Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3 Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3
I. எண் பெயர் எழுதுக:
a) 11000 ______________
விடை:
பதினொன்றாயிரம்
b) 34000 ______________
விடை:
முப்பத்து நான்காயிரம்
c) 100000 ______________
விடை:
ஒரு இலட்சம்
d) 98,364 ______________
விடை:
தொண்ணூற்று எட்டாயிரத்து முந்நூற்று அறுபத்தி நான்கு
e) 37,689 ______________
விடை:
முப்பத் தேழாயிரத்து அறு நூற்று எண்பத்து ஒன்பது
f) 46,763 ______________
விடை:
நாற்பத்தி ஆறாயிரத்து எழுநூற்று அறுபத்து மூன்று
g) 4,00,000 ______________
விடை:
நான்கு இலட்சம்
h) 12,00,000 ______________
விடை:
பன்னிரண்டு இலட்சம்
II. கீழ்க்கண்டவற்றின் மதிப்பை ஆணிமணிச்சட்டத்தில் எழுதுக.
கேள்வி 1.
3 பத்துகள், 7 கோடிகள், 60 இலட்சங்கள், 7 இலட்சங்கள், 4 பத்துகள் மற்றும் 7 ஒன்றுகள்
விடை:
கேள்வி 2.
34578910-ல் 7 மற்றும் 4-ன் இடமதிப்பைக் கண்டுபிடி.
விடை:
7 இன் இடமதிப்பு = 7 × 10000 = 70000
4 இன் இடமதிப்பு = 4 × 1000000 = 4000000
கேள்வி 3.
6 ஆயிரங்கள், 9 பத்துகள் மற்றும் 3 கோடிகளைக் கொண்டு ஏதாவது ஒரு எண்ணை உருவாக்குக.
விடை:
3,72,46,598
கேள்வி 4.
எண்ணால் எழுதுக:
a. ஒரு கோடியே நாற்பதாயிரத்து நான்கு
விடை:
1,00,40,004
b. அறுபத்து நான்கு இலட்சத்து மூன்று
விடை:
64,00,003
கேள்வி 5.
எழுத்தால் எழுதுக. (படம் 1)
விடை:
ஒ ரு கோடியே இருபத்தொரு இலட்சத்து முப்பதாயிரத்து நானூற்று இருபத்திரண்டு
கேள்வி 6.
(படம் – 2) ஆணிமணிச்சட்டத்தில் எத்தனை இலட்சங்கள் மற்றும் எத்தனை நூறுகள் உள்ளன?
விடை:
இருபத்தொரு இலட்சங்கள் மன்று நூறுகள் உள்ளன.
கேள்வி 7.
மிகப்பெரிய 4 இலக்க எண் மற்றும் மிகச்சிறிய 5 இலக்க எண்ணின் கூடுதலை கண்டுபிடி.
விடை:
மிகப்பெரிய 4 இலக்க எண் = 9999
மிகப்சிறிய 5 இலக்க எண் = 10000
கேள்வி 8.
ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எழுதுக,
a) 33,058 40,978 97,879 81,421 90,470 47,224
விடை:
ஏறுவரிசை
33,058; 40,978; 47,224; 81,421; 90,470; 97,879
இறங்கு வரிசை
97,879; 90,470; 81,421; 47,224; 40,978; 33,058
b) 99,999 11,111 22,222 33,333 44,444 66,666
விடை:
ஏறுவரிசை
11,111; 22,222; 33,333; 44,444; 66,666; 99,999
இறங்கு வரிசை
99,999; 66,666; 44,444; 33,333; 22,222; 11,111
கேள்வி 9.
திட்டவடிவத்தில் எழுதுக : 7 இலட்சங்கள் + 5 ஆயிரங்கள் + 4 பத்துகள் + 3 ஒன்றுகள்
விடை:
= 705043
கேள்வி 10.
1,34,510 என்ற எண்ணுடன் 5 ஆயிரங்கள் மற்றும் 3 நூறுகளை கூட்டுக.
விடை:
5 ஆயிரங்கள் மற்றும் 3 நூறுகள் = 5300
கேள்வி 11.
மிகச்சிறிய 6 இலக்க எண்ணை மிகப்பெரிய ஏழு இலக்க எண்ணிலிருந்து கழிக்க.
விடை:
மிகப்பெரிய 7 இலக்க எண் = 9999999
மிகச்சிறிய 6 இலக்க எண் = 100000