Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

10th Social Science Guide இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
அ) ஜெர்மனி
ஆ) ரஷ்யா
இ) போப்
ஈ) ஸ்பெயின்
விடை:
இ போப்

Question 2.
யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?
அ) ஹெர்மன் கோர்ட்ஸ்
ஆ) பிரான்சிஸ்கோ பிசாரோ
இ) தௌசெயின்ட் லாவெர்ட்யூர்
ஈ) முதலாம் பெட்ரோ
விடை:
அ) ஹெர்மன் கோர்ட்ஸ்

Question 3.
பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக் கொண்டனர்?
அ) ஆங்கிலேயர்
ஆ) ஸ்பானியர்
இ) ரஷ்யா
ஈ) பிரெஞ்சுக்காரர்
விடை:
ஆ) ஸ்பானியர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 4.
லத்தீன் அமெரிக்காவுடன் ‘அண்டை நாட்டுடன் நட்புறவு’ எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்? அ) ரூஸ்வெல்ட்
ஆ) ட்ரூமன்
இ) உட்ரோவில்சன்
ஈ) ஐசனோவர்
விடை:
அ) ரூஸ்வெல்ட்

Question 5.
உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை ?
அ) ஐரோப்பா
ஆ) லத்தீன் அமெரிக்கா
இ) இந்தியா
ஈ) சீனா
விடை:
ஆ) லத்தின் அமெரிக்கா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
சமூக ஜனநாயக கட்சியை நிறுவியர் …………………..
விடை:
பெர்டினன்ட் லாஸ்ஸல்வி

Question 2.
நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர் ………………….
விடை:
ஜோசப் கோயபெல்ஸ்

Question 3.
வியட்நாம் தேசியவாதிகள் கட்சி ……………… இல் நிறுவப்பட்டது.
விடை:
1927

Question 4.
நாசிச ஜெர்மனியின் ரகசியக் காவல்படை ……………………….. என அழைக்கப்பட்டது.
விடை:
கெஸ்டபோ

Question 5.
தென்னாப்பிரிக்க ஒன்றியம் …………………… ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.
விடை:
1910

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 6.
ஆப்பிரிக்க தேசியக் காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா …………………….. ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
விடை:
27

Question 7.
போயர்கள் …………………….. என்றும் அழைக்கப்பட்டனர்.
விடை:
ஆப்பிரிக்க நேர்கள்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க.

Question 1.
i) முதல் உலகப்போரின்போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வைப்பதே இத்தாலியின் முக்கியக் கடமையாக இருந்தது.
ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக் கைக்கொண்டது.
iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாளில் ஏற்பட்டது.
iv) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத் தடை 1966இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

அ) i), ii) ஆகியவை சரி
ஆ) iii) சரி
இ) iii), iv) ஆகியவை சரி
ஈ) i), ii), iii) ஆகியவை சரி
விடை:
ஈ) i), ii), iii) ஆகியவை சரி

Question 2.
கூற்று : தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியப் பொருளாதார தேசியம் எனும் புதிய அலையால் உலக வணிகம் பாதிக்கப்பட்டது.
காரணம் : அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்ய விருப்பமில்லாமல் இருந்ததினால் இந்நிலை உண்டானது.

அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு
ஈ) காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருந்தவில்லை .
விடை:
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 3.
கூற்று : 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாடு காலனியாதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவைத் தங்களின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தது.
காரணம் : ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்.

அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் சரியான காரணமல்ல
இ) கூற்று காரணம் இரண்டுமே தவறு
ஈ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுடன் பொருந்தவில்லை .
விடை:
அ) கூற்று, காரணம் இரண்டுமே சரி

IV. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 2

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
இந்தோ-சீனாவில் நடைபெற்ற ‘வெள்ளை பயங்கரம்’ குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
விடை:

  • 1929இல் வியட்நாம் வீரர்கள் இராணுவப்புரட்சி செய்தனர்.
  • பிரெஞ்சு கவர்னர் ஜெனரலைக் கொலை செய்வதற்கான முயற்சியும் தோல்வி அடைந்தது.
  • இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்களின் தலைமையில் மிகப்பெரும் விவசாயிகளின் புரட்சியும் நடைபெற்றது.
  • இப்புரட்சி ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ‘வெள்ளை பயங்கரவாதம்’ என்பது அரங்கேறியது. புரட்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.

Question 2.
ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்.
விடை:

  • இங்கிலாந்திற்கும் ஆங்கிலப் பேரரசின் உறுப்பு நாடுகளுக்கும் 1932இல் நடைபெற்ற ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
  • இம்மாநாட்டில் பங்கேற்றநாடுகள் (இந்தியா உட்பட) ஏனைய நாட்டு பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருள்களுக்கு முன்னுரிமை வழங்க ஒத்துக்கொண்டன.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 3.
முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை?
விடை:

  • 1922 அக்டோபரில் ஒரு நீண்ட அமைச்சரவைச் சிக்கலின் போது முசோலினி பாசிஸ்டுகளின் மாபெரும் அணிவகுப்பு ஒன்றை ரோமபுரியை நோக்கி நடத்தினார்.
  • முசோலினியின் வலிமையைக் கண்டு வியந்துபோன அரசர் மூன்றாம் விக்டர் இம்மானுவேல், முசோலினியை ஆட்சியமைக்க வரவேற்றார்.

Question 4.
1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டின் சாரத்தைக் குறிப்பிடுக.
விடை:

  • 1884-1885 ஆண்டுகளில் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டில் காலனியாதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவைத் தங்கள் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக்கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
  • ஆனால் ஆங்கிலேயருக்கும், தென்னாப்பிரிக்க போயர்களுக்கும் இடையே நடைபெற்றப் போர் இத்தீர்மானத்திற்கு எதிரான செயலாகும்.

Question 5.
பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?
விடை:

  • பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மைக்கும் உள்நாட்டு உற்பத்தித் தொழில்களுக்கும் மரண அடியைக் கொடுத்தது.
    எடுத்துக்காட்டாக வேளாண் உற்பத்திப் பொருள்களின் விலை பாதியாகக் குறைந்தது.
  • விலைவாசியில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சி இந்திய தேசியவாதிகளை உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் கோரிக்கையை வைக்கத் தூண்டியது.

Question 6.
‘டாலர் ஏகாதிபத்தியம்” – தெளிவுபட விளக்குக.
விடை:
டாலர் ஏகாதிபத்தியம் :
இச்சொல் தொலைதூர நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்வதன் மூலம் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவும், தக்கவைத்துக் கொள்ளவும், அமெரிக்கா பின்பற்றியக் கொள்கையை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதாகும்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.
விடை:

  • பாசிசத்தின் தோற்றம் 1919லிருந்து தொடங்குகிறது.
  • 1919ஆம் ஆண்டில், ஏழு நபர்களைக் கொண்ட ஒரு குழுவானது, மியூனிச் நகரில் சந்தித்து தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் உழைப்பாளர் கட்சி சுருக்கமாக நாசி சட்சியை நிறுவியது.
  • ஹிட்லரும் அவர்களுள் ஒருவராக இருந்தார்.
  • முதல் உலகப்போரின்போது ஹிட்லர் பவேரியாவின் படையில் பணியாற்றினார்.
  • அவரின் ஆற்றமிக்க உரை வீரர்களைத் தட்டி எழுப்பியது.
  • 1923இல் பவேரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற அவர் முயற்சியை மேற்கொண்டார்.
  • சிறையில் இருந்தபோது தனது அரசியல் சிந்தனைகளை உள்ளடக்கிய சுயசரிதை நூலான மெயின்காம்ப் (எனது போராட்டம்) என்னும் நூலை எழுதினார்.
  • அதன்விளைவாகத் தொழிலதிபதிர்களும் வங்கியாளர்களும் குடியாட்சிக் கட்சியினரும் ஹிட்லரை சான்சிலராக முக்கிய அமைச்சர் பதவியில் அமர்த்தும்படி குடியரசுத் தலைவர் வான் ஹிண்டன்பர்க் என்பவரை வற்புறுத்தினார்.
  • மூன்றாவது ரெய்க் என்றழைக்கப்பட்ட ஹிட்லரின் நாசி அரசு முதல் உலகப்போருக்குப் பின்னர் ஜெர்மனியில் நிறுவப்பட்டிருந்த பாராளுமன்ற ஜனநாயக அரசை முடிவுக்குக் கொண்டுவந்தது.
  • ஹிட்லர் வெய்மர் குடியரசின் கொடிக்குப் பதிலாக ஸ்வஸ்திக் சின்னம் பொறிக்கப்பட்ட தேசிய சோசலிசக் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்.
  • ஜெர்மனி மிகவும் மையப்படுத்தப்பட்ட நாடாக மாற்றப்பட்டது. > நாசிச கட்சியைத் தவிர பிற கட்சிகள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானவை என்று அறிவிக்கப்பட்டன.
  • பழுப்பு நிறச் சட்டை அணிந்த போர்வீரர்கள், முழங்கால்களுக்கு மேல்வரும் காலணிகள் அணிந்த புயல்படையினர் ஆகியோரின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டது.
  • ஹிட்லர் இளைஞர் அணியும், தொழிலாளர் அமைப்பும் நிறுவப்பட்டன.
  • தொழிற்சங்கங்கள் ஒழிக்கப்பட்டன. > அவற்றின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • நாசிச கட்சியின் பரப்புரைகளுக்கு ஜோசப் கோயபெல்ஸ் தலைமையேற்றார்.
  • இவர் திட்டமிடப்பட்ட பரப்புரைகளின் மூலம் பொதுமக்களின் கருத்துக்களை நாசிகளுக்கு ஆதரவாக மாற்றினார்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 2.
உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதனைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்.
விடை:
இந்தியாவில் காலனியாதிக்கநீக்கம்:
மாகாணங்களில் இரட்டையாட்சி:

  • இந்தியாவில் காலனிய நீக்கச்செயல்பாடானது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 1905இல் சுதேசி இயக்கத்தோடு துவங்கியது.
  • முதல் உலகப்போரானது விரைவான அரசியல் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்தியது.
  • 1919இல் இந்திய அரசுச்சட்டம் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்தது.
  • இந்திய தேசிய காங்கிரஸ் இரட்டையாட்சி தொடர்பான ஏற்பாடுகளை மறுத்ததோடு சட்டசபைகளைப் புறக்கணிக்கவும் முடிவு செய்தது.

இந்தியாவைத் தொழில்மயமாக்குவதில் நடவடிக்கைக் குறைபாடுகள்:

  • சர்க்கரை, சிமெண்ட் மற்றும் சில வேதியியல் பொருள்களுக்கு எதிர்மறையான பாகுபாட்டு மனப்பான்மையோடு வழங்கப்பட்ட பாதுகாப்பைத் தவிர காலனியப் பொருளாதாரக் கொள்கையில் மாற்றமேதுமில்லை.
  • ஆனால் உள்நாட்டுத் தொழில்களைப் பொறுத்தமட்டில் தொழில்நுட்பம் சார்ந்த அறிவுரைகளும், கல்வியும் வழங்குதல் புதிய துறைகள் தொடர்பாக முன்னோடித் தொழில் கூடங்களை அரசு தொடங்குதல் போன்ற வடிவங்களில் அரசு உதவிகள் செய்தது.
  • ஆனால் ஆங்கிலேய நிறுவனங்கள் அரசின் தலையீட்டை எதிர்த்ததால் வெகுவிரைவில் இக்கொள்கையும் கைவிடப்பட்டது.

பொருளாதாரப் பெருமந்தத்தின் போது இந்தியா:

  • 1929ஆம் ஆண்டுப் பொருளாதாரப்பெருமந்தம் ஆங்கிலேய வணிக வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பெரும் சேதத்தை உண்டாக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • இங்கிலாந்து பெருமந்தத்தின் தீயவிளைவுகளைத் தனது காலனிய நாடுகளின் தோள்களுக்கு மாற்றியது.
  • இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் (இந்தியா உட்ப) ஏனைய நாட்டு பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருள்களுக்கு முன்னுரிமை வழங்க ஒத்துக்கொண்டன.

இந்திய வேளாண்மையின் மீது பெருமந்தம் ஏற்படுத்தியத் தாக்கம்:

  • பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மைக்கும் உள்நாட்டு உற்பத்தித் தொழில்களுக்கும் மரண அடியைக் கொடுத்தது.
  • ஆனால் விவசாயி, நிலத்திற்குக் கொடுக்க வேண்டிய குத்தகைத் தொகையில் மாற்றமேதுமில்லை.
  • விவசாயப் விளைபொருள்களின் விலையை பொறுத்தமட்டிலும் அரசுக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பணம் இரண்டு மடங்காகியிற்று.
  • விலைவாசியில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சி இந்திய தேசியவாதிகளை உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் கோரிக்கையை வைக்கத் தூண்டியது.

1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்:

  • ஆங்கிலேயர்களுக்கு இந்திய தேசியவாதிகளைச் சமாதானம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதன் வெளிப்பாடே 1935 இந்திய அரசுச் சட்டம்.
  • இச்சடம் உள்ளாட்சி அரசு நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கியதோடு நேரடித் தேர்தலையும் அறிமுகம் செய்தது.
  • இச்சட்டத்தின் அடிப்படையில் 1937ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல்களில் பெரும்பாலான மாகாணங்களில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் அதிர்வை ஏற்படுத்தும் வெற்றியைப் பெற்றது.

Question 3.
தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.
விடை:
தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேறிகளின் வம்சாவளியினரே ஆப்பிரிக்கநேர்கள் என்றும் அழைக்கப்பட்ட போயர்கள் அவர் இவர்களது மொழி ஆப்பிரிக்கான்ஸ்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

தென்னாப்பிரிக்காவில் தேசிய அரசியல்

  • தென்னாப்பிரிக்காவில் இரு முக்கிய அரசியல் கட்சிகள் செயல்பட்டன.
  • முதல் பிரதம மந்திரியான போது, தென்னாப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்தவர் ஆங்கிலேயருடன் ஒத்துழைத்து ஆட்சியை நடத்தினார்.
  • ஆனால் தென்னாப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்த போராடும் குணமிக்க ஒரு பிரிவினர் ஹெர்சாக் என்பவரின் தலைமையின் கீழ் தேசியக் கட்சி எனும் கட்சியைத் தொடங்கினர்.
  • 1920ஆம் ஆண்டுத் தேர்தலில் தேசியக் கட்சி நாற்பத்து நான்கு இடங்களைக் கைப்பற்றியது.
  • தென்னாப்பிரிக்கக் கட்சி ஸ்மட்ஸ் என்பாரின் தலைமையில் நாற்பத்தொன்று இடங்களில் வெற்றி பெற்றது.
  • இதனால் போர்க்குணம் கொண்ட ஆப்பிரிக்கநேர்களின் கட்டுப்பாட்டிலிருந்த தேசியக் கட்சியைக் காட்டிலும் ஸ்மட்ஸ் பெரும்பான்மை பெற்றார்.

10th Social Science Guide இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
………………. என்பது தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்டது.
அ) நாசிசம்
ஆ) பாசிசம்
இ) தாவோயிசம்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) பாசிசம்

Question 2.
கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவைப் பெறுவதில் வெற்றி பெற்றவர் ………………….
அ) போர்
ஆ) ஹிட்லர்
இ) முசோலினி
ஈ) பிராங்கோ
விடை:
இ முசோலினி

Question 3.
ரோமாபுரி நோக்கி அணிவகுப்பை ………………… முசோலினி மேற்கொண்டார்.
அ) 1928
ஆ) 1944
இ) 1921
ஈ) 1922
விடை:
ஈ) 1922

Question 4.
…………………. தடை செய்யப்பட்ட கட்சி சமூக ஜனநாயக கட்சி ஆகும்.
அ) வில்சன்
ஆ) வெய்மர்
இ) பிஸ்மார்க்
ஈ) எதுவுமில்லை
விடை:
பிஸ்மார்க்கால்

Question 5.
ஹிண்டென்பர்க் …………….. இல் இறந்தார்.
அ) 1934
ஆ) 1943
இ) 1439
ஈ) 1997
விடை:
அ) 1934

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 6.
ஹோசிமின் ……………….. பிறந்தார்.
அ) மாஸ்கோ
ஆ) ரஷ்யா
இ) இத்தாலி
ஈ) டோங்கிங்
விடை:
ஈ) டோங்கிங்

Question 7.
இன ஒதுக்கல் என்பதன் பொருள் ……………… ஆகும்.
அ) ஒதுக்கல்
ஆ) அழித்தல்
இ) தனிமைப்படுத்துல்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ தனிமைப்படுத்துதல்

Question 8.
ஸ்மட்ஸ் தலைமையில் ……………… இடங்கள் தென்னாப்பிரிக்க கட்சி வெற்றி பெற்றது.
அ) 44
ஆ) 34
இ) 43
ஈ) 41
விடை:
ஈ) 41

Question 9.
போயர்கள் …………………. போரைக் கைக்கொண்டனர்.
அ) வெர்டர்
ஆ) கொரில்லா
இ) மார்ன்
ஈ) எதுவுமில்லை
விடை:
கொரில்லா

Question 10.
ஜெர்மனி பாசிசத்தின் தோற்றம் …………….. ஆண்டு ஆகும்.
அ) 1991
ஆ) 1919
இ) 1909
ஈ) 1999
விடை:
ஆ) 1919

Question 11.
ஹிட்லரின் சுயசரிதை நூல் ………………… ஆகும்.
அ) இண்டிகா
ஆ) அர்த்தசாஸ்திரம்
இ) மெயின் காம்ப்
ஈ) எதுவுமில்லை
விடை:
மெயின் காம்ப்

Question 12.
ஹிட்லரின் சின்னம் ………………….
அ) டைமண்ட்
ஆ) ஸ்வஸ்திக்
இ) மீன்
ஈ) வில்
விடை:
ஸ்வஸ்திக்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 13.
ஹிட்லரின் இராணுவத்தினர் அணிந்த சட்டை நிறம் ……………… ஆகும்.
அ) பழுப்பு
ஆ) கருப்பு
இ) சிவப்பு
ஈ) மஞ்சள்
விடை:
அ) பழுப்பு

Question 14.
……………….. வியட்நாம் கட்சியை தோற்றுவித்தார்.
அ) வில்சன்
ஆ) சர்ச்சில்
இ) ஹிட்லர்
ஈ) ஹோசிமின்
விடை:
ஈ) ஹோசிமின்

Question 15.
வெள்ளை பயங்கரவாதத்திற்கு பின் ஹோசிமின் ………………… சென்றார்.
அ) ரஷ்யா
ஆ) மாஸ்கோ
இ) டோங்கிங்
ஈ) இத்தாலி
விடை:
ஆ) மாஸ்கோ

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
அமெரிக்காவில் முதல் பெரும் வீழ்ச்சி அரங்கேறியது.
விடை:
1929 அக்டோபர் 24

Question 2.
மேற்கு ஐரோப்பாவில் பழைய ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக திரும்பிய முதல் நாடு ……………….. ஆகும்.
விடை:
இத்தாலி

Question 3.
லேட்டரன் உடன்படிக்கை …………….. போப்புடன் கையெழுத்தானது.
விடை:
1929

Question 4.
முசோலினி ………………….. மீது படையெடுத்தார்.
விடை:
எத்தியோப்பியாவின்

Question 5.
ஹிட்லரின் மெய்க்காப்பாளர் …………………… ஆவார்.
விடை:
ஹைட்ரிச் ஹிம்லர்

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 6.
ஹிட்லரின் இனப்படுகொலை நாஜிக்களால் ………………. எனப்பட்டது.
விடை:
“இறுதித் தீர்வு”

Question 7.
ஹோ சி மின் லண்டன் உணவு விடுதியில் ………………… பணியாற்றினார்.
விடை:
சமையல் கலைஞராகப்

Question 8.
……………. மாபெரும் மக்கள் இயக்கமாய் மாறியது.
விடை:
இந்திய தேசிய காங்கிரஸ்

Question 9.
போயர் போர் ……………… ஆண்டுகள் நீடித்தது.
விடை:
3

Question 10.
ஆப்பிரிக்க நேர்களின் மொழி ………………. ஆகும்.
விடை:
ஆப்பிரிக்கான்ஸ்

Question 11.
தென்னாப்பிரிக்க ஒன்றியம் ……………….. உதயமானது.
விடை:
1910

Question 12.
11ஆம் நூற்றாண்டில் பெரிய நகரங்களில் இணைந்து ……………………. அமைப்பாக உருவானது.
விடை:
மாயாபன்

Question 13.
அஸ்டெக்குகள் மாயா நாட்டைக் கைப்பற்றி ………………….. எனும் தலைநகரை நிறுவினர்.
விடை:
டெனோச்டிட்லான்

Question 14.
ஸ்டபரானியர்கள் ……………… தங்கள் பகுதிகளில் ஒன்றாக ஆக்கினார்கள்.
விடை:
பெருவை

Question 15.
……………… தளை தகர்ப்பாளர் என்றறியப்பட்டார்.
விடை:
சைமன் பொலிவர்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்.

Question 1.
i) 1830ல் ஒட்டுமொத்த அமெரிக்காவும் ஐரோப்பிய மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது.
ii) நாசிசம் தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்ட தேசியவாதத்தின் ஒரு வடிவமாகும்.
iii) பாசிசம் 1919ல் தொடங்கப்பட்டது.
iv) ஹிட்லர் 1922ல் ரோமாபுரி நோக்கி அணிவகுப்பை நடத்தினார்.

அ) i, iii சரி
ஆ) ii, iv சரி
இ) 1 சரி
ஈ) iv சரி
விடை:
அ) i, iii சரி

Question 2.
கூற்று : லத்தீன் அமெரிக்கா டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை.
காரணம் : அமெரிக்காவிற்கு பொருளாதார தொழில்நுட்ப உதவிகளை செய்ய ஒத்துக் கொள்ளவில்லை.

அ) கூற்று, காரணம் சரி
ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சரி
ஈ) இரண்டும் தவறு
விடை:
ஆ) கூற்று சரி, காரணம் தவறு

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

IV. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம் 4

V. சுருக்கமான விடையளிக்கவும்.

Question 1.
பாசிசம் என்பது யாது?
விடை:

  • பாசிஸம் என்பது தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்ட அதிதீவிர தேசியவாதத்தின் ஓர் வடிவமாகும்.
  • சர்வாதிகார வல்லமையும் எதிர்ப்பை வன்முறை கொண்டு அடக்குவதும் சமூகத்தையும், பொருளாதாரத்தையும் வலுவான மத்திய அதிகாரத்தின் கீழ் வைத்திருப்பதும் இதன் பண்புகளாகும்.

Question 2.
ஜனநாயகக்கட்சி பற்றி எழுதுக.
விடை:

  • சமூக ஜனநாயகக் கட்சியானது ஜெர்மன் பொதுத்தொழிலாளர் கழகம் என்ற பெயரில் 1863 மே 23 இல் லிப்சிக் நகரத்தில் நிறுவப்பட்டது.
  • அதனை நிறுவியவர் பெர்டினன்ட் லாஸ்ஸல்லி என்பவராவார்.
  • 1945இல் ஹிட்லரின் மூன்றாவது ரெய்க்கின் (குடியரசின்) வீழ்ச்சியைத் தொடர்ந்து இக்கட்சி புத்தெழுச்சி பெற்றது.
  • ஹிட்லரை எதிர்த்த கட்சி என்ற பெயருடன் வெய்மர் காலத்திலிருந்து செயல்படும் ஒரேகட்சி இதுவேயாகும்.

Question 3.
காலனிய நீக்கம் – வரையறு.
விடை:
காலனிய நீக்கம் என்பது காலனியாதிக்க சக்திகள் காலனிகள் மீது கொண்டுள்ள நிறுவனம் மற்றும் சட்டம் சார்ந்த கட்டுப்பாடுகளைச் சொந்த தேசிய அரசுகளிடம் வழங்குவதாகும்.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 4.
ஹோ சி மின் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:

  • ஹோ சி மின் 1890இல் டோங்கிங்கில் பிறந்தார்.
  • பாரிஸ் அமைதி மாநாட்டில் வியட்நாமின் சுதந்திரத்திற்காக ஆதரவு திரட்டினார்.
  • 1921இல் ஹோ சி மின் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராக இருந்தார்.
  • 1925இல் புரட்சிகர இளைஞர் இயக்கம் எனும் அமைப்பை நிறுவினார்.

Question 5.
போயர்கள் பற்றி எழுதுக.
விடை:

  • தென்னாப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக் குடியேற்றங்களின் வம்சாவளியினரே ஆப்பிரிக்கநேர்கள் என்றும் அழைக்கப்பட்ட போயர்கள் ஆவர்.
  • இவர்களது மொழி ஆப்பிரிக்கான்ஸ் ஆகும்.

VI. விரிவான விடையளிக்கவும்.

Question 1.
முதல் உலகப்போருக்குப் பின்னர் ஏற்பட்ட வளர்ச்சிப்போக்குகள் பற்றி விவரி.
விடை:

  • முதல் உலகப்போரானது போர்க்காலப் பெரும்வளர்ச்சி முடிவற்றுத் தொடரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் சில குறிப்பிட்ட தொழில்களின் விரிவாக்கத்திற்கு வலிகோலியது.
  • இருந்த போதிலும் போர் ஒரு முடிவுக்கு வந்தபோது,  போர்த்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உருவாகி வளார்ந்த சில தொழில்கள் கைவிடப்பட்ட வேண்டியவைகளாக அல்லது மாற்றி அமைக்கப்பட வேண்டியவைகளாயின.
  • வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை ஏற்படுத்திய அரசியல்சிக்கல்கள், நிலைமையை மேலும் மோசமாக்கியது.
  • பொருளாதார தேசியவாதம் எனும் புதிய அலை ‘பாதுகாப்பு’ அல்லது ‘சுங்கத் தடைகள்’, இறக்குமதியாகும் பொருள்களின் மீது வரிசுமத்துவது எனும் பெயர்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, உலகவர்த்தகத்தைப் பாதித்தது.
  • போர் ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின் மீதும் பெரும் கடன்சுமையை ஏற்றியது.

Samacheer Kalvi 10th Social Science Guide History Chapter 2 இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

Question 2.
கறுப்பின மக்களுக்கு எதிரான இனக்கொள்கை பற்றி விவரி.
விடை:

  • ஆப்பிரிக்கநேர்கள் கறுப்பின மக்களுக்கும், சிறுபான்மை இந்தியர்களுக்கும் எதிராக கடுமையான இனக்கொள்கையைப் பின்பற்றினர்.
  • கறுப்பின மக்களின் குடியிருப்புகளை நகரங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளுக்குள்ளாக கட்டுப்படுத்துவதற்காக 1923இல் ஒரு சட்டம் இயற்றப்பட்டது.
  • ஏற்கனவே 1913இல் இயற்றப்பட்ட சட்டம் வெள்ளை மற்றும் கறுப்பின் விவசாயிகளைப் பிரித்து வைத்தது.
  • இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கறுப்பின மக்களால் நிலங்களை வாங்குவது முடியாமலேயே போனது.
  • 1924இல் இயற்றப்பட்ட சட்டம் கறுப்பின மக்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதிலிருந்தும் தொழிற்சங்கத்தில் சேருவதில் இருந்தும் தடுத்தது.
  • மாநிலத்தில் கறுப்பின மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
  • இவ்வாறு மண்ணின் மைந்தர்களான கறுப்பினமக்கள் அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு அவர்கள் அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய அனைத்துத் தளங்களிலும் துன்புற்றனர்.