Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Social Science Guide Pdf Civics Chapter 3 மாநில அரசு Textbook Questions, and Answers, Notes.

TN Board 10th Social Science Solutions Civics Chapter 3 மாநில அரசு

10th Social Science Guide மாநில அரசு Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
மாநில ஆளுநரை நியமிப்பவர் ……………..
அ) பிரதமர்
ஆ) முதலமைச்சர்
இ) குடியரசுத் தலைவர்
ஈ) தலைமை நீதிபதி
விடை:
இ குடியரசுத் தலைவர்

Question 2.
மாநில சபாநாயகர் ஒரு ……………..
அ) மாநிலத் தலைவர்
ஆ) அரசின் தலைவர்
இ) குடியரசுத் தலைவரின் முகவர்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

Question 3.
கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல ……………….
அ) சட்டமன்றம்
ஆ) நிர்வாகம்
இ) நீதித்துறை ஈ) தூதரகம்
விடை:
ஈ) தூதரகம்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 4.
ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?
அ) குடியரசுத் தலைவர்
ஆ) ஆளுநர்
இ) முதலமைச்சர்
ஈ) சட்டமன்ற சபாநாயகர்
விடை:
ஆ) ஆளுநர்

Question 5.
ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை …………………
அ) முதலமைச்சர்
ஆ) அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர்
இ) மாநில தலைமை வழக்குரைஞர்
ஈ) உயர்நீதிமன்ற நீதிபதிகள்
விடை:
ஈ) உயர்நீதிமன்ற நீதிபதிகள்

Question 6.
அமைச்சரவையின் தலைவர் ………………..
அ) முதலமைச்சர்
ஆ) ஆளுநர்
இ) சபாநாயகர்
ஈ) பிரதம அமைச்சர்
விடை:
அ) முதலமைச்சர்

Question 7.
மேலவை உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது ………………..
அ) 25 வயது
ஆ) 21 வயது
இ) 30 வயது
ஈ) 35 வயது
விடை:
இ 30 வயது

Question 8.
கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை.
அ) ஆந்திரப் பிரதேசம்
ஆ) தெலுங்கானா
இ) தமிழ்நாடு
ஈ) உத்திரப் பிரதேசம்
விடை:
இ) தமிழ்நாடு

Question 9.
இந்தியாவில் முதன் முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்
அ) கொல்கத்தா, மும்பை, சென்னை
ஆ) டெல்லி மற்றும் கொல்கத்தா
இ) டெல்லி, கொல்கத்தா, சென்னை
ஈ) கொல்கத்தா, சென்னை, டெல்லி
விடை:
அ) கொல்கத்தா, மும்பை, சென்னை

Question 10.
கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?
அ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்
ஆ) கேரளா மற்றும் தெலுங்கானா
இ) பஞ்சாப் மற்றும் ஹரியானா
ஈ) மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
விடை:
இ பஞ்சாப் மற்றும் ஹரியானா

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை ………………. இடம் கொடுக்கிறார்.
விடை:
குடியரசுத் தலைவர்

Question 2.
சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) ……………… ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
விடை:
மக்களால்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 3.
………………. மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்.
விடை:
ஆளுநர்

Question 4.
அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ……………..ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.
விடை:
குடியரசுத் தலைவர்

III. பொருத்துக .

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 1
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 2

IV. சரியான கூற்றினை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு.
காரணம் : குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப் பட்டியலிலுள்ள சில மசோதாக்களைச் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யலாம்.

அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
விடை:
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

V. சுருக்கமான விடையளி.

Question 1.
மாநில ஆளுநரின் முக்கியத்துவம் என்ன?
விடை:

  • மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் ஆளுநர் ஆவார்.
  • மாநில ஆளுநரின் பெயரில் மாநில நிர்வாகம் செயல்படுகிறது.
  • ஆளுநர், மாநில நிர்வாகத்தின் தலைவராக செயல்படுவது மட்டுமல்லாமல் ஏராளமான அதிகாரங்கள் பெற்றவராகவும் திகழ்கிறார்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 2.
ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன?
விடை:

  • அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
  • நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவர் இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

Question 3.
உயர் நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையறை அதிகாரங்கள் யாவை?
விடை:
சென்னை, மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன.

மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையறையை பயன்படுத்தி மாகாண நீதிபதிகள் விசாரிக்க முடியும்.

Question 4.
உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் பற்றி நீவிர் புரிந்து கொண்டதென்ன?
விடை:
உயர்நீதி மன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்) விசாரிக்கின்றன.

நாட்டின், இராணுவ தீர்ப்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரம் இல்லை.

VI. விரிவான விடையளி.

Question 1.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
விடை:
1. அமைச்சரவை தொடர்பானவை:

  • முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
  • அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார். – தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
  • அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
  • அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

2. ஆளுநர் தொடர்பானவை:

  • கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
  • மாநில அரசு வழக்குரைஞர்
  • மாநில தேர்தல் ஆணையர்
  • அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
  • மாநில திட்டக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
  • மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

3. சட்டமன்றம் தொடர்பானவை:

  • சட்டமன்ற கூட்டத்தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
  • சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
  • சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
  • எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.

Question 2.
ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி.
விடை:
சட்டமன்ற அதிகாரங்கள் :

  • ஆளுநர் மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார்.
  • ஆனால் அவர் சட்டமன்றத்தின் உறுப்பினராக இல்லை.
  • ஆளுநர் பின்வரும் சட்டமன்ற அதிகாரங்களைப் பெற்றுள்ளார்.
  • ஆளுநர் சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும் ஒத்திவைக்கவும் சட்டமன்றத்தைக் கலைக்கவும் உரிமைப் பெற்றுள்ளார்.
  • தேர்தல் முடிந்து சட்டசபை அமைந்த முதல் கூட்டத்தொடரிலும் மற்றும் ஒவ்வொரு ஆண்டு முதல் கூட்டத்திலும் உரையாற்றுகின்றனர்.
  • நிலுவையிலுள்ள மசோதா குறித்து சட்டமன்ற அவைகளுக்கு ஆளுநர் செய்தி அனுப்பலாம்.
  • சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பணியிடம் காலியாக இருக்கும் பொழுது சட்டமன்றத்தை தலைமை ஏற்று நடத்த எந்த சட்டமன்ற உறுப்பினரை வேண்டுமானாலும் ஆளுநர் நியமனம் செய்யலாம்.
  • ஆங்கிலோ-இந்தியன் வகுப்பினரிலிருந்து ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்றத்திற்கு நியமனம் செய்யலாம்.
  • மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பமிட்ட பின்னர் மட்டுமே சட்டமாகும்.
  • அரசியலமைப்பு சட்டப்பிரிவு 213இன் கீழ் ஆளுநர் மாநில சட்டமன்றம் நடைபெறாத பொழுது அவசர சட்டத்தைப் பிறப்பிக்கலாம்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 3.
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.
விடை:
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்:

  • மாநில அரசின் கொள்கைகளை உருவாக்கி அவற்றை உறுதியாக நடைமுறைப்படுத்துகிறது.
  • சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செய்து எல்லா முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.
  • நிதிக்கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்காக வரிக்கொள்கையை முடிவு செய்கிறது.
  • முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.
  • மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்கிறது.
  • மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.
  • ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று தீர்மானிக்கிறது.
  • அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.
  • ஆண்டு வரவு- செலவு திட்டம் அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது.

10th Social Science Guide மாநில அரசு Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.

Question 1.
மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் …………….. ஆவார்.
அ) முதலமைச்சர்
ஆ) ஆளுநர்
இ) குடியரசு தலைவர்
ஈ) பிரதமர்
விடை:
ஆ) ஆளுநர்

Question 2.
மாநில ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தைப் பற்றி கூறும் ……………. ஆகும்.
அ) சட்டப்பிரிவு 157
ஆ) சட்டப்பிரிவு 356
இ) சட்டப்பிரிவு 154
ஈ) சட்டப்பிரிவு 158
விடை:
இ சட்டப்பிரிவு 154

Question 3.
ஒருவரை ஒரு மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுவதில் ………………. மரபுகள் பின்பற்றப்படுகிறது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
விடை:
அ) இரண்டு

Question 4.
……………… மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார்.
அ) முதலமைச்சர்
ஆ) ஆளுநர்
இ) குடியரசுத் தலைவர்
ஈ) பிரதமர்
விடை:
அ) முதலமைச்சர்

Question 5.
ஆண்டு வரவு செலவு திட்டம் ……………… ஆல் இறுதி செய்யப்படுகிறது.
அ) சட்டமேலவை
ஆ) சட்டமன்ற பேரவை
இ) அமைச்சரவை
ஈ) எதுவும் இல்லை
விடை:
இ அமைச்சரவை

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 6.
……………இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை மசோதா மூலம் சட்டமேலவை நீக்கப்பட்டது.
அ) 1956
ஆ) 1986
இ) 1862
ஈ) 1950
விடை:
ஆ) 1986

Question 7.
மெட்ராஸ் உயர்நீதிமன்ற வளாகம் உலகிலேயே ………………க்கு அடுத்து இரண்டாவது பெரிய நீதித்துறை வளாகமாகும்.
அ) பாம்பே
ஆ) கொல்கத்தா
இ) சண்டிகர்
ஈ) லண்டன்
விடை:
ஈ) லண்டன்

Question 8.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை ……………… தீர்மானிக்கப்படுகிறது.
அ) பிரதமர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) முதலமைச்சர்
ஈ) ஆளுநா
விடை:
ஆ) குடியரசுத் தலைவர்

Question 9.
……………… ஒரு மாநிலமாக இல்லாத போதும் தனக்கென்று சொந்தமாக ஓர் உயர் நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது.
அ) சென்னை
ஆ) ஹைதராபாத்
இ) டெல்லி
ஈ) கொல்கத்தா
விடை:
இ டெல்லி

Question 10.
1862இல் ……………. கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டன.
அ) உயர் நீதிமன்றங்கள்
ஆ) உச்ச நீதிமன்றங்கள்
இ) மாவட்ட நீதிமன்றங்கள்
ஈ) எதுவும் இல்லை
விடை:
அ) உயர் நீதிமன்றங்கள்

Question 11.
சட்டமேலவை தேர்தலில் …… ……….. பங்கு உறுப்பினர்கள் பட்டதாரி ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
அ) 1/3
ஆ) 1/12
இ) 1/6
ஈ) 1/10
விடை:
1/12

Question 12.
சட்டமேலவை உறுப்பினர்களின் பதவி காலம் ……………. ஆகும்.
அ) 5 ஆண்டுகள்
ஆ) 6 ஆண்டுகள்
இ) 4 ஆண்டுகள்
ஈ) எதுவுமில்லை
விடை:
ஆ) 6 ஆண்டுகள்

Question 13.
சட்டமன்ற கீழவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை ……………. பங்கிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அ) 1/3
ஆ) 2/3
இ) 1/4
ஈ) 2/4
விடை:
அ) 1/3

Question 14.
அமைச்சரவையானது ……………… க்கு பொறுப்பானது.
அ) சட்டமேலவை
ஆ) நிர்வாகத்துறை
இ) சட்டமன்றம்
ஈ) இரண்டும் (ஆ) மற்றும் (இ)
விடை:
இ சட்டமன்றம்

Question 15.
…………….. ஆளுநரால் முதலமைச்சர் நியமிக்கப்படுவதை கூறுகிறது.
அ) சட்டப்பிரிவு 164 (1A)
ஆ) சட்டப்பிரிவு 164 (1)
இ) சட்டப்பிரிவு 163
ஈ) சட்டப்பிரிவு 361
விடை:
ஆ) சட்டப்பிரிவு 1640

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்திய அரசியலமைப்பு ……………… அரசாங்கத்தை வழங்குகிறது.
விடை:
கூட்டாச்சி

Question 2.
…………… மாநில சட்டமன்றத்தின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாவார்.
விடை:
ஆளுநர்

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 3.
ஆளுநரின் முன் அனுமதியுடன்தான் ………………. சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்.
விடை:
பண மசோதாவை

Question 4.
மாநில அரசின் …………… நீதித்துறை அதிகாரங்கள் மூலம் ஆளுநர் நியமனம் செய்கிறார்.
விடை:
தலைமை வழக்குரைஞரை

Question 5.
ஆளுநர் மாநிலத்தின் …………… ஆவார்.
விடை:
பெயரளவு நிர்வாகி

Question 6.
அரசியலமைப்பு ………………. ஆளுநருக்கு ஆலோசனைகள் வழங்க அமைச்சரவையை உருவாக்க வழிவகை செய்கிறது.
விடை:
சட்டப்பிரிவு 163

Question 7.
……………… என்ற சிறிய அமைப்பானது அமைச்சரவையின் உட்கரு ஆகும்.
விடை:
அமைச்சரவை

Question 8.
சட்டமன்ற உறுப்பினர்களிடையே ……………… மற்றும் ………………. தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
விடை:
சபாநாயகர், துணை சபாநாயகர்

Question 9.
……………… இந்திய மாநில சட்டமன்றங்களில் ஓர் அங்கமாக செயல்படுகிறது.
விடை:
சட்டமேலவை

Question 10.
முதலமைச்சர் …………….. ஆவார்.
விடை:
உண்மையான நிர்வாகி

Question 11.
சட்ட மேலவை ………………. கூட்டத்தைத் தலைமையேற்று நடத்துகிறார்.
விடை:
சட்டப்பிரிவு 169

Question 12.
முதலமைச்சர் என்பவர் ……………… ஆவார்.
விடை:
அரசாங்கத்தின் தலைவர்

Question 13.
பொதுப்பட்டியலிலும் ……………… சட்டம் இயற்றலாம்.
விடை:
சட்டமன்றம்

Question 14.
சட்டமன்றம் மாநிலத்தின் …………….. கட்டுப்படுத்துகிறது.
விடை:
நிதி நிலையைக்

Question 15.
………….ஆம் ஆண்டு ஏழாவது திருத்தச் சட்டம் அங்கிகரிக்கப்பட்டது.
விடை:
1956

III. பொருத்துக.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 3
விடை:
Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு 4

IV. சரியான கூற்றினை தேர்வு செய்க.

Question 1.
கூற்று : மாநில சட்டமன்றம் பிரபலமான ஓர் அவை ஆகும்.
காரணம் : சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 500 இருக்க வேண்டும்.

அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
விடை:
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 2.
கூற்று : இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி அரசாங்கத்தை வழங்குகிறது.
காரணம் : கூட்டாச்சியில் தேசியத் தலைநகரான டெல்லியுடன் 9 யூனியன் பிரதேசங்கள் மற்றும் 28 மாநிலங்கள் உள்ளன.

அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
இ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
விடை:
இ கூற்று மற்றும் காரணம் சரி மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

V. சுருக்கமான விடையளி.

Question 1.
சட்ட மேலவை குறிப்பு வரைக.
விடை:

  • சட்டமன்ற மேலவை சட்டமேலவை என்றும் அழைக்கப்படுகிறது.
  • சட்டமேலவை (விதான் பரிஷத்) இந்திய மாநில சட்டமன்றங்களில் ஓர் அங்கமாக செயல்படுகிறது. இந்தியாவின் 28 மாநிலங்களில் 6 மாநிலங்களில் சட்டமேலவை உள்ளது.
  • 1986இல் இயற்றப்பட்ட தமிழ்நாடு சட்ட மேலவை (நீக்கம்) மசோதா மூலம் தமிழ்நாட்டில் சட்ட மேலவை நீக்கப்பட்டது. இச்சட்டம் 1986 நவம்பர் முதல் நாளன்று நடைமுறைக்கு வந்தது.

Question 2.
அமைச்சரவை மற்றும் அமைச்சரவை குழுக்கள் என்றால் என்ன?
விடை:

  • அமைச்சரவை என்ற சிறிய அமைப்பானது அமைச்சரவையின் உட்கரு ஆகும்.
  • இது காபினெட் அமைச்சர்களை மட்டும் உள்ளடக்கியது.
  • இதுவே மாநில அரசின் உண்மையான அதிகார மையமாக விளங்குகிறது.
  • அமைச்சரவை குழுக்கள் எனப்படும் வெவ்வேறு குழுக்கள் மூலம் காபினெட் செயலாற்றுகிறது. அவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. அவை: ஒன்று நிரந்தரமானது மற்றொன்று தற்காலிகமானது ஆகும்.

Question 3.
முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
விடை:

  • முதலமைச்சர் மாநில ஆளுநரால் நியமனம் செய்யப்படுகிறார்.
  • முதலமைச்சரின் பதவிக்காலம் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல.
  • சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு எவ்வளவு காலத்திற்கு தொடர்கிறதோ அதுவரை அவர் முதலமைச்சராக நீடிக்கலாம்.
  • சட்டமன்றத்தில் எப்பொழுது அவர் பெரும்பான்மையை இழக்கிறாரோ அப்பொழுது தனது பதவியை இராஜினாமா செய்கிறார்.

Question 4.
சபாநாயகர் குறிப்பு வரைக.
விடை:

  • சட்டமன்ற உறுப்பினர்களிடையே சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
  • சட்டமன்றம் கலைக்கப்படும்பொழுது சபாநாயகர் தமது பதவியை இழக்க மாட்டார்.
  • சபாநாயகர் இல்லாதபோது அவரது பணியைத் துணை சபாநாயகர் மேற்கொள்கிறார்.

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

Question 5.
ஆவணங்களின் பாதுகாப்புப் பெட்டகம் வரையறு.
விடை:

  • உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் அச்சடிக்கப்பட்டு சான்றாதாரமாக பாதுகாக்கப்படுகின்றன.
  • எதிர்காலத்தில் எழும் கேள்விகளுக்கு தீர்வாக கடந்த கால தீர்ப்புகள் உதவுகின்றன.
  • இதனால் உயர் நீதிமன்றம் பதிவேடுகளின் நீதிமன்றமாக செயல்படுகிறது.

VI. விரிவான விடையளி.

Question 1.
ஆளுநரின் நிர்வாக அதிகாரங்கள் பற்றி விவரி.
விடை:
நிர்வாக அதிகாரங்கள் :

  • மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சியின் தலைவரை முதலமைச்சராக ஆளுநர் நியமனம் செய்கிறார்.
  • முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
  • அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.
  • மாநில தலைமை தேர்தல் அதிகாரியை நியமனம் செய்து, அவரது பணிக்காலம், பணியின் தன்மையைத் தீர்மானிக்கிறார்.
  • ஆளுநர், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவதுடன், துணை வேந்தர்களையும் நியமனம் செய்கிறார்.
  • குடியரசுத் தலைவரின் அவசரநிலை பிரகடனம் செய்யப்படும் பொழுது, குடியரசுத் தலைவரின் பெயரில் இவரே மாநிலத்தை நேரடியாக ஆட்சி செய்கிறார்..

Question 2.
சட்டமன்றத்தின் செயல்பாடுகளை விவரி.
விடை:
சட்டமன்ற அதிகாரங்கள்:

  • அரசியலமைப்பின்படி மாநிலப் பட்டியலிலுள்ள அனைத்துத் துறைகள் மீதும் சட்டமன்றம் சட்டத்தை நிறைவேற்றலாம்.
  • பொதுப்பட்டியலிலும் சட்டமன்றம் சட்டம் இயற்றலாம்.
  • ஆனால் அதே சட்டத்தை நடுவண் அரசு இயற்றும்பொழுது மாநில அரசின் சட்டம் செயலற்றதாகி விடும்.
  •  மத்திய நாடாளுமன்ற நடைமுறையைப் போன்றே மாநில சட்டமன்றத்தின் மசோதாவும் சட்டமாக நிறைவேற்றுகிறது.

நிதி அதிகாரங்கள்:

  • சட்டமன்றம் மாநிலத்தின் நிதி நிலையைக் கட்டுப்படுத்துகிறது.
  • சட்டமன்றக் கீழவையானது மேலவையைக் காட்டிலும் பண நடவடிக்கைகளில் அதிக அதிகாரத்தைப் பெற்றுள்ளது.
  • பண மசோதா கீழவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும்.
  • சட்டமன்றக் கீழவையின் அனுமதியின்றி புதிய வரிகளை விதிக்க முடியாது.

நிர்வாகத் துறையின் மீது கட்டுப்பாடுகள்:

  • அமைச்சரவையானது சட்டமன்றத்திற்குப் பொறுப்பானது.
  • சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்.
  • அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்.

Question 3.
ஆளுநரின் நீதித்துறை மற்றும் விருப்புரிமை அதிகாரங்களை விவரி.
விடை:
நீதித்துறை அதிகாரங்கள்:

  • மாநில அரசின் தலைமை வழக்குரைஞரை நியமனம் செய்கிறார்.
  • உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நீதிபதிகளின் நியமனம் மற்றும் பதவி உயர்வு போன்ற பணிகளை மேற்கொள்கிறார்.
  • ஆளுநரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்கிறார்.
  • குற்றவாளிகளின் கருணை மனு அடிப்படையில் குற்றவாளிகளை மன்னிக்கலாம் அல்லது குற்றவாளிகளின் தண்டனையைக் குறைக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம். (மரண தண்டனையைப் பெற்ற குற்றவாளியைத் தவிர)

Samacheer Kalvi 10th Social Science Guide Civics Chapter 3 மாநில அரசு

விருப்புரிமை அதிகாரங்கள்:

  • குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் ஒரு மசோதாவை நிறுத்தி வைக்க முடியும்.
  • மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மையைப் பெறாத போது, ஆளுநர் எந்தக் கட்சி தலைவரையும் ஆட்சி அமைக்க அழைக்கலாம்.
  • சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால் அமைச்சரவையை ஆளுநர் கலைக்க முடியும்.