ) டெல்டா
விடை:
ஆ) வண்டல் விசிறி

Question 2.
குற்றால நீர்வீழ்ச்சி _____________ ஆற்றின் குறுக்காக அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) பெண்ணாறு
இ) சிற்றாறு
ஈ) வைகை
விடை:
இ) சிற்றாறு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 3.
பனியாற்றுபடிவுகளால் தோற்றுவிக்கப்படும் நிலத்தோற்றம் ______________ ஆகும்.
அ) சர்க்
ஆ) அரெட்டுகள்
இ) மொரைன்
ஈ) டார்ன் ஏரி
விடை:
இ) மொரைன்

Question 4.
மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்
அ) அமெரிக்கா
ஆ) இந்தியா
இ) சீனா
ஈ) பிரேசில்
விடை:
இ) சீனா

Question 5.
பின் குறிப்பிட்டவையில் கடல் அலை அரிப்புடன் தொடர்பில்லாத ஒன்று ___________
அ) கடல் ஓங்கல்கள்
ஆ) கடல் வளைவுகள்
இ) கடல் தூண்க ள்
ஈ) கடற்கரைகள்
விடை:
ஈ) கடற்கரைகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பாறைகள் உடைவதையும் மற்றும் நொறுங்குவதையும் _____________ என்கிறோம்.
விடை:
பாறை சிதைவடைதல்

Question 2.
ஆறு, ஏரியில் அல்லது கடலில் சேரும் இடம் _____________ எனப்படுகிறது.
விடை:
ஆற்று முகத்துவாரம்

Question 3.
காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் தென் ஆப்பிரிக்காவில் ___________ பாலைவனத்தில் காணப்படுகிறது.
விடை:
கலஹாரி

Question 4.
ஜெர்மனியில் காணப்படும் சர்க் ___________ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
கார் சர்க்

Question 5.
உலகின் மிக நீண்ட கடற்கரை __________ ஆகும்.
விடை:
மியாமி கடற்கரை

III. பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 1
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 2

IV. பின்வரும் தகவல்களை கருத்தில் கொண்டு சரியான விடையை (✓) குறியிடுக.

Question 1.
கூற்று : முகத்துவாரப் பகுதியில் ஆறுகளால் டெல்டாக்கள் உருவாக்கப்படுகின்றன.
காரணம் : கடல் பகுதியை ஆறு அடையும் போது ஆற்றின் வேகம் குறையும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
கூற்று : கடல் வளைவுகள் இறுதியில் கடல் தூண்களாகின்றன.
காரணம் : கடல் தூண்கள் அலைகளின் படிவுகளால் ஏற்படுகின்றன.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு.
இ) கூற்று தவறு மற்றும் காரணம் சரி
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடை:
ஆ) கூற்று சரி மற்றும் காரணம் தவறு

V. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
அரித்தல் வரையறு.
விடை:
அரித்தல் :
நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் என பல்வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்துச் செல்லப்படுவதை அரித்தல் என்கிறோம்.

Question 2.
உட்பாயத் தேக்கம் என்றால் என்ன?
விடை:
உட்பாய்த் தேக்கம் :
நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் குழிவுறுதல் காரணமாக ஏற்படும் பெரும் பள்ளம் உட்பாய்த் தேக்கம் எனப்படும்.

Question 3.
குதிரைக் குளம்பு ஏரி எவ்வாறு உருவாகிறது?
விடை:
குதிரைக்குளம்பு ஏரி (Oxbow lake):

  • ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன.
  • நாளடைவில், ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஓர் ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக்குளம்பு ஏரி (Oxbow lake) எனப்படுகிறது.

Question 4.
பனியாற்று அரித்தலினால் ஏற்படும் முதன்மை நிலத்தோற்றங்களை குறிப்பிடவும்.
விடை:
பனியாற்று அரித்தலால் ஏற்படும் முதன்மை நிலத் தோற்றங்கள்:

  • சர்க்
  • அரட்டுகள்
  • ‘U’வடிவ பள்ளத்தாக்கு

Question 5.
காளான் பாறைகள் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:
காளான் பாறைகள்:
பாலைவனத்தில் வேகமான செயல்முறைக் காரணியான காற்று, பாறையின் மேற்பகுதியைவிட கீழ்ப்பகுதியை வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப்பாறைகளின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகிறது.

இவ்வாறான காளான் வடிவ பாறைகளை பாலைவனப் பகுதிகளில் காண இயலும். இவை காளான் பாறைகள் எனப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 6.
காயல்கள் என்றால் என்ன? ஒரு உதாரணம் தருக.
விடை:
காயல்கள் :
கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர் தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் எனப்படும்.

உதாரணம்:
கேரளாவிலுள்ள வேம்பநாடு ஏரி தமிழ்நாட்டிலுள்ள பழவற்ேகாடு ஏரி, ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி

VI. கீழ் குறிப்பிட்டவைகளை வேறுபடுத்துக.

Question 1.
கிளையாறு மற்றும் துணையாறு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 3

Question 2.
‘V’ வடிவ பள்ளத்தாக்கு மற்றும் ‘U’ வடிவ பள்ளத்தாக்கு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 4

Question 3.
கண்டப் பனியாறு மற்றும் மலைப்பனியாறு.
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 5

VII. காரணம் தருக.

Question 1.
ஆற்றின் வளைவுகளின் கழுத்துப்பகுதிகள் நெருங்கி வருகின்றன.
விடை:
ஆற்றின் வளைவுகளின் கழுத்துப்பகுதிகள் நெருங்கி வருகின்றன.
ஏனெனில்
மியான்டர் ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் செயல்களுக்கு உட்படுவதால் ஆற்று வளைவின் கழுத்துப்பகுதிகள் குறைந்து (நெருக்கமாக) வருகின்றன.

Question 2.
வெள்ளச் சமவெளிகள் மிகவும் வளமிக்கதாக உள்ளன.
விடை:
வெள்ளச் சமவெளிகள் மிகவும் வளமிக்கதாக உள்ளன.
ஏனெனில்
ஆறு தன் கரைகளை தாண்டி நிரம்பி வழிகின்ற போது ஆற்றின் அண்டைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது.

இவ்வெள்ளப் பெருக்கு மென்மையான மண் மற்றும் இதர பொருட்களை அடுக்குகளாக படியவைக்கின்றது. இவை வண்டல் படிவுகள் ஆகும். இதனால் வளமான சமதள வெள்ளச் சமவெளி உண்டாகிறது.

Question 3.
கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன.
விடை:
கடல் குகைகள் கடல் தூண்களாக மாறுகின்றன.
ஏனெனில்

  • கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும் போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று கடல் வளைவுகளை தோற்றுவிக்கின்றது.
  • மேலும் கடல் அலைகள் மேற்கூரையை அரிப்பதால் பக்கச் சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இந்த சுவர் போன்ற தோற்றங்கள் கடல் தூண்கள் எனப்படும்.

VIII. பத்தி அளவில் விடை அளிக்க.

Question 1.
ஆற்றின் அரிப்பால் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்களை விவரிக்க.
விடை:
ஆற்றின் அரிப்பில் தோன்றும் வேறுபட்ட நிலத்தோற்றங்கள் :
‘V’ வடிவ பள்ளத்தாக்கு :
ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத்தாக்கை செங்குத்தாக அரித்து ஆழமாக்கும். இந்தப் பள்ளத்தாக்கு குறுகிய படுகை உடையதாக ‘V’ வடிவில் காணப்படும். இதைத்தான் ‘V’ வடிவ பள்ளத்தாக்கு என்கிறோம்.

நீர் வீழ்ச்சி :
நீரானது ஒரு செங்குத்துப் பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம். மென்பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகிறது.

ஆற்று வளைவுகள் :
ஆறானது சமவெளிப்பகுதியை அடையும்போது அது சுழன்று, பெரிய திருப்பங்களுடன் செல்வதால் தோன்றும் பெரிய வளைவுகள் ஆற்றுவளைவுகள் எனப்படும்.

குதிரைக் குளம்பு ஏரி:
ஆற்று வளைவுகள் தொடர்ந்து இருபக்கங்களிலும் அரித்தலுக்கு உட்படுவதால் ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன. நாளடைவில் – ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஓர் ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக்குளம்பு ஏரி எனப்படும்.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
காற்றின் செயல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விளக்குக.
விடை:
காற்றின் செயல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்: காளான் பாறைகள்:
பாலைவனத்தில் காற்றின் வேகமான செயல்பாடு, பாறையின் மேற்பகுதியை விட கீழப்பகுதியை வேகமாக அரிக்கின்ற காரணத்தினால் அப் பாறைகளின் மேற்பகுதி அகன்றும் அடிப்பகுதி குறுகலாகவும் காணப்படுகிறது.

இவ்வாறான காளான் வடிவ பாறைகளை பாலைவனப் பகுதிகளில் காண இயலும். இவை காளான் பாறைகள் எனப்படும்.

காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்:
ஒரு தனித்துவிடப்பட்ட எஞ்சிய குன்று வட்டமான தலைப்பகுதியுடன் நிற்கும் ஒரு தூண்போன்று காட்சி அளிப்பது காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் எனப்படும்.

மணல் குன்றுகள்:
காற்று வீசும்போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது. காற்று வீசுவது நிற்கும்போது மணலானது உயரம் குறைவான குன்றுகள் போன்று படிய வைக்கின்றது. இப்படிவுகள் மணல்குன்றுகள் எனப்படும்.

பிறைவடிவ மணல் குன்றுகள் :
பிறைச் சந்திர தோற்றமுடன் கூடிய மணல் மேடுகள் பிறைவடிவ மணல் குன்றுகள் எனப்படும்.

காற்றடி வண்டல் படிவுகள்:
மணல் துகள்கள் மிக லேசாகவும் மற்றும் எடை குறைவாகவும் இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்திச் செல்கின்றது. இவ்வாறு கடத்தப்பட்ட மணல் ஒரு பெரும் பரப்பில் படிவதை காற்றடி வண்டல் படிவுகள் என்கிறோம்.

Question 3.
அரெட்டுகள் எவ்வாறு தோன்றுகின்றன?
விடை:
அரெட்டுகள் தோற்றம் :
பனி உருகும் போது, சர்க்கானது நீரால் நிரப்பப்பட்டு அழகான ஏரிகளாக மலைப் பகுதிகளில் உருவாகின்றன. இந்த ஏரிகள் டார்ன் ஏரி என்று அழைக்கப்படுகிறது.

அடுத்தடுத்த இரண்டு சர்க்குகள் ஒன்றை நோக்கி ஒன்று அரிக்கப்படும் போது, இதற்கு முன்னர் அமைந்த வட்டமான நிலத்தோற்றம் குறுகிய மற்றும் மலைச் சரிவான பக்கங்களுடன் கூடிய முகடுகளாக மாற்றம் அடைகின்றன. இம்முகடுகள் அரெட்டுகள் என்ற கத்திமுனைக் குன்றுகளாக உருவெடுக்கின்றன.

IX.

Question 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களை தொடர்புடைய கட்டங்களில் நிரப்பவும்
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 6
(பர்கான் , V’ வடிவ பள்ளத்தாக்கு , ஓங்கல், அரெட், தனிக்குன்றுகள், மொரைன், வண்டல் விசிறி மற்றும் காயல்)
விடை:
Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 7

Question 2.
உன் வீட்டு அருகே கீழ்க்காணும் ஏதேனும் ஒரு நிலத்தோற்றத்தை கண்டறிந்து குறிப்பு எழுதுக.
விடை:

  1. குன்று
  2. நீர்வீழ்ச்சி
  3. ஆறு அல்லது ஓடை
  4. கடற்கரை

2. நீர்வீழ்ச்சி – குற்றாலம் நீர்வீழ்ச்சி :
நீரானது ஒரு செங்குத்துப் பாறையின் வன்சரிவின் விளிம்பில் அருவியாக வீழ்வதை நீர்வீழ்ச்சி எனலாம். மென்பாறைகள் அரிக்கப்படுவதால் நீர்வீழ்ச்சி தோன்றுகிறது.

7th Social  Science Guide நிலத்தோற்றங்கள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு:

Question 1.
ஆறு ஓர் ஏரியிலோ, கடலிலோ அல்லது பேராழியிலோ கலக்கும் இடம் _____________
அ) ஆற்று வளைவு
ஆ) காயல்
இ) கழிமுகம்
ஈ) முகத்துவாரம்
விடை:
ஈ) முகத்துவாரம்

Question 2.
டார்ன் ஏரி என்பது ___________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
அ) ஆறு
ஆ) பனியாறு
இ) கடல்
ஈ) காற்று
விடை:
ஆ) பனியாறு

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 3.
காயலுக்கு ஓர் எடுத்துக்காட்டு
அ) குற்றாலம்
ஆ) வேம்பநாடு
இ) கார்ரி
ஈ) மியாமி
விடை:
ஆ) வேம்பநாடு

Question 4.
வடசீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் _____________
அ) கோபி
ஆ) கலஹாரி
இ) தார்
ஈ) சஹாரா
விடை:
அ) கோபி

Question 5.
மிசிசிபி என்பது ஒரு ____________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.
அ) மலை
ஆ) நீர்வீழ்ச்சி
இ) ஆறு
ஈ) கடற்கரை
விடை:
இ) ஆறு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
உயர்நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ்நிலங்களை படிதல் செய்தல் மூலம் உயர்நிலங்களாகவும் மாற்றுதல் ___________ எனப்படும்.
விடை:
சமப்படுத்துதல்

Question 2.
சேத்தியாத்தோப்பு ______________ மாவட்டத்தில் உள்ளது.
விடை:
கடலூர்

Question 3.
___________ டெல்டா தமிழ்நாட்டில் காணப்படுகிறது.
விடை:
காவேரி

Question 4.
உலகிலேயே மிக நீளமான கடற்கரை _____________ ஆகும்.
விடை:
மியாமி கடற்கரை

Question 5.
மலைச் சரிவில் ஈர்ப்பு விசையின் காரணமாக மெல்ல நகரும் பனிக்குவியல் ____________ ஆகும்
விடை:
பனியாறு

III. அ) பொருத்துக.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 8

IV. சரியா / தவறா எனக் கூறுக.

Question 1.
பொதுவாக ஆறுகள் ஒரு மலையில் இருந்தோ அல்லது குன்றிலிருந்தோ உற்பத்தியாகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
தென் அமெரிக்காவில் உள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உயரமான நீர்வீழ்ச்சி ஆகும்.
விடை:
சரி

Question 3.
கழிமுகப் பகுதிகள் அனைத்தும் மிகச்சிறந்த உற்பத்தி நிலங்களாகும்.
விடை:
சரி

Question 4.
உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை மெரினா கடற்கரை ஆகும்.
விடை:
சரி

Question 5.
கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு மணல் திட்டுகள் எனப்படுகின்றன.
விடை:
சரி

V. பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : ஆறு கடலை அடையும் போது பல பிரிவுகளாக பிரிந்து செல்கின்றது. இவை கிளையாறுகள் என்று அழைக்கப்படுகின்றன.
காரணம் : ஆறு கடலை அடையும்போது ஆற்று நீரின் வேகம் குறைந்து விடுகின்றது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : மணல் துகள்கள் எடை அதிகமாக இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்திச் செல்கின்றது.
காரணம் : காற்று வீசுவது நிற்கும் போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது.

அ) கூற்று காரணம் இரண்டும் சரி. கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்று சரி காரணம் தவறு.
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.
விடை:
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

VI. தவறான இணையைக் கண்டுபிடி

Question 1.
1. வேம்பநாடு – கேரளா
2. புலிகாட் – கர்நாடகம்
விடை:
2. புலிகாட் – கர்நாடகம்

VII. பொருந்தாதை கண்டுபிடி

Question 1.
ஆற்றுவளைவு, கழிமுகம், கத்திமுனைக் குன்றுகள், உயர் அணை
விடை:
கத்தி முனைக் குன்றுகள்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
காவேரி, கலஹாரி, கங்கை , மிசிசிபி
விடை:
கலஹாரி

VIII. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

Question 1.
‘சமப்படுத்துதல்’ என்றால் என்ன?
விடை:
சமப்படுத்துதல் :
உயர்நிலங்களை அரித்தல் மூலம் தாழ்நிலங்களாகவும், தாழ்நிலங்களை படிதல் செய்தல் மூ லம் உயர்நிலங்களாகவும் மாற்றுவதற்கு நிலங்களை சமப்படுத்துதல் என்று பெயர்.

Question 2.
புவிமேற்பரப்பில் காணப்படும் எண்ணற்ற வகையான நிலத்தோற்றங்களில் சிலவற்றை பெயரிடு.
விடை:
எண்ணற்ற வகையான நிலத்தோற்றங்கள் :

  • மலைகள்
  • பீடபூமிகள்
  • பள்ளத்தாக்குகள்

Question 3.
பிரசித்த பெற்ற உலகத்தின் சில நீர்வீழ்ச்சிகளைப் பெயரிடுக.
விடை:
உலகப் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகள்:

  • ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா, தென் அமெரிக்கா)
  • நயாகரா நீர்வீழ்ச்சி (கனடா, அமெரிக்க எல்லை, வடஅமெரிக்கா)
  • விக்டோரியா நீர்வீழ்ச்சி (ஜாம்பியா, ஜிம்பாப்வே எல்லை, ஆப்பிரிக்கா)
  • குற்றாலம் நீர்வீழ்ச்சி (தமிழ்நாடு, இந்தியா)

Question 4.
கழிமுகம் (டெல்டா) என்றால் என்ன? சில கழிமுகங்களின் பெயர்களைக் கூறு.
விடை:
கழிமுகம்:

  • அனைத்து முகத்துவாரங்களின் படிவுகளும் ஒருங்கிணைந்து டெல்டா எனப்படும். கழிமுகப்பகுதியை ஏற்படுத்துகின்றன. கழிமுகப் பகுதிகள் அனைத்தும் மிகச் சிறந்த உற்பத்தி நிலங்களாகும்.
  • காவேரி டெல்டா
  • கங்கை டெல்டா
  • மிசிசிபி டெல்டா

Question 5.
கடற்கரை எவ்வாறு உருவாகிறது?
விடை:
கடற்கரை:
கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப்பகுதி கடற்கரை எனப்படும். எ.கா: மியாமி கடற்கரை, மெரினா கடற்கரை

IX. பத்தி அளவில் விடை அளிக்க.

Question 1.
கடற்குகைகள் எவ்வாறு உருவாகின்றன?
விடை:
கடற்குகைகள்:
கடல் அலைகளின் அரிப்பினாலும் மற்றும் படிதலாலும் பலவகைப்பட்ட கடலோர நிலப்பரப்புகள் உருவாகின்றன. கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக உயர்ந்து காணப்படும் பொழுது அலைகளின் மோதலாலும், அரிப்பாலும் கடலை நோக்கி காணப்படும் செங்குத்துப் பாறை கடல் ஓங்கல் (Sea Cliff) எனப்படும்.

கடல் அலைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் பாறையில் விரிசல்கள் உருவாகின்றது. காலப்போக்கில் இவை பெரிய மற்றும் பரந்த விரிசல்களாக மாறுகின்றன. இதனால் செங்குத்துப் பாறையில் குகைகள் போன்ற வெற்றிடங்கள் தோன்றுகின்றன. இவை கடற்குகைகள் (Sea Caves) எனப்படுகின்றன.

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள்

Question 2.
நீர், காற்று, பனி, கடல் அலை போன்ற காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்களை பெயரிடு.
விடை:
பல்வேறு காரணிகளின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:

  • நீர் :’V’ வடிவ பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சி, ஆற்றுவளைவு, குதிரைக் குளம்பு ஏரி.
  • காற்று : காளான் பாறைகள், காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்
  • பனி : பனி அரி பள்ளம், கத்திமுனைக் குன்றுகள் (அரட்டுகள்),’U’ வடிவ பள்ளத்தாக்கு
  • கடல் அலை : கடல் ஓங்கல், கடற்குகைகள், கடல் வளைவுகள், கடல் தூண்கள்.

Question 3.
கடல் அலைகளால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விவரி.
விடை:
கடல் அலைகளால் ஏற்படும் நிலத்தோற்றங்கள்:
கடல் அலைகளின் அரிப்பினாலும் மற்றும் படிதலாலும் பலவகைப்பட்ட கடலோர நிலப்பரப்புக்கள் உருவாகின்றன.

கடல் ஓங்கல் :
கடற்கரையை அடுத்துள்ள நிலம் செங்குத்தாக உயர்ந்து காணப்படும் பொழுது அலைகளின் மோதலாலும், அரிப்பினாலும் கடலை நோக்கி காணப்படும் செங்குத்துப் பாறை கடல் ஓங்கல் (Sea Cliff) எனப்படும்.

கடற்குகைகள்:
கடல் அலைகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் பாறையில் விரிசல்கள் உருவாகின்றது. இதனால் செங்குத்துப் பாறையில் குகைகள் போன்ற வெற்றிடங்ககள் தோன்றுகின்றன. இவை கடற்குகைகள் (Sea Caves) எனப்படும்.

கடல் வளைவுகள் :
கடல் குகைகளின் உட்குழிவு பெரிதாகும்போது குகையின் மேற்கூரை மட்டும் எஞ்சி நின்று கடல் வளைவுகளை (Sea Arches) தோற்றுவிக்கின்றது.

கடல் தூண்கள் :
கடல் அலைகள் மேற்கூரையை மேலும் அரிப்பதால் பக்கச் சுவர்கள் மட்டும் எஞ்சி நிற்கின்றன. இந்த சுவர் போன்ற தோற்றங்கள் கடல் தூண்கள் (Sea Stacks) எனப்படும்.

கடற்கரை:
கடல் அலைகளால் மணல் மற்றும் சரளைகள் படிந்துள்ள கடலோரப்பகுதி கடற்கரை (Beach) எனப்படும்.

மணல் திட்டுகள் :
கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு மணல் திட்டுகள் (Sand Bars) எனப்படும்.

காயல்கள் (அல்லது) உப்பங்கழிகள்:
கடற்கரையிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ பிரிக்கப்பட்ட ஆழம் குறைவான நீர்தேக்கம் காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Lagoon) எனப்படும்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Social Science Guide Term 1 Geography Chapter 2 நிலத்தோற்றங்கள் 9