Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 25 கணினி – ஓர் அறிமுகம் Textbook Questions and Answers, Notes.
TN Board 9th Science Solutions Chapter 25 கணினி – ஓர் அறிமுகம்
9th Science Guide கணினி – ஓர் அறிமுகம் Text Book Back Questions and Answers
பகுதி – I. புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?
அ. குழலிப்பெருக்கி
ஆ. தொலைக்காட்சி
இ. கணினி
ஈ. வானொலி
விடை:
இ. கணினி
Question 2.
தரவு செயலாக்கம் – படிநிலைகளைக் கொண்டது
அ. 7
ஆ. 4
இ. 6
ஈ. 8
விடை:
இ. 6
II. சுருக்கமாக விடையளி
Question 1.
கணினி-வரையறு:
விடை:
கணினி என்பது கட்டளைத் தொகுதிகள் அல்லது நிரல்களின் மூலம் தரவு மற்றும் தகவல்களைச் சேமித்துக் கையாளுகின்ற ஒரு மின்னனுக்கருவி.
Question 2.
தரவு-தகவல் வேறுபடுத்துக.
விடை:
Question 3.
தரவு செயலாக்கம் என்றால் என்ன?
விடை:
தரவு செயலாக்கம் என்பது தரவுகளைச் சேகரித்துத் தேவைக்கேற்ப, தகவல்களாக மாற்றும் நிகழ்வைக் குறிப்பிடுவதாகும்.’
III. விரிவாக விடையளி – 5 மதிப்பெண்கள்
Question 1.
தரவு செயலாக்கத்தின் பல்வேறு படி நிலைகள் யாவை?
விடை:
தரவு செயலாக்கம்:
தகவல்களைச் சேகரித்துத் தேவைக்கேற்ப தகவல்களாக மாற்றும் நிகழ்வு.
தரவு செயலாக்கத்தின் நிலைகள்:
தரவு செயலாக்கம் அல்லது தரவு செயல்பாடு என்பது ஆறு நிலைகளில் செயல்படுகிறது.
அவையாவன:
- தரவு சேகரிப்பு (Data Collection)
- தரவு சேமித்தல் (Storage of data)
- தரவு வரிசைப்படுத்துதல் (sorting of data)
- தரவு செயலாக்கம் (processing of data)
- தரவு பகுப்பாய்வு (Data analysis)
- தரவு விளக்கமும் முடிவுக்களும் (Data presentation and conclusions)
Question 2.
கணினியின் தலைமுறைகளைக் கூறுக.
விடை:
கணினியின் தலைமுறைகள் :
- கணிணியின் வரலாறு பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது.
- அதில் அடுத்தடுத்துள்ள படிநிலைகளுக்கிடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு அதன் செயல்திறனின் வேகமாகும்.
- தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப, கணினியின் செயல்பாடு திறனின் வேகத்தைப் பொறுத்துக் கணினியின் தலைமுறைகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
IV. பொருத்துக
9th Science Guide கணினி – ஓர் அறிமுகம் Additional Important Questions and Answers
பகுதி – II. கூடுதல் வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
எது ஒரு கணினியின் மிக அடிப்படை மாதிரி என்று கருதப்படுகிறது.
அ. ENIAC
ஆ. அபாகஸ்
இ. ஸ்லைடு விதி
ஈ. வானொலி
விடை:
ஆ. அபாகஸ்
Question 2.
முதல் பொதுப்பயன்பாட்டு கணினி எது?
அ. UNIVA C
ஆ. அபாகஸ்
இ. ENIAC
ஈ. எல்லாம்
விடை:
இ. ENIAC
Question 3.
கணினியின் நான்காம் தலைமுறைக் கணினி எது?
அ. நுண்செயலி
ஆ. செயற்கை நுண்ணறிவு
இ. மின்மயப்பெருக்கி
ஈ. வெற்றிடக் குழாய்கள்
விடை:
அ. நுண்செயலி
II. பொருத்துக
III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
Question 1.
யார் முதல் நிரலர்?
விடை:
அகஸ்டா அடா லவ்லேஸ்
Question 2.
எத்தனை வெற்றிடக்குழாய்கள் ENIAC (Electronic Numerical Integrator and computer)ல் பயன்படுத்தப்படுகின்றன?
விடை:
18000
Question 3.
ஏ.டி.எம் விரிவாக்கம்.
விடை:
தானியங்கி டெல்லர் இயந்திரம்
Question 4.
எந்த நூற்றாண்டில் கணினி கண்டுபிடிக்கப்பட்டது?
விடை:
19 ஆம் நூற்றாண்டில்
Question 5.
எப்போது எங்கு ENIAC பயன்படுத்தப்பட்டது?
விடை:
1946-ல், அமெரிக்க இராணுவம் 18000
IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்
Question 1.
வன்பொருள் என்றால் என்ன?
விடை:
வன்பொருள் என்பது கணினியில் உள்ள பாகங்கள் ஆகும், அவற்றை நம்மால் பார்க்கவும் தொட்டுணரவும் முடியும்.
Question 2.
தரவு-வரையறு:
விடை:
- கணினியில் உட்புகுத்தப்படும் தரவு என்பது எழுத்து, எண், புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் ஒன்றாக அமையும்.
- தரவு நினைவில் (Data Memory) வைக்கப்பட்ட செய்திகள், நேரடியாகப் பயன் தராது.
Question 3.
தகவல் என்றால் என்ன?
விடை:
கணினியில் பெறப்படும் தகவல் என்பது நேரடியாகப் பயன்படும் வகையில் தரவுகளிலிருந்து உருவாக்கப்படுபவை ஆகும்.
V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்
Question 1.
அன்றாட மனித வாழ்வில் கணினி எவ்வாறு முக்கியப்பங்கு வகிக்கிறது?
விடை:
- அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் கணினி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பயன்படுத்தி வருகிறோம். எடுத்துக்காட்டாகவங்கி, மருத்துவமனை, அஞ்சல் நிலையம், போக்குவரத்து, வணிகத்துறை, வானிலை ஆராய்ச்சி, ஊடகம், பாதுகாப்பு, கல்வி, விண்வெளி ஆராய்ச்சி ஆகியவை.
- வங்கிகளில் (ATM) இயந்திரம் ஒரு கணினியின் உதவியுடன் மட்டுமே இயங்குகிறது.
- வணிக தளங்களில் தினசரி கொள்முதல் பில்கள் பெரும்பாலாக கணினியால் உருவாக்கப்பட்டவை.
- பணியின் வேகம் மற்றும் செயல்திறனை கணினி பயன்பாடு அதிகரித்தது.