Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை

பக்கம் 42

இப்பாடத்தைப் பற்றி:

அமிழ்தினும் இனிய மொழி’ நம் தமிழ் மொழியாகும். தமிழ் மொழிபோல் இனிய மொழி வேறில்லை என பாரதியாரும், ‘தமிழ் எங்கள் உயிர்’ என்று பாரதிதாசனும் பாடி மகிழ்ந்தனர்.

தமிழ் மொழியானது, இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் சேர்ந்து முத்தமிழ் என அழைக்கப்படுகிறது. கீழடியில் நிகழ்பெற்ற அகழாய்வுகள் தமிழ் மொழி ஆதித் தமிழர் மொழி’ என்பதை உறுதிப் படுத்துகின்றன.

கணியன் பூங்குன்றனின் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்றுப் பாடல் வரி ஐக்கிய நாடுகள் அவையில் இடம் பெற்றுள்ளது. தமிழ் மொழிக்கு செம்மொழி’ என்ற தகுதியை நடுவண் அரசு அறிவித்து சிறப்புச் செய்துள்ளது.

வீரம், கொடை, பண்பாடு, விருந்தோம்பல் போன்ற உயர் பண்புகள் தமிழனத்தின் அடையாளங்களாகத் திகழுகின்றன. தொல்காப்பியம்’ என்னும் தமிழ் இலக்கண நூலும் ‘உலகப் பொதுமறை’ என அழைக்கப்படும் திருக்குறள் நூலும் இலக்கிய உலகில் ஈடு இணையற்ற பழம்பெரும் படைப்புகளாக 4 விளங்குகின்றன.

ஜி.யு. போப் என்பவர் திருக்குறளின் அருமை பெருமைகளை அறிந்து, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகறியச் செய்தார். தமிழ்மேல் தனக்கிருந்த ஆர்வத்தால் தன்னைத் தமிழ் மாணவன்’ என்றும் அறிவித்துக் கொண்டார்.

ஈராயிரம் ஆண்டுகளாக எழுத்திலும் பேச்சிலும் எழுச்சி காட்டி வரும் எழில் கொஞ்சும் இனிய மொழி தமிழ் மொழியாகும். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற கூற்று தம்மை இத்தரணியில் தலை நிமிர்ந்து நடந்திடச் செய்யும் என்பதில் ஐயம் இல்லை.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை

பக்கம் 44

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
தமிழுக்கு அமுது என்று பேர் என்று பாடியவர் –
(அ) பாரதியார்
(இ) கவிமணி
(ஆ) கண்ண தாசன்
(ஈ) பாரதிதாசன்
விடை:
(ஈ) பாரதிதாசன்

கேள்வி 2.
செம்மை + மொழி’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது,
(அ) செம்மொழி
(ஆ) செம்மொலி
(இ) செம்மொளி
(ஈ) செமொழி
விடை:
(அ) செம்மொழி

கேள்வி 3.
கீழடி’ அகழாய்வு நடந்த மாவட்டம்
(அ) புதுக்கோட்டை
(ஆ) தருமபுரி
(இ) சிவகங்கை
(ஈ) திருச்சி
விடை:
(இ) சிவகங்கை

கேள்வி 4.
ஆதித்தமிழர்’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) ஆதி + தமிழர்
(இ) அதி + தமிழர்
(ஆ) ஆதி + தமிளர்
(ஈ) ஆதீ + தமிழர்
விடை:
(அ) ஆதி + தமிழர்

கேள்வி 5.
பொலிவு – இச்சொல்லுக்குரிய பொருள்
(அ) மெலிவு
(ஆ) அழகு
(இ) துணிவு
(ஈ) சிறப்பு
விடை:
(ஆ) அழகு

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை

பக்கம் 45

கீழ்க்காணும் சொற்றொடர்களைப் படித்துச் சரி ✓ தவறு X எனக் குறியிடுக.

கேள்வி 1.
இயல், இசை, நாடகம் ஆகியன தமிழின் பெருமையை வெளிப்படுத்தின.
விடை:

கேள்வி 2.
தமிழ்மொழி “ஆதித்தமிழர்” மொழி இல்லை.
விடை:
X

கேள்வி 3.
“வீரம்” தமிழரின் பண்புகளுள் ஒன்று.
விடை:

கேள்வி 4.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் தொடர் ஆத்திசூடியில் உள்ளது.
விடை:
X

கேள்வி 5.
சிவகங்கையிலுள்ள கீழடியில் அகழாய்வு நடைபெறவில்லை.
விடை:
X

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை

அகரமுதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக.

தொன்மை – ___________________________________
அகழாய்வு – ___________________________________
ஆபரணம் – ___________________________________
கேளிர் – ___________________________________
பொலிவு – ___________________________________
விடை:
தொன்மை – பழைமை
அகழாய்வு – நிலத்தைத் தோண்டி ஆராய்தல்
ஆபரணம் – அணிகலன்
கேளிர் – உறவினர்
பொலிவு – அழகு

மொழி விளையாட்டு

சரியான எழுத்தைத் தேர்ந்தெடுத்துச் சொல்லை முழுமையடையச் செய்க.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெருமை 1
விடை:
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெருமை 2

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை

பக்கம் 46

வினாக்களுக்கு விடையளிக்க.

கேள்வி 1.
தமிழ்மொழியின் பெருமைகளுள் இரண்டு எழுதுக.
விடை:
தமிழ்மொழி தனித்து இயங்கும் ஆற்றல் பெற்ற செம்மொழியாகும்.

தமிழ்மொழி உலக இலக்கியங்களில் தலை சிறந்து விளங்கும் தொல்காப்பியம்’, ‘திருக்குறள்’ ஆகிய இலக்கியப் படைப்புகளைக் கொண்டதாகும்.

கேள்வி 2.
கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் யாவை?
விடை:
கீழடி அகழாய்வில் பண்டைக் காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், அணிகலன்கள், ஆடைகள், வீடுகட்டப் பயன்படுத்திய பொருள்கள் ஆகியவை கண்டு ‘பிடிக்கப்பட்டுள்ளன.

கேள்வி 3.
தமிழரின் பெருமையைக் கணியன் பூங்குன்றனார் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?
விடை:
யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்றுப் பாடல் வரி மூலம் கணியன் பூங்குன்றனார் தமிழரின் பெருமையை வெளிப்படுத்துகிறார்.

கேள்வி 4.
தமிழ்மொழி செம்மொழி என்று ஏன் அழைக்கப்படுகிறது?
விடை:
தமிழ்மொழி தொன்மையானது. உலகத்தரம் வாய்ந்த இலக்கண இலக்கியங்களைக் கொண்டது. இது தனித்து இயங்கும் ஆற்றல் பெற்றுள்ளதால் செம்மொழி’ என அழைக்கப்படுகிறது.

கேள்வி 5.
தமிழ்மொழி பற்றி நீவிர் அறிந்த கருத்தை எழுதுக.
விடை:
தமிழ்மொழி தொன்மை வாய்ந்த உலக மொழிகளில் ஒன்று. இம்மொழி உயர்ந்த இலக்கண, இலக்கிய நூல்களைக் கொண்டது, இயல், இசை, நாடகம் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளதால் இது முத்தமிழ் என அழைக்கப்படுகிறது. இனிமையும் வளமையும் கொண்டுள்ள தமிழ்மொழி செம்மொழி என்ற பெருமை பெற்றுள்ளது.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை

பழத்திற்குள் உள்ள சரியான சொல்லைத் தெரிவு செய்து, சொற்றொடர் உருவாக்குக.

கேள்வி 1.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெருமை 3
விடை:
இயல் என்பது   எழுத்து    நடை.

கேள்வி 2.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெருமை 4
விடை:
பாறை ஓவியங்களில் தமிழர்களின்   வீரம் சார்ந்த   விளையாட்டுகள் பற்றிய செய்திகள் உள்ளன.

கேள்வி 3.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெருமை 5
விடை:
பிறமொழி உதவி இல்லாமல் தனித்து இயங்குவதால் தமிழ்மொழி   செம்மொழி   ஆகும்.

கேள்வி 4.
Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெருமை 6
விடை:
நடுவண் அரசு   2004   ஆம் ஆண்டு தமிழைச் செம்மொழி என அறிவித்தது.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெரு மை

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 3 Chapter 7 தமிழ்மொழியின் பெருமை 7
விடை:
வீணா கூறுவதே ஏற்புடையது. தாய்மொழியாம் தமிழுக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். இது நமது சிந்திக்கும் திறனை வளர்க்கிறது. நமது மொழியை நன்கு கற்றுத் தெளிந்தபின் உலக மொழிகளைக் கற்கலாம். தமிழை மறந்து விட்டுப் பிற மொழிகளை நாடிச் செல்வது தாய்ப்பால் அருந்த மறுக்கும் குழந்தை புட்டிப்பாலை நாடுவது போன்றது. இது கையில் உள்ள இனிப்பான கனியை விட்டுவிட்டு, தொலைவில் உள்ள கசப்பான காய்க்காக அலைவது போன்றது.