Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 2 Chapter 1 உணவு and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 2 Chapter 1 உணவு

4th Science Guide உணவு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
இவற்றுள் எந்த உணவை சமைக்காமல் உண்ணலாம்?
அ) இறைச்சி
ஆ) கேரட்
இ) மீன்
ஈ) உருளைக்கிழங்கு
விடை:
ஆ) கேரட்

Question 2.
சமைக்காத உணவு என்பது _____________
அ) துரித உணவு
இ) பச்சையான உணவு
ஆ) ஆரோக்கியமான உணவு
ஈ) சமைத்த உணவு
விடை:
இ) பச்சையான உணவு

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 3.
சூரிய அடுப்பு ___________ மாசுபாட்டைக் குறைக்கிறது.
அ) காற்று
ஆ) நீர்
இ) நிலம்
ஈ) ஒளி
விடை:
அ) காற்று

Question 4.
இவற்றுள் எந்த ஒன்றை ‘உலரவைத்தல்’ முறையில் பாதுகாக்க முடியாது?
அ) நெல்
ஆ) பயறு வகைகள்
இ)மீன்
ஈ) வாழைப்பழம்
விடை:
ஈ) வாழைப்பழம்

Question 5.
நாம் ____________ மூலம் உணவு வீணாவதைத் தவிர்க்கலாம்.
அ) தேவைப்படுவோருக்கு அளிப்பதன்
ஆ) நம் தேவைக்கு மேல் உண்பதன்
இ) அதிகமான உணவை வாங்குவதன்
ஈ) குப்பைத்தொட்டியில் வீசுவதன்
விடை:
அ) தேவைப்படுவோருக்கு அளிப்பதன்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
_______________ நமக்கு வேலை செய்யவும், விளையாடவும் ஆற்றலைத் தருகிறது. (பச்சையான உணவு / துரித உணவு)
விடை:
பச்சையான உணவு

Question 2.
சமைத்த உணவு எளிதாக _____________ (செரிக்கும் / செரிக்காது).
விடை:
செரிக்கும்

Question 3.
அழுத்த சமையற்கலன் ஒரு ______________ சமையல் பாத்திரமாகும் (நவீன / பழங்கால).
விடை:
நவீன

Question 4.
நம்முடைய ஆரோக்கியமான வாழ்விற்குத் தேவையானது சுத்தமான காற்று, பாதுகாக்கப்பட்ட நீர் மற்றும் _____________ உணவு ஆகும் (துரித / சுகாதாரமான).
விடை:
சுகாதாரமான

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 5.
நாம் இடியாப்பத்தை _______________ முறையில் தயாரிக்கிறோம் (வேக வைத்தல் / நீராவியில் வேக வைத்தல்).
விடை:
நீராவியில் வேக வைத்தல்

III. பொருத்துக.

1. திராட்சை – நவீன பாத்திரம்
2. காய்கறிக்கலவை – உடல்நலமில்லாத போது எடுத்துக்கொள்ளும் உணவு
3. மின் அழுத்த சமையற்கலன் – பழங்கால பாத்திரம்
4. மண்பானை – பச்சை உணவு
5. குறைந்த கொழுப்புள்ள உணவு – சாலட்
விடை:
1. திராட்சை – பச்சை உணவு
2. காய்கறிக்கலவை – சாலட்
3. மின் அழுத்த சமையற்கலன் – நவீன பாத்திரம்
4. மண்பானை – பழங்கால பாத்திரம்
5. குறைந்த கொழுப்புள்ள உணவு – உடல்நலமில்லாத போது எடுத்துக்கொள்ளும் உணவு

IV. சரியா அல்லது தவறா என எழுதுக.

Question 1.
பிரியாணி ஒரு பச்சை உணவு.
விடை:
தவறு

Question 2.
வறுத்தல் என்பது சமையலின் ஒருவகையாகும்.
விடை:
சரி

Question 3.
நம்மால் தோசைக்கல்லில் சோறு சமைக்க முடியும்.
விடை:
தவறு

Question 4.
சூரிய அடுப்பில் சமைப்பதற்கு, சூரிய ஒளி தேவை.
விடை:
சரி

Question 5.
அதிகமான எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்வது நம் உடல்நலத்திற்குக் கேடு தரும்.
விடை:
சரி

V. சுருக்கமாக விடையளி.

Question 1.
எவையேனும் மூன்று சமைக்கும் முறைகளின் பெயர்களை எழுதுக.
விடை:
வேகவைத்தல், பொரித்தல், வறுத்தல்

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 2.
உடல் நலமில்லாதபோது நீங்கள் உண்ணக்கூடிய எவையேனும் இரண்டு உணவுகளின் பெயர்களை எழுதுக.
விடை:
தானியக் கஞ்சி, இட்லி

Question 3.
உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு பச்சை உணவை வரைந்து வண்ணமிடுக.
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 1

Question 4.
உணவுப் பாதுகாப்பு முறைகள் எவையேனும் இரண்டு பற்றி எழுதுக.
விடை:

  1. உப்பில் ஊறவைத்தல்
  2. உலர வைத்தல்

Question 5.
உங்கள் வீட்டில் உணவு வீணாவதை நீங்கள் எவ்விதம் குறைப்பாய்?
விடை:
தேவைப்படும் உணவை மட்டும் எடுத்துக் கொள்வேன். அதிகமாக இருந்தால் பிறருடன் பகிர்ந்து கொள்வேன்.

VI. விரிவாக விடையளி.

Question 1.
எவையேனும் நான்கு உணவுப் பாதுகாப்பு முறைகளை விவரி.
விடை:
1. உப்பில் ஊறவைத்தல் : பழங்கள் மற்றும் காய்கறிகள் – போன்றவற்றை எண்ணெய் மற்றும் உப்பில் ஊறவைத்து பயன்படுத்தும் முறைக்கு உப்பில் ஊறவைத்தல் என்று பெயர். எ.கா. ஊறுகாய்.

2. குளிரூட்டுதல் : உணவைப் பாதுகாக்க குறுகிய காலத்திற்கு அவற்றைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் முறைக்கு குளிரூட்டுதல் என்று பெயர். எ.கா. பழங்கள், காய்கறிகள்.

3. உலர வைத்தல் : உலர்த்துதல் மூலம் உணவில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும் முறைக்கு உலரவைத்தல் என்று பெயர். எ.கா. காய்ந்த மிளகாய்

4. புட்டியில் அடைத்தல் : காற்றுப்புகாத இறுக்கமான புட்டிகளில் உணவினைச் சேமிக்கும் முறைக்கு புட்டியில் அடைத்தல் என்று பெயர். எ.கா.ஜாம்.

Question 2.
எவையேனும் நான்கு சமைக்கும் முறைகளை விவரி.
விடை:
வேக்வைத்தல் : இம்முறையில் உணவுப்பொருளானது கொதிக்கும் நீரில் மூழ்க வைத்து சமைக்கப்படுகிறது. இதனால் உணவுப்பொருளானது மிருதுவாகிறது. எ.கா. அரிசி, முட்டை .

ஆவியில் வேகவைத்தல் : இது பாத்திரத்தில் உணவை வைத்து அதை கொதிக்கும் நீரின்மேல் எழும்பி வரும் நீராவியில் வைத்து சமைக்கும் முறையாகும். எ.கா. இட்லி, இடியாப்பம்.

வறுத்தல் : இம்முறையில் உணவானது ஒரு வறுக்கும் பாத்திரத்தில் வைக்கப்பட்டு மூடிவைக்காமல் சூடாக்கிச் சமைக்கப்படுகிறது. எ.கா. நிலக்கடலை. பொரித்தல் : இது சூடான எண்ணெய்யில் உணவினைச் சமைக்கும் முறையாகும். எ.கா. சிப்ஸ், பூரி.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 3.
சுகாதாரமாகச் சமைக்கும் வழிமுறைகள் எவையெவை?
விடை:

  • சமைக்கும் முன் கைகளை சோப்பு போட்டுக் கழுவவேண்டும்.
  • நறுக்குவதற்கு முன்பு காய்கறி மற்றும் பழங்களைக் கழுவவேண்டும்.
  • சமையல் பாத்திரங்கள் மற்றும் கத்திகளைக் கழுவவேண்டும்.
  • அதிக நேரத்திற்கு உணவினைச் சமைக்க வேண்டாம். ஏனெனில் உண வில் உள்ள சத்துகள் அழிக்கப்பட்டுவிடும்.
  • உணவினைச் சமைப்பதற்கு ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்த வேண்டாம். உணவுப் பொருள்களை அவற்றின் காலாவதி தேதிக்குப்பிறகு பயன்படுத்துவது உடல்நலத்திற்கு நல்லதன்று.

4th Science Guide உணவு InText Questions and Answers

பக்கம் 73 செய்து கற்போம்

கீழ்க்காணும் உணவுப்பொருள்களை வகைப்படுத்துக.
(கேரட், முட்டை, தேங்காய் எண்ணெய், பால், முள்ளங்கி, இறைச்சி, உருளைக்கிழங்கு, தயிர், கத்தரி, வெண்டைக்காய், மீன், முருங்கைக்காய், வெண்ணெய், வெங்காயம், மோர், வெள்ளரிக்காய், நெய்)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 2
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 3

பக்கம் 74 சிந்தித்து விடையளி

எந்தெந்த உணவுப்பொருள்களை சமைக்காமல் சாப்பிடுகிறீர்கள்?
விடை:
காரட், வெள்ளரி, பழங்கள்

பக்கம் 75 விடையளிப்போம்

எவையேனும் ஐந்து பச்சையான மற்றும் சமைத்த உணவுகளை எழுதவும்.
விடை:
அ. பச்சையான உணவு : _____________, _____________, _____________, _____________, _____________
விடை:
காரட், வெள்ளரி, ஆப்பிள், பப்பாளி, மாதுளை

ஆ. சமைத்த உணவு : _____________, _____________, _____________, _____________, _____________
விடை:
சோறு, மீன், இறைச்சி, முட்டை, கீரைகள்

பக்கம் 77 விடையளிப்போம்

Question 1.
உன் வீட்டில் பின்பற்றும் இரண்டு சமையல் முறைகளை – எழுதுக : ___________, ____________
விடை:
வேகவைத்தல், பொரித்தல்

Question 2.
சரியா அல்லது தவறா என எழுதுக.
அ. சமைக்கும் முன் கைகளைக் கழுவ வேண்டும். __________
விடை:
சரி

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

ஆ. காய்கறிகள் மற்றும் பழங்களை நறுக்கியபின் கழுவ வேண்டும். ________________
விடை:
தவறு

பக்கம் 78 செய்து கற்போம்

கொடுக்கப்பட்ட உணவுப் பொருள்களைத் தயாரிக்கப் பயன்படும் சமையல் பாத்திரங்களை எழுதுக.
(கடாய், பானை, அழுத்த சமையற்கலன், தவா, இட்லி குக்கர்)
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 4
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 5

விடையளிப்போம்

சரியா அல்லது தவறா என எழுதுக.
Question 1.
முன்பு மக்கள் தங்கள் உணவை அழுத்தச் சமையற்கலனில் சமைத்தனர்.
விடை:
தவறு

Question 2.
சூரிய அடுப்பு எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கிறது.
விடை:
சரி

Question 3.
அழுத்த சமையற்கலன் என்பது சமையல் பாத்திரம் இல்லை.
விடை:
தவறு

பக்கம் 80

பொருத்தமான ஒன்றினைக் குறியீடு (✓) செய்யவும்.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 6
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 7

விடையளிப்போம்

ஆம் அல்லது இல்லை என்று எழுதவும்
Question 1.
துரித உணவு உடல்நலத்திற்கு நல்லது. இல்லை
விடை:
இல்லை

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 2.
சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவ வேண்டும்.
விடை:
ஆம்

விவாதிப்போம்

இங்கு நந்தினியின் மதிய உணவுப்பெட்டி உள்ளது.
Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு 8

அ. இதிலுள்ளவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுப்பொருள்களா?
விடை:
இல்லை .

ஆ. ஓர் ஆரோக்கியமற்ற உணவினை நீக்கிவிட்டு, உன் விருப்பப்படி ஆரோக்கியமான ஓர் உணவினைச் சேர்க்க பரிந்துரைக்கவும். மாறுதலுக்கான காரணத்தையும் தருக.
விடை:
இதில் உள்ள சிப்ஸ்’ ஆரோக்கியமற்ற உணவாகும். இதை நீக்கிவிட்டு காய்கறிக் கலவையை (சாலட்) சேர்த்துக் கொள்ளலாம்.

காரணம் : சிப்ஸ் என்பது எண்ணெய்யில் வறுக்கப்பட்ட ஆரோக்கிமற்ற உணவாகும். எனவே இதை நீக்கி விட்டு சத்துக்கள் நிறைந்த காய்கறிக் கலவையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சிந்தித்து விடையளி

நீங்கள் நோயுற்றிருக்கும் போது, உங்களுக்கு என்ன வகையான உணவினை உண்ணத் தருவார்கள்?
விடை:
அரிசி அல்லது தானியக் கஞ்சி, இட்லி, பழச்சாறு ஆகியவற்றைத் தருவார்கள்.

பக்கம் 81 விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
_____________ எளிதில் செரிக்கக் கூடிய உணவாகும். (இட்லி / பிரியாணி)
விடை:
இட்லி

Question 2.
நாம் _____________ உணவு உண்பதைத் தவிர்க்க வேண்டும். (துரித / புதிய)
விடை:
துரித

சிந்தித்து விடையளி

Question 1.
வழக்கமாக நீங்கள் உங்களுடைய மதிய உணவை வீணாக்காமல் சாப்பிடுகிறீர்களா? இல்லை எனில், ஏன்?
விடை:
ஆம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 2 Chapter 1 உணவு

Question 2.
உமது பள்ளியிலும் வீட்டிலும் உணவு வீணாவதைக் குறைக்க, சில வழிகளைப் பரிந்துரைக்கலாமா?
விடை:

  • உணவு வீணாவதைத் தவிர்ப்பதற்கான எளிய – வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  • உன்னால் எவ்வளவு சாப்பிட முடியுமோ அதை மட்டும் எடுத்துக் கொள். மேலும், எடுத்ததைச் சாப்பிட்டுவிடு.
  • அதிகமுள்ள உணவைப் பகிர்ந்து உண்ணலாம்.
  • அதிகமுள்ள உணவை, பசியுடன் இருக்கும் விலங்குகளுக்கு அளிக்கலாம்.

பக்கம் 83 விடையளிப்போம்

கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
உலகப் பட்டினியால் வாடுவோர் தினம் கடைப்பிடிக்கப்படும் நாள் ______________
விடை:
மே 28

Question 2.
ஊறுகாய் _______________________ முறையில் பாதுகாக்கப்படுகிறது.
விடை:
உப்பில் ஊற வைத்தல்