Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

4th Science Guide பசுமை சுற்றுச்சூழல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
கழிவு மேலாண்மை செயல்களில் முதல் படி எது?
அ. கழிவுகளை அகற்றுவது
ஆ. கழிவுகளை பிரித்தல்
இ. கழிவு சேகரிப்பு
விடை:
ஆ. கழிவுகளை பிரித்தல்

Question 2.
மக்காத அல்லது உயிரி சிதைவு அடையாத கழிவு எது?
அ. காகிதக் குவளை
ஆ. நெகிழித்தட்டு
இ. தேங்காய் ஓடு
விடை:
ஆ. நெகிழித்தட்டு

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 3.
______________ அதிக குப்பைகளை ஈர்க்கிறது. எனவே எப்போதும் கழிவுகளை ஒரு தொட்டியில் வைப்பது முக்கியம்.
அ. கழிவு சேகரிப்பு
ஆ. சுற்றுச்சூழல்
இ. குப்பை
விடை:
இ. குப்பை

Question 4.
_____________ என்பது மூன்று R இல் உள்ள முதல் R ஆகும்.
அ. மறுபயன்பாடு
ஆ. குறைத்தல்
இ. மறு சுழற்சி
விடை:
ஆ. குறைத்தல்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
______________ கழிவுகளை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். (ஊறுகாய்க்கு பழைய ஜாடிகளைப் பயன்படுத்துதல்,
ஒரு நெகிழி பையில் வேண்டாம் என்று சொல்வது)
விடை:
ஊறுகாய்க்கு பழைய ஜாடிகளைப் பயன்படுத்துதல்

Question 2.
எளிதில் மக்கக்கூடிய பைகள், குப்பைக் கூடைகள் மற்றும் பல் துலக்கிகள் தயாரிக்க ____________ உதவுகிறது.
விடை:
மூங்கில்

Question 3.
_______________ நமது சுற்றுச் சூழலை அச்சுறுத்தும் மாசுபாட்டிற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
நெகிழி மாசுபாடு

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 4.
_____________ ஒரு மறுசுழற்சி செய்ய முடியாத பொருள்கள் ஆகும்.
விடை:
பல அடுக்கு நெகிழி

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. நெகிழிவுக் கழிவுகள் – மூன்று கேள்
2. கழிவுகளை பிரித்தலின் நான்காம்படி – மக்கும் தன்மை அற்றது
3. குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தலின் சுருக்கம் – சுற்றுச்சூழலை பாதிக்கும்
4. சில்வர் பாத்திரம் – கழிவுகளை அகற்றல்
விடை:
1. நெகிழிவுக் கழிவுகள் – சுற்றுச்சூழலை பாதிக்கும்
2. கழிவுகளை பிரித்தலின் நான்காம்படி – கழிவுகளை அகற்றல்
3. குறைத்தல், மறுபயன்பாடு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தலின் சுருக்கம் – மூன்று கேள்
4. சில்வர் பாத்திரம் – மக்கும் தன்மை அற்றது

V. சரியா தவறா என எழுதுக.

Question 1.
3Rகள் செயல்முறைகளினால் நிலப்பகுதியில் நிரப்புவற்கு செல்லும் கழிவுகளின் அளவு குறைக்கப்படுகின்றது.
விடை:
சரி

Question 2.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பவை என்பர்.
விடை:
தவறு

Question 3.
நெகிழிப்பை, தெர்மோகோல் பல அடுக்கு நெகிழி ஆகியவை மறுசுழற்சி பொருள்களாகும்.
விடை:
தவறு

Question 4.
குப்பைகளை முறையாக பிரிக்கக்கூடாது.
விடை:
தவறு

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்ளில் விடையளி.

Question 1.
மூன்று Rகள் என்றால் என்ன?
விடை:
குறைத்தல் (Reduce), மறுபயன்பாடு (Reuse) மற்றும் மறுசுழற்சி (Recycle) போன்ற செயல்களை 3Rகள் என்கிறோம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 2.
மக்கும் கழிவு என்றால் என்ன?
விடை:
நுண்ணுயிரிகளால் சிதையக்கூடிய பொருள்கள் ‘உயிரி சிதைவிற்கு உட்படும் பொருள்கள்’ அல்லது மக்கும் பொருள்கள் எனப்படும்

Question 3.
கழிவு மேலாண்மையின் வெவ்வேறு படிகளை எழுதுக.
விடை:

  1. கழிவுகளை பிரித்தல்.
  2. கழிவுகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்.
  3. கழிவுகளை மறுசுழற்சி செய்தல் மற்றும் உரம் தயாரித்தல்.

Question 4.
மறுசுழற்சி செய்யக்கூடிய ஏதேனும் ஐந்து பொருள்களின் பெயர்களை எழுதுக.
விடை:
காகிதம், அட்டை, நெகிழி, உலோகங்கள், கண்ணாடி

VII. பின்வருபவைகளுக்கு விடை தருக.

Question 1.
நீங்கள் வீட்டில் எவ்வாறு குப்பைக் கழிவுகளை கையாளுவீர்கள்?
விடை:
வீட்டிலுள்ள கழிவுகளை மக்கும் தன்மை கொண்டவை, மறுசுழற்சி செய்யக்கூடியவை மற்றும் மறுசுழற்சி செய்ய இயலாதவை எனப் பிரிக்க வேண்டும். இயற்கையாக மக்கும் தன்மை கொண்ட கழிவுகளை உரங்களாக மாற்றவேண்டும். மறுசுழற்சி செய்யக்கூடிய கண்ணாடி கழிவுகள் மற்றும் கழிவுகளைக் கொண்டு புதிய பயனுள்ள தயாரிப்புகளை உருவாக்கலாம்.

Question 2.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் யாவை?
விடை:
நெகிழிப் பைகள், நெகிழி தட்டுகள், நெகிழி நீர் பைகள், நெகிழிக் குழாய்கள், நெகிழித் தாள்கள்.

Question 3.
மறுசுழற்சியின் நன்மைகளை எழுதுக.
விடை:
மறுசுழற்சி, புதிய பொருள்களை உருவாக்க தேவைப்படும் நீர், தாதுக்கள், மரம் போன்ற வளங்களை சேமிக்க உதவுகிறது.

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 4.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் என்றால் என்ன?
விடை:
நாம் பயன்படுத்தும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பொருள்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் என்று அழைக்கப்படுகின்றன.

IX. கூடுதல் வினா :

Question 1.
எப்பொருளை கழிவு என்கிறோம்?
விடை:
மீண்டும் தேவைப்படாத பொருளை கழிவு என்கிறோம்.

Question 2.
கழிவு மேலாண்மை என்றால் என்ன?
விடை:
சுற்றுச்சூழலை மாசுபடாமல் பாதுகாப்பதற்காக, கழிவுகளை முறையாக கையாளுவதற்கு நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் கழிவு மேலாண்மை ‘ ஆகும்.

Question 3.
கழிவு நீக்கம் என்றால் என்ன?
விடை:
கழிவு நீக்கம் மறுசுழற்சி செய்ய இயலாத கழிவினை அகற்றும் நிகழ்வாகும்

Question 4.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றால் என்ன?
விடை:
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதென்பது, இயற்கையில் காணப்படும் அனைத்தையும் பாதுகாப்பதாகும்.

Question 5.
மறு பயன்பாடு என்றால் என்ன?
விடை:
மறுபயன்பாடு என்பது ஒரு பொருளை மீண்டும் மீண்டும் ஒரே பயன்பாட்டிற்கோ அல்லது வேறு பயன்பாட்டிற்கோ உபயோகப்படுத்துவதாகும்.

Question 6.
பச்சை, நீலம், சிவப்புத் தொட்டிகளில் எத்தகைய கழிவுகள் இருக்க வேண்டும்?
விடை:
பச்சை – மக்கும் கழிவு
நீலம் – மறுசுழற்சி செய்யப்படும் கழிவு
சிவப்பு – மறுசுழற்சி செய்ய இயலாத கழிவு

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

Question 7.
கழிவு நீக்கத்தின் இருவகைகள் யாவை?
விடை:

  1. நிலப்பகுதியில் நிரப்புதல்
  2. திறந்த வெளியில் குவித்தல்

Question 8.
செயற்கை நெகிழி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
விடை:
செயற்கை நெகிழி லியோ பேக்லேண்டு என்பவரால் 1907ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

Question 9.
100% மறுசுழற்சி செய்யக்கூடிய பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
விடை:
உணவு மற்றும் பானங்கள் உள்ள கண்ணாடி கொள்கலன்கள்.

Question 10.
தேசிய பசுமை படையின் குறிக்கோள் என்ன?
விடை:
“பசுமை எங்கோ வளமை அங்கே”

4th Science Guide பசுமை சுற்றுச்சூழல் InText Questions and Answers

பக்கம் 65 செயல்பாடு

கழிவு மேலாண்மையின் படிநிலைகளை வரிசைப்படுத்துக.
(கழிவுகளை அகற்றுவது, கழிவுகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல், கழிவுகளை பிரித்தல், கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரம் தயாரித்தல்)
1. ______________________
2. ______________________
3. ______________________
4. ______________________
விடை:
1. கழிவுகளை பிரித்தல்.
2. கழிவுகளை சேகரித்தல் மற்றும் எடுத்துச் செல்லுதல்.
3. கழிவு மறுசுழற்சி செய்தல் மற்றும் உரம் தயாரித்தல்.
4. கழிவு நீக்கம்

பக்கம் 68 நிரப்புவோம்

நீங்கள் வீட்டிலோ அல்லது பள்ளியிலோ குறைக்கக்கூடிய, மறுபயன்பாடு செய்யக்கூடிய மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய நான்கு பொருள்களை பட்டியலிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 2

Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல்

பக்கம் 70 செயல்பாடு

கீழே உள்ள படங்களை உற்றுநோக்கி, ஒவ்வொரு கழிவு வகையிலும் உங்கள் வீட்டில் உள்ள மூன்று பொருள்களின் பெயர்களை எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 3
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 4
Samacheer Kalvi 4th Science Guide Term 3 Chapter 1 பசுமை சுற்றுச்சூழல் 5
Question 1.
மக்கும் தன்மை கொண்ட கழிவுகள்
விடை:
வாழைத்தண்டு, காய்கறிகள், பாக்கு மட்டைத் தட்டு

Question 2.
மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள்
விடை:
காகிதம், அட்டை, நெகிழி, உலோகங்கள், கண்ணாடி

Question 3.
மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள்
விடை:
நெகிழி பை, மருத்துவ கழிவு, CFL விளக்கு, பாலிஸ்டர்.

பக்கம் 74 முயற்சிப்போம்

நீங்கள் பயன்படுத்தும் அல்லது கடையில் பார்த்த மறுசுழற்சி செய்ய முடியாத ஐந்து பொருள்களின் பெயர்களை எழுதுக.
விடை:
நெகிழிப்பைகள், நெகிழித்தட்டுகள், CFL விளக்கு, பல அடுக்கு நெகிழி, பாலிஸ்டர்.