Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 24 சூழ்நிலை அறிவியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 24 சூழ்நிலை அறிவியல்

9th Science Guide சூழ்நிலை அறிவியல் Text Book Back Questions and Answers

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் ____ என அழைக்கப்படுகின்றன.
(அ) உயிரியல் காரணங்கள்
(ஆ) உயிரற்ற காரணிகள்
(இ) உயிர்க் காரணிகள்
(ஈ) இயற் காரணிகள்
விடை:
(ஆ) உயிரற்ற காரணிகள்

Question 2.
வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை _____
எனப்படும்
(அ) ஆவியாதல்
(ஆ) குளிர்வித்தல்
(இ) பதங்கமாதல்
(ஈ) உட்செலுத்துதல்
விடை:
(இ) பதங்கமாதல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 3.
வளிமண்டல கார்பன்டைஆக்ஸைடு (CO2) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு _____ எனப்படும்.
(அ) ஒளிச்சேர்க்கை
(ஆ) உட்கிரகித்தல்
(இ) சுவாசித்தல்
(ஈ) சிதைத்தல்
விடை:
(அ) ஒளிச்சேர்க்கை

Question 4.
_____ ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன.
(அ) கார்பன் மோனாக்சைடு
(ஆ) கந்தக டைஆக்ஸைடு
(இ) நைட்ரஜன் டை ஆக்ஸைடு
(ஈ) கரியமில வாயு
விடை:
(ஈ) கரியமில வாயு

II. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 55

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
நைட்ரஜன் ஒரு பசுமை வாயு ஆகும்.
விடை:
தவறு
கார்பன்டை – ஆக்ஸைடு ஒரு பசுமை வாயு ஆகும்.

Question 2.
நன்றாக வளர்ச்சியடையாத வேர்த் தகவமைப்பு இடைநிலைத்தாவரங்களில்
விடை:
தவறு
காணப்படுகின்றது. நன்றாக வளர்ச்சியடையாத வேர்த் தகவமைப்பு நீர்த் தாவரங்களில் காணப்படுகின்றது.

Question 3.
பாலுட்டிகளில் வௌவால்கள் மட்டுமே பறக்கும்.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 4.
மண்புழுக்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.
விடை:
தவறு
வௌவால்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.

Question 5.
கோடைகால உறக்கம் என்ற தகவமைப்பானது குளிர் நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.
விடை:
தவறு
குளிர்கால உறக்கம் என்ற தகவமைப்பானது குளிர் நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.

IV. சுருக்கமாக விடையளி

Question 1.
உயர்க்கோளத்தில் காணப்படும் இரு காரணிகள் யாவை?
விடை:
உயிர்க் கோளத்தில் காணப்படும் இரு காரணிகள்.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 60

Question 2.
நைட்ரஜன் சுழற்சியை மனிதனின் செயல்கள் எவ்வாறு பாதிக்கின்றன?
விடை:

  • புதை வடிவ எரிபொருள்களை எரிப்பதன் மூலமும். நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றும் பல செயல்களாலும் சூழ்நிலையில் உயிரிய நைட்ரஜனின் இருப்பு அதிகரிக்கின்றது.
  • விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் நைட்ரஜன் ஆறுகளுக்குச் சென்று அங்கிருந்து கடல் சூழ்நிலையை அடைகிறது.
  • இதனால் உணவு வலையின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
  • வாழிடங்கள் அழிகின்றன.
  • மேலும் உயிரினங்களின் பல்வகைத் தன்மையும் மாற்றி அமைக்கப்படுகின்றன.

Question 3.
தகவமைப்பு என்றால் என்ன?
விடை:
ஒரு உயிரினத்தின் எந்த ஒரு பண்போ அல்லது அதன் ஒரு பகுதியோ அந்த உயிரினத்தை அதின் வாழிடத்தில் இருக்கக் கூடிய சூழ்நிலைக்கேற்ப ஒத்துப் போக வைப்பதையே தகவமைப்பு என்கிறோம். எ.கா. : பறவைகள் மற்றும் வௌவால்களின் இறக்கைகள்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 4.
நீர்த்தாவரங்கள் தங்கள் வாழிடங்களில் சந்திக்கக் கூடிய சவால்கள் யாவை?
விடை:

  1. தேவைக்கு அதிகமான நீர் இருத்தல்
  2. நீரோட்டம் தாவரத்தினை சேதப்படுத்துதல்
  3. நீரின் அளவு தொடர்ந்து மாறிக் கொண்டிருத்தல்
  4. நீரில் மிதக்கும் தன்மையைப் பராமரித்தல்

Question 5.
நீர் சேமித்தலின் முக்கியத்துவம் என்ன?
விடை:

  1. நீர் மாசுபடுதலைக் குறைக்கிறது.
  2. நீர் வளங்களை திறமையாகப் பயன்படுத்த உதவுகிறது.
  3. நீரின் தட்டுப்பாடு குறைகிறது
  4. ஆற்றல் சேமிப்பை அதிகப்படுத்துவதற்கு இது உதவி புரிகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 6.
உன் பள்ளி, வீடு ஆகியவற்றில் நீரைச் சேமிக்கக்கூடிய சில வழிமுறைகளைப் பட்டியலிடுக.
விடை:
வீடுகளில் நீர்ப் பாதுகாப்பு :

  1. குளிப்பான்களில் (showers) குளிப்பதை விட, நீரை வாளியில் பிடித்து குளிக்க வேண்டும்.
  2. குறைவாக நீர் வரக் கூடிய குடிநீர்க் குழாய்களைப் (taps) பயன்படுத்துதல்.
  3. மறு சுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்குப் பயன்படுத்துதல்.
  4. குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை சரி செய்தல்.
  5. முடிந்த வரை நீரை மறுசுழற்சி செய்தல் அல்லது மீண்டும் பயன்படுத்துதல்.

பள்ளிகளில் நீர் பாதுகாப்பு :

  1. குடிநீர்க்குழாய்களை பயன்படுத்தாத நேரங்களில் மூடிவிடுதல்.
  2. குடிநீர்க்குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை உடனடியாக சரி செய்தல்.
  3. தேவையில்லாமல் கழிவறை கலத்தினுள் நீரை பாய்ச்சுதலை தவிர்த்தல்.
  4. நீரை சேமிக்கக்கூடிய சிறப்பான நவீன கைப்பிடிகளைக் கொண்ட குடிநீர்க் குழாய்களைப் பயன்படுத்துதல்.

Question 7.
மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள் யாவை?
விடை:

  1. விவசாயம் செய்தல்
  2. இயற்கை அழகு மிக்க நிலங்களை உருவாக்குதல்
  3. பொதுப் பூங்காக்கள் உருவாக்குதல்
  4. குழிப்பந்தாட்ட விளையாட்டுத் திடல் உருவாக்குதல்.
  5. கழிவறைகளைச் சுத்தம் செய்தல்
  6. தூசிகளைக் கட்டுப்படுத்துதல்
  7. கட்டுமானச் செயல் மேற்கொள்ளுதல்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 8.
ஐ.யூ.சி.என் என்றால் என்ன? அதன் தொலைநோக்குப் பார்வைகள் யாவை?
விடை:

  • ஐ.யூ.சி என் என்ற பன்னாட்டு அமைப்பானது இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றை வளம் குன்றாமல் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு பெரும் பங்காற்றி வருகிறது.
  • “இயற்கையை மதிக்கவும், பாதுகாக்கவும் கூடிய நேர்மையான உலகம்” என்பதே இதன் நோக்கமாகும்.

ஐ.யூ.சி என் அமைப்பின் தொலை நோக்குப் பார்வைகள் :

  1. இயற்கையிலுள்ள வேற்றுமை மற்றும் ஒற்றுமையை பாதுகாத்தல்
  2. எந்தவொரு இயற்கை வளத்தைப் பயன்படுத்தினாலும் அது நியாயமானதாகவும் சூழ்நிலையைப் பாதிக்காத வண்ணம் உள்ளதா என்பதை வலியுறுத்துதல்.
  3. மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளான சிற்றினங்களின் “சிவப்புப் பட்டியலைத்” தயார் செய்து, தொகுத்து வெளியிடுதல்.
  4. இது உலக அளவில் உள்ள சிற்றினங்களின் பாதுகாப்பு நிலையை அளவிடப் பயன்படுதல்.

V. விரிவாக விடையளி

Question 1.
நீர்ச்சுழற்சியில் உள்ள செயல்பாடுகளை விவரி.
விடை:
நீர்ச்சுழற்சியில் உள்ள செயல்பாடுகள்:

  1. நீராவியாதல்: பூமியின் மேற்பரப்பு, பெருங்கடல்கள், கடல்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஆறுகள் ஆகிய நீர் நிலைகளில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.
  2. பதங்கமாதல்: வட மற்றும் தென் துருவங்களில் காணப்படும் பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகள் திரவநிலைக்கு மாறாமல் நேரடியாக நீராவியாக மாறுகின்றன.
  3. நீராவிப்போக்கு: தாவரங்களின் இலை மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் நீரை நீராவியாக மாற்றி வளிமண்டலத்திற்கு செல்கிறது.
  4. குளிர்வித்தல்: உயரமான இடங்களில் வெப்பமானது குறைவாகக் காணப்படுவதால் அங்குள்ள நீராவியானது குளிர்விக்கப்பட்டு சிறிய நீர்த்திவலைகளாக மாறுகிறது, இந்த நீர்த்திவலைகள் மேகங்களையும் பனிமூட்டங்களையும் உருவாக்குகின்றன.
  5. மழைப்பொழிவு: காற்று அல்லது வெப்பநிலை மாறுபாட்டால் மேகங்கள் ஒன்று சேர்ந்து மழையாகப் பொழிகின்றன.
  6. தரைமேல் வழிந்தோடும் நீர்:
    பூமியின் மீது விழுந்த நீரானது தரையின் மேற்பரப்பில் ஓடி வழிந்தோடும் நீராகின்றது. இந்த நீர் ஒன்றாக இணைந்து கால்வாய்கள். ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் ஊருணிகள் ஆகியவற்றினை உருவாக்கி, கடைசியில் ஆறுகளின் கழிமுகத் துவாரங்களை அடைந்து கடல் மற்றும் பெருங்கடல்களில் முடிவடைகிறது.

Question 2.
வரைப்படம் மூலம், கார்பன் சுழற்சியை விவரி.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 76

  1. எரிமலைச் செயல்கள், படிம எரிபொருள்களை எரித்தல் இறந்து போன கரிமப்பொருள்களை சிதைத்தல் மூலமும் CO2 வளிமண்டலத்தை வந்தடைகின்றன.
  2. தாவரம் மற்றும் விலங்குகளின் சுவாசித்தலின் போது கார்பனை கார்பன்-டை-ஆக்ஸைடாக வெளியிட்டு வளிமண்டலம் சென்றடைகிறது.
  3. வளி மண்டலத்திலுள்ள CO2 ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களுக்குள் சென்று மாவுப் பொருளாக மாற்றமடைகிறது.
  4. இப்பொருள் தாவரங்களிலிருந்து தாவர உண்ணிகள் மற்றும் விலங்குண்ணிகளுக்குக் கடத்தப்படுகின்றது.
  5. அனைத்து உயிரினங்களும் புரதங்கள் மற்றும் கார்பன் கலந்த மூலக்கூறுகளால் உருவாக்கப் பட்டிருக்கின்றன.

Question 3.
வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகளை வரிசைப்படுத்துக.
விடை:
வறண்ட நிலத் தாவரங்களின் தகவமைப்புகள் :

  1. நன்கு வளர்ச்சி அடைந்தவேர்கள், ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளைச் சென்றடைகின்றன. எ.கா. எருக்கலை.
  2. சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன.
    எ.கா. சப்பாத்திக்கள்ளி, சோற்றுக் கற்றாழை.
  3. மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள் காணப்படும். எ.கா. கருவேல மரம்
  4. சில தாவரங்களின் இலைகள் முட்களாகவும் மாறி உள்ளன. எ.கா. சப்பாத்திக் கள்ளி
  5. ஒரு சில வறண்ட நில தாவரங்கள், போதிய அளவு ஈரப்பதம் இருக்கும் போதே, குறுகிய கால இடை வெளியில் தங்களது வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக் கொள்கின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 4.
வாழிடத்திற்கு ஏற்றாற்போல், வௌவால்கள் எவ்வாறு தகவமைத்துக் கொள்கின்றன?
விடை:
1. வாழிடம்:

  • வௌவால்கள் பெரும்பாலும் குகைகளில் வாழ்கின்றன.
  • குகைகள் அவைகளை பகல் நேரத்தில் நிலவும் அதிகப்படியான வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பதோடு மற்ற பிற விலங்குகளிடமிருந்தும் பாதுகாத்துக்கொள்கிறது,
  • இவை மரங்களிலும். பொந்துடைய பழைய மரக்கட்டைகளிலும். பாறை இடுக்குகளிலும் வாழ்கின்றன.

2. ஒளி:

  • வௌவால்கள் இரவு நேரங்களில் அதிக செயல்திறன்மிக்கவைகளாக உள்ளன,
  • ஏனெனில், பகல் நேரங்களில் வௌவாலின் மெல்லிய கருத்த இறக்கைச் சவ்வானது அதிக வெப்பத்தினை உறிஞ்சுவதால் அவை பறப்பதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுகின்றது.
  • இதனால், அவைகளின் உடலில் அதிகளவு நீர் இழப்பு ஏற்படலாம்.

3. வெப்பநிலை:

  • குளிர்காலங்களில் வளர்சிதை மாற்றம் குறைவுபடுவதன் மூலம் உடல் வெப்பநிலை குறைந்து, செயலற்ற
    நிலையில் இருக்கும் நிகழ்வு குளிர்கால உறக்கம் எனப்படும்,
  • அவை ஓய்வு நேரத்தில் அவைகளின் உள் வெப்பநிலையைக் குறைத்துக் கொள்கின்றன.
  • இந்நிலையில் தங்களது செயல்திறன்களைக் குறைத்து சக்தியைப் பாதுகாத்துக்கொள்கிறது.

Question 5.
நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவுநீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?
விடை:
மறுசுழற்சி செய்யப்பட்ட வீணான நீரை தேவையான பயன்தரக் கூடிய நோக்கங்களுக்காக மீண்டும் பயன்படுத்துதல்,

கழிவு நீர் சுத்திகரிப்பு மூன்று படி நிலைகளை கொண்டது.
1. முதல் நிலை சுத்திகரிப்பு
2. இரண்டாம் நிலை சுத்திகரிப்பு
3. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு

1. முதல் நிலை சுத்திகரிப்பு :

  1. கழிவு நீரை தற்காலிகமாக தொட்டிகளில் சேர்த்து வைக்கப்படுவதால். இதனால் கனமான திண்மங்கள் நீரின் அடியிலும் எண்ணெய் உயர்வுப் பொருள்கள் போன்ற மிதக்கும் பொருள்கள் நீரின் மேற்பரப்பிலும் தங்கி விடுகின்றன.
  2. கீழே தங்கிய மற்றும் மேலே மிதக்கும் பொருட்கள் தனித் தனியே பிரித்தல்.

2. இரண்டாம் நிலை சுத்திகரிப்பு :
உயிர்வழி வாயுவின் முன்னிலையில் காற்று நுண்ணுயிரிகளால் நீரில் கரைந்திருக்கும் மக்கும் கரிமப் பொருட்கள் (சிதைவுறும்) நீக்கப்படுகின்றன.

3. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு :

  1. நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் நுண்ணுயிரிகள் போன்ற கனிம உட்கூறுகளை நீக்குதல்.
  2. கழிவு நீரிலுள்ள நுண்ணிய கூழ்மத் துகள்களை வேதியியல் முறையில் படிகாரம் அல்லது இரும்பு சல்பேட் ஆகியவற்றைச் சேர்த்து வீழ்படிவாக்கப்பட்டு சுத்திகரித்தல்.

IV. காரணம் தருக.

Question 1.
வேர்கள் அதிக ஆழமாக வளர்ந்து நீர் உள்ள பூமியின் அடுக்குகள் வரை செல்கின்றன. இவ்வகையான தகவமைப்புகளை எவ்வகைத் தாவரங்கள் மேற்கொள்கின்றன? ஏன்?
விடை:
வறண்ட நிலத் தாவரங்கள்.
காரணங்கள் :

  1. வறண்ட நில தாவரங்கள் குறைந்த அளவு நீர் உடைய, வறண்ட அல்லது பாலைவனங்களில் வாழ்கின்றன.
  2. இதனால் இவை நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டுள்ளன.
  3. இவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளை சென்றடைகின்றன. எ.கா.எருக்கலை.

Question 2.
நீண்ட படகு போன்ற உடலமைப்பு மற்றும் நீட்சிகள் காணப்படுவது மண்புழுவின் தகவமைப்பாகக் கருதப்படுகின்றது. ஏன்?
விடை:

  1. ஒழுங்கமைக்கப்பட்ட உடல் : மண்ணின் அடியிலுள்ள குறுகிய வளைகளுக்குள் எளிதாக ஊடுருவிச் செல்ல உதவுகின்றன.
  2. நீட்சிகள் அல்லது மயிர்க்கால்கள் மயிர்க்கால்கள் இடப்பெயர்ச்சிக்கும் மண்ணை , இறுகப் பிடித்து வளையின் உள்ளே செல்வதற்கும் உதவுகின்றன.

Question 3.
எதிரொலித்து இடம் கண்டறிதல் என்பது, வௌவால்களின் தகவமைப்பாக உள்ளது. இந்த வாக்கியம் நியாயமானதா?
விடை:

  • எதிரொலித்து இடம் கண்டறிதல் என்பது வௌவாலின் சிறந்த தகவமைப்பாகும்.
  • வௌவால்கள் பார்வையற்ற விலங்குகள் அல்ல.
  • ஆனாலும் இரவு நேரங்களில் பறந்து தங்களை சுற்றியுள்ள பூச்சிகளை வேட்டையாடுவதற்கு பிரத்தியேக அதிக அதிர்வெண் கொண்ட மீயொலி அலைகள் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.
  • இவ்வமைப்புக்கு எதிரொலித்து இடம் கண்டறிதல் என்று பெயர்.
  • இந்த மீயொலி அலைகள் இரையின் மீது பட்டு எதிரொலித்து மீண்டும் அவற்றின் காதினை வந்தடைவதால் இரையின் இடத்தினை கண்டறிய முடிகிறது.
  • இதன் மூலம் முன்னால் உள்ள பொருள்களின் அமைவிடத்தையும் கண்டறிய முடிகிறது.

9th Science Guide சூழ்நிலை அறிவியல் Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
உயிர்கள் காணப்படக் கூடிய பூமியின் ஒரு பகுதி _______
விடை:
உயிர்க்கோளம்

Question 2.
நீராவிப்போக்கு என்பது ____ ஒரு வகையாகும்.
விடை:
ஆவியாதலின்

Question 3.
நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்வது ______
விடை:
ஊடுருவல்

Question 4.
உயிர்வாழத் தேவையான முக்கியத்துவம் வாய்ந்த முதல் நிலை ஊட்டச்சத்து _____
விடை:
நைட்ரஜன்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 5.
அதிக அளவு நைட்ரஜனைக் கொண்ட பெரிய மூலமாக திகழ்வது _____
விடை:
வளி மண்டலம்

Question 6.
வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனின் அளவு _____
விடை:
78%

Question 7.
லெகுமினஸ் தாவரங்கள் ரைசோபியம் பாக்டீரியாவுடன் கொண்டுள்ள தொடர்பு _______
விடை:
கூட்டுயிரி வாழ்க்கை

Question 8.
தாவர உண்ணிகள் அவற்றிலுள்ள புரதங்களை ______ ஆக மாற்றிக் கொள்கின்றன.
விடை:
விலங்குப் புரதங்கள்

Question 9.
உட்கொள்ளும் உணவிலிருந்து ______ புரதங்களை உற்பத்தி செய்து
விடை:
விலங்குண்ணிகள்

Question 10.
கொள்கின்றன. கரி, வைரம், கிராபைட் போன்றவை கார்பனின் _____ ஆகும்.
விடை:
எளிய வடிவங்கள்

Question 11.
கார்பன்-டை ஆக்ஸைடு ஒரு ____ ஆகும்.
விடை:
பசுமை இல்ல வாயு

Question 12.
நீர்த்தாவரங்கள் _______ தன்மையை பராமரிக்கும் சவால்களை எதிர்கொள்ளுகின்றன.
விடை:
நீரில் மிதக்கும்

Question 13.
உல் பியாவில் எது இல்லை ?
விடை:
வேர்கள்

Question 14.
இந்த தாவரத்தின் உடலம் பெரிதும் குறைக்கப்பட்டிருக்கும்.
விடை:
லெம்னா

Question 15.
தாவர உலகின் சின்ட்ரெல்லா என அழைக்கப்படுவது _____
விடை:
ஆகாயத் தாமரை

Question 16.
மெழுகுப்பூச்சுடன்கூடிய சிறிய இலைகள் காணப்படும் தாவரம் ______
விடை:
கருவேலமரம்

Question 17.
இடைப்பட்ட நீரளவைக் கொண்ட இடங்களில் வளரும் தாவரங்கள் ______
விடை:
இடைநிலை

Question 18.
இடைநிலை தாவர வேர்களில் காணப்படும் அமைப்பு _____
விடை:
வேர் மூடி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 19.
வௌவால் பகல் நேரங்களில் பறப்பதற்கு அதிக ______ தேவைப்படுகிறது
விடை:
ஆற்றல்

Question 20.
மண்புழுக்கள் சுவாசம் செய்யும் பகுதி _____
விடை:
தோல்

Question 21.
மண்புழுக்களுக்கு ஏற்ற சரியான வெப்பநிலை என்பது ______
விடை:
60°-80°

Question 22.
உலக நீர் தினம் 2018ன் முக்கிய கருத்து _____
விடை:
“இயற்கை நீருக்கே”

Question 23.
மண் அரிப்பை தடுக்க அமைப்பது ______
விடை:
பண்ணைக் குட்டைகள்

Question 24.
இரண்டாம் நிலை சுத்திகரிப்பில் நுண்ணுயிர்களை நீக்கம் செய்யும் முறை _______
விடை:
வீழ்ப்படி வாதல்

Question 25.
கனமான திண்மங்கள். மிதக்கும் பொருள்கள் எந்த நிலையில் நீக்கப்படுகிறது?
விடை:
முதல்நிலை சுத்திகரிப்பு

Question 26.
இந்தியா ஐ.யூ.சி என் இல் உறுப்பினராக சேர்ந்த ஆண்டு ______
விடை:
1969

Question 27.
ஒரு நிலையான இடைவினை _____, _____ காரணிகளுக்கும் இடையே நடைபெறுகிறது.
விடை:
உயிருள்ள, உயிரற்ற

Question 28.
துருவங்களில் காணப்படும் பனிமலைகள், பனிப்பாறைகள் நேரடியாக _____ மாறுகின்றன.
விடை:
நீராவி

Question 29.
தாவரங்களில் இலை, தண்டுகளில் காணப்படும் _____ வழியாக நீர், நீராவியாக மாறி வெளிப்படுகிறது
விடை:
சிறிய துளைகள்

Question 30.
நீரானது பூமிக்குள் செல்லும் இரு வேறு முறைகள் ______, _____
விடை:
ஊடுருவல், உள்
வழிந்தோடல்

Question 31.
எவைகளில் நைட்ரஜன் அவசியமான பதிதப் பொருளாக உள்ளது-
விடை:
பச்சையம்,
மரபுப்பொருள் மற்றும்
புரதம்

Question 32.
செயல்படா வளிமண்டல நைட்ரஜனை உயிரினங்கள் பயன்படுத்தும் வகையில் _____ ஆக மாறுகிறது
விடை:
கூட்டுப்பொருள்கள்
செயல்படும்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 33.
புரதங்கள், நியூக்ளிக் அமிலங்களை உருவாக்குவதற்கு தாவரங்கள் மண்ணிலிருந்து உறிஞ்சுவது ______
விடை:
நைட்ரேட் அயனிகள்

Question 34.
பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், விலங்குப்புரதங்கள் மற்றும் இறந்த தாவர விலங்குகளை _____ ஆக மாற்றுகின்றன.
விடை:
அம்மோனியச்
சேர்மங்கள்

Question 35.
சூடோமோனாஸ் சிற்றினங்கள் _____ ஐ ஒடுக்கமடையச் செய்து, ____ மாறி வளிமண்டலத்தை அடைகிறது
விடை:
நைட்ரேட் அயனிகள்,
வாயு நிலைக்கு

Question 36.
இதை பயன்படுத்துவதன் மூலம் சூழ்நிலையில் உயிரிய நைட்ரஜனின் இருப்பு அடிப்படையாக
விடை:
நைட்ரஜனை
அதிகரிக்கின்றது.
கொண்ட உரங்கள்

Question 37.
கார்பனின் கூட்டுப் பொருள்கள் _____, _____
விடை:
கார்பன் மோனாக்ஸைடு,
கார்பன்டை ஆக்ஸைடு

Question 38.
கார்பன்டை ஆக்ஸைடு வளிமண்டலத்தில் அதிகரிப்பதால் ____ பசுமை _____ ஏற்படுகின்றன.
விடை:
பசுமை இல்ல
விளைவும், புவி
வெப்பமயமாதலும்

Question 39.
_____ அல்லது _____ அருகில் வாழக்கூடிய தாவரங்கள் நீருக்குள், ஹைடிரோபைட்ஸ் எனப்படும்.
விடை:
நீருக்குள்,
நீர்நிலைகளின்

Question 40.
ஆகாயத் தாமரை போன்ற தாவரங்களில் உறுதித்தன்மையையும், மிதப்புத் தன்மையையும் தருகிறது
விடை:
காற்றறைப் பைகள்

Question 41.
மிதக்கும் இலைகள் ____ உடன் நீரின் அளவிற்கேற்ப மேலும் கீழும் இயங்கும் வகையில் உள்ளது.
விடை:
(தாமரையின்) நீளமான
இலைக் காம்பு

Question 42.
ஆகாயத்தாமரையில் இலைக் காம்பின் தன்மை ______
விடை:
காற்றறைப்பைகளுடன்
பஞ்சு போன்று வீங்கிய

Question 43.
கோடை காலங்களில் ஆகாயத் தாமரை உள்ள நீரானது ______ அதிகமாக வற்றிப் போகிறது
விடை:
ஒன்பது மடங்கு

Question 44.
சோற்றுக் கற்றாழை நீரை சேமித்து வைக்கும் திசுக்கள்
விடை:
சதைப்பற்று மிக்க
பாரன்கைமா

Question 45.
இலையின்மேல் கியூட்டிகிள் மெழுகுப்பூச்சி இருப்பதால் _____ தடுத்து _____ குறைக்கின்றது.
விடை:
ஈரப்பதத்தை , நீர்
இழப்பைக்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 46.
______ மண்ணிற்கு காற்றோட்டம் வழங்கியும், நீர்தேக்குத்திறனை, அதிகரித்தும், கரிமப்பொருள் வழங்கியும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விடை:
மண்புழுக்கள்

Question 47.
எங்கு உலர் குளிர்ச்சி அமைப்புகள் பயன்படுத்தப்படுகிறது?
விடை:
தொழிற்சாலைகளில்

Question 48.
உலக நீர் தினமாகக் பின்பற்றப்படும் நாள் ______
விடை:
மார்ச் 22ம் தேதி

Question 49.
இயற்கை வளங்களைப் பாதுகாத்து, வளங்குன்றாமல் பயன்படுத்த, பெரும் ங்காற்றிவரும் பன்னாட்டு அமைப்பு _____
விடை:
ஐ.யூ.சி.என்

Question 50.
ஐ.யூ.சி. – ன் அக்டோபர் 5, 1948-ம் ஆம் ஆண்டு ____ நாட்டில் கிலான்ட் என்ற இடத்தில் தோற்றுவிக்கப்பட்டது
விடை:
சுவிட்சர்லாந்து

II. பொருத்துக
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 68

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 69

III. கூற்று மற்றும் காரண வகை

கீழ்க்கண்டவற்றுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
1. கூற்று சரி. காரணம் சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
2. கூற்று சரி. காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
3. கூற்று தவறு. காரணம் சரி
4. கூற்று சரி. காரணம் தவறு.

Question 1.
கூற்று : பூமியின் மேற்பரப்பு, பெருங்கடல்கள், ஏரிகள் குளங்கள் ஆகியவற்றில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.
காரணம் : நீர் சுழற்சி என்பது பூமியின் மீது நீரின் தொடர்ச்சியான இயக்கத்தை குறிக்கிறது.
விடை:
(1) கூற்று சரி. காரணம் சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்

Question 2.
கூற்று : அம்மோனிய சேர்மங்கள் ஆக்ஸிஜனேற்ற செயல்முறை மூலம் நைட்ரேட் உப்புகளாக மாற்றப்படுகின்றன.
காரணம் : நைட்ரேட் உப்புகள் உருவாகும் முறைக்கு நைட்ரேட் வெளியேற்றம் எனப்படும்.
விடை:
(4) கூற்று சரி. காரணம் தவறு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 3.
கூற்று : மண்புழுக்கள் கோடை காலத்தில் வளைகளிலிருந்து வெளியேறுகின்றன.
காரணம் : மண்புழுக்கள் ஒளிக்கு எதிராகச் செயல்படுகின்றன.
விடை:
(3) கூற்று தவறு. காரணம் சரி

IV. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக

Question 1.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 80
விடை:
நைட்ரேட்டாக்கும் பாக்டீரியாக்கள்

Question 2.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 81
விடை:
ஒளி உணர் செல்கள்

Question 3.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 82
விடை:
ஹைட்ரோ பைட்ஸ் (அ) நீர்த் தாவரங்கள்

Question 4.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 83
விடை:
நீர் மறு சுழற்சி

V. சூழ்நிலைக்கேற்ற விடையளி

Question 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்திலுள்ள தாவரம் எது? அதில் காணப்படும் ஏதேனும் இரு தகவமைப்புகளை எழுது.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 84
விடை:
சப்பாத்திக் கள்ளி.
தகவமைப்புகள் :

  1. சதைப்பற்று மிக்க பாரன்கைமா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன.
  2. இவற்றின் இலைகள் முட்களாக மாறி உள்ளன. இதனால் நீர் வெளியேறுதலை குறைக்கிறது.

Question 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விலங்குகள் யாவை? அதிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்ன?
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 85
விடை:
CR – இமால்ய பழுப்பு / சிவப்பு கரடி
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 86
விடை:
EN – சிவப்பு பாண்டா கரடி

1. இந்த விலங்குகள் ஐ.யூ.சி என் அமைப்பின் சிவப்பு வரிசை பதிப்பில் உள்ளன.
2. CR மற்றும் EN இவை கடுமையாக குறைந்து வரும் இனம்.
3. ஐ.யூ.சி என் அமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளான சிவப்புப் பட்டியலைத்தயார் செய்து வெளியிடுவதன் மூலம் சிற்றினங்களின் பாதுகாப்பு நிலையை அளவிடவும், அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கவும் பயன்படுகிறது.

VI. குறுகிய விடையளி

Question 1.
சுழ்நிலை அறிவியல் வரையறு?
விடை:
சூழ்நிலை அறிவியல் என்பது இயற்கை உலகின் அமைப்பு மற்றும் நிகழ்வுகளையும் சூழ்நிலை மீது மனிதனால் ஏற்படும் மாற்றங்களையும் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு ஆகும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 2.
உயிர்ப்புவி வேதிச் சுழற்சி வரையறு முக்கியமான சில உயிர்ப்புவி வேதி சுழற்சிகளை கூறு.
விடை:
உயிருள்ள காரணிகளுக்கும், உயிரற்ற காரணிகளுக்கும் இடையே ஊட்டச் சத்துக்கள் அனைத்தும் சுழற்சியில் உள்ளன. இச் சுழற்சி உயிர்ப்புவி வேதிச் சுழற்சி என அழைக்கப்படுகிறது.
மூன்று வகைகள்:

  1. நீர்ச் சுழற்சி
  2. நைட்ரஜன் சுழற்சி
  3. கார்பன் சுழற்சி

Question 3.
மனிதர்களுக்கு வௌவால் எவ்வாறு உதவுகிறது?
விடை:

  1. பூச்சிகளை உண்டு அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன.
  2. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது.

Question 4.
குளிர்கால உறக்கத்தை கோடை கால உறக்கத்தினின்று வேறுபடுத்து?
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல் 89

Question 5.
வௌவால்களில் காணப்படும் பறத்தலின் தகவமைப்பு பற்றி கூறு?
விடை:

  1. இவற்றின் முன் கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளன.
  2. இறக்கைகளில் உள்ள எலும்புகள் நீண்ட விரலின் சவ்வுகளோடு இணைக்கப்பட்டு காணப்படும் அமைப்பு விரலிடைச் சவ்வு எனப்படும்.
  3. பறக்கும் போது இயக்கத்தினைக் கட்டுப்படுத்த வால் உதவுகின்றது.
  4. சிறகுகளில் உள்ள தசைகள் சிறகடித்துப் பறக்க உதவும் வகையில் நன்றாக வளர்ந்தும், அதிக சக்தி வாய்ந்ததாகவும் இருக்கின்றன.
  5. ஓய்வு நேரத்தில் தலை கீழாக தொங்கும் போது இறுகப் பிடித்துக் கொள்ளும் தன்மையை அவற்றின் பின்னங்கால்களின் தசை நார்கள் அவற்றிற்கு அளிக்கின்றன.

Question 6.
மண்புழுக்கள் “உழவனின் நன்பன்” என்று அழைக்கப்படுகின்றன ஏன்?
விடை:

  • மண்புழுக்கள் கரிமப் பொருள்களை செரிமானம் செய்த பின் இவை நைட்ரஜன் சத்து நிறைந்த “புழு விலக்கிய மண்” எனப்படும் கழிவை வெளியேற்றுகின்றன.
  • இதில் அதிகளவு நைட்ரஜன் கூட்டுப்பொருள் இருப்பதனால் இது மண்ணின் வளத் தன்மையைக் கூட்டுகின்றது.
  • இதனால் பயிர்ப் பெருக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் “ உழவனின் நண்பன்” எனப்படுகிறது.

Question 7.
இரவில் நடமாடும் தன்மை மண்புழுவின் வாழ்க்கைக்கு எவ்வாறு பயன்படுகிறது?
விடை:

  • மண்புழுக்கள் ஒளியை அதிக அளவு உணரும் திறன் கொண்டவை. ஆனால் கண்கள் கிடையாது.
  • இவற்றின் உடலிலுள்ள சில செல்கள் ஒளியை உணரக் கூடிய திறனையும், அவற்றின் செறிவைக் குறைக்கும் திறனையும் அளிக்கின்றன.
  • ஒளியைத் தவிர்ப்பதற்காகவே பகல் நேரங்களில் வளைகளிலேயே தங்கி விடுகின்றன.
  • எனவே இவை ஒளியை எதிர்க்கக் கூடியவை.

VII. விரிவான விடையளி

Question 1.
நீர் பாதுகாப்பு வரையறு? பல்வேறு நீர் பாதுகாப்பு வழி முறைகளைப் பற்றி விவரி.
விடை:

  • நீர் ஆதாரங்களை சரியான முறையில் சேமித்து, கட்டுப்படுத்தி நிர்வகிக்கும் முறையே நீர் பாதுகாப்பு எனப்படும்.
  • நீர் பாதுகாப்பு வழி முறைகள் மூன்று முறைகளாக செயல்படுத்தலாம்
    1. தொழிற்சாலைகளில் நீர் பாதுகாப்பு
    2. விவசாயத்தில் நீர் பாதுகாப்பு
    3. வீடுகளில் நீர் பாதுகாப்பு.

1. தொழிற்சாலைகளில் நீர் பாதுகாப்பு :

  1. உலர் குளிர்ச்சி அமைப்புகளைப் பயன்படுத்துதல்.
  2. குளிர்விக்கும் அமைப்புகளில் பயன்படுத்தப்பட்ட நீரை மறுசுழற்சி செய்து விவசாயம் மற்றும் பிற
    தேவைகளுக்கு மீண்டும் பயன்படுத்துதல்.

2. விவசாயத்தில் நீர் பாதுகாப்பு :

  1. மூடப்பட்ட அல்லது நீளமான வாய்க்கால்களைப் பயன்படுத்துவாதல் ஆவியாதலையும், நீர் இழப்பையும் குறைக்கலாம்.
  2. நீர்த் தெளிப்பு சொட்டு நீர்ப் பாசனம் போன்ற மேம்படுத்தப்பட்ட யுத்திகளைப் பயன்படுத்துதல்.
  3. வறட்சியைத் தாங்கும் மற்றும் குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தி வளரும் பயிர்களை உற்பத்தி செய்யலாம்.
  4. காய்கறி உற்பத்தி மற்றும் தோட்டக்கலையில் தழை உரங்களை மண்ணிற்குப் பயன்படுத்தலாம்.

3. வீடுகளில் நீர்ப் பாதுகாப்பு :

  1. வாறல் குளிப்பான்களில் (showers) குளிப்பதை விட நீரை வாளியில் பிடித்து குளிக்க வேண்டும்.
  2. குறைவாக நீர் வரக் கூடிய குடிநீர்க் குழாய்களை பயன்படுத்த வேண்டும்.
  3. மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை புல்வெளிகளுக்குப் பயன்படுத்துதல்.
  4. குடிநீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க்கசிவை சரி செய்தல்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 24 சூழ்நிலை அறிவியல்

Question 2.
வறண்ட நிலத் தாவரங்கள் பெற்றுள்ள தகவமைப்புகளைக் கூறு?
விடை:
குறைந்த அளவு நீர் உடைய, வறண்ட பாலைவனம் போன்ற வாழிடங்களில் காணப்படும் தாவரங்கள் வறண்ட நிலத்தாவரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இத்தாவரங்கள் கீழ்க்கண்ட சூழ்நிலைகளைச் சந்திப்பதற்கான, சிறப்பான அமைப்பியல் மற்றும் உடலியல் பண்புகளை உருவாக்கிக்கொள்கின்றன.
1) சுற்றுப்புறத்திலிருந்து தேவையான அளவு நீரை உறுஞ்சிக்கொள்ளல்.
2) பெறப்பட்ட நீரை அவைகளின் உறுப்புகளில் தேக்கி வைத்தல்
3) நீராவிப்போக்கின் வேகத்தைக் குறைத்தல்
4) குறைந்த அளவு நீரைப் பயன்படுத்துதல்.

வறண்ட நிலத்தாவரங்களின் தகவமைப்புகள் :

  1. இவை நன்கு வளர்ச்சியடைந்த வேர்களைக் கொண்டுள்ளன. அவை ஆழமாக வளர்ந்து நீர் காணப்படும் அடுக்குகளைச் சென்றடைகின்றன. எ.கா. எருக்கலை
  2. சதைப்பற்று மிக்க பாரன்மைகா திசுக்களில் இவை நீரை சேமித்து வைக்கின்றன, எ.கா. சப்பாத்திக்கள்ளி, சோற்றுக்கற்றாழை.
  3. மெழுகுப் பூச்சுடன் கூடிய சிறிய இலைகள் காணப்படும். எ.கா. கருவேலமரம். சில தாவரங்களின் இலைகள் முட்களாகவும் மாறி உள்ளளன. எ.கா. சப்பாத்திக்கள்ளி
  4. ஒருசிலவறண்டநிலத்தாவரங்கள் போதிய அளவு ஈரப்பதம் இருக்கும்போதே, குறுகியகால இடைவெளியில் தங்களது வாழ்க்கைச் சுழற்சியை முடித்துக்கொள்கின்றன.