Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 1 வடிவியல் Ex 1.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 1 வடிவியல் Ex 1.1

கேள்வி 1.
6 செ.மீ நீளமும் 3 செ.மீ அகலமும் உள்ள செவ்வகத்தை உருவாக்கத் தேவையான கம்பியின் நீளம் எவ்வளவு.
விடை :
செவ்வகத்தின் நீளம் = 6 செ.மீ
செவ்வகத்தின் அகலம் = 3 செ.மீ
செவ்வகத்தின் சுற்றளவு = (2 × 1) + (2 × b)
= (2 × 6 ) + ( 2 × 3 ) = 12 + 6 = 18 செ.மீ

விடை:
தேவையான கம்பியின் நீளம் = 18 செ.மீ

கேள்வி 2.
ஒரு செவ்வகத்தின் நீளம் 14 மீ மற்றும் அகலம் 10 மீ எனில் அதன் சுற்றளவைக் காண்க.
விடை :
செவ்வகத்தின் நீளம் = 14 மீ
செவ்வகத்தின் அகலம் = 10 மீ
செவ்வகத்தின் சுற்றளவு = (2 × 1) + (2 × b)
= (2 × 14 ) + ( 2 × 10 ) = 28 + 20 = 48 மீ

விடை:
செவ்வகத்தின் சுற்றளவு = 48 மீ.

கேள்வி 3.
ஒரு சதுரத்தின் பக்கம் 7மீ எனில் அதன் சுற்றளவைக் காண்க.
விடை :
சதுரத்தின் பக்கம் = 7 செ.மீ
சதுரத்தின் சுற்றளவு = 4a
= 4 × 7 = 28மீ

விடை:
சதுரத்தின் சுற்றளவு = 28மீ

கேள்வி 4.
340மீ நீளமும் 160மீ அகலமும் கொண்ட ஒரு நிலத்தை 2முறை சுற்றி வருகிறோம் எனில், நாம் கடக்கும் தூரத்தைக் கிலோ மீட்டரில் காண்க.
விடை :
நிலத்தின் அகலம் = 340மீ
நிலத்தின் நீளம் = 160மீ
சுற்றளவு = (2 × 1) + (2 × b) = (2 × 340 ) + (2 × 160) = 680 + 320
ஒரு முறை சுற்றும் தொலைவு= 1000மீ
இரு முறை சுற்றும் தொலைவு= 1000 × 2 = 2000மீ
1கி.மீ = 1000மீ
கடக்கும் தூரம் கிலோமீட்டரில் = 2000 ÷ 1000 = 2கி.மீ

விடை :
கடக்கும் தூரம் கிலோமீட்டரில் = 2கி.மீ

கேள்வி 5.
சஞ்சு என்பவர் நாள்தோறும் ஒரு சதுரவடிவப் பூங்காவை 10 முறை சுற்றி வருகிறார். பூங்காவின் பக்க அளவு 110மீ எனில், ஒரு நாளில் சஞ்சு கடக்கும் தூரத்தைக் கிலோமீட்டரிலும், மீட்டரிலும் காண்க.
விடை :
பூங்காவின் பக்க அளவு = 110செ.மீ
கடக்கும் தூரம் = சுற்றளவு
சுற்றளவு = 4a = 4 × 110 = 440மீ
ஒரு முறை சுற்றும் தூரம் = 440மீ
பத்து முறை சுற்றும் தூரம்= 440 × 10 = 4400மீ
பத்து முறை சுற்றும் தூரம் கிலோ மீட்டரில் = 4400 ÷ 1000 = 4 கி.மீ 400 மீ

விடை:
ஒரு நாள் கடக்கும் தூரம்
கிலோ மீட்டரில் = 4 கி.மீ 400மீ
மீட்டரில் = 4400மீ
செவ்வகம் மற்றும் சதுரத்தின் பரப்பளவு

சூத்திரம்:
செவ்வகத்தின் பரப்பளவு = l × b
செவ்வகத்தின் பரப்பளவு = a2