Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல் Questions and Answers, Notes.
TN Board 6th Science Solutions Term 3 Chapter 4 நமது சுற்றுச்சூழல்
6th Science Guide நமது சுற்றுச்சூழல் Text Book Back Questions and Answers
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
நன்னீர் சூழ்நிலை மண்டலம் எது எனக் கண்டுபிடித்து எழுதுக.
அ) குளம்
ஆ) ஏரி
இ) நதி
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஈ) இவை அனைத்தும்
Question 2.
உற்பத்தியாளர்கள் எனப்படுவை.
அ) விலங்குகள்
ஆ) பறவைகள்
இ) தாவரங்கள்
ஈ) பாம்புகள்
விடை:
இ) தாரவங்கள்
Question 3.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவு
அ) நெகிழி
ஆ) சமையலறைக் கழிவுகள்
இ) கண்ணாடி
ஈ) அலுமினியம்
விடை:
ஆ) சமையலறைக் கழிவுகள்
Question 4.
காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களை இப்படியும் அழைக்கலாம்.
அ) மறு சுழற்சி
ஆ) மீண்டும் பயன்படுத்துதல்
இ) மாசுபாடு
ஈ) பயன்பாட்டைக் குறைத்தல்
விடை:
இ) மாசுபாடு
Question 5.
களைக்கொல்லிகளின் பயன்பாடு _____ மாசுபாட்டை உருவாக்கும்.
அ) நில மாசுபாடு
ஆ) நீர் மாசுபாடு
இ) இரைச்சல் மாசுபாடு
ஈ) அ மற்றும் ஆ
விடை:
ஈ) அ மற்றும் ஆ
II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
Question 1.
தாவரங்களை உண்பவை ———- நிலை நுகர்வோர்கள் ஆகும்.
விடை:
முதல்
Question 2.
சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை _____ காரணிகள் ஆகும்.
விடை:
காலநிலைக்
Question 3.
______ என்ற நிகழ்வின் மூலம் கழிவுப் பொருள்களிலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்.
விடை:
மறு சுழற்சி
Question 4.
நீர் மாசுபாடு மனிதனுக்கு _____ நோயை உருவாக்குகிறது.
Answer;
தீங்கு விளைவித்து
Question 5.
3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல் _____ மற்றும் மறுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது.
விடை:
மீண்டும் பயன்படுத்துதல்
III. சரியா (அ) தவறா என கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.
Question 1.
கடல் சூழ்நிலை மண்டலத்திற்கு பசிபிக் பெருங்கடல் ஓர் எடுத்துக்காட்டாகும்.
விடை;
சரி.
Question 2.
பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன சிதைப்பவைகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
சரி.
Question 3.
மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும், உயிரினச் சிதைவிற்கு உட்படாத கழிவுகளுக்கு எடுத்துக் காட்டுகளாகும்.
விடை.
தவறு – மனிதக் கழிவுகளும், விலங்கினக் கழிவுகளும் உயிரினச் சிதைவுக்கு உள்ளாகும் கழிவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
Question 4.
அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால் ஒலி மாசுபாடு உருவாகும்.
விடை:
தவறு – அளவுக்கு அதிகமாக களைக் கொல்லிகளைப் பயன்படுத்தினால், நீர் நில மாசுபாடு உருவாகும்.
Question 5.
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவுகளை நாம் இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.
விடை.
தவறு – திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கழிவுகளை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்க வேண்டும்.
IV. பொருத்துக .
V. சரியான வரிசையில் எழுதி, உணவுச் சங்கிலியை உருவாக்கு.
Question 1.
முயல் → கேரட் → கழுகு → பாம்பு
விடை:
கேரட் → முயல் → பாம்பு → கழுகு
Question 2.
மனிதன் → பூச்சி → ஆல்கா → மீன்
விடை:
ஆல்கா → பூச்சி → மீன் → மனிதன்
VI. மிகக் குறுகிய விடையளி:
Question 1.
சூழ்நிலை மண்டலம் வரையறு.
விடை:
உயிருள்ளவையும், உயிரற்றவையும் ஒன்று சேர்ந்த ஒரு கட்டமைப்பே சூழ்நிலை மண்டலமாகும்.
Question 2.
சூழ்நிலை மண்டலத்தின் இரு வகைகள் யாவை?
விடை:
- இயற்கை சூழ்நிலை மண்டலம்
- செயற்கை சூழ்நிலை மண்டலம்
Question 3.
மறுசுழற்சி அடையக்கூடிய பொருள்களில் எவையேனும் இரண்டினை எழுதுக.
விடை:
- பழைய துணிகள் – காகிதத் தயாரிப்பில் பயன்படுத்துதல்.
- சில வகை நெகிழிகள் – உருக்கி நடைபாதை விரிப்புகள், நெகிழி அட்டைகள், நீர் பாய்ச்சு குழாய்கள் தயாரித்தல்.
Question 4.
மாசுபாட்டின் வகைகளைக் குறிப்பிடுக.
விடை:
மாசுபாடுகள் நான்கு முக்கிய வகைகளாக உள்ளன.
- காற்று மாசுபாடு
- நீர் மாசுபாடு
- நில மாசுபாடு
- ஒலி மாசுபாடு
Question 5.
நீர் வாழ் உணவுச்சங்கிலிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
விடை:
நீர் வாழ் உணவுச் சங்கிலி:
நீர் வாழ் தாவரம் → நீர் வாழ்ப்பூச்சி → லார்வா → மீன்
Question 6.
மாசுபடுத்திகள் என்றால் என்ன?
விடை:
- மனிதனின் செயல்பாடுகளாள் சுற்றுச்சூழல் மாசடைகிறது.
- எந்தப் பொருட்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை உருவாக்குகின்றனவோ அவை மாசுபடுத்திகள் எனப்படுகின்றன.
(எ.கா) புகை, சாக்கடைக்கழிவுகள், களைக் கொல்லிகள்.
Question 7.
பின்வருவன உருவாக்கும் மாசுபாடுகளை எழுதுக.
அ. ஒலி பெருக்கி
ஆ. நெகிழி
விடை:
அ. ஒலி பெருக்கி – ஒலி மாசுபாடு.
ஆ. நெகிழி – நில மாசுபாடு.
VII. குறுகிய விடையளி:
Question 1.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்றால் என்ன?
விடை:
1. பாக்டீரியா, பூஞ்சை ஆகிய நுண்ணுயிரிகள், தாவர, விலங்கின கழிவுகளை நீர், ஆக்ஸிஜன், வெப்பம், சூரிய புற ஊதாக் கதிர்கள் ஆகியவற்றின் உதவியால் சிதைத்து மண்ணோடு மண்ணாக மட்கச் செய்கிறது. இதற்கு உயிரினச் சிதைவு என்று பெயர்.
2. இவ்வாறு நுண்ணுயிரினங்களால் சிதைவுறக்கூடிய இயற்கைக் கழிவுகளை உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள் என்கிறோம்.
எ.கா. – காய்கறி மற்றும் பழக்கழிவுகள், உணவுக்கழிவுகள், காய்ந்த புல், இலை, தழை, கிளை போன்ற தாவர கழிவுகள், விலங்கின மனிதக் கழிவுகள், இறந்த உடல்கள் போன்ற கழிவுகள்.
Question 2.
நீர் மாசுபாட்டை நாம் எவ்வாறு குறைக்கலாம்?
விடை:
- மீதமுள்ள எண்ணெய், பழைய மருந்து மற்றும் மருத்துவ கழிவுகள், வேதிக் கழிவுகள் நீருடன் கலத்தலைத் தவிர்க்க வேண்டும்.
- வயலில் பயிர்கள் வளர்வதற்காகப் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மற்றும் உரங்களின் அளவைக் குறைக்க வேண்டும்.
- வீட்டின் கழிவு நீரை வீட்டுத் தோட்டம் அமைத்துப் பயன்படுத்தலாம்.
- குளங்கள், ஏரிகள், ஆறுகளில் குப்பைகள், தொழிற்சாலைக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகளைக் கலக்காமல் அவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- எப்பொழுதும் குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்ட வேண்டும்.
- தொழிற்சாலைக் கழிவுகளை நேரடியாக நீர் கலக்காமல், அவற்றை சுத்திகரிப்பு செய்து பின்னரே நீர் நிலைகளில் கொட்ட அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
Question 3.
உணவுச் சங்கிலியின் முக்கியத்துவத்தை எழுதுக.
விடை:
- ஒரு சூழ்நிலை மண்டலத்தில் உயிரினங்களுக்கிடையே உள்ள உணவு உண்ணும் உறவு முறையும், அந்த உயிரினங்கள் எவ்வாறு ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதையும் உணவுச் சங்கிலி விளக்குகிறது.
- சூழ்நிலை மண்டலத்தில் ஆற்றல் எவ்வாறு ஓர் உயிரினத்திடமிருந்து மற்றொரு உயிரினத்திற்கு சுழற்சியாகக் கடத்தப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
- சூழ்நிலை மண்டலத்தின் மாசுபாட்டினால் உணவுச் சங்கிலியில் உள்ள ஓர் உறுப்பினரின் நச்சுப் பொருள்கள் மற்ற உயிரினங்களுக்குத் தொடர்ச்சியாக எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதையும் அறிந்து கொள்ள உணவுச் சங்கிலி உதவுகிறது.
VIII.விரிவான விடையளி
Question 1.
உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.
விடை:
Question 2.
ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.
விடை:
வரையறை:
85 dB (டெஸிபல்) அளவுக்கு அதிகமாக மனிதர்கள், தொழிற்சாலை இயந்திரங்கள், இசை, வாகனங்கள், ஒலிபெருக்கி இவற்றால் உருவாக்கப்படும் எந்த ஒலியும், ஒலி மாசுபாடு (அ) இரைச்சல் மாசுபாடு எனப்படும்.
பாதிப்புகள்:
அதிகபட்ச இரைச்சலில் அதிக நேரம் இருப்பது உளவியல் மற்றும் உடல் ரீதியான பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
- அமைதியான தூக்கம் கெடுகிறது.
- அமைதியாகப் படிப்பதை, வேலை செய்வதைப் பாதிக்கிறது.
- அதிக இரைச்சல் செவிப்பறையைத் தாக்கி, கேட்கும் திறனைப் பாதிக்கிறது.
- உயர் இரத்த அழுத்தம், உயர் மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
- நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள், பறவைகள், வீட்டுப் பிராணிகள், நோயாளிகள், வயதானவர்கள், குழந்தைகள் ஆகியவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகிறது.
- கப்பலில் ஏற்படும் இரைச்சலினால் ஆழ்கடல் திமிங்கலங்கள் தங்கள் பாதையிலிருந்து திசை மாறுகின்றன.
IX. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி
Question 1.
உணவுச் சங்கிலியில் இருந்து ஓர் உயிரினம் நீக்கப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
விடை:
- புல்வெளியில் காணப்படும் ஒரு உணவுச் சங்கிலி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- தாவரங்கள் – மான் – புலி
- காடுகளில் மான்கள் புற்களை உணவாக எடுத்துக் கொள்கின்றன.
- புலிகள் மான்களை வேட்டையாடி உண்கின்றன.
- இயற்கையாகவோ அல்லது மனித செயல்களால் மான்கள் வேட்டையாடிக் கொல்லப்பட்டால் அதன் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
- இதனால் புலிகளுக்கு தேவையான உணவுத்தட்டுப்பாடு ஏற்படுகிறது.
- இதனால் புலிகள் எண்ணிக்கை குறையலாம்.
- மேலும் உணவுக்காக மனிதனையும் தாக்க நேரிடலாம்.
Question 2.
கழிவுகளுக்கும், டெங்கு மற்றும் மலேரியா போன்ற ஆபத்தான நோய்களுக்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குக.
விடை:
- ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் டெங்கு காய்ச்சலையும், பெண் அன்பிலிஸ் வகை கொசுக்கள் மலேரியா நோயையும் பரப்புகின்றன.
- இவை மனிதனால் உண்டான நீர் தொட்டிகள், மேல் நிலை தொட்டிகள், குளிர்விப்பான் அடியில் உள்ள நீர்தட்டு போன்றவற்றில் பெருகுகின்றன.
- மேலும் தூக்கி வீசப்பட்ட தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கிண்ணங்கள், டயர்கள் போன்றவற்றிலும் மழை நீர் தேங்கி இருந்தால் இனப் பெருக்கம் செய்து அதிகளவு பெருக்கமடைகின்றன.
- எனவே திறந்த வெளியில் கொட்டப்பட்ட கழிவுகள் கொசுக்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவுவதாலும் தீமை விளைவிக்கும் வைரஸ், பர்கடீரியாக்களை உருவாக்குவதாலும், பரப்புவதாலும் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டக் கூடாது.
- இன்றைய கால கட்டத்தில் கழிவுகள் மிக அதிகமாகி ஆபத்தான டெங்கு, பன்றிக்காய்ச்சல், சிக்குன்குனியா போன்ற நோய்கள் அதிகம் பரவி தீங்கு விளைவிப்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
X. படத்தைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி
Question 1.
இப்படத்திலிருந்து நீ அறியும் நிகழ்வு எது? விளக்குக.
விடை:
- மேற்காட்டிய படத்தில் பல வகையான கழிவுகள் ஒன்றாக திறந்த வெளியில் கொட்டப்பட்டுள்ளது.
- திறந்த வெளிக் குப்பையில் தீப்பற்றி எரிகிறது.
- இதனால் நெகிழிப்பைகள், பைப்புகள், காலணிகள் போன்றவை எரிந்து ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய புகை மற்றும் நச்சுப் பொருள்களைச் சூழ்நிலை மண்டலத்தில் சேர்த்து அதை மாசுப்படுத்தும்.
- வேதிப் பொருட்கள் கலந்த இக்காற்றை உயிரினங்கள் சுவாசிக்கின்றன.
- குப்பைகள் எரிவதால் உருவாகும் சாம்பல் துகள்கள் நிலத்தை மாசுப்படுத்துகின்றன.
- மழை பெய்யும் போது சில அபாயகரமான நச்சுக்கள் நீருடன் கலந்து நிலத்திற்குள் செல்லுகின்றன. நிலத்தடி நீருடனும் கலக்கின்றன.
- நெகிழிப்பைகள் மழை நீரை நிலத்திற்கடியில் செல்ல விடாமல் தடுக்கின்றன.
- இதனால் சிறிய குட்டைகளில் உள்ள நீரில் நெகிழிக் கிண்ண ங்கள், டயர்கள் போன்றவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு மற்றும் மலேரியா நோய்களைப் பரப்புகின்றன.
- இவ்வாறு திறந்த வெளியில் குப்பை பல்வேறு விதங்களில் சூழ்நிலைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
Question 2.
குப்பைக் குழிகளில் நிகழும் மாசுபாடுகள் யாவை?
விடை:
1 காற்றுச் சீர்கேடு
2 நில சீர்கேடு
3. நீர் சீர்கேடு
6th Science Guide நமது சுற்றுச்சூழல் Additional Important Questions and Answers
I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
Question 1.
மனிதர்களுடைய தலையீடுகளின்றி உருவான சூழ்நிலை மண்டலம்
அ) இயற்கை சூழ்நிலை மண்டலம்
ஆ) செயற்கை சூழ்நிலை மண்டலம்
இ) நீர்வாழ் காட்சியகம்
ஈ) நிலவ வாழ்
விடை:
அ) இயற்கை சூழ்நிலை மண்டலம்
Question 2.
நிலவாழ் சூழ்நிலையைக் கண்டுபிடித்து எழுதுக.
அ) ஏரி
ஆ) மலைப்பகுதிகள்
இ) பாலைனங்கள்
ஈ) ஆ மற்றும் இ
விடை:
ஈ) ஆ மற்றும் இ மலைப்பகுதிகள், பாலைவனங்கள்
Question 3.
மனிதர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும் சூழ்நிலை மண்டலம் ______
அ) ஏரி
ஆ) ஆறுகள்
இ) செயற்கை சூழ்நிலை மண்டலம்
ஈ) இயற்கை சூழ்நிலை மண்டலம்
விடை:
இ) செயற்கை சூழ்நிலை மண்டலம்
Question 4.
அடிப்படையாக ஆற்றல் உற்பத்தியானது எவற்றில் நிகழ்கிறது?
அ) நீர் வாழ்ப்பூச்சி
ஆ) முயல்
இ) தாவரம்
ஈ) மான்
விடை:
இ) தாவரம்
Question 5.
இறந்த தாவரங்கள், விலங்குகளில் உள்ள கரிமப் பொருட்களை சிதைத்து உயிர் வாழ்பவை.
அ) நுகர்வோர்கள்
ஆ) சிதைப்பவைகள்
இ) அனைத்துண்ணிகள்
ஈ) உற்பத்தியாளர்கள்
விடை:
ஆ) சிதைப்பவைகள்
III. பின்வரும் கூற்று சரியா தவறா எனக்காண்.
Question 1.
சூரியன், காற்று, நீர், தாதுப்பொருள்கள் மற்றும் மண் போன்ற காரணிகளுக்கு உயிரற்ற காரணிகள் என்று பெயர்.
விடை:
சரி
Question 2.
மிருகக் காட்சி சாலை ஒரு இயற்கை சூழ்நிலை மண்டலம்.
விடை:
தவறு. மிருக்காட்சி சாலை ஒரு செயற்கை நில சூழ்நிலை மண்டலம்.
Question 3.
ஒரு சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறுப்பட்ட உயிரினங்களுக் கிடையேயான, பல்வேறு வகையான உணவூட்டத் தொடர்புகளைப் புரிந்து கொள்ள நமக்கு உணவு வலை உதவுகிறது.
விடை:
சரி
Question 4.
இந்தியா ஒவ்வொரு நாளும் 532 மில்லியன் கிலோ திடக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது.
விடை:
சரி
Question 5.
தொழிற்சாலையில் உருவாகும் சில நச்சு வாயுக்கள் மழை நீருடன் இணைந்து அதிக அமிலத் தன்மையுடையதாக மாற்றுகிறது.
விடை:
சரி
IV. பொருத்துக.
V. சரியான வரிசையில் எழுதி உணவுச் சங்கிலியை உருவாக்கு.
Question 1.
வெட்டுக்கிளி → தவளை → புற்கள் → காகம்
விடை:
புற்கள் → வெட்டுக்கிளி → தவளை → காகம்
Question 2.
மயில் → எலி → தானியம் → பாம்பு
விடை:
தானியம் → எலி → பாம்பு → மயில்
VI. மிகக்குறுகிய விடையளி
Question 1.
செயற்கை நில சூழ்நிலை மண்டலத்திற்கு இரு எ.கா. தருக.
விடை:
- நெல் வயல்
- தோட்டம்
Question 2.
உற்பத்தியாளர்கள் என்றால் என்ன?
விடை:
தனக்கான உணவைத் தானே உற்பத்தி செய்து கொள்ளக் கூடிய உயிரினங்களை நாம் உற்பத்தியாளர்கள் என்கிறோம்.
Question 3.
தாவரங்கள் ஒளிச் சேர்க்கை செய்ய என்னென்ன தேவைப்படுகிறது?
விடை:
- பச்சையம்
- நீர்
- கார்பன்டை – ஆக்ஸைடு
- சூரிய ஒளி
Question 4.
இரண்டு வகையான திடக்கழிவுகளைக் கூறுக.
விடை:
- உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகள்.
- உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகள்.
Question 5.
இறந்த உயிரினங்கள் எவ்வாறு மாற்றமடைகின்றன?
விடை:
- மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் இறந்த உயிரினங்களையும், கழிவுகளையும் சிதைத்து எளிய மூலக்கூறுகளாக மண்ணில் சேர்க்கின்றன.
- இவை தாவரங்கள் வளர உதவுகின்றன.
VII. விரிவான விடையளி
Question 1.
ஒலி மாசுபாட்டை எவ்வாறு குறைக்கலாம்?
விடை:
- மின் கருவிகள் பயன்படாத நிலையில் அணைத்து விடவும்.
- தொலைக்காட்சி, மின்னணுக் கருவிகளின் ஒலி அளவைக் குறைத்து வைத்துக் கேட்கலாம்.
- வாகனங்களின் ஒலிப்பான்களைத் தேவை ஏற்படும் போது மட்டுமே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும்.
- பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்கலாம்.
- பேசலாம் ஆனால் அதிக சத்தம் போட வேண்டாம்.
Question 2.
நிலத்தில் நிரப்புதல் பற்றி சிறு குறிப்பு தருக.
விடை:
- நிலத்தில் காணப்படும் இயற்கைக் குழிகள் அல்லது தோண்டப்பட்ட பள்ளங்களில் கழிவுகளை நிரப்பி அதற்கு மேலாக மண்ணைப் பரப்பும் முறைக்கு நிலத்தில் நிரப்புதல் என்று பெயர்.
- இதிலுள்ள மட்கும் கழிவுகள் சில நாட்களுக்கப் பின் மெதுவாகச் சிதைவுற்று உரமாக மாறி விடுகின்றன.
- இவ்வகை நிலங்கள் மீது பூங்காக்கள் தோட்டங்களை போன்றவற்றை உருவாக்கலாம்.
- பொதுவாக கழிவுகளின் பயன்பாட்டைக் குறைத்தல் நல்லது.
- கழிவுகளைப் பிரித்து வைத்து மறு சுழற்சி செய்வதாலும் சுற்றுப்புறம் சுத்தமாகும்.
VIII. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி
Question 1.
விலங்குகளின் எலும்புகள் உயிரினச் சிதைவுறுபவையா?
விடை:
- பொதுவாக எலும்புகள் மற்ற திசுக்களை விட மெதுவாகவே சிதைக்கப்படுகிறது.
- மித வெப்பமான, ஈரமான சூழ்நிலையில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் எலும்புப் புரதம் சிதைவடைய 10 முதல் 40 ஆண்டு வரை ஆகலாம்.
- ஆனால் வறட்சியான சூழ்நிலையில் எலும்பு சிதைவடைய ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூட ஆகலாம்.
Question 2.
எல்லா வகையான துணிகளும் உயிரினச் சிதைவுறுபவையா?
விடை:
- எல்லா வகை துணிகளும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகக் கூடியவை என்று கூற முடியாது.
- பலவகை ஆடைகள், செயற்கை பாலியெஸ்டர் போன்ற இழைகளால் உருவாக்கப்பட்டவை.
- அடிப்படையாக நெகிழிப் பொருள் தன்மை உடைய இந்த பாலிமர், பருத்தி, சணல், பட்டு போன்ற தாவர, விலங்குப் பொருள்களாலான இயற்கை இழைகள் போல எளிதில் சிதைவுறாது.
- மேலும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வேதிச்சாயங்கள் மற்றும் வேதிப்பொருட்களால் சிதைத்தல் தடைபடுகிறது.
- பாலியெஸ்டர் 1951 ஆம் ஆண்டு அமெரிக்கன் வேதிக் கம்பென டூ பான்ட் என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மனவரைபடம்