Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

8th Social Science Guide காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
…………………….. சமூகமானது தனக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் மாற்றங்களை உட்கிரகித்தும் வெளிப்படுத்தியும் நீக்கியும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.
அ) மனித
ஆ) விலங்கு
இ) காடு
ஈ) இயற்கை
விடை:
அ) மனித

Question 2.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
அ) தர்மாம்பாள்
ஆ) முத்துலட்சுமி அம்மையார்
இ) மூவலூர் ராமாமிர்தம்
ஈ) பண்டித ரமாபாய்
விடை:
ஆ) முத்துலட்சுமி அம்மையார்

Question 3.
சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு.
அ) 1827
ஆ) 1828
இ) 1829
ஈ) 1830
விடை:
இ) 1829

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Question 4.
B.M. மலபாரி என்பவர் ஒரு
அ) ஆசிரியர்
ஆ) மருத்துவர்
இ) வழக்கறிஞர்
ஈ) பத்திரிகையாளர்
விடை:
ஈ) பத்திரிகையாளர்

Question 5.
பின்வருவனவற்றில் எவை/எது சீர்திருத்த இயக்கம்(ங்கள்)?
அ) பிரம்ம சமாஜம்
ஆ) பிரார்த்தனை சமாஜம்
இ) ஆரிய சமாஜம்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

Question 6.
பெதுன் பள்ளி ……………….. இல் J.E.D. பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது
அ) 1848
ஆ) 1849
இ) 1850
ஈ) 1851
விடை:
ஆ) 1849

Question 7.
1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?
அ) வுட்ஸ்
ஆ) வெல்பி
இ) ஹண்டர்
ஈ) முட்டிமன்
விடை:
இ) ஹண்டர்

Question 8.
சாரதா குழந்தைத் திருமண மசோதாவானது சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை ………… என நிர்ண யித்தது.
அ) 11
ஆ) 12
இ) 13
ஈ) 14
விடை:
ஈ) 14

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
…………… 1819இல் கிறித்தவ சமயப்பரப்பு குழுக்களால் அமைக்கப்பட்டது.
விடை:
பெண் சிறார் சங்கம்

Question 2.
சிவகங்கையை சேர்ந்த ……………. என்பவர் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாகப் போராடினார்.
விடை:
வேலு நாச்சியார

Question 3.
இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவியவர் ………………..
விடை:
கோபால கிருஷ்ண கோகலே

Question 4.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவர் ……………… ஆவார்.
விடை:
ஈ.வெ.ரா. பெரியார்

Question 5.
கந்துகூரி வீரேசலிங்கம் வெளியிட்ட பத்திரிக்கையின் பெயர் …………….. ஆகும்.
விடை:
விவேகவர்தினி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
ரிக் வேத காலத்தில் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Question 2.
தேவதாசி முறை ஒரு சமூக தீமை.
விடை:
சரி

Question 3.
இந்திய சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ராஜா ராம்மோகன்ராய்.
விடை:
சரி

Question 4.
பெண்களுக்கான 23 சதவீத இட ஒதுக்கீடு என்பது பெண்களின் சமூக அரசியல் நிலையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது.
விடை:
தவறு

Question 5.
1930ஆம் ஆண்டு சாரதா சட்டம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான திருமண வயதை உயர்த்தியது.
விடை:
தவறு

V. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
சரியான இணையை கண்டுபிடி.
அ மகளிர் பல்கலைக்கழகம் – பேராசிரியர் D.K. கார்வே
ஆ நீதிபதி ரானடே – ஆரிய சமாஜம்
இ விதவை மறுமணச் சட்டம் – 1855
ஈ ராணி லட்சுமிபாய் – டெல்லி
விடை:
அ) மகளிர் பல்கலைக்கழகம் – பேராசிரியர் D.K. கார்வே

Question 2.
மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி.
அ) குழந்தை திருமணம்
ஆ) சதி
இ) தேவதாசி முறை
ஈ) விதவை மறுமணம்
விடை:
ஈ) விதவை மறுமணம்

Question 3.
பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்.
i) பேகம் ஹஸ்ரத் மஹால், ராணி லட்சுமிபாய் ஆகியோர் ஆங்கிலேயர் மீது ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
ii) தமிழ்நாட்டின் சிவகங்கையைச் சேர்ந்த வேலுநாச்சியார், பிரிட்டிஷாருக்கு எதிராக வீரமாக போராடினார்.

மேலே கொடுக்கப்பட்ட எந்த வாக்கியம்(ங்கள்) சரியானவை?
அ) i மட்டும்
ஆ) ii மட்டும்
இ) 1 மற்றும் ii
ஈ) இரண்டுமில்லை
விடை:
இ) (i) மற்றும் (ii)

Question 4.
கூற்று : ராஜா ராம்மோகன் ராய் அனைத்து இந்தியர்களாலும் மிகவும் நினைவு கூறப்படுகிறார்.
காரணம் : இந்திய சமுதாயத்தில் இருந்த சதி என்ற தீயபழக்கத்தை ஒழித்தார்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை
ஆ) கூற்று சரியானது. காரணம் தவறு.
இ) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.
ஈ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை .
விடை:
இ) கூற்று சரியானது. காரணம் கூற்றை விளக்குகிறது.

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களின் பெயரினைக் குறிப்பிடுக.
விடை:

 • ராஜா ராம் மோகன்ராய்
 • தயானந்த சரஸ்வதி
 • கேசவ சந்திரசென்
 • ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
 • பண்டித ரமாபாய்
 • டாக்டர் முத்துலட்சுமி
 • ஜோதிராவ் பூலே
 • பெரியார் ஈ.வெ.ரா.
 •  டாக்டர் தர்மாம்பாள்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Question 2.
சமூக தீமைகளில் சிலவற்றைப் பட்டியலிடுக.
விடை:

 • பெண் சிசுக் கொலை
 • பெண் சிசு கருக்கொலை
 • குழந்தைத் திருமணம்
 • சதி
 • தேவதாசி முறை

Question 3.
இடைக்கால இந்தியாவில் குறிப்பிடத்தக்க பெண்கள் யாவர்?
விடை:

 • ரசியா சுல்தானா
 • ராணி துர்காவதி
 • சாந்த் பீவி
 • நூர்ஜஹான்
 • ஜஹனாரா
 • ஜீஜா பாய்
 • மீராபாய்

Question 4.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான பெண்களைக் குறிப்பிடுக.
விடை:

 • வேலு நாச்சியார்
 • பேகம் ஹஸ்ரத் மஹால்
 • ஜான்சிராணி லட்சுமி பாய்

Question 5.
‘சதி’ பற்றி ஒரு குறிப்பு வரைக.
விடை:

 • இந்திய சமூகத்தில் நிலவிய சமூக தீமைகளில் ஒன்று சதி என்பதாகும்.
 • குறிப்பாக இப்பழக்கம் ராஜபுத்திரர்களிடையே காணப்பட்டது.
 • இதன் பொருள் ‘கணவனின் சிதையில் தானாக முன்வந்து விதவைகள் எரித்துக் கொள்ளுதல் ஆகும்.
 • ஆரம்ப காலத்தில் தாமாகவே முன்வந்து செய்து கொண்டனர். ஆனால் பின்னர் உறவினர்களின் வற்புறுத்தலால் சிதையில் அமர்ந்தனர்.

VII. விரிவான விடையளி

Question 1.
சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கினைக் கண்டறியவும்.
விடை:

 • இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் முக்கியப் பங்கினை வகித்தனர்.
 • தொடக்ககால காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் பல்வேறு வகைகளில் முக்கியப் பங்காற்றினர்.
 • சிவகங்கையின் வேலு நாச்சியார் ஆங்கிலேயருக்கு எதிராக வீர தீரமாகப் போரிட்டு சிவகங்கையில் தனது ஆட்சியை மீட்டெடுத்தார்.
 • 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் பேகம் ஹஸ்ரத் மஹால், ஜான்சி ராணி, லட்சுமி பாய் போன்றோர் ஆயுதமேந்திப் போராடினர்.
 • விடுதலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அயல் நாட்டு பொருட்களைப் புறக்கணித்தனர்.
 • ஊர்வலங்களில் கலந்து கொள்வது, சட்டங்களை மீறுதல் மூலம் தடியடி பெற்று சிறைக்குச் சென்றனர்.
 • விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

Question 2.
சமூக தீமைகளை ஒழிப்பதில் சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பை விளக்குக.
விடை:

 • ராஜாராம் மோகன்ராய்:ராஜாராம் மோகன்ராய் சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ஆவார்.
 • இவர் சாதிகளுக்கு அப்பால் சதி எதிர்ப்புப் போராளியானார்.
 • அவருடைய கடுமையான முயற்சியின் காரணமாக 1829இல் சதி எனும் உடன் கட்டை ஏறுதல் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.
 • இவர் குழந்தைத் திருமணம் மற்றும் பெண்சிசுக்கொலை ஆகியவற்றை எதிர்த்தார்.
 • விதவைகள் மறுமணம், பெண் கல்வி மற்றும் பெண்களின் சொத்துரிமை ஆகியவற்றை ஆதரித்தார்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

ஈஸ்வர சந்திர வித்யாசாகர் :
ஈஸ்வர சந்திர வித்யாசாகர் பெண்கல்வி, விதவை மறுமணம் ஆகியவற்றை ஒழிக்கவும், விதவைகள் மறுமணத்தை ஆதரிக்கவும் பலதார மணத்தை ஒழிப்பதற்காகவும் வங்காளத்தில் ஒரு இயக்கத்தை மேற்கொண்டார்.

இவரது தீவிர முயற்சியின் விளைவாக 1856இல் இந்து விதவை மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது.

கந்து கூரி வீரேசலிங்கம் :-

 • கந்து கூரி வீரேசலிங்கம் மகளிர் விடுதலைக்காகப் போராடிய போராளி ஆவார்.
 • அவர் 1874இல் தனது முதல் பெண்கள் பள்ளியைத் திறந்தார்.
 • விதவைகள் மறுமணம் மற்றும் பெண் கல்வி ஆகியவற்றிற்காகப் போராடினார்.

எம்.ஜி. ரானடே :

 • எம்.ஜி. ரானடே விதவை மறுமண சங்கத்தில் சேர்ந்து, விதவை மறுமணம் மற்றும் பெண்கல்வி ஆகியவற்றை ஊக்குவித்தார்.
 • இவர் குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.
 • இவர் தொடங்கிய இந்திய தேசிய சமூக மாநாடு சமூக சீர்திருத்தத்தின் சிறந்த நிறுவனமாக உருவானது.

பி.எம். மலபாரி :

 • பி.எம். மலபாரி குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதற்காக ஒரு இயக்கத்தைத் தொடங்கினார்.
 • துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார்.

கோபால கிருஷ்ண கோகலே :

 • இவர் இந்திய ஊழியர் சங்கத்தைத் தொடங்கினார்.
 • அது தொடக்கக்கல்வி, பெண் கல்வி மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் மேம்பாடு ஆகியவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது.

பெரியார். ஈ.வெ.ரா. :

 • பெரியார் பெண்கல்வி, விதவை மறுமணம் மற்றும் கலப்புத் திருமணம் ஆகியவற்றை ஆதரித்தார்.
 • குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார்.

பெண் சீர்திருத்தவாதிகள் :
பண்டித ரமாபாய், ருக்மா பாய், தாராபாய் ஷிண்டே, அன்னி பெசன்ட், தர்மாம்பாள், முத்துலட்சுமி அம்மையார், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றிற்காகப் பெருந் தொண்டாற்றிய பெண்மணிகளாவர்.

Question 3.
சீர்திருத்த இயக்கத்தின் தாக்கம் குறித்து விரிவாக விடையளிக்கவும்.
விடை:

 • பெண்கள் விடுதலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
 • இது மக்களிடையே தேசிய விழிப்புணர்வை உருவாக்கியது.
 • தியாகம், சேவை மற்றும் பகுதிதறிவு உணர்வு ஆகியவற்றை உருவாக்கியது.
 • சதி மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவை சட்ட விரோதமாக்கப்பட்டது.
 • விதவைகள் மறுமணம் செய்ய அனுமதிக்கப் பட்டனர்.
 • திருமணம், தத்து எடுத்தல், வாரிசு நியமனம் போன்றவற்றில் பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன கல்வி, அரசியல், மருத்துவம், கலாச்சாரம், சேவைத் துறைகள், அறிவியில் மற்றும் தொழில் நுட்பம் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பங்கேற்கின்றனர்.
 • பெண் விடுதலை மற்றும் பெண் மேலாண்மை ஆகியவை நடைமுறை சாத்தியமாகியுள்ளது.

VIII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு

Question 1.
பெண்களின் வளர்ச்சியில் சமூக சீர்திருத்தவாதிகளின் பங்களிப்பு குறித்து தகவல் தொகுப்பைத் தயாரிக்கவும். (ஏதேனும் ஒரு சீர்திருத்தவாதியைத் தேர்வு செய்து அவ தொடர்பான தகவல்களைச் சேகரிக்கவும்).

Question 2.
குழு விவாதம்: விடுதலை இயக்கத்தில் பெண்களின் பங்கேற்பு.

8th Social Science Guide காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
1854ஆம் ஆண்டின் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது
அ) முதியோர் கல்வி
ஆ) ஆரம்பக் கல்வி
இ) பெண் கல்வி
ஈ) மேனாட்டுக் கல்வி
விடை:
இ) பெண் கல்வி

Question 2.
இந்தியப் பெண்கள் …………… களில் பல்கலைக் கழகங்களில் நுழையத் தொடங்கினர்.
அ) 1880
ஆ) 1870
இ) 1890
ஈ) 1860
விடை:
அ) 1880

Question 3.
1916இல் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட இடம் ……………..
அ) சென்னை
ஆ) மும்பை
இ) கொல்கத்தா
ஈ) டெல்லி
விடை:
ஈ) டெல்லி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Question 4.
அக்பர் ஆண்க ளுக்கான திருமண வயது ……………….. என நிர்ணயித்தார்.
அ) 16
ஆ) 17
இ) 18
ஈ) 21
விடை:
அ) 16

Question 5.
1872இல் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு திருமணச் சட்டம் பெண்களின் திருமண வயது ………….. என நிர்ண யித்தது.
அ) 12
ஆ) 14
இ) 15
ஈ) 16
விடை:
ஆ) 14

Question 6.
1890களில் D.K. கார்வே என்பவர் ஏராளமான பெண் பள்ளிகளை நிறுவிய இடம் ……………………
அ) டெல்லி
ஆ) பனாரஸ்
இ) பூனா
ஈ) ஹைதராபாத்
விடை:
இ) பூனா

Question 7.
மதராஸ் தேவதாசி சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
அ) 1947
ஆ) 1948
இ) 1949
ஈ) 1950
விடை:
அ) 1947

Question 8.
சாரதா சதன் என்பது ……………… ஆகும்.
அ) கைவிடப்பட்டவர்களின் இல்லம்
ஆ) நோயாளிகளின் இல்லம்
இ) அனாதைகள் இல்லம்
ஈ) கற்றல் இல்லம்
விடை:
ஈ) கற்றல் இல்லம்

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

Question 1.
டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தமிழக சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட ஆண்டு ………….
விடை:
1929

Question 2.
டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு மசோதாவை சென்னை 1930 சட்டமன்றத்தில் ………………. ஆண்டு முன்மொழிந்தார்.
விடை:
1930

Question 3.
இந்திய சமுதாயத்தில் ‘சதி’ எனும் பழக்கம் குறிப்பாக ……………. களிடையே நிலவியது.
விடை:
ராஜபுத்திரர்

Question 4.
வீரேசலிங்கம் தனது முதல் பெண்கள் பள்ளியை ……………….. இல் திறந்தார்.
விடை:
1874

Question 5.
இந்திய அரசியலமைப்புப் பிரிவு ………………. சம வேலைக்கு சம ஊதியம் என உத்திரவாதம் அளிக்கிறது.
விடை:
14

Question 6.
தேவதாசி முறை சட்டத்தின் மூலம் ஒழிக்கப்பட்ட ஆண்டு ……………….
விடை:
1947

III. சரியா / தவறா என்று குறிப்பிடுக

Question 1.
அக்பர் சதிமுறையை ஒழிக்க முயன்றார்.
விடை:
சரி

Question 2.
அக்பர் குழந்தைத் திருமணத்தைத் தடுத்தார்.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Question 3.
ஜெகன் மோகன் ராய் என்பவர் ராஜாராம் மோகன்ராயின் மைத்துனர் ஆவார்.
விடை:
தவறு

Question 4.
ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் சகோதரர் ஒரு விதவையை திருமணம் செய்து கொண்டார்.
விடை:
தவறு

Question 5.
டாக்டர் தர்மாம்பாள் ராஜாராம் மோகன்ராயின் கருத்துக்களால் மிகவும் கவரப்பட்டார்.
விடை:
தவறு

IV. சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
சரியான இணையைக் கண்டுபிடி.
அ) சாரதா சதன் – கற்றல் இல்லம்
ஆ) வீரேசலிங்கம் – கிருபா சதன்
இ) வேலுநாச்சியார் – காளையார் கோவில்
ஈ) இராஜா ராம் மோகன்ராய் – ஆரிய சமாஜம்
விடை:
அ) சாரதா சதன் – கற்றல் இல்லம் வரலாறு

Question 2.
மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி.
அ) ராஜாராம் மோகன்ராய்
ஆ) எம்.ஜி. ரானடே
இ) பாலகங்காதர திலகர்
ஈ) டாக்டர் முத்துலட்சுமி
விடை:
இ) பாலகங்காதர திலகர்

Question 3.
பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்.
i) வங்காள ஒழங்கு முறைச் சட்டம் XXI, 1804 பெண் சிசுக் கொலை சட்ட விரோதமானது என்று அறிவித்தது.
ii) விதி முறை XVII, 1829 சதி எனும் பழக்கம் சட்ட விரோதமானது என அறிவித்தது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள எந்த வாக்கியம்(ங்கள்) சரியானவை?
அ) i மட்டும்
ஆ) ii மட்டும்
இ) i மற்றும் ii
ஈ) இரண்டுமில்லை
விடை:
இ) (i) மற்றும் (ii)

Question 4.
கூற்று : இந்திய சமுதாயத்தில் ‘சதி’ எனும் பழக்கம் குறிப்பாக இராஜ புத்திரர்களிடையே நிலவியது.
காரணம் : முக்கியமாக இது மக்கள் தொகையைக் குறைப்பதற்காக செயல்படுத்தப்பட்டது.

அ) கூற்று மற்றும் காரணம் சரியானவை. ஆனால் காரணம் கூற்றினை சரியாக விளக்கவில்லை.
ஆ) கூற்றும் காரணமும் தவறு.
இ) கூற்று சரி, காரணம் தவறானது.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரியானவை. காரணம் கூற்றுக்கு பொருத்தமானதாகும்
விடை:
இ) கூற்று சரி, காரணம் தவறானது

Question 5.
கூற்று : டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் 1927ஆம் ஆண்டு சென்னை சட்டப் பேரவைக்கு (Assembly) நியமிக்கப்பட்டார்.
காரணம் : தேவதாசி முறைக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டார்.

அ) கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாகும்
ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் பொருத்தமானதன்று.
இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. காரணம் சரி
விடை:
ஈ) கூற்று தவறு. காரணம் சரி

V. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

Question 1.
ஜவ்ஹார் பற்றி சிறு குறிப்பு வரைக.
விடை:
போரில் தோற்கடிக்கப்பட்ட இராஜபுத்திர போர் வீரர்களின் மனைவிகள் மற்றும் மகள்கள் அந்நியர்களால் தாங்கள் கைப்பற்றப்படுவதையும், அவமதிக்கப்படுவதையும் தவிர்ப்பதற்காக கூட்டு தன்னார்வ தற்கொலை செய்து கொண்டனர். இதுவே ஜவ்ஹார் என அழைக்கப்பட்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை

Question 2.
தேவதாசி முறை பற்றி உமக்கு யாது தெரியும்?
விடை:

 • தேவதாசி என்ற வார்த்தையிைன் பொருள் கடவுளின் சேவகர் என்பதாகும்.
 • இவர்கள் பெற்றோரால் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்படும் பெண் குழந்தைகளாவர்.
 • இவர்கள் கோவிலைக் கவனித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், பரத நாட்டியம் மற்றும் பிற பாரம்பரிய இந்தியக் கலைகளையும் கற்றுக் கொண்டனர்.
 • சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்த அவர்கள், பிற் காலங்களில் மோசமாக நடத்தப்பட்டு அவமானப் படுத்தப்பட்டனர்.
 • மேலும் தேவதாசிகள் தங்கள் கண்ணியம், பெருமை உணர்வு, சுய மரியாதை மற்றும் கௌரவம் ஆகியவற்றை இழந்தனர்.
 • டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி முறையை ஒழிக்க அரும்பாடுபட்டு வெற்றியும் பெற்றார்.

இராஜா ராம் மோகன்ராயின் சேவைகளை வெளிக் கொணர்.
இராஜா ராம் மோகன்ராய் சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் பழக்கத்திற்கு எதிராகப் போராடினார். குழந்தைத் திருமணம் மற்றும் பெண் சிசுக்கொலை ஆகியவற்றை எதிர்த்தார். விதவை மறுமணம், பெண் கல்வி, பெண்களின் சொத்துரிமை ஆகியவற்றை ஆதரித்தார்.

சுதந்திர இந்தியாவில் பெண்களின் நிலை பற்றி கூறு.
பெண்கள் தற்போது கல்வி, அரசியல், மருத்துவம், கலாச்சாரம், சேவைத்துறைகள், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் உட்பட அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கின்றனர். சம வாய்ப்பு மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் என உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு 33 சதவீத இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களின் நிலையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளிக்கவும்

Question 1.
பண்டைய காலம் மற்றும் இடைக்காலத்தில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது?
விடை:
பண்டைய காலம்:
சிந்துவெளி மக்கள் தாய் கடவுளை வணங்கினர். பெண்கள் நன்கு மதிக்கப்பட்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.

ரிக் வேத காலத்தில் மனைவியின் நிலை போற்றுவதற்குரியதாக இருந்தது. பெண்கள் நன்கு மதிக்கப்பட்டனர்.

வேத காலத்தில் பெண்களின் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டன.
அவர்களில் சமூக மற்றும் சமய சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது.
சதி எனும் உடன் கட்டை ஏறும் பழக்கம் நிலவியது.
தந்தைவழி முறை கடுமையானதாக மாறியது.
பெண்கள் வேதாகமங்களைப் படிக்க அனுமதிக்கப்படவில்லை.

இடைக்காலம்:
இடைக்காலத்தில் பெண்களின் நிலை மேலும் மோசமடைந்தது.
சதி, குழந்தைத் திருமணம், பெண் சிசுக் கொலை, பர்தா முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற தீமைகள் பரவி இருந்தன.
விதவை திருமணம் அரிதாகக் காணப்பட்டது.
தேவதாசி முறை பழக்கத்தில் இருந்தது.
முஸ்லீம்கள் பர்தா அணியும் பழக்கம் இருந்தது.
பெண் கல்விக்கு சிறிதளவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
பெண்களுக்கென தனியாக கல்வி நிறுவனங்கள் இல்லை.
பொதுவாக பெண்களின் நிலை மோசமானதாகவே இருந்தது.
செல்வந்தர்கள் தங்கள் மகள்களுக்கு வீட்டிலேயே பாடம் கற்பிக்க ஆசிரியர்களை நியமித்தனர்.

Question 2.
ஆங்கிலேயர் காலத்தில் பெண்கள் நிலை எவ்வாறு இருந்தது?
விடை:
தேசிய விழிப்புணர்வின் காரணமாக சமூக தீமைகள் மற்றும் காலாவதியான பழக்க வழக்கங்களுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது.
ஏராளமான தனி நபர்கள், சீர்திருத்த சங்கங்கள் மற்றும் சமய அமைப்புகள் பெண் கல்வியைப் பரப்ப கடுமையாக உழைத்தன.

விதவை மறுமணத்தை ஊக்குவித்தல், குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல், பெண்களை பர்தா அணியும் முறையிலிருந்து வெளியே கொண்டு வருதல், ஒருதார மணத்தை நடைமுறைப்படுத்துதல் மற்றும் நடுத்தர வர்க்கப் பெண்கள் தொழில்கள் அல்லது வேலை வாய்ப்பை மேற்கொள்ள உதவுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டனர்.

ஆரம்பத்தில் ஆண் கல்வியை விட பெண்கள் கல்வியறிவு குறைவாகவே இருந்தது.

1819ஆம் ஆண்டு கிறித்துவ அமைப்புகள் கல்கத்தாவில் முதன் முதலில் பெண் சிறார் சங்கத்தை அமைத்தன.

1849இல் பெதுன் பள்ளி நிறுவப்பட்டது.

சார்லஸ் வுட் கல்வி அறிக்கை பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.

இந்திய கல்விக்குழு (ஹண்டர் குழு) சிறுமிகளுக்கான தொடக்கப் பள்ளிகளையும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையும் தொடங்க பரிந்துரைத்தது.

1880களில் இந்தியப் பெண்கள் பல்கலைக்கழகங்களில் நுழையத் தொடங்கினர்.

பெண்கள் ஆசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும் பயிற்சி பெற்றனர்.

அவர்கள் புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும் எழுதத் தொடங்கினர்.

பெண்களுக்கென பல பள்ளிகள் தொடங்கப்பட்டன.

1916ல் D.K. கார்வே என்பவரால் இந்திய மகளிர் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இது பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தது.

டெல்லியில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.

இவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெண்களின் நிலை சிறப்பாக அமைந்திருந்தது.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 8 காலங்கள்தோறும் இந்தியப் பெண்களின் நிலை 2