Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

4th Social Science Guide குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
____________ இந்திய சட்டத்திற்கு எதிரானது.
அ) பள்ளியில் குழந்தைகள் படித்தல்.
ஆ) தொழில்சாலைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்தல்.
இ பள்ளி செயல்காடுகளில் குழந்தைகள் பங்கேற்றல்.
ஈ) குழந்தைகள் தரமான உணவைப் பெறுதல்.
விடை:
ஆ) தொழில்சாலைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்தல்.

Question 2.
போலியோ சொட்டு மருந்து _____________ களுக்கு வழங்கப்படுகின்றன.
அ) ஆண்
ஆ) பெண்
இ குழந்தை
ஈ) மூத்த குடிமக்கள்
விடை:
இ குழந்தை

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

Question 3.
ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பை ___________ என்பர்.
அ) கதைப் புத்தகம்
ஆ) விதிமுறைப் புத்தகம்
இ அரசியலமைப்பு
ஈ) பாடநூல்
விடை:
இ அரசியலமைப்பு

Question 4.
பின்வருவனவற்றில் எது குழந்தைகளின் உரிமை இல்லை ?
அ) ஓட்டுநர் உரிமம் பெறுதல்
ஆ) கல்வி பெறுதல்
இ போதுமான உணவைப் பெறுதல்
ஈ) ஆரோக்கியமாக வாழ்தல்
விடை:
அ) ஓட்டுநர் உரிமம் பெறுதல்

II. சரியா, தவறா என எழுதுக.

Question 1.
போலியோ சொட்டு மருந்தைப் பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை ஆகும்.
விடை:
சரி

Question 2.
அனைத்து வயது குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான . உரிமைகள் உள்ளன.
விடை:
தவறு

Question 3.
6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் வேலை செய்ய வேண்டும்.
விடை:
தவறு

Question 4.
குழந்தைகளைத் துன்புறுத்துவது தவறானது.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

Question 5.
குழந்தைகள் தவறான தொடுதலை அறிந்திருக்க வேண்டும்.
விடை:
சரி

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. சிறார் உதவி மைய எண் – ஒரு நாட்டின் உறுப்பினர்
2. தடுப்பூசிகள் – சுகாதாரம்
3. வாஷ் (Wash) – சட்டவிரோதமானது
4. குடிமகன் – நோய்களிலிருந்து பாதுகாப்பு
5. குழந்தைத் தொழிலாளர் – 1098
விடை:
1. சிறார் உதவி மைய எண் – 1098
2. தடுப்பூசிகள் – நோய்களிலிருந்து பாதுகாப்பு
3. வாஷ் (Wash) – சுகாதாரம்
4. குடிமகன் – ஒரு நாட்டின் உறுப்பினர்
5. குழந்தைத் தொழிலாளர் – சட்டவிரோதமானது

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
உங்கள் உடலில் யாரும் தொடக்கூடாத மூன்று பகுதிகள் யாவை?
விடை:
உடலில் யாரும் தொடக்கூடாத மூன்று பகுதிகள் உதடுகள், மார்பு மற்றும் கால்களுக்கு இடையில் ஆகிய பகுதிகள் ஆகும்.

Question 2.
குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ள பல்வேறு உரிமைகள் யாவை?
விடை:

  1. உயிர்வாழ்வதற்கான உரிமை.
  2. வளர்ச்சிக்கான உரிமை
  3. பாதுகாப்பு உரிமை
  4. பங்கேற்பதற்கான உரிமை

Question 3.
உயிர்வாழ்வதற்கான உரிமை – குறிப்பு வரைக.
விடை:
இது ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதாகும். வாஷ் (Wash) திட்டமும் இதன் ஒரு பகுதியாகும்.

Question 4.
பங்கேற்பதற்கான உங்கள் உரிமையை எப்போதாவது நீங்கள் பயன்படுத்திருக்கறீர்களா? விவரிக்க.
விடை:
ஆம். எங்கள் வீட்டை புதுபிக்கும் பொழுது எவ்வாறெல்லாம் வண்ணம் பூச வேண்டும் என்று என் தந்தையுடன் விவாதித்து உள்ளேன்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

Question 5.
உரிமைகள் முக்கியமானவை. ஏன்?
விடை:
நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பிற்காகவும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காவும் உருவாக்கப்பட்டதே உரிமைகள் ஆகும். எனவே உரிமைகள் முக்கியமானவை ஆகும்.

V. கூடுதல் வினா :

Question 1.
குடிமகன் என்பது யார்?
விடை:
குடிமகன் என்பது ஒரு நாட்டின் உறுப்பினராக இருக்கும் ஒரு நபர் ஆவார்.

Question 2.
அரசியலமைப்பு என்றால் என்ன?
விடை:
ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பு அரசியலமைப்பு எனப்படும்.

Question 3.
வாஷ் (Wash) பற்றி எழுதுக.
விடை:
வாஷ் (Wash) என்பது நீர், சுகாதாரம், மற்றும் தூய்மையைக் குறிக்கும்.

Question 4.
இலவசக் கல்வியை வழங்குவது யாருடைய கடமையாகும்?
விடை:
இலவசக் கல்வியை வழங்குவது அரசின் கடமையாகும்.

4th Social Science Guide குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் InText Questions and Answers

பக்கம்-132 செயல்பாடு

சிந்தித்து எழுதுக.
பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளைக் கண்டால், நீ என்ன செய்வாய்?
1. ___________________
2. ___________________
3. ___________________
விடை:
1. கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி கூறுவேன்.
2. அரசின் இலவச கல்வியைப் பற்றி கூறுவேன்.
3. கற்றலின் இனிமையை கூறுவேன்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 3 குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

பக்கம்-134 செயல்பாடு

உங்கள் வீட்டின் அருகில், பள்ளிக்குச் செல்லாத ஒரு குழந்தையை அடையாளம் காணவும். இக்கேள்வித்தாளைப் பூர்த்தி செய்யவும்.
1. குழந்தையின் பெயர் : ________________
2. குழந்தையின் வயது : ________________
3. இந்நாள்வரை அக்குழந்தை பள்ளிக்குச் சென்றுள்ளதா? ஆம்/இல்லை
4. பள்ளிக்குச் செல்லாதற்கான காரணம்: ________________
5. அவள் / அவனை நீங்கள் எவ்வாறு வழிநடத்துவீர்கள்? : _________________
விடை:
1. குழந்தையின் பெயர் : மாலா
2. குழந்தையின் வயது : 7
3. இந்நாள்வரை அக்குழந்தை பள்ளிக்குச் சென்றுள்ளதா? ஆம்/இல்லை
4. பள்ளிக்குச் செல்லாதற்கான காரணம்: வறுமை
5. அவள் / அவனை நீங்கள் எவ்வாறு வழிநடத்துவீர்கள்?
அரசின் இலவச கல்வி திட்டத்தை பற்றி கூறி பள்ளிக்குச் செல்லுமாறு கூறுவேன்.

குறிப்பு :
இந்தக் கணக்கெடுப்பு பெற்றோர்களுக்கும் அக்குழந்தைக்குமானது. : அந்த வகுப்பு குழந்தைகள் இருவர் கொண்ட குழுக்களாக, ஒரு குடும்பம் அல்லது குழந்தையைப் பேட்டி காணவும்.. ஒவ்வொரு நிலைபாட்டிற்கும் தீர்வுகள் குறித்து ஆசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடலாம்.