Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

4th Science Guide பருப்பொருள் மற்றும் பொருள்கள் Text Book Back Questions and Answers

அ. பொருந்தாததைக் கண்டுபிடி.

Question 1.
செங்கல், கயிறு, பட்டுத் துணி, அன்னாசிப்பழம்
விடை:
பட்டுத் துணி

Question 2.
கல், இரப்பர் வளையம், சைக்கிள் டியூப், மின் கம்பி
விடை:
கல்

Question 3.
சூரியன், மெழுகுவர்த்தி, டார்ச், பேனா
விடை:
பேனா

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 4.
குடை, நீர்புகா மேலாடை, இறுக்கமான சட்டை (ஜெர்கின்), ஸ்பாஞ்ச்
விடை:
ஸ்பாஞ்ச்

Question 5.
கண்ணாடிப் புட்டி, தேர்வு அட்டை, காகிதத் தட்டு, மரப்பலகை
விடை:
கண்ணாடிப் புட்டி

ஆ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
எளிதில் அழுத்த அல்லது வெட்டக் கூடிய பொருள்கள் _____________ பொருள்கள் எனப்படும்.
விடை:
மென்மையான

Question 2.
தங்கமும் வைரமும் ____________ பொருளுக்கான எடுத்துக்காட்டுகள்.
விடை:
பளபளப்பான

Question 3.
எளிதாக வளைக்கவோ நீட்டவோ இயலும் பொருள்கள் ___________ பொருள்கள் எனப்படும்.
விடை:
நெகிழ்வுத்தன்மை உள்ள

Question 4.
_____________ பொருள்கள் ஒளியை முழுமையாகத் தம் வழியே கடந்து செல்ல அனுமதிக்கின்றன.
விடை:
ஒளிபுகும்

Question 5.
______________ பார்வையைத் தூண்டி, பொருள்களைத் தெளிவாகப் பார்க்க உதவும் இயற்கைக் காரணி.
விடை:
ஒளி

இ. பொருத்துக.

1. ஒளி மூலம் – கண்ணாடி
2. நீர்புகாத் தன்மை – தாவர எண்ணெய்
3. ஒளி ஊடுருவுதல் – சூரியன்
4. ஒளிகசியும் – உலோகம்
5. ஒளிபுகா – நீர்புகா மேலாடை
விடை:
1. ஒளி மூலம் – சூரியன்
2. நீர்புகாத் தன்மை – நீர்புகா மேலாடை
3. ஒளி ஊடுருவுதல் – கண்ணாடி
4. ஒளிகசியும் – தாவர எண்ணெய்
5. ஒளிபுகா – உலோகம்

ஈ. சரியா? தவறா? என எழுதுக.

Question 1.
சொரசொரப்பான பொருள்களை எளிதாக நம்மால் அழுத்தவோ, வெட்டவோ வளைக்கவோ முடியாது.
விடை:
சரி

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 2.
மங்கலான பொருள்கள் ஒளியைப் பிரதிபலிக்கின்றன.
விடை:
தவறு

Question 3.
உப்புத்தாள் மென்மையான பொருளுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
விடை:
தவறு

Question 4.
ஒளிபுகாப் பொருள்கள் ஒளியை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை.
விடை:
சரி

Question 5.
கண்ணாடிகள் அவற்றின் மீது விழும் ஒளியின் திசையை மாற்றிவிடுகின்றன.
விடை:
சரி

உ. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

Question 1.
ஒரு பொருள் நீர்புகாத் தன்மை உடையது என்று எப்பொழுது கூற முடியும்?
விடை:
நீரைத் தன்னுள் ஊடுருவிச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் நீர்புகாப் பொருள்கள் எனப்படும். எ.கா: நீர்புகா மேலாடை, அலுமினியத் தகடு, மாத்திரை அட்டை.

Question 2.
ஒளி மூலம் என்றால் என்ன?
விடை:
ஒளியைக் கொடுக்கும் பொருள்கள் ஒளி மூலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Question 3.
ஒளிபுகும் மற்றும் ஒளிபுகாப் பொருள்களுக்கு இடையேயான வேறுபாடு யாது?
விடை:
ஒளிபுகும் பொருள்கள் :
தம் வழியே ஒளியை முழுமையாக ஊடுருவ அனுமதிக்கும் பொருள்கள் ஒளிபுகும் பொருள்கள் எனப்படும். எனவே, இவற்றின் வழியே மறுபக்கம் உள்ள பொருள்களையும் தெளிவாக நாம் பார்க்க முடியும். எ.கா: காற்று, கண்ணாடி, தூய நீர்.

ஒளிபுகாப் பொருள்கள் :
தம் வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்காத பொருள்கள் ஒளிபுகாப் பொருள்கள் எனப்படும். எனவே இதனால் அதன் மறுபக்கம் உள்ள பொருள்களை நம்மால் பார்க்க முடியாது. எ.கா : மரம், கல், உலோகங்கள்.

Question 4.
ஒளி எதிரொளிப்பு வரையறு.
விடை:
ஒளியானது பளபளப்பான பரப்பின் மீது பட்டுத் திருப்பி அனுப்பப்படுவதையே ஒளி எதிரொளிப்பு என்கிறோம்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களுள் எவை ஒளிபுகும், ஒளி கசியும் அல்லது ஒளிபுகாப் பொருள்கள் என வகைப்படுத்துக.
(காற்று, பாறை, நீர், அலுமினியத்தகடு, கண்ணாடி, பனி, மரப்பலகை, பாலிதீன் பை, குறுந்தகடு, எண்ணெயில் நனைத்த காகிதம், கண்ணாடிக் குவளை மற்றும் நிறக் கண்ணாடி)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 2

4th Science Guide பருப்பொருள் மற்றும் பொருள்கள் InText Questions and Answers

பக்கம் 96 பதிலளிப்போமோ!

கீழ்க்காணும் பொருள்கள் எவற்றால் ஆனவை எனக் கண்டறிந்து எழுதுக.
(காகிதம், களிமண், கண்ணாடி, மரம், நெகிழி, உலோகம், இரப்பர், மெழுகு)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 4
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 5

பக்கம் 96 பதிலளிப்போமோ!

ஒரே வித பொருளால் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் இணைக்க.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 6
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 7
குறிப்பு :
அ) நெகிழிப் பொருள்கள்
ஆ) மரப்பொருள்கள்
இ) தோல் பொருள்கள்

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

பதிலளிப்போமா!

கொடுக்கப்பட்டுள்ள பொருள்கள் கடினமானவையா, மென்மையானவையா என எழுதுக. .
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 8
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 9

பக்கம் 97 பதிலளிப்போமோ!

கொடுக்கப்பட்ட பொருள்களை சொரசொரப்பானவை அல்லது வழுவழுப்பானவை என வகைப்படுத்துக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 10
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 11

செயல்பாடு

நெகிழ்வுத் தன்மையைச் சோதித்தல்
மாணவர்களிடம் ஒரு நெகிழி அளவுகோல் மற்றும் தர அளவுகோலைக் கொடுத்து அவற்றை வளைத்துப் பார்த்து உற்றுநோக்கியதை அட்டவணைப்படுத்தச் செய்க.
(வளைகிறது, வளையவில்லை)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 12
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 13

பக்கம் 98 செயல்பாடு

ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் முக்கால் பங்கு அளவிற்கு நீரை நிரப்பவும். அதில் ஓர் ஆரஞ்சுப்பழத்தை தோலுடனும் மற்றொன்றைத் தோல் இல்லாமலும் போடவும். அவற்றுள் எந்த ஆரஞ்சுப் பழம் மிதக்கிறது என்பதை உற்றுநோக்கி அதற்கான காரணத்தைக் கூறு.
விடை:
தோலுள்ள ஆரஞ்சுப்பழம் மிதக்கிறது. ஏனெனில் ஆரஞ்சுத் தோல் நீர் புகாப் பொருளாகும். தோல் இல்லாத பழத்திற்குள் நீர் புகுவதால் அது மூழ்கி விடுகிறது.

பக்கம் 99 செயல்பாடு

வாக்கியத்தை உங்கள் சொந்த சொற்களைக் கொண்டு பூர்த்தி செய்க.

Question 1.
ஒளிபுகும் பொருள்கள் ஒளியை _________________
விடை:
தன் வழியே ஒளியை முழுமையாக ஊடுருவ அனுமதிக்கும்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

Question 2.
ஒளிகசியும் பொருள்கள் ஒளியை ________________
விடை:
தன் வழியே சிறிதளவு ஒளியைமட்டும் கடந்து செல்ல அனுமதிக்கும்.

Question 3.
ஒளிபுகாப் பொருள்கள் ஒளியை ___________________
விடை:
தன் வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்காது.

பதிலளிப்போமா!

பின்வரும் பொருள்களுள் எவையெவை ஒளிபுகும், ஒளி கசியும் அல்லது ஒளிபுகாத் தன்மை கொண்டவை என்பதை எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 14
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 15

பக்கம் 100 பதிலளிப்போமா!

கண்ணாடி, தேர்வு அட்டை, மேசையின் மேற்பகுதி, ஒரு தட்டில் உள்ள தண்ணீர் போன்ற சில பொருள்கள் மீது உங்கள் முகத்தைப் பார்க்க முயற்சிக்கவும். உங்கள் முகத்தைத் தெளிவாகக் காட்டும் பொருள்கள் எவை? அது ஏன் என உங்களுக்குத் தெரியுமா?
விடை:
கண்ணாடி என் முகத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. ஏனெனில் கண்ணாடியில் ஒளி முழுமையாக எதிரொளிப்பு அடைகிறது.

செயல்பாடு

ஒளி எதிரொளிப்பு

தேவையான பொருள்கள் :
முகம் பார்க்கும் கண்ணாடி மற்றும் டார்ச் விளக்கு
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள் 16
செய்முறை :
1. ஓர் அறையின் கதவு மற்றும் சாளரங்களை மூடி இருட்டாக்கவும்.
2. உன் நண்பனிடம் கையில் ஒரு கண்ணாடியைப் பிடித்துக் கொண்டு அறையின் ஒரு மூலையில் நிற்கச் சொல்லவும்.
3. அறையின் மற்றொரு மூலையில் கையில் டார்ச் விளக்குடன் நீ நிற்கவும்
4. இப்போது டார்ச் விளக்கை ஒளிரச் செய்யவும்.
5. டார்ச் வெளிச்சத்தைக் கண்ணாடியின் மீது நேரடியாகப் படுமாறு செய்யுவும் என்ன நிகழ்கிறது?
6. உனது உற்றுநோக்கலிருந்து பின்வருவனவற்றிற்கு பதிலளிக்கவும்.
அ. நீங்கள் கண்ணாடியின் கோணத்தை மாற்றும் போது, ஒளியில் என்ன மாற்றம் நிகழ்கிறது?
விடை:
கண்ணாடியின் கோணத்தை மாற்றும் போது எதிரொளிக்கும் ஒளியின் கோணமும் மாறுகிறது.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 2 பருப்பொருள் மற்றும் பொருள்கள்

ஆ. கண்ணாடியின் மூலம் எதிரொளிக்கப்பட்ட ஒளியின் திசையை மாற்ற இயலுமா?
விடை:
ஆம். கண்ணாடியின் மூலம் எதிரொளிக்கப்பட்ட ஒளியின் திசையை மாற்ற இயலும்.