Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5 Pdf, Tamil Nadu 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

நேரம் : 3.00 மணி
மதிப்பெண்கள் : 100

(குறிப்புகள்:

  • இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
  • பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
  • வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
  • வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
    ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
  • வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.

பகுதி – 1 (மதிப்பெண்கள்: 15)

(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]

(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன)

Question 1.
பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
(அ) வானத்தையும் பாட்டையும்
(ஆ) வானத்தையும் புகழையும்
(இ) வானத்தையும் பூமியையும்
(ஈ) வானத்தையும் பேரொலியையும்
Answer:
(ஈ) வானத்தையும் பேரொலியையும்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 2.
” மருந்தே ஆயினும் விருந்தொடு உண்’ என்னும் தொடர் இடம் பெற்ற நூல்……
(அ) கொன்றை வேந்தன்
(ஆ) குறுந்தொகை
(இ) திருக்குறள்
(ஈ) நற்றிணை
Answer:
(இ) திருக்குறள்

Question 3.
“இங்கு நகரப் பேருந்து நிற்குமா” என்று வழிப்போக்கர் கேட்டது………….. வினா ”அதோ அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது ……….. விடை
(அ) ஐயவினா, வினா எதிர்வினாதல்
(ஆ) அறிவினா, மறைவிடை
(இ) அறியாவினா, சுட்டு விடை
(ஈ) கொளல்வினா, இனமொழி விடை
Answer:
(இ) அறியாவினா, சுட்டு விடை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 4.
தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி………
(அ) ஜால்ரா
(ஆ) பறை
(இ) உறுமி
(ஈ) நாகசுரம்
Answer:
(இ) உறுமி

Question 5.
வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல்’ – இவ்வடி குறிப்பிடுவது …………
(அ) காலம் மாறுவதை
(ஆ) வீட்டைத் துடைப்பதை
(இ) இடையறாது அறப்பணி செய்தலை
(ஈ) வண்ணம் பூசுவதை
Answer:
(இ) இடையறாது அறப்பணி செய்தலை

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 6.
காற்றின் மெல்லிய ……….. பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான ………. பூக்களை மாலையாக்குகிறது. தொழிற்பெயர்களைப் பொருத்தித் தொடர்களை முழுமை செய்க.
(அ) தொடுத்தல், எடுத்தல்
(ஆ) தொடுதல், தொடுத்தல்
(இ) எடுத்தல், தொடுதல்
(ஈ) தொடுத்தல், தொடுதல்
Answer:
(ஆ) தொடுதல், தொடுத்தல்

Question 7.
வாய்மையே மழைநீராகி ‘ இத்தொடரில் வெளிப்படும் அணி.
(அ) உவமை
(ஆ) தற்குறிப்பேற்றம்
(இ) உருவகம்
(ஈ) தீவகம்
Answer:
(இ) உருவகம்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 8.
”சங்க இலக்கியங்கள் ஐந்திணைகளுக்குமான ஒழுக்கங்களை இருதிணைகளும் பயன்பெற எடுத்தியம்புகின்றன” – இத்தொடரில் அமைந்துள்ள தொகைச் சொற்களின் பொருத்தமான விரியைக் கண்டறிக.
(அ) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை – நல்வினை, தீவினை
(ஆ) குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை – உயர்திணை, அஃறிணை
(இ) குறிஞ்சி, முல்லை , நெய்தல், பாலை, மருதம் – அறம், பொருள், இன்பம்
(ஈ) குறிஞ்சி, மலை, முல்லை , காடு, மருதம், வயல், நெய்தல், கடல் – பனை, திணை
Answer:
(ஆ) குறிஞ்சி, முல்லை , மருதம், நெய்தல், பாலை – உயர்திணை, அஃறிணை

Question 9.
‘கேள்வியினான்’ என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு ….
(அ) வினையாலணையும் பெயர்
(ஆ) தொழிற்பெயர்
(இ) வினைத்தொகை
(ஈ) பண்புத்தொகை
Answer:
(அ) வினையாலணையும் பெயர்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 10.
கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள் – இத்தொடர்………….
(அ) வினாத்தொடர்
(ஆ) தனித்தொடர்
(இ) செய்தித்தொடர்
(ஈ) கலவைத் தொடர்
Answer:
(இ) செய்தித்தொடர்

Question 11.
”காய்ந்த இலையும் காய்ந்த தோகையும்” நிலத்துக்கு நல்ல உரங்கள் – இத்தொடரில் அடிக் கோடிட்ட பகுதி குறிப்பிடுவது …..
(அ) இலையும் சருகும்
ஆ) தொகையும் ஓலையும்
(இ) தாளும் ஓலையும்
(ஈ) சருகும், சண்டும்
Answer:
(ஈ) சருகும், சண்டும்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14. 15) விடை தருக.
”நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர் செல், நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை”

Question 12.
இப்பாடலின் ஆசிரியர்…………
(அ) ஒளவையார்
(ஆ) நப்பூதனார்
(இ) நல்வேட்டனார்
(ஈ) பெருங்கௌசிகனார்
Answer:
(ஆ) நப்பூதனார்

Question 13.
இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்……….
(அ) மலைபடுகடாம்
(ஆ) பரிபாடல்
(இ) முல்லைப்பாட்டு
(ஈ) நற்றிணை
Answer:
(இ) முல்லைப்பாட்டு

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 14.
‘நனந்தலை உலகம்’ – இத்தொடரின் பொருள்?
(அ) சிறிய உலகம்
(ஆ) நனைந்த உலகம்
(இ) சுற்றும் உலகம்
(ஈ) அகன்ற உலகம்
Answer:
(ஈ) அகன்ற உலகம்

Question 15.
பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்களைக் குறிப்பிடுக.
(அ) பாடு இமிழ், கோடுகொண்டு
(ஆ) கோடுகொண்டு, பெரும்பெயல்
(இ) நனந்தலை, வலம்புரி
(ஈ) பொறித்த, பொழிந்த
Answer:
(அ) பாடு இமிழ், கோடுகொண்டு

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

பகுதி – II (மதிப்பெண்கள்: 18)

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4x 2 = 8]

Question 16.
விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க.
(அ) ஒரு நாட்டின் வளத்திற்குத் தக்கபடியே, அந்நாட்டு மக்களின் அறிவொழுக்கங்களும் அமைந்திருக்கும்.
(ஆ) 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது. விடை
Answer:
(அ) ஒரு நாட்டின் அறவொழுக்கம் எப்படி அமைதல் வேண்டும்?
(ஆ) கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் எப்போது இணைந்தது?

Question 17.
யாருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும் எனத் திருக்குறள் குறிப்பிடுகிறது?
Answer:
நடுநிலையாகக் கடமை தவறாமல் இரக்கம் காட்டுபவருக்கு இவ்வுலகமே உரிமை உடையதாகும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 18.
‘நமக்கு உயிர் காற்று. காற்றுக்கு வரம் மரம் – மரங்களை வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்’ – இது போன்ற உலக காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
Answer:

  • உணவு மனிதனுக்கு ஆதாரம்
    மரம் மண்ணுக்கு ஆதாரம்
  • மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்.

Question 19.
“மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே” – ஐம்பெருங்காப்பியங்களுள் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள இருகாப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
Answer:
சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 20.
மொழிபெயர்ப்புக் குறித்து மணவை முஸ்தபா குறிப்பிடுவது யாது?
Answer:
”ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு” என்கிறார் மணவை முஸ்தபா.

Question 21.
‘கண்’ என முடியும் திருக்குறளை எழுதுக.
Answer:
பண் என்னாம் பாடற் கியைபின்றேல் கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 x 2 = 10]

Question 22.
அண்ணன் நேற்று வீட்டிற்கு வந்தது. அண்ணன் புறப்படும் போது அம்மா வழியனுப்பியது. வழுவை வழாநிலையாக மாற்றுக)
Answer:
அண்ணன் நேற்று வீட்டிற்கு வந்தான். அண்ணன் புறப்படும் போது அம்மா வழியனுப்பினார்கள்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 23.
பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.
Answer:
தோற்பாவை, விருது, தோற்பவை, விருந்து
(அ) வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும் – இதைத் தத்துவமாய்த் தோற்பாவைக் கூத்து சொல்லும்.
(ஆ) தெருக்கூத்தில் நடிகருக்குக் கைத்தட்டலே விருந்து அதில் வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் விருது.

Question 24.
கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
Answer:
சிறு – சீறு
வயலில் உள்ள சிறு பாம்பாயினும் சீறும்.

Question 25.
கலைச்சொற்கள் தருக
Answer:
(அ) Modern Literature – நவீன இலக்கியம்
(ஆ) Epic Literature – காப்பிய இலக்கியம்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 26.
தொழிற்பெயருக்கும், வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டினை எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5 image - 1

Question 27.
பொருத்தமான நிறுத்தக் குறிகளை இடுக.
Answer:
சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை கொல்லி மலையை வென்றவர்கள் கொல்லி வெற்பன் எனவும் பிற மலைப்பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர் இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

விடை : சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன், மலைய குறிப்பிடத்தக்கவை. கொல்லி மலையை வென்றவர்கள் கொல்லி வெற்பன்’ எனவும், பிற மலைப்பகுதிகளைவென்றவர்கள் ‘மலையமான்’ எனவும் பெயர் சூட்டிக் கொண்டனர். இதற்குச் சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 28.
அறியேன் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அறியேன் = அறி + ய் + ஆ + ஏன்
அறி – பகுதி
ய் – உடம்படுமெய் சந்தி
ஆ – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது
ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

பகுதி – III (மதிப்பெண்க ள்: 18)

பிரிவு – 1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 29.
நீவிர் அறிந்த செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு மூன்றினை எழுதுக.
Answer:

  • செயற்கை நுண்ணறிவைக் கொண்ட இயந்திரம் மனிதர்களுடன் சதுரங்கம் முதலான விளையாட்டுகளை விளையாடுகிறது.
  • கண் அறுவை மருத்துவம் செய்கிறது.
  • சமைக்கிறது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 30.
ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் கூறு ஒன்றைத் தர்க்கத்திற்கு அப்பால் கதை மாந்தர் வாயிலாகக் குறிப்பிடுக.
Answer:

  • தோல்வி நிச்சயம் என்ற மனப்பான்மையுடன் போன நான் வழக்கத்திற்கு மாறாக அன்று – தோற்றுப்போனேன்.
  • தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்கு தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டது.
  • பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டதில் நாலணாவில் அந்த நல்ல நாளைக் கொண்டாடிவிட்ட நிறைவு பிறந்தது.
  • காலணாதான் கடன் தரலாம் தருமத்தைத் தரமுடியுமா? தருமத்தை யாசித்துத் தந்தால்தான் பெற முடியும்.
  • ஒருவனுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதுதான் கிடைக்கும் நாம் எப்படி முயற்சி செய்தாலும் நமக்குக் கிடைப்பது தான் கிடைக்கும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
தம் வீட்டிற்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று உண்ண உணவும் இருக்க இடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். அதனால் தான் ‘விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் அன்றே கூறியுள்ளார்.

(அ) விருந்தினர் என்போர் யாவர்?
Answer:
விருந்தினர் என்றால் உறவினர் என்று இக்காலத்தினர் கருதுகின்றனர். உறவினர் வேறு, விருந்தினர் வேறு. முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர்.

(ஆ) விருந்து குறித்து தொல்காப்பியர் கூறியது யாது?
Answer:
‘விருந்தே புதுமை’ என்று தொல்காப்பியர் அன்றே கூறியுள்ளார்.

(இ) இவ்வுரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
Answer:
விருந்தோம்பல்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

பிரிவு – 2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [2 x 3 = 6]

Question 32.
“உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது” இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
காலக்கணிதம் என்னும் நூலின் ஆசிரியர் கண்ணதாசன் அவர்கள் அமைந்த பாடல் வரிகள். விளக்கம் :
நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஒருபோதும் நம் உடலைக் காயப்படுத்துவது கிடையாது.

பாடலின் பொருள் :
மாற்றம் எனது மானிடத் தத்துவம். மாறுகின்ற உலகின் மகத்துவம் அறிவேன். எவை நன்மை, எவை தீமை என்பதை நான் அறிவேன். தலைவர்கள் மாறலாம். அவைகள் மாறலாம். தத்துவம் மட்டும் அட்சய பாத்திரம் ஆகும். எடுத்துக் கொள்பவர் எடுத்துக் கொள்ளட்டும். குரைப்போர் குரைத்துக் கொள்ளட்டும். வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஒருபோதும் நம் உடலைக் காயப்படுத்துவது கிடையாது. நானே தொடக்கமாகவும், நானே முடிவாகவும், நான் கூறுவதே நாட்டின் சட்டமாகும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 33.
வைத்தியநாதபுரி முருகன், அணிந்திருக்கும் அணிகலன்களுடன் குழந்தையாகச் செங்கீரை ஆடிய நயத்தினை விளக்குக.
Answer:

  • திருவடியில் அணிந்த சிறு செம்பொன்னால் ஆன கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடட்டும்.
  • இடையில் அரைஞாண் மணியோடு ஒளிவீசுகின்ற அரைவடங்கள் ஆடட்டும்.
  • பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறுவயிறு சரிந்தாடட்டும். பட்டம் கட்டிய நெற்றியில் விளங்குகின்ற பொட்டின் வட்டி வடிவான சுட்டி பதிந்தாடட்டும்.
  • கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழைகளும் அசைந்தாடட்டும்.
  • உச்சிக் கொண்டையும் அதில் சுற்றிக் கட்டப்பட்டுள்ள ஒளியுள்ள முத்துகளோடு ஆடட்டும்.
  • தொன்மையான வைத்தியநாதபுரியில் எழுந்தருளிய முருகனே! செங்கீரை ஆடி அருள்க!
  • இவற்றுடன் அழகிய பவளம் போன்ற திருமேனியும் ஆட, செங்கீரை ஆடுக.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
”நவமணி வடக்க யில்போல் ” எனத் தொடங்கும் தேம்பாவணிப் பாடல்.
Answer:
நவமணி வடக்க யில்போல்
நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர் அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம் கொல் என்று
ஒலித்து அழுவ போன்றே – வீரமாமுனிவர்

(அல்ல து)

“வாளால் அறுத்துச் சுடினும் எனத் தொடங்கும் பெருமாள் திருமொழிப் பாடல்.
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ
ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே. – குலசேகராழ்வார்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

பிரிவு – 3

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]

Question 35.
”கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!” – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொகாநிலைத் தொடர் வகைகளை எழுதுக.
Answer:
அடுக்குத் தொடர், எழுவாய் தொடர், உரிச்சொல் தொடர்

Question 36.
‘பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5 image - 2

Question 37.
தன்மை அணி குறித்து எழுதுக.
Answer:
தன்மையணி :
எவ்வகைப்பட்ட பொருளாக இருந்தாலும் இயற்கையில் அமைந்த அதன் உண்மையான இயல்புத் தன்மையினைக் கேட்பவர்களின் மனம் மகிழுமாறு உரிய சொற்களை அமைத்துப் பாடுவது தன்மையணியாகும். இதனைத் தன்மை நவிற்சி அணி என்றும் கூறுவர். இவ்வணி நான்கு வகைப்படும். பொருள் தன்மையணி, குணத் தன்மையணி, சாதித் தன்மையணி, தொழிற் தன்மையணி என்பதாகும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

(எ.கா.) மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் – வையைக் கோன்
கண்டளவே தோற்றான், அக்காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்

சிலம்பு – வழக்குரை காதை வெண்பா

பாடலின் பொருள்: உடம்பு முழுக்கத் தூசியும் விரித்த கருமையான தலைமுடியும் கையில் ஒற்றைச் சிலம்போடு வந்த தோற்றமும் அவளது கண்ணீரும் கண்ட அளவிலேயே வையை நதி பாயும் கூடல் நகரத்து அரசனான பாண்டியன் தோற்றான். அவளது சொல், தன் செவியில் கேட்டவுடன் உயிரை நீத்தான். அணிப்பொருத்தம். கண்ணகியின் துயர் நிறைந்த தோற்றத்தினை இயல்பான உரிய சொற்களின் மூலம் கூறியமையால் இது தன்மை நவிற்சியணி எனப்படும்.

பகுதி – IV (மதிப்பெண்க ள் : 25) 

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 x 5 = 25]

Question 38.
(அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.
Answer:
சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகள் :

  • புகார் நகர மருவூர்ப்பாக்கத்தின் வணிக வீதிகளில் வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி, குளிர்ந்த மணச்சாந்து.
  • பூ, நறுமணப் புகைப்பொருள்கள், அகில் முதலான மணப்பொருள்கள் விற்பவர்கள் வீதிகளில் வணிகம் செய்து கொண்டிருக்கின்றனர்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

கூலக்கடைத் தெருக்கள்:

  • இங்குப் பட்டு, பருத்தி நூல், முடி இவற்றினைக் கொண்டு அழகாகப் பின்னிக்கட்டும் கைத்தொழில் வல்லுநரான நெசவாளர் வாழும் வீதிகள் உள்ளன.
  • இங்குப் பட்டும் பவளமும், சந்தனமும் அகிலும், முத்தும் மணியும் பொன்னும் அளக்க முடியாத அளவிற்குக் குவிந்து கிடக்கும் வளம் நிறைந்த அகன்ற வணிக வீதிகளும் உள்ளன.
  • மேலும் இவ்வீதிகளில் வேறு பலப்பல பண்டங்களின் விற்பனையும் நடைபெறுகின்றது.
  • எட்டுவகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் உள்ளன.

மருவூர்ப்பாக்கத்தின் வணிகம்:

  • மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில், பிட்டு வணிகம் செய்பவரும் அப்பம் சுடுபவரும் கள் விற்கும் வலைச்சியரும் மீன் விற்கும் பரதவரும் உள்ளனர்.
  • வெண்மையான உப்பு விற்கும் உமணரும் வெற்றிலை விற்பவரும் ஏலம் முதலான ஐந்து நறுமணப்.
  • பொருள் விற்பவரும் பல வகையான இறைச்சிகள் விற்பவரும் எண்ணெய் வணிகரும் இங்கு வணிகம் செய்கின்றனர்.
  • இவற்றுடன் அத்தெருக்களில் பல்வகைப் பொருள்களை விற்கின்ற கடைகளும் உள்ளன. Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5
  • வெண்கலம், செம்புப் பாத்திரங்கள் செய்வோர், மரத்தச்சர், இரும்புக்கொல்வர், ஓவியர், மண் பொம்மைகள் செய்பவர், சிற்பிகள் ஆகியோர் உள்ளனர்.
  • பொற்கொல்லர், இரத்தின் வேலை செய்பவர், தையற்காரர், தோல் பொருள் தைப்பவர், துணியாலும் கட்டைகளாலும் பொம்மைகள் செய்பவர் ஆகியோர் உள்ளனர்.
  • இவ்வாறாகப் பழுதின்றிக் கைத்தொழில் பல செய்யும் மக்கள் வாழும் பகுதிகள் இங்கு நிறைந்துள்ளன.
  • குழலிலும் யாழிலும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு இசைகளைக் (ஸ, ரி, க, ம, ப, த.
  • நி என்னும் ஏழு சுரங்களை குற்றமில்லாமல் இசைத்துச் சிறந்த திறமையைக் காட்டும் பெரும்பாணர்களின் இருப்பிடங்களும் உள்ளன. Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5
  • இவர்களுடன் மருவூர்ப்பாக்கத்தின் தெருக்களில் சிறுசிறு கைத்தொழில் செய்வோர், பிறருக்கு ஏவல் செய்வோர் வாழும் இடங்களும் உள்ளன.
  • இவை அனைத்தும் குற்றமின்றிச் சிறப்புடன் அமைந்து விளங்கப் பரந்து கிடந்தன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

இக்கால வணிக வளாகங்கள் அங்காடிகள் :

  • இக்கால வணிக வளாகங்கள், அங்காடிகள் ஒப்பனை செய்யப்பட்டு – வணிகருக்கும் மக்களுக்குமான உறவைக் குறைத்து வருகின்றன. மனதை மயக்கும் வகையில் இயங்குகிறது.
  • இக்காலத்தில் வியாபாரத்திற்கும், பணம் விளம்பரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  • மனித மாண்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை. இக்கால வணிக வளாகங்களில் ஆடை முதல் ஆபரணங்கள் வரை, குண்டூசி முதல் கடப்பாரை வரை.
  • தானியங்கள் முதல் உணவுப்பண்டங்கள், வரை விற்பனை செய்யப்படுகின்றன.
  • பாத்திரங்கள் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்களின் கிடங்குகள், இசைக்கருவிகள்.
  • விற்பனையிடங்கள் போன்றவை எங்கும், பரந்து காணப்படுகின்றன.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

(அல்லது)
(ஆ) ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. இன்றைய நிலையில் ஆற்றுப்படுத்துதல் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

  • ஆற்றுப்படுத்துதல் என்பது வள்ளலை நாடி எதிர்வருபவர்களை அழைத்து யாம் இவ்விடத்தைச் சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம்.
  • நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை ஆகும்.
  • ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக இருக்கிறது.
  • தன்னிடம் இல்லை என்றோ அல்லது தெரியாது என்றோ யார் வந்தாலும் அவர்களுக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கிறது.
  • அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களை வழிகாட்டுகின்றனர். அன்றைய ஆற்றுப்படுத்துதல் இன்றைய வழிகாட்டுதலாக மாறியுள்ளது.
  • இது ஒவ்வொரு நிலையிலும் மாற்றம் அடைந்துள்ளது. உதவி தேவைப்படுபவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது.
  • இதுவே இன்றைய ஆற்றுப்படுத்துதல் ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 39.
(அ) உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து சொல்வோருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படும் இடையூறுகளைக் குறிப்பிட்டு, புதிய மின்விளக்குகள் பொருத்தும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம்
எழுதுக.

அனுப்புநர்
பொது மக்கள்,
பூந்தோட்டம்,
விழுப்புரம் – 5.

பெறுநர்
மின்வாரிய இயக்குநர்,
மின்வாரிய அலுவலகம்,
பூந்தோட்டம்,
விழுப்புரம்-5.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

ஐயா,
பொருள்: தெரு விளக்கு பழுதுநீக்கித் தருமாறு விண்ணப்பம் அளித்தல் – சார்பு. வணக்கம். எங்கள் பகுதியில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் வாழ்கிறார்கள். தெருக்களில் விளக்குகள் ஒளிவழங்குவது இல்லை. அதனால் தெருக்களில் நாய்கள் படுத்து உறங்குவது தெரியாமல் மிதித்து விடுகின்றனர். அதனால் நாய்கள் தெரு வழியே செல்வோரைக் கடித்துவிடுகின்றன. நாய் கடியினால் வருந்துவோர்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது.

தெரு விளக்குகள் இயங்காமையால் தெருவில் நடந்து செல்வோர், விபத்துக்கும் ஆளாகின்றனர். தவிர முகமூடிக் கொள்ளையர் தொடர்ச்சியாக வீடுகளில் புகுந்து திருடிச் செல்கின்றனர். உயிர்க் கொலையும் செய்கின்றனர். தெரு விளக்குகளை விரைவாகச் சீர்செய்து எங்கள் துன்பத்தைப் போக்க ஆவன செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

இங்ஙனம்,
உங்கள் உண்மையுள்ள,
பொதுமக்கள்

பூந்தோட்டம்,
4.4.2019.
உறைமேல் முகவரி

பெறுநர்
மின்வாரிய இயக்குநர்,
மின்வாரிய அலுவலகம்,
பூந்தோட்டம்,
விழுப்புரம் – 5.

(அல்லது)

(ஆ) “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பில், மாநில அளவில் நடத்தப்பெற்ற கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
எண், 20/3 மாடவீதி,
மதுரை,
5.5.2019

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

அன்புள்ள நவீன்குமார்,
நாங்கள் அனைவரும் இங்கு நலம். நீயும் உன் குடும்பத்தாரும் எப்படி இருக்கிறீர்கள்? சென்ற மாதம் தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற இலக்கிய மன்றக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு ”மரம் இயற்கையின் வரம்” என்ற தலைப்பில் நீ எழுதிய கட்டுரை அனைவரிடமும் இயற்கையைக் காப்பாற்ற வேண்டும், மரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தியுள்ளது. ஆகவே உன் ஈடுபாட்டைப் பார்த்து எனக்கும் கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் வருகிறது. பல போட்டிகளில் நீ பெற்ற பரிசுப்பொருள்கள் உன் வீட்டில் ஏராளமாகக் குவிந்து கிடக்கின்றன. அனைத்தையும் பார்த்து நான் பலமுறை வியந்துள்ளேன்.

உன்னை நண்பனாக அடைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நீ இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன். நீ அடுத்தமுறை போட்டியில் கலந்து கொள்ளும் போது எனக்குத் தெரியப்படுத்து. நான், நீ எவ்வாறு போட்டிக்குத் தயாராகிறாய் என்பதை அறிந்து கொள்கிறேன். உன் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

இப்படிக்கு,
உன் அன்புள்ள,
ப. அன்பரசன்.

உறைமேல் முகவரி
பெறுநர்
க. நவீன்குமார்,
5. காளையார் கோவில்,
முத்தமிழ் நகர்,
ஈரோடு – 638001

Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக.
Answer:
Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5 image - 3
வறியவர்க்கு ஒன்று ஈவது ஈகை
மறித்துக் கொடுக்காமல் தடுப்பது தீமை
முடிந்ததைக் கொடுப்பது மேதை
வாடி நிற்கும் வறியவர்க்கு கொடுப்பது புகழ்
கொடுப்பதை தடுத்து நிறுத்துவது இகழ்

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 41.
தட்டச்சர் பணிவாய்ப்பு வேண்டித் தன்விவரப் பட்டியல் ஒன்றை நிரப்புக
Answer:
அனுப்புநர்
கவிமணி.
63, மறைமலை அடிகள் தெரு
மேலூர்
மதுரை – 600 008.

பெறுநர்
சாரதா கல்வி நிலையம்.
மேலூர்.
மதுரை – 600008

ஐயா,
பொருள்: தட்டச்சர் பணி வேண்டி – விண்ணப்பம். தங்கள் அலுவலகத்தில் தட்டச்சர் பணிக்கான விண்ணப்பங்கள் வேண்டி நீங்கள் அறிவித்துள்ள செய்தியை 10.03.2019 அன்று வெளியான நாளிதழ் மூலம் அறிந்தேன். இந்தப் பணிக்கு நானும் விண்ணப்பம் கோருகிறேன்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

நான் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். மேலும், தட்டச்சு இயக்குவதற்கான அடிப்படைப் பயிற்சியும் பெற்றுள்மோன் அப்பணியில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளித்தால் என் பணியைச் சிறப்பாக செய்வதுடன் காத கல்வி நிலைய வளர்ச்சிக்கும் பாடுபடுவேன் என்று உறுதியளிக்கிறேன். எனது சான்றிதழ்களைத் தங்கள் பார்வைக்கு இத்துடன் அனுப்பியுள்ளேன்.

நன்றி

இங்ஙனம்.
தங்கள் உண்மையுள்ள
கவிமணி
மாதிரி வினாத்தாள் 1

இணைப்பு:

  • தன் விவரக் குறிப்பு.
  • கல்விச் சான்றிதழ்

தன் விவரப் பட்டியல்
பெயர் – கவிமணி
பிறந்த நாள் மற்றும் வயது – 10.06.2001; 18
பாலினம் – ஆண்
தந்தையின் பெயர் – மணி
முகவரி – 73, மறைமலை அடிகள் தெரு, மேலூர், மதுரை.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் – 450 / 500.
தாய்மொழி – தமிழ்
பயின்ற மொழி – தமிழ், ஆங்கிலம்
தட்டச்சு – தமிழ், ஆங்கிலம் (இளநிலைத் தட்டச்சர்)
கணினி – வேர்டு, பவர்பாயிண்ட், சி+++

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மையென உறுதி கூறுகிறேன். தங்கள் நிறுவனத்தில் தட்டச்சர் பணி தந்தால் என் பணியைச் சிறப்பாகச் செய்வேன் என உறுதி கூறுகிறேன்.

நன்றி,

இடம் : மதுரை
தேதி : 18.04.2019

இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள,
கவிமணி.

உறைமேல் முகவரி
பெறுநர்
சாரதா கல்வி நிலையம்,
மேலூர்,
மதுரை – 625 008.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 42.
(அ) தமிழகப் பாரம்பரிய கலைகளைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் மேலும் பரவலாக்கவும் நீங்கள் செய்யவிருப்பனவற்றை வரிசைப்படுத்தி எழுதுக.
Answer:
பிறந்தநாள் விழாக்களில் மயிலாட்டம் முதலான கலைகளை நிகழ்த்த முனைவேன் எங்கள் குடும்ப விழாக்களில் பொம்மலாட்டம் நிகழ்த்த ஏற்பாடு செய்வேன்.

  • கோவில் திருவிழாக்களில் ஒயிலாட்டம் முதலான கலைகளை நிகழ்த்தலாம்.
  • பள்ளி ஆண்டு விழாக்களில் கரகாட்டம் போன்றவற்றை நடத்த வேண்டும்.
  • திருமண விழாவில் தமிழகப் பாரம்பரியக் கலைகளை நிகழ்த்தலாம்.
  • தெருக்கூத்து, நாடகங்களில் தமிழர் பாரம்பரியக் கலைகளை அரங்கேற்றலாம்.
  • ஊர்த் திருவிழாக்களில் தாரை தப்பட்டை நிகழ்த்த ஏற்பாடு செய்யலாம்.

மொழிபெயர்க்க.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

(அ) The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers’ fragrance
fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

விடை தங்க நிற கதிர்களைக் கொண்ட கதிரவன் காலை எழுந்து இருளை அகற்றுகிறான். பால் போன்ற மேகங்கள் தன் ஓட்டத்தைத் தொடர்கின்றன. பல வண்ண பறவைகள் தன் காலை இன்னிசை பாடலை தொடங்குகின்றன. அழகிய பட்டாம் பூச்சிகள் பூக்களைச் சுற்றி நடனம் புரிகின்றன. பூக்களின் மணம் காற்றில் தவழ்கின்றன. மெதுவாக வீசும் காற்று எங்கும் இனிமையை நிரப்புகின்றது.

பகுதி – V (மதிப்பெண்கள் : 24) 

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]

Question 43.
(அ) சங்க இலக்கியங்களில் போற்றப்பட்ட அறங்களில் உம்மைக் கவர்ந்த இரண்டு அறங்களைக் குறிப்பிட்டு, அவை நடைமுறை வாழ்வில் பொருந்துவதை விளக்குக.
Answer:
அறத்தில் வணிக நோக்கம் கொள்ளாமை:
அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக்கூடாது என்பது சங்ககால மக்களின் கருத்தாக இருந்தது. இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்குக் கூடாது எனக் கூறப்பட்டது.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்”

புறம் எனச் சங்ககால வள்ளல்களில் ஒருவரான ஆய்பற்றி ஏணிச்சேரி முடமோசியார் குறிப்பிட்டுள்ளார். நோக்கமின்றி அறம் செய்வதே மேன்மை தருவது என்பது இதில் உணர்த்தப்பட்டுள்ளது.

அரசியல் அறம் :
மன்னர்களுடைய செங்கோலும் வெண்கொற்றக்குடையும் அறத்தின் குறியீடுகளாகப் போற்றப்பட்டன. அரசன் செங்கோல் போன்று நேரிய ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்பது பல பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலை பெருக்கி நிலவளம் கண்டு உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமையாகச் சொல்லப்பட்டது. குற்றங்களை.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

அறத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும் என்கிறார் ஊன் பொதிப் பசுங்குடையார். அரசன் அறநெறியில் ஆட்சி செய்வதற்கு அமைச்சரும் உதவினர். நன்றும் தீதும் ஆய்தலும், அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை என்கிறது மதுரைக்காஞ்சி செம்மை சான்ற காவிதி மாக்கள்’ என்று அமைச்சர்களை மாங்குடி மருதனார் போற்றுகிறார்.

(அல்லது)

(ஆ) மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலை சீவி
நடந்த இளந் தென்றலே – வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

– கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.

முன்னுரை :
இயற்கையின் கூறுகளில் காற்றின் பங்கு கூடுதலானது எங்கும் நிறைந்திருப்பது உயிர்களின் உயிர் மூச்சுக் காற்றைக் கண்களால் காண முடியாது. மெய்யால் மட்டுமே உணரக்கூடியது காற்று நம்மை மெல்லத் தொட்டுச் சென்றால் தென்றல் எனப்படுகிறது.

தென்றல் காற்று:
தெற்கிலிருந்து வீசுவதால் தென்றல் காற்று எனப்படுகிறது. மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல தடைகளைத் தாண்டி வருவதால் வேகம் குறைந்து இதமான இயல்பு கொள்கிறது. இந்த மென்காற்றை இளந்தென்றல் என்பர்.

இலக்கியத்தில் தென்றல்:
தென்றல் காற்று பலவித மலர்களின் நறுமணத்தை அள்ளி வரும் பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்து வருவதால் இளங்கோவடிகள் ” வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என நயம்பட உரைக்கிறார். பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது என்னும் சிற்றிலக்கியத்தில்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

“நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் சேர் பொருப்பிற்
செந்தமிழின் பின்னுதித்த தென்றலே “

என தென்றலை பெண்ணொருத்தி அன்போடு அழைக்கிறாள்.

கண்ணதாசனின் கவிதை நயம்:
முழுவதும் மலராத மலர் மணத்தையும் அழகையும் கூட்டி வைத்திருக்கும். அம்மலரைப்போல வளரும் கண்ணின் வண்ணமே எனவும் விடிந்தும் விடியாத குளிர்ந்த காலை நேரத்தில் தோன்றிய கலை அன்னமே எனவும், நதியில் விளையாடி கொடிகளில் பாய்ந்து தலைசீவி தவழ்ந்து நடந்து வருகின்ற இளம் தென்றலே எனவும் பொதிகை மலையில் அகத்தியரால் வளர்க்கப்பட்டு மதுரை தமிழ் சங்கங்களில் அழகாய் வளர்ந்த தமிழே எனவும் குழந்தையைக் கண்ணதாசன் பாடுகிறார்.

முடிவுரை:
இவ்வாறாக இலக்கியப் படைப்புகளிலும் திரையிசைப் பாடல்களிலும் தென்றல் காற்று இன்றளவும் நீங்கா இடம் பெற்றுள்ளது. மென்துகிலாய் உடல் வருடி மாயங்கள் செய்வது தென்றல் காற்றேயாகும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

Question 44.
(அ) கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய
கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளைக் குறிப்பிடுக.
Answer:
மேரியின் ஆர்வம்:

  • ஒரு சிறு குழந்தையின் மனதில் உனக்குப் படிக்கத் தெரியாது உன்னால் படிக்க முடியாது என்று கூறி.
  • கையில் இருந்த புத்தகத்தை வெடுக்கென்று வாங்கிய நிகழ்வு அந்தக் குழந்தையைப் படிக்க வேண்டும் என்று தூண்டியது.
  • நாம் படிக்க வேண்டும். என்னாலும் படிக்க முடியும் யார் தடுத்தாலும் என்னால் படிக்க முடியும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு காத்திருந்தாள்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

அறிவுச் சுடர்:

  • தன் அப்பாவிடம் நான் படிக்க வேண்டும். என்னைப் படிக்க வையுங்கள் என்று கேட்டாள்.
  • அதற்கு நமக்கு என்று படிக்கத் தனியாக பள்ளிக் கூடம் இல்லை.
  • நாம் எல்லாம் படிக்க முடியாது படிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூக்கிபோட்டு விட்டு வேலைக்குச் செல் என்று தந்தை கூறினார்.
  • ஆனால் அவள் நம்பிக்கையை விடவில்லை தினமும் நான் படிக்க வேண்டும்.
  • நான் படிப்பேன் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டுதான் வேலைக்குச் செல்வாள் இப்படியே காலங்கள் சென்றன.
  • அவளை நோக்கி வாய்ப்பு வந்தது. ஒருவர் படிக்க வைப்பதாகக் கூறினார்.
  • அதை அவள் பயன்படுத்திக் கொண்டாள் நன்றாகப் படித்துப் பட்டம் பெற்றாள்.
  • அந்தச் சமூகத்தில் அவள்தான் முதல் பட்டதாரிப் பெண்.
  • கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி அந்தச் சமூகம் முன்னேற அவளே அறிவுச் சுடராக மாறினாள்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

(அல்லது)
(ஆ) ‘கு.அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.
Answer:
காஞ்சிப்புரத்துக்காரன்:

  • சட்டைப்பையிலிருந்து கடிதத்தையும் மூன்று ரூபாயையும் எடுத்து. குப்புசாமிகிட்டே குடுத்துடுங்க.
  • இல்லே, தங்கவேலு கிட்ட வேணும்னாலும் குடுத்துடுங்க. இன்னொரு சமயம் பட்டணம் வந்தா ஆசுபத்ரிலே போயி பார்க்கிறேன்”
  • என்று சொல்லிவிட்டுக் கடிதத்தையும் ரூபாயையும் என்னிடம் கொடுத்தான். அப்புறம் ஒரு நிமிஷம் எதையோ யோசித்துப் பார்த்தேன். Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5
  • மனசுக்குள் கணக்கு போடுகிறவன் போல் அவனுடைய முகபாவனையும் தலையசைப்பும் இருந்தன.
  • மறு நிமிஷத்திலேயே, ” இந்தாருங்க. இதையும் குப்புசாமிக்குக் குடுக்கச் சொல்லுங்க” என்று சொல்லித் தன்.
  • இடது கையில் தொங்கிய துணிப் பையிலிருந்து இரண்டு சாத்துக்குடிப் பழங்களை எடுத்துக் கொடுத்தான்.
  • ”என் பசங்களுக்கு நாலு பழம் வாங்கினேன்.
  • போகட்டும். இவரு ஆசுபத்திரிலே இருக்கிறாரு. நாம்ப வேறு என்னத்தைச் செய்யப் போறோம்?” Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5
  • இத்துடனும் அவன் நிறுத்தவில்லை ! தன் உபயமாக ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம்.
  • கொடுத்து, குப்புசாமியிடமோ தங்கவேலுவிடமோ சேர்க்கச் சொன்னான்.
  • அவன் குப்புசாமிக்காகத்தான் கொடுத்தானோ, குப்புசாமிக்காகக் காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு கண்ணீர் வடிக்கும் அந்த வீரப்பன்.
  • குப்புசாமியின் உயிருக்குக் கொடுக்கும் மதிப்பைக் கண்டுதான் கொடுத்தானோ?
  • என்று அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான் ‘ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும். Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5
  • கதை மாந்தரான – காஞ்சிபுரத்துக்காரனை ஆசிரியர் காட்டுகின்றார்.

Question 45.
(அ) குமரிக் கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் திகழும் அவ்வன்னைக்கு , பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா தந்து. அந்தாதி கூறி, கோவை யாத்து இவற்றையெல்லாம் அணியாகப் பூட்டி, அழகினைக் கூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்துகளைக் கருவாகக் கொண்டு சான்றோர் வளர்த்த தமிழ்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
Answer:
சான்றோர் வளர்த்த தமிழ்
முன்னுரை:
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த தமிழ்’ என்னும் பழைமையுடைய செந்தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழி’ என்று வரையறுத்தவர் பரிதிமாற் கலைஞர் என்று பலராலும் போற்றப்படும் வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் ஆவார். அகத்தியர் வளர்த்த தமிழ்’ பொதியமலைத் தமிழ் போன்ற தொடர்கள் தமிழின் பழைமையை விளக்கும் சான்றுகளாகும். உயர், தனி, செம்மை என்ற மூன்று அடைமொழிகள் கொண்டு தமிழ் விளங்கக் காரணம் என்ன என்பதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

பொருளுரை தொன்மை:
குமரிக்கண்டம் எனப்பட்ட லெமூரியாக் கண்டத்திலுள்ள மக்கள் பேசிய மொழி தமிழ் என்பது எலியர் கருத்து. மனித இனம் எப்போது தோன்றியதோ அப்போது தோன்றியது தமிழ். உலக மொழிகளுள் பழைமையும் இலக்கிய இலக்கண வளமும் உடையவை கிரேக்கம், இலத்தீன், சீனம், அரபு, சமஸ்கிருதம், தமிழ் என்பன. பிற மொழிகள் காலவெள்ளத்தில் சிதைந்து மாறுபட்டு விளங்குகின்றன. பத்தாயிரம் ஆண்டு கட்டு முன்பே பேசப்பட்டும், இன்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் சிறப்பான தன்மை தமிழ் மொழிக்கு அமைந்த பண்பு எனலாம்.

உயர்மொழி :
தான் பேசப்படும் நாட்டிலுள்ள பலமொழிகளுக்கும் தலைமையும், அவற்றை விட மேன்மைத்தன்மையும் உள்ள மொழியே, உயர்மொழி எனப்படும் என்று கூறுவார் பரிதிமாற்மலைஞர். இதன்படி பார்த்தால் திராவிட மொழிகளாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய மொழிகளுக்கு எல்லாம் தலைமையும் மேன்மையும் பெற்றிருப்பதால் தமிழ் உயர்மொழியே’ ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

தமிழ் தனிமொழி:
தான் வழங்கும் நாட்டிலுள்ள மற்றைய மொழிகளின் உதவியில்லாமல் தனித்தியங்க வல்ல ஆற்றலுடைய மொழி ‘தனிமொழி’ எனப்படும். பிறமொழிகளுக்குச் செய்யும் உதவி மிகுந்தும், பிற மொழிகள் தனக்குச் செய்யும் உதவி குறைந்தும் காணப்படுவது நம் தமிழ்மொழியில் மட்டுமே. பிற மொழிகளின் உதவி இல்லாமல் தனித்தியங்கும் ஆற்றல் பெற்றிருப்பதால் தமிழ் மொழி தனி மொழி’ எனப்படும்.

தமிழ் – செம்மொழி;
‘திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகம் பெற்ற தாய்மொழி புகல் செம்மொழியாகும்’ என்பது செம்மொழியின் இலக்கணம். இவ்வரையறை தமிழ் மொழிக்கும் பொருந்துகிறது. தமிழ் மொழியினுள் இடர்ப்பட்ட சொல் முடிவுகளும், தெளிவற்ற பொருள் முடிவுகளும் இல்லை. சொல்லையும் சொல்லுபவன் கருதிய பொருளைக் கேட்பவன் தெளிவாக உணர முடியும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதைத் தமிழ்மொழி இன்றளவும் ஏற்றிருப்பதால் ‘தமிழ் செம்மொழி ஆகும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

தமிழின் பொதுப்பண்பு:
மேல்நாட்டு அறிஞர்களான போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றவர் தமிழினைக்கற்று இலக்கியத்திற்கு வளம் சேர்த்தனர். மதம், மொழி, இனம், நிறம், கடந்து ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று முதல் முழக்கமிட்டது தமிழ் மொழியே ஆகும். உண்பது அமிழ்தமே ஆயினும் தனியராய் உண்ணோம் என்று உணர்த்தினவர் தமிழர். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ; உண்பது நாழி உடுப்பவை இரண்டே போன்ற உயர்ந்த சிந்தனைகளை உலகுக்கு உணர்த்தியது தமிழ் இல்வாழ்வையும், புறவாழ்வையும் அகம், புறம் என்று பிரித்து குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல் பாலை என்று ஐவகை நிலம் வகுத்து, முதல், கரு, உரிப்பொருள் வகுத்து இலக்கியம் கண்டு இலக்கணம் இயம்பியது நம் செந்தமிழ் மொழியாகும்.

அரசின் கடமை :
மூவாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழைச் செம்மொழியாக அறிவித்தால் பிற நாட்டவர் தமிழ் மொழியைப் பயில்வர். நம் செந்தமிழ் இலக்கியம், இலக்கணம் பிற மொழியாளர்களால் ஆராயப்படும். தமிழ் உலகம் முழுவதும் ஏற்றம் பெற்று புதிய நூல்கள் ஆக்கம் பெறும். உலக அளவில் உயரிய மதிப்பு கூடும். மொழிக் களஞ்சியங்களில் தமிழ்க்கலை வெளிப்படும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

முடிவுரை:
தமிழைச் செம்மொழி ஆக்கியதோடு மட்டுமன்றி வணிகத் துறையை எட்டிப்பிடித்துச் செல்வ மொழியாகவும் மாற்றிட வழிவகை செய்ய வேண்டும்.

(அல்லது)
(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – விண்வெளியில் தமிழரின் அறிவு – கல்பனா சாவ்லா – விண்ணியல் அறிவில் வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டியவை – முடிவுரை

முன்னுரை:
விண்வெளிக்குப் பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் கல்பனா சாவ்லா. நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து உலகமே வியந்த விண்வெளி வீராங்கனையாக வாழ்ந்த கல்பனா சாவ்லா அமெரிக்காவின் கொலம்பியா ஓடத்தில் இருந்து விண்வெளிக்குப் பறந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்.

இளமைப் பருவம் :
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் 1961 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி கர்னாஸ் என்ற ஊரில் பிறந்தார் கல்பனா. வீட்டின் நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி அவர் தந்தை ஒரு வியாபாரி, தாய் இல்லத்தரசி பொம்மை வைத்து விளையாடும் வயதில் கல்பனாவுக்குப் பிடித்த பொழுதுபோக்கு விமான ஓவியங்கள் தீட்டி அழகு பார்ப்பது விமானங்களின் சத்தம் கேட்டாலே வீட்டில் இருந்து தெருவுக்கு ஓடி வந்து அந்த அலுமினியப் பறவை, புள்ளியாக மறையும் வரை கண்கள் சுருக்கிப் பார்த்துக்கொண்டே நிற்கும் குழந்தைகளில் ஒருவர்தான் கல்பனாவும்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

கல்வி:
கர்னாவில் உள்ள அரசுப் பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்த கல்பனாவுக்கு அந்த வயதிலேயே விண்வெளி வீரராக வேண்டும் என்ற இலக்கு மனதில் பதிந்துவிட்டது. சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமானப் பொறியியல் பயில் விரும்பினார். ஆனால் அது அப்போது ஆண்களின் படிப்பாக இருந்ததால் பெற்றோர் அனுமதிக்கவில்லை என்றாலும் கல்பனாவின் பிடிவாதத்தை அவர்களால் மாற்ற முடியவில்லை அந்தக் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற கல்பனாவை 1982 ல் அமெரிக்கா வரவேற்றது. 1984 ஆம் ஆண்டு டெக்காஸ் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார் கல்பனா. நான்கு ஆண்டுகள் கழித்துக் கொலோரடோ பல்கலைக்கழகத்தில் விமானப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

கனவு நனவானது :
1993 ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாகச் சேர்ந்தார். அதற்கு அடுத்த ஆண்டே அவரின் விண்வெளி வீரர் கனவு நனவாகத் தொடங்கியது. நாஸாவில் விண்வெளி வீரர் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பித்திருந்த சுமார் 3000 பேரில் ஆறு பேர் மட்டும் தேர்வானார்கள். அவர்களுள் கல்பனாவும் ஒருவர். ஜான்ஸன் விண்வெளி தளத்தில் பல்வேறு உடல் மருத்துவ பரிசோதனைகள், கடுமையான நேர்காணல்கள் ஆகியவற்றைக் கடந்து வெற்றிகரமாகத் தேர்ச்சிப் பட்டியலில் இடம் பிடித்தார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

முதல் பயணம் :
1995 ஆம் ஆண்டு பயிற்சிகள் முடிந்து விண்வெளி வீராங்கனையாகத் தகுதி பெற்ற கல்பனாவின் முதல் விண்வெளிப் பயணம் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி நிகழ்ந்தது. ஆறு வீரர்களுடன் கொலம்பிய விண்வெளி ஊர்தியான எஸ்.டி.எஸ் 87-ல் பயணம் செய்வதற்குத் தேர்வு செய்யப்பட்ட கல்பனாவுக்கு அதில் ஆராய்ச்சி குறித்த முக்கியப் பொறுப்புகளும் தரப்பட்டன. பூமியை சுமார் 252 தடவை சுற்றிய அந்த விண்கலத்தில் சுமார் 10 மில்லியன் மைல் தொலைவு பயணித்த கல்பனா சகவிண்வெளி வீரர்களுடன் வெற்றிகரமாகப் பூமிக்குத் திருப்பினார்.

கல்பனாவின் ஆர்வம் :
விமானம் மற்றும் கிளைடர்களை ஓட்டக் கற்றுக் கொடுக்க தகுதிச் சான்றிதழ் பெற்றதோடு மட்டுமல்லாமல் ஓட்டவும் அனுமதி பெற்றிருந்தார் கல்பனா. கொலம்பியா விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் முன் கல்பனா முழுமனதோடு ஒரு காரியத்தில் ஈடுபடுபவர்களைப் பார்த்தால் எனக்கும் ஊக்கம் ஏற்படும் என்றார். ஆராய்ச்சியாளர்களின் சுயசரிதைகளை விரும்பிப் படிக்கும் அவர், தன் ஆசிரியர்களுக்கு எப்போதும் தன் நன்றிகளைத் தெரிவித்தபடி இருப்பார்.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5

இரண்டாம் பயணம் :
முதல் பயணத்தை வெற்றிகரமாக முடித்த கல்பனா. பிறகு அதே கொலம்பியா விண்கலத்தில் 2003 ஜனவரி 16 ஆம் தேதி ஆறு விண்வெளி வீரர்களுடன் மீண்டும் விண்ணுக்குப் பயணித்தார். பல விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட அவர்கள் பயணத்தை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக திட்டமிட்டபடி பிப்ரவரி ஒன்றாம் தேதி தரையிறங்க ஆயத்தமானார்கள். பூமியைத் தொட 16 நிமிடங்களே இருந்த நிலையில் அந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறியது. 41 வயது கல்பனா தேவதையாக விண்ணில் கலந்தார்.

முடிவுரை :
இந்திய அரசு கல்பனா சாவ்லாவின் சாதனைகளை நினைவு கூறும் வகையில் 2011 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வீரதீரச் சாதனைகள் புரிந்த பெண்களுக்குக் கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவப்படுத்துகிறது. அந்த விண்வெளி தேவதை நம் வீட்டின் பல குட்டி தேவதைகளுக்குப் பிரியமான.

Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 5