Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 1 Chapter 1 எனது உடல் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Science Solutions Term 1 Chapter 1 எனது உடல்
கேள்வி 1.
தன் சுத்தத்திற்குப் பயன்படும் பொருள்களைக் (✓) குறிப்பிடுக.
விடை :
எழுதிப் பழகுவோம் (பக்கம் 89):
பணித்தாளை நிரப்புக:
கிருமிகள்
கேள்வி 1.
கிருமிகள் மனிதர்களுக்கு நோய்களை ஏற்படுத்துமா?
விடை :
கேள்வி 2.
கிருமிகளைப் பார்த்திருக்கிறாயா?
விடை :
கேள்வி 3.
கிருமிகள் எங்கே காணப்படுகின்றன?
விடை :
- சுகாதாரமற்ற இடங்களில் கிருமிகள் காணப்படுகின்றன.
- அழுக்கு நிறைந்த இடங்களில் கிருமிகள்
கேள்வி 4.
காணப்படுகின்றன. கிருமிகள் பரவாமல் இருக்க நீ என்ன செய்வாய்?
விடை :
- சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வேன்.
- உணவு உண்ணும் முன் கைகளை சோப்புப் போட்டுக் கழுவுவேன்.
சிந்திக்க:
கேள்வி 1.
பிரீத்தி அடிக்கடி நகம் கடிக்கிறாள். இது நல்ல பழக்கமா? காரணம் கூறு.
விடை :
நகம் கடிப்பது நல்ல பழக்கம் அல்ல. நகத்தின் அடியில் அழுக்கு சேர்ந்திருக்கும். நகம் கடிக்கும் போது இந்த அழுக்கும் அதில் உள்ள கிருமிகளும் வாய் மூலம் உடலுக்குள் சென்று தீங்கு விளைவிக்கும். எனவே நகம் கடிப்பது ஒரு தீய பழக்கம் ஆகும்.
சிந்தித்து கலந்துரையாடு :
கேள்வி 1.
அருண் முறையாகக் கைகழுவாமல் உணவையும், சிற்றுண்டிகளையும் உண்கிறான். இது சரியா? காரணம் கூறு.
விடை :
தவறு. கைகளைக் கழுவாமல் உணவு உண்ணும் போது கையில் உள்ள அழுக்கும் கிருமிகளும் உடலுக்குள் சென்று தீங்கு விளைவிக்கும். எனவே முறையாகக் கைகழுவாமல் உணவு உண்ணக்கூடாது.
பக்கம் 91:
கேள்வி 1.
சரியான செயலுக்கு (✓) குறியும், தவறான செயலுக்கு (✗) குறியும் இடவும்.
விடை :
பக்கம் 92:
விடையளிப்போம்:
கேள்வி 1.
கீழே உள்ள குறிப்புகளைப் படிக்கவும். சரியான படத்துக்கு (✓) குறியும், தவறான பதிலுக்கு (✗) குறியும் இடவும்.
விடை :
பக்கம் 95:
விடையளிப்போம்.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைப் படித்து, சரி’ அல்லது ‘தவறு’ என்று எழுது.
கேள்வி 1.
நீண்ட நேரம் காணொளி விளையாட்டு விளையாடுவதையம் தொலைக்காட்சி பார்ப்பதையும் தவிர்க்கவும்.
விடை :
சரி
கேள்வி 2.
உரத்த ஓசைகளைத் தவிர்க்கவும்.
விடை :
சரி
கேள்வி 3.
மூக்கினுள் ஏதேனும் ஒரு பொருளை நுழைத்து சுத்தம் செய்யாதீர்கள்.
விடை :
சரி
கேள்வி 4.
சுகாதாரமற்ற நாக்கு, நோய்களையும், வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்.
விடை :
சரி
கேள்வி 5.
தோலை அழுக்கான துணியால் இதமாகத் துடைத்து உலர்த்தலாம்.
விடை :
தவறு
பக்கம் 96:
அம்மா : ………….. என்ன பெயர்?
ஜனனி : மறைமுக உறுப்புகள்
ஜனனி : புரிந்தது அம்மா. நம்மை சுத்தப்படுத்தும் போதோ, உடல் நலத்தைப் பரிசோதிக்கும்போதோ அன்றி நம் மறைமுக உறுப்புகளைப் பிறர் பார்ப்பதோ தொடுவதோ தவறான செயலாகும். அத்தகைய செயல் ஒரு போதும் நல்ல செயல் ஆகாது.
அம்மா : நன்று. கை குலுக்குதல் போன்று சில தொடுதல்கள் நல்லவை மற்றும் பாதுகாப்பானவை. பிறரை இடிப்பது போன்ற சில தொடுதல்கள் தவறானவை. நாம் பிறரை இடிக்கலாமா?
ஜனனி : இடிக்கக் கூடாது.
பக்கம் 97:
ஜனனி : சரிம்மா, யாராவது என்னைத் தொடும்போது எனக்குப் பிடிக்கவில்லை என்றால் நான் சத்தமாக தொடாதே! என்று கூச்சலிட்டு விட்டு, அந்த இடத்திலிருந்து ஓடி விடுகிறேன்.
ஜனனி : எனக்கு சரியான உதவி கிடைக்கும் வரை, நான் நம்பும் பெரியவர்களிடம் அது பற்றி கூறிக்கொண்டே இருப்பேன்.
பக்கம் 99:
பொருத்துக. (விடை):
விடை :
பக்கம் 101:
உடல்திறன் சார்ந்த சொற்களைக் கண்டறிந்து வட்டமிடுக. (உறக்கம், ஆற்றல், நீச்சல், விளையாடு, யோகா, ஓடுதல், நடத்தல்)
விடை :
மதிப்பீடு:
அ. கோடிட்ட இடங்களை நிரப்புக.
கேள்வி 1.
நாம் வெளியில் சென்று ______________ (விளையாடும் முன் / விளையாடிய பின்) கைகளைக் கழுவ வேண்டும்.
விடை :
விளையாடிய பின்
கேள்வி 2.
குடற்புழுக்கள் ___________ (இரத்த சோகை / சளி) யை உண்டாக்கும்.
விடை :
இரத்த சோகை
கேள்வி 3.
_______________ (பழங்கள் / அடைக்கப்பட்ட உணவுகள்) உண்பது உடலுக்கு நல்லது.
விடை :
பழங்க ள்
கேள்வி 4.
_______________ (நொறுக்குத் தீனிகள் உண்ணுதல் / உடற்பயிற்சி செய்தல்) மூளையின் செயலாற்றலை அதிகரிக்கும்.
விடை :
உடற்பயிற்சி செய்தல்
கேள்வி 5.
ஒருவரது தொடுதல் உன்னை எரிச்சலடையச் செய்தால் அது ____________ (நல்ல தொடுதல் / தீய தொடுதல்)
விடை :
தீய தொடுதல்
கேள்வி 6.
உடற்குறைபாடு உடையோரைக் குறிக்கம் சொல் ____________ (ஊனமுற்றோர் / மாற்றுத்திறனாளிகள்)
விடை :
மாற்றுத்திறனாளிகள்
ஆ. சரியா? தவறா? எனக் கூறுக.
கேள்வி 1.
கைகளைக் கழுவ சோப்பைப் பயன்படுத்த வேண்டும்.
விடை :
சரி
கேள்வி 2.
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் காலரா பரவும்.
விடை :
சரி
கேள்வி 3.
குளிப்பதால் இரத்த ஓட்டம் குறையும்.
விடை :
தவறு
கேள்வி 4.
மாற்றுத் திறனாளிகளிடம் பரிதாபம் கொள்ள வேண்டும்.
விடை :
தவறு
கேள்வி 5.
காதுகளை சுத்தம் செய்ய எப்போதும் காது குடைவிகளைப் பயன்படுத்த வேண்டும்.
விடை :
தவறு
இ. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்க.
கேள்வி 1.
திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
விடை :
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் நிலம் மாசுபடுகிறது. கிருமிகள் பெருக்கமடைகின்றன. காலரா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவுகின்றன.
கேள்வி 2.
குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை?
விடை :
குளிப்பது,
- உடலை சுத்தம் செய்கிறது.
- அழுக்கையும், நாற்றத்தையும் போக்குகிறது.
- நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.
- இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
கேள்வி 3.
தொடுதலின் வகைகளை எழுதுக.
விடை :
- நல்ல தொடுதல்கள்
- தீய தொடுதல்கள்
கேள்வி 4.
உனது பாதுகாப்பு வட்டத்தில் உள்ள நபர்கள் யாவர்?
விடை :
அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, சகோதரி, சகோதரன், ஆசிரியர்.
கேள்வி 5.
நம் உடலில் உள்ள புலனுறுப்புகளின் பெயர்களை எழுதுக.
விடை :
கண், மூக்கு, காது, நாக்கு, தோல்.
ஈ. வாக்கியங்களை வரிசைப்படுத்துக.
(முதல் மற்றும் இறுதி வாக்கியங்கள் சரியான வரிசையில் உள்ளன)
- உனது கைகளை நனைத்து, சோப்பு போடவும்.
- விரல் நுனிகளைத் தேய்க்கவும்.
- விரல்களைக் கோர்த்தவாறு இரு கைகளையும் தேய்க்க வும்.
- ஒவ்வொரு கையின் பின்புறத்தையும் மற்ற கையால் தேய்க்கவும்.
- உள்ளங்கைகளைத் தேய்க்கவும்.
- ஒவ்வொரு விரலின் பின்புறத்தையும் தேய்க்கவும்.
- கட்டை விரல்களையும், மணிக்கட்டுகளையும் தேய்த்து, இரு கைகளையும் நீரால் கழுவவும்.
விடை:
- உனது கைகளை நனைத்து, சோப்பு போடவும்.
- உள்ளங்கைகளைத் தேய்க்கவும்.
- ஒவ்வொரு கையின் பின்புறத்தையும் மற்ற கையால் தேய்க்க வும்.
- விரல்களைக் கோர்த்தவாறு இரு கைகளையும் தேய்க்க வும்.
- ஒவ்வொரு விரலின் பின்புறத்தையும் தேய்க்கவும்.
- விரல் நுனிகளைத் தேய்க்கவும்.
- கட்டை விரல்களையும், மணிக்கட்டுகளையும் தேய்த்து, இரு கைகளையும் நீரால் கழுவவும்.
உ. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க..
கேள்வி 1.
எப்பொழுதுதெல்லாம் நாம் கைகளைக் கழுவ வேண்டும்?
விடை :
நாம் விளையாடி முடித்த பின் நமது கைகளில் வியர்வையும் அழுக்கும் சேர்ந்திருக்கும். எனவே விளையாடி முடித்த பின்னரும் உணவை உண்ணும் முன்னும் கைகளை சோப்புப் போட்டு சுத்தமாகக் கழுவ வேண்டும். ஒவ்வொரு முறையும் சாப்பிடும் முன் கைகளை கழுவிக் கொள்வது அவசியம் ஆகும்.
கை கழுவுவதால் கிருமிகள் அழிக்கப்படுகின்றன அல்லது வெளியேற்றப்படுகின்றன. வயிற்றுப்போக்கு தவிர்க்கப்படுகிறது. கண் தொற்று, சுவாசத் தொற்று போன்ற ஆபத்துகள் குறைகின்றன.
கேள்வி 2.
உனது பாதுகாப்பு வட்டத்திற்குள் இல்லா ஒருவர் உன்னைத் தொட்டால், நீ என்ன செய்வாய்?
விடை :
நமது பாதுகாப்பு வட்டத்தில் இல்லாத ஒருவர் நம்மைத் தொட்டால் அவரிடம் தொடாதே’ என்று நாம் கூற வேண்டும். மீண்டும் அவர் தொட்டால் தொடாதே’ என்று கூச்சலிட்டு விட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும். நாம் நம்பும் பெரியவர்களிடம் இது பற்றிக் கூற வேண்டும். சரியான உதவி கிடைக்கும் வரை கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.
கேள்வி 3.
நமது தோலை எவ்வாறு பாதுகாக்கலாம்?
விடை :
- எப்போதும் மென் சோப்பையே பயன்படுத்தவும்.
- தோலை உலர்வாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ளவும்.
- சுத்தமான துணியைக் கொண்டு தோலை இதமாகத் துடைத்து உலர்த்தவும்.
- தோலில் அரிப்பு, காயம் அல்லது தொற்று ஏற்பட்டால் மருத்துவரிடம் காண்பிக்கவும்.
கேள்வி 4.
குடற்புழுக்கள் தோன்றக் காரணங்கள் யாவை?
விடை :
திறந்த வெளியில் மலம் கழிப்பதால் குடற்புழுக்கள் பரவுகின்றன. இவை குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இரத்த சோகையை உண்டாக்குகின்றன. குடற்புழுக்களைத் தவிர்க்க நாம் கழிவறையைப் பயன்படுத்த வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிக்கக் கூடாது. கழிவறையைப் பயன்படுத்திய பின் கைகளை சோப்புப் போட்டு நன்கு கழுவ வேண்டும்.
கேள்வி 5.
மாற்றுத் திறனாளிகளுக்கு நீ எவ்வாறு உதவுவாய்?
விடை :
- முதலில், அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறதா என்று கேட்கவும். அவர்கள் கூறுவதற்கேற்ப நடந்துகொள்ளவும்.
- அவர்களிடம் தெளிவாகப் பேசவும், அவர்களது பேச்சை ஆழ்ந்து கவனிக்கவும்.
- அவர்களிடம் நேரடியான சொற்களைப் பயன்படுத்தவும்.
- பட்டப் பெயர்களிட்டு அழைத்து அவர்களைக் கேலி செய்ய வேண்டாம்.
- மாற்றுத் திறனாளிகளின் உபகரணங்கள் மீது எச்சரிக்கையாக இருக்கவும். அவற்றுக்கு சேதத்தை ஏற்படுத்திவிடக் கூடாது.
ஊ. செயல்திட்டம்.
கேள்வி 1.
தன் சுத்தம், உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்த பழமொழிகளை எழுதிவரவும்.
விடை :
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
சுத்தம் சுகம் தரும்.
நொறுங்கத் தின்றால் நூறு வயது.
அளவுக்கு அதிகமானால் அமிழ்தமும் நஞ்சு.
“நடை, நோய்க்குத் தடை.
சுவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும்.