Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Social Science Guide Pdf Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர் Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Social Science Solutions Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

6th Social Science Guide பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
குப்த வம்சத்தை நிறுவியவர் … ஆவார்.
அ) முதலாம் சந்திரகுப்தர்
ஆ) ஸ்ரீகுப்தர்
இ) விஷ்ணு கோபர்
ஈ) விஷ்ணுகுப்தர்
விடை:
ஆ) ஸ்ரீ குப்தர்

Question 2.
பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் … ஆவார்.
அ) காளிதாசர்
ஆ) அமரசிம்மர்
இ) ஹரிசேனர்
ஈ) தன்வந்திரி
விடை:
இ) ஹரிசேனர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 3.
சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் … என்ற இடத்தில் உள்ளது.
அ) மெக்ராலி
ஆ) பிதாரி
இ) கத்வா
ஈ) மதுரா
விடை:
அ) மெக்ராலி

Question 4.
அறுவைச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர் …..
அ) சரகர்
ஆ) சுஸ்ருதர்
இ) தன்வந்திரி
ஈ) அக்னிவாசர்
விடை:
ஆ) சுஸ்ருதர்

Question 5.
வங்காளத்தின் கௌட அரசர் ………
அ) சசாங்கர்
ஆ) மைத்திரகர்
இ) ராஜ வர்த்தனர்
ஈ) இரண்டாம் புலிகேசி
விடை:
அ) சசாங்கர்

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையைக் கண்டுபிடிக்கவும்

Question 1.
கூற்று : வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடி சூட்டிக் கொண்டார்.
காரணம் : முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணமுடித்தார்.
அ. காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ. காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.
ஈ. கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
விடை:
அ) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.

Question 2.
கூற்று 1 : தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திரகுப்தர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை.
கூற்று 2 : குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினர்.
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி.
ஆ) இரண்டாம் கூற்று தவறு, ஆனால் முதல் கூற்று சரி.
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி.

Question 3.
கீழ்க்கான்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?
அ) ஸ்ரீ குப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர்
ஆ) முதலாம் சந்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர்
இ) ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – முதலாம் சந்திரகுப்தர்
ஈ) விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திர குப்தர் – முதலாம் சந்திரகுப்தர்
விடை:
அ) ஸ்ரீகுப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிமாதித்யர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 4.
கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும். அவற்றில் எது/எவை சரியானது சரியானவை
விடை:
என்பதைக் கண்டறியவும்.
1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.
2. மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.
அ) 1 மட்டும் சரி
ஆ) 2 மட்டும் சரி
இ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி
ஈ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு
விடை:
அ) 1 மட்டும் சரி

Question 5.
பொருந்தாததை வட்டமிடுக.

Question 1.
காளிதாசர், ஹரிசேனர், சமுத்திரகுப்தர் சரகர்
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 65
விடை:
சமுத்திரகுப்தர்

Question 2.
ரத்னாவளி, ஹர்சரிதா நாகநந்தா, பிரியதர்சிகா
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 66
விடை:
ஹர்சரிதா

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
இலங்கை அரசர்………… சமுத்திரகுப்தரின், சமகாலத்தவர் ஆவார்.
விடை:
ஸ்ரீமேகவர்மன்

Question 2.
இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சியின் போது சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி ………… இந்தியாவிற்கு வந்தார்.
விடை:
பாகியான்

Question 3.
……….. படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.
விடை:
ஹூணர்கள்

Question 4.
………. அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.
விடை:
நிலவரி

Question 5.
குப்தர்களின் அலுவலக மொழி…………..
விடை:
சமஸ்கிருதம்

Question 6.
பல்லவ அரசர் ………… சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.
விடை:
விஷ்ணுகோபன்

Question 7.
வர்த்த ன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ……… ஆவார்.
விடை:
ஹர்ஷவர்த்தனர்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 8.
ஹர்ஷர் தலைநகரை ………. லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்.
விடை:
தானேஷ்வரி

IV. சரியா/தவறா என எழுதுக

Question 1.
தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார்.
விடை:
சரி

Question 2.
குப்தர்களின் காலத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் இந்தோ – ஆரிய பாணியை ஒத்துள்ளன.
விடை:
தவறு

Question 3.
குப்தர்களின் ஆட்சிக்காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை.
விடை:
தவறு

Question 4.
ஹர்ஷர் ஹீனயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர்
விடை:
தவறு

Question 5.
ஹர்ஷர் அவருடைய மத சகிப்புத் தன்மையின்மைக்காகப் பெயர் பெற்றவர்.
விடை:
தவறு

V. பொருத்துக

அ)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 90
விடை:
ஆ) 2, 4, 1, 3, 5

ஆ)
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 91
விடை:
இ) 3, 5, 1, 2, 4

VI. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
‘கவிராஜா’ என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது? ஏன்?
விடை:

  • ‘கவிராஜா’ என்ற பட்டம் சமுத்திர குப்தருக்கு வழங்கப்பட்டது.
  • ஏனெனில் அவர் கவிதைப் பிரியரும் இசைப்பிரியருமாவார்.

Question 2.
நாளந்தா பல்கலைக்கழகத்தில் கற்றுத்தரப்பட்ட பாடப்பிரிவுகள் யாவை?
விடை:

  • பௌத்த தத்துவம்
  • யோகா
  • வேத இலக்கியங்கள்
  • மருத்துவம்

Question 3.
அரசர்களின் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை விளக்குக.
விடை:

  • குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப் படுத்தினர்.
  • அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 4.
உலோகவியலில் குப்தர்களின் சாதனைகளை எடுத்துக் கூறுக.
விடை:

  • உலோகவியலில் குப்தர்களின் சாதனை எனப்படுவது மெக்ராலி இரும்புத்தூணாகும். இது டெல்லி யில் சந்திரகுப்தரால் நிறுவப் பட்டதாகும்.
  • இத்தூண் இன்றளவும் துருப்பிடிக்காமல் உள்ளது.

Question 5.
ஹூணர்கள் என்போர் யார்?
விடை:

  • ஹூணர்கள் என்போர் நாடோடிப் பழங்குடியினர்.
  • இவர்கள் ரோமாபுரியையும் கான்ஸ்டாண்டி நோபிளையும் பேரச்சத்திற்கு உள்ளாக்கினர்.

Question 6.
ஹர்ஷர் காலத்தில் வசூலிக்கப்பட்ட மூன்று வகையான வரிகளைக் குறிப்பிடுக.
விடை:

  • பாகா
  • ஹிரண்யா
  • பாலி

Question 7.
ஹர்ஷர் எழுதிய நூற்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:

  • ரத்னாவளி
  • நாகநந்தா
  • பிரியதர்சிகா

VII. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:
பிரசஸ்தி (மெய்க்கீர்த்தி) :

  • பிரசஸ்தி என்பது ஒரு சமஸ்கிருதச் சொல். அதன் பொருள் ஒருவரைப் பாராட்டிப் புகழ்வது.
  • அவைக்களப் புலவர்கள் அரசர்களைப் புகழ்ந்து பாடி அவர்தம் சாதனைகளைப் பட்டியலிட்டனர்.
  • இவை பின்னர் மக்கள் படித்துத் தெரிந்து கொள்வதற்காக தூண்களில் பொறிக்கப்பட்டன.

Question 2.
சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்து எழுதுக.
விடை:

  • சமுத்திர குப்தர் மகத்தான போர்த்தளபதி. அவர் நாடு முழுவதும் படையெடுத்துச் சென்றார்.
  • அவர் பல்லவ அரசர் விஷ்ணு கோபனை தோற்கடித்தார்.
  • அவர் வட இந்தியாவில் ஒன்பது அரசுகளைக் கைப்பற்றினார்.
  • அவர் தென்னிந்தியாவில் 12 அரசர்களை சிற்றரசர்களாக்கி கப்பம் கட்டச் செய்தார்.
  • அவரின் மேலாதிக்கத்தை கிழக்கு வங்காளம், அஸ்ஸாம், நேபாளம், பஞ்சாபின் கிழக்குப் பகுதி ஆகியவற்றின் அரசர்களும் ராஜஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பழங்குடியினரும் ஏற்றுக் கொண்டனர்.

Question 3.
குப்தர்கள் காலத்தில் நிலங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?
விடை:
குப்தர் காலத்தில் நிலங்களை வகைப்படுத்துதல்.
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 95

Question 4.
சிரெஸ்தி, சார்த்தவாகா வணிகர்களைக் குறித்து எழுதுக.
விடை:
சிரெஸ்தி :
சிரெஸ்தி பிரிவைச் சார்ந்த வணிகர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள்.
கார்த்தவாகா :
சார்த்தவாகா வணிகர்கள் எருது பூட்டிய வண்டிகளில் சரக்குகளை ஏற்றி பல்வேறு இடங்களுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள்.

Question 5.
கட்டடக்கலைக்குக் குப்தர்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதுக.
விடை:

  • முன்பிருந்த மரபான பாறைக் குடைவரைக் கோவில்களிலிருந்து கட்டுமானக் கோவில்களை முதன் முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே.
  • இக்கோவில்கள் கோபுரங்களோடும், விரிவான செதுக்கு வேலைப்பாடுகளோடும் அனைத்து இந்து தெய்வங்களுக்கும் கட்டப்பட்டன.
  • மிகவும் குறிப்பிடத்தக்க பாறைக் குடைவரைக் குகைகள் அஜந்தா, எல்லோரா, பாக், உதயகிரி, ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
  • இக்காலக்கட்டத்தில் கட்டப்பட்ட கட்டுமானக் கோவில்கள் திராவிடப் பாணியை ஒத்திருக்கின்றன.

Question 6.
காளிதாசர் இயற்றிய நூல்களின் பெயர்களை எழுதுக.
விடை:

  • காளிதாசர் இயற்றிய நாடக நூல்கள் சாகுந்தலம், மாளவிகாக்கனிமித்ரம், விக்கிரம ஊர்வசியம் என்பனவாகும்.
  • அவருடைய ஏனைய சிறப்புமிக்க நூல்கள் மேகதூதம், ரகு வம்சம், குமார சம்பவம், ரிது சம்காரம் ஆகும்.

Question 7.
ஹர்ஷரை ஒரு கவிஞராகவும் நாடக ஆசிரியராகவும் மதிப்பீடு செய்யவும்.
விடை:

  • ஹர்ஷரே ஒரு கவிஞரும் நாடக ஆசிரியருமாவார்.
  • சிறந்த கவிஞர்களும் கலைஞர்களும் அவரைச் சூழ்ந்து இருந்தனர்.
  • ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்சிகா ஆகியவை அவருடைய புகழ்பெற்ற நூல்கள்.
  • அவரின் அவையை பானபட்டர், மயூரா, ஹர்தத்தா, ஜெயசேனர் ஆகியோர் அலங்கரித்தனர்.

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

VIII. உயர் சிந்தனை வினா

Question 1.
குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக் காட்டுவது.
அ) நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை
ஆ) தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை
இ) அரசாட்சி செழிப்பாக இருந்ததை
ஈ) மன்னர்களின் ஆடம்பர இயல்பை
விடை:
இ) அரசாட்சி செழிப்பாக இருந்ததை

Question 2.
பழைமையும் புகழும்மிக்க அஜந்தாவிலுள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?
அ) குகைச் சுவர்களில்
ஆ) கோவில்களின் விதானங்களில்
இ) பாறைகளில்
ஈ) பாப்பிரஸ் இலைகளில்
விடை:
அ) குகைச் சுவர்களில்

Question 3.
குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது?
அ) கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி
ஆ) தென்னிந்தியப் படையெழுச்சி தயப் படையெழுச்சு
இ) ஹூணர்களின் படையெடுப்பு
ஈ) மத சகிப்புத் தன்மை
விடை:
அ) கலை, இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

Question 4.
குப்தர்கள் காலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன?
விடை:

  • நவீன உலகிற்கு விட்டுச் சென்ற பூஜ்ஜியத்தின் கண்டுபிடிப்பும், அதன் பரிணாம வளர்ச்சியான தசம எண் முறையும்.
  • ஆரியப்பட்டர் சூரிய, சந்திர கிரகணங்களுக்கான உண்மைக் காரணங்களை விளக்கியுள்ளார். அவர்தான் பூமி தனது அச்சில் சுழல்கிறது எனும் உண்மையை அறிவித்த முதல் இந்திய வானியல் ஆய்வாளர்.

IX. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

1. காளிதாசரின் நாடகம் ஒன்றினை வகுப்பறையில் மேடையேற்றவும்.
2. மௌரியர் காலச் சமுதாயத்திற்கும் குப்தர்கள் கால சமுதாயத்திற்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பீடு செய்க.

வாழ்க்கைத் திறன்கள் (மாணவர்களுக்கானது)

1. வானியல் துறைக்கு ஆரியப்பட்டர், வராகமிகிரர், பிரம்மகுப்தர் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பினைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கவும்.
2. செயற்கைக்கோள் ஏவுவதைப் பற்றி அதிகமாக அறிந்து கொள்ள அருகேயுள்ள இஸ்ரோ மையத்திற்குச் சென்று வரவும்.

XI. கட்டக வினா

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 40
விடை:
Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 41

6th Social Science Guide பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர் Additional Important Questions and Answers

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஸ்ரீகுப்தருக்குப் பின் அரசப் பதவியேற்றவர்.
அ) முதலாம் குமாரகுப்தர்
ஆ) ஸ்கந்த குப்தர்
இ) விஷ்ணுகுப்தர்
ஈ) கடோத்கஜர்
விடை:
ஈ) கடோத்கஜர்

Question 2.
நிதி சாரம் என்னும் நூலில் முக்கியத்துவம் பெறுவது
அ) வணிகம்
ஆ) இராணுவம்
இ) வேளாண்மை
ஈ) கருவூலம்
விடை:
ஈ) கருவூலம்

Question 3.
தனக்குத்தானே அரசராக முடி சூட்டிக் கொண்ட ஹுண தலைவர்
அ) யசோதர்மன்
ஆ) அட்டில்லா
இ) மிகிரகுலர்
ஈ) தோரமானர்
விடை:
ஈ) தோரமானர்

Question 4.
தினாரா என்பது குப்தர்கள் காலத்தில் வெளியிடப்பட்ட ……. நாணயங்கள்
அ) செப்பு
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) பொன்
விடை:
ஈ) பொன்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம்: குப்தர், வர்த்த னர்

Question 5.
ஹர்ஷர் கலந்து கொண்ட கும்பமேளா விழா நடைபெற்ற இடம்
அ) அலகாபாத்
ஆ) காசி
இ) அயோத்தி
ஈ) பிரயாகை
விடை:
ஈ) பிரயாகை

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்திப்பார்த்து சரியான விடையைக் கண்டுபிழக்கவம்.

Question 1.
கூற்று : குப்தப் பேரரசர்களில் கடைசிப் பேரரசரான முதலாம் நரசிம்ம குப்தர் மிகிரகுலருக்கு கப்பம் கட்டி வந்தார்.
காரணம் : மிகிர குப்தர் பௌத்தத்தைப் பகைமையோடு பார்த்ததால் மன வேதனை அடைந்து கப்பம் கட்டுவதை நிறுத்தினார்.
அ) காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே
ஆ) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி
விடை:
ஆ) காரணமும் சுற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

Question 2.
கூற்று 1 : குப்தர்கள் காலத்தைக் காட்டிலும் ஹர்ஷர் காலத்தில் குற்றவியல் சட்டங்கள் கடுமையாக இல்லை.
கூற்று II : சட்டங்களை மீறுவோர்க்கும் அரசருக்கு எதிராக சதி செய்வோர்க்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அ) முதலாம் கூற்று தவறு, ஆனால் இரண்டாம் கூற்று சரி
ஆ) இரண்டாம் கூற்று தவறு. ஆனால் முதல் கூற்று சரி.
இ) இரண்டு கூற்றுகளும் சரி
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு
விடை:
ஈ) இரண்டு கூற்றுகளும் தவறு.

III. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…….. பேரவையில் ஹர்ஷர் தனது செல்வங்களை கொடையாக விநியோகித்தார்.
விடை:
பிரயாகை

Question 2.
சீனர்களின் தலைநகரான …… மாபெரும் கலை, கல்விக்கான மையம்
விடை:
சியான்

Question 3.
முதலாம் சந்திரகுப்தரின் மனைவி ………
விடை:
குமாரதேவி

Question 4.
அரசர்களின் படையெடுப்பு நடவடிக்ககைகளில் வருவாயின் …….. முதலீடு செய்யப்பட்டது.
விடை:
உபரியே

Question 5.
விவசாயிகள் பல்வேறு வரிகளைச் செலுத்த வேண்டிய நிலையில் ……….. நிலைக்கு தள்ளப்பட்டனர்.
விடை:
கொத்தடிமை

IV. பொருத்துக

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 96
விடை:
ஆ) 4, 5, 2, 1, 3

V. ஓரிரு வாக்கியங்களில் பதில் அளிக்கவும்

Question 1.
லிச்சாவி குறித்து குறிப்பு வரைக.
விடை:

  • கங்கை நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்ட ஆட்சி பகுதி கொண்ட லிச்சாவி பழமையான கன சங்கங்களில் ஒன்று.
  • முதலாம் சந்திரகுப்தர் புகழ்பெற்ற, வலிமைவாய்ந்த அந்த அரச குடும்பத்தில் குமாரதேவியை மணந்தார்.

Question 2.
கவிராஜா குறித்து நீ அறிவதென்ன?
விடை:

  • சமுத்திர குப்தர் வெளியிட்ட தங்க நாணயங்களில் ஒன்றில் அவர் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
  • அவர் ஒரு சிறந்த கவிதைப் பிரியரும் இசைப்பிரியருமாவார். அதனால் கவிராஜா எனும் பட்டம் பெற்றார்.

Question 3.
பாஹியானின் பயணக் குறிப்புகள் மகதத்து மக்களின் வாழ்க்கை பற்றி என்ன கூறுகிறது?
விடை:

  • பாஹியான் கூற்றுப்படி மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும் செழிப்போடும் வாழ்ந்தனர்.
  • கயா பாழடைந்திருந்தது. கபில வஸ்து காடாகியிருந்தது. ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள்’ செல்வத்தோடும் செழிப்போடும் வாழந்தனர்.

VII. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
குப்த அரசர்களால் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் யார்?
விடை:

  • உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் தண்ட நாயகர் மற்றும் மகாதண்ட நாயகர் என அழைக்கப்பட்டனர்.
  • தேசம் அல்லது புக்தி எனப்படும் பிராந்திய அதிகாரிகள் ‘உபாரிகா’ எனும் ஆளுநர்கள் விஷ்யா எனப்படும் மாவட்டங்களில் அதிகாரிகள் விஷ்யாபதிகள், கிராம அளவில் கிராமிகா, கிராமிதியாகஷா எனும் அதிகாரிகள் செயல்பட்டனர்.
  • இராணுவப் பதவிகளின் பெயர்கள் : பாலாதிகிரிதா (காலாட்படை தளபதி) மஹா பாலாதிகிரிதா
    (குதிரைப்படை தளபதி) ‘தூதகா’ எனும் ஒற்றர்கள்.

Question 2.
குப்தர் கால சமூகம் பற்றி நீ அறிவதென்ன?
விடை:

  • குப்தர் காலச் சமூகம் நான்கு வர்ணங்களைக் கொண்ட தந்தை வழிச் சமூகம்.
  • மனுவின் சட்டங்கள் நடைமுறையில் இருந்தன.
  • பெண்கள் தந்தையின், கணவனின் அல்லது மூத்த மகனின் பாதுகாப்பில் இருக்க வேண்டும்.
  • பலதார மணம் பரவலாக நடைமுறையில் இருந்தது. அரசர்களும் நிலப்பிரபுக்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைப் பெற்றிருந்தனர்.
  • உடன்கட்டை ஏறும் (சதி முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றப்பட்டது.

Question 3.
நாளந்தா பல்கலைக்கழகம் பற்றி எழுதுக.
விடை:

  • குப்தர்கள் ஆதரவில் 5 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளில் நாளந்தா பல்கலைக்கழகம் தழைத்தோங்கியது. பின்னர் கன்னோசி அரசர் ஹர்ஷரின் ஆதரவில் சிறப்புற்றது.
  • முக்கிய பாடம் பௌத்தத் தத்துவம், மருத்துவம், வேத இலக்கியம், யோகா கற்பிக்கப்பட்டன.
  • யுவான் சுவாங் பௌத்தத் தத்துவத்தைப் படிப்பதில் பல ஆண்டுகள் செலவழித்தார்.
  • நாளந்தாவில் 8 மகாபாட சாலைகளும் 3 மிகப் பெரிய நூலகங்களும் இருந்தன.
  • பக்தியார் கில்ஜி தலைமையில் வந்த மம்லுக்குகளால் அழித்து தரைமட்டமாக்கப்பட்டது.
  • நாளந்தா யுனேஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னம்.

மன வரைபடம்

Samacheer Kalvi 6th Social Science Guide Term 3 History Chapter 3 பேரரசுகளின் காலம் குப்தர், வர்த்த னர் 99