Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Social Science Guide Pdf Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Social Science Solutions Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

9th Social Science Guide நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்வு செய்க

Question 1.
பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் …………….. என்று அழைக்கப்படுகிறது.
அ) வானிலைச் சிதைவு
ஆ) அரித்தல்
இ) கடத்துதல்
ஈ) படியவைத்தல்
விடை:
அ) வானிலைச் சிதைவு

Question 2.
இயற்கைக் காரணிகளால் நிலம் சமப்படுத்தப்படுதலை ………. என்று அழைக்கின்றோம்.
அ) படிவுகளால் நிரப்பப்படுதல்
ஆ) அரிப்பினால் சமப்படுத்துதல்
இ) நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்
ஈ) ஏதுமில்லை
விடை:
இ) நிலத்தோற்ற வாட்டம் அமைத்தல்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 3.
……………………… ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்.
அ) துள்ளல்
ஆ) வண்டல் விசிறி
இ) டெல்டா
ஈ) மலை இடுக்கு
விடை:
இ டெல்டா

Question 4.
சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம் ……..
அ) பனியாறு
ஆ) காற்று
இ) கடல் அலைகள்
ஈ) நிலத்தடி நீர்
விடை:
ஈ) நிலத்தடி நீர்

Question 5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள நிலத்தோற்றங்களில் எது பனியாறுகளின் படியவைத்தலால் உருவாக்கப் படவில்லை.
அ) சர்க்
ஆ) மொரைன்
இ) டிரம்லின்
ஈ) எஸ்கர்
விடை:
அ) சர்க்

Question 6.
காற்றின் படியவைத்தலால் உருவாக்கப்படும் மென்படிவுகளைக் கொண்ட நிலத்தோற்றம் ……………… ஆகும்.
அ) காற்றடி வண்டல்
ஆ) பர்கான்
இ) ஹமாடா
ஈ) மணல் சிற்றலைகள்
விடை:
அ) காற்றடி வண்டல்

Question 7.
கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ………
அ) கடல் அலை அரித்தல்
ஆ) ஆற்று நீர் அரித்தல்
இ) பனியாறு அரித்தல்
ஈ) காற்றின் படியவைத்தல்
விடை:
அ) கடல் அலை அரித்தல்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 8.
…………. ன் அரித்தல் செய்கையினால் சர்க்குகள் உருவாக்கப்படுகின்றன.
அ) காற்று
ஆ) பனியாறு
இ) ஆறு
ஈ) நிலத்தடி நீர்
விடை:
ஆ) பனியாறு

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 50

III. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை வாசித்து சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.
1. “I” வடிவ பள்ளத்தாக்கு ஆறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
2. “U” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
3. “V” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
அ) 1, 2 மற்றும் 3ம் சரி
ஆ) 1, 2 சரி
இ) 1 மற்றும் 3ம் சரி
ஈ) 2 மட்டும் சரி
விடை:
ஆ) 1, 2 சரி

Question 2.
கூற்று I: ஆறுகள் சமன்படுத்துதலின் முக்கிய காரணியாகும்.
கூற்று II :ஆறுகள் ஒடும் சரிவுகளை பொருத்து அதன் செயல்பாடு இருக்கும்.
அ) வாக்கியம் I தவறு II சரி
ஆ) வாக்கியம் I மற்றும் II தவறு
இ) வாக்கியம் I சரி வாக்கியம் II தவறு
ஈ) வாக்கியம் I மற்றும் II சரி
விடை:
ஈ) வாக்கியம் I மற்றும் II சரி

Question 3.
கூற்று : சுண்ணாம்பு பாறை பகுதிகளில் நிலத்தடி நீர் குறைவாக இருக்கும்.
காரணம் : நீர் சுண்ணாம்பு பாறையில் உட்புகாது.
அ) கூற்று சரி காரணம் தவறு
ஆ) கூற்று தவறு காரணம் சரி
இ) கூற்று மற்றும் காரணம் தவறு
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி
விடை:
அ) கூற்று சரி காரணம் தவறு

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
வானிலைச்சிதைவு – வரையறு.
விடை:

  • புவியின் மேற்பரப்பு நேரடியாக வளிமண்டல நிகழ்வுகளோடு தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும், அழிதலுக்கும் உட்படுகின்றன.
  • இச்செயல்பாடுகளையே வானிலைச் சிதைவு என அழைக்கின்றோம்.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 2.
உயிரினச்சிதைவு என்றால் என்ன?
விடை:
மனித மற்றும் தாவர, விலங்கினச் செயல்பாடுகளினால் பாறைகள் சிதைவுறுதலே உயிரினச் சிதைவு எனப்படும்.
(எ.கா) (i) தாவரங்களின் வேர்கள் பாறைகளின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்கிறது.

Question 3.
ஆற்றின் மூன்று நிலைகள் யாது? அதனோடு தொடர்புடைய இரண்டு நிலத்தோற்றங்களைக் கூறுக.
விடை:

  • இளநிலை – V வடிவப்பள்ளத் தாக்குகள், குறுகிய பள்ளத்தாக்குகள்
  • முதிர் நிலை – வண்டல் விசிறிகள், குருட்டு ஆறுகள்
  • மூப்பு நிலை – டெல்டாக்கள், ஓத பொங்கு முகங்கள்

Question 4.
குருட்டு ஆறு என்றால் என்ன?
விடை:

  • ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது.
  • இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சி அளிக்கும். இதுவே குருட்டு ஆறு எனப்படும்.

Question 5.
கடற்குகை எவ்வாறு கடல் வளைவிலிருந்து வேறுபடுகிறது?
விடை:

  • கடல் அலைகள் தொடர்ந்து கடல் ஓங்கல்களின் மீது மோதுவதால் அடிப்பகுதி அரிக்கப்பட்டு துவாரம் போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவையே கடல் குகைகள் எனப்படுகின்றன. அருகருகே உள்ள இரண்டு கடற்குகைகளின் நீட்டு நிலங்கள்
  • அரிக்கப்படுவதால் இணைந்து ஒரு வளைவு போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன. இவையே கடல் வளைவுகள் எனப்படும். (எ.கா) நீல் தீவு, (அந்தமான் நிக்கோபார்)

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 6.
இந்தியாவில் காணப்படும் ஏதேனும் நான்கு சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களை பட்டியலிடுக.
விடை:

  • குப்ததாம் குகைகள் – மேற்கு பீஹார்
  • ராபர்ட் குகை – உத்தரகாண்ட்
  • பாண்டவர் குகைகள் – மத்தியபிரதேசம்
  • போரா குகைகள் – ஆந்திரப்பிரதேசம்

Question 7.
தொங்கும் பள்ளத்தாக்கு என்றால் என்ன?
விடை:
முதன்மை பனியாற்றினால் உருவாக்கப்பட்ட பள்ளத்தாக்கின் மீது அமைந்திருக்கும் துணைப் பனியாற்றின் பள்ளத்தாக்கு தொங்கும் பள்ளத்தாக்கு ஆகும்.

Question 8.
வரையறு,
அ) மொரைன்
ஆ) டிரம்லின்
இ) எஸ்கர்
விடை:
அ) மொரைன்
பள்ளத்தாக்கு அல்லது கண்டப் பனியாறுகளால் படிய வைக்கப்பட்டு உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் மொரைன்கள் எனப்படும்.

ஆ) டிரம்லின்
கவிழ்த்து வைக்கப்பட்ட மிகப்பெரிய கரண்டியைப் போன்றோ அல்லது பாதியாக வெட்டப்பட்ட முட்டையைப் போன்றோ காட்சியளிக்கும் மொரைன்கள் டிரம்ளின்கள் எனப்படுகின்றன.

இ) எஸ்கர்
பனியாறுகள் உருகுவதால் அவை கொண்டு வரும் கூழாங்கற்கள், சரளைக்கற்கள் மற்றும் மணல் ஒரு நீண்ட குறுகிய தொடர் குன்று போன்று பனியாற்றுக்கு இணையாகப் படிய வைக்கப்படுகிறது. இதுவே எஸ்கர்கள் ஆகும்.

Question 9.
காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களைப் பட்டியலிடு.
விடை:

  • காளான் பாறை
  • இன்சல் பர்க்
  • யார்டங்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 10.
கடல் அலை அரிமேடை என்றால் என்ன?
விடை:

  • ஓங்கல்களின் மீது அலைகள் மோதுவதால் சற்று உயரத்தில் அரித்தல் ஏற்பட்டு தோன்றுவது அலை அரிமேடை ஆகும்.
  • இது பென்ச், திட்டு, திடல், சமவெளி எனவும் அழைக்கப்படுகிறது.

V. காரணம் கூறு

Question 1.
வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த மண்டலங்களில் வேதியியல் சிதைவு அதிகமாக ஏற்படுகிறது.
விடை:
ஏனெனில்
இரசாயனச் சிதைவுகளான ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைசல், நீர்கொள்ளல் ஆகியவை நீர், வெப்பம் இன்றி நிகழாது.

Question 2.
ஒதப்பொங்கு முகங்களில் மென்மையான வண்டல் படிவுகள் குறைவாக படிய வைக்கப்படுகிறது.
விடை:
ஏனெனில்,
ஓதப்பொங்கு முகங்களில் நிலத்தோற்றங்களில் படியவைத்தல் செயல் கிடையாது.

Question 3.
பாறைகளை அனைத்து திசைகளிலும் அரிக்கும் தன்மை காற்றுக்கு உண்டு.
விடை:
ஏனெனில்,
பூமியின் மேற்பரப்பில் அனைத்து திசைகளிலும் கிடைமட்டமாக நகரக்கூடிய வாயு காற்று ஆகும். பாறை அடுக்குகளின் அடிப்பகுதி மென்பாறைகள் தொடர்ந்து அரிக்கப்படுகின்றன.

IV. வேறுபடுத்துக.

Question 1.
இயற் சிதைவு மற்றும் வேதியியல் சிதைவு.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 65

Question 2.
டெல்டா மற்றும் ஒதபொங்கு முகம்
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 66

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 3.
கல்விழுது மற்றும் கல்முளை.
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 70

Question 4.
நீண்ட மணற்குன்று மற்றும் குறுக்கு மணற்குன்று நீண்ட மணற்குன்று
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 75

Question 5.
இன்சல்பர்க் மற்றும் யார்டங்
விடை:
இன்சல்பர்க்
வறண்ட பிரதேசங்களில் காணப்படும் தீப்பாறைகள் (கடினப்பாறை) காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றியிருக்கும் பகுதியை விட தனித்து, உயர்ந்து காணப்படும். இவையே இன்சல்பர்க்குகள் ஆகும்.

யார்டங்
வறண்ட பிரதேசங்களில் செங்குத்தாக அமைந்திருக்கும் சிலபாறைகள் கடின மற்றும் மென்பாறை என மாறி மாறி அமைந்து இருக்கும். இந்த வரிசையில் மென்பாறைகள் காற்றினால் எளிதில் அரிக்கப்பட்டுவிடும். காற்றினால் அரிக்கப்படாத கடினப்பாறைகள் ஒழுங்கற்ற முகடுகள் போலக் காணப்படும். இவையே நிலத் தோற்றம் யார்டங்குகள் எனப்படுகின்றன.

Question 6.
நீண்ட மணல்திட்டு மற்றும் மணல்திட்டு
விடை:
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 80

VII. விரிவான விடையளி

Question 1.
வானிலை சிதைவு என்றால் என்ன? வகைப்படுத்துக.
விடை:
வானிலைச் சிதைவு:

  • வளிமண்டல நிகழ்வுகளோடு புவியின் மேற்பரப்பு நேரடியாகத் தொடர்பு கொள்வதால் பாறைகள் சிதைவடைதலுக்கும், அழிதலுக்கும் உட்படுகின்றன செயல்பாடுகளையே ‘வானிலைச் சிதைவு’ எனப்படும். வகைகள்
    • இயற்பியல் சிதைவு
    • இரசாயனச் சிதைவு
    • உயிரினச் சிதைவு

இயற்பியல் சிதைவு:
இயற்பியல் சக்திகளால் பாறைகள் இரசாயன மாற்றம் ஏதும் அடையாமல் உடைபடுதல் ‘இயற்பியல் சிதைவு’ ஆகும். பாறை உரிதல், பாறை பிரிந்துடைதல், சிறு துகள்களாக சிதைவுறுதல் இயற்பியல் சிதைவின் வகைகள்.

இரசாயனச் சிதைவு:
பாறைகளில் இரசாயன மாற்றங்கள் ஏற்படுவதால் உடைந்து சிதைவுறும் நிகழ்வு ‘இரசாயனச் சிதைவு’ எனப்படும். ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைதல், நீர்க்கொள்ளல் ஆடிகியன இரசாயனச் சிதைவின் வகைகள்.

உயிரினச் சிதைவு

  • தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களால் பாறைகள் சிதைவுறுதல் ‘உயிரினச் சிதைவு’ எனப்படும்.
  • தாவர வேர்கள் பாறைகளின் இடைவெளி வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்தல்,

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 2.
நிலத்தடி நீரின் அரித்தலால் உண்டாகும் நிலத்தோற்றங்களை விவரி.
விடை:
நிலத்தடி நீர் சுண்ணாம்பு நிலப் பிரதேசங்களில் நிலவாட்டம் அமைக்கும் செயல்களினால் பலவித நிலத்தோற்றங்களை ஏற்படுத்தகின்றன.

டெர்ரா ரோஸா:
சுண்ணாம்பு நிலப்பகுதிகளில் சுண்ணாம்பு கரைந்து சிதைவுற்ற பின்னர் எஞ்சிய செம்மண் படிவு உருவாக்கும் நிலத்தோற்றம். (சிகப்புக்கு காரணம் இரும்பு ஆக்சைடு).

பேப்பீஸ்:
கரடு முரடான சுண்ணாம்புப் பாறைகளிடையே நிலத்தடி நீர் தெளிந்து ஓடும்போது ஏற்படும் நீண்ட அரிப்புக் குடைவுகள் ‘பேப்பீஸ்கள்’ ஆகும்.

உறிஞ்சு துளைகள்:
சுண்ணாம்பு பாறைகள் கரைதலினால் ஏற்படும் புனல் வடிவப் பள்ளங்கள் ‘உறிஞ்சு துளைகள்’ ஆகும்.

குகைகள் மற்றும் அடிநிலக் குகைகள்:
கரியமில அமிலம் சுண்ணாம்பு பாறைகளில் வினைபுரிவதால் ஏற்படும் வெற்றிடம் குகை’ எனப்படும்.

அடிநிலக் குகைகள்:
உருவத்திலும் அளவிலும் வேறுபட்டு தரைப்பகுதி சமமற்றுக் காணப்படும் குகைகள் அடிக்கல் குகைகள் எனப்படும்.

Question 3.
பனியாறு என்றால் என்ன?
விடை:
பனியாறு:
பனிக்குவியல் மண்டலத்திலிருந்து பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மெதுவாக நகர்வதே ‘பனியாறு எனப்படும். பனியாறுகள் அவை உற்பத்தியாகும் இடங்களை அடிப்படையாகக் கொண்டு

  • கண்டப்பனியாறு
  • பள்ளத்தாக்குப் பனியாறு என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டப் பனியாறு:
கண்டங்களில் அடர்ந்த பனிபோல் மூடப்பட்டிருக்கும் பரந்த நிலப்பரப்பு ‘கண்டப்பனியாறு’ எனப்டும்.

பள்ளத்தாகுப் பனியாறு:
பனி மூடிய மலைத்தொடர்களில் இருந்து உற்பத்தியாகும் பனியாறு பள்ளத்தாக்குப் பனியாறு’ எனப்படும்.

Question 4.
காற்று படியவைத்தல் செயலினை விவரி.
விடை:

  • காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்த தடைகள் (புதர்கள், காடுகள், பாறைகள்) காற்றின் வேகத்தை தடுப்பதால், காற்றினால் கடத்தப்பட்ட படிவுகள் காற்று வீசும் பக்கத்திலும் அதன் மறுபக்கத்திலும் படியவைக்கப்படுகின்றன.
    – காற்றின் படியவைத்தலால் எற்படும் நிலத்தோற்றங்கள்

    • மணல் குன்று
    • பர்கான்
    • காற்றடி வண்டல்

மணல் மேடு

  • பாலைவனங்களில் வீசும் மணல் புயல் மிக மிக அதிகமாக மணலைக் கடத்துகின்றன. புயலின் வேகம் குறையும் போது கடத்தப்பட்ட மணல் அதிக அளவில் படியவைக்கப்படுகின்றன. இவ்வாறு குன்று அல்லது மேடாகக் காட்சியளிக்கும் மணல் படிவு ‘மணல் மேடு’ எனப்படும்.
    – மணல் மேடுகள்

    • பர்கான்
    • குறுக்கு மணல்மேடு
    • நீண்ட மணல் மேடு என பலவகைப்படும்.

காற்றடி வண்டல்:
பரந்த பிரதேசத்தில் படிய வைக்கப்படும் மென்மையான, நுண்ணியப்படிவுகளே ‘காற்றடி வண்டல்’ எனப்படும்.

பர்கான்:
பிறை வடிவத்தில் தனித்துக் காணப்படும் மணல் மேடுகள் பர்கான்கள் எனப்படும். (காற்று வீசும் திசை – மென் சரிவு, எதிர்பக்கம் வன் சரிவு).

VIII. நில வரைபடப் பயிற்சி

கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றைக் குறிக்கவும். (நில வரைபடப் புத்தக உதவியுடன்)

1. ஏதேனும் இரண்டு டெல்டாக்கள்.
2. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுண்ணாம்புப் பிரதேச பகுதி.
3. உலகில் காணப்படும் ஏதேனும் இரண்டு வெப்ப மற்றும் குளிர் பாலைவனங்களைக் குறிக்கவும்.

IX. உயர் சிந்தனை வினா.

Question 1.
பாலைவனங்களில் சமன்படுத்துதலின் ஒரே காரணி காற்றாகும்.
விடை:
பாலைவனங்களில் புதர்கள், காடுகள், மலைகள் அதிகம் மணல் பரப்பே அதிகம். வெப்பக்காற்று அதிகம் வீசும். தங்கு தடையின்றி வீசும் இவ்வெப்பக்காற்று காற்று வீசும் பக்கத்திலும், மறுபக்கமும் படிய வைக்கிறது. எனவே பாலைவனப் பகுதியை சமன் செய்கிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 2.
சுண்ணாம்புப் பாறைப்பகுதிகளில் மேற்பரப்பில் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம். ஏன்?
விடை:
சுண்ணாம்புப் பாறைப் பகுதியில் நீர் எளிதில் உறிஞ்சுதுளை வழியாக கீழே சென்று விடும். அதனால் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம்.

Question 3.
மூப்புநிலையில் ஆறுகள் இளநிலையை விட அகன்று காணப்படுகிறது.
விடை:

  • இளநிலை ஆறு ஆரம்ப நிலையில் செங்குத்தான மலைச் சரிவுகளில் உருண்டோடுகின்றன. பாய்ந்தோடும்போது பள்ளத்தாக்கை அகலமாகவும், ஆழமாகவும் அரித்துச் செல்கின்றன.
  • மூப்பு நிலையில் அரித்துக் கடத்தி வரப்பட்ட பொருட்கள் தாழ் நிலப்பகுதியில் மெதுவாகச் சென்று நிலத்தை சமன் செய்து அகன்று காணப்படும்.

X. புவியியல் பதங்கள் எழுதுக (மாணவர்களுக்கானது)

அ) சுண்ணாம்பு நிலத்தில் உள்ள கால்சியம் கார்பனேட் பாறைகளில் ஏற்படும் வேதியல் மாற்றம்
ஆ) ஓங்கலுக்கு அருகில் காணப்படும் தட்டையான நிலப்பரப்பு
இ) அரித்தல்+கடத்துதல் = படியவைத்தல்
ஈ) பனிவயலின் எல்லைக்கோடு

9th Social Science Guide நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் Additional Important Questions and Answers

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இரும்புத்தாது ஆக்ஸிஜனுடன் இணைந்து ……….. ஆக மாறுகிறது.
விடை:
இரும்பு ஆக்ஸைடு

Question 2.
ஆறு கடலுடன் கலக்குமிடம் …………… ஆகும்.
விடை:
முளகத்துவாரம்

Question 3.
ஆழம் குறைவான பகுதிகளில் வேகமாக செல்லும் ஆற்று நீர் …………… எனப்படுகிறது.
விடை:
துள்ளல்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 4.
உலகிலேயே மிக உயரமான நீர் வீழ்ச்சி …….
விடை:
ஏஞ்சல் நீர் வீழ்ச்சி

Question 5.
ஆசியாவிலேயே மிகப்பெரிய நன்னீர் குருட்டு ஆறு …………
விடை:
பீஹாரிலுள்ள கன்வர் ஏரி

Question 6.
உலகின் மிகப் பெரிய டெல்டா ………..
விடை:
கங்கை பிரம்மபுத்திரா டெல்டா

Question 7.
உலகின் மிக ஆழமான உறிஞ்சு துளை …….
விடை:
சீனாவின் சைனோசை ஜியான் காங்

II. பொருத்துக I

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 85

III. சுருக்கமான விடையளி

Question 1.
ஆற்றின் முதன்மைச் செயல்கள் யாவை?
விடை:
அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தல்.

Question 2.
காளான் பாறைகள் என்றால் என்ன?
விடை:

  • மென் மற்றும் கடினப் பறைகளைக் கொண்ட பாறை அடுக்குகளின் அடிப்பகுதியில் காணப்படும் மென்பாறைகள் காற்றினால் தொடர்ந்து அரிக்கப்படும் போது அப்பாறைகள் காளான் போன்ற வடிவத்தைப் பெறுகின்றன.
  • இவ்வாறு அரிக்கப்பட்டு உருவான பாறைகள் காளான் பாறைகள் அல்லது பீடப்பாறைகள் எனப்படுகின்றன.
  • இவ்வகையானப் பாறைகள் இராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் காணப்படுகின்றன.

Question 3.
இன்சல் பர்க்குகள் என்றால் என்ன?
விடை:

  • இன்சல்பர்க் என்பது ஒரு ஜெர்மானிய வார்த்தை ஆகும். அதன் பொருள் தீவுமலை. வறண்ட பிரதேசங்களில் காணப்படும்.
  • தீப்பாறைகள் (கடினப்பாறை) காற்றின் அரிப்புக்கு உட்படாமல் சுற்றியிருக்கும் பகுதியை விட தனித்து, உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றமே இன்சல்பர்க்குகள் ஆகும்.
  • (உதாரணம்) ஆஸ்திரேலியாவில் உள்ள உலுரு அல்லது எய்ர்ஸ் பாறை.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 4.
ஸ்பீலியோதெம்ஸ் என்றால் என்ன?
விடை:

  • குகைகளிலும், அடி நிலக்குகைகளிலும் படிய வைத்தலால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்கள் ஸ்பீலியோதெம்ஸ் என அழைக்கப்படுகின்றன.
  • ட்ரேவர்டைன், டூஃபோ மற்றும் சொட்டுப்படிவுகள் ஸ்பீலியோதெம்ஸில் அடங்கும்.

Question 5.
கல் விழுது – வருவி.
விடை:
குகைகளின் கூரைகளிலிருந்து ஒழுகும் கால்சியம் கார்பனேட் கலந்த நீர் நீராவியாகும் போது கால்சைட் விழுதுகள் போன்று காட்சியளிக்கும். இது கல் விழுது என்று அழைக்கப்படுகிறது.

Question 6.
துள்ளல் என்றால் என்ன?
விடை:
ஆழம் குறைவான பகுதிகளில் வேகமாக செல்லும் ஆற்று நீர் துள்ளல் (Rapid) எனப்படுகிறது.

IV. விரிவான விடையளி

Question 1.
ஆற்றின் அரித்தல் செயலால் ஏற்படும் நிலத்தோற்றங்கள் யாவை?
விடை:
‘V’ வடிவ பள்ளத்தாக்கு
ஆற்றின் செங்குத்தான அரித்தல் செய்கையால் மலைகளில் உருவாக்கப்படும் ஆழமான மற்றும் அகலமான நிலத்தோற்றமே ‘V’ வடிவபள்ளத்தாக்கு ஆகும்.

குடக்குடைவு:

  • ஆற்றின் படுகையில் செங்குத்தாக குடையப்பட்ட உருளை வடிவப்பள்ளங்களே குடக்குடைவு எனப்படுகிறது.
  • இவற்றின் விட்டமும், ஆழமும் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படும்.

ஆற்று வளைவுகள்:
ஆறுகளில் படிவுகள் அதிகரிப்பதால் அதன் வேகம் குறைகிறது. இதனால் ஆறுகள் வளைந்து செல்கின்றன. இவ்வளைவுகளே ஆற்று வளைவுகள் எனப்படுகின்றன.

குருட்டு ஆறு அல்லது குதிரை குளம்பு ஏரி:
ஆற்று வளைவுகள் காலப்போக்கில் பெரிதாகி இறுதியில் ஒரு முழு வளையமாக மாறுகிறது. இம்முழு வளைவுகள் முதன்மை ஆற்றிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியைப் போன்று காட்சி அளிக்கும். இதுவே குருட்டு ஆறு எனப்படுகிறது.

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள்

Question 2.
பனியாறு அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள் யாவை?
விடை:
பனியாறுகள் அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள் :
பனியாறுகள் அரித்தலால் உருவாகும் நிலத்தோற்றங்கள் சர்க்கு, அரெட்டு, மேட்டர்ஹார்ன், ‘U’ வடிவப் பள்ளத்தாக்கு, தொங்குப்பள்ளத்தாக்கு, பனியாறுகுடா போன்றவையாகும்.

சர்க்கு :
பனியாறுகள் மலைகளில் செங்குத்தான பக்கச்சுவர்களை அரிப்பதால் பள்ளங்கள் தோன்றுகின்றன. நாற்காலி போன்ற வடிவமுடைய இப்பள்ளங்கள் சர்க்குகள் எனப்படுகின்றன.

அரெட்டு:
இருசர்க்குகள் எதிர் பக்கங்களில் அமையும் போது அதன் பின் மற்றும் பக்கச்சுவர்கள் அரிக்கப்படுகின்றன. அரிக்கப்பட்ட சர்க்குகள் கத்திமுனை போன்ற கூரிய வடிவத்துடன் காட்சியளிக்கும்.

மேட்டர்ஹார்ன்:
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்குகள் இணையும் போது கூரிய பக்கங்களை உடைய சிகரம் போன்ற பிரமிடு வடிவத்தைப் பெறுகிறது. இது மேட்டர்ஹார்ன் எனப்படும்.

‘U’ வடிவப் பள்ளத்தாக்கு:
ஆற்றுப்பள்ளத்தாக்குகளின் வழியே பனியாறுகள் நகரும் போது அப்பள்ளத்தாக்குகள் மேலும் ஆழமாகவும், அகலமாகவும் அரிக்கப்படுவதால் ‘U’ வடிவப் பள்ளத்தாக்குகள் உருவாக்கப்படுகின்றன.

மனவரைபடம்

நிலக்கோளம் – II. புவி புறச்செயல்பாடுகள்

Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 90
Samacheer Kalvi 9th Social Science Guide Geography Chapter 2 நிலக்கோளம் – II புவி புறச்செயல்பாடுகள் 91