Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Science Guide Pdf Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் Questions and Answers, Notes.

TN Board 6th Science Solutions Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

6th Science Guide அன்றாட வாழ்வில் வேதியியல் Text Book Back Questions and Answers

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
சோப்புகளின் முதன்மை மூலம் _____ ஆகும்.
அ) புரதங்கள்
ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்
இ) மண்
ஈ) நுரை உருவாக்கி
விடை:
ஆ) விலங்கு கொழுப்பும் தாவர எண்ணையும்

Question 2.
வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு கரைசல் பயன்படுகிறது.
அ) பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு
ஆ) சோடியும் ஹைட்ராக்ஸைடு
இ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
ஈ) சோடியம் குளோரைடு
விடை:
ஆ) சோடியம் ஹைட்ராக்ஸைடு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 3.
சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் _____ ஆகும்.
அ) விரைவாக கெட்டித்தன்மையடைய
ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்த
இ) கடினமாக்க
ஈ) கலவையை உருவாக்க
விடை:
ஆ) கெட்டிப்படும் தன்மையை தாமதப்படுத்தி

Question 4.
பீனால் என்பது ______
அ) கார்பாலிக் அமிலம்
ஆ) அசிட்டிக் அமிலம்
இ) பென்சோயிக் அமிலம்
ஈ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
விடை:
அ) கார்பாலிக் அமிலம்

Question 5.
இயற்கை ஒட்டும் பொருள் ______ இருந்து தயாரிக்கப்படுகின்றது.
அ) புரதங்க ளில்
ஆ) கொழுப்புகளில்
இ) ஸ்டார்ச்சில்
ஈ) வைட்டமின்களில்
விடை:
இ) ஸ்டார்ச்சில்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
வெங்காயம் நறுக்கும் போது நம் கண்களில் கண்ணீர்வரக் காரணமான வாயு ______ ஆகும்.
விடை:
ஆக்சைடு

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும் ______ தேவைப்படுகின்றது.
விடை:
NaOH

Question 3.
உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது ______ ஆகும்
விடை:
மண்புழு

Question 4.
சுற்றுச்சூழலுக்கு உகந்தவை _____ உரங்கள் ஆகும்.
விடை:
இயற்கை

Question 5.
இயற்கை பசைக்கு உதாரணம் _____ ஆகும்.
விடை:
ஸ்டார்ச்

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்.

Question 1.
செறிவூட்டப்பட்ட பீனால் கிருமிநாசினியாக பயன்படுகின்றது.
விடை
தவறு
குறைந்த அடர்வுடைய பீனால் கிருமி நாசினியாக பயன்படுகின்றது.

Question 2.
ஜிப்சம் மருத்துவத் துறையில் அதிகளவு பயன்படுகின்றன.
விடை:
தவறு எப்சம் மருத்துவத்துறையில் அதிகளவு பயன்படுகின்றது.

Question 3.
ஜிப்சத்தை சூடுபடுத்துவதன் மூலம் பாரிஸ்சாந்து கிடைக்கின்றது.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 4.
ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று பிரிக்க பயன்படுகின்றது.
விடை:
தவறு – ஒட்டும் பொருள் என்பது இரு பொருட்களை ஒன்றோடொன்று ஒட்டுவதற்கு பயன்படுகின்றது.

Question 5.
NPK என்பது தாவரங்களுக்கான முதன்மைச் சத்துக்கள் ஆகும்.
விடை:
சரி

IV. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 80

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

  1. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.
  2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.
  3. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
  4. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.
  5. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.
  6. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.

விடை:

  1. சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.
  2. கண்ணாடிக் குவளையில் சிறிதளவு நீரை நிரப்பவும்.
  3. அதனுடன் அடர் சோடியம் ஹைட்ராக்சைடைக் சேர்த்து குளிர வைக்கவும்.
  4. பின் அதனுடன் தேங்காய் எண்ணையை சிறிது சிறிதாக கலந்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
  5. பின் இதனை சிறிய காலித்தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.
  6. இந்த சோப்பின் மூலம் உங்கள் கைக்குட்டையை துவைக்க முயற்சிக்கவும்.

VI. ஒப்புமை தருக.

Question 1.
யூரியா : கனிம உரம் :: மண்புழு உரம் : _____
விடை:
இயற்கை உரம்

Question 2.
______ : இயற்கை ஓட்டும் பொருள் :: செயற்கை ஒட்டும் பொருள் : செலோடேப்
விடை:
ஸ்டார்ச்

VII. மிகக் குறுகிய விடையளி :

Question 1.
சோப்பில் அடங்கியுள்ள மூலப்பொருள்கள் யாவை?
விடை:

  • நீர்
  • சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH)
  • தேங்காய் எண்ணெய் (தாவர எண்ணெய் (அல்லது) விலங்கு கொழுப்பு)

Question 2.
சோப்பில் உள்ள இரு வெவ்வேறு வகை மூலக்கூறுகள் என்னென்ன?
விடை:

  1. நீர் விரும்பும் மூலக்கூறுகள்
  2. நீர் வெறுக்கும் மூலக்கூறுகள்

Question 3.
கனிம உரங்களுக்கு உதாரணம் தருக.
விடை:

  • யூரியா
  • சூப்பர் பாஸ்பேட்
  • அம்மோனியம் சல்பேட்
  • பொட்டாசியம் நைட்ரேட்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 4.
பீனாலின் மூன்று இயற்பியல் பண்புகளைக் கூறுக.
விடை:

  1. வீரியம் குறைந்த அமிலம்
  2. எளிதில் ஆவியாகும் தன்மையுடையது.
  3. வெண்ணிற படிகத் திண்மம்.

Question 5.
பாரிஸ் சாந்தின் பயன்களை விவரிக்கவும்.
விடை:

  • கரும்பலகையில் எழுதும் பொருள் தயாரிக்க பயன்படுகிறது.
  • அறுவைச் சிகிச்சையில் எலும்பு முறிவுகளைச் சரிசெய்யப் பயன்படுகிறது.
  • சிலைகள் வார்ப்பதற்கு பயன்படுகிறது.
  • கட்டுமானத்துறையில் பயன்படுகிறது.

Question 6.
சிமெண்டில் கலந்துள்ள மூலப்பொருள்கள் யாவை?
விடை:

  • சுண்ணாம்புக்கல்
  • களிமண் – ஜிப்சம்

Question 7.
சிமெண்ட் தயாரிப்பில் ஜிப்சம் எதற்காகப் பயன்படுகிறது?
விடை:
ஜிப்சமானது சிமெண்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதமாக்குகின்றது. இதனால் சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுகின்றது.

VIII. குறுகிய விடையளி:

Question 1.
மண்புழு ஏன் உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுகின்றது?
விடை:

மண்புழுக்கள் உயிரி கழிவுகள் அனைத்தையும் உணவாக உண்டு, செரித்து வெளியேற்றுகிறது.

  • இத்தகைய மண், செழிப்பான தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • மண்புழு விவசாயத்திற்குப் பல்வேறு வகைகளில் உதவுவதால் “உழவனின் நண்பன்” என்று மண்புழுவை அழைக்கின்றோம்.

Question 2.
சிமெண்ட் தயாரிக்கும் முறையை விவரிக்கவும்.
விடை:
இயற்கையில் கிடைக்கக்கூடிய சுண்ணாம்புக்கல், களிமண், ஜிப்சம் ஆகிய தாது உப்புகளைக் கலந்து அரைப்பதன் மூலம் சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.

Question 3.
ஜிப்சத்தின் பயன்களைக் கூறுக.
விடை:

  • உரமாகப் பயன்படுகிறது.
  • சிமெண்ட் மற்றும் பாரிஸ் சாந்து தயாரிக்கப் பயன்படுகிறது.

IX. விரிவான விடையளி:

Question 1.
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை (RCC) மற்றும் அதன் பயன் பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.
விடை:
வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை (RCC) :

  • இரும்புக் கம்பிகள் மற்றும் எஃகு வலைகளைத் கற்காரையோடு சேர்த்துப் பெறப்படுவதே வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை (RCC) ஆகும்.
  • இது வலுவானதாகவும், உறுதியானதாகவும் இருக்கும்.
    பயன்க ள் :
  • அணைக்கட்டுகள், பாலங்கள், வீட்டின் மேல்தளம் மற்றும் தூண்கள் கட்டுவதற்குப் பயன்படுகிறது.
  • குடிநீர்த் தொட்டிகள், குழாய்கள் மற்றும் கழிவு நீர் வடிகால்கள் அமைக்கப் பயன்படுகிறது.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 2.
சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது ?
விடை:
தேவையான பொருட்கள்:

  • 35 மிலி நீர்
  • 10 மிலி NaOH
  • 60 மிலி தேங்காய் எண்ணெய்

செய்முறை :

  • சோப்பு தயாரிக்கக்கூடிய இடத்தில் பழைய செய்தித்தாளை விரித்துக் கொள்ளவும்.
  • கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பவும்.
  • அதனுடன் 10 மிலி NaOHயைச் சேர்த்து குளிர வைக்கவும்.
  • பின் அதனுடன் 60 மிலி தேங்காய் எண்ணெயை சிறிது, சிறிதாக சேர்த்து, கலக்கி கொண்டே இருந்தால் இக்கரைசல் கூழ்மமாகி கெட்டித்தன்மை பெறும்.
  • பின் இதனை சிறிய காலித் தீப்பெட்டியில் ஊற்றி உலர வைத்தால் கிடைப்பது சோப்பாகும்.

X. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி.

Question 1.
ரவி ஒரு விவசாயி. அவருடைய பண்ணையில் அதிக கால்நடைகளை அவர் வளர்க்கின்றார். இதனால் அதிகளவில் உயிரிக்கழிவுகள் கிடைக்கின்றன. இக்கழிவுகளை மண்புழு உரமாக மாற்றுவதற்கு தகுந்த ஆலோசனையை ரவிக்கு வழங்கவும். மண்புழு உரத்தின் நன்மைகளைப் பற்றி எடுத்துக் கூறவும்.
விடை:

  • 30 செ.மீ ஆழத்தில் குழி ஒன்றைத் தோண்டவும் அல்லது மரப்பெட்டி ஒன்றை எடுத்துக்கொள்ளவும்.
  • குழியின் அல்லது பெட்டியின் அடிப்பகுதியில் மெல்லிய வலை ஒன்றை விரித்து 1-2 செ.மீ உயரத்திற்கு மண்ணால் நிரப்பவும்.
  • அதன்மீது தாவரக் கழிவுகளை (உலர்ந்த இலை, பூ) மற்றும் பிற சிதைவுறும் கழிவுகளைப் பரப்பிச் சிறிது நீரை தெளிக்கவும்.
  • சில மண்புழுக்களைக் குழியில் உள்ள பொருள்களோடு சேர்த்து பழைய துணி அல்லது ஓலையால் மூடவும்.
  • நான்கு வாரங்களுக்குப் பிறகு ‘மண்புழு உரம்’ உருவாகி யிருப்பதைக் காணலாம்.
  • உருவாக்கப்பட்ட மண்புழு உரத்தைத் தாவரங்களுக்குப் பயன்படுத்தி மண்வளம் காக்க வழி செய்யலாம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 100

மண்புழு உரத்தின் நன்மைகள் :

  • மண்புழு உரம் வேளாண்மைக்குப் பயன்படும் மிகச்சிறந்த இயற்கை கரிம உரமாகும்.
  • மண்புழு உரமானது தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைப் பெரும் அளவில் கொண்டுள்ளது.
  • மண்ணின் இயல்புத்தன்மை, காற்றோட்டம், நீரைத்தேக்கி வைக்கும் பண்பு ஆகியவற்றை மேம்படுத்தி மண் அரிப்பைத் தடுக்கிறது.
  • அதிக ஊட்டச்சத்து கொண்ட சூழல் நட்புமுறை சீர்த்திருத்தத்தை மண்ணுக்கு அளிக்கும் பொருளாக மண்புழு உரம் உள்ளது. மாடித்தோட்டம் அமைப்பதற்கும் உதவுகிறது.
  • விதை முளைத்தலைத் தூண்டி தாவர வளர்ச்சியையும் உறுதி செய்கிறது.
  • மண்புழு உரங்களை எளிமையாகத் தயாரித்துப் பயன்படுத்த முடியும்.

XI. செயல்திட்டம் (மாணவர்களுக்கானது).

  • ஒரு கண்ணாடி முகவையில் 100மி.லி சூடான நீரை எடுத்துக்கொள்.
  • 50 கிராம் மைதா மாவினை எடுத்து வெந்நீரில் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • உருவாகும் பசை போன்ற பொருளை எடுத்து தொட்டுப்பார் ஒட்டுகிறதா? கிழிந்த உனது புத்தகத்தை பசையை பயன்படுத்தி ஒட்டவும்.
  • சிறிதளவு மயில்துத்தம் (தாமிர சல்பேட்) சேர்க்கும் போது பசைகெடாமல் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.

6th Science Guide அன்றாட வாழ்வில் வேதியியல் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

Question 1.
அதிகளவு கறைகளையுடைய துணிகளை வெளுப்பதற்கு _____ பயன்படுத்துகிறோம்.
அ) சலவை சோப்பு
ஆ) குளியல் சோப்பு
இ) சலவைத் தூள்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ) சலவைத் தூள்

Question 2.
யூரியாவிலுள்ள நைட்ரஜனின் சதவீத அளவு
அ) 23%
ஆ) 13%
இ) 21%
ஈ) 46%
விடை:
ஈ) 46%

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 3.
50 கி.கி. சூப்பர் பாஸ்பேட் உரமிட்டால், எவ்வளவு பாஸ்பரஸ் மண்ணில் சேர்க்கப்படும்.
அ) 4 – 4.5 கி.கி
ஆ) 8 – 9 கி.கி
இ) 12 – 13 கி.கி
ஈ) 16 – 18 கி.கி
விடை:
அ) 4 – 4.5 கி.கி.

Question 4.
சிமெண்டை கண்டுபிடித்தவர் ____ ஆவார்.
அ) எடிசன்
ஆ) ஜோசப் ஆஸ்பிடின்
இ) இராபட் ஹீக்
ஈ) இராபட் ப்ரௌன்
விடை:
ஆ) ஜோசப் ஆஸ்பிடின்

Question 5.
பாரிஸ் சாந்தின் மூலக்கூறு வாய்ப்பாடு
அ) CaSO4. 1/2H2O
ஆ) CaSO4. H2O
இ) CaSO4.2H2O
ஈ) CaSO4.3H2O
விடை:
அ) CaSO4. 1/2H2O

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

Question 1.
______ ஓர் இயற்கை நிறங்காட்டி
விடை:
மஞ்சள்

Question 2.
______ மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் பொருளை நோக்கி செல்கின்றன.
விடை:
நீர் வெறுக்கும் மூலக்கூறுகள்

Question 3.
உரங்கள் _____ வளர்ச்சிக்கு உதவுகின்றன.
விடை:
தாவர

Question 4.
எலும்பு முறிவினைச் சரிசெய்யப் ____ பயன்படுகிறது.
விடை:
பாரிஸ் சாந்து

Question 5.
எப்சம் _____ எனும் உப்பாகும்
விடை:
மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட்

III. பொருத்துக.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 82

IV. ஒப்புமை தருக.

Question 1.
கரும்பலகை எழுதும் பொருள் : ______ :: தாவரங்களின் வளர்ச்சி : எப்சம்
விடை:
பாரிஸ் சாந்து

Question 2.
______ : கால்சியம் சல்பேட் டை ஹைட்ரேட் :: பாரிஸ் சந்து : கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்
விடை:
ஜிப்சம்

Question 3.
_____ : காரை :: பாலங்கள் கட்டுவது : கற்காரை
விடை:
வீட்டு சுவர்கள் கட்டுவது

V. கீழ்வரும் வாக்கியங்களை சரியான வரிசையில் எழுதுக.

  1. ஒன்று நீர் விரும்பும் பகுதி; மற்றொன்று நீர் வெறுக்கும் பகுதி.
  2. துணி துவைக்கும் போது ஏராளமான மூலக்கூறுகள் அழுக்குப் பகுதியை சுற்றி வட்டமிட்டு அழுக்கை நீக்குகின்றன.
  3. இறுதியில் அழுக்கு மூலக்கூறுகள் நீரில் மிதந்து அடித்துச் செல்லப்படுகிறது.
  4. துணி வெளுக்கப்படுகிறது.
  5. சோப்பு மூலக்கூறுகளுக்கு இரண்டு முனைகள் உண்டு.
  6. நீர் வெறுக்கும் மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய்ப் பொருளை நோக்கியும், நீர் விரும்பி மூலக்கூறுகள் நீரை நோக்கியும் செல்கின்றன.

விடை:

  1. சோப்பு மூலக்கூறுகளுக்கு இரண்டு முனைகள் உண்டு.
  2. ஒன்று நீர் விரும்பும் பகுதி; மற்றொன்று நீர் வெறுக்கும் பகுதி.
  3. நீர் வெறுக்கும் மூலக்கூறுகள் துணியிலுள்ள அழுக்கு மற்றும் எண்ணெய்ப் பொருளை நோக்கியும், நீர் விரும்பி மூலக்கூறுகள் நீரை நோக்கியும் செல்கின்றன.
  4. துணி துவைக்கும் போது ஏராளமான மூலக்கூறுகள் அழுக்குப் பகுதியை சுற்றி வட்டமிட்டு அழுக்கை நீக்குகின்றன.
  5. இறுதியில் அழுக்கு மூலக்கூறுகள் நீரில் மிதந்து அடித்துச் செல்லப்படுகிறது.
  6. துணி வெளுக்கப்படுகிறது.

VI. மிகக்குறுகிய விடையளி

Question 1.
முதன்மை ஊட்டச்சத்துக்கள் யாவை ?
விடை:
முதன்மை ஊட்டச்சத்துக்கள் என்பது NPK

  1. நைட்ரஜன் (N)
  2. பாஸ்பரஸ் (P)
  3. பொட்டாசியம் (K)

Question 2.
உரங்கள் என்றால் என்ன ?
விடை:
பயிர்களுக்குத் தேவையான ஒன்று (அ) அதற்கு அதிகமான ஊட்டச்சத்துக்களை அளிப்பதற்கு மண்ணில் சேர்க்கப்படும் கரிம மற்றும் கனிமப் பொருள்களை உரங்கள் என்கிறோம்.

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல்

Question 3.
கரிம உரங்களுக்கு இரண்டு உதாரணம் தருக.
விடை:

  1. மண்புழு உரம்
  2. தொழு உரம்

Question 4.
கனிம உரங்கள் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
விடை:
மண்ணில் இயற்கையாகக் கிடைக்கும் கனிமப் பொருள்களைக் கொண்டு, தொழிற்சாலைகளில் வேதிமாற்றத்திற்கு உட்படுத்தி தயாரிக்கப்படும் உரங்கள் கனிம உரங்கள் என அழைக்கப் படுகின்றன.

Question 5.
போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று ஏன் அழைக்கப்படுகின்றன?
விடை:
இங்கிலாந்து நாட்டில் உள்ள போர்ட்லேண்ட் என்னும் இடத்தில் கிடைக்கும் சுண்ணாம்புக் கல்லின் தன்மையை சிமெண்ட் ஒத்திருந்ததால், போர்ட்லேண்ட் சிமெண்ட் என்று – அழைக்கப்படுகிறது.

VII. விரிவான விடையளி

Question 1.
எப்சம் என்பது யாது? அதன் பயன்கள் யாவை?
விடை:
எப்சம்’ :

  • எப்சம் என்பது மெக்னீசியம் சல்பேட் ஹைட்ரேட் எனும் உப்பாகும்.
  • இதன் மூலக்கூறு வாய்ப்பாடு MgSO4. 7H2O

பயன்கள் :

  • மன அழுத்தத்தைக் குறைக்கும் அமைதிப்படுத்தி.
  • மனிதத்தசை மற்றும் நரம்பு மண்டலத்தை சீராக்குகின்றது.
  • தோல் நோய்களைத் தீர்க்கும் களிம்பு.
  • தாவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

Question 2.
பீனால் பற்றி எழுதுக. அதன் பயன்கள் யாவை?
விடை:
பீனால் :

  • பீனால் என்பது கார்பாலிக் அமிலம் எனப்படும் கரிம அமிலமாகும்.
  • இதன் மூலக்கூறு வாய்ப்பாடு C6H5OH
  • இது ஆவியாகும் தன்மையுள்ள வெண்மை நிற படிகத் திண்மமாகும்.
  • இது நிறமற்றதாக இருப்பினும், மாசு கலந்தவுடன் இளஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது.
  • மனிதத் தோலில்பட்டால் எரிச்சலூட்டும் தன்மை கொண்டது.

பயன்கள் :

  • தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.
  • குறைந்த அடர்வுடைய பீனால் கரைசல், வாய் கொப்பளிப் பானாகவும், கிருமி நாசினியாகவும், வீடுகளில் கழிவறையைச் சுத்தம் செய்யவும் பயன்படுகிறது.
  • அறுவை சிகிச்சையில் நுண்ணுயிரிகளைக் கொல்லும் கிருமிநாசினியாக பயன்படுகிறது.

மனவரைபடம்

Samacheer Kalvi 6th Science Guide Term 3 Chapter 3 அன்றாட வாழ்வில் வேதியியல் 101