Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

9th Social Science Guide நவீன யுகத்தின் தொடக்கம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையை எழுதுக

Question 1.
கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?
அ) லியானார்டோ டாவின்சி
ஆ) பெட்ரார்க்
இ) ஏராஸ்மஸ்
ஈ) தாமஸ் மூர்
விடை:
ஆ) பெட்ரார்க்

Question 2.
‘ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்’ என்ற ஓவியத்தை வரைந்தவர்
அ) ரஃபேல்
ஆ) மைக்கேல் ஆஞ்சலோ
இ அல்புருட் டியரர்
ஈ) லியானார்டோ டாவின்சி
விடை:
அ) ரஃபேல்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 3.
வில்லியம் ஹார்வி _____ கண்டுபிடித்தார்.
அ) சூரியனே பிரபஞ்சத்தின் மையம்
ஆ) பூமியே பிரபஞ்சத்தின் மையம்
இ) புவியீர்ப்பு விசை
ஈ) இரத்தத்தின் சுழற்சி
விடை:
ஈ) இரத்தத்தின் சுழற்சி

Question 4.
“தொண்ணூற்றைந்து கொள்கைகள்”களை எழுதியவர் யார்?
அ) மார்ட்டின் லூதர்
ஆ) ஸ்விங்லி
இ) ஐான் கால்வின்
ஈ) தாமஸ்மூர்
விடை:
அ) மார்ட்டின் லூதர்

Question 5.
‘கிறிஸ்தவ மதத்தின் நிறுவனங்கள்’ என்ற நூலை எழுதியவர் _____
அ) மார்ட்டின் லூதர்
ஆ) ஸ்விங்லி
இ) ஜான் கால்வின்
ஈ) செர்வாண்டிஸ்
விடை:
இ) ஜான் கால்வின்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 6.
பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?
அ) மாலுமி ஹென்றி
ஆ) லோபோ கோன்ஸால்வ்ஸ்
இ பார்த்தலோமியோ டயஸ்
ஈ) கொலம்பஸ்
விடை:
ஆ) லோபோ கோன்ஸால்வ்ஸ்

Question 7.
பசிபிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர்
அ) கொலம்பஸ் ______
ஆ) அமெரிகோ வெஸ்புகி
இ) ஃபெர்டினான்ட் மெகெல்லன்
ஈ) வாஸ்கோடகாமா
விடை:
இ) ஃபெர்டினான்ட் மெகெல்லன்

Question 8.
அமெரிக்க கண்டம் ____ என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.
அ) அமெரிகோ வெஸ்புகி
ஆ) கொலம்பஸ்
இ) வாஸ்கோடகாமா
-ஈ) ஹெர்நாண்டோ கார்டஸ்
விடை:
அ) அமெரிகோ வெஸ்புகி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 9.
கிழக்கு இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக _____ இருந்தது.
அ) மணிலா
ஆ) பம்பாய்
இ பாண்டிச்சேரி
ஈ) கோவா
விடை:
ஈ) கோவா

Question 10.
கீழ்க்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
அ) கரும்பு
ஆ) சர்க்கரைவள்ளிக்கிழங்கு
இ அரிசி
ஈ) கோதுமை
விடை:
ஆ) சர்க்கரைவள்ளிக் கிழங்கு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
கி.பி. 1453ல் கான்ஸ்டாண்டி நோபிளை _____ கைப்பற்றினர்.
விடை:
உதுமானியத் துருக்கியர்

Question 2.
______ என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார்.
விடை:
எராஸ்மஸ்

Question 3.
_____ சிஸ்டைன் திருச்சபை மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடைய ஓவியங்களுக்காக புகழ்பெற்றவராவார்.
விடை:
மைக்கேல் ஆஞ்சலோ

Question 4.
கத்தோலிக்க திருச்சபை நிறுவனத்துக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் _____ ஆகும்.
விடை:
எதிர்மத சீர்திருத்தம்

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 5.
வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள் _____, _______ மற்றும் _____ ஆகும்.
விடை:
வங்கிகள், கூட்டுப்பங்கு நிறுவனங்களின் தோற்றம், வர்த்தகத்தின் வளர்ச்சி

III. சரியான கூற்றினைக் கண்டுபிடி.

Question 1.
அ) மார்ட்டின் லூதர், கத்தோலிக்க திருச்சபையால் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதால் அவர் அதனுடனான உறவைத் துண்டித்துக் கொண்டார்
ஆ) ஜெனிவாவில் இருந்து ஜான் கால்வினின் அரசாங்கம் தாராளமயமானதாகவும் வேடிக்கை நிரம்பியதாகவும் இருந்தது.
இ) எட்டாம் ஹென்றி கத்தோலிக்க திருச்சபையுடன் ஆழமான இறையியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தார்.
ஈ) தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.
விடை:
(ஈ) தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.

Question 2.
அ) புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.
ஆ) குதிரைகள் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவை.
இ) நவீன யுகத்தின் தொடக்க காலத்தில், பொருளாதார நடவடிக்கைகளில் அரசு தலையிடவில்லை.
ஈ) போர்ச்சுகீசியர்கள் அரேபியர்களுடன் இணைந்து இந்தியாவில் வாணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
விடை:
(அ) புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம் 40

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமான விடையளி

Question 1.
அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு எவ்வாறு மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விவரி.
விடை:
மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீது தாக்கம் :

  • 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஜோஹன்னஸ் கூட்டென்பர்க் ஜெர்மனியில் அச்சு இயந்திரத்தைக்
    கண்டுபிடித்தார். இது நவீன மயமாதலை வேகப்படுத்தியது.
  • இத்தாலியிலிருந்த கல்வியறிஞர்கள் கிரேக்க, இலத்தீன் செவ்வியல் இலக்கியத்தின் கையெழுத்துப் பிரதிகளை சேகரித்தனர். பின்னர் அவற்றை அச்சிட்டு வெளியிட்டனர். இது மறுமலர்ச்சியின் புத்தாங்கக்களுக்கு தூண்டுகோலாய் அமைந்தன.
  • மதச்சீர்திருத்தக்காரர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் அத்துமீறல்களைக் கோடிட்டுகாட்டும் பிரசுரங்களை விநியோகித்தனர். புத்தகங்களையும் பதிப்பித்தனர். மார்ட்டின்லூதரின் “95 கொள்கைகள்”
  • தாலமியின் ‘ஜியாகரபி (புவியியல்) என்ற நூலின் ஒரு பிரதி பைஸாண்டியன் பேரரசிலிருந்து மேற்குலகுக்கு கொண்டுவரப்பட்டது. அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பினால் பல பிரதிகள் அச்சிடப்பட்டு பரந்த அளவில் சுற்றுக்கு விடப்பட்டன. அதனால் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கான அறிவு மிகப் பெரிய அளவில் அதிகரித்தது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 2.
மறுமலர்ச்சியின் விளைவுகள் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.
விடை:
மறுமலர்ச்சியின் விளைவுகள் :

  • ‘மனிதநேயம்’ என்றகருத்து மறுமலர்ச்சியின்மிகமுக்கியத்துவம் வாய்ந்தபங்களிப்பாகும். தனிநபர்வாதம், மதச்சார்பற்ற தன்மை, தேசியவாதம் நோக்கிய திடமான நகர்வை அடையாளப்படுத்தியது.
  • வட்டார மொழிகளின் வளர்ச்சியைச் செழுமைப்படுத்தியது. தேசிய அரசுகளின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தது.
  • திருச்சபையின் ஊழல் நடைமுறைகள் விமர்சிக்கப்பட்டன. மதச் சீர்திருத்தவாத இயக்கம் உற்சாகப் படுத்தப்பட்டது.
  • புதிய நிலவழிப்பாதைகள் கண்டுபிடிப்பு, உலக வரைபட மாற்றியமைப்பு, அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிறவற்றுக்கு மறுமலர்ச்சி இட்டுச் சென்றது.

Question 3.
கத்தோலிக்க திருச்சபை மீது மார்ட்டின் லூதர் கொண்டிருந்த மாற்றுக் கருத்துகளை விவரி.
விடை:
மார்ட்டின் லூதரின் மாற்றுக் கருத்துக்கள் :

  • சடங்குகளும், பாவமன்னிப்பு நடைமுறைகளும் ஆன்மவிடுதலைக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையை நிராகரித்தார். ‘நம்பிக்கையினால் நியாயப்படுத்துதல்’ என்ற கொள்கை முடிவை முன்வைத்தார்.
  • தெய்வீக பற்றுறுதியினால் மட்டுமே கடவுளின் கருணை மனிதர்களுக்கு அருளப்படுமே அல்லாமல் மனிதர்களின் செயல்களினால் அல்ல.
  • பைபிள் அனைத்து மக்களாலும் படிக்கப்பட்டு விவாதிக்கக்கூடியதே அல்லாமல் திருச்சபையால் மட்டுமே வாசித்து விளக்கமளிக்கக்கூடிய ஒன்றல்ல.
  • கடவுளுக்கும் ஒரு தனிநபருக்குமிடையே திருச்சபை ஓர் இணைப்புப்பாலம் என்பதையும் நிராகரித்தார்.

Question 4.
மத எதிர் சீர்திருத்தம் பற்றி ஒரு குறிப்பு வரைக.
விடை:
மதஎதிர் சீர்திருத்தம் :

  • கத்தோலிக்க திருச்சபைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்தின் சவாலை எதிர்கொள்வதற்காக போப் மூன்றாம் பால் மற்றும் அவர் வழி வந்தவர்கள் பல தீவிரமான சீர்திருத்தங்களை அறிவித்தார்கள். இது “எதிர்மத சீர்திருத்தம்” என அறியப்பட்டது.
  • ஊழல்களைக் கடுமையான முறையில் கையாண்டதுடன், பதவிகளின் விற்பனையையும் தடை செய்தனர்.
  • கூட்டு வழிபாடு, விழாக்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தியது.
  • புனித மறைநூல்களை திருச்சபை மட்டுமே படித்து விளக்கமளிக்க முடியும் என்று அறிவித்தது.
  • திருச்சபைக்கு எதிரான முயற்சிகளைக் கையாளுவதற்கு மத நீதிமன்றத்திற்கு புத்துயிர் அளித்தது.
  • இயேசு சபைக்கு அதிகாரப்பூர்வமான அனுமதியை வழங்கியது.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 5.
கொலம்பியப் பரிமாற்றம்’ என்றால் என்ன?
விடை:
கொலம்பியப் பரிமாற்றம் :
அமெரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே தாவரங்கள், விலங்குகள், தொழில்நுட்பம் பண்பாடு மற்றும் விநோதமான நோய்கள் ஆகியவற்றின் இடப்பெயர்வுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகள் அமெரிக்காவை வெற்றி கொண்டதே காரணமாகும். இது கொலம்பியப் பரிமாற்றம் எனப்படும்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நவீனயுகத்தின் வருகையைப் பறை சாற்றின – விவாதி.
விடை:
மறுமலர்ச்சி:

  • செவ்வியல் இலக்கியத்தையும் கலையையும் ஆராய்வதில் பேரார்வமும் உத்வேகமும் தோன்றியது. படைப்பூக்கம் எழுத்துக்கள், கலை, கட்டமானம், இசை ஆகியவற்றில் பிரதிபலித்தது.
  • செவ்வியில் இலக்கியப் பிரதிகள் சேகரிக்கப்ப்டடு, அச்சிட்டு வெளியிடப்பட்டது மறுமலர்ச்சி புத்தாக்கங்களுக்கு தூண்டுகோலாய் அமைந்தது.
  • கலை, அறிவியல் சார் படிப்புகள் இத்தாலிய பல்கலைக்கழகங்களில் புகழ்பெற்றுவிளங்கியதால் ஐரோப்பா
    முழுவதிலுமிருந்து மாணவர்கள் திரண்டு சென்றனர். மனித நேய சிந்தனைகளை அறிமுகமானது. பல மனித நேய இலக்கியங்கள் தோன்றின. கலைத்தன்மை மிளிரும் படைப்புகளை உருவாக்கினர்.

மதச் சீர்திருத்தம்:

  • மறுமலர்ச்சிகால மனித நேயத்தின் தீவிர புத்தார்வ தன்மையும், விமர்சனப்பூர்வமான சிந்தனையும் மக்கள் திருச்சபையின் நடைமுறைகளைக் கேள்வி கேட்பதற்கு உதவின.
  • எராஸ்மஸ், கர்தாமஸ் மூர் திருச்சபையையும் அதன் ஊழல் மிக்க நடைமுறைகளையும் விமர்சித்து வந்தனர்.
  • மதச் சீர்த்திருத்தக்காரர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் அத்துமீறல்களைக் கோடிட்டு காட்டும் பிரசுரங்களை விநியோகிதிதனர். புத்தகங்களையும் பதிப்பித்தனர்.
  • 16ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாக திருச்சபையை சீர்திருத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றாலும், பகுத்தறிவின் யுகத்தில் சீர்திருத்தவாதிகளின் முயற்சிகள் தேசிய அரசுகளின் ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்டன.

புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் :

  • மாலுமிகளுக்குப் பயிற்சியளிக்க கடற்பயணப் பள்ளியை, போர்ச்சுக்கல் இளவரசர் ஹென்றி என்ற கடலோடி நிறுவினர்.
  • நெடுந் தொலைவுக் கடற்பயணத்திற்கான ஆர்வம், புதிய கடல் பகுதிகளில் தேடுதல் நிகழ்த்தும் சாகச உத்வேகம் புத்தார்வத்தினால் தூண்டப்பட்டன.
  • மார்க்கோபோலே, இபின் பதூரா பயணக் குறிப்புகள், இறைப்பணியாளர்களின் மதம் பரப்பும் எண்ணத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
  • கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே அமைந்த நிலவழிப்பாதையை உதுமானிய துருக்கியர்கள் மூடியதால் ஐரோப்பிய வர்த்தகர்களின் பொருளாதார பாதிப்புக்குள்ளாயிற்று. ஆசியாவுக்கு புதிய கடல்வழிப்பாதை கண்டுபிடிக்க உந்துதலை ஏற்படுத்தியது.

Question 2.
புவியியல்சார் கண்டுபிடிப்புகளின் விளைவுகள் குறித்து ஆராய்க.
விடை:
புவியியல் சார் கண்டுபிடிப்புகளின் விளைவுகள் :

  • புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் உலகைப் பற்றிய ஐரோப்பியப் புரிதலை மாற்றியமைத்தன. உலக வரைபடத்தின் மீள் வரைவுக்கு இட்டுச் சென்றது.
  • ஐரோப்பாவின் பொருளாதார மையம் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய இரு அரசுகளுக்கு இடம் பெயர்ந்தது.
  • ஸ்பானியர்கள் மெக்ஸிகோவையும், தென் அமெரிக்காவையும் வெற்றி கொள்ளவும், கூடுதலான ஆய்வுத் தேடல் பயணங்களைத் தொடரவும், வெற்றி கொண்ட பகுதிகளை குடியேற்றங்களாக மாற்றவும் வழி செய்தது.
  • மரண ஆபத்துமிக்க நோய்கள் ஏற்றுமதியால் அமெரிக்காவின் உள்ளூர் மக்களின் பெருந்திரளான அழிவுக்கு காரணமாய் அமைந்தது.
  • ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அடிமைகள் ஐரோப்பிய நாடுகளால் விலைகொடுத்து வாங்கப்பட்டனர். அட்லாண்டிக் நெடுகிலும் நடைபெற்ற வர்த்தகம் முக்கோண வர்த்தகமானது. இவ்வணிகத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் லாபம் ஈட்டினர்.
  • வணிகப் புரட்சிக்கு இட்டுச் சென்றன. இப்புரட்சியின் சிறப்பு அம்சங்கள் வங்கிகள், கூட்டுப்பங்கு நிறுவனங்களின் தோற்றம், வர்த்தகத்தின் வளர்ச்சி ஆகும்.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. ஐரோப்பிய மாலுமிகளின் படங்களை சேகரி.
2. திசைகாட்டும் கருவியின் மாதிரி ஒன்றைத் தயார் செய்.
3. இடைக்கால ஐரோப்பியர் உருவாக்கிய கப்பலின் மாதிரியை தயார் செய்.

9th Social Science Guide நவீன யுகத்தின் தொடக்கம் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
______ என்பவர் ஜெர்மனில் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
விடை:
ஜோஹன்னஸ் கூட்டென்பர்க்

Question 2.
______ மனித நேயத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
விடை:
பெட்ரார்க்

Question 3.
தாந்தே _____ என்ற நூலை எழுதினார்.
விடை:
டிவைன் காமெடி

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 4.
______ இளவரசன் என்ற தலைப்பில் ஆய்வொன்றை எழுதினார்.
விடை:
மாக்கியவெல்லி

Question 5.
பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்பதை ______ நிருபித்தார்.
விடை:
கோப்பர்னிகஸ்

Question 6.
மார்ட்டின் லூதர் ____ மரபொழுங்கு வழிவந்த துறவியாவார்.
விடை:
அகஸ்தினியன்

Question 7.
கள்ளிக்கோட்டையின் அரசர் ______.
விடை:
சாமெரின்

II. சுருக்கமான விடையளி.

Question 1.
மைக்கேல் ஆஞ்சலோ பற்றிக் குறிப்பு வரைக?
விடை:

  • ஓர் ஓவியர், சிற்பி, கட்டடக் கலைஞர் மற்றும் ஒரு கவிஞர். அவர் உருவாக்கிய சலவைக்கல் சிற்பமான டேவிட் சிலை. இச்சிலை மாபெரும் கொலையாளியின் இளமை ததும்பும் வலிமையையும், ஆற்றலையும் காட்சிப் படுத்துகிறது.
  • ரோம் நகரின் சிஸ்டைன் தேவாலயத்தின் மேற்கூரை ஓவியங்களுக்காகவும் புகழ் பெற்றுள்ளார்.

Question 2.
லியானர்டோ டாவின்சி பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
லியானர்டோ டாவின்சி:
பல்துறைகளில் திறன்மிகுந்த ஒரு மேதை. ஓவியர், சிற்பி, கட்டட வடிவமைப்பாளர், ராணுவப்பொறியியலாளர், உடற்கூறியல் வல்லுநர் மற்றும் கவிஞர்.

அவரது ஒப்பற்ற படைப்புகள்:
“மோனாலிசா”, “கடைசி இரவு விருந்து”, “பாறைகளின் மீதொரு கன்னிப் பெண்”.

Question 3.
ரஃபேல் பற்றிக் குறிப்பு வரைக?
விடை:
ரஃபேல்:

  • அழகு நிறைந்த “மடோன்னா” (கன்னிப் பெண்ணும் குழந்தையும்) சித்திரத்தைத் தீட்டியவர்.
  • ஆன்மீகத்துக்கும், மனித நேயத்துக்கு மிடையே அவர் வாழ்ந்த காலங்களில் நிலவிய தத்துவார்த்த விவாதத்தை வெளிப்படுத்தும் விதமாக அவர் தீட்டிய மற்றோர் ஓவியம் “தி ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்”.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 4.
இயேசு சபையை நிறுவிய புனித இக்னேஷியஸ் லயோலா பற்றி விவரி.
விடை:
புனித இக்னேஷியஸ் லயோலாவும், இயேசு சபையும்:

  • கிறித்தவ மதத்தைப் பரப்புரை செய்வதற்காக புனித இக்னேஷியஸ்லயோலா “ இயேசு சபையை” நிறுவினார். எதிர்மத சீர்திருத்தத்தில் முக்கிய பங்காற்றுவதற்காக இச்சபைக்கு கத்தோலிக்க திருச்சபை அதிகாரபூர்வமான அனுமதியை வழங்கியது.
  • ஆதரவற்றோருக்குக் கல்விச் சேவை என்பதே இயேசு சபையின் முக்கியப் பணி. உறைவிடங்கள், அனாதை இல்லங்கள், கல்வி நிலையங்கள் போன்ற எண்ணற்ற அமைப்புகளை இயேசு சபை தொடங்கியது. உலகின் எல்லாப் பாகங்களிலும் இயேசு சபைப்பணியாளர்கள் இறைப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

III. கீழ்க்கண்ட தலைப்பில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும்

Question 1.
மறுமலர்ச்சி
அ) இத்தாலிய நகர அரசுகளில் முதன் முதலில் மறுமலர்ச்சி தோன்றுவதற்கான காரணங்களைக் கூறுக.
விடை:
பண்பாட்டு நடவடிக்கைளின் மையங்களாக விளங்கிய இத்தாலிய கலைஞர்கள் வருகை புரிந்தனர். கிரேக்கர்கள், ரோமானியர்களின் செவ்வியல் இலக்கியத்தையும், கலையையும் ஆராய்வதில் பேரார்வமும், உத்வேகமும் தோன்றியது. இப்படைப்பூக்கம் எழுத்துக்கள், கலை, கட்டுமானத் தொழில் நுட்பம், இசை ஆகியவற்றில் பிரதிபலித்தது. பெட்ரார்க் – கான்ஸோனியர்

ஆ) மனித நேயர்கள் சிலரையும், அவர்களது படைப்புகளையும் குறிப்பிடுக.
விடை:
தாந்தே – டிவைன் காமெடி
மாக்கியவெல்லி – இளவரசன்
ஏராஸ்மஸ் – மடமையின் புகழ்ச்சி
சர்தாமஸ்மூர் – உட்டோப்பியா
செர்வான்டிஸ் – டான் கிவிக்ஸோட்.

இ) மறுமலர்ச்சி காலக்கலைக்கும் இடைக்காலக் கலைக்கும் உள்ள வேறுபாடுகளை வரிசைப்படுத்துக.
விடை:
மறுமலர்ச்சி காலக்கலை :

  • ஓவியங்களும் சிற்பங்களும் எதார்த்தப் பண்பு, இயல்பு சார்ந்த இயற்கை தன்மை கொண்டவை.
  • இடைக்கால ஓவியங்கள், சிற்பங்களின் அமைப்பிலிருந்து மேம்படுத்தப்பட்டவை.

இடைக்காலக்கலை :
இடைக்கால படைப்புகள் அழகியப் பாணியில் ஏதார்த்தமற்றவை, இரட்டைப் பரிமாணம் கொண்டவை.

ஈ) மனிதநேயம் பற்றி விளக்குக.
விடை:
மறுமலர்ச்சியின் மையக்கூறு மனிதநேயம். மனிதநேயம் மனித கண்ணியத்தையும், இயல்பையும் வலியுறுத்தியது.

Question 2.
மத சீர்திருத்தம்.

அ) மார்ட்டின் லூதர் தேவாலயத்தை ஏன் எதிர்த்தார்?
விடை:
திருச்சபையின் ஆடம்பர வாழ்க்கை , திருச்சபை பதவிகள் ஏல்ம், பாலமன்னிப்புச் சீட்டு விற்பனை, திருச்சபையின் ஊழல்கள் மார்டின் லூதரின் எதிர்ப்புக்கான காரணங்கள்

ஆ) நம்பிக்கையினால் நியாயப்படுத்துதல்’ என்ற கொள்கை குறித்து எழுது.
விடை:
சடங்குகளும், பாவமன்னிப்பு நடைமுறைகளும் ஆன்ம விடுதலைக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையை நிராகரித்து, முழுமையான நம்பிக்கையினால் மட்டுமே ஆன்ம விடுதலை பெற முடியும் என வாதிட்டார். இதுவே ‘நம்பிக்கையினால் நியாப்படுத்தப்படுதல்’ கொள்கையாகும்.

இ) எட்டாம் ஹென்றி ஆங்கிலிக்கன் திருச்சபையை ஏன் நிறுவினார்?
விடை:
இங்கிலாந்தின் அரசர் எட்டாம் ஹென்றி தனக்குப்பின் முடிசூட்டிக் கொள்ள ஒரு மகன் வேண்டி மறு திருமணம் செய்து கொள்ள விரும்பினார். மனைவி கேத்ரினுடனான திருமணத்தை ரத்து செய்ய போப்பிடம் விண்ணப்பித்தார். போப்பிடமிருந்து அனுமதி கிடைக்காததால் பொறுமை இழந்த எட்டாம் ஹென்றி அரசாணைகள் மூலம் ஆங்கிலிக்கன் திருச்சபையை நிறுவினார்.

ஈ) இக்னேஷியஸ் லயோலாவின் பங்களிப்பு குறித்து எழுதுக.
விடை:
இக்னேஷியஸ் லயோலா கிறிஸ்துவ மத பரப்பிற்காக இயேசு சபையை நிறுவினார். கல்வி நிலையங்கள், அனாதை இல்லங்கள், உறைவிடங்கள் போன்றவற்றை தொடங்கினார்.

Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம்

Question 3.
புவியியல்சார் கண்டுபிடிப்புகள்.
அ) மாலுமி ஹென்றி என்பவர் யார்?
விடை:
மாலுமி ஹென்றி, நீண்ட நெடுந்தூர கடற்பயணங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கிய போர்ச்சுகல் இளவரசர்.

ஆ) புவியியல்சார் கண்டுபிடிப்புகளுக்கான காரணங்களை வரிசைப்படுத்து.
விடை:

  • நெடுந்தெலைவு கடற்பயணத்துக்கான ஆர்வம்.
  • இதுவரை பயனப்படாத கடல் பகுதிகளில் தேடுதல் நிகழ்த்தும் சாகச உத்வேகம்.
  • பயணக்குறிப்புகள் தூண்டிய ஆர்வம் மற்றும் மதம் பரப்பும் எண்ணம் அடிப்படையான பொருளாதார அம்சம்.

இ) அமெரிக்காவில் உள்ளூர் மக்களின் அழித்தொழிப்புக்கு இட்டுச் சென்றது எது?
விடை:
உயிர் ஆபத்து விளைவிக்கும் நோய்களின் பரவல் (சின்னம்மை, அம்மை, தட்டம்மை, மலேரியா, விஷக்காய்ச்சல்)

ஈ) முக்கோண வர்த்தகம் என்றால் என்ன?
விடை:
ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அடிமைகளை ஐரோப்பிய நாடுகள் விலைக்கு வாங்கின. அட்லாண்டிக் நெடுகிலும் நடைபெற்ற வர்த்தகம் ஒரு முக்கோண வர்த்தகமாக ஆகியது.

மனவரைபடம்
Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம் 51 Samacheer Kalvi 9th Social Science Guide History Chapter 8 நவீன யுகத்தின் தொடக்கம் 53