Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

4th Social Science Guide சென்னை மாகாணத்தின் வரலாறு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

Question 1.
மதராஸ் மாகாணம் ___________ இல் உருவாக்கப்பட்டது.
அ) 1800
ஆ) 1801
இ 1802
ஈ) 1803
விடை:
ஆ) 1801

Question 2.
மதராஸ் மாநிலம் அதிகாரப்பூர்வமாக ___________ இல் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.
அ) 1947
ஆ) 1953
இ 1956
ஈ) 1969
விடை:
ஈ) 1969

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

Question 3.
மாமல்லபுரம் _____________ வம்சத்தினரால் உருவாக்கப்பட்டது.
அ) நாயக்கர்
ஆ) பல்லவ
இ சோழ
ஈ) ஆங்கிலேய
விடை:
ஆ) பல்லவ

Question 4.
“தென்னிந்தியாவின் ஸ்பா” என்று அழைக்கப்படுவது எது?
அ) போடிநாயக்கனூர்
ஆ) ஒகேனக்கல்
இ குற்றாலம்
ஈ) செஞ்சிக் கோட்டை
விடை:
இ குற்றாலம்

Question 5.
எட்டு அடுக்கிலான மிகச் சிறிய அளவிலுள்ள மனோரா கோட்டையைக் கட்டியவர் ___________ ஆவார்.
அ) சரபோஜி மன்னர்
ஆ) சின்ன பொம்மி நாயக்கர்
இ திம்மா ரெட்டி நாயக்கர்
ஈ) திருமலை நாயக்கர்
விடை:
அ) சரபோஜி மன்னர்

II. சரியா, தவறா என எழுதுக.

Question 1.
மதராஸ் மாகாணத்தின் தலைநகரம் மதராஸ் நகரம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்திரமேரூர், பழங்கால சோழர்களின் கிராமமாகும்.
விடை:
தவறு

Question 3.
திருமலை நாயக்கர் அரண்மனை திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

Question 4.
கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என அழைக்கப்படுகிறது.
விடை:
சரி

Question 5.
கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தஞ்சை பெரிய கோயில் எனவும் அறியப்படுகிறது.
விடை:
தவறு

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. காவலூர் – கிழக்கின் டிராய்
2. செஞ்சிக் கோட்டை – ஊட்டி
3. போடிநாயக்கனூர் – வைணு பாப்பு ஆய்வகம்
4. முத்து நகரம் – ஏலக்காய் நகரம்
5. ஜான் சல்லிவன் – தூத்துக்குடி
விடை:
1. காவலூர் – வைணு பாப்பு ஆய்வகம்
2. செஞ்சிக் கோட்டை – கிழக்கின் டிராய்
3. போடிநாயக்கனூர் – ஏலக்காய் நகரம்.
4. முத்து நகரம் – தூத்துக்குடி
5. ஜான் சல்லிவன் – ஊட்டி

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

Question 1.
செஞ்சிக் கோட்டையின் முக்கியத்துவத்தைக் கூறுக.
விடை:
செஞ்சிக் கோட்டையானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று குன்றுகள் சூழ்ந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

Question 2.
திருமலை நாயக்கர் அரண்மனையின் முக்கிய அம்சங்கள் யாவை?
விடை:
திருமலை நாயக்கர் அரண்மனை திராவிட மற்றும் இஸ்லாமிய கட்டடக்கலைகளின் ஒருமித்த கலவையாக இருப்பதே இதன் முக்கிய அம்சமாகும்.

Question 3.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சில சுற்றுலாத் தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
மேட்டூர் அணை, ஒகேனக்கல் அருவி, ஏர்காடு:

Question 4.
கல்லணை – குறிப்பு வரைக.
விடை:
கல்லணை தென்னிந்தியாவில் காவிரியாற்றின் குறுக்கே கி.பி. பொ.ஆ.) 2 ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர் கரிகாலனால் கட்டப்பட்டது.

Question 5.
மலைக் கோட்டை – குறிப்பு வரைக.
விடை:
83 மீட்டர் உயரமுள்ள பழமையான ஒரு பாறையின் மீது மலைக்கோட்டை கோயில் கட்டப்பட்டுள்ளது. அக்கோட்டையின் உள்ளே இரண்டு இந்து கோயில்கள் உள்ளன.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 3 Chapter 2 சென்னை மாகாணத்தின் வரலாறு

Question 6.
தமிழ்நாட்டின் சில சுற்றுலாத் தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
விடை:
மெரினா கடற்கரை, கொடைக்கானல், ஊட்டி, குற்றாலம் மற்றும் மகாபலிபுரம்.

V. கூடுதல் வினா.

Question 1.
மதராஸ் மாகாணத்தின் தலைநகரம் எது?
விடை:
தற்போது சென்னை என்று அழைக்கப்படும் மதராஸ் நகரம், அன்றைய மதராஸ் மாகாணத்தின் தலைநகரமாகும்.

Question 2.
உத்திரமேரூர் எங்கு அமைந்துள்ளது?
விடை:
உத்திரமேரூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Question 3.
அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தின் பகுதிகள் யாவை?
விடை:
இன்றைய விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தின் பகுதிகள் ஆகும்.

Question 4.
“சைலம்” என்றால் என்ன?
விடை:
“சைலம்” என்றால் மலைகளால் சூழப்பட்ட பகுதி ஆகும்.

Question 5.
தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மலைவாழிடம் எது?
விடை:
தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற மலை வாழிடம் ஊட்டி ஆகும்.