Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 4 அளைவகள் Ex 4.4 Textbook Questions and Answers, Notes.
TN Board 4th Maths Solutions Term 1 Chapter 4 அளைவகள் Ex 4.4
கேள்வி 1.
தீனு 15மீ 43 செ.மீ அளவுள்ள சட்டைத் துணியும் 23மீ 94 செ.மீ அளவுள்ள கால்சட்டைத் துணியும் வாங்கினான் எனில், அவன் வாங்கிய மொத்தத் துணியின் அளவு என்ன ?
தீர்வு:
தீனு எடுத்த மொத்த துணியின் அளவு = 39 மீ 37 செ.மீ
கேள்வி 2.
ஒரு மீனவர் 2 வலைகளை வாங்கினார். முதல் மற்றும் இரண்டாவது வலைகளின் நீளங்கள் முறையே 23மீ 43 செ.மீ, 25மீ 63 செ.மீ. வலைகளின் மொத்த நீளம் என்ன?
தீர்வு:
இரண்டு வலைகளின் மொத்த நீளம் = 49 மீ 6 செ.மீ
கேள்வி 3.
அகத்தியா தனது தோட்டத்தை வேலியிட 70மீ 42செ.மீ நீளமுள்ள முள்வேலி வாங்கினார். அவர் 43மீ 51செ.மீ நீளமுள்ள முள் வேலியை பயன்படுத்தினார். எனில், மீதமுள்ள முள்வேலியின் நீளத்தைக் காண்க.
தீர்வு:
மீதமுள்ள முள்வேலியின் நீளம் = 26 மீ 91 செ.மீ
கேள்வி 4.
ஒரு கடைக்காரர் 93மீ 75செ.மீ அளவுள்ள துணியின் இருப்பிலிருந்து 37மீ 69செ.மீ துணியை விற்றார் எனில், மீதம் இருப்பிலுள்ள துணியின் அளவு எவ்வளவு?
தீர்வு:
கடைக்காரரிடம் மீதம் உள்ள துணி 56 மீ. 6 செ.மீ
கேள்வி 5.
நான் ஒரு துணிக்கடையில் 125 மீட்டர்கள் ஆரஞ்சு நிற துணியையும் 50 மீட்டர்கள் மஞ்சள் நிற துணியையும் வாங்கினேன். 13 மீட்டர்கள் ஆரஞ்சு நிறத்துணியும் 12 மீட்டர்கள் மஞ்சள் நிறத்துணியும் பயன்படுத்தினேன். மீதமுள்ள மொத்த துணியின் அளவைக் காண்.
தீர்வு:
என்னிடம் மீதமுள்ள துணியின் நீளம் = 150 மீ
கேள்வி 6.
1மீ 15செமீ உயரமானவர் வேலு. அவனுடைய நண்பர் பாபு 1மீ 30செமீ உயரமானவர். இவர்களில் யார் அதிக உயரமானவர்? எவ்வளவு உயரம் அதிகம்?
தீர்வு:
விடை:
பாபு என்பவர் வேலுவை விட 15 செ.மீ உயரமானவர்.