Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 2 Chapter 4 செல் உயிரியல் Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 2 Chapter 4 செல் உயிரியல்

7th Science Guide செல் உயிரியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது
அ) செல்
ஆ) புரோட்டோப் பிளாசம்
இ) செல்லுலோஸ்
ஈ) உட்கரு
விடை:
அ) செல்

Question 2.
நான் ஒரு விலங்கு செல்லின் வெளிப்புற அடுக்கு நான் யார்?
அ) செல் சுவர்
ஆ) உட்கரு
இ) செல் சவ்வு
ஈ) உட்கரு சவ்வு
விடை:
இ) செல் சவ்வு

Question 3.
செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?
அ) லைசோசோம்
ஆ) ரைபோசோம்
இ) மைட்டோகாண்ட்ரியா
ஈ) உட்கரு
விடை:
ஈ) உட்கரு

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல்

Question 4.
______________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.
அ) எண்டோபிளாஸ்மிக் வளை
ஆ) கோல்கை உறுப்புகள்
இ) சென்டரியோல்
ஈ) உட்கரு
விடை:
ஈ) உட்கரு

Question 5.
செல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப்; பொருத்தமான அறிவியல் சொல்
அ) திசு
ஆ) உட்கரு
இ) செல்
ஈ) செல் நுண்உறுப்பு
விடை:
ஈ) செல் நுண்உறுப்பு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
செல்லில் உள்ள ஜெல்லி போன்ற பொருள் ____________ என்று அழைக்கப்படுகிறது.
விடை:
சைட்டோபிளாசம்

Question 2.
நான் தாவரத்தில் சூரிய ஆற்றலை உணவாக மாற்றுவேன் நான் யார்?
விடை:
பசுங்கணிகம்

Question 3.
முதிர்ந்த இரத்தச் சிவப்பு செல்லில் ____________ இல்லை.
விடை:
உட்கரு

Question 4.
ஒரு செல் உயிரினங்களை ___________ மூலமே காண இயலும்.
விடை:
நுண்ணோக்கி

Question 5.
சைட்டோபிளாசம் + உட்கரு = ____________
விடை:
புரோட்டோபிளாசம்

III. சரியா அல்லது தவறா எனக்கூறு – தவறானவற்றிற்கு சரியான பதிலைக் கொடுக்கவும்

Question 1.
விலங்கு செல்களில் செல் சுவர் உள்ளது.
விடை:
தவறு – விலங்கு செல்களில் செல்சுவர் இல்லை.

Question 2.
சால்மோனெல்லா என்பது ஒரு செல்லால் ஆன பாக்டீரியா ஆகும்.
விடை:
சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல்

Question 3.
செல் சவ்வு அனைத்தையும் ஊடுருவ அனுமதிக்கக்கூடியது.
விடை:
தவறு – தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களை மட்டும் அனுமதிக்கும்

Question 4.
தாவர செல்களில் மட்டுமே பசுங்கணிகங்கள் உள்ளன.
விடை:
சரி

Question 5.
மனித வயிறு ஒரு உறுப்பாகும்.
விடை:
சரி

Question 6.
ரைபோசோம் ஒரு சவ்வுடன் கொண்ட சிறிய நுண் உறுப்பு ஆகும்.
விடை:
தவறு – சவ்வு கிடையாது

IV. பொருத்துக.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல் 1
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல் 2

V. ஒப்புமை

Question 1.
பாக்டீரியா: நுண்ணுயிரி :: மா மரம் :………………..
விடை:
உயிரினம்

Question 2.
அடிப்போஸ் : திசு : கண் ………………
விடை:
உறுப்பு

Question 3.
செல் சுவர் : தாவரம் :: சென்ட்ரியோல் ……………….
விடை:
விலங்கு

Question 4.
பசுங்கணிகம் : ஒளிச்சேர்க்கை :: மைட்டோகாண்ட்ரியா :…………
விடை:
ஆற்றல் மையம்

VI. பின்வருவதில் இருந்து சரியான மாற்றியத்தைத் தேர்வு செய்யவும்

Question 1.
வலியுறுத்தல் (A) : திசு என்பது மாறுபட்ட செல்களைக் கொண்ட ஒரு குழு.
காரணம் (R) : தசைத் திசு தசை செல்களால் ஆனது.

அ) A மற்றும் R இரண்டும் சரியானவை
ஆ) A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை
இ) A சரி ஆனால் R தவறானது
ஈ) A தவறு ஆனால் R சரியானது
விடை:
இ) A சரி ஆனால் R தவறானது

Question 2.
வலியுறுத்தல் (A) : பெரும்பான்மை செல்களை நேரடியாக வெறும் கண் கொண்டு பார்க்க முடியாது ஏனெனில்
காரணம் (R) : செல்கள் மிக நுண்ணியது

அ) A மற்றும் R இரண்டும் சரியானவை
ஆ) A மற்றும் R ஆகிய இரண்டும் தவறானவை
இ) A சரி ஆனால் R தவறானது
ஈ) A தவறு ஆனால் R சரியானது
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரியானவை

VII. மிகச் சிறிய விடையளி

Question 1.
தாவர செல்லில் செல் சுவரின் பணிகள் யாவை?
விடை:
செல் சுவர் தாவர செல்லிற்கும் பாதுகாப்பு மற்றும் உறுதிப் பாட்டிற்கான சட்டகமாகச் செயப்படுகிறது.

Question 2.
சூரியனின் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார்ச் தயாரிக்கும் நுண் உறுப்பு எது?
விடை:
சூரியனின் ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார்ச் தயாரிக்கும் நுன் உறுப்பு பசுங்கணிகம்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல்

Question 3.
உட்கருவில் உள்ள முக்கிய பொருள்கள் யாவை?
விடை:
ஒன்று அல்லது இரண்டு நியூக்ளியோலஸ் மற்றம் குரோமேட்டின் உடல்

Question 4.
செல் சவ்வு என்ன செய்கிறது?
விடை:
செல் சவ்வு அரிதி கடத்தியாகும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களை மட்டுமே செல்லிற்குள்ளேயும், வெளியேயும் செல்ல அனுமதிக்கின்றன.

Question 5.
லைசோஸோம், செல்களின் துப்புரவாளர்கள் என ஏன் அழைக்கப்படுகிறது?
விடை:

  • லைசோசோம் செல்லின் முதன்மையான செரிமான பகுதி ஆகும்.
  • இவை செல்லிலேயே சிதைவடைவதால் இவற்றை தற்கொலைப்பை என அழைக்கிறோம்.

Question 6.
”ஒரு வைரஸ் ஒரு உயிரினம் அல்ல” என ஆசிரியர் கூறினார். நீங்கள் அவரது கூற்றினை ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லையா? ஏன் என விளக்குக.
விடை:
வைரஸ் ஒரு உயிரினம் அல்ல – கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கது.

காரணம் : வைரஸால் உயிருள்ள செல்லின் உள்ளே மட்டுமே இனப்பெருக்கம் செய்ய முடியும். செல்லுக்கு வெளியே இனப்பெருக்கம் செய்ய இயலாது. எனவே அதனை ஒரு உயிரினமாக கருத முடியாது.

VIII. குறுகிய விடையளி

Question 1.
செல் நமக்கு ஏன் மிக முக்கியம்?
விடை:

  • செல்கள் என்பது உயிரினங்களின் அடிப்படைக் கட்டுமான பொருளாகும்.
  • நமது உடல் பலவிதமான செல்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு வகை செல்லும் ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும் திறனுள்ளது.

Question 2.
பின்வரும் ஜோடிகளுக்கு இடையே உள்ள வேறுபாடு தருக.
i) சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் மென்மையான எண்டோபிளாச வலைப்பின்னல்
ii) செல் சுவர் மற்றும் செல் சவ்வு
iii) பசுங்கணிகம், மைட்டோகாண்ட்ரியா
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல் 3

Question 3.
செல்லிலிருந்து உயிரினம் வரையிலான வரிசையை சரியாக எழுதுக?
விடை:
செல் → திசுக்கள் → உறுப்பு → உறுப்பு மண்டலம் → உயிரினம்

Question 4.
உட்கரு பற்றி சிறு குறிப்பு எழுதுக.
விடை:

  • உட்கரு செல்லின் மூளையாகச் செயல்படுகிறது.
  • ஒன்று அல்லது இரண்டு நியூக்ளியோலஸ் மற்றும் குரோமேட்டின் உடல் ஆகியவை உட்கருவில் உள்ளன.
  • மரபு வழிப் பண்புகளை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்துகிறது.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல்

Question 5.
பின்வரும் அட்டவணையில் செல்கள், திசுக்கள், உறுப்புக்கள் என வகைப்படுத்தவும், நரம்பு செல், நுரையீரல் சைலம், மூளை, கொழுப்புத்திசு, இலை, சிவப்பனு, வெள்ளையனு செல்கள், கை, தசை, இதயம், முட்டை, செதில், புளோயம், குருத்தெலும்பு.
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல் 4
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல் 5

Question 6.
கீழே உள்ள வரிகளில், இந்த பாடத்தில் நீங்கள் கற்றவற்றைப் பற்றி எழுதுங்கள் செல்களைப் பற்றி நான் கற்றுக்கொண்ட முக்கியமான சில விஷயங்களைப் பற்றி நான் உங்களிடம் கூற விரும்புகிறேன் முதலில் நான் தொடங்குகிறேன் ……
விடை:

  • நமது உடல் செல்களால் ஆனது
  • ஒவ்வொரு வகை செல்லும் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்கிறது.
  • செல்லினுள், உட்கருவும், செல் நுண்ணுறுப்புகளும் உள்ளது.
    Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல் 6

IX. விரிவான விடையளி

Question 1.
ஏதேனும் மூன்று நுண்உறுப்புகளைப் பற்றி விவரிக்கவும்.
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல் 7
விடை:
கோல்கை உறுப்புகள் :
சவ்வால் சூழப்பட்ட கோல்கை உறுப்புகள் நொதிகளைச் சுரப்பது, உணவு செரிமானம் அடையச் செய்வது உணவிலிருந்து புரதத்தை பிரிந்து செல்லுக்கும் உடலுக்கும் வலு சேர்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றன.
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல் 8

லைசோசோம் :

  • இது நுண்ணோக்கியால் மட்டும் பார்க்கக் கூடிய முதன்மையான செரிமான பகுதி ஆகும்.
  • இவை செல்லிலேயே சிதைவடைவதால் இவற்றை தற்கொலைப்பை என்று அழைக்கிறோம்.
    Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல் 9

சென்ட்ரியோல்:

  • குழாய் போன்ற அமைப்புகளால் ஆனவை.
  • இவை விலங்கு செல்லில் காணப்படவில்லை
  • செல் பகுப்பின் போது குரோமோசோம்களை பிரிக்க உதவுகிறது.
    Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல் 10

Question 2.
தாவர செல் மற்றும் விலங்கு செல்களை ஒப்பிட்டு கீழே உள்ளவற்றை நிறைவு செய்யுங்கள்
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல் 11
விடை:
Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல் 12

X. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
வைரஸ் செல்லற்றவை என்று அழைக்கப்படுகிறது ஏன்?
விடை:

  • வைரஸ் செல்லற்றவை. ஏனெனில் அது நியூக்ளிக் அமிலம், மற்றும் புரதம் ஆகியவற்றால் ஆனது.
  • உயிருள்ள செல்லின் உள்ளே வைரஸ் இனப்பெருக்கம் செய்து அந்த செல்லின் பணிகளை முற்றிலும் அழித்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடும்.
  • உயிருள்ள செல்லின் வெளியே வைரஸால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. செல்லுக்கு வெளியே வைரஸ் ஒரு உயிரற்ற துகளாகக் கருதப்படும்.

7th Science Guide செல் உயிரியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
……………….. என்பது உயிரினங்களின் அடிப்படை கட்டுமானப் பொருளாகும்.
அ) செல்
ஆ) திசு
இ) கோல்கை உறுப்பு
ஈ) பசுங்கனிகம்
விடை:
அ) செல்

Question 2.
செல்லைத் தாங்குபவர் மற்றம் காப்பாளர் எனப்படுவது …………………….
அ) செல் சவ்வு
ஆ) செல்சுவர்
இ) உட்கரு
ஈ) ரிபோசோம்
விடை:
ஆ) செல்சுவர்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல்

Question 3.
……………….. சுருக்கி வரிவடையும் தன்மையால் தசைகளின் இயக்கத்திற்கு உதவுகின்றன.
அ) தசைசெல்
ஆ) நரம்பு செல்
இ) இரத்த சிவப்பு செல்
ஈ) எபீதிலியம் செல்
விடை:
அ) தசை செல்

Question 4.
உட்கருவின் உள்ளே உள்ள திரவம் ……………….. எனப்படுகிறது.
அ) நியூக்ளியஸ்
ஆ) நியூக்ளியோஃப்ளாசம்
இ) சைட்டோபிளாசம்
ஈ) புரோட்டடோபிளாசம்
விடை:
ஆ) நியூக்ளியோஃப்ளாசம்

Question 5.
ஒவ்வொரு நொடியும் ………………….. இரத்த செல்கள் இருக்கின்றன.
அ) 2 மில்லியன்
ஆ) 2000
இ) 200
ஈ) 10,000
விடை:
அ) 2 மில்லியன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
செல் சுவாசத்திற்குக் காரணமாக இருப்பது ………………..
விடை:
மைட்டோ காண்ட்ரியா

Question 2.
தாவர செல்லுக்கு திடமான வடிவத்தைக் கொடுப்பது ……………..
விடை:
செல்சுவர்

Question 3.
……………….. மிகப்பெரிய செல் நுண்ணுறுப்பு
விடை:
உட்கரு

Question 4.
மலர் மற்றும் பழங்களுக்கு வண்ணம் அளிப்பது ……………………
விடை:
வண்ணக் கணிகங்கள்

Question 5.
நீண்ட மற்றும் கதிர்கோல் வடிவமுடையது …………………..
விடை:
தசை செல்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல் 13

IV. சரியா? தவறா?

Question 1.
சால்மோனெல்லா சிற்றினத்தைச் சார்ந்த பாக்பிரியா உணவு நச்சாக முக்கிய காரணியாக கருதப்படுகிறது
விடை:
சரி

Question 2.
இரத்த சிவப்பு செல்கள் வட்ட தட்டு மற்றும் இருபுற குழி வடிவமுடையது
விடை:
சரி

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல்

Question 3.
புரோட்டோபிளாசம் சைட்டோசால் மற்றும் செல் நுண்ணுறுப்புகளால் ஆனாது.
விடை:
தவறு

Question 4.
பழங்கள் பழக்கும்போது பசுங்கனிகங்கள் வண்ணக் கணிகங்களாக் மாறுகின்றன.
விடை:
சரி

Question 5.
சொரசொரப்பான என்டோ பிளாச வலை கொழுப்பு உற்பத்தியில் பங்கு கொள்கிறது.
விடை:
தவறு

V. ஒப்புமை

Question 1.
உட்கரு : செல் பகுப்பு ; லைசோசோம் ……………..
விடை:
செரிமான பகுதி

Question 2.
செல் : இரத்த சிவப்பணு ; உறுப்பு : …………….
விடை:
செரிமான பகுதி

VI. பின்வருவதில் இருந்து சரியான மாற்றியத்தைத் தேர்வு செய்யவும்

Question 1.
கூற்று (A) : செல் சுவாசம் மைட்டோகாண்ட்டிரியாவில் நடைபெறுகிறது.
காரணம் (R) : மைட்டோ காண்ட்ரியா கோள அல்லது குச்சி வடிவிலானது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

Question 2.
கூற்று (A) : செல் அமைப்பை நுண்ணோக்கியில் மட்டுமே பார்க்க முடியும்.
காரணம் (R) : உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல்அலகு செல் ஆகும்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு, காரணம் சரி
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி

VII. மிகச் சிறிய விடையளி

Question 1.
செல் – வரையறு
விடை:
உயிரினங்களின் அடிப்படை’ அமைப்பு மற்றும் செயல் அலகு செல் ஆகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல்

Question 2.
உறுப்பு என்றால் என்ன?
விடை:
வெவ்வேறு திசுக்களின் தொகுப்பானது ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல்களைச் செய்யக் கூடிய அமைப்பே உறுப்பு எனப்படும்.

Question 3.
பிளாஸ்மோ டெஸ்மாட்டா என்றால் என்ன?
விடை:
பிளாஸ்மோடெஸ்மாட்டா என்றழைக்கப்படும் சிறிய துவரத்தின் மூலம் ஒவ்வொரு செல்லும் அதன் அருகிலுள்ள செல்களுடன் இணைத்துக் கொள்கிறது.

Question 4.
கணிகங்கள் என்றால் என்ன?
விடை:

  • தாவரங்களின் வெவ்வேறு வண்ணத்திற்கு இந்தக் கணிகங்களே காரணமாகும்.
  • பச்சை நிறத்திற்கு பசுங்கணிகமும், மலர் மற்றும் பழங்களின் வண்ணத்திற்கு வண்ணக்கணிகங்களும் காரணமாகின்றன.

Question 5.
உட்கருவின் பணிகள் யாவை?
விடை:

  • செல்லில் நடைபெறும் அனைத்து உயிர் செயல்களையும் வேதிவினைகளையும் கட்டுப்படுத்துகின்றன.
  • மரபு வழிப்பண்புகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றன.

VIII. குறுகிய விடையளி

Question 1.
சொரசொரப்பான என்டோபிளாச வலை பற்றி நீவிர் அறிவது யாது?
விடை:
சொரசொரப்பான என்டோபிளாச வலையில் ரிபோசோம்கள் இணைந்திருப்பதால் அது புரத உற்பத்திக்கு உதவுகிறது.

Question 2.
சென்ட்ரியோவின் அமைப்பு மற்றும் பணி சிறு குறிப்பு வரைக.
விடை:

  • விலங்கு செல்லில் மட்டும் இவை உள்ளன.
  • செல்பகுப்பின்போது குரோமோசோம்களைப் பிரிக்க உதவுகிறது.

Question 3.
மூலச்செல்கள் பற்றி நீவிர் அறிவது யாது?
விடை:

  • கருவிலிருந்து பெறப்படும் மூலச் செல்கள் உடலில் உள்ள எந்தவொரு செல்லாகவும் அவை மாறக் கூடியது.
  • இதனால் மருத்துவர்கள் சில நோய்களை குணப்படுத்தவும் தடுக்கவும் மூலச் செல்களை பயன்படுத்துகின்றனர்.

IX. விரிவான விடையளி

Question 1.
சிறப்பு செல்களில் அமைப்பு மற்றும் பணியினை விவரி.
விடை:

  • எபிதீலியல் செல்கள் அமைப்பு : தட்டையான மற்றும் தூண்வடிவ செல்கள்.
  • பணி : உடலின் மேற்பரப்பை மூடிப் பாதுகாக்கிறது.
  • தசை செல்கள் அமைப்பு : நீண்ட மற்றம் கதிர்கோல் வடிவமுடையது.
  • பணி : சுருங்கி வரியும் தன்மையால் தசைகளின் இயக்கத்திற்கு உதவுகின்றன.
  • நரம்பு செல் : கிளைத்த நீண்ட நரம்பு நார்களைக் கொண்டவை.
  • பணி : உடலின் செயல்களை ஒருங்கிணைத்தல் மற்றும் செய்தி பரிமாற்றம் போன்ற செயல்களைச் செய்கின்றன.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல்

Question 2.
சைட்டோபிளாசம் செல் இயக்கத்தின் பகுதி நிருபி.
விடை:

  1. சைட்டோபிளாசம் என்பது செல் சவ்வு உள்ளடக்கிய செல்லின் அனைத்து பகுதிகள் கொண்டது ஆனால் உட்கருவைத் தவிர்த்துள்ள பகுதியாகும்.
  2. சைட்டோபிளாசம் சைட்டோசால் மற்றும் செல் நுண்ணுறுப்புகளால் ஆனாது.
  3. சைட்டோசால் என்பது நீர் நிறைந்த ஜெல்லி போன்ற 70% – 90% அளவு நீரால் ஆனது நிறமற்றது.
  4. என்டோபிளாச விலை கோல்கை உறுப்பு, ரிபோசோம் மைட்டோகாண்ட்ரியா, லைசோசோம் போன்ற நுண்ணுறுப்புகள் உள்ளன.
  5. உட்கருவின் உள்ளே உள்ள திரவம் நியூக்ளியோ பிளாசம் எனப்படும்.
  6. உட்கரு + சைட்டோபிளாசம் = புரோட்டோபிளாசம்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 4 செல் உயிரியல் 14