Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Textbook Questions, and Answers, Notes.
TN Board 10th Social Science Solutions Geography Chapter 1 இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
10th Social Science Guide இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
Question 1.
இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல் ……..
அ) 2500 கி.மீ
ஆ) 2933 கி.மீ
இ) 3214 கி.மீ
ஈ) 2814 கி.மீ
விடை:
இ) 3214கி.மீ
Question 2.
பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு …..
அ) நர்மதா
ஆ) கோதாவரி
இ) கோசி
ஈ) தாமோதர்
விடை:
இ கோசி
Question 3.
மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி …………….. என அழைக்கப்படுகிறது.
அ) கடற்கரை
ஆ) தீபகற்பம்
இ) தீவு
ஈ) நீர்ச்சந்தி
விடை:
ஆ) தீபகற்பம்
Question 4.
பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா ……………ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.
அ) கோவா
ஆ) மேற்கு வங்காளம்
இ) இலங்கை
ஈ) மாலத்தீவு
விடை:
இ இலங்கை
Question 5.
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
அ) ஊட்டி
ஆ) ஆனை முடி
இ) கொடைக்கானல்
ஈ) ஜின்டா கடா
விடை:
ஆ) ஆனை முடி
Question 6.
பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ………………
அ) பாபர்
ஆ) தராய்
இ) பாங்கர்
ஈ) காதர்
விடை:
இ பாங்கர்
Question 7.
பழவேற்காடு ஏரி ……………. மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
விடை:
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
II. பொருத்துக.
விடை:
III. காரணம் கூறுக.
Question 1.
இமயமலைகள் மடிப்புமலைகள் என அழைக்கப்படுகின்றன.
விடை:
- இமயமலைகள் ஒரு இளம் மடிப்பு மலை.
- வடக்கே இருந்த யுரேசியா, தெற்கே இருந்த கோண்ட்வானா நிலப்பகுதிகள் ஒன்றை நோக்கி இமயமலைகள் புவிமேலோட்டு பேரியக்க விசைகள் காரணமாக புவிமேலோடு ஒன்று நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக மடிப்பு இமயமலை உருவானது
Question 2.
வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்.
விடை:
- வடஇந்திய ஆறுகள் இமயமலையில் உற்பத்தியாகின்றன.
- எனவே ஆண்டு முழுவதும் நதிகளில் நீர் கிடைக்கிறது.
- தென்னிந்திய நதிகள் கிழக்கு நோக்கி பாய்கின்றன.
Question 3.
தென்னிந்திய நதிகள் கிழக்கு நோக்கிப்பாயும் நதிகள்.
விடை:
- இந்நதிகள் மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகின்றன.
- இந்த ஆறுகள் பள்ளத்தாக்கில் செங்குத்து சாய்வுடன் பாய்கிறது.
Question 4.
மேற்கு நோக்கிப்பாயும் நதிகள் டெல்டாவை உருவாக்குவதில்லை.
விடை:
- மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் மிக முக்கிய தூரமே ஓடி கடலில் கலக்கின்றன.
- பள்ளத்தாக்குகள் வழிப் பாய்வதால் டெல்டாவை உருவாக்க முடிவதில்லை.
IV. வேறுபடுத்துக.
Question 1.
இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்.
விடை:
Question 2.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்.
விடை:
Question 3.
மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரைச் சமவெளி.
விடை:
V. சுருக்கமாக விடையளி.
Question 1.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
விடை:
வடமேற்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுடனும், வடக்கில் சீனா, நேபாளம், பூடானுடனும், கிழக்கில் வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாடுகளுடனும்
தெற்கில் இலங்கையுடனும் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.
Question 2.
இந்திய திட்ட நேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.
விடை:
- மத்திய தீர்க்கரேகையான 82°30′ கிழக்கு தீர்க்கரேகையின் தலநேரம், இந்திய திட்டநேரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
- இத்தீர்க்கரேகை மிர்சாபூர் (அலகாபாத்) வழியாக செல்கிறது. கிழக்கு தீர்க்க ரேகையின் தலநேரம், இந்திய திட்ட நேரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
Question 3.
தக்காண பீடபூமி – குறிப்பு வரைக.
விடை:
- தக்காணபீடபூமி, தீபகற்ப பீடபூமியில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை அமைப்பைக் கொண்டதாகும்.
- இது தோராயமாக முக்கோண வடிவம் கொண்டது.
- சுமார் 7 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டுள்ளது.
- கடல் மட்டத்திலிருந்து 500 மீ முதல் 1000 மீ உயரம் வரையும் அமைந்துள்ளது.
Question 4.
இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக.
விடை:
மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்:
அ) நர்மதை
ஆ) தபதி
இ) மாகி
ஈ) சபர்மதி
Question 5.
இலடச்சத்தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி.
விடை:
இலட்சத்தீவுகள் :
- இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள இலட்சத்தீவு முருகைப் பாறைகளால் ஆனது.
- இத்தீவுகள் சுமார் 32 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டதாகும்.
- இதன் நிர்வாகத் தலைநகரம் கவரட்டி ஆகும்.
VI. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.
Question 1.
இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.
விடை:
இந்தியாவின் பெரும் அரணாக உள்ள இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம்.
- ட்ரான்ஸ் இமயமலைகள்
- இமயமலைகள்
- கிழக்கு இமயமலை/பூர்வாஞ்சல் குன்றுகள்
1. டிரான்ஸ் இமயமலைகள் (மேற்கு இமயமலைகள்):
- இம்மலைகள் ஜம்மு – காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது. இவை ‘திபெத்தியன் இமயமலை’ எனவும் அழைக்கப்படுகிறது.
- இப்பகுதியில் காணப்படும் பாறை அமைப்புகள் கடலடி உயிரினப் படிமங்களைக் கொண்ட டெர்சியரி கிரானைட் பாறைகளாகும்.
- இங்குள்ள முக்கியமான மலைத்தொடர்கள் சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகும்.
2. இமயமலை:
- இவை வடக்கு மலைகளின் பெரிய பகுதியாக அமைந்துள்ளது.
- இது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
- வடக்கே இருந்த யுரேசியா நிலப்பகுதியும், தெற்கே இருந்த கோண்ட்வானா நிலப்பகுதியும் ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்ததால் ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இடையிலிருந்த டெத்தீஸ் என்ற கடல் மடிக்கப்பட்டு இமயமலை உருவானது.
- இது பல மலைத்தொடர்களை உள்ளடக்கியது.
- இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
- உள் இமயமலைகள் / இமாத்ரி
- மத்திய இமயமலை / இமாச்சல்
- வெளி இமயமலை / சிவாலிக்
3. பூர்வாஞ்சல் குன்றுகள் :
- இவை இமயமலையின் கிழக்கு கிளையாகும்.
- இது வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது.
- பெரும்பாலான குன்றுகள் மியான்மர் மற்றும் இந்திய எல்லைகளுக்கிடையே காணப்படுகின்றன.
இமயமலையின் முக்கியத்துவம்:
- வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
- வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. எ.கா. சிந்து, கங்கை , பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்.
- இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
- பல கோடைவாழிடங்களும், புனித தலங்களான அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
- வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
- இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.
Question 2.
தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி.
விடை:
தீபகற்ப இந்திய ஆறுகள்:
- தென் இந்தியாவில் பாயும் ஆறுகள் தீபகற்ப ஆறுகள் எனப்படுகின்றன.
- பெரும்பாலான ஆறுகள் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன.
- இவை பருவகால ஆறுகள் அல்லது வற்றும் ஆறுகள் எனப்படும்.
- தீபகற்ப ஆறுகளை அவை பாயும் திசையின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,
- கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள்
- மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்
கிழக்கு நோக்கி பாயும் ஆறுகள் :
அ. மகாநதி:
- இந்நதி சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சிகாவிற்கு அருகில் உற்பத்தியாகி ஒடிசா மாநிலத்தின் வழியாக சுமார் 85 கி.மீ நீளத்திலும் பாய்கிறது.
- மகாநதி பல கிளையாறுகளாகப் பிரிந்து டெல்டாவை உருவாக்குகிறது.
- இந்நதி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
ஆ. கோதாவரி:
- தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறாகும்.
- நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.
- இந்நதி விருத்தகங்கா எனவும் அழைக்கப்படுகிறது.
- கோதாவரி டெல்டா பகுதியில் நன்னீர் ஏரியான கொல்லேறு ஏரி அமைந்துள்ளது.
இ. கிருஷ்ணா :
- மகாராஷ்ட்டிரா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மகாபலேஷ்வர் என்ற பகுதியில் ஊற்றாக உருவாகிறது.
- இது தீபகற்ப ஆறுகளில் இரண்டாவது மிகப்பெரிய நதியாகும்.
- கொய்னா, பீமா, முசி, துங்கபத்ரா மற்றும் பெடவாறு போன்றவை இவ்வாற்றின் முக்கிய துணை ஆறுகளாகும்.
ஈ. காவிரி:
- காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலுள்ள தலைக்காவிரியில் உற்பத்தியாகிறது.
- இது தென் இந்தியாவின் கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
- திருச்சிராப்பள்ளிக்கு முன் ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம் மற்றும் காவிரி என இரண்டு பிரிவுகளாக பிரிந்து, இறுதியில் பூம்புகார் என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.
மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்:
அ) நர்மதை :
- மத்தியப்பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபூமியில் உற்பத்தியாகிறது.
- இது மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலேயே நீளமானதாகும்.
- பர்னா, ஹலுன், ஹொன், பஞ்சர், தூதி, சக்கார், டவா மற்றும் கோலர் ஆகியவை இதன் முதன்மையான துணையாறுகள் ஆகும்.
ஆ) தபதி :
- தபதி ஆறு தீபகற்ப இந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். இந்நதி 724 கி.மீ நீளத்தையும், 65145 ச.கி.மீ. பரப்பளவு வடிநிலத்தை கொண்டது.
- இந்நதி மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்டூல் மாவட்டத்தில் முல்டாய் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாகிறது.
- வாகி, கோமை, அருணாவதி, அனெர், நீசு, புரெ, பஞ்சரா மற்றும் போரி ஆகியன தபதி ஆற்றின் துணை ஆறுகள் ஆகும்.
Question 3.
கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.
விடை:
- வடிகாலமைப்பு என்பது முதன்மையாறுகளும், துணையாறுகளும் ஒருங்கிணைந்து மேற்பரப்பு நீரை கடலிலோ, ஏரிகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ சேர்க்கும் செயலாகும்.
- முதன்மை ஆறுகளும், துணையாறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு வடிகால் கொப்பரை என்று அழைக்கப்படுகின்றது.
கங்கை நதி தொகுப்பு:
இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பைக் கொண்டதாகும். கங்கையாற்றின் தொகுப்பு 8,61,404 ச.கி.மீ. பரப்பளவில் பாய்கிறது. கங்கை சமவெளியில் பல நகரங்கள் ஆற்றங்கரையையொட்டியும் அதிக மக்களடர்த்தி கொண்டதாகும் உள்ளன.
கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர் காசி மாவட்டத்தில் 7010மீ உயரத்தில் கங்கோத்ரி பனியாற்றிலிருந்து பாகிரதி என்னும் பெயருடன் உற்பத்தியாகிறது.
இந்நதியின் நீளம் சுமார் 2525 கி.மீ. ஆகும்.
வட பகுதியிலிருந்து கோமதி, காக்ரா, கண்டக், கோசி மற்றும் தென் பகுதியிலிருந்து யமுனை, சோன், சாம்பல் போன்ற துணையாறுகள் கங்கையுடன் இணைகின்றன. வங்கதேசத்தில், கங்கை பத்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
10th Social Science Guide இந்தியா – அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Question 1.
ஆசிய கண்ட த்தில் இந்தியா …………….. பெரிய நாடு.
அ) ஏழாவது
ஆ) இரண்டாவது
இ) மூன்றாவது
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இரண்டாவது
Question 2.
இந்தியா ……………… நாட்டுடன் தனது மிக நீண்ட எல்லையைப் பகிர்கிறது.
அ) ஆப்கானிஸ்தான்
ஆ) சீனா
இ) மூன்றாவது
ஈ) பங்களாதேஷ்
விடை:
ஈ) பங்களாதேஷ்
Question 3.
இந்தியக் கடற்கரை …………….. பகுதிகளைக் கொண்டது.
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) ஆறு
விடை:
ஆ) மூன்று
Question 4.
இந்திய நிலப்பகுதியின் தென்கோடி முனை ……………. ஆகும்.
அ) இந்திரா முனை
ஆ) குமரி முனை
இ) இந்திரா கோல்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) குமரி முனை
Question 5.
இந்தியா ஏறத்தாழ ……………… தீர்க்க கோடுகளை கொண்டுள்ளது.
அ) 40
ஆ) 30
இ) 20
ஈ) 10
விடை:
ஆ) 30
Question 6.
இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை ……………… ஆகும்.
அ) 8°4’வ
ஆ) 37°6’வ
இ) 85°30’கி
ஈ) 82°30’கி
விடை:
ஈ) 82°30’கி
Question 7.
மத்திய தீர்க்க ரேகை …………. வழியே செல்கிறது.
அ) லாகூர்
ஆ) மிர்சாபூர்
இ) சபர்மதி
ஈ) வேதாரண்யம்
விடை:
ஆ) மிர்சாபூர்
Question 8.
ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகர் …………….. நகர்.
அ) டாமன் டையூ
ஆ) சண்டிகர்
இ) அமராவதி
ஈ) பாண்டிச்சேரி
விடை:
இ அமராவதி
Question 9.
இந்திய இயற்கையமைப்பு ……………. பெரும் பிரிவுகளைக் கொண்டது.
அ) 6
ஆ) 5
இ) 4
ஈ) 3
விடை:
ஆ) 5
Question 10.
“இமாலயா” என்ற சொல்லுக்கு ……………. மொழியில் பனி உறைவிடம் எனப் பொருள்.
அ) கிரேக்கம்
ஆ) சமஸ்கிருதம்
இ) லத்தீன்
ஈ) பெங்காலி
விடை:
ஆ) சமஸ்கிருதம்
Question 11.
இந்தியாவின் மிகப் பழமையான மடிப்பு மலைத் தொடர் ……………
அ) நீலகிரி
ஆ) திபெத்தியன்
இ) ஆரவல்லி
ஈ) பெங்காலி
விடை:
இ) ஆரவல்லி
Question 12.
ட்ரான்ஸ் இமயமலையின் மற்றொரு பெயர் …………. இமயமலை.
அ) கிழக்கு
ஆ) சர்வாதிரி
இ) திபெத்தியன்
ஈ) சிவாலிக்
விடை:
இ திபெத்தியன்
Question 13.
…………….. என்பது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.
அ) கிழக்கு
ஆ) இமயமலை
இ) ட்ரான்ஸ் இமயமலை
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) இமயமலை
Question 14.
உலகின் உயரமான சிகரங்கள் ………………….
அ) 12
ஆ) 14
இ) 41
ஈ) 21
விடை:
ஆ) 14
Question 15.
பூர்வாஞ்சல் குன்றுகள் ….. மாநிலங்களிடையே பரவியுள்ளது.
அ) வடகிழக்கு
ஆ) வடமேற்கு
இ) தென்மேற்கு
ஈ) தென்கிழக்கு
விடை:
அ) வடகிழக்கு
Question 16.
இமயமலை …………….ற்கு பெயர் பெற்றவை.
அ) சரணாலயம்
ஆ) உயிர்க்கோள காப்பகம்
இ) பல்லுயிர் மண்டலம்
ஈ) எதுவுமில்லை
விடை:
இ பல்லுயிர் மண்டலம்
Question 17.
சிந்துவின் துணையாறுகள் …………………. ஆகும்.
அ) 4
ஆ) 5
இ) 6
ஈ) 7
விடை:
ஆ) 5
Question 18.
இந்தியாவின் மிகப்பெரிய வடிகாலமைப்பு ……………… ஆகும்.
அ) சிந்து
ஆ) பிரம்மபுத்திரா
இ) கங்கை
ஈ) வைகை
விடை:
இ கங்கை
Question 19.
…………….. விருத்தகங்கா எனப்படுகிறது.
அ) மகாந்தி
ஆ) கோதாவரி
இ) கிருஷ்ணா
ஈ) காவிரி
விடை:
ஆ) கோதாவரி
Question 20.
……………… இந்தியாவின் முக்கிய தீபகற்ப ஆறு.
அ) நர்மதை
ஆ) தபதி
இ) மாஹி
ஈ) ஸ்ரீரங்கம்
விடை:
ஆ) தபதி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
இந்தியா பரப்பளவில் உலகின் ………… பெரிய நாடு.
விடை:
ஏழாவது
Question 2.
இந்தியாவின் நிலப்பரப்பு ………………… ச.கி.மீ.
விடை:
32,87,263
Question 3.
……………. 15,200 கி.மீ. நில எல்லைகளைக் கொண்டுள்ளது.
விடை:
இந்தியா
Question 4.
இந்தியா ஒரு ………….. ஆகும்.
விடை:
தீபகற்பம்
Question 5.
இந்தியக் கடற்கரையின் மொத்த நீளம் …………… ஆகும்.
விடை:
7,516.6 கி.மீ.
Question 6.
இந்தியாவையும், இலங்கையையும் பிரிக்கும் கடல் பகுதி ……….. ஆகும்.
விடை:
பாக்நீர்ச்சந்தி
Question 7.
இந்தியா ஒரு ………………. ஆகும்.
விடை:
துணைக்கண்டம்
Question 8.
இந்தியாவின் தென்கோடி முனை ……………. ஆகும்.
விடை:
இந்திரா முனை
Question 9.
இந்தியாவின் வடமுனை …………… என அழைக்கப்படுகின்றது.
விடை:
இந்திரா கோல்
Question 10.
…………… இமயமலையின் கிழக்கு கிளையாகும்.
விடை:
பூர்வாஞ்சல் குன்றுகள்
Question 11.
இமயமலையின் மத்திய மலைத்தொடர் ……………… ஆகும்.
விடை:
இமாச்சல்
Question 12.
இமயமலையின் வடக்கே ………………………. உள்ளது.
விடை:
இமாத்ரி
Question 13.
ஆறுகளால் கொண்டுவரப்படும் படியவைக்கப்படும் புதிய வண்டல்மண் ……….. எனப்படும்.
விடை:
காதர்
Question 14.
காதர் நிலத்தின் மற்றொரு பெயர் ……………… ஆகும்.
விடை:
பெட்நிலம்
Question 15.
கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர். ……….. எனப்படுகிறது.
விடை:
பூர்வாதிரி
III. பொருத்துக.
விடை:
IV. காரணம் கூறுக.
Question 1.
இந்தியா ஒரு துணைக்கண்டம்.
விடை:
இயற்கை நில அமைப்பு, காலநிலை இயற்கைத் தாவரம் கனிமங்கள் மற்றும் மனிதவளத்தில் ஒரு கண்டத்தில் காணப்படும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால், இந்தியா துணைக்கண்டம் எனப்படுகிறது.
Question 2.
வடபெரும் சமவெளி = உலகிலேயே வளமான சமவெளி.
விடை:
துணையாறுகளால் உருவாக்கப்பட்ட வண்டல் மண் படிவுகளைக் கொண்டுள்ளது.
V. வேறுபடுத்துக.
Question 1.
இமாத்ரி மற்றும் இமாச்சல்
விடை:
Question 2.
இராஜஸ்தான் சமவெளி மற்றும் பஞ்சாப் ஹரியானா சமவெளி
விடை:
Question 3.
இந்திய திட்ட நேரம் மற்றும் உலகத் திட்ட நேரம்
விடை:
VI. சுருக்கமாக விடையளி.
Question 1.
பிரம்மபுத்திரா சமவெளி – குறிப்பு வரைக.
விடை:
- பிரம்மபுத்திரா சமவெளியின் பெரும்பகுதி அஸ்ஸாமில் அமைந்துள்ளது.
- பிரம்மபுத்திரா ஆற்றினால் உருவாக்கப்பட்ட ஒரு தாழ்நில சமவெளியாக வடபெரும் சமவெளியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
- சுமார் 56,275 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வண்டல் விசிறிகளாகவும், தராய் எனப்படும் சதுப்பு நிலக் காடுகளாகவும் காணப்படுகிறது.
Question 2.
ஏன் இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது?
விடை:
பாகிஸ்தான், மியான்மர், வங்காள தேசம், நேபாளம், பூடான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.
இயற்கை நில அமைப்பு, காலநிலை, இயற்கைத் தாவரம், கனிமங்கள் மற்றும் மனித வளங்கள் போன்றவற்றில் ஒரு கண்டத்தில் காணப்படக்கூடிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளதால் இந்தியா ஒரு துணைக்கண்டம் என அழைக்கப்படுகிறது.
Question 3.
இயற்கை அமைப்பின் பிரிவுகள் யாவை?
விடை:
இயற்கை அமைப்பை 5 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை,
- வடக்கு மலைகள்
- வடபெரும் சமவெளிகள்
- தீபகற்ப பீடபூமிகள்
- கடற்கரைச் சமவெளிகள்
- தீவுகள்
Question 4.
கடற்கரைச் சமவெளி – குறிப்பு வரைக.
விடை:
- இந்திய தீபகற்ப பீடபூமி குறுகலான, வேறுபட்ட அகலத்தையுடைய வடக்கு தெற்காக அமைந்துள்ள கடற்கரைகளால் சூழப்பட்டுள்ளது.
- இக்கடற்கரைச் சமவெளிகள் ஆறுகள், கடல் அலைகள் ஆகியவற்றின் அரித்தல் மற்றும் படிய வைத்தல் செயல்களால் உருவானவை.
Question 5.
ஆறுகளின் வகைகள் யாவை?
விடை:
ஆறுகளை இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.
இமயமலை ஆறுகள் :
சிந்து, பிரம்மபுத்திரா, கங்கை
தீபகற்ப ஆறுகள் :
நர்மதை, கோதாவரி, தபதி, காவிரி, மகாநதி, கிருஷ்ணா.
Question 6.
இமயமலையில் தோன்றும் ஆறுகளின் சிறப்பு இயல்புகள் யாவை?
விடை:
- நீளமானவை மற்றும் அகலமானவை.
- வற்றாத நதிகள்
- நீர்மின் உற்பத்தி செய்ய இயலாத நிலை
- ஆற்றின் மத்திய மற்றும் கீழ்நிலைப்பகுதிகள் போக்குவரத்திற்கு ஏற்றது.
Question 7.
தென்னிந்திய ஆறுகளின் சிறப்பியல்புகள் யாவை?
விடை:
- மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது.
- குறுகலான மற்றும் நீளம் குறைந்தவை.
- வற்றும் ஆறுகள்
- நீர் மின்சாரம் உற்பத்திக்கு ஏற்றது.
VII. ஒரு பத்தியில் விடையளிக்கவும்.
Question 1.
இமயமலையின் முக்கியத்துவத்தை விவரி.
விடை:
இமயமலையின் முக்கியத்துவம்:
- தென்மேற்கு பருவக்காற்றைத் தடுத்து வட இந்திய பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
- இந்திய துணைக்கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.
- வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது. (எ.கா) சிந்து, கங்கை , பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகள்.
- இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
- பல கோடைவாழிடங்களும், புனித தலங்களான அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
- வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
- மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர்காற்றை தடுத்து இந்தியாவை குளிரிலிருந்து பாதுகாக்கிறது.
- இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை.
Question 2.
அந்தமான் நிக்கோபர் தீவுகள் பற்றி விவரி.
விடை:
- இத்தீவுக் கூட்டங்கள் கடலடி மலைத்தொடரின் மேல் பகுதியாக அமைந்துள்ளன.
- பூமத்தியரேகைக்கு அருகில் உள்ளதாலும், அதிக ஈரப்பதம், அதிக வெப்பம் கொண்ட காலநிலை நிலவுவதாலும் அடர்ந்த காடுகள் இங்கு காணப்படுகின்றன.
- இத்தீவின் பரப்பளவு 8,249 ச.கி.மீ ஆகும்.
- இத்தீவுக் கூட்டத்தை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம்.
- அவை வட பகுதி தீவுகள் அந்தமான் எனவும் தென் பகுதி தீவுகள், நிக்கோபர் எனவும் அழைக்கப்படுகின்றன.
- இத்தீவுக் கூட்டங்கள் நாட்டின் அமைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
- இதன் நிர்வாகத் தலைநகரம் போர்ட் பிளேயர் ஆகும்.
- அந்தமான் தீவுக் கூட்டங்களை நிக்கோபர் தீவுக் கூட்டங்களிலிருந்து 100 கால்வாய் பிரிக்கிறது.
VIII. செயல்பாடுகள்
கங்கை ஆறு பாயும் மாநிலங்களை இந்திய நிலவரைபடத்தில் குறிக்கவும்.
கங்கை ஆறு பாயும் மாநிலங்கள்
1. உத்தரக்கண்ட்
2. உத்திரப்பிரதேசம்
3. பீகார்
4. மேற்கு வங்காளம்