Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 4 நீர்க்கோளம் Textbook Questions and Answers, Notes.
TN Board 9th Social Science Solutions Geography Chapter 4 நீர்க்கோளம்
9th Social Science Guide நீர்க்கோளம் Text Book Back Questions and Answers
பகுதி – I புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்வு செய்க
Question 1.
பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல ______
அ) அதிகரிக்கும்
ஆ) குறையும்
இ) ஒரே அளவாக இருக்கும்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) குறையும்
Question 2.
கடல் நீரோட்டங்கள் உருவாகக் காரணம்
அ) புவியின் சுழற்சி
ஆ) வெப்பநிலை வேறுபாடு
இ) உவர்ப்பிய வேறுபாடு
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
இ) மேற்கண்ட அனைத்தும்
Question 3.
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
விடை:
1. மீன்பிடித்தளங்கள் பெரும்பாலும் அகலமான கண்டத்திட்டு பகுதிகளில் காணப்படுகின்றன.
2. மித வெப்ப மண்டலப்பகுதிகளில் மீன்பிடித் தொழில் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது.
3. மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நீரோட்டமும், குளிர் நீரோட்டமும் இணைவதே காரணமாகும்.
4. இந்தியாவின் உள்நாட்டு மீன்பிடித்தொழில் குறிப்பிடத்தக்கது ஆகும்.
அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 1 மற்றும் 3 சரி
இ) 2, 3 மற்றும் 4 சரி
இ) 1, 2 மற்றும் 3 சரி
விடை:
ஆ) 1 மற்றும் 3 சரி
Question 4.
கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.
அ) புவித்தட்டுகள் இணைதல்
ஆ) புவித்தட்டுகள் விலகுதல்
இ) புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
ஆ) புவித்தட்டுகள் விலகுதல்
Question 5.
கடல் மட்டத்தின் கீழுள்ள நிலத்தோற்றங்கள் வரிசைக்கரமாக உள்ளவை எவை?
அ) கண்டத்திட்டு, கண்டச்சரிவு, கடலடி, சமவெளி, கடல் அகழி
ஆ) கண்டச்சரிவு, கண்டத்திட்டு, கடலடிச் சமவெளி, கடல் அகழி
இ) கடலடி சமவெளி, கண்டச்சரிவு, கண்டத் திட்டு, கடல் அகழி
ஈ) கண்டச்சரிவு, கடலடிச்சமவெளி, கண்டத் திட்டு, கடல் அகழி
விடை:
அ) கண்டத்திட்டு, கண்டச் சரிவு, கடலடி, சமவெளி, கடல் அகழி
Question 6.
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்துவது எது?
அ) வளைகுடா நீரோட்டம் – பசிபிக் பெருங்கடல்
ஆ) லேப்ரடார் கடல் நீரோட்டம் – வட அட்லாண்டிக் பெருங்கடல்
இ) கேனரி கடல் நீரோட்டம் – மத்திய தரைக்கடல்
ஈ) மொசாம்பிக் கடல் நீரோட்டம் – இந்தியப் பெருங்கடல்
விடை:
அ) வளைகுடா நீரோட்டம்-பசிபிக் பெருங்கடல்
II. கூற்று (A) காரணம் (R) கண்ட றிக
அ) A மற்றும் R இரண்டும் சரி, ‘R’, ‘A’விற்கான சரியான விளக்கம்
ஆ) A மற்றும் R சரி, ஆனால் ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம் இல்லை
இ) A சரி, ஆனால் R தவறு
ஈ) A தவறு ஆனால் R சரி
Question 1.
கூற்று (A):- வரைபடங்களில் கடல்கள் எப்பொழுதும் நீல நிறத்தால் கொடுக்கப்படும்.
காரணம் (R):- இது கடல்களின் இயற்கையான நிறத்தைக் காட்டுகிறது
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
Question 2.
கூற்று (A):- ஆழ்கடல் மட்டக்குன்றுகள், கயாட் என்று அழைக்கப்படுகின்றன.
காரணம் (R):- அனைத்து கயாட்டுகளும் எரிமலை செயல்பாடுகளால் உருவானவை.
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
Question 3.
கூற்று (A):- கடலடித்தளத்தில் காணப்படும் ஆழமான குறுகிய பகுதி கடலடிப் பள்ளத்தாக்குகள் ஆகும்.
காரணம் (R):- இவைகள் கண்டத்திட்டு, சரிவு மற்றும் உயர்ச்சிகளினால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
விடை:
அ) A மற்றும் R இரண்டும் சரி ‘R’, ‘A’ விற்கான சரியான விளக்கம்
Question 4.
கூற்று (A):- வட்டப் பவளத்திட்டு (Atolls) அட்லாண்டிக் பெருங்கடலில் பரவலாகக் காணப்படுகின்றன.
காரணம் (R):- ஆழமான பகுதிகளில் கடல்வாழ் உயிரினங்கள் குறைவாக உள்ளன.
விடை:
இ) கூற்று A சரி, காணம் R தவறு
III. பொருத்துக.
IV. சுருக்கமான விடையளி.
Question 1.
‘நீர்க்கோளம்’ பொருள் கூறுக.
விடை:
புவியின் நீர்சூழ் பகுதி நீர்க்கோளம். இது புவியில் காணப்படும் அனைத்து நிலையிலும் உள்ள திண்ட, நீர்ம, வாய) நீரை உள்ளடக்கியது.
Question 2.
நீரியல் சுழற்சி என்றால் என்ன?
விடை:
புவியின் நீரானது நிலைத்த தன்மையற்ற, நகரும் தன்மையுடையது. புவியில் உள்ள நீர் தனது நிலைகளை (பனிக்கட்டி, நீர், நீராவி) தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருப்பது நீரியல் சுழற்சி ஆகும்.
Question 3.
கடலடி நிலத்தோற்றங்கள் யாவை?
விடை:
- கண்டத்திட்டு
- கண்டச்சரிவு
- கண்ட உயர்ச்சி
- கடலடி சமவெளிகள்
(அ) அபிசல் சமவெளி
கடல் பள்ளம்
(அ) அகழிகள்
கடலடி மலைத் தொடர்கள்.
Question 4.
கடல் நீரோட்டங்களைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?
விடை:
- புவியின் சுழற்சி
- வீசும் காற்று
- கடல் நீரின் வெப்பம்
- உவர்ப்பியத்தில் உள்ள வேறுபாடு
Question 5.
கடல் அலைகளைப் பற்றிச் சுருக்கமாக விடையளி.
விடை:
- கடல் நீர் இயக்கங்களில் மிகவும் வலிமை வாய்ந்தவை அலைகளே. காற்று கடலின் மேற்பரப்பில் வீசும்போது சிற்றலைகள் உருவாகின்றன. காற்றின் வேகம், நீடிக்கம் காலம், திசை ஆகியவற்றைப் பொறுத்து அலைகளின் உயரம் அமையும்.
- ஆழ்கடலில் ஏற்படும் நில அதிர்வுகளினால் ஏற்படும் அலைகள் அதிக சேதத்தை ஏற்படுத்தும் ஆழிப் பேரலைகள்.
V. காரணம் அறிக
Question 1.
வட அரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும் தென் அரைக்கோளம், நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.
விடை:
ஏனெனில்,
- கண்டங்கள் மற்றும் கடல்கள் வட மற்றும் தென் அரைக்கோளங்களில் ஒரே சீராகப் பரவியிருக்கவில்லை
- நிலம் மற்றும் நீர்ப்பரவலின் அடிப்படையில் வட அரைக்கோளம் (61% நிலப்பரப்பு) நில அரைக்கோளம் என்றும், தென் அரைக்கோளம் (81% நிலப்பரப்பு) நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.
Question 2.
கண்டத்திட்டுகள் சிறந்த மீன்பிடித்தளங்களாகும்.
விடை:
கண்டத்திட்டு ஆழமற்ற, சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்லும் பகுதியாக இருப்பதால் கடற்புற்கள், கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்குச் சாதகமாக உள்ளது. எ.கா. கிராண்ட் பாங்க் (நியூ பவுண்ட்லாந்து)
VI. வேறுபடுத்துக.
Question 1.
உயர் ஓதம் மற்றும் தாழ் ஓதம்
விடை:
Question 2.
கடலடிச் சமவெளி மற்றும் கடலடிப்பள்ளம்
விடை:
VII. விரிவான விடையளி
Question 1.
கண்டத்திட்டு மற்றும் கண்டச் சரிவு பற்றிக் குறிப்பு வரைக.
விடை:
கண்டத்திட்டு:
- நிலத்திலிருந்து கடலை நோக்கி மென்சரிவுடன் கடலில் மூழ்கியுள்ள ஆழமற்ற பகுதியே கண்டத்திட்டு எனப்படுகிறது.
- கண்டத்திட்டு ஆழமற்ற பகுதியாக இருப்பதினால் சூரிய ஒளி நன்கு ஊடுருவிச் செல்கின்றது. இது கடற்புற்கள், கடற்பாசி மற்றும் பிளாங்டன் போன்றவை நன்கு வளர்வதற்குச் சாதகமாக உள்ளது. இதனால் கண்டத்திட்டுகள் உலகின் செழிப்பான மீன்பிடித்தளங்களுள் உள்ளன.
(எ.கா.) ‘கிராண்ட் பாங்க்’ (The Grand Bank) – நியூ பவுண்ட்லாந்து.
கண்டச்சரிவு:
- கண்ட மேலோட்டிற்கும், கடலடி மேலோட்டிற்கும் இடையில் ஒரு எல்லையை உருவாக்குகின்ற, கண்டத்திட்டின் விளிம்பிலிருந்து வன் சரிவுடன் ஆழ்கடலை நோக்கிச் சரிந்து காணப்படும் பகுதியே கண்டச்சரிவாகும்.
- வன்சரிவினைக் கொண்டிருப்பதால் படிவுகள் எதுவும் இங்குக் காணப்படுவதில்லை. கடலடிப் பள்ளத்தாக்குகள் மற்றும் அகழிகள் காணப்படுகின்றன.
- சூரிய ஒளி மிகக் குறைந்த அளவு ஊடுருவுகிறது. வெப்பநிலை மிகக்குறைவாக உள்ளதால் இப்பகுதி கடல்வாழ் உயிரினங்களில் வளர்சிதை மாற்றம் மெதுவாகவே நடைபெறுகிறது.
Question 2.
கடல் நீரோட்டங்கள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
விடை:
கடல் நீராட்டங்கள்:
பெருங்கடல்களின் மேற்பரப்பிலும், அடி ஆழத்திலும் ஒரு குறிப்பிட்ட திசையில் நகரும் நீரினை நீரோட்டம் என்று அழைக்கின்றோம்.
கடல் நீரோட்டங்களின் வகைகள்:
- வெப்பத்தின் அடிப்படையில்
- வெப்ப நீரோட்டம்
- குளிர் நீரோட்டம் என வகைப்படும்.
வெப்ப நீரோட்டம்:
தாழ் அட்சப் பகுதிகளிலிருந்து, உயர் அட்சப் பகுதிகளை நோக்கி நகரும் நீரோட்டங்கள் வெப்ப நீரோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. (எ.கா.) வளைகுடா நீரோட்டம் (அட்லாண்டிக் பெருங்கடல்), வட புவியிடைக் கோட்டு நீரோட்டம் (பசிபிக் பெருங்கடல்).
குளிர் நீரோட்டம்:
உயர் அட்சப் பகுதிகளிலிருந்து, தாழ் அட்சப்பகுதிகளை நோக்கி நகரும் நீரோட்டங்கள் குளிர் நீரோட்டங்கள் என அழைக்கப்படுகின்றன.
(எ.கா) லாப் ரடார் நீரோட்டம் (அட்லாண்டிக் பெருங்கடல்), பெருவியன் நீரோட்டம் (பசிபிக் பொருங்கடல்).
(தாழ் அட்சம் → வெப்ப மண்டம்
உயர் அட்சம் → மிதவெப்பமண்டலம், துருவமண்டலம்)
Question 3.
கடல்வளங்கள் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் யாவை?
விடை:
கடல்வளங்களின் தாக்கம்:
- கடல் நீர் மற்றும் கடலில் அடிப்பகுதியில் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகள் கடல்வளங்கள் எனப்படும்.
- சமுகத்தின் நீடித்த தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கடல்வளங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
- பலதரப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் உணவு, மருத்துவம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தொழில்துறைகளில் பயன்படுகின்றன.
- ஆற்றல் கனிமவளம் மற்றும் நீர் ஆகியவற்றின் உலகத்தேவைகள் உயிரற்ற கடல்வளங்களையே சார்ந்துள்ளன.
சுற்றுலா, மீன்பிடி தொழில், மரபுசாரா எரிசக்தி, போக்குவரத்துக்கு பயன்படுகின்றன.
9th Social Science Guide நீர்க்கோளம் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்வு செய்க
Question 1.
புவியின் மேற்பரப்பில் ____ சதவிகித நீரானது கடல்களுக்கு உட்பட்டது.
அ) 95
ஆ) 97
இ) 99
ஈ) 93
விடை:
ஆ) 97
Question 2.
‘ஆயிரம் ஏரிகளின் நிலம்’ என்று _____ அழைக்கப்படுகிறது.
அ) பின்லாந்து
ஆ) இங்கிலாந்து
இ) அயர்லாந்து
ஈ) நெதர்லாந்து
விடை:
அ) பின்லாந்து
Question 3.
வட அரைக்கோளம் _____ சதவிகிதம் நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
அ) 51
ஆ) 61
இ) 71
ஈ) 81
விடை : ஆ) 61
Question 4.
தென் அரைக்கோளம் _____ சதவிகிதம் நீர்ப்பரப்பைக் கொண்டுள்ளது.
அ) 61
ஆ) 91
இ) 71
ஈ) 81
விடை:
ஈ) 81%
Question 5.
மொத்தக்கடல் பரப்பில் அகழி சதவிகிதத்திற்கு மேல் காணப்படுகிறது.
அ) 5
ஆ) 6
இ) 7
ஈ) 9
விடை:
இ) 7
Question 6.
நில நடுக்கோட்டுப் பகுதியில் ஆண்டுச் சராசரி வெப்பநிலை ____ ஆக இருக்கும்.
அ) 15°செ
ஆ) 17°செ
இ) 21°செ
ஈ) 23° செ
விடை:
இ) 21° செ
Question 7.
‘சுந்தா அகழி’ காணப்படும் பெருங்கடல் _____ எனப்படும்.
அ) அட்லாண்டிக் பெருங்கடல்
ஆ) பசிபிக் பெருங்கடல்
இ) இந்தியப் பெருங்கடல்
ஈ) அண்டார்டிக் பெருங்கடல்
விடை:
இ) இந்தியப் பெருங்கடல்
Question 8.
கடலில் காணப்படும் பிளாங்டனின்’ அளவைத் தீர்மானிக்கும் காரணி
1. நீரின் ஆழம்
2. கடல் நீரோட்டம்
3. வெப்பநிலை மற்றும் உவர்ப்பியம்
4. பகல் மற்றும் இரவின் நீளம்
அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 1, 2 மற்றும் 3 சரி
இ) 1, 3 மற்றும் 4 சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
ஆ) 1, 2 மற்றும் 3 சரி
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
Question 1.
கோளத்தின் கதாநாயகன் என்று _____ அழைக்கப்படுகிறார்.
விடை:
சில்வியா ஏர்ல்
Question 2.
‘Hypso’ என்ற கிரேக்கச் சொலில்ன் பொருள் _____
விடை:
உயரம்
Question 3.
தென் சீனக் கடலின் கண் எனப்படுவது ______
விடை:
டிராகன் துளை
Question 4.
காஸ்பியன் கடல் உவர்ப்பியத்தின் அளவு _____
விடை:
14% – 17%
Question 5.
இந்தியாவின் தேசிய கடல்வாழ் உயிரினம் ______
விடை:
கங்கைவாழ் டால்பின்
III. குறுகிய விடையளி.
Question 1.
நிலத்தடி நீர்மட்டம் என்றால் என்ன?
விடை:
நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள நீரின் மேல்மட்ட நிலையே நிலத்தடி நீர் மட்டம் ஆகும். (Water Table)
Question 2.
நீர் கொள் படுகை என்றால் என்ன?
விடை:
நீர்க்கொள்பாறைகளின் வழியாக ஊடுருவிச் சென்று, நீர் உட்புகாப் பாறையின் மேல்பகுதியில் தேங்கி நிற்கும் நீரை நீர்க்கொள்படுகை (Aquifers) என்கிறோம்.
Question 3.
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள கடல்கள் யாவை?
விடை:
பால்டிக் கடல், கருங்கடல், கரீபியன் கடல், வட கடல், மத்திய தரைக்கடல், நார்வீஜியன் கடல்.
Question 4.
இந்தியப் பெருங்கடலில் உள்ள கடல்கள் யாவை?
விடை:
செங்கடல், பாரசீக வளைகுடா, அரபிக்கடல், அந்தமான் கடல், வங்காள விரிகுடா.
Question 5.
இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகள் யாவை?
விடை:
அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், லட்சத் தீவுகள், இலங்கை, பாம்பன் தீவுகள்.
IV. விரிவான விடையளி.
Question 1.
அகழிகள், கடலடி மலைத் தொடர்கள் பற்றி விவரி?
விடை:
கடலடிப் பள்ளம் / அகழிகள்
- பெருங்கடலின் மிக ஆழமான பகுதி அகழி ஆகும். இது மொத்தக்கடலடிப் பரப்பில் 7 சதவீதத்திற்கு மேல் காணப்படுகின்றது. அகழியில் நீரின் வெப்பநிலை உறைநிலையை விட சற்று அதிகமாக இருக்கும்.
- படிவுகள் ஏதும் இல்லாததினால், பெரும்பாலான அகழிகள் வன்சரிவுடன் ‘v’ வடிவத்தில் காணப் படுகின்றன.
- பெரும்பாலும் வலிமையான நில அதிர்வுகளின், நிலநடுக்க மேல்மையப்புள்ளி (Epicentre) இங்கு காணப்படுகின்றது.
கடலடி மலைத்தொடர்கள்
- கடலடியில் காணப்படும் தொடர்ச்சியான மலைத்தொடர்கள் கடலடி மலைத் தொடர்கள் எனப்படுகின்றன. இவை இரண்டு நிலத்தட்டுகள் விலகிச் செல்வதினால் உருவாகின்றன.
- இவை இளம் பசால்ட் பாறைகளால் ஆவை. புவி நிலத்தோற்றங்களில் இம்மலைத் தொடர் மிக விரிந்தும் தனித்தும் காணப்படும் நிலத்தோற்றமாகும்.
- மத்திய அட்லாண்டிக் மலைத் தொடரும், கிழக்கு பசிபிக் மலைத் தொடரும் கடலடி மலைத் தொடர்களுள் நன்கு அறியப்பட்டவைகளாகும்.
Question 2.
ஓதங்களை விவரி.
விடை:
ஓதங்க ள் (Tides)
- சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கடல்நீர் உயர்ந்து தாழ்வது
- இவை உயர் ஓதங்கள் (Spring tides) மற்றும் தாழ் ஓதங்கள் (Neap tides) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
உயர் ஓதம் :
- புவி, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்பொழுது, சூரியன் மற்றும் சந்திரனின் கூட்டு ஈர்ப்பு விசையானது கடலின் மேற்பரப்பு அலைகளை வலுவடையச் செய்து உயர் அலைகளை உருவாக்குகின்றன.
- இவ்வுயரமான அலைகள் உயர் ஓதங்கள் எனப்படுகின்றன. இவை அமாவாசை மற்றும் முழு நிலவு தினங்களில் ஏற்படுகின்றன.
தாழ் ஓதம் :
- புவி, சூரியன் மற்றும் சந்திரன் செங்குத்துக் கோணத்தில் வரும்போது இவற்றின் ஈர்ப்பு விசையானது ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படுவதினால் உயரம் குறைவான அலைகள் உருவாகின்றன.
- இவ்வுயரம் குறைவான அலைகள்,தாழ் ஓதங்கள் எனப்படுகின்றன.
- இரண்டு உயர் ஓதங்களுக்கு இடையே தாழ் ஓதங்கள் ஏற்படுகின்றன. சந்திரனின் முதல் மற்றும் இறுதி கால் பகுதியில் அதாவது மாதத்தில் இரண்டு முறை இவ்வோதங்கள் ஏற்படுகின்றன.
Question 3.
பெருங்கடலின் தோற்றம் பற்றி ஒரு பத்தியில் விடை தருக?
விடை:
பொருங்கடலின் தோற்றம்:
- மிகப்பரந்த உவர்நீரைத் கொண்ட பெருங்கடல்கள் சுமார் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக புவியின் மீது உருவாகி இருக்கலாம் எனப் புவி அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.
- தொடக்க காலத்தில் நீர் இல்லாத கோளாக இருந்த புவி, காலப்போக்கில் குளிரத் தொடங்கி, புவியில் உட்பகுதியில் இருந்த நீராவி வெளியேறி வளிமண்டலத்தை அடைந்து மேகங்களாக உருவாகி இடைவிடாத மழையைப் பொழிந்தன. பல்லாயிரம் ஆண்டுகளாகப் பெய்த இந்த மழை பள்ளங்களை நிரப்பி நாளடைவில் பெருங்கடலை உருவாக்கின.
- வட அரைக்கோளம் 61% நீலப்பரப்பையும் தென் அரைக்கோளம் 81% நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது. நிலம் மற்றும் நீர் பரவலின் அடிப்படையில் வட அரைக்கோளம் நில அரைக்கோளம் என்றும், தென் அரைக்கோளம் நீர் அரைக்கோளம் என்றும் அழைக்கப்படுகின்றன.
- பெருங்கடல்கள் மற்றும் கடல்கள் அதிக அளவிலான உணவு மற்றும் கனிம வளங்களைக் கொண்டிருப்பதால் புவிக்கோளத்தின் வளக்கிண்ணமாக கருதப்படுகிறது.
மனவரைபடம்