Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 17 விலங்குலகம் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 17 விலங்குலகம்

9th Science Guide விலங்குலகம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

Question 1.
பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை மட்டும் கண்டறிக

அ) மெல்லுடலிகள்
ஆ) துளையுடலிகள்
இ) குழியுடலிகள்
ஈ) முட்தோலிகள்
விடை:
ஈ) முட்தோலிகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 2.
மீசோகிளியா காணப்படுவது

அ) துளையுடலிகள்
ஆ) குழியுடலிகள்
இ) வளைதசையுடலிகள்
ஈ) கணுக்காலிகள்
விடை:
ஆ) குழியுடலிகள்

Question 3.
பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்தப்பிராணி அல்ல?

அ) மீன்கள் மற்றும்
இ) ரு வாழ்விகள்
ஆ) இருவாழ்விகள் மற்றும் பறவைகள்
இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்
ஈ) ஊர்வன மற்றும் பாலூட்டிகள்
விடை:
இ) பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

Question 4.
நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட லிலங்கினை கண்டறிக.

அ) பல்லி
ஆ) பாம்பு
இ) முதலை
ஈ) ஓணான்
விடை:
இ) முதலை

Question 5.
மண்டையோடற்ற உயிரி எது?

அ) ஏகாரினியா
ஆ) ஏசெபாலியா
இ) ஏப்டீரியா
ஈ) ஏசீலோமேட்டா
விடை:
அ) ஏகாரினியா

Question 6.
இரு பாலின (Hermaphrodite) உயிரிகள் எவை?

அ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, ஆம்பியாக்சஸ்
ஆ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன்
இ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, பலனோகிளாசஸ்
ஈ) ஹைடிரா, நாடாப்புழு, அஸ்காரிஸ், மண்புழு
விடை:
ஆ) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன்

Question 7.
குளிர் இரத்தப் பிராணிகள் எவை?

அ) மீன், தவளை, பல்லி, மனிதன்
ஆ) மீன், தவளை, பல்லி,மாடு
இ) மீன், தவளை, பல்லி, பாம்பு
ஈ) மீன், தவளை, பல்லி, காகம்
விடை:
இ) மீன் , தவளை, பல்லி, பாம்பு

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 8.
காற்றுறைகள் மற்றும் காற்றெலும்புகள் காணப்படுவது எதில்?

அ) மீன்
ஆ) தவளை
இ) பறவை
ஈ) வௌவால்
விடை:
இ) பறவை

Question 9.
நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு எது?

அ) சுடர் செல்கள்
ஆ) நெஃப்ரீடியா
இ) உடற்பரப்பு
ஈ) சொலினோசைட்டுகள்
விடை:
அ) சுடர் செல்கள்

Question 10.
குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது?

அ) ஹைடிரா
ஆ) மண்புழு
இ) நட்சத்திர மீன்
ஈ) அஸ்காரிஸ் (உருளைப்புழு )
விடை:
ஈ) அஸ்காரிஸ் (உருளைப் புழு)

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
துளையுடலிகளின் கழிவுநீக்க துளை ………………………………….
விடை:
ஆஸ்டியா

Question 2.
டினிடியா என்ற சுவாச உறுப்புகள் …………………………………. ல் காணப்படும்.
விடை:
மெல்லுடலிகள்

Question 3.
ஸ்கேட்ஸ் என்பது …………………………………. மீன்களாகும்
விடை:
குருத்தெலும்பு

Question 4.
…………………………………. இரு வாழ்விகளின் லார்வா ஆகும்.
விடை:
தலைபிரட்டை

Question 5.
…………………………………. என்பது தாடையற்ற முதுகெலும்பிகள் ஆகும்.
விடை:
வட்டவாயுடையவை) லாம்பிரே

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 6.
…………………………………. ஆனது பாலூட்டிகளின் சிறப்புப் பண்பாகும்.
விடை:
தாய் சேய் இணைப்பு சிசு

Question 7.
முட்கள் கொண்ட எறும்பு உண்ணியானது …………………………………. பாலூட்டிக்கு உதாரணமாகும்
விடை:
முட்டையிடும்

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

Question 1.
கால்வாய் மண்டலம் குழியுடலிகளில் காணப்படுகிறது. கால்வாய் மண்டலம் முட்தோலிகளில் காணப்படுகிறது.
விடை:
தவறு

Question 2.
இருபால் உயிரிகள் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன.
விடை:
சரி

Question 3.
வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு டிரக்கியா ஆகும் வளைதசையுடலிகளின் சுவாச உறுப்பு உடற்சுவராகும்.
விடை:
தவறு

Question 4.
மெல்லுடலிகளின் லார்வா பின்னேரியா ஆகும் மெல்லுடலிகளின் லார்வா ட்ரோக்கோபோர் ஆகும்.
விடை:
தவறு

Question 5.
பலனோகிளாசஸ் குறுயிழை இயக்க உணவூட்ட முறையை பெற்றுள்ளன.
விடை:
சரி

Question 6.
மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உடையது.
விடை:
சரி

Question 7.
மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை ஊர்வன கொண்டுள்ளன. மென்மையான மற்றும் ஈரப்பதமான தோலினை இரு வாழ்விகள் கொண்டுள்ளன.
விடை:
தவறு

Question 8.
முன்னங்கால்களின் மாறுபாடுகளே பறவைகளின் இறக்கைகளாகும்.
விடை:
சரி

Question 9.
பாலூட்டிகளில் பால் சுரப்பிகள் பெண் இனங்களில் காணப்படுகின்றன.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

IV. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 1

V. மிகச் சுருக்கமாக விடையளி

Question 1.
வகைப்பாட்டியல் வரையறு.
விடை:
அடிப்படைக்கொள்கைகள் முறைகள் மற்றும் விதிகளை உள்ளடக்கிய பிரிவு ஆகும்.

Question 2.
கொட்டும் செல்கள் என்றால் என்ன?
விடை:
குழியுடலிகளில் புறப்படையில் காணப்படும் பாதுகாப்புச் செல்கள் கொட்டும் செல்கள் அல்லது நிமெட்டோசிஸ்ட்கள் எனப்படும்.

Question 3.
குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள் என்றழைக்கப்படுவது ஏன்?
விடை:
உடற்சுவரில் புற அடுக்கு மற்றும் அக அடுக்கு என இரு அடுக்குகள் உண்டு. எனவே இது ஈரடுக்கு உயிரிகள் என அழைக்கப்படுகின்றன.

Question 4.
இரு வாழ் உயிரிகளின் (இரு வாழ்விகள்) சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுக.
விடை:

  • செவுள்கள்,
  • நுரையீரல்,
  • தொண்டை
  • தோல்

Question 5.
நட்சத்திர மீனில் எவ்வாறு இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது?
விடை:
நட்சத்திர மீன்கள் குழல் கால்கள் உதவியால் கிடைமட்ட மற்றும் செங்குத்தான முறைகளில் இடப்பெயர்ச்சி செய்கிறது.

Question 6.
ஜெல்லிமீன் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவை மீனை ஒத்துள்ளனவா? காரணம் கூறு.
விடை:
இல்லை

  • ஜெல்லி மீன் குழியுடலிகள்
  • நட்சத்திர மீன் முட்தோலிகள்
  • இவை இரண்டும் முதுகெலும்பு அற்ற உயிரிகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 7.
தவளைகள் இருவாழ்விகள் என்று அழைக்கப்படுவது ஏன்?
விடை:
இவை நீர் மற்றும் நிலச் சூழ்நிலையில் வாழ்வதற்கான தகவமைப்பினைப் பெற்றுள்ளது.

VI. சுருக்கமாக விடையளி

Question 1.
தொகுதி அன்னலிடா பற்றி குறிப்பு வரைக.
விடை:

  • உண்மையான உடற்குழி உண்டு
  • சீட்டாக்கள் எனும் நுண்ணிய நீட்சிகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
  • உடலானது கியூட்டிக்கிள் எனும் ஈரப்பசை மிக்க உறையினால் ஆனது.
  • கழிவு நீக்கம் நெஃப்ரிடியாவால் நடக்கிறது.
  • மூளையாகக்கொண்ட நரம்பு மண்டலம் காணப்படுகின்றது.
  • டீராக்கோபோர் லார்வா இவற்றின் பொதுலார்வா ஆகும். (எ.கா)மண்புழு , அட்டை

Question 2.
தட்டைப்புழுக்கள் மற்றும் உருளைப் புழுக்கள் இடையேயான வேறுபாட்டினைக் கூறுக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 2

Question 3.
தொகுதி முதுகு நாணிகளின் (கார்டேட்டா) வழிமுறைப்படத்தினை தருக.
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 3

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 4.
மீன்களின் சிறப்புப் பண்புகள் ஏதேனும் ஐந்தினைப் பட்டியலிடுக.
விடை:

  • மீன்கள் நீரில் வாழ்பவை மற்றும் குளிர்ரத்தப்பிராணிகள்
  • உடல் படகு போன்று அமைந்துள்ளது
  • இணைத்துடுப்புகளாலும் நடுமையத் துடுப்புகளாலும் நீந்துகின்றன.
  • உடல் செதில்களால் மூடப்பட்டுள்ளன.
  • தலை, உடல், வால் என மூன்று பகுதிகளைக் கொண்டது.

Question 5.
இருவாழ்விகளின் நீர் மற்றும் நில வாழ் பண்புகள் குறித்து விளக்குக.
விடை:
நீர் வாழ் பண்புகள்:

  • தோல் ஈரப்பதமான சுரப்பிகளைப் பெற்றுள்ளது.
  • பின்னங்காலில் விரலிடைச்சவ்வு உள்ளது.
  • சுவாசம் செவுள் மூலம் நடைபெறுகிறது.

நிலவாழ் பண்புகள்:

  • இரண்டு ஜோடி கால்களைப் பெற்றுள்ளது.
  • நுரையீரல் மூலம் சுவாசம் நடைபெறுகிறது.

Question 6.
பறவையின் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளன?
விடை:

  • பறவைகளில் ஈரினைக்கால்கள் உண்டு. இதில் முன்னங்கால்கள் பறப்பதற்கு ஏற்றவாறு இறக்கைகளாக மாறுபாடடைந்துள்ளன.
  • பின்னங்கால்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் உதவுகின்றன.

VII. விரிவாக விடையளி
Question 1.
முன்முதுகு நாணிகளின் பண்புகளை விவரிக்க.
விடை:

  1. முன் முதுகு நாணிகள் முதுகெலும்பிகளின் முன்னோடிகள்.
  2. இவற்றிற்கு மண்டையோடு இல்லாததால் எகிரேனியா என்றழைக்கப்படுகின்றன.
  3. முகுகு நாண் அமைப்பின் அடிப்படையில் இவை மூன்று துணைத் தொகுதியாக பிரிக்கப்பட்டுள்ளன.
    • அரை முதுகு நாணிகள்
    • தலை முதுகு நாணிகள்
    • வால் முதுகு நாணிகள்

I. அரைமுதுகு நாணிகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 4

  • கடல் வாழ் உயிரிகள்
  • இவை புழுவடிவமுடையது
  • உடல் மென்மையானது (உடற்கண்டமற்றவை) இருபக்க சமச்சீர் உடையவை.
  • இவைகள் மூவடுக்கு உயிரிகள்
  • முதுகு நாணானது தொண்டைப் பகுதிகள் மேல்புறத்திலிருந்து முன்னோக்கிய சிறிய நீட்சியாக உள்ளது. எ.கா – பலனோகிளாஸஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

II. தலை முதுகு நாணிகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 5

  • இவை மீன்வடிவ கடல்வாழ் முதுகு நாணிகள்
  • இவற்றில் முதுகுப்புறத்தில் இணையற்ற துடுப்பு உள்ளது.
  • முதுகு நாண் தலை முதல் நுனி வரை நீண்ட நிலையான அமைப்பாகும் எ.கா – ஆம்பியாகஸிஸ்

III. வால் முதுகு நாணிகள்
Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 6

  • முதுகு நாண் லார்வா நிலையில் வால் பகுதியில் மட்டும் காணப்படுகிறது.
  • முதிர் உயிரிகள் இயல்பான அமைப்பை இழந்து தரையில் ஒட்டி வாழ்பவை.
  • ஊடலைச் சுற்றி டியுனிக் எனும் உரை உண்டு எ.கா — அசிடியன்

Question 2.
தொகுதி – கணுக்காலிகளைப் பற்றி எழுதுக
விடை:

  • அதிக சிற்றினங்களைக் கொண்ட மிகப்பெரிய தொகுதி.
  • ஆர்த்ரோபோடு என்பதன் பொருள் இணைப்புக்கால்கள் என்பதாகும்.
  • இதன் உடல், தலை, மார்பு, வயிறு எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • உடலின் மேற்புறத்தில் கைட்டின் பாதுகாப்பு உறையாக உள்ளது.
  • உடற்குழி ஹீமோலிம்ப் என்ற திரவத்தினால் நிரப்பப்பட்டுள்ளது.
  • நன்கு வரையறுக்கப்பட்ட இரத்தக்குழல்கள் இல்லை.
  • தோலுரித்தல் மூலம் புறச் சட்டகத்தை களைகிறது.
  • சுவாசம் டிரக்கியா மற்றும் புத்தக நுரையீரல் மூலம் நடைபெறுகிறது.
  • பூச்சிகளில் மால்பிஜியன் குழல்கள் மூலமும் இறால்களில் பச்சைச் சுரப்பிகள் மூலம் கழிவு நீக்கம் நடைபெறுகிறது. எ.கா- எட்டுக்கால்பூச்சி, நண்டு, வண்ணத்துப்பூச்சி, தேள்

9th Science Guide விலங்குலகம் Additional Important Questions and Answers

Question 1.
ஒரு மதிப்பெண் வினாக்கள் முதன் முதலில் வகைப்பாட்டியல் முறையை உருவாக்கியவர் ……………………………..
விடை:
கரோலஸ் லின்னேயஸ்

Question 2.
கரப்பான் பூச்சியின் உடற்குழி திரவம் ……………………………..
விடை:
ஹீமோலிம்

Question 3.
…………………………….. வகை எலும்புகள் பறவைகளில் காணப்படுகிறது.
விடை:
நீமோட்டிக்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 4.
பல்லியின் இதய அறைகளின் எண்ணிக்கை
விடை:
3

Question 5.
பால் சுரப்பிகள் …………………………….. மாறுபாடுகள் ஆகும்.
விடை:
தோலின்

Question 6.
புத்தக நுரையீரல்கள் …………………………….. சுவாச உறுப்பாகும்.
விடை:
தேள்

Question 7.
மேன்டில் எனும் அமைப்பு …………………………….. ல் காணப்படுகிறது.
விடை:
மொலஸ்கா

Question 8.
எக்கினோடெர்மேட்டாவின் இளம் உயிரி ……………………………..
விடை:
பைப்பின்னேரியா

Question 9.
பாக்டீரியா செல்களில் …………………………….. இல்லை
விடை:
உட்கரு

Question 10.
அமீபிக் சீதபேதியை உண்டாக்கும் நுண்ணுயிரி ……………………………..
விடை:
என்டமீபா ஹிஸ்டாலிகா

Question 11.
மலேரியா நோயை பரப்பும் கொசு ……………………………..
விடை:
பெண் அனாபிலஸ்

Question 12.
மலேரியா நோயை தோற்றுவிக்கும் நுண்ணுயிரி ……………………………..
விடை:
பிளாஸ்மோடியம்

Question 13.
துளையுடலிகள் …………………………….. எனப்படுகின்றன.
விடை:
கடற்பஞ்சுகள்

Question 14.
துளையுடலிகளின் உடலில் காணப்படும் நுண்முட்கள் ……………………………..
விடை:
ஸ்பிக்யூல்ஸ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 15.
புரோட்டோசோவாக்கள் …………………………….. உயிரிகள்
விடை:
ஒரு செல்

Question 16.
மீசோகிளியா என்பதன் பொருள் ……………………………..
விடை:
செல்களால் ஆக்கப்படாத

Question 17.
குழியுடலிகளில் காணப்படும் கொட்டும் செல்கள் ……………………………..
விடை:
நிமெட்டோசிஸ்ட்கள்

Question 18.
நிடோசில் கொடுக்கு காணப்படும் உயிரிகள் ……………………………..
விடை:
குழியுடலிகள்

Question 19.
பாலிப் உருவ அமைப்பு கொண்ட உயிரி ……………………………..
விடை:
ஹைடிரா

Question 20.
தட்டைப்புழுக்களில் கழிவு நீக்கம் …………………………….. மூலம் நடைபெறும்.
விடை:
சுடர் செல்கள்

Question 21.
தட்டைப் புழுக்களுக்கு எடுத்துக்காட்டு ……………………………..
விடை:
நாடாப்புழு

Question 22.
உருளைப்புழுக்கள் …………………………….. எனப்படுகின்றன.
விடை:
நிமட்டோடா

Question 23.
இந்தியாவில் குடற் புழு நீக்க விழிப்புணர்வு நாள் ……………………………..
விடை:
பிப்ரவரி 10

Question 24.
உச்சேரிரியா பான்கிராஃப்டி புழுக்களால் ஏற்படும் நோய் ……………………………..
விடை:
யானைக்கால் நோய்

Question 25.
வளைத்தசைப்புழுக்கள் …………………………….. மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.
விடை:
சீட்டாக்கள்

Question 26.
வளைத்தசை புழுக்களின் கழிவுநீக்க உறுப்பு ……………………………..
விடை:
நெஃப்ரீடியங்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 27.
மண்புழுக்கள் …………………………….. என்றழைக்கப்படுகின்றன.
விடை:
உழவனின் நண்பன்

Question 28.
கணுக்காலிகளின் கழிவு நீக்க உறுப்பு ……………………………..
விடை:
மால்பீஜியன் குழல்கள்

Question 29.
ஒரே ஒரு கண் உடைய உயிரினம் ……………………………..
விடை:
மால்பீஜியன் குழல்கள்

Question 30.
சென்டிபீட் என்பதன் பொருள் ……………………………..
விடை:
நூறு காலிகள்

Question 31.
மெல்லுடலிகளின் உடலைச்சுற்றி காணப்படும் மென்போர்வை ……………………………..
விடை:
மேன்டில்

Question 32.
முத்துச்சிப்பிகள் …………………………….. ஐ உருவாக்குகின்றன.
விடை:
முத்து

Question 33.
நீர் இரத்த ஓட்ட மண்டலம் காணப்படும் உயிரி ……………………………..
விடை:
முட்தோலிகள்

Question 34.
எகிரேனியா என்பதன் பொருள் ……………………………..
விடை:
மண்டையோடற்றவை

Question 35.
மீன்கள் …………………………….. இரத்தப் பிராணிகள்
விடை:
குளிர்

Question 36.
முதுகெலும்பிகளின் இடப்பெயர்ச்சி உறுப்பு ……………………………..
விடை:
கால்கள்

Question 37.
மீன்களின் இதயம் …………………………….. அறைகள் உடையது.
விடை:
இரு

Question 38.
சிறுத்தையை விட வேகமாக நீந்தக்கூடிய மீன் ……………………………..
விடை:
செயில் மீன்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 39.
முதுகெலும்புடைய விலங்குகளில் மிகப்பெரிய விலங்கு ……………………………..
விடை:
நீலத் திமிங்கலம்

Question 40.
நீலப்புரட்சி என்பது …………………………….. உற்பத்தி
விடை:

Question 41.
நீர், நில வாழ்வன …………………………….. எனப்படும்
விடை:

Question 42.
தமிழ்நாட்டின் மாநில பறவை ……………………………..
விடை:
மரகதப் புறா

Question 43.
பறவைகள் …………………………….. உயிரிகள்
விடை:
வெப்ப இரத்த

Question 44.
பற்கள் காணப்படும் பறவை ……………………………..
விடை:
ஆர்கியோப்டெரிக்ஸ்

Question 45.
மிகச்சிறிய இருவாழ்வி ……………………………..
விடை:
கியுபாவின் அம்பு நச்சுத்தவளை

Question 46.
ஊர்வனவற்றின் சுவாச உறுப்பு ……………………………..
விடை:
நுரையீரல்

Question 47.
பறவைகளின் முட்டை ஓடு …………………………….. ஆல் ஆனவை
விடை:
கால்சியம்

Question 48.
பாலூட்டிகளின் இதயம் …………………………….. அறைகளை உடையது.
விடை:
நான்கு

Question 49.
விந்துச் சுரப்பிகள் …………………………….. பையினுள் அமைந்துள்ளது.
விடை:
ஸ்குரோட்டல்

Question 50.
மீன்களின் சுவாசம் …………………………….. மூலம் நடைபெறுகிறது.
விடை:
செவுள்கள்

II. கூற்று மற்றும் காரண வகை

Question 1.
கூற்று – கடற்பஞ்சுகளில் திசுக்கள் இல்லை
காரணம் – அவைகள் செல்நிலை எய்திய உயிரினம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

அ) கூற்று தவறு – காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை
இ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி – காரணமும் சரி.
விடை:
ஆ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை

Question 2.
கூற்று – நாடாப்புழுவில் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்பு ஒரே உயிரியில் காணப்படுகின்றன.
காரணம் – நாடாப்புழு பாலில்லா முறையில் இனப்பெருக்கம் செய்கிறது.

அ) கூற்றும் – காரணம் சரி
ஆ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்றும் காரணமும் தவறு
ஈ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை.
விடை:
ஈ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்கவில்லை.

Question 3.
கூற்று – கரப்பான் பூச்சியில் மிகத் தெளிவான இரத்தக் குழாய்கள் காணப்படுகின்றன.
காரணம் – உயிரியின் உடலானது இரத்தத்தினால் நிரப்பப்பட்டுள்ளது.

அ) கூற்றும் – காரணம் சரி
ஆ) காரணம் கூற்றை விளக்குகிறது.
இ) கூற்றும் தவறு காரணம் கூற்றை விளக்கவில்லை.
ஈ) கூற்று சரி – காரணம் கூற்றை விளக்குகிறது.
விடை:
இ) கூற்றும் தவறு காரணம் கூற்றை விளக்கவில்லை .

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம் 7

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
அன்னலிடா என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?
விடை:
அன்னலிடா என்ற வார்த்தை அன்னுலேசன்ஸ் என்ற கிரேக்க மொழியிலிருந்து உருவாக்கப்பட்டது. வளையங்கள் போன்று ஒன்றோடொன்று இணைந்தவை என்று அர்த்தம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 2.
தொகுதி அன்னலிடாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு யாது?
விடை:
சீட்டாக்கள் எனும் நுண்ணிய நீட்சிகள் மூலம் இடப்பெயர்ச்சி செய்கின்றன.

Question 3.
ஆர்த்ரோபோடு என்பதன் பொருள் யாது?
விடை:
ஆர்த்ரோபோடு என்பதன் பொருள் இணைப்புக்கால்கள் என்பதாகும்.

Question 4.
வெப்ப இரத்த பிராணிகள் என்றால் என்ன? உதாரணம் தருக.
விடை:
தான் வாழும் சூழ்நிலைக்கேற்றவாறு உடலின் வெப்பநிலையை மாற்றி அமைத்துக் கொள்ளாத உயிர்கள் எ.கா பறவை, பாலூட்டி.

Question 5.
மூவருக்கு உயிரினம் என்றால் என்ன?
விடை:
புற அடுக்கு, நடு அடுக்கு, அக அடுக்கு என மூன்று கருப்படலங்களைக் கொண்ட உயிரிகள் மூவடுக்கு உயிரிகள் எனப்படும். எ.கா – மனிதன்

Question 6.
உடற்குழி அற்றவை என்றால் என்ன?
விடை:
உடற்குழி அல்லது சீலோன் அற்ற உயிரிகள் உடற்குழி அற்றவை எனப்படும். எ.கா – நாடாப்புழு

Question 7.
பெட்டா மெரிசம் என்றால் என்ன?
விடை:
அனைத்து உடற்கண்டங்களும் ஒத்த அமைப்புடையவை. எ.கா – மண்புழு

Question 8.
ஆரச்சமச்சீர் என்றால் என்ன?
விடை:
விலங்குகளில் உடல் உறுப்புகள் ஒரு மைய அச்சினைச் சுற்றிலும் அமைக்கப்பட்டிருக்கும். உயிரியின் உடலை எந்த ஒரு கோணத்தில் இருந்து பிரித்தாலும் ஒத்த சமமானப் பாகமாக பிரிக்க முடிந்தால் அந்த உயிரி ஆரச்சமச்சீர் கொண்டவை. உ.ம் – ஹைடிரா – நட்சத்திர மீன்

Question 9.
இருபக்க சமச்சீர் உடையவை என்றால் என்ன?
விடை:
உயிரியின் உடல் உறுப்புகள் மைய அச்சின் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும். மைய அச்சின் வழியாக உடலைப் பிரித்தால் இரு சமமான பாகங்களாக பிரிக்க இயலும். எ.கா – தவளை

Question 10.
பல்லுருவ அமைப்புடையவை என்றால் என்ன?
விடை:
உயிரிகளில் இரு உருவ அமைப்புடையவை பல்லுருவ அமைப்புடையவை எனப்படும். குழியுடலிகள் பாலிப் மற்றும் மெடுசா எனும் இரு உருவ அமைப்புடையவை. எ.கா – ஹைடிரா

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
பறவைகளின் சிறப்புப்பண்புகளை விவரி
விடை:

  • பறவைகள் வெப்ப இரத்த உயிரிகள் ஆகும்
  • உடல் தலை கழுத்து மற்றும் வால் என நான்கு பகுதிகளைக் கொண்டது.
  • உடல் கதிர் வடிவமுடையது.
  • முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறுபாடடைந்துள்ளது.
  • பின்னங்கால்கள் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்ப தகவமைக்கப்பட்டுள்ளன.
  • பாதம செதில்களால் மூடப்பட்டுள்ளது.
  • உடலானது இறகுகளால் மூடப்பட்டுள்ளது.
  • கடின அலகு உண்டு
  • உணவுக்குழலில் தீனீப்பை மற்றும் அரைவைப்பை உள்ளது.
  • சுவாசம் நுரையீரல் மூலம் நடைபெறுகிறது.
  • எலும்புகளினுள் காற்றறைகள் உண்டு.
  • இது உடல் எடையைக் குறைக்க உதவும்  முட்டைகளில் கருவுணவு உண்டு.
  • முட்டைகள் கடினமான கால்சியம் மிகுந்த ஓடுடையவை.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 17 விலங்குலகம்

Question 2.
பாலூட்டிகள் சிறப்பு பண்புகளை பற்றி விளக்குக.
விடை:

  • உடல் ரோமங்களால் போர்த்தப்பட்டுள்ளது. உடல் தோலில் வியர்வைச் சுரப்பிகள் உண்டு
  • பாலூட்டும் சுரப்பி மற்றும் வாசனைச் சுரப்பிகளும் தோலின் மாறுபாடுகளாகும்.
  • வெளிக்காது மடல் உண்டு 4. இதயம் நான்கு அறைகளுடையது.
  • விந்துச் சுரப்பிகள் உடலுக்கு வெளியே ஸ்குரோட்டல் பையினுள் சூழப்பட்டிருக்கும்.
  • முட்டைகள் சிறியவை. கரு உணவு இல்லை.
  • உட் கருவுறுதல் நடைபெறுகிறது.
  • இவைகள் குட்டி ஈனுபவை மற்றும் குட்டிகளுக்குப் பால் கொடுப்பவை.
  • தாய்- சேய் இணைப்புத்திசு உள்ளது.