Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 10th Maths Guide Pdf Chapter 8 புள்ளியியலும் நிகழ்தகவும் Ex 8.5 Textbook Questions and Answers, Notes.

TN Board 10th Maths Solutions Chapter 8 புள்ளியியலும் நிகழ்தகவும் Ex 8.5

கேள்வி 1.
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவைகள் இல்லை?
அ) வீச்சு
ஆ) திட்டவிலக்கம்
இ) கூட்டுச் சராசரி
ஈ) விலக்க வர்க்கச் சராசரி
விடை :
இ) கூட்டுச் சராசரி

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 8 புள்ளியியலும் நிகழ்தகவும் Ex 8.5

கேள்வி 2.
8,8,8,8,8,…… 8 ஆகிய தரவின் வீச்சு
அ) 0
ஆ) 1
இ) 8
ஈ) 3
விடை :
அ) 0
தீர்வு :
வீச்சு = L – S = 8 – 8 = 0

கேள்வி 3.
சராசரியிலிருந்து கிடைக்கப் பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது
அ) எப்பொழுதும் மிகை எண்
ஆ) எப்பொழுதும் குறை எண்
இ) பூச்சியம்
ஈ) பூச்சியமற்ற முழுக்கள்
விடை :
இ) பூச்சியம்
தீர்வு :
Σ(x-\(\bar{x}\)) = 0

கேள்வி 4.
100 தரவு புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்டவிலக்கம் 3 எனில் விலக்கங்களின் வர்க்கக் கூடுதலானது
அ) 40000
ஆ) 160900
இ) 160000
ஈ) 30000
விடை :
ஆ) 160900
தீர்வு :
n = 100 \(\bar{x}\) = 40 σ = 3
σ2 = \(\frac{\sum x^{2}}{n}-(\bar{x})^{2}\)
9 = \(\frac{\sum}{100}(40)\)
\(\) = 9 + 1600 = 1609
Σx2 = 160900

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 8 புள்ளியியலும் நிகழ்தகவும் Ex 8.5

கேள்வி 5.
முதல் 20 இயல் எண்களின் விலக்கவர்க்கச் சராசரியானது
அ) 32.25
ஆ) 44.25
இ) 33.25
ஈ) 30
விடை :
இ) 33.25
தீர்வு :
σ = \(\frac{n^{2}-1}{12}=\frac{20^{2}-1}{12}=\frac{400-1}{12}=\frac{399}{12}\) = 33.25

கேள்வி 6.
ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5 ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது
அ) 3
ஆ) 15
இ) 5
ஈ) 225
விடை :
ஈ) 225
தீர்வு :
σ = 3
புதிய திட்டவிலக்கம் = 3 x 5 = 15
σ2 = 152 = 225

கேள்வி 7.
x, y, z ஆகியவற்றின் திட்டவிலக்கம் P எனில் 3x+5, 3y+5, 3z+5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது
அ) 3p+5
ஆ) 3p
இ) p+5
ஈ) 9p+15
விடை :
ஆ) 3p
தீர்வு:
x, y, z உடன் 5 ஜ கூட்டினால் திட்டவிலக்கம் மாறாது. மற்றும் 3 ஆல் பெருக்கினால் புதியதிட்டவிலக்கமும் 3 ஆல் பெருக்கல்
புதிய திட்டவிலக்கம் σ is 3p

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 8 புள்ளியியலும் நிகழ்தகவும் Ex 8.5

கேள்வி 8.
ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக்கெழு முறையே 4மற்றும் 87.5% எனில் திட்டவிலக்கமானது
அ) 3.5
ஆ) 3
இ) 4.5
ஈ) 2.5
விடை :
அ) 3.5
தீர்வு :
σ = \(\frac{\mathrm{C.V} \times \bar{x}}{100}=\frac{87.5 \times 4}{100}\) = 3.5

கேள்வி 9.
கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?
அ) P(A) > 1
ஆ) 0 ≤ P(A) ≤ 1
இ) P(Φ) = 0
ஈ) P(A) + P(A) = 1
விடை :
அ) P(A) > 1

கேள்வி 10.
p சிவப்பு 4 நீல , I பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவானது
அ) \(\frac{q}{p+q+r}\)
ஆ) \(\frac{p}{p+q+r}\)
இ) \(\frac{p+q}{p+q+r}\)
ஈ) \(\frac{p+r}{p+q+r}\)
விடை :
ஆ) \(\frac{p}{p+q+r}\)
தீர்வு :
n(s) = p+q+r
சிவப்பு கூழாங்கள் எடுப்பதற்கான நிகழ்தகவு = \(\frac{p}{p+q+r}\)

கேள்வி 11.
ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப்பக்க எண்ணின் ஒன்றாம் இடமதிப்பானது 7 ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவானது
அ) \(\frac{3}{10}\)
ஆ) \(\frac{7}{10}\)
இ) \(\frac{3}{9}\)
ஈ) \(\frac{7}{9}\)
விடை :
ஆ) \(\frac{7}{10}\)
தீர்வு :
S = ஒன்றாம் இடமதிப்பு = { 0, 1, 9} n(S) = 10
ஒன்றாம் இடமதிப்பு 7 ஐ விட குறைவாக இருக்க நிகழ்தகவு = \(\frac{7}{10}\)

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 8 புள்ளியியலும் நிகழ்தகவும் Ex 8.5

கேள்வி 12.
ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில் ன் மதிப்பானது
அ) 2
ஆ) 1
இ) 3
ஈ) 1.5
விடை :
ஆ) 1
தீர்வு :
A ஆனது வேலை கிடைப்பதற்கான நிகழ்ச்சி என்க =1
\(\frac{x}{3}+\frac{2}{3}\) = 1 ⇒ x + 2 = 3 = x = 3 – 2 = 1

கேள்வி 13.
கமலம் , குலுக்கல் போட்டியில் கலந்து கொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகர்
விற்கப்பட்டன. சமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 1/9 எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை அ) 5
ஆ) 10
இ) 15
ஈ) 20
விடை :
இ) 15
தீர்வு :
n(s) = 135 P(A) = \(\frac{1}{9}\)
\(\frac{n(A)}{n(S)}=\frac{1}{9} \quad \Rightarrow \frac{n(A)}{135}=\frac{1}{9}\)
n(A) = \(\frac{135}{9}\) =15

Samacheer Kalvi 10th Maths Guide Chapter 8 புள்ளியியலும் நிகழ்தகவும் Ex 8.5

கேள்வி 14.
ஆங்கில எழுத்துக்கள் (a, b,…. z} யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து : க்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு
அ) \(\frac{12}{13}\)
ஆ) \(\frac{1}{13}\)
இ) \(\frac{23}{26}\)
ஈ) \(\frac{3}{26}\)
விடை :
இ) \(\frac{23}{26}\)
தீர்வு :
n(S) = 26
x க்கு முந்தைய எழுத்துக்கள் தேர்ந்தெடுக்க நிகழ்தகவு = \(\frac{23}{26}\)

கேள்வி 15.
ஒரு பணப்பையில் ₹ 2000 நோட்டுகள் 10ம் 1500 நோட்டுகள் 15 ம் ₹200 நோட்டுகள் 25 ம் உள்ளன. ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றது. எனில், அந்த நோட்டு ₹500 நோட்டாகவோ அல்லது ₹ 200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
அ) \(\frac{1}{5}\)
ஆ) \(\frac{3}{10}\)
இ) \(\frac{2}{3}\)
ஈ) \(\frac{4}{5}\)
விடை :
ஈ) \(\frac{4}{5}\)
தீர்வு :
n(S) = 10 + 15 + 25 = 50
₹500 அல்லது ₹ 200 நோட்டாக இருப்பதற்கான நிகழ்தகவு = \(\frac{15}{50}+\frac{25}{50}=\frac{40}{50}=\frac{4}{5}\)