Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 12th Maths Guide Pdf Chapter 5 இரு பரிமாண பகுமுறை வடிவியல் – II Ex 5.3 Textbook Questions and Answers, Notes.
TN Board 12th Maths Solutions Chapter 5 இரு பரிமாண பகுமுறை வடிவியல் – II Ex 5.3
பின்வரும் சமன்பாடுகளிலிருந்து அவற்றின் கூம்பு வளைவு வகையை கண்டறிக.
கேள்வி 1.
2x2 – y2 = 7
தீர்வு:
2x2 – y2 = 7
இங்கு A = 1, C = -1, F = -7
இங்கு A ≠ C மற்றும் A மற்றும் C ஒன்றுக் கொன்று எதிர்குறிகளை கொண்டுள்ளன. ஆகையால் கொடுக்கப்பட்ட சமன்பாடு அதிபர வளையத்தை குறிக்கிறது.
கேள்வி 2.
3x2 + 3y2 – 4x + 3y + 10 = 0
தீர்வு:
3x2 + 3y2 – 4x + 3y + 10 = 0
இங்கு A = 3, C = 3, D = -4, E = 3 மற்றும் F = 10
இங்கு A = C மற்றும் xy உறுப்பு இல்லை.
ஆகையால் கொடுக்கப்பட்ட சமன்பாடு வட்டத்தை குறிக்கிறது.
கேள்வி 3.
3x2 + 2y2 = 14
தீர்வு:
3x2 + 2y2 = 14
இங்கு A = 3, C = 2 மற்றும் F = -14
A ≠ C மற்றும் A மற்றும் C ஒரே குறியை கொண்டுள்ளன. ஆகையால் கொடுக்கப்பட்ட சமன்பாடு நீள்வட்டத்தை குறிக்கிறது.
கேள்வி 4.
x2 + y2 + x – y = 0
தீர்வு:
x2 + y2 + x – y = 0
இங்கு A = 1, C = 1, D = 1, E = -1
இங்கு A = C மற்றும் .xy உறுப்பு இல்லை.
ஆகையால் சமன்பாடு வட்டத்தை குறிக்கிறது.
கேள்வி 5.
11x2 – 25y2 – 44x + 50y – 256 = 0
தீர்வு:
11x2 – 25y2 – 44x + 50y – 256 = 0
A = 11, C = -25, D = -44, E = 50, மற்றும் F = -256
இங்கு A ≠ C மற்றும் A மற்றும் C ஒன்றுக் கொன்று எதிரான குறிகளை கொண்டுள்ளன. ஆகையால் கொடுக்கப்பட்ட சமன்பாடு அதிபர
வளையத்தை குறிக்கிறது.
கேள்வி 6.
y2 + 4x + 3y + 4 = 0
தீர்வு:
y2 + 4x + 3y + 4 = 0
இங்கு A = 0, C = 1, D = 4, E = 3, F = 4 B = 0 மற்றும் A அல்லது C ஆனது 0 ஆகும். ஆகையால் கொடுக்கப்பட்ட சமன்பாடு பரவளையத்தை குறிக்கிறது.