Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 16 பயன்பாட்டு வேதியியல் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 16 பயன்பாட்டு வேதியியல்

9th Science Guide பயன்பாட்டு வேதியியல் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
ஒரு நானோ மீட்டர் என்பது

அ) 10 மீட்டர்
ஆ) 10 மீட்டர்
இ) 10 மீட்டர்
ஈ) 10 மீட்டர்
விடை:
ஈ) 10 மீட்டர்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 2.
பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி …………………………………. லிருந்து பெறப்படுகிறது.

அ) தாவரங்கள்
ஆ) நுண்ணுயிரிகள்
இ) விலங்குகள்
ஈ) சூரிய ஒளி
விடை:
ஆ) நுண்ணுயிரிகள்

Question 3.
1% அயோடோபார்ம் …………………………………. ஆக பயன்படுத்தப்படுகிறது

அ) எதிர் நுண்ணுயிரி
ஆ) மலேரியா
இ) புரைத்தடுப்பான்
ஈ) அமில நீக்கி
விடை:
இ) புரைத்தடுப்பான்

Question 4.
ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் …………………………………. நிகழும்.

அ) ஆக்ஸிஜனேற்றம்
ஆ) ஒடுக்கம்
இ) நடுநிலையாக்கல்
ஈ) சங்கிலி இணைப்பு
விடை:
ஆ) ஒடுக்கம்

Question 5.
இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம்.

அ) கார்பன்
ஆ) அயோடின்
இ) பாஸ்பரஸ்
ஈ) ஆக்ஸிஜன்
விடை:
அ) கார்பன்

Question 6.
பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?

அ) உருளைக்கிழங்கு
ஆ) பீட்ரூட்
இ) கேரட்
ஈ) மஞ்சள்
விடை:
அ) உருளைக்கிழங்கு

Question 7.
…………………………………. வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

அ) கார்போஹைட்ரேட்
அ) வைட்டமின்கள்
இ) புரதங்க ள்
ஈ) கொழுப்புகள்
விடை:
ஆ) வைட்டமின்கள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 8.
கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது?

அ) ஆக்ஸிஜனேற்றம்
ஆ) மின்கலங்கள்
இ) ஐசோடோப்புகள்
ஈ) நானோதுகள்கள்
விடை:
இ) ஐசோடோப்புகள்

Question 9.
ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்குக் காரணமான குழுக்கள் …………………………………. என அழைக்கப்படுகின்றன.

அ) ஐசோடோப்புகள்
ஆ) நிற உயர்த்தி
இ) நிற ஜனனிகள்
ஈ) நிறத் தாங்கி
விடை:
ஈ) நிறத் தாங்கி

Question 10.
குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோகார்பன்கள் …………………………………. ஆக பயன்படுத்தப்படுகின்றன.

அ) உரங்கள்
ஆ) பூச்சிக்கொல்லிகள்
இ) உணவு நிறமிகள்
ஈ) உணவு பதப்படுத்திகள்
விடை:
ஆ) பூச்சிக்கொல்லிகள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் வேதிமின்கலம் …………………………………. ஆகும்.
விடை:
மின்பகுப்புக்கலம்

Question 2.
வலிமருந்துகள் …………………………………. என்று அழைக்கப்படுகின்றன.
விடை:
வலி நிவாரணிகள்

Question 3.
இண்டிகோ ஒரு …………………………………. சாயம் மற்றும்
விடை:
தொட்டி

Question 4.
…………………………………., …………………………………. ஆகியவை தாவர வளர்ச்சிக்குத் தேவையான பெரும நுண் ஊட்டத் தனிமங்கள் ஆகும்.
விடை:
நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 5.
கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் …………………………………. ஆகும்.
விடை:
நின்ஹைட்ரின்

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 பயன்பாட்டு வேதியியல் 1

IV. சுருக்கமாக விடையளி.

Question 1.
கார்பன் தேதியிடல் என்றால் என்ன?
விடை:

  • இது C-14 ஐசோடாப்பை பயன்படுத்தி புதைபடிவ மரங்கள் அல்லது விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க உதவும் முறையாகும்.

Question 2.
மயக்கமூட்டிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
விடை:

  • உணர்வை இழக்கச் செய்யும் மருந்துகள் மயக்க மூட்டிகள் எனப்படும்.
  • இவை இருவகைப்படும்.
  • பொது மயக்கமூட்டிகள்
  • குறிப்பிட்ட மயக்கமூட்டிகள்

Question 3.
பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?
விடை:

  • தாவர வளர்ச்சிக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்து மற்றும் பெரும ஊட்டச் சத்துக்களை வழங்குவதற்கு இரசாயன உரங்கள் தேவைப்படுகிறது.

Question 4.
தடயவியல் வேதியியலின் தொடர்புகள் யாவை?
விடை:

  • குற்றம் பற்றிய விசாரணைக்கு அறிவியல் கொள்கைகள், மற்றும் நுட்பங்களை தடயவியல் வேதியியல் பயன்படுத்துகிறது.
  • 1- கைரேகை பதிவு,
  • 2 – ஆல்கஹால் பரிசோதனை,
  • 3 – தடய நச்சுவியல்

V. விரிவாக விடையளி.

Question 1.
பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.
விடை:
1. அமிலச் சாயங்கள் :

  • அமிலத் தன்மை கொண்டவை.
  • விலங்குத் தோல், செயற்கை இழை மற்றும் கம்பளி, பட்டு போன்ற புரத நூலிழைகளை சாயமேற்ற பயன்படுகிறது.
  • எ.கா : பிக்ரிக் அமிலம், மஞ்சள் நாப்தால்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

2. காரச் சாயங்கள் :

  • காரத்தொகுதிகளைக் கொண்டுள்ளன.
  • தாவர மற்றும் விலங்கு நூலிழைகளைச் சாயமேற்ற பயன்படுகின்றன.

மறைமுக சாயம் :

  • பருத்தி ஆடைகளுடன் குறைவான ஈர்ப்புத் தன்மையைக் கொண்டுள்ளதால் நேரடியாக அவற்றின் மீது படிவதில்லை.
  • எனவே இவை முதலில் நிறமூன்றிகளுடன் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • நிறமூன்றி என்பது துணிகளுடன் இணைக்கப்பட்டு பிறகு சாயங்களுடன் லேக் எனும் கரையாத கூட்டுப்பொருள் உருவாதலால் இணைக்கப்படக்கூடிய பொருளாகும்.
  • அலுமினியம், குரோமியம் மற்றும் இரும்பின் உப்புகள் நிறமூன்றிகளாக பயன்படுகின்றன.
  • எ.கா. அலிசரின்.

4. நேரடி சாயங்கள் :

  • பருத்தி, ரேயான் மற்றும் இதர செல்லுலோஸ் இழைகளுடன் அதிக கவர்ச்சி உடையன.
  • துணிகளுடன் உறுதியாக ஒட்டிக்கொள்வதால் நேரடியாக பயன்படுத்தப்படுகின்றன.
  • எ.கா : காங்கோ சிவப்பு

5. தொட்டிச்சாயம் :

  • பருத்தி இழைகளுக்கு மட்டுமே பயன்படக்கூடியது.
  • பட்டு மற்றும் கம்பளி இழைகளுக்கு பயன்படாது.
  • இந்த சாயமிடுதல் தொடர்ச்சியான செயல்பாடாகும்.
  • இவற்றை செயல்படுத்த தொட்டி எனும் பெரிய கலன் தேவைப்படுவதால் இவை தொட்டிச் சாயம் எனப்படுகிறது. எ.கா : இண்டிகோ.

Question 2.
பல்வேறு உணவுச் சேர்க்கைகளின் பெயர் மற்றும் செயல்பாடுகளை எழுதுக.
விடை:

  • ஒரு சில சிறப்பான செயல்பாடுகளுக்காக உணவில் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் உணவுச் சேர்க்கைகள் எனப்படும்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 பயன்பாட்டு வேதியியல் 2 Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 பயன்பாட்டு வேதியியல் 3

VI. உயர் சிந்தனை வினாக்கள்

Question 1.
கைபேசியில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் (ரீசார்ஜ்) செய்ய வேண்டும். அதேபோல், நீங்கள் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்யமுடியுமா? ஆராய்ந்து பதில் கூறுக.
விடை:

  • கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்ய முடியாது.
  • ஏனெனில் அவை மறு ஊட்டம் செய்ய இயலா மின்கலங்கள்.
  • அவற்றை மறு ஊட்டம் செய்ய முயற்சி செய்தால் மின்கலங்கள் வெப்பமாகி கசிவு ஏற்படலாம் அல்லது வெடிக்க நேரிடலாம்.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 2.
சுதாவுக்கு தீ விபத்து ஏற்பட்டது. அவள் எந்தவித மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்?
விடை:

  • நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றை நீக்குவதற்கு புரைதடுப்பான்களை பயன்படுத்த வேண்டும்.
  • எ.கா : அயோடோபார்ம் எல்லா வகையான வலிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டும்.
  • எ.கா : ஆஸ்பிரின் காய்ச்சலைக் குறைக்கும் காய்ச்சல் நிவாரணிகளை பயன்படுத்தவேண்டும். எ.கா. ஆஸ்பிரின் அல்லது பாராசிட்டமால்
  • நுண்ணுயிர்களின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கும் நுண்ணுயிர் எதிரிகளை பயன்படுத்த வேண்டும். எ.கா : பென்சிலின்

Question 3.
ஓர் பயிர் நிலத்தில் மண்ணின் pH மதிப்பு 5. அங்கு என்ன வகையான உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்?
விடை:

  • பயிர் நிலங்களுக்கேற்ற மண்ணின் pH மதிப்பு பயிர்களைப் பொறுத்தது.
  • இது பொதுவாக 6 முதல் 7 ஆகும். இம்மதிப்பு சிறிதளவு அமிலத்தன்மையுடைய மண்ணைக் குறிக்கும்.
  • ஆனால் பயிர் நிலத்தின் மண்ணின் pH மதிப்பு 5 எனில் அது அதிக அமிலத்தன்மை உடையது.
  • எனவே அமிலத்தன்மையை குறைப்பதற்கு காரத்தன்மையுடைய உரங்களை பயன்படுத்த வேண்டும். எ.கா : கால்சியம் பாஸ்பேட், அம்மோனியம் நைட்ரேட்.

9th Science Guide பயன்பாட்டு வேதியியல் Additional Important Questions and Answers

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பகுதி என்பதை குறிக்கும் கிரேக்க வார்த்தை ………………………………….
விடை:
நானோஸ்

Question 2.
ஒரு வினாடியில் நமது நகம் …………………………………. மீட்டர் வளர்கிறது.
விடை:
ஒரு நானோ

Question 3.
நமக்கு சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் சுமார் …………………………………. மீட்டர் விட்டம் கொண்டது.
விடை:
30 சுமார்

Question 4.
நம்முடைய தலையில் இருக்கும் ஒரு தலை முடியின் விட்டம் ………………………………….
விடை:
25,000 நானோ மீட்டர்

Question 5.
ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் ………………………………….
விடை:
o.2 நானோமீட்டர்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 6.
நானோ பொருள்கள் …………………………………. அமைப்புப் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளைப் பெற்றிருக்கும்.
விடை:
அணுக்கள் மற்றும் பெரிய பொருள்களின்

Question 7.
நானோ ரோபோட்களின் அளவு ………………………………….
விடை:
0.1 – 10 மைக்ரோமீட்டர்

Question 8.
டிரக்யூ என்ற பிரெஞ்சு வார்த்தையின் பொருள் ………………………………….
விடை:
காய்ந்த மூலிகை

Question 9.
மயக்க மருந்துகளுள் மிகவும் பாதுகாப்பானது ………………………………….
விடை:
நைட்ரஸ் ஆக்சைடு

Question 10.
டை எத்தில் ஈதர் மயக்க மருந்தாக பயன்படும் போது அதில் …………………………………. நிலைப்படுத்தியாக பயன்படுகிறது.
விடை:
0.002% புரோப்பைல் ஹாலைடு

Question 11.
வலிநிவாரணி மற்றும் காய்ச்சல் நிவாரணியாக பயன்படுவது ………………………………….

Question 12.
வெளிக்காயங்களை சுத்தம் செய்வதற்கு பயன்படும் புரைத் தடுப்பான் ………………………………….
விடை:
ஹைட்ரஜன் பெராக்சைடு

Question 13.
1% ஃபீனால்கரைசல் …………………………………. ஆக பயன்படுகிறது.
விடை:
கிருமி நாசினி

Question 14.
சின்கோனா மரப்பட்டையிலிருந்து இயற்கையாக பெறப்படும் மலேரியா நிவாரணி ………………………………….
விடை:
குயினைன்

Question 15.
அலெக்சாண்டர் ஃபிளெமிங் கண்டறிந்த முதல் நுண்ணுயிர் எதிரி ………………………………….
விடை:
பென்சிலின்

Question 16.
பென்சிலின் என்ற நுண்ணுயிர் …………………………………. எதிரி பூஞ்சையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
விடை:
பென்சிலியம் நொடேட்டம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 17.
அதிசய மருந்து என்று பெயரிடப்பட்டது ………………………………….
விடை:
பென்சிலின்

Question 18.
தேன், பூண்டு, இஞ்சி, லவங்கம், வேம்பு மற்றும் மஞ்சள் ஆகியன …………………………………. தன்மையைப் பெற்றுள்ளன.
விடை:
நுண்ணுயிர் எதிர்ப்புத்

Question 19.
எரிபொருள் மின்கலன்கள் …………………………………. ஆற்றலை …………………………………. ஆற்றலாக மாற்ற பயன்படுகின்றன.
விடை:
வேதி, மின்

Question 20.
ஒரு மின் வேதிக்கலனில் …………………………………. மின் முனையில் ஆக்சிஜனேற்றம் நிகழ்கிறது.
விடை:
நேர்

Question 21.
ஆக்சிஜனேற்றம் என்பது …………………………………. நிகழ்வு.
விடை:
எலக்ட்ரானை இழக்கும்

Question 22.
ஒரு மின்வேதிக் கலனில் …………………………………. மின் முனையில் ஒடுக்கம் நிகழ்கிறது.
விடை:
எதிர்

Question 23.
ஒடுக்கம் என்பது – நிகழ்வு.
விடை:
எலக்ட்ரானை ஏற்கும்

Question 24.
ஒரு கால்வனிக் மின்கலத்தில் …………………………………. மூலம் இரண்டு அணு மின்கலன்களும் இணைக்கப்பட்டுள்ளன.
விடை:
உப்புப்பாலம்

Question 25.
டேனியல் மின்கலத்தில் …………………………………. உப்பு பாலமாக செயல்படுகிறது.
விடை:
தெவிட்டிய பொட்டாசியம் குளோரைடு கரைசல்

Question 26.
டேனியல் மின்கலம் ஒருவகை …………………………………. மின்கலம் ஆகும்.
விடை:
கால்வனிக்

Question 27.
துருப்பிடித்தலிலிருந்து இரும்பு போன்ற உலோகங்களை பாதுகாக்க …………………………………. கொண்டு மின் முலாம் பூசப்படுகிறது.
விடை:
தகரம், நிக்கல் அல்லது குரோமியம்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 28.
நிறம் தாங்கி மற்றும் நிறம் பெருக்கி கொள்கையை வழங்கியவர் ………………………………….
விடை:
ஓட்டோவிட்

Question 29.
தொட்டிச் சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:
இண்டிகோ

Question 30.
மறைமுக சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:
அலிசரின்

Question 31.
அமிலச் சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:
பிக்ரிக் அமிலம்

Question 32.
நேரடிச் சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:
காங்கோ சிவப்பு

Question 33.
சாக்கரீன் மற்றும் சைக்லமேட் ஆகியன …………………………………. ஆக பயன்படுகின்றன.
விடை:
செயற்கை இனிப்பூட்டிகள்

Question 34.
ஊறுகாயில் பயன்படும் உணவு பதப்படுத்தி ………………………………….
விடை:
வினிகர் அல்லது சோடியம் குளோரைடு

Question 35.
…………………………………. நம்மை இதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.
விடை:
எதிர் ஆக்சிஜனேற்றிகள்

Question 36.
வைட்டமின் C, வைட்டமின் E ஆகியன …………………………………. ஆக செயல்படுகின்றன.
விடை:
எதிர் ஆக்சிஜனேற்றிகள்

Question 37.
எதிர் ஆக்சிஜனேற்றிகள் …………………………………. தடுத்து உணவின் தன்மையைக் கெடாமல் பாதுகாக்கின்றன.
விடை:
ஆக்சிஜனேற்றத்தைத்

Question 38.
மறைக்கப்பட்ட கைரேகைகளை சிலநேரங்களில் …………………………………. காண முடிகிறது.
விடை:
நின் ஹைட்ரின்

Question 39.
எந்த இரு மனிதர்களின் கைரேகை, கருவிழி அச்சு மற்றும் நாக்கு அச்சு ஆகியன ………………………………….
விடை:
தனித்துவமானவை

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 40.
…………………………………., …………………………………. ஆகியவை விளையாட்டுப் பொருட்கள், மிதிவண்டி ஊர்திப் போன்றவைகளை உருவாக்கப் பயன்படுகின்றன.
விடை:
நானோ மேற்பூச்சு, நானோ கலப்பு பருப்பொருள்

Question 41.
சூரிய கதிர்வீச்சின் தாக்கத்தை குறைக்கும் களிம்புகளில் பயன்படும் நானோ சூரியக்கதிர் தடுப்புப் பொருள் …………………………………. மற்றும் ………………………………….
விடை:
சிங்க் ஆக்ஸைடு டைட்டானியம் ஆக்ஸைடு

Question 42.
நானோ துகள்கள் …………………………………. உடன் தொடர்பு கொள்ளும் போது உறுதியற்ற தன்மையை அடைகின்றன.
விடை:
ஆக்சிஜன்

Question 43.
ஆக்சிஜனுடன் வினைபுரியும் போது நச்சுத் தன்மையுள்ள …………………………………. உருவாவதால் தற்போது குளோரோஃபார்ம் பயன்படுத்தப்படுவதில்லை
விடை:
கார்போனைல் குளோரைடு

Question 44.
உடலின் அதிக வெப்பநிலையை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டு வந்து காய்ச்சலை குறைக்க பயன்படும் மருந்துகள் …………………………………. எனப்படும்.
விடை:
காய்ச்சல் நிவாரணிகள்

Question 45.
வயிற்றினுள் போதுமான அளவுக்கு மேல் அமிலம் சுரப்பதை சரி செய்யும் மருந்துப் பொருள்கள் …………………………………. எனப்படும்.
விடை:
அமில நீக்கிகள்

Question 46.
டேனியல் மின்கலத்தில் – நேர்மின் முனையாகவும், …………………………………. எதிர்மின் முனையாகவும் செயல்படுகின்றன.
விடை:
துத்தநாக உலோகம், தாமிர உலோகம்

Question 47.
நிலையற்ற ஐசோடோப்புகள் …………………………………. வடிவில் தங்கள் ஆற்றலை இழப்பதன் மூலம் சிதைவுகளுக்கு உட்படுகின்றன.
விடை:
கதிரியக்க

Question 48.
நம் அன்றாட உணவில் பயன்படும் புரைத்தடுப்பான் பண்புடைய இயற்கை நிறமி.
விடை:
மஞ்சள்

Question 49.
ஆல்கஹால் சோதனையில், ஆல்கஹால் ஆக்சிஜனேற்றம் அடைந்து டைகுரோமேட்டை …………………………………. ஆக ஒடுக்குகிறது.
விடை:
குரோமிக் அயனி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 50.
ஆல்கஹால் சோதனையில் ஏற்படும் நிறமாற்றம் ………………………………….
விடை:
ஆரஞ்சு நிறத்திலிருந்து பச்சை |நிறம்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 16 பயன்பாட்டு வேதியியல் 4

III. கூற்று மற்றும் காரண வகை

கூற்று (A) மற்றும் காரணங்களை (R) படித்து பின்வரும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்
ஆ) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

Question 1.
கூற்று (A) : நானோ பரிமாணத்தில் இருக்கும் பொருள் ஒன்றின் பண்பானது, அது அணு அல்லது பெரிய பொருளாக இருக்கும் போது உள்ள பண்பிலிருந்து மாறுபட்டிருக்கும்.

காரணம் (R) : நானோ பொருள்கள், அணுக்கள் மற்றும் பெரிய பொருள்களின் அமைப்புப் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளைப் பெற்றிருக்கும்.
விடை :
அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்

Question 2.
கூற்று (A) : அனைத்து வேதிப்பொருட்களையும் நாம் மருந்துகளாக பயன்படுத்தலாம்.
காரணம் (R) : மருந்துப் பொருள்கள் நச்சுத்தன்மை உள்ளதாக இருக்கக்கூடாது.
விடை :
ஆ) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

Question 3.
கூற்று (A) : மறைக்கப்பட்ட கைரேகைகளை சில நேரங்களில் நின்ஹைட்ரின் பயன்பாட்டினால் காணமுடிகிறது.

காரணம் (R) : நின் ஹைட்ரின் வியர்வையில் உள்ள அமினோ அமிலங்களுடன் வினையாற்றுவதன் மூலம் ஊதா நிறமாக மாறும்.
விடை :
அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
நானோ வேதியியல் என்றால் என்ன?
விடை:

  • அணு மற்றும் மூலக்கூறு அளவில் இருக்கும் பொருள்களை உருவாக்கி அல்லது மாற்றியமைத்து அவைகளின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை ஆய்வு செய்யும் நானோ அறிவியலின் பிரிவு நானோ வேதியியல் எனப்படும்.

Question 2.
நானோ பொருள்கள் பெரிய பொருள்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது?
விடை:
நானோ பொருள்கள் பெரிய பொருள்களிலிருந்து பின்வரும் பண்புகளில் வேறுபடுகின்றன.

  • அதிக புறப்பரப்பளவு
  • அதிக புறப்பரப்பளவு ஆற்றல்
  • நெருக்கமான இடப்பொதிவு
  • குறைவான திண்மநிலை குறைபாடுகள்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 3.
மருந்துப் பொருள் என்றால் என்ன?
விடை:

  • நோய்களைக் குணப்படுத்தப் பயன்படும் வேதிப் பொருள்களே “மருந்துகள்” என்று அழைக்கப்படுகின்றன.

Question 4.
கதிரியக்க கார்பன் தேதியிடல் என்றால் என்ன?
விடை:

  • இது C- 14 ஐசோடோப்பைப் பயன்படுத்தி புதைபடிவ மரங்கள் அல்லது விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க உதவும் முறையாகும்.

Question 5.
கதிரியக்க சுவடறிவான் என்றால் என்ன?
விடை:
வேதி வினைகளின் தன்மையை அறிய பயன்படுத்தப்படும் கதிரியக்க ஐசோடோப்புகள் கதிரியக்க சுவடறிவான் எனப்படும்.

Question 6.
சாயங்கள் என்றால் என்ன?
விடை:
துணிகள் மற்றும் பிற பொருட்களுக்கு நிறங்களை வழங்கும் கரிமச் சேர்மங்கள் சாயங்கள் எனப்படும்.

Question 7.
சரிவிகித உணவு என்றால் என்ன?
விடை:

  • உடல் வளர்ச்சி – உணவுகள், ஆற்றல் அளிக்கும் உணவுகள் மற்றும் பாதுகாப்பளிக்கும் உணவுகள் ஆகிய மூன்றினையும் சரியான விகிதத்தில் கொண்டுள்ள உணவே சரிவிகித உணவு எனப்படும்.

Question 8.
உயிரியல் அளவீட்டியல் என்றால் என்ன?
விடை:

  • மனித உடல் பதிவுகளை ஆராய்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வதை உள்ளடக்கிய அறிவியலே உயிரியல் அளவீட்டியல் எனப்படும்.

V. விரிவான விடை – 5 மதிப்பெண்கள்

Question 1.
நானோ வேதியியலின் பயன்பாடுகள் யாவை?
விடை:

  • உலோக நானோ துகள்கள் செயல்திறன் மிக்க வினையூக்கிகளாக பயன்படுகின்றன.
  • நானோ துகள் மற்றும் நானோ கம்பிகளைப் பயன்படுத்தி செய்யப்படும். வேதியியல் உணரிகள் உணர்கருவிகளின் திறனை மேம்படுத்துகின்றன.
  • நானோ மேற்பூச்சு, நானோ கலப்பு பருப்பொருள் ஆகியன விளையாட்டுப் பொருள்கள், மிதிவண்டி, ஊர்திகள் போன்றவற்றை உருவாக்கப்பயன்படுகின்றன.
  • நானோ துகள் பூச்சுகள் பூசப்பட்ட குப்பிகள் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களால் பானங்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப் பயன்படுகின்றன.
  • அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படும் செயற்கைத் தோல்களை உருவாக்க நானோ தொழில்நுட்பம் பயன்ப டுகிறது.
  • நானோ துகள்கள் மின்னணுவியல் துறையில் நுண் சில்லுகளாக பயன்படுகின்றன.
  • ஒப்பனை பொருள்கள், வாசனைத் திரவியங்கள், தோல் மீது பூசப்படும் களிம்பு, தோலின் ஈரப்பதத்தை அதிகரிக்கும் களிம்பு தயாரிக்கப் பயன்படுகின்றன.
  • பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த ஆடைகளுடன் சேர்க்கப்படுகின்றன.
  • நுண் ஊசிகள், மருந்து செலுத்தும் குழாய்கள், குளுக்கோமீட்டர் போன்ற உயிர்மருத்துவக் கருவிகள் தயாரிக்க நானோ துகள்கள் பயன்படுகின்றன.
  • ராணுவம், வானூர்திகள், விண்வெளித் துறை சாதனங்கள் தயாரிக்க நானோ பொருட்கள் பயன்படுகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

Question 2.
குறிப்பு வரைக :
(i) வலி நிவாரணிகள்
(ii) காய்ச்சல் நிவாரணிகள்
(iii) புரை தடுப்பான்கள்
(iv) மலேரியா நிவாரணிகள்
(v) நுண்ணுயிர் எதிரிகள்.
விடை:
(i) வலி நிவாரணிகள் :

  • உறுப்புகளை உணர்விழக்கச் செய்யாமல், எல்லா வகையான வலிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் சேர்மங்களே வலி நிவாரணிகள் ஆகும். எ.கா. : ஆஸ்பிரின், நோவால்ஜீன்

(ii) காய்ச்ச ல் நிவாரணிகள் :

  • உடலின் அதிக வெப்பநிலையை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டு வருவதன் மூலம் காய்ச்சலைக் குறைக்க பயன்படும் சேர்மங்களே காய்ச்சல் நிவாரணிகள் ஆகும். எ,கா, : பாராசிட்டமால்

(iii) புரைத் தடுப்பான்கள் :

  • நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழித்து அல்லது கட்டுப்படுத்தி அவற்றால் ஏற்படும் தொற்றை நீக்குவதற்கு பயன்படும் சேர்மங்களே புரைத்தடுப்பான்கள் எனப்படும். எ.கா. : அயோடோபார்ம், 0.2% ஃபீனால் கரைசல்

(iv) மலேரியா நிவாரணிகள் :

  • உடல் வெப்பநிலையை 103 – 106°F க்கு அதிகரிக்கும் வைரஸால் பரவும் குளிர்காய்ச்சலான மலேரியா காய்ச்சலை குணப்படுத்த பயன்படும் வேதிப்பொருட்கள் மலேரியா நிவாரணிகள் ஆகும். எ.கா. : சின்கோனா மரப்பட்டையிலிருந்து பெறப்படும் குயினைன்

(v) நுண்ணுயிர் எதிரிகள் :

  • பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் வெளிப்படுத்தும் சில வேதிப் பொருட்கள் மற்ற நுண்ணுயிர்களின் வளர்ச்சி மற்றும் வளர்சிதை மாற்றத்தை தடுக்கின்றன.
  • இவையே நுண்ணுயிர் எதிரிகள் எனப்படும்.
  • எ.கா. : பென்சிலியம் நொட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து அலெக்ஸாண்டர் ஃபிளமிங் கண்டறிந்த பென்சிலின்.

Question 3.
மின்வேதியியலின் முக்கியத்துவத்தை விளக்கு.
விடை:

  • இரும்பு அல்லாத உலோகங்களை உற்பத்தி செய்ய மற்றும் தூய்மைப்படுத்த தேவையான தொழில்நுட்ப செயல்முறைகளை கண்டறிய பயன்படுகிறது.
  • கரிமச்சேர்மங்களை உருவாக்குவதற்கு பயன்படுகிறது.
  • ஒரு குறிப்பிட்ட வேதிவினை நிகழுமா, நிகழாதா என கணிக்கப் பயன்படுகிறது.
  • வாகன ஓட்டிகள் குடிபோதையில் உள்ளதை எத்தனாலின் ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை மூலம் கண்டறிய பயன்படுகிறது.
  • அலுமினியம், டைட்டானியம் போன்ற உலோகங்களை அவற்றின் தாதுவிலிருந்து உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
  • நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் அளவினை குளுக்கோஸ் கண்டறியும் கருவிகளில் நடைபெறும் ஆக்சிஜனேற்ற ஒடுக்கத்தின் மூலம் அளவிட பயன்படுகிறது. Samacheer Kalvi 9th Science Guide Chapter 15 கார்பனும் அவற்றின் சேர்மங்களும்
  • லெட் அமில மின்கலன்கள், லித்தியம் அயனி மின்கலங்கள், எரிபொருள் மின்கலன்கள் ஆகியன தயாரிக்கப் பயன்படுகின்றன.