Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

8th Social Science Guide இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பின்வருவனவற்றில் மக்களின் எந்த செயல்பாடுகள் கைவினைகளில் சாராதவை?
அ) கல்லிருந்து சிலையைச் செதுக்குதல்
ஆ) கண்ணாடி வளையல் உருவாக்குதல்
இ) பட்டு சேலை நெய்தல்
ஈ) இரும்பை உருக்குதல்
விடை:
ஈ) இரும்பை உருக்குதல்

Question 2.
____________ தொழில் இந்தியாவின் பழமையான தொழிலாகும்.
அ) நெசவு
ஆ) எஃகு
இ) மின்சக்தி
ஈ) உரங்கள்
விடை:
அ) நெசவு

Question 3.
கம்பளி மற்றும் தோல் தொழிற்சாலைகள் காணப்படும் முக்கிய இடம் __________
அ) பம்பாய்
ஆ) அகமதாபாத்
இ) கான்பூர்
ஈ) டாக்கா
விடை:
இ) கான்பூர்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 4.
இந்தியாவின் முதல், மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களின் முக்கிய நோக்கமாக இருந்தது என்ன ?
அ) மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்
ஆ) எழுத்தறிவின்மையைக் குறைத்தல்
இ) வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்
ஈ) பெண்களுக்கு அதிகாரமளித்தல்
விடை:
இ) வலுவான தொழிற்துறை தளத்தை உருவாக்குதல்

Question 5.
இந்தியாவில் தொழில்மயம் அழிதலுக்கு காரணம் அல்லாதது எது?
அ) ஆட்சியாளர்களின் ஆதரவின்மை
ஆ) இயந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் போட்டி
இ) இந்தியாவின் தொழிற்துறை கொள்கை
ஈ) பிரிட்டிஷாரின் வர்த்தக கொள்கை
விடை:
இ) இந்தியாவின் தொழிற்துறை கொள்கை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
……………………… இந்திய மக்களின் வாழ்க்கையில் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது.
விடை:
கைவினைப் பொருட்கள்

Question 2.
தொழிற்புரட்சி நடைபெற்ற இடம் ………………..
விடை:
இங்கிலாந்து

Question 3.
அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு …………………
விடை:
1839

Question 4.
கொல்கத்தா அருகிலுள்ள ஹூக்ளி பள்ளத்தாக்கில் …………….. இடத்தில் சணல் தொழிலகம் ஆரம்பிக்கப்பட்டது.
விடை:
ரிஷ்ரா

Question 5.
……………….. ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே தூரத்தை குறைத்தது.
விடை:
சூயஸ் கால்வாய்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
இந்தியா பருத்தி மற்றும் பட்டுத் துணிகளுக்கு புகழ்வாய்ந்தது.
விடை:
சரி

Question 2.
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் இரயில்வே அறிமுகப்படுத்தப்பட்டது.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 3.
நவீன முறையில் முதன்முதலாக இரும்புஜாம்ஷெட்பூரில் உற்பத்தி செய்யப்பட்டது.
விடை:
தவறு

Question 4.
1948 ஆம் ஆண்டு தொழிலக கொள்கையானது கலப்பு பொருளாதாரத்தை கொண்டு வந்தது.
விடை:
தவறு

Question 5.
பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம் தீவிர வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிக்குச் சான்றாக உள்ளது.
விடை:
தவறு

V. சரியான கூற்றை கண்டுபிடி.

Question 1.
பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்துக் குறியிடவும் :
i) எட்வர்ட் பெய்ன்ஸ் கருத்துப்படி பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இங்கிலாந்து’.
ii) இயந்திரமயமாக்கப்பட்ட தொழிற்சாலைக்கு முன்னால் இந்தியாவில் கிராம கைவினை தொழில் இரண்டாவது பெரிய தொழிற்சாலையாக அமைந்தது.
iii) சௌராஷ்டிரா தகர தொழிற்சாலைக்கு பெயர் பெற்றது.
iv) சூயஸ் கால்வாய் கட்டப்பட்டதால் இந்தியாவில் பிரிட்டிஷாரின் பொருட்கள் மலிவாக கிடைக்க வழிவகை உருவானது.

அ) i மற்றும் ii சரி
ஆ) ii மற்றும் iv சரி
இ) iii மற்றும் iv சரி
ஈ) i, ii மற்றும் iii சரி
விடை:
ஆ) ii மற்றும் iv சரி

Question 2.
கூற்று : இந்திய கைவினைஞர்கள் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்கத்தில் நலிவுற்றனர்.
காரணம் : பிரிட்டிஷார் இந்தியாவை தனது மூலப்பொருள் தயாரிப்பாளராகவும் முடிவுற்ற பொருட்களுக்கான சந்தையாகவும் கருதினர்.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம்
ஆ) கூற்று சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
இ) கூற்றும் காரணமும் சரி ,
ஈ) கூற்றும் காரணமும் தவறானவை
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம்

Question 3.
பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தாதது ஒன்று எது?
அ) பெர்னியர் – ஷாஜகான்
ஆ) பருத்தி ஆலை – அகமதாபாத்
இ) TISCO – ஜாம்ஜெட்பூர்
ஈ) பொருளாதார தாரளமயமாக்கல் – 1980
விடை:
ஈ) பொருளாதார தாராளமயமாக்கல் – 1980

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி.

Question 1.
இந்தியாவின் பாரம்பரிய கைவினை பொருட்களின் தொழிற்சாலைகள் யாவை?
விடை:
இந்தியாவின் பாரம்பரிய கைவினை பொருட்கள் தொழிற்சாலைகள் :

  • நெசவு
  • மரவேலை
  • தந்தவேலை
  • மதிப்புமிக்க கற்களை வெட்டுதல்
  • தோல்
  • வாசனை மரங்களில் வேலைபாடுகள் செய்தல்
  • உலோக வேலை
  • நகைகள் செய்தல்

Question 2.
செல்வச் சுரண்டல் கோட்பாடு பற்றி எழுதுக.
விடை:
செல்வச் சுரண்டல் கோட்பாடு :
தாதாபாய் நௌரோஜி. “ஆங்கிலேயர்கள் இந்தியாவின் வளங்களை சுரண்டுவதும் இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்பதை முதலில் ஏற்றுக் கொண்டவர்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 3.
பெரிய அளவில் நெசவு உற்பத்திக்கு பயன்படுத்திய கண்டுபிடிப்புகளின் பெயர்களை எழுது.
விடை:
பெரிய அளவில் நெசவு உற்பத்திக்கு பயன்படுத்திய கண்டுபிடிப்புகள் :

  • காட்டன் ஜின்
  • பறக்கும் எறிநாடா
  • நூற்கும் ஜென்னி
  • நீராவி

Question 4.
இயந்திரம் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) பற்றி சிறுகுறிப்பு எழுதுக.
விடை:
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) :
இந்தியாவில் உள்ள ஒரு வணிக சங்கம். CII ஓர் அரசு சாரா, இலாப நோக்கமற்ற, தொழிற்துறை வழி நடத்துதல் மற்றும் தொழிற்துறையை நிர்வாகிக்கும் அமைப்பு.

1985ல் நிறுவப்பட்டது. தனியார் மற்றும் பொதுத்துறைகளை உள்ளடக்கிய SME மற்றும் MNC (சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள்) ஆகியவற்றிலிருந்து சுமார் 9000 உறுப்பினர்கள் உள்ளனர்.

Question 5.
தொழில்மயம் அழிதல் என்றால் என்ன?
விடை:
தொழில்மயம் அழிதல் :

  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியத் தொழிற்துறையானது வீழ்ச்சியின் காலத்தைச் சந்தித்தது.
  • பாரம்பரிய இந்திய கைவினைத் தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்பாடு மற்றும் வருமானத்தின் வீழ்ச்சி ஆகியன தொழில்மயமழிதல் எனப்படுகிறது.

VII. விரிவான விடையளி

Question 1.
இந்தியத் தொழில்மயம் அழிதலுக்கு பிரிட்டிஷாரின் வர்த்தகக் கொள்கை எவ்வாறு காரணமானது?
விடை:
இந்திய தொழில்மயம் அழிதலுக்கு காரணமான பிரிட்டிஷாரின் வர்த்தகக் கொள்கை :
இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட அனைத்து கொள்கைகளும் இந்திய உள்நாட்டு தொழில்களின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

கிழக்கிந்தியக் கம்பெனியால் பின்பற்றப்பட்ட தடையில்லா வாணிபக் கொள்கை, இந்திய வர்த்தகர்கள் தங்கள் கொருட்களை சந்தை விலைக்கு குறைவாக விற்க கட்டாயப்படுத்தியது. பல கைவினைஞர்கள் தங்கள் மூதாதையர்களிடம் இருந்து கற்றுக் கொண்ட கைவினைத் திறமைகளை கைவிடவும் கட்டாயப்படுத்தியது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் மலிவான விலையில் இந்திய தயாரிப்பு பொருட்களை பெருமளவுக்கு வாங்கி மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் லாபத்திற்கு விற்க வேண்டும் என்பதாகும். இது இந்திய பாரம்பரிய தொழில்களை வெகுவாக பாதித்தது.

இந்தியாவின் வர்த்தக நலன்களுக்கெதிரான பாதுகாப்பு கட்டணங்களின் கொள்கையை ஆங்கிலேயர்கள் பின்பற்றினர். பிரிட்டனில் இந்தியப் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்பட்டன. இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட ஆங்கிலப் பொருட்களுக்கு பெயரளவில் வரி விதிக்கப்பட்டன.

Question 2.
தோட்டத் தொழில்கள் பற்றி விரிவாக எழுதுக.
விடை:
தோட்டத் தொழில்கள் :
தோட்டத் தொழில் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டது. தோட்டத் தொழில் முதன் முதலில் ஐரோப்பியர்களை ஈர்த்தது. பெரிய அளவில் வேலைகளை வழங்க முடிந்தது. பிரிட்டிஷ் சமுதாயத்தால் அதிகரித்து வரும் தேநீர், காபி மற்றும் கருநீலச் சாயம் (இண்டிகோ) ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது.

அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் 1839 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதே நேரத்தில் காபி தோட்டமும் தொடங்கப்பட்டது. தேயிலைத் தோட்டம் கிழக்கிந்தியப் பகுதிகளில் மிக முக்கியமான தொழிலாக இருந்தது போல காபி தோட்டமும் தென்னிந்தியாவின் நடவடிக்கைகளிள் மையமாக மாறியது.

மூன்றாவது முக்கிய தோட்டத் தொழிலான சணல் பல தொழிற்சாலைகள் உருவாக வழிவகுத்தது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஊழியர்கள் பலரால் இந்தத் தொழில்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன.

Question 3.
1991 ஆம் ஆண்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு தொழிற்துறையின் வளர்ச்சியை விளக்குக.
விடை:
1991 சீர்திருத்தங்களுக்குப் பிறகு தொழிற்துறையின் வளர்ச்சி :

  • 1991 ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. தொழிற் துறையின் செயல்திறனை மேம்படுத்த இந்தியா ஒரு முக்கியமான முடிவை எடுத்தது.
  • 10வது மற்றும் 11வது ஐந்தாண்டுத் திட்டங்கள் தொழிற்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன.
  • தொழிற்துறை உரிமத்தை ஒழித்தல், விலைக்கட்டுப்பாடுகளை நீக்குதல், சிறு தொழில்களுக்கான கொள்கைகளை நீர்த்து போகச் செய்தல் மற்றும் ஏகபோக சட்டத்தின் மாயயை ஒழித்தல் ஆகியவை இந்தியத் தொழிற்துறை செழிக்க உதவியது.
  • புதிய பொருளாதார கொள்கை வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்கிறது.

VIII. உயர் சிந்தனை வினா

எவ்வாறு கைவினைப்பொருட்களும், இயந்திர தயாரிப்புப் பொருட்களும் வேறுபடுகின்றன.
Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 2

X. செயல் திட்டம் மற்றும் செயல்பாடுகள்

Question 1.
உனது மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் பெயர்களை எழுதி வேளாண்மை தொழிற்சாலை மற்றும் வனப்பொருட்கள் தொழிற்சாலை ஆகியவைகளை வகைப்படுத்தவும்.
விடை:
தமிழக தொழிலகங்கள்
Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 3

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 2.
தொழிலக முன்னேற்றத்தால் காற்று, நீர், நிலம் ஆகியவை எவ்வாறு மாசுபடுகிறது என்பதை திட்ட செயல்முறை மூலம் தயாரிக்கவும். (மாணவர்களுக்கானது)

Question 3.
விளக்க காட்சியின் மூலம் இந்தியாவில் தொழிலக வளர்ச்சியினால் ஏற்படும் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்தவும். (மாணவர்களுக்கானது)

8th Social Science Guide இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
……………….. களின் காலகட்டத்தை தொழிற்துறையின் மீட்பு காலமாகக் கருதலாம்.
அ) 1960
ஆ) 1970
இ) 1980
ஈ) 1990
விடை:
இ) 1980

Question 2.
……………….. ஆம் ஆண்டில் ரயில்வேயின் நீளம் 2573 கி.மீ
அ) 1861
ஆ) 1886
இ) 1907
ஈ) 1914
விடை:
அ) 1861

Question 3.
………………. காரணமாக பருத்தி ஆலைகள் அதிகரித்தன.
அ) உப்பு சத்தியாக்கிரகம்
ஆ) அஹிம்சை இயக்கம்
இ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
ஈ) சுதேசி இயக்கம்
விடை:
ஈ) சுதேசி இயக்கம்

Question 4.
முதல் முறையாக நவீன முறையில் எஃகு தயாரிக்கப்பட்ட இடம் …………….
அ) ஜாம்ஷெட்பூர்
ஆ) குல்டி
இ) பிலாய்
ஈ) டாடாநகர்
விடை:
ஆ) குல்டி

Question 5.
………………………. ஆலைகள் பிரிட்டிஷ் முதலாளிகளுக்கு சொந்தமானவையாக இருந்தன.
அ) சணல்
ஆ) பருத்தி
இ) நெசவு
ஈ) அரிசி
விடை:
அ) சணல்

Question 6.
……………………… நடுப்பகுதியில் இந்தியாவில் தொழில்மயமாக்கலின் செயல்பாடு தொடங்கியது.
அ) 18ம் நூற்றாண்டின்
ஆ) 17ம் நூற்றாண்டின்
இ) 19ம் நூற்றாண்டின்
ஈ) 16ம் நூற்றாண்டின்
விடை:
இ) 19ம் நூற்றாண்டின்

Question 7.
…………………….. ஆட்சி இந்தியாவை தங்கள் தயாரிப்பு பொருட்களுக்கான சந்தையாக மாற்றியது
அ) பிரிட்டிஷ்
ஆ) பிரெஞ்சு
இ) ஜப்பானிய
ஈ) சீன
விடை:
அ) பிரிட்டிஷ்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
மணி தயாரிக்கப்படும் உலோகமான …………. சௌராஷ்டிரா பெயர் பெற்றது
விடை:
வெண்கலம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 2.
இந்தியாவின் பழமையான தொழில் ………………….. தொழிலாகும்
விடை:
நெசவு

Question 3.
கிழக்கிந்தியக் கம்பெனியால் பின்பற்றப்பட்ட கொள்கை ………. கொள்கை
விடை:
தடையில்லா வாணிபக்

Question 4.
இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட ஆங்கிலேய பொருட்களுக்கு ………………. மட்டுமே வரி விதிக்கப்பட்டன.
விடை:
பெயரளவில்

Question 5.
19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியத் தொழிற்துறையானது ……………… ச் சந்தித்தது.
விடை:
வீழ்ச்சி

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 4

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

Question 1.
மூன்றாவது முக்கிய தோட்டத் தொழிலான சணல் பல தொழிற்சாலைகள் உருவாக வழிவகுத்தது.
விடை:
சரி

Question 2.
பருத்தி ஆலைகள் பம்பாய் மற்றும் அகமதாபாத்தில் ஏற்படுத்தப்பட்டன.
விடை:
சரி

Question 3.
சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இங்கிலாந்துக்குமான தூரத்தைக் குறைத்தது
விடை:
தவறு

Question 4.
இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு ஓர் அரசு சார்பு சங்கம்
விடை:
தவறு

Question 5.
2001 ஆம் ஆண்டு பொருளாதார தாராளமயமாக்கல் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது.
விடை:
தவறு

V. சரியான கூற்றை கண்டுபிடி.

Question 1.
பின்வருவனவற்றில் சரியானவைகளை தேர்ந்தெடுத்து குறியிடவும் :
i) இந்தியாவின் கைவினைப் பொருட்கள் ஒரு சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளன.
ii) கைவினைப் பொருட்கள் இந்திய மக்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக இருந்தன.
iii) இந்தியக் கிராமங்களில் கைவினைத் தொழில் முதல் பெரிய வேலைவாய்ப்பாக இருந்தது.
iv) மஸ்லின் ஆடைகளுக்கு டாக்கா புகழ்பெற்றது.

அ) i மற்றும் ii சரி
ஆ) ii மற்றும் iii சரி
இ) i, ii மற்றும் iv சரி
ஈ) i, iii மற்றும் iv சரி
விடை:
ஈ) i, ii மற்றும் iv சரி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 2.
கூற்று : தோட்டத் தொழில் ஆரம்பத்திலேயே தொடங்கப்பட்டது.
காரணம் : தோட்டத் தொழில் பெரிய அளவில் வேலைகளை வழங்க முடிந்தது மேலும் அதிகரித்து வரும் தேநீர், காபி ஆகியவற்றின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம்.
ஆ) கூற்று சரி, ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
இ) கூற்றும் காரணமும் சரி.
ஈ) கூற்றும் காரணமும் தவறு.
விடை:
அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான விளக்கம்

Question 3.
பின்வருவனவற்றுள் சரியாகப் பொருந்தாதது எது?
அ) பெர்னியர் – ஷாஜஹான்
ஆ) டவேர்னியர் – பிரெஞ்சு நாட்டு பயணி
இ) பாலிகன்ஜ் – முதல் காகித ஆலை
ஈ) நௌரோஜி – இரும்பு மற்றும் எஃகு
விடை:
ஈ) நௌரோஜி – இரும்பு மற்றும் எஃகு

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
உலகப் புகழ் பெற்ற “டாக்கா மஸ்லின்” குறித்து நீவிர் அறிந்ததென்ன?
விடை:
டாக்கா மஸ்லின் :

  • கி.மு. 2000 ஆண்டுகள் பழமையான எகிப்திய கல்லறைகளில் உள்ள மம்மிகள் மிகச் சிறந்த தரம் வாய்ந்த இந்திய மஸ்லின் ஆடைகள் கொண்டு சுற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • 50 மீட்டர் அளவு கொண்ட மெல்லிய இந்த மஸ்லின் துணியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடாலம்.

Question 2.
தொழிலகங்களை வகைப்படுத்துக.
விடை:
தொழிலக வகைப்பாடு :

  • மூலப்பொருட்களின் அடிப்படை – வேளாண் அடிப்படை – கனிம அடிப்படை
  • பங்களிப்பின் அடிப்படை – அடிப்படை தொழில்கள் – முக்கிய தொழில்கள்
  • தொழில் உரிமத்தின் அடிப்படை – பொதுத்துறை – தனியார் துறை – கூட்டுறவுத் துறை

Question 3.
‘நாம் தற்சார்பை அடைந்துள்ளோம்’ – நிறுவுக.
விடை:
தற்சார்புடைமை :

  • தற்சார்பு இலக்கை அடைந்திருப்பது தொழிற்துறை வளர்ச்சியின் மற்றொரு சாதகமான அம்சமாகும்.
  • இயந்திரங்கள், ஆலைகள் மற்றும் இதர தளவாடங்கள் உற்பத்தியில் நாம் தற்சார்பினை அடைந்துள்ளோம். தொழிற்துறை மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தேவையான தளவாடங்களின் பெரும்பகுதி இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

Question 4.
1950 – 1965 காலகட்டத்தில் இந்தியாவின் தொழில் வளர்ச்சி குறித்து எழுதுக.
விடை:
தொழில்துறை வளர்ச்சி (1950 – 1965) :
இந்த காலகட்டத்தில் பெரும்பான்மையான நுகர்வோர் பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டன. தொழிற்துறை பலவீனமான உள்கட்டமைப்புடன் வளர்ச்சியடையாமல் இருந்தது.

மலதனம் பொருட்களின் வளர்ச்சியில் இக்காலகட்டம் கவனம் செலுத்தியது. இதன் விளைவாக உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஒரு துரிதமான வளர்ச்சியைக் கண்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி

Question 5.
நவீன தொழிலகங்களின் தொடக்கம் குறித்து சிறுகுறிப்பு வரைக.
விடை:
நவீன தொழிலகங்களின் தொடக்கம் :

  • நவீன தொழிலகங்களின் தொடக்கம் முக்கியமாக சணல், பருத்தி, எஃகு தொழில்களின் வளர்ச்சியுடன் தொடர்புடையது.
  • நிலக்கரி சுரங்கத் தொழில் வளர்ச்சி குறிப்பிட்ட அளவில்தான் இருந்தது.
  • ரயில்வே மற்றும் சாலைகளின் வளர்ச்சி வேகப்படுத்தப்பட்ட பின் தொழில் மயமாக்கல் தொடங்கியது.
  • உலகப்போர்களுக்குப்பின் இரசாயனம், இரும்பு மற்றும் எஃகு சர்க்கரை, சிமெண்ட், கண்ணாடி மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்ற தொழில்கள் உத்வேகம் பெற்றன.

VII. பின்வருவனவற்றிற்கு விரிவான விடையளி

Question 1.
இந்தியாவில் பிரிட்டிஷாரின் வெற்றியானது எவ்வாறு சுயச்சார்புடன் இருந்த இந்திய பொருளாதாரத்தை காலனித்துவ பொருளாதாரமாக மாற்றியது?
விடை:
இந்தியப் பொருளாதாரம் (சுயச்சார்பு) காலனித்துவ பொருளாதாரமாக மாறுதல் :

பூர்வீக ஆட்சியாளர்கள், உயர் குடியினர் மற்றும் நிலக்கிழார்கள் இந்திய நிலப்பகுதிகளை பிரிட்டிஷார் ஒன்றன்பின் ஒன்றாக வெற்றி கொண்டதால் தங்கள் அதிகாரத்தையும் செல்வ வளத்தையும் இழந்தனர்.

அரசவையில் நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்ட பொருட்களை காட்சிப்படுத்துவதும் பிற சடங்கு சம்பிரதாயங்களும் மறைந்தன. இதனால் பூர்வீக ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்ட கைவினைஞர்கள் தங்கள் முக்கியத்துவத்தை இழந்து ஏழைகளாயினர்.

பல தலைமுறைகளாக தங்கள் கைவினைத் தொழிலை மட்டுமே மேற்கொண்ட இந்திய கைவினைஞர்கள் மற்ற தொழில்களுக்கான திறமைகளை கொண்டிருக்கவில்லை. எனவே அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வயல்வெளிகளில் தொழிலாளர்களாக வேலை செய்தனர்.

விவசாயத்தின் மீது இம்மாற்றம் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது. தகுதிக்கேற்ற வேலையின்மை அதிக அளவில் விவசாயத் தொழிலில் ஏற்பட்டது.

விவசாயமும் வணிகப் பயிர்களுக்கு மாறியதால் இந்திய வேளாண்சார்ந்த தொழிலகங்கள் அழிவை நோக்கிச் சென்றன.

பல்வேறு பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் செல்வாக்கு பரவியதால் உள்நாட்டு கைத்தொழில்களின் சிறப்பான காலம் முடிவுக்கு வந்தது. ‘நவீன தொழிலகங்களின் வளர்ச்சி குறித்து எழுதுக.

Question 2.
நவீன தொழிலகங்களின் வளர்ச்சி :
விடை:
2573 கி.மீ ஆக 1861 ல் இருந்த ரயில்வேயின் நீளம் 55,773 கி.மீ ஆக 1914ல் அதிகரித்தது.

சூயஸ் கால்வாய் திறப்பு ஐரோப்பாவிற்கும் இந்தியாவிற்குமான தூரத்தை சுமார் 4830 கி.மீ தூ ரமாக குறைத்தது. இது இந்தியாவின் தொழில்மயமாக்கலுக்கு மேலும் உதவியது.

சுதேசி இயக்கத்தின் விளைவாக பருத்தி ஆலைகள் 194 லிருந்து 273 ஆகவும் சணல் ஆலைகள் 36லிருந்து 64 ஆகவும் அதிகரித்தன.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் அதிகாரத்தைப் பலப்படுத்தி ஏராளமான தொழில் முனைவோர்களையும் வெளிநாட்டு மூலதனத்தையும் (குறிப்பாக இங்கிலாந்து) ஈர்த்தனர். அதிக லாபம் ஈட்டும் இந்திய தொழிற்துறைகள் அந்நிய முதலாளிகளை கவர்ந்திழுத்தது.

வேலையாட்களும் மூலப்பொருட்களும் மிகவும் மலிவு. இந்தியாவும் அண்டை நாடுகளும் சந்தையை வழங்க தயாராக இருந்தன.

Question 3.
1956 ஆம் ஆண்டு தொழிற்துறை கொள்கை தீர்மானத்தின்படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டன?
விடை:
தொழிற்துறை வகைகள் : 1956 தொழில்துறை கொள்கை தீர்மானத்தின்படி தொழிற்துறை மூன்று பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அட்டவணை – 1

  • அரசாங்கம் மட்டுமே இவ்வகையான தொழிற்துறைகளை நிர்வகிக்கும்.
  • அணுசக்தி, மின்னணு, இரும்பு மற்றும் எஃகு ஆகியன அவற்றுள் சில.

அட்டவணை – 2
சாலைகள் மற்றும் கடல்போக்குவரத்து, இயந்திரக் கருவிகள், அலுமினியம், நெகி ழி மற்றும் உரங்கள் உள்ளிட்ட ரசாயனங்கள், இரும்பு கலவை மற்றும் குறிப்பிட்ட வகையான சுரங்கங்கள் ஆகியவை அடங்கும்.

அட்டவணை – 3
மீதமுள்ள தொழில்கள் மற்றும் தனியாருக்கு விடப்பட்ட துறைகள் ஆகியன இவ்வகையின் கீழ் அடங்கும்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 6 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி 5