Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Social Science Guide Pdf Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு Questions and Answers, Notes.

TN Board 4th Social Science Solutions Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

4th Social Science Guide தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
எந்த வனவிலங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் உள்ளது.
அ) முதுமலை வனவிலங்கு சரணாலயம்
ஆ) கார்பெட் தேசிய பூங்கா
இ) சுந்தரவன தேசிய பூங்கா
ஈ) ரத்தம்பூர் தேசிய பூங்கா
விடை:
அ) முதுமலை வனவிலங்கு சரணாலயம்

Question 2.
மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் ____________
அ) ஆரவல்லி மலைத்தொடர்
ஆ) நீலகிரி மலைகள்
இ) இமயமலை மலைத்தொடர்
ஈ) விந்திய மலைகள்
விடை:
ஆ) நீலகிரி மலைகள்

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 3.
மரங்களின் உச்சிக் கிளைகள் இணைந்து சங்கிலித் தொடர் போல உருவாவதற்கு பெயர் ____________
அ) சூரிய ஒளி
ஆ) விதானம்
இ) காடுகள்
ஈ) சதுப்புநிலம்
விடை:
ஆ) விதானம்

Question 4.
தமிழ்நாட்டில் _____________ நிலவுகிறது.
அ) அதிகபட்ச குளிர்
ஆ) அதிகமான மழைப்பொழிவு
இ) வெப்பமண்டல வானிலை
ஈ) பனிப்பொழிவு
விடை:
இ) வெப்பமண்டல வானிலை

Question 5.
___________ அதிக மழைப்பொழிவுள்ள இடங்களில் காணப்படும்.
அ) இலையுதிர்க் காடுகள்
ஆ) சதுப்புநிலக் காடுகள்
இ) பசுமை மாறாக் காடுகள்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
ஈ) இவற்றில் எதுவுமில்லை

II. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. தமிழ்நாட்டின் மலைத்தொடர்கள் – பாம்பன் பாலம்
2. சுருளி நீர்வீழ்ச்சி – மேற்குத்தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
3. இந்தியாவின் முதல் கடல்பாலம் – தேனி
4. பிச்சாவரம் – இந்தியாவிலேயே மூன்றாவது நீளமானது
5. தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதி – சதுப்புநிலக்காடுகள்
விடை:
1. தமிழ்நாட்டின் மலைத்தொடர்கள் – மேற்குத்தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
2. சுருளி நீர்வீழ்ச்சி – தேனி
3. இந்தியாவின் முதல் கடல்பாலம் – பாம்பன் பாலம்
4. பிச்சாவரம் – சதுப்புநிலக்காடுகள்
5. தமிழ்நாட்டின் கடற்கரைப்பகுதி – இந்தியாவிலேயே மூன்றாவது நீளமானது

III. சரியா? தவறா?

Question 1.
தமிழ்நாடு இந்தியாவில் பதினோறாவது மிகப்பெரிய மாநிலம் ஆகும்.
விடை:
சரி

Question 2.
தமிழ்நாடு இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
விடை:
தவறு

Question 3.
குறிஞ்சி மலர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 4.
தமிழ்நாடு ஆண்டு முழுவதும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலையைக் கொண்டுள்ளது.
விடை:
சரி

Question 5.
இலையுதிர் காடுகள் இலைகளை உதிர்ப்பதில்லை.
விடை:
தவறு

IV. குறுகிய விடையளி.

Question 1.
தமிழ்நாட்டுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களை பட்டியலிடுக.
விடை:
கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம்.

Question 2.
தமிழ்நாட்டின் நில அமைப்பு வகைகள் யாவை?
விடை:
தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  1. மலைகள்
  2. பீடபூமிகள்
  3. சமவெளிகள்
  4. கடற்கரை.

Question 3.
தமிழ்நாட்டின் பல்வேறு வகையான சமவெளிகள் யாவை?
விடை:

  1. ஆற்றுச் சமவெளி
  2. கடற்கரைச் சமவெளி.

Question 4.
தமிழ்நாட்டில் உள்ள நீர்வீழ்ச்சிகளின் பெயர்களைக் கூறுக.
விடை:

  1. குற்றாலம் நீர்வீழ்ச்சி
  2. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
  3. சுருளி நீர்வீழ்ச்சி
  4. வட்டப்பாறை நீர்வீழ்ச்சி

Question 5.
தமிழ்நாட்டின் காலநிலை பற்றி விவரி.
விடை:
தமிழ்நாடு வெப்ப மண்டலக் கால நிலையைக் கொண்டிருப்பதால், இங்கு கோடைகாலத்திற்கும், குளிர்காலத்திற்கும் மிகவும் குறைந்த அளவிலேயே வேறுபாடு காணப்படுகிறது. தமிழ்நாடு அதன் இட அமைவைப் பொறுத்து ஆண்டு முழுவதும் மிதமான குளிருடன் வெப்ப மற்றும் ஈரப்பதமான வானிலையையும் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு பருவமழையைச் சார்ந்துள்ளது என்பதால் பருவமழை பொய்க்கும் காலங்களில் வறட்சியை எதிர்கொள்கிறது.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 6.
வேறுபடுத்துக – பசுமை மாறாக் காடுகள் மற்றும் இலையுதிர்க் காடுகள்.
விடை:
அ) பசுமை மாறாக் காடுகள் (Evergreen Forests)
“Evergreen” என்ற வார்த்தையின் பொருள் ever / / எப்பொழுதும் / green / பசுமை = always green / எப்பொழுதும் பசுமையானது என்பதாகும்.

இந்தக் காடுகளில் உள்ள மரங்களில் இலைகள் எப்பொழுதும் பசுமையாகவே இருக்கும். தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இவ்வகைக் காடுகளை நாம் காணலாம்.

ஆ) இலையுதிர்க் காடுகள் (Deciduous Forests)
இந்த காடுகளிலுள்ள மரங்களின் இலைகள் வறட்சிக் காலங்களில் உதிர்ந்துவிடும். இவ்வகைக் காடுகள் பொதுவாக பசுமைமாறாக் காடுகளின் அருகில் காணப்படுகின்றன. அவை பெரும்பாலும் மலைகளின் கீழ்ப்பகுதிகளில் வளர்கின்றன.

4th Social Science Guide தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு InText Questions and Answers

பக்கம் 107 செயல்பாடு
Question 1.
இந்திய அரசியல் வரைபடத்தில் தமிழ்நாட்டின் ஏதாவது 2 அண்டை மாநிலங்களைக் குறிக்கவும்.

Question 2.
கீழே குறிப்பிட்டுள்ளவற்றை வரைபடத்தில் குறிக்கவும்.
அ. இந்தியப் பெருங்கடல்
ஆ. அரபிக்கடல்
இ. வங்காளவிரிகுடா
விடை:
Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு 1

பக்கம் 108 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் – சந்திக்கும் இடம் எது?
விடை:
நீலகிரி மலைத்தொடர்.

Question 2.
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஏதேனும் இரண்டு வன விலங்கு சரணாலயங்களின் பெயர்களைக் கூறு.
விடை:

  1. முதுமலை வனவிலங்குச் சரணாலயம்.
  2. இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம்.

பக்கம்111 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஆறுகள் சிலவற்றின் பெயர்களைக் கூறு.
விடை:
பாலாறு, செய்யாறு, பெண்ணை , வெள்ளாறு.

Question 2.
குற்றாலம் நீர் வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?
விடை:
குற்றாலம் நீர்வீழ்ச்சி தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.

பக்கம் 111 விடையளிக்க முயற்சி செய்க.

Question 1.
தமிழ்நாடு எந்தெந்த மாதங்களில் தென் மேற்கு பருவமழையைப் பெறுகிறது?
விடை:
ஜுன் – செப்டம்பர்.

Samacheer Kalvi 4th Social Science Guide Term 2 Chapter 2 தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு

Question 2.
தமிழ்நாட்டின் வானிலை பற்றி ஒரு வரியில் விடை கூறு.
விடை:
தமிழ் நாடு வெப்ப மண்டல காலநிலையைக் கொண்டிருப்பதால் இங்கு கோடை காலத்திற்கும், குளிர் காலத்திற்கும் குறைந்த அளவிலேயே வேறுபாடு காணப்படுகிறது.