Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 3 Chapter 6 காட்சித் தொடர்பியல் Questions and Answers, Notes.
TN Board 7th Science Solutions Term 3 Chapter 6 காட்சித் தொடர்பியல்
7th Science Guide காட்சித் தொடர்பியல் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க………… விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.
அ) Ctrl + c
ஆ) Ctrl + V
இ) Ctrl + x
ஈ) Ctrl + A
விடை:
அ) Ctrl + c
Question 2.
தேர்ந்தெடுத்த உரையை வெட்ட …………. விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது.
அ) Ctrl + c
ஆ) Ctrl + v
இ) Ctrl + x
ஈ) Ctrl + A
விடை:
இ) Ctrl + x
Question 3.
லிபெர் ஆபிஸ் ரைட்டரில் எத்தனை வகையான பக்க அமைவுகள் உள்ளன?
அ) 1
ஆ) 2
இ) 3
ஈ) 4
விடை:
ஆ) 2
Question 4.
திரையில் ரூலர் தெரியாவிட்டால் ……………… கிளிக் செய்ய வேண்டும்.
அ) View-> Ruler
ஆ) View-> Task
இ) File-> Save
ஈ) Edit-> Paste
விடை:
அ) View-> Ruler
Question 5.
ஆவணத்தைச் சேமிக்க மெனு பயன்படுகிறது.
அ) File-> Open
ஆ) File-> Print
இ) File-> Save
ஈ) File-> Close
விடை:
இ) File -> Save
II. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
Question 1.
உரை ஆவண மென்பொருளின் பயன்கள் யாவை?
விடை:
எழுத்தாற்றல், புத்தகங்கள், அறிக்கைகள், செய்திமடல்கள், கையேடுகள், மற்றும் பிற ஆவணங்களைத் தோற்றுவிப்பதற்கு உரை ஆவணம் (Word செயலி) பயன்படுகிறது.
Question 2.
உரையை தேர்ந்தெடுத்தல் என்றால் என்ன?
விடை:
- உரையை தேர்ந்தெடுக்க சுட்டி அல்லது விசைப்பலகையை பயன்படுத்தலாம்.
- உரைகளை தேர்ந்தெடுத்த பின்னால் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
- உரையை நகர்த்தவும், நகல் எடுக்கவும், தடிப்பாக்கவும் முடியும்.
Question 3.
ஒரு ஆவணத்தை மூடலாம்?
விடை:
ஒரு ஆவணத்தில் வேலை முடிந்தவுடன் அந்த கோப்பினை மூட விட File – close என்ற கட்டளையை பயன்படுத்தலாம்.
Question 4.
வலது இசைவு என்பது என்ன?
விடை:
Word இல் பத்திகளை வலதுபக்கம் ஒழுங்குபடுத்தலாம், அதனால் வலது பக்கம் சமச்சீராக இருக்கும். இது வலது இசைவு (Right Alignment) எனப்படுகிறது.
Question 5.
ஏற்கனவே உள்ள ஒரு ஆவணத்தை திறப்பது எப்படி?
விடை:
சேமிக்கப்பட்டு மூடப்பட்ட ஒரு ஆவணத்தை திறக்க, பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றை செய்யலாம்.
- மெனு பட்டியில் உள்ள திறந்த கோப்பு (Open) பொத்தானை அழுத்தவும்.
- File – Open என்ற கட்டளையை பயன்படுத்தவும்
- விசைப்பலகையில் Ctrl + O விசைகளை அழுத்தவும்.
திறந்த உரையாடல் பெட்டி தோன்றும். கோப்பை தேர்ந்தெடுத்து திறக்க (open) பொத்தானை அழுத்தவும்.
7th Science Guide காட்சித் தொடர்பியல் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
உறவுசார் தரவுத்தளத்தை நிர்வகிப்பது என்பது மற்ற பிரபலமான …………. பயன்பாடுகளைப் போன்றதாகும்.
அ) நிகழ்த்துதல்
ஆ) சமன்பாடு
இ) தரவுதளம்
ஈ) அட்டவணைச் செயலி
விடை:
இ) தரவுதளம்
Question 2.
ஒரு புதிய ஆவணத்தை உருவாக்க, ………….. விசைகளை பயன்படுத்த வேண்டும்.
அ) Ctrl + O
ஆ) Ctrl + N
இ) Ctrl + C
ஈ) Ctrl + D
விடை:
ஆ) Ctrl + N
Question 3.
…………… வசதியைப் பயன்படுத்தி ஓரத்தின் அளவுகளை மாற்றிக் கொள்ளலாம்
அ) Format
ஆ) Ruler
இ) Task
ஈ) Edit
விடை:
ஆ) Ruler
Question 4.
எத்தனை வகையான ஒழுங்குபடுத்தல்கள் லிப்ரெ ஆபிஸில் உள்ளன?
அ) 1
ஆ) 2
இ) 3
ஈ) 4
விடை:
ஈ) 4
II. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
Question 1.
புதிய ஆவணத்தை உருவாக்கும் முறையைக் கூறுக.
விடை:
- ஒரு புதிய ஆவணத்தை உருவாக்க, பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.
- மெனு பட்டியில் உள்ள புதிய ஆவண பொத்தானை அழுத்தவும்.
- File – New – Text Document கட்டளையை பயன்படுத்தி ஒரு புதிய ஆவணத்தை திறக்கவும்.
- விசைப்பலகையில் Ctrl + N விசைகளை அழுத்தவும்.
Question 2.
அச்சு முன்னோட்டம் என்றால் என்ன?
விடை:
- அச்சு முன்னோட்டம் என்பது ஆவணம் அச்சிடப்படும் போது எவ்வாறு இருக்கும் எனப் பார்ப்பதற்கு ஒரு வழியை வழங்குகிறது.
- ஒரே நேரத்தில் பல பக்கங்களைப் பார்க்கவும் மற்றும் திரையினைப் பெரிதுபடுத்தவும் முடியும்.
- கோப்பு (File) மெனுவில் அச்சு முன்னோட்டம் (Print preview) கிளிக் செய்யவும் அல்லது Ctrl + Shift + 0 விசைகளை அழுத்தவும்.
Question 3.
நகர்த்துதல் மற்றும் நகலெடுத்தல் – வேறுபடுத்துக.
விடை:
Question 4.
சமன்பாடு என்றால் என்ன?
விடை:
- லிப்ரஆபிஸ் ஃபார்முலா அல்லது சமன்பாடு எட்டரை பயன்படுத்தி சிக்கலான சமன்பாடுகளை உருவாக்க முடியும்.
- இதில் நிலையான எழுத்துரு தொகுப்பில் இல்லாத குறியீடுகளைக் கூட பயன்படுத்தி சூத்திரங்களை உருவாக்கலாம்.
Question 5.
விசைப்பலகையின் மூலம் உரையை தேர்ந்தெடுக்கும் வழிமுறையை கூறு.
விடை:
- செருகும் இடத்தை தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உரையின் தொடக்கத்தில் வைக்க வேண்டும்.
- shift பொத்தானை அழுத்தியவாறு நகர்வு பொத்தான்களை பயன்படுத்தி தேவையான உரையை உயர்த்திக் காட்ட வேண்டும்.
- தேவையான உரை தேர்வு செய்யப்பட்டபின் shift பொத்தானை அழுத்துவதை விட்டு விடவும்.
மனவரைபடம்