Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Science Guide Pdf Term 1 Chapter 1 எனது உடல் Questions and Answers, Notes.

TN Board 4th Science Solutions Term 1 Chapter 1 எனது உடல்

4th Science Guide எனது உடல் Text Book Back Questions and Answers

அ. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
இதயம், கால்கள், மூளை, சிறுநீரகம்
விடை:
கால்கள்

Question 2.
கண்கள், காதுகள், விரல்கள், நுரையீரல்
விடை:
நுரையீரல்

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

Question 3.
முன்மூளை, நடுமூளை, பின்மூளை, நரம்புகள்
விடை:
நரம்புகள்

ஆ. அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு படத்தை நிரப்புக.

(வாயில் முத்தமிடல், தாத்தா-பாட்டியின் அன்பு, பிட்டத்தைத் தட்டுதல், அப்பா தலையில் வருடுதல், பெற்றோரின் அணைப்பு மற்றும் முத்தம், பாலியல் தொடர்பான படங்களைக் காண்பித்தல்)
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 8
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 9

இ) கீழ்க்காணும் குறிப்புகளுக்கான விடைகளைக் கண்டறிந்து அவற்றை வட்டமிடவும். (உங்களுக்காக முதல் குறிப்பிற்கு மட்டும் விடை கட்டப்பட்டுள்ளது)

1. ஓர் உள்ளுறுப்பு
2. மூச்சுவிட உதவும் உறுப்பு
3. நம் உடலிலிருந்து கழிவுகளை வெளியேற்றும் உறுப்பு
4. முறையற்ற மற்றும் ஆபத்தான தொடுதல்
5. தினமும் நாம் அதிகம் பருக வேண்டியது.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 10
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 11
1) இதயம்
2) நுரையீரல்
3) சிறுநீரகம்
4) தவறான தொடுதல்
5) நீர்

ஈ. சரியா? தவறர்?

Question 1.
என்று கூறுக. தலை, கை மற்றும் கால்கள் ஆகியவை உள் உறுப்புகள் ஆகும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

Question 2.
இதயம் தசைகளால் ஆனது.
விடை:
சரி

Question 3.
தசைகள் நமது எலும்புகளை மூடியுள்ள மென்மையான பாகங்கள் ஆகும்.
விடை:
சரி

Question 4.
தினமும் ஒரு முறை மட்டும் பற்களைத் துலக்குதல் நல்லது.
விடை:
தவறு

Question 5.
தந்தை உனது தலையை வருடுதல் ஒரு நல்ல தொடுதல் ஆகும்.
விடை:
சரி

உ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நம் உடலின் கட்டளை மையம் ___________ ஆகும்.
அ) இதயம்
ஆ) நுரையீரல்
இ) சிறுநீரகம்
ஈ) மூளை
விடை:
ஈ) மூளை

Question 2.
உணவானது ஆற்றலாக மாற்றப்படும் இடம் _____________
அ) கழுத்து
ஆ) இதயம்
இ) வயிறு
ஈ) மூக்கு
விடை:
இ) வயிறு

Question 3.
ஒவ்வொரு நாளும் நாம் நமது பற்களை _____________ முறை துலக்க வேண்டும்.
அ) ஒரு
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
விடை:
ஆ) இரண்டு

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

Question 4.
நல்ல தொடுதல் என்பது முறையான மற்றும் ___________ தொடுதல் ஆகும்.
அ) நலமற்ற
ஆ) மோசமான
இ) பாதுகாப்பற்ற
ஈ) நலமான
விடை:
ஈ) நலமான

Question 5.
தினமும் நாம் அதிகளவில் __________ ஐப் பருக வேண்டும்.
அ) எண்ணெய்
ஆ) தண்ணீ ர்
இ) பொட்டலமிடப்பட்ட பானம்
ஈ) உப்பு நீர்
விடை:
ஆ) தண்ணீ ர்

ஊ. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்க.

Question 1.
உடலின் உள்ளுறுப்புகளை எழுதுக.
விடை:
வயிறு, நுரையீரல், இதயம், மூளை ஆகியவை உள்ளுறுப்புகள் ஆகும்.

Question 2.
மூளையின் பணிகள் யாவை?
விடை:
மூளை என்பது நம் உடலின் கட்டளை மையம். இது நாம் சிந்தித்துப் பல்வேறு செயல்களைச் செய்ய உதவுகிறது. கைகளை அசைத்தல், அமர்தல் அல்லது நடத்தல் போன்ற நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமது மூளையின் கட்டளையின் காரணமாக மட்டுமே சாத்தியமாகிறது.

Question 3.
சுகாதாரமான வாய் மற்றும் பற்களுக்கு ஏற்ற உணவுகளைப் பட்டியலிடுக.
விடை:

  • நிறைய பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருள்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இனிப்பான பானங்களுக்குப் பதிலாக நீர் அல்லது பாலை அருந்துங்கள்.
  • முடிந்த அளவு மிட்டாய், கேக், பனிக்கூழைக் (Ice Cream) குறைவாக உண்ணுங்கள்.

Question 4.
உங்கள் இதயம் மற்றும் சிறுநீரகங்களைப் பாதுகாக்க என்ன செய்வீர்கள்?
விடை:
இதயம் – கொழுப்பு நிறைந்த உணவைத் தவிர்த்தல்
சிறுநீரகம் – அதிகளவு தண்ணீ ர் குடித்தல்.

Question 5.
ஒருவர் உன்னைத் தொடும்போது நீ தொந்தரவாக உணர்ந்தால், உடனே என்ன செய்வாய்?
விடை:
கண்டிப்பாக “என்னைத் தொடாதே” என்று உரக்க சத்தமிடுவேன்.

அந்த இடத்தை விட்டு விரைவாகச் சென்று விடுவேன். பெற்றோர் அல்லது ஆசிரியர் போன்றவர்களிடம் கூறி உதவி கேட்பேன்.

எ. சிந்தித்து விடையளிக்க.

Question 1.
முன்பின் தெரியாத ஒருவர் உங்களைத் தொந்தரவு செய்தால், எப்படி நடந்துகொள்வீர்கள்?
விடை:
சொந்த வார்த்தைகளில் எழுதுங்கள். ‘என்னைத் தொடாதே’ என்று உரத்த குரலில் கூறுவேன். உடனடியாக அந்த இடத்தை விட்டு அகன்று செல்வேன். என் பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் இதுபற்றிக் கூறுவேன்.

Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல்

Question 2.
சிந்தனை, பேசுதல், கற்றல் போன்ற நமது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் உறுப்பு எது? அதன் மூன்று முக்கிய பகுதிகளை எழுது.
விடை:
முக்கிய பகுதிகள் :

  1. முன்மூளை
  2. நடுமூளை
  3. பின்மூளை
    Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 12

4th Science Guide எனது உடல் In Text Questions and Answers

பக்கம் 82 நினைவு கூர்வோமா!

கீழே உள்ள கட்டத்தில் சில உடல் பாகங்களின் பெயர்கள் மறைந்திருக்கின்றன. அவற்றைக் கண்டறிந்து வட்டமிடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 1
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 2
கை, கால், காது, தலை, கண், எலும்பு, மூக்கு, பல்

பக்கம் 83 பதிலளிப்போமா!

Question 1.
____________ (மூக்கு / மூளை) ஓர் உள்ளுறுப்பாகும்.
விடை:
மூளை

Question 2.
நம் உடலின் உள்ளுறுப்புகளை நம்மால் பார்க்க இயலும். (சரி / தவறு)
விடை:
தவறு

பக்கம் 86 இணைப்போம்

பொருத்துக.
1. ஓரிணை பஞ்சு போன்ற பைகள் – வயிறு
2. ‘J’ வடிவ பை – சிறுநீரகம்
3. அதிகப்படியான நீரை வடிகட்டுதல் – மூளை
4. கட்டளை மையம் – இதயம்
5. இரத்த இறைப்பி – நுரையீரல்கள்
விடை:
1. ஓரிணை பஞ்சு போன்ற பைகள் – நுரையீரல்கள்
2. ‘J’ வடிவ வை – வயிறு
3. அதிகப்படியான நீரை வடிகட்டுதல் – சிறுநீரகம்
4. கட்டளை மையம் – மூளை
5. இரத்த இறைப்பி – இதயம்

பக்கம் 89 பதிலளிப்போமா!

உங்கள் பற்களுக்கு நன்மை தரும் உணவுகளுக்கும் ✓ குறியும் தீங்கு விளைவிக்கும் உணவுகளுக்கு ✗ குறியும் இடுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 3
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 4

பக்கம் 92 பதிலளிப்போமா!

கீழே உள்ள படங்களைப் பார்த்து ‘நல்ல தொடுதல்’ அல்லது ‘தவறான தொடுதல்’ என எழுதுக.
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 5
விடை:
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 6
Samacheer Kalvi 4th Science Guide Term 1 Chapter 1 எனது உடல் 7