Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 27 வன்பொருளும் மென்பொருளும் Textbook Questions and Answers, Notes.
TN Board 9th Science Solutions Chapter 27 வன்பொருளும் மென்பொருளும்
9th Science Guide வன்பொருளும் மென்பொருளும் Text Book Back Questions and Answers
பகுதி – I. புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
மையச் செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?
அ) தாய்ப்ப லகை
ஆ) SMPS
இ) RAM
ஈ) MOUSE
விடை:
(ஈ) MOUSE
Question 2.
கீழ்வருவனவற்றுள் எது சரியானது?
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
ஆ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.
இ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.
விடை:
அ) இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்.
Question 3.
LINUX என்பது
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனி உரிமை மென்பொருள்
இ) கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்
ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
விடை:
ஈ) கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்
Question 4.
கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள்?
அ) WINDOWS
ஆ) MAC OS
இ) Adobe Photoshop
ஈ) இவை அனைத்தும்
விடை:
(ஈ) இவை அனைத்தும்
Question 5.
____ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) ANDROID
ஆ) Chrome
இ) Internet
ஈ) Pendrive
விடை:
(அ) ANDROID
II. பொருத்துக
III. சுருக்கமாக விடையளி
Question 1.
வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.
விடை:
வன்பொருள் :
- கணினியில் நம்மால் பார்த்து தொட்டு உணரக்கூடிய அனைத்து பாகங்களும் வன்பொருட்கள் ஆகும்.
- உள்ளீட்டு, வெளியீட்டு கருவிகள் மற்றும் கணினியின் மையச்செயலகப் பெட்டியினுள் அமைந்திருக்கும் நினைவகம், தாய்பலகை, SMPS, CPU, RAM, CD Drive, Graphics Card இதில் அடங்கும்.
மென்பொருள் :
- மென்பொருட்கள் என்பவை வன்பொருள் இயங்குவதற்குத் தேவையான தரவுகளை உள்ளடக்கிய கணினியால் மட்டும் புரிந்து கொள்ளக்கூடிய குறியீட்டு மொழியைக் கொண்ட அமைப்பு ஆகும்.
- தொட்டு உணர இயலாது. ஆனால் கணினித்திரை மூலம் கண்டு கட்டளைகளைக் கொடுத்துப் பயன்படுத்த முடியும்.
Question 2.
இயங்குதளம் என்றால் என்ன? அவற்றின் செயல்பாட்டை எழுதுக?
விடை:
- கணினியின் சாதனங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் மென்பொருள் இயங்கு தளம் ஆகும்.
- கணினி இயங்குவதவற்குத் தேவையான அடிப்படைத் தரவுகளைக் கொண்ட மென்பொருளை இயக்க மென்பொருள் என்கிறோம்.
- இயக்க மென்பொருள் இன்றி கணினியைப் பயன்படுத்த முடியாது.
- உதாரணம் : Linux, Windows, Mac, Android
Question 3.
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தருக?
விடை:
- கட்டற்ற மென்பொருட்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம்.
- திற மூல மென்பொருட்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக்கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. உதாரணம் :
- லினக்ஸ்,
- ஜியோ ஜீப்ரா
- ஓபன் ஆபிஸ்
9th Science Guide கணினியின் பாகங்கள் Additional Important Questions and Answers
பகுதி – II. கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
இணையதளம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே _____ பயன்பாட்டில் இருந்தது.
அ) கூகுள்
ஆ) Chrome
இ) மின்ன ஞ்சல்
ஈ) Whatsapp
விடை:
இ) மின்னஞ்சல்
Question 2.
கீழ்க்கண்டவற்றுள் எவை சரியானது.
அ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஆ) கட்டற்ற மற்றும் திறனற்ற மூல மென்பொருள்
இ) இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
ஈ) இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்
விடை:
அ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
Question 3.
______ மென்பொருள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனருக்கு உதவுகிறது.
அ) அமைப்பு மென்பொருள்
ஆ) இயக்க மென்பொருள்
இ) கட்டற்ற மென்பொருள்
ஈ) பயன்பாட்டு மென்பொருள்
விடை:
ஈ) பயன்பாட்டு மென்பொருள்
Question 4.
Windows என்பது.
அ) கட்டண மென்பொருள்
ஆ) தனிஉரிமை மென்பொருள்
இ) கட்டற்ற மற்றும் திற மூல மென்பொருள்
ஈ) கட்டணமில்லா மற்றும் தனியுரிம மென்பொருள்.
விடை:
(அ) கட்டண மென்பொருள்
Question 5.
_____ என்பது ஒரு இயங்குதளமாகும்.
அ) Linux
ஆ) Chrome
இ) Google
ஈ) Pendrive
விடை:
(அ) Linux
II. பொருத்துக
III. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்
Question 1.
மென்பொருளை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
விடை:
மென்பொருளைச் செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
- இயக்க மென்பொருள்
- பயன்பாட்டு மென்பொருள்
Question 2.
பயன்பாட்டு மென்பொருள் என்றால் என்ன?
விடை:
கணினியை நமது தேவைக்கேற்ப பயன்படுத்த உதவும் மென்பொருளே பயன்பாட்டு மென்பொருள் ஆகும். இவற்றை இயக்க மென்பொருளின் உதவியுடனே நிறுவ முடியும். இவ்வகை மென்பொருள்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறிப்பிட்ட வேலைகளை செய்து முடிக்க பயனர்களுக்கு உதவுகிறது.
Question 3.
Open source Initiative என்றால் என்ன ?
விடை:
திற மூல மென்பொருள் தயாரித்தலையும் பயன்படுத்துதலையும் ஊக்குவிக்கும் நிறுவனம் open source Initiative.
IV. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்
Question 1.
கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றி விவரி:
விடை:
கட்டற்ற மென்பொருள்களைப் பயனர் இலவசமாகப் பெற்றுப் பயன்படுத்தவும், பகிரவும் செய்யலாம். திறந்த மூல மென்பொருள்களில் அவற்றின் நிரல்களைத் திருத்திக் கொள்ளவும் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் புதிய மென்பொருள் வடிவத்தை உருவாக்க வாய்ப்பு கிடைக்கிறது. சில கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்.
- லினக்ஸ்
- ஓபன் ஆபீஸ்
- ஜியோஜீப்ரா
- இயக்க மென்பொருள்