Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 8 அறிவூட்டும் தொலைக்கா செய்திகள்
பக்கம் 48
இப்பாடத்தைப் பற்றி:
விடை:
இளவரசியும் பூங்குழலியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மழை பெய்கிறது. இருவரும் மழைக்கு ஒதுங்கி ஒரு கடையில் சென்று நிற்கிறார்கள். இளவரசி மழை பற்றியும் விமானம் பற்றியும் தொலைக்காட்சியில் தான் பார்த்தவற்றைப் பூங்குழலிக்கு விளக்குகிறாள்.
விமானமானது கருமேகங்களைத் தாண்டி உயரத்தில் பறக்கிறது. அதனால்தான் அது புயல், மேகமூட்டம், இடி, மழை போன்றவற்றால் பாதிக்கப்படுவதில்லை. அது மட்டுமல்ல. மழை பெய்து, இடி இடிக்கும்போது நாம் மரத்தடியில் சென்று நிற்கக் கூடாது. மரத்தடியில் நின்றால் இடி எளிதில் தாக்கி ஆபத்து விளைவிக்கும்.
இளவரசி கூறிய அறிவியல் கருத்துகளை பூங்குழலி உற்றுக் கேட்டாள். தொலைக்காட்சி என்றாலே வெறும் பொழுதுபோக்குக் கருவி என நினைத்திருந்த பூங்குழலிக்கு இத்தகைய அறிவியல் செய்திகள் வியப்பூட்டின. அறிவை விரிவடையச் செய்யும் பற்பல நிகழ்ச்சிகள் தொலைக்காட்சியில் இடம் பெறுவதை அறிந்து அவள் அகமகிழ்ந்தாள். தானும் இனி பயனுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பயனடைய வேண்டும் என உறுதி பூண்டாள்.
பக்கம் 50
வாங்க பேசலாம்
தொலைக்காட்சி, நம் கண்ணுக்கும் காதுக்கும் மட்டுமல்ல. அறிவுக்கும் விருந்தளிக்கும் என்பதைப் பிறருக்கு நீங்கள் எப்படி உணர்த்துவீர்கள்?
விடை:
தொலைக்காட்சி வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டும் அன்று. – அதில் அறிவுக்கு விருந்தளிக்கும் அற்புத நிகழ்ச்சிகள் பற்பல இடம் பெறுகின்றன.
அறிவியல் தொடர்பான செய்திகள் அறிவியல் வல்லுநர்களால் தொலைக்காட்சி மூலம் எடுத்துரைக்கப்படுகின்றன. புத்தம் புதிய கருவிகளின் கண்டுபிடிப்பு பற்றிய செய்திகள் தொலைக்காட்சியில் நடைபெறுகின்றன.
வினாடி – வினா நிகழ்ச்சி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்படுகிறது. இது மாணவர்களின் அறிவை வளர்க்கப் பயன்படுகிறது.
இலக்கியம், மேடை நூல்கள் திறனாய்வு, படித்ததும் பிடித்ததும் போன்ற நிகழ்ச்சிகள் அனைவருக்கும் மிகுந்த பயனளிக்கின்றன.
இன்றைய அறிவியல், விண்வெளி ஆய்வுகள் பற்றிய அறிஞர்களின் பேச்சுகள் நம் அறிவுக்கு விருந்தாக அமைகின்றன. மருத்துவம், உடல் நலம், மூலிகை மருந்துகள், யோகா பற்றிய நிகழ்ச்சிகள் நாம் நமது உடல் நலத்தைப் பேண நமக்கு உதவுகின்றன.
எனவே தொலைக்காட்சி வெறும் பொழுதுபோக்குக் கருவி மட்டுமன்று. அது தம் அறிவுக்கு விருந்தளிக்கும் அற்புத அறிவியல் கண்டுபிடிப்பு என்பதில் ஐயமில்லை.
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
கேள்வி 1.
விமானம் பறப்பது பற்றிய செய்தியை வாயிலாக இளவரசி அறிந்து கொண்டாள்.
(அ) கணினி
(ஆ) தொலைக்காட்சி
(இ) வானொலி
(ஈ) அலைபேசி
விடை:
(ஆ) தொலைக்காட்சி
கேள்வி 2.
ஆர்வம் – இச்சொல்லின் பொருள்
(அ) வெறுப்பு
(ஆ) மறுப்பு
(இ) மகிழ்ச்சி
(ஈ) விருப்பம்
விடை:
(ஈ) விருப்பம்
கேள்வி 3.
உயரம் என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(அ) குட்டை
(ஆ) நீளம்
(இ) நெட்டை
(ஈ) நீண்ட
விடை:
(அ) குட்டை
கேள்வி 4.
தொலைக்காட்சி — இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) தொலை + காட்சி
(ஆ) தொல்லை + காட்சி
(இ) தொலைக் + காட்சி
(ஈ) தொல் + காட்சி
விடை:
(அ) தொலை + காட்சி
கேள்வி 5.
குறுமை + படம் — இச்சொற்களைச் சேர்த்து எழுதக். கிடைப்பது
(அ) குறுபடம்
(ஆ) குறுமை + படம்
(இ) குறும்படம்
(ஈ) குறுகியபடம்
விடை:
இ) குறும்படம்
வினாக்களுக்கு விடையளிக்க.
கேள்வி 1.
பூங்குழலியும் இளவரசியும் வானத்தில் எதைக் கண்டனர்?
விடை:
பூங்குழலியும் இளவரசியும் வானத்தில் விமானம் பறந்து செல்வதைக் கண்டனர்.
கேள்வி 2.
வானத்தில் பறக்கும் விமானம் எதனால் பாதிக்கப்படாது என்று இளவரசி கூறினாள்?
விடை:
வானில் பறக்கும் விமானம் புயல், மேகமூட்டம், இடி, மழை ஆகியவற்றால் பாதிக்கப்படுவதில்லை என்று இளவரசி ‘கூறினாள்.
கேள்வி 3.
இளவரசி தொலைக்காட்சியில் என்னவெல்லாம் பார்த்ததாகக் கூறினாள்?
விடை:
வானில் பறக்கும் விமானம் மழையால் பாதிக்கப்படுவதில்லை. மழை பெய்யும்போது மரத்தடியில் ஒதுங்கி நிற்கக் கூடாது. இதனால் இடி தாக்கி ஆபத்து ஏற்படும். இத்தகைய அறிவியல் செய்திகளை தொலைக்காட்சியில் பார்த்ததாக இளவரசி கூறினாள்.
பறவைகளின் ஒலிகளை அறிந்து கோடிட்ட இடங்களை நிரப்பவும்.
விடை:
பொருத்தமான சொல்லால் நிரப்புவோம்.
ஒளிர்மதி தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டு இருந்தாள். ________________ கையில் ஒரு பூக்கூடை இருந்தது. அப்போது அங்குப் பரணி வந்தான். ________________ கையில் இரண்டு பொம்மைகள் இருந்தன. ________________ பார்ப்பதற்கு அழகாக இருந்தன. ஒளிர்மதி, பொம்மையின் தலையில் செம்பருத்திப் பூ வைத்தாள். ________________ சிவப்பு வண்ணத்தில் அழகாக இருந்தது. பிறகு, ________________ மாமர ஊஞ்சலில் விளையாடினார்கள்.
விடை:
ஒளிர்மதி தோட்டத்தில் பூ பறித்துக்கொண்டு இருந்தாள். அவள் கையில் ஒரு பூக்கூடை இருந்தது. அப்போது அங்குப் பரணி வந்தான். அவன் கையில் இரண்டு பொம்மைகள் இருந்தன. அவை பார்ப்பதற்கு அழகாக இருந்தன. ஒளிர்மதி, பொம்மையின் தலையில் செம்பருத்திப் பூ வைத்தாள். அது சிவப்பு வண்ணத்தில் அழகாக இருந்தது. பிறகு, அவர்கள் மாமர ஊஞ்சலில் விளையாடினார்கள்.
கதையைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தவளை ஒன்று மிகவும் உடல்நலம் குன்றியிருந்தது. அதன் குட்டித் தவளை தன் தாயைக் காப்பாற்ற நினைத்தது. மாலைநேரம் முடிவதற்குள் மலைமேல் ஏறி, மூலிகை கொண்டு வர நினைத்தது. அந்த மலையில் ஏராளமான பாம்புகள் வாழ்ந்து வந்தன. பாம்புகளால் தனக்குத் தீங்கு நேரிடும் என்று குட்டித் தவளை நினைத்தது. தன் அறிவைப் பயன்படுத்திச் சென்றால்தான் மாலைக்குள் திரும்ப முடியும் என்று நினைத்தது. மலையில் ஏறத் தொடங்கியதும், அந்தக் குட்டித் தவளை பேசத் தொடங்கியது. “முன்னே செல்லும் பருந்தாரே! பின்னே பெரிய கீரியார் மெள்ள வருகிறார், சற்றுப் பொறுத்தே செல்லுங்கள்” என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டே சென்றது. பாம்புகள் குட்டித்தவளை கூறுவதைக் கேட்டு ஓடி ஒளிந்துகொண்டன. குட்டித் தவளை, தன் கூர்சிந்தனைத் திறனால் காலம் கடத்தாமல் விரைந்து சென்று, மூலிகை கொண்டு வந்து தன் தாயைக் காப்பாற்றியது.
கேள்வி 1.
உடல்நலம் குன்றிய நிலையில் எது இருந்தது?
விடை:
தவளை ஒன்று உடல்நலம் குன்றி நிலையில் இருந்தது.
கேள்வி 2.
குட்டித்தவளை, தனக்கு யாரால் தீங்கு ஏற்படும் என நினைத்தது?
விடை:
மலையில் உள்ள பாம்புகளால் தனக்குத் தீங்கு ஏற்படும் என குட்டித்தவளை நினைத்தது.
கேள்வி 3.
குட்டித்தவளை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, எந்தெந்தப் பெயர்களைக் கூறியது?
விடை:
குட்டித்தவளை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பருந்து, கீரி ஆகியவற்றின் பெயர்களைக் கூறியது.
கேள்வி 4.
குறித்த நேரத்திற்குள் ஒரு செயலைச் செய்து முடிப்பது எதைக் குறிக்கும்?
அ) பணிவு
ஆ) காலந் தவிர்க்காமை
இ) நேர்மை
விடை:
ஆ) காலந் தவிர்க்காமை
பக்கம் 53
சிந்திக்கலாமா?
உன் பொருள்களை நீ எவ்வாறு பாதுகாப்பாய்?
விடை:
நான் எனது பொருள்களை எப்போதும் அவற்றிற்குரிய பெட்டிகளில் பாதுகாப்பாக வைத்திருப்பேன். அவற்றை ஒருபோதும் வெளியில் வைக்க மாட்டேன்.