Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.1
அ. கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களின் பெயர்களை எழுதுக.
a. 1006 –
தீர்வு:
ஆயிரத்து ஆறு
b. 6327 –
தீர்வு:
ஆறாயிரத்து முன்னூற்று இருபத்தி ஏழு
c. 9027 –
தீர்வு:
ஒன்பதாயிரத்து இருபத்தி ஏழு
d. 10000 –
தீர்வு:
பத்தாயிரம்
e. 8906 –
தீர்வு:
எட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஆறு
பக்கம் 21
ஆ. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றின் எண்ணுருவை எழுதுக.
கேள்வி 1.
ஏழயிரத்து அறுபத்து நான்கு – ______
தீர்வு:
7064
கேள்வி 2.
ஒன்பதாயிரத்து முன்னூற்று நாற்பது – ______
தீர்வு:
9340
கேள்வி 3.
ஐந்தாயிரத்து அறுநூற்று எழுபத்து மூன்று – _____
தீர்வு:
5673
கேள்வி 4.
பத்தாயிரம் – ______
தீர்வு:
10000
கேள்வி 5.
நான்காயிரத்து முன்னூற்று ஆறு – ______
தீர்வு:
4306
(இ. கீழே கொடுக்கப்பட்ட வினாக்களுக்கு விடையளி.
கேள்வி 1.
ராமு வங்கிக்கு சென்று ரூ. 7,500ஐ முதலீடு செய்தார். முதலீட்டுப் படிவத்தில் முதலீட்டு பணத்தினை அவர் எழுத்தால் நிரப்ப வேண்டும். தயவுடன் நீ அவருக்கு எழுத்தால் எழுத உதவலாமா?
தீர்வு:
ஏழாயிரத்து ஐநூறு
கேள்வி 2.
ஈரிலக்க மிகப்பெரிய எண்ணையும் மூவிலக் மிகப்பெரிய எண்ணின் கூடுதலையும் கண்டு பிடி. கூடுதலில் கிடைக்கும் எண்ணின் பெயரை எழுதுக.
தீர்வு:
ஈரிலக்க மிகப்பெரிய எண் = 99
மூன்றிலக்க மிகப்பெரிய எண் = 999
ஆயிரத்து தொண்ணூற்று எட்டு