Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 3 Chapter 2 விலங்குகளின் வாழ்க்கை Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Science Solutions Term 3 Chapter 2 நமது சுற்றுச்சூழல்
பக்கம்- 71
ஆயத்தச் செயல்பாடு
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்தி, விலங்குகளை அடையாளம் கண்டு, அவற்றின் பெயர்களை எழுதுக.
விடை:
பக்கம் 74
இணைப்போம் நீர் வாழ்வன மற்றும் நில வாழ்வனவற்றின் பெயர்களை அவற்றிற்குரிய வாழிடத்துடன் இனணக்க.
விடை:
பக்கம் 75
உதவி செய்வோம்
ஓர் ஊரில் இயங்கிவந்த உயிரியல் பூங்காவைத் திடீரெனச் சில காரணங்களால் மூட முடிவு செய்தனர். எனவே, அங்கிருந்த விலங்குகளை அவற்றின் வாழிடத்தில் சேர்க்க முடிவு செய்தனர். அவர்கள் எந்த விலங்கை எந்த வாழிடத்தில் சேர்த்திருப்பர்?
(புலி, நண்டு, வான்கோழி, ஒட்டகச்சிவிங்கி, பூனை, மீன், கரடி, கழுதை, ஒட்டகம், காகம், வரிக்குதிரை, வாத்து, யானை, ஆமை, பன்றி, மயில், சிங்கம்.)
விடை:
பக்கம்- 75
கண்டுபிடிப்போம்
அ) வாழிடத்தின் அடிப்படையில் பொருந்தாத ஒன்றை வட்டமிடுக.
கேள்வி 1.
சிங்கம், யானை குரங்கு திமிங்க லம்
விடை:
திமிங்க லம்
கேள்வி 2.
சுறாமீன், நாய், ஜெல்லிமீன், நட்சத்திரமீன்
விடை:
நாய்,
ஆ) கொடுக்கப்பட்ட குறிப்புகளுக்கு உரிய விலங்கின் பெயரை எடுத்து எழுதுக.
(பென்குயின், திமிங்கலம், ஆக்டோபஸ், வாத்து.)
கேள்வி 1.
எட்டு கைகளைக் கொண்டவன் : கடலிலே வாழ்பவன். ______________________
விடை:
ஆக்டோபஸ்.
கேள்வி 2.
பறக்க முடியாதவன்: ஆனால், நன்றாக நீந்துபவன் ______________________
விடை:
பென்குயின்.
கேள்வி 3.
கடலில் வாழ்வனவற்றில் மிகப் பெரியவன் ______________________
விடை:
திமிலங்கலம்.
கேள்வி 4.
நீர்ப் பறவை : ______________________
விடை:
வாத்து.
பக்கம் – 76
வண்ணமிடுவோம்
நீரில் வாழும் உயிரினங்களுக்கு மட்டும் வண்ணம் தீட்டுக.
விடை:
பக்கம் – 77
இனணப்போம்
விலங்குகளை அவற்றின் வாழிடத்துடன் இணைக்க.
விடை:
பக்கம் – 78
இனணப்போம்
விலங்குகளை அவற்றின் வாழிடத்துடன் இணைக்க.
விடை:
பின்வரும் விலங்குகளின் உணவுகளை எடுத்து எழுதுக.
கேரட், மான், புல், பால், தானியங்கள்.
விடை:
பக்கம்- 79
பின்வரும் குறிப்புகளின் அடிப்படையில் யார் என்பதைக் கண்டறிந்து எழுதுக.
மண்புழு, வண்ணத்துப்பூச்சி, கொசு, சிலந்தி, யானை, சிங்கம், கோழி,
கேள்வி 1.
காட்டின் அரசன். மான், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி போன்றவற்றை வேட்டையாடி உண்பேன். நான் யார்?
விடை:
சிங்கம்.
கேள்வி 2.
விலங்குகளின் இரத்தம் குடிப்பேன். என் இன ஆண்கள் தாவரத்தின் சாற்றை மட்டும் குடிப்பார்கள். நான் யார்? _________________________
விடை:
கொசு.
கேள்வி 3.
தானியங்கள், சிறு பூச்சிகள், மண்புழு போன்றவற்றை கொத்தி உண்பேன். நான் யார்? _________________________
விடை:
கோழி.
கேள்வி 4.
பூவிலிருந்து தேனை உறிஞ்சிக் குடிப்பேன். நான் யார்? _________________________
விடை:
வண்ணத்துப்பூச்சி.
கேள்வி 5.
என் வலையில் சிக்கும் சிறு பூச்சிகளை உண்பேன். நான் யார்? _________________________
விடை:
சிலந்தி.
கேள்வி 6.
தென்னை ஓலை, கரும்பு, வாழைப்பழம், தாவர இலைகளை தும்பிக்கையின் உதவியால் உண்பேன். நான் யார்? _________________________
விடை:
யானை.
கேள்வி 7.
மண்ணிலுள்ள கரிமக் கழிவுகள், நுண்ணுயிரிகளை உண்பேன். நான் யார்? _________________________
விடை:
மண்புழு.
பக்கம்- 80
இனணப்போம்
கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளுக்கு அவற்றின் உணவைப் பெற வழிகாட்டுங்கள். ஒவ்வொரு விலங்கிற்கும் வெவ்வேறு வண்ணத்தைப் பயன்படுத்துக.
பக்கம்- 80
நிரப்புவோம்
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் பயன்படுத்திப் பணித்தாளை நிறைவு செய்க.
(புலி, பல்லி, மான், புறா, தேனீ, வண்ண த்துப்பூச்சி, ஆடு, நரி, அணில், மரங்கொத்தி.)
பணித்தாள்
பெயர்: வருண் நாள் : 07/01/19
கேள்வி 1.
தானியங்களை உண்ணும் விலங்குகள் : _________________________
விடை:
புறா, அணில்
கேள்வி 2.
தாவரங்களை உண்ணும் விலங்குகள் : _________________________
விடை:
மான், ஆடு
கேள்வி 3.
ஊன் (மாமிசம்) உண்ணும் விலங்குகள் : _________________________
விடை:
புலி, நரி
கேள்வி 4.
தேன் குடிக்கும் விலங்குகள் : _________________________
விடை:
தேனீ, வண்ணத்துப்பூச்சி
கேள்வி 5.
பூச்சி உண்ணும் விலங்குகள் : _________________________
விடை:
மரங்கொத்தி, பல்லி
பக்கம் – 82
செயல்பாடு
சிந்தித்து கூறுக.
நீ, உன் நண்பனை ஓர் அனைத்துண்ணி என்கிறாய். ஆனால் உன் நண்பனோ தான் ஒரு தாவர உண்ணி என்கிறான். உன் * நண்பன் கூற்று சரியா? எப்படி எனக் கூறுக.
விடை:
ஆம், சரி, ஏனென்றால் அவன் சைவம் மட்டுமே சாப்பிடுபவன்.
பக்கம் – 83
இனணப்போம்
கொடுக்கப்பட்டுள்ள விலங்குகளை அவற்றிற்குரிய குடுவைகளுடன் கோடிட்டு இணைக்க.
விடை:
பக்கம் – 84
கண்டுபிடிப்போம்
கொடுக்கப்பட்ட விலங்கிற்கான உணவை வட்டமிடுக. (ஒன்றிற்கு மேல் சரியான உணவு இருந்தால் அதையும் வட்டமிடவும்)
விடை:
பக்கம்- 84
கண்டுபிடிப்போம்
உணவு உண்ணும் முறையின் அடிப்படையில் ஆ என்ற வட்டத்தைக் குறிக்கும் விலங்கு வகையைக் கண்டறிந்து, அவற்றிற்கு மூன்று எடுத்துக்காட்டு தருக.
எடுத்துக்காட்டு: ________________, ________________, ________________.
விடை:
எடுத்துக்காட்டு: காகம், நாய், மனிதன்.
பக்கம் – 86
உற்றுநோக்கி கற்றல்
உனது பள்ளி அல்லது வீட்டருகில் உள்ள பூச்செடிகளைப் பார். அச்செடிகளை வண்ணத்துப்பூச்சிகள் நாள் முழுவதும் நாடி வருகின்றனவா? அவை ஒரே மலரில் அசையாது அமர்ந்துள்ளனவா? அல்லது மலருக்கு மலர் தாவுகின்றனவா? என்பதை உற்றுநோக்கிக் கவனி.
விடை:
இல்லை . அது மலருக்கு மலர் தாவுகின்றன.
சிந்தித்து விடையளிக்க
பறவைகளின் அலகுகள் பல்வேறு வடிவத்திலும் அளவிலும் உள்ளதை நினைத்து வியந்ததுண்டா?
விடை:
ஆம்.
பக்க ம்- 87
வரைவோம்
கேள்வி 1.
பின்வரும் செயலைச் செய்யும் பறவையின் அலகுகளை வரைக.
விடை:
கேள்வி 2.
கிளியின் படம் வரைந்து வண்ண ம் தீட்டுக.
விடை:
பக்கம் – 88
கண்டறிவோம்
படத்தை உற்றுநோக்கி அதிலுள்ள விலங்குகளின் பெயர்களை எழுது
1. ______________
2. ______________
3. ______________
4. ______________
5. ______________
6. ______________
விடை:
1. சிங்கம்
2. ஒட்டக சிவிங்கி
3. வரிக்குதிரை,
4. யானை
5. புலி
6. மீன்
பக்கம் – 89
முயற்சிப்போம்
கேள்வி 2.
பின்வருவனவற்றைப் பயன்படுத்தி எதாவது இரண்டு உணவுச் சங்கிலிகளை அமைக்க.
(புல், புலி, மான், டால்பின், மீன், பூச்சிகள், நத்தை, தாவரம், மீன்கொத்தி)
விடை:
உணவுச் சங்கிலி : புல் → மான் → புலி
உணவுச் சங்கிலி : பூச்சிகள் → மீன் → மீன்கொத்தி
பக்கம்- 90
செயல்பாடு
உணவு வலையை நிறைவு செய்க.
விடை:
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
கேள்வி 1.
கொசுவைப் போல உணவை உறிஞ்சும் உயிரினம் _______________.
அ) கரப்பான் பூச்சி
ஆ) கிளி
இ வண்ணத்துப்பூச்சி
விடை:
இ வண்ணத்துப்பூச்சி
கேள்வி 2.
கரடி சில நேரம் பூசணிக்காயையும், சில நேரம் மீனையும் உண்ணும். எனவே, அது _______________.
அ) ஊன் உண்ணி
ஆ) அனைத்துண்ணி
இ தாவர உண்ணி
விடை:
ஆ) அனைத்துண்ணி
கேள்வி 3.
கொட்டைகளை உடைத்து விதைகளை உண்ண ஏற்ற அலகினைப் பெற்ற பறவை எது?
அ) குருவி
ஆ) ஆந்தை
இ மீன்கொத்தி
விடை:
அ) குருவி
கேள்வி 4.
ஊன் உண்ணும் விலங்குகள் சிறப்பான _______________ பெற்றுள்ளன.
அ) கடைவாய்ப் பல்
ஆ) தந்தம்
இ) கோரைப்பற்கள்
விடை:
இ) கோரைப்பற்கள்
கேள்வி 5.
யானை ஒரு _______________
அ) தாவர உண்ணி
ஆ) ஊன் உண்ணி
இ அனைத்துண்ணி
விடை:
அ) தாவர உண்ணி
கேள்வி 6.
ஊன் உண்ணியைத் தேர்ந்தெடு.
அ) மான்
ஆ) சிங்கம்
இ ஒட்டகச்சிவிங்கி
விடை:
ஆ) சிங்கம்
கேள்வி 7.
உணவுச் சங்கிலியில் பாம்பிற்கு முன்வரும் விலங்கு எது?
அ) கழுகு
ஆ) தஹ்ளை
இ புல்
விடை:
ஆ) தஹ்ளை
கேள்வி 8.
உணவுப்பழக்கத்தின் அடிப்படையில் கரடியைப் போன்று உணவு உண்ணும் விலங்கு.
அ) ஒட்டகம்
ஆ) மான்
இ) கோழி
விடை:
இ) கோழி
கேள்வி 9.
வாழிடத்தின் அடிப்படையில் பொருந்தாதது எது?
அ) மான்
ஆ) மீன்
இ நரி
விடை:
அ) மான்
கேள்வி 10.
பின்வருவனவற்றுள் மாறுபட்ட உணவுப்பழக்கம் கொண்டது எது?
அ) யானை
ஆ) பசு
இ) நாய்
விடை:
இ) நாய்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
கேள்வி 1.
_______________ (காடு/இலை) ஒரு சிறிய வாழிடம்.
விடை:
இலை
கேள்வி 2.
வண்ணத்துப்பூச்சி பூவிலிருந்து _______________ (தேனை/நீரை) உறிஞ்சுகிறது.
விடை:
தேனை
கேள்வி 3.
உளி போன்ற அலகைப் பெற்றுள்ள பறவை _______________ (குருவி /மரங்கொத்தி)
விடை:
மரங்கொத்தி
கேள்வி 4.
கிளி _______________ (எலியை/தானியங்களை) உணவாக உண்ணும்.
விடை:
தானியங்களை
கேள்வி 5.
உணவுச் சங்கிலி எப்பொழுதும் _______________ (தாவரத்தில் விலங்கில்) தொடங்கும்.
விடை:
தாவரத்தில்
III. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
கேள்வி 1.
நிலமும் நீரும் பொதுவான வாழிடங்கள் ஆகும். வாழிடம் என்பது
என்ன ?
விடை:
ஓர் உயிரினம் வாழும் இடமே அதன் வாழிடம் எனப்படும்.
கேள்வி 2.
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
அ) நில வாழ் விலங்குகள்: _______________, ______________.
விடை:
சிங்கம், பூனை.
ஆ) நீர் வாழ் விலங்குகள் : _______________, ______________.
விடை:
மீன், நண்டு
கேள்வி 3.
விலங்குகள் இடம்விட்டு இடம் நகர்வது ஏன்?
விடை:
உணவு தேவைக்காக விலங்குகள் இடம்விட்டு இடம் நகர்கின்றது.
கேள்வி 4.
வண்ணத்துப்பூச்சி தேனை உணவாக எடுத்துக்கொள்ளும். அதுபோன்று மண்புழு எதை உணவாக உண்ணும்?
விடை:
மண்புழு மண்ணிலுள்ள கரிமக் கழிவுகளை உணவாக உண்ணும்.
கேள்வி 5.
தாவர உண்ணி, ஊன் உண்ணி – வேறுபடுத்துக.
விடை:
தாவர உண்ணி | ஊன் உண்ணி |
1. தாவரங்களை மட்டும் உணவாக உண்ணும் | இறைச்சியை மட்டும் உணவாக உண்ணும் |
2. இவை கூரான, நேரான விளிம்புடைய தட்டையான வெட்டுப் பற்களை கொண்டுள்ளன. (எ.டு மான், பசு | இவை மிகக் கூரான கோரைப் பற்களைக் கொண்டுள்ளன. எ.டு) புலி, சிங்க ம். |
கேள்வி 6.
மனிதன் ஓர் அனைத்துண்ணியா? ஊன் உண்ணியா?
விடை:
மனிதர் ஓர் அனைத்துண்ணி.
கேள்வி 7.
உணவுச் சங்கிலிக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
விடை:
இலைகள் → வெட்டுக்கிளி → கோழி → பருந்து
கேள்வி 8.
பின்வருவனவற்றுள் சரியான உணவுச் சங்கிலியைத் தேர்ந்தெடுக்க.
அ) இலைகள் → பறவை → பூச்சி
ஆ) பூச்சி → இலைகள் → பறவை
இ இலைகள் → பூச்சி → பறவை
விடை:
இ இலைகள் → பூச்சி → பறவை
விடைகள்: இ. இலைகள் → பூச்சி → பறவை
IV. கூடுதல் வினா:
கேள்வி 1.
நில வாழ்வன – குறிப்பு எழுதுக.
விடை:
நிலத்தில் வாழும் விலங்குகள் நில வாழ்வன எனப்படும்.
(எ-டு எறும்பு, பூனை.
கேள்வி 2.
தவளை – இருவாழ்வி என அழைக்கப்பட காரணம் என்ன?
விடை:
தவளை நீரிலும் நிலத்திலும் வாழ்கின்றது. எனவே இது இருவாழ்வி எனப்படும்.
கேள்வி 3.
அனைத்துண்ணிகள் என்றால் என்ன?
விடை:
தாவரத்தையும் மாமிசத்தையும் உணவாக உண்ணும் விலங்குகள் அனைத்துண்ணிகள் எனப்படும். (எ-டு கரடி, மனிதன்.
கேள்வி 4.
வேட்டை விலங்குகள் என்றால் என்ன?
விடை:
உணவிற்காகப் பிற உயிர்களைக் கொல்லும் விலங்குகள் வேட்டை விலங்குகள் எனப்படும். (எ-டு புலி
கேள்வி 5.
உணவு வலை – குறிப்பு வரைக.
விடை:
உணவு வலை என்பது, பல உணவுச் சங்கிலிகள் ஒன்றொடொன்று இணைக்கப்பட்டு தோன்றுவதாகும்.