Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

8th Social Science Guide ஐரோப்பியர்களின் வருகை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
இந்தியாவில் போர்ச்சுக்கீசிய ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
அ) வாஸ்கோடகாமா
ஆ) பார்த்தலோமியோ டயஸ்
இ) அல்போன்சோ – டி – அல்புகர்க்
ஈ) அல்மெய்டா
விடை:
இ) அல்போன்சோ – டி – அல்புகர்க்

Question 2.
பின்வரும் ஐரோப்பிய நாடுகளுள் இந்தியாவுக்கு கடல்வழியைக் கண்டுபிடிப்பதில் முதன்மையாக இருந்த நாடு எது?
அ) நெதர்லாந்து (டச்சு)
ஆ) போர்ச்சுகல்
இ) பிரான்ஸ்
ஈ) பிரிட்டன்
விடை:
ஆ) போர்ச்சுகல்

Question 3.
1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?
அ) பிரான்ஸ்
ஆ) துருக்கி
இ) நெதர்லாந்து (டச்சு)
ஈ) பிரிட்டன்
விடை:
ஆ) துருக்கி

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 4.
சர் வில்லியம் ஹாக்கின்ஸ் ……………………. நாட்டைச் சேர்ந்தவர்.
அ) போர்ச்சுக்கல்
ஆ) ஸ்பெயின்
இ) இங்கிலாந்து
ஈ) பிரான்ஸ்
விடை:
இ) இங்கிலாந்து

Question 5.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கோட்டை
அ) வில்லியம் கோட்டை
ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை
இ) ஆக்ரா கோட்டை
ஈ) டேவிட் கோட்டை
விடை:
ஆ) செயின்ட் ஜார்ஜ் கோட்டை

Question 6.
பின்வரும் ஐரோப்பிய நாட்டினருள் வியாபாரத்திற்காக, இந்தியாவிற்கு வருகை தந்த கடைசி ஐரோப்பிய நாட்டினர்
அ) ஆங்கிலேயர்கள்
ஆ) பிரெஞ்சுக்காரர்கள்
இ) டேனியர்கள்
ஈ) போர்ச்சுக்கீசியர்கள்
விடை:
ஆ) பிரெஞ்சுக்காரர்கள்

Question 7.
தமிழ்நாடு கடற்கரையோரத்தில் உள்ள தரங்கம்பாடி …………………….. வர்த்தக மையமாக இருந்தது.
அ) போர்ச்சுக்கீசியர்கள்
ஆ) ஆங்கிலேயர்கள்
இ) பிரெஞ்சுக்காரர்கள்
ஈ) டேனியர்கள்
விடை:
ஈ) டேனியர்கள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
விடைகள் இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) _______ ல் அமைந்துள்ளது.
விடை:
புதுடெல்லி

Question 2.
போர்ச்சுக்கீசிய மாலுமியான பார்த்தலோமியோ டயஸ் _____________ என்பவரால்
விடை:
மன்ன ர் ஆதரிக்கப்பட்டார். இரண்டாம் ஜான்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 3.
இந்தியாவில் அச்சு இயந்திரம் 1556ல் _____________ அரசால் கோவாவில் நிறுவப்பட்டது
விடை:
போர்ச்சுகீசிய அரசால்

Question 4.
முகலாயப் பேரரசர் _________________ இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வர்த்தகம் செய்ய அனுமதி அளித்தார்.
விடை:
ஜஹாங்கீர்

Question 5.
பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ____________ என்பவரால் நிறுவப்பட்டது.
விடை:
கால்பர்ட்

Question 6.
_______________ என்ற டென்மார்க் மன்னர், டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க ஒரு பட்டயத்தை வெளியிட்டார்.
விடை:
நான்காம் கிரிஸ்டியன்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக,

Question 1.
சுயசரிதை, எழுதப்பட்ட ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.
விடை:
சரி

Question 2.
நாணயங்கள் பயன்பாட்டு பொருள் ஆதாரங்களுள் ஒன்று ஆகும்.
விடை:
சரி

Question 3.
.ஆனந்தரங்கம், பிரிட்டிஷ் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 4.
வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடங்கள் ஆவணக்காப்பகங்கள் என்றழைக்கப்படுகிறது.
விடை:
சரி

V. 1) பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க.

Question 1.
1. கவர்னர் நினோ-டி-குன்கா போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார்.
2. போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவிலிருந்து கடைசியாக வெளியேறினர்.
3. டச்சுக்காரர்கள், சூரத்தில் தங்கள் முதல் வணிக மையத்தை நிறுவினர்.
4. இங்கிலாந்தின் மன்னர் முதலாம் ஜேம்ஸ், ஜஹாங்கீர் அவைக்கு சர் தாமஸ் ரோவை அனுப்பினார்.

அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 2 மற்றும் 4 சரி
இ) 3 மட்டும் சரி
ஈ) 1, 2 மற்றும் 4 சரி
விடை:
ஈ) 1, 2 மற்றும் 4 சரி

V. 2) தவறான இணையைக் கண்டறிக.

Question 1.
அ) பிரான்சிஸ் டே – டென்மார்க்
ஆ) பெட்ரோ காப்ரல் – போர்ச்சுகல்
இ) கேப்டன் ஹாக்கின்ஸ் – இங்கிலாந்து
ஈ) கால்பர்ட் – பிரான்ஸ்
விடை:
அ) பிரான்சிஸ் டே – டென்மார்க்

VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி

Question 1.
ஆவணக் காப்பகங்கள் பற்றி சிறுகுறிப்பு தருக
விடை:

  • வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் இடம் ஆவணக் காப்பகம் என்று அழைக்கப்படுகிறது.
  • இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) புதுதில்லியில் அமைந்துள்ளது.
  • இது இந்திய அரசின் ஆவணங்களைப் பாதுகாக்கும் முதன்மைக் காப்பகமாகும்.
  • கடந்த காலம் குறித்த பல்வேறு தகவல்களுடன் தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக இது விளங்குகிறது.

Question 2.
நாணயங்களின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.
விடை:

  • நாணயங்கள், நிர்வாக வரலாற்றை அறிய ஒரு நல்ல ஆதாரமாக திகழ்கின்றன
  • நவீன இந்தியாவின் முதல் நாணயம் கி.பி.1862 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் வெளியிடப்பட்டது.

Question 3.
இளவரசர் ஹென்றி ‘மாலுமி ஹென்றி’ என ஏன் அழைக்கப்படுகிறார்?
விடை:

  • போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி, உலகின் அறியப்படாத பகுதிகளை ஆராயவும், சாகச வாழ்க்கையை மேற்கொள்ளவும் தனது நாட்டு மக்களை ஊக்குவித்தார்.
  • கடற்பயணம் மேற்கொள்வது குறித்து ஒரு தனிப் பயிற்சி பள்ளியையும் நிறுவினார்.
  • எனவே இளவரசர் ஹென்றி பொதுவாக மாலுமி ஹென்றி’ என அழைக்கப்படுகிறார்.

Question 4.
இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.
விடை:
இந்தியாவில் பழவேற்காடு, சூரத், சின்சுரா, காசிம்பஜார், பாட்னா, நாகப்பட்டினம், பாலசோர் மற்றும் கொச்சின் முதலிய பகுதிகளே டச்சுக்காரர்களின் முக்கிய வர்த்தக மையங்களாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 5.
இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களின் வர்த்தக மையங்களைக் குறிப்பிடுக.
விடை:
சூரத், ஆக்ரா, அகமதாபாத், புரோச். சென்னை . பம்பாய், கல்கத்தா, மசூலிப்பட்டினம் மற்றும் சால்செட்

VII. விரிவான விடையளி

Question 1.
நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் பற்றி குறிப்பிடுக.
விடை:
நவீன இந்திய ஆதாரங்கள்:

  • நவீன இந்தியாவின் வரலாற்று ஆதாரங்கள் நாட்டின் அரசியல், சமூக – பொருளாதார மற்றும் கலாச்சார முன்னேற்றங்களை பற்றி அறிய உதவுகின்றன.
  • ஆரம்பம் முதலே போர்ச்சுகீசியர். ஆங்கிலேயர் உள்ளிட்ட பல ஐரோப்பியர்களால் திறம்பட பதிவு செய்த அரசாங்க பதிவேடுகள் மதிப்பு மிக்க ஆதாரங்களாக உள்ளன.
  • லிஸ்பன், கோவா, பாண்டிச்சேரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஆவணக் காப்பகங்கள் விலை மதிப்பற்ற வரலாற்றுத் தகவல்களின் பெட்டகமாகும்.

எழுதப்பட்ட ஆதாரங்கள்:

  • இலக்கியங்கள், பயணக் குறிப்புகள், நாட்குறிப்புகள், சுயசரிதை, துண்டு பிரசுரங்கள், அரசாங்க ஆவணங்கள் மற்றும் கையெழுத்து பிரதிகள் முதலியவை எழுதப்பட்ட ஆதாரங்களாகும்.
  • அச்சு இயந்திரம் மூலம் பல மொழிகளில் எண்ணற்ற புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
  • குறிப்பாக ஆனந்தரங்கம் என்பவரின் நாட்குறிப்புகள் அரசியல் தீர்வுகளை வெளிப்படையாக விளக்கும் வரலாற்று ஆதாரமாகும்.
  • எழுதப்பட்ட ஆதாரங்கள் மூலம் கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல் போன்ற துறைகளைப் பற்றி மக்கள் எளிதாக அறிய முடிகிறது.

பயன்பாட்டு பொருள் ஆதாரங்கள்:

  • ஓவியங்கள், சிலைகள், வரலாற்றுபுகழ்மிக்ககட்டிடங்கள், நாணயங்கள் மற்றும் அருங்காட்சியகத்தில் உள்ள கலை, தொல்பொருட்கள் போன்றவை பயன்பாட்டு பொருள் ஆதாரங்களாகும்.
  • குறிப்பாக ஓவியங்கள், சிலைகள் நவீன இந்திய வரலாற்றின் முதன்மை ஆதாரங்களாக உள்ளன.
  • நாணயங்களும் நம் நிர்வாக வரலாற்றை அறிய உதவும் ஒரு நல்ல ஆதாரமாகும்.

Question 2.
போர்ச்சுக்கீசியர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
விடை:
போர்ச்சுக்கல்:

  • ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும், போர்ச்சுக்கல் மட்டும் இந்தியாவிற்கு புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தது.
  • கி.பி. 1498-ல் வாஸ்கோடகாமா முதன் முதலாக தென்னிந்தியாவின் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார். மன்னர் சாமரின் அவரை வரவேற்றார்.
  • இவர் 1501-ல் இரண்டாவது முறையாக இந்தியா வந்தபொழுது கண்ணனூரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார்.
  • இதன் பிறகு கள்ளிக்கோட்டை, கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக மையங்களை அவர் நிறுவினார்.
  • இதனால் கோபங்கொண்ட மன்னர் சாமரின் போர்ச்சுக்கீசியரைத் தாக்கினார். ஆனால் அவர் போர்ச்சுக்கீசியரால் தோற்கடிக்கப்பட்டார்.
  •  கி.பி. 1505-ல் பிரான்சிஸ்கோ -டி-அல்மெய்டா இந்திய போர்ச்சுக்கீசிய பகுதிகளின் முதல் கவர்னரானார்.
  • இவர் இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்தும் நோக்கில் ‘நீலநீர்க் கொள்கை’யை பின்பற்றினார்.
  • டையூவில் நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா முஸ்லீம் கூட்டுப்படைகளைத் தோற்கடித்தார்.
  • கி.பி. 1509-ல் கவர்னரான அல்போன்சோ -டி-அல்புகர்க் இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவினார்.
  • இவர் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கி.பி. 1510-ல் கோவாவைக் கைப்பற்றினார். மேலும் விஜயநகரப் பேரரசுடன் நட்புறவை மேற்கொண்டார்.
  • கி.பி. 1529-ல் மூன்றாம் கவர்னரான நினோ-டி-குன்ஹா டையூ, டாமன் போன்ற பகுதிகளை கைப்பற்றினார்.
  • இவ்வாறு போர்ச்சுக்கீசியர் 16ஆம் நூற்றாண்டில் கோவா, டையூ, டாமன், பசீன், சால்செட், பாம்பே மட்டுமின்றி பிற இந்திய கடற்கரை பகுதிகளையும் கைப்பற்றிவணிக ஆதாயத்திற்கு பயன்படுத்தினர்.

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 3.
ஆங்கிலேயர்கள், எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
விடை:
கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய கவர்னர் மற்றும் லண்டன் வர்த்தக நிறுவனத்திற்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் 1600 டிசம்பர் 31 அன்று அனுமதி வழங்கினார்.

கி.பி 1608 ஆம் ஆண்டு வணிகத் தலம் அமைக்க ஜஹாங்கீர் அவைக்கு வந்த மாலுமி வில்லியம் ஹாக்கின்ஸ், போர்ச்சுகீசிய தலையீடுகளினால் அனுமதி கிடைக்காமல் இங்கிலாந்து திரும்பினார்.

சூரத் அருகே ஆங்கிலத் தளபதி தாமஸ் பெஸ்ட், போர்ச்சகீசிய கடற்படையை தோற்கடித்தார்.

இந்நிகழ்வில் மகிழ்ச்சியடைந்த ஜஹாங்கீர், 1613ல் சூரத்தில் ஆங்கில வணிக மையம் அமைக்க அனுமதித்தார்.

1614ல் கேப்டன் நிக்கோலஸ், போர்ச்சுகீசியரை வென்றதால் முகலாயர் அவையில் ஆங்கிலேயரின் கௌரவம் மேலும் அதிகரித்தன.

1615ம் ஆண்டு ஜஹாங்கீர் அவைக்கு வந்த சர்தாமஸ் ரோ மூன்று ஆண்டுகள் ஆக்ராவில் தங்கி, இறுதியில் ஜஹாங்கீர் அனுமதியுடன் ஆக்ரா, அகமதாபாத். புரோச் முதலிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினார்.

குறிப்பாக ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள மசூலிபட்டினத்தில் 1611ல் நிறுவினர்.

1639ல் பிரான்சிஸ்டே என்ற ஆங்கில வணிகர், சந்திரகிரி மன்னர் சென்னப்ப நாயக்கரிடமிருந்து மெட்ராசை குத்தகைக்கு பெற்றார். அங்கு தான் ஆங்கில கம்பெனி புனித ஜார்ஜ் கோட்டை என்ற புகழ்பெற்ற வணிக மையத்தை நிறுவியது.

இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ், போர்ச்சுகீசிய இளவரசியை மணந்து சீதனமாக பம்பாய் தீவை பெற்றார். பின்னர் இத்தீவை ஆங்கில கம்பெனி 10 பவுண்டுகள் கொடுத்து வாங்கியது

கி.பி.1690 ஆம் ஆண்டு சதாநுதி என்ற இடத்தில் ஜாப் சார்னாக் என்ற ஆங்கிலேயர் ஓர் வணிக மையத்தை நிறுவினார். இங்கு தான் வலுவான வில்லியம் கோட்டை கட்டப்பட்டது.

பின்னாளில் கல்கத்தா நகரமாக வளர்ச்சியடைந்த சுதாநுதி, காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர் உள்ளிட்ட மூன்று கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையை ஆங்கில கம்பெனி பெற்றது.

பிளாசி மற்றும் பக்சார் போர்களுக்கு பிறகு ஆங்கில கம்பெனி ஓர் அரசியல் சக்தியாக மாறியது.

இந்தியா 1858 வரை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

IX. உயர் சிந்தனை வினா

Question 1.
கான்ஸ்டாண்டி நோபிள் வீழ்ச்சி ஐரோப்பிய நாடுகளை எவ்வாறு பாதித்தது?
விடை:
உலக வரலாற்றில் கான்ஸ்டாண்டி நோபிளின் வீழ்ச்சி ஒரு முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

வாணிபத்தைப் பொருத்தவரையில் கான்ஸ்டாண்டி நோபிள் ஒரு சாதகமான இடத்தில் அமைந்திருந்தது. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கிடையே நடந்த வாணிபத் தொடர்பு இதன் வழியாக நடைபெற்றது.

1453 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டி நோபிளைத் துருக்கியர் கைப்பற்றினர். அவர்கள் கிழக்கு மத்திய தரைக் கடல் வழியாக கீழநாடுகளோடு நடந்த வாணிபத்தைத் தடை செய்தனர்.

கான்ஸ்டாண்டி நோபிள் வழியாகச் சென்ற பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்தனர்.

மேலும் அவர்கள் ஐரோப்பிய வணிகர்களைத் துன்புறுத்தவும் தொடங்கினர். இதனால் பழைய வழித்தடங்கள் அடைபட்டுப் போயின. – இதன் விளைவாக கிழக்கு நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குப் பொருட்கள் வருவது தடைபட்டது.

ஆனால் ஐரோப்பியர்கள் பொன் கொழிக்கும் கிழக்கு நாடுகளோடு (Golden East) நடைபெற்ற வாணிபத்தை இழக்க விரும்பவில்லை. ஏனெனில் தாங்கள் மிகவும் விரும்பிய நறுமணப் பொருட்களை இப்போது பெற முடியவில்லை. எனவே ஐரோப்பியர் புதிய. கடல் வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.

X. மாணவர் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
நவீன இந்திய ஆதாரங்களை தொகுத்து ஒரு அட்டவணை தயார் செய்க.

8th Social Science Guide ஐரோப்பியர்களின் வருகை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
‘சென்னை நாட்குறிப்பு பதிவுகள்’ எப்போது வெளியிடப்பட்டது?
அ) 1916
ஆ) 1917
இ) 1949
ஈ) 1935
விடை:
ஆ) 1917

Question 2.
இந்தியாவின் முதல் நாணயம் ______________ ஆட்சியில் வெளியிடப்பட்டது.
அ) பிரெஞ்சுக்காரர்கள்
ஆ) போர்ச்சுகீசியர்
இ) ஆங்கிலேயர்
ஈ) டேனியர்
விடை:
இ) ஆங்கிலேயர்

Question 3.
இந்தியப் பெண்களுடனான போர்ச்சுகீசிய திருமணங்களை ஊக்குவித்தவர்?
அ) நினோ-டி-குன்கா
ஆ) வாஸ்கோடகாமா
இ) அல்மெய்டா
ஈ) அல்போன்சோ -டி-அல்புகர்க்
விடை:
ஈ) அல்போன்சோ-டி-அல்புகர்க்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 4.
ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை ____________ பகுதியில் நிறுவினர்.
அ) ஆக்ரா
ஆ) சூரத்
இ) மெட்ராஸ்
ஈ) மசூலிப்பட்டினம்
விடை:
ஈ) மசூலிப்பட்டினம்

Question 5.
_____________ இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமாகும்.
அ) சூரத்
ஆ) மசூலிப்பட்டினம்
இ) பாண்டிச்சேரி
ஈ) மாஹி
விடை:
இ) பாண்டிச்சேரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை நிறுவியவர் ___________
விடை:
கரோன்

Question 2.
_____________ ஆம் ஆண்டு டேனியர்கள் தங்களது அனைத்து குடியேற்றங்களையும் ஆங்கில அரசுக்கு விற்றனர்.
விடை:
1845

Question 3.
1690 ஆம் ஆண்டு ____________ பகுதியில் ஆங்கிலேய வர்த்தக மையம் நிறுவப்பட்டது
விடை:
சுதாநுதி .

Question 4.
___________ பகுதியில் டச்சுக்காரர்கள் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர்.
விடை:
பழவேற்காடு

Question 5.
வாஸ்கோடகாமாவின் கடல் வழியை பின்பற்றி இந்தியாவிற்கு வருகை புரிந்தவர்
விடை:
பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை 2

IV. சரியா, தவறா?

Question 1.
இந்தியாவில் தேசிய அருங்காட்சியகம் 1949 ல் நிறுவப்பட்டது.
விடை:
சரி

Question 2.
17ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய அதிகாரம் ஆங்கிலேயரிடம் வீழ்ச்சியடைந்தது.
விடை:
தவறு

Question 3.
1700 ல் சுதாநுதியில் ஒரு கோட்டை கட்டப்பட்டது.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை

Question 4.
அக்காலத்தில் பழவேற்காட்டிலிருந்து வைரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
விடை:
சரி

V. பின்வரும் கூற்றினை ஆராய்ந்து சரியானவற்றை (✓) செய்க

Question 1.
1. பிரான்சிஸ்கோ அல்மெய்டா என்பவர் இந்திய போர்ச்சுகீசிய பகுதிகளின் முதல் கவர்னர்
2. இங்கிலாந்து மன்னர் சார்லஸ் போர்ச்சுகீசிய இளவரசியை மணந்து மெட்ராசை சீதனமாக பெற்றார்.
3. ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் கோட்டையே புனித ஜார்ஜ் கோட்டை ஆகும்.
4. செராம்பூர் டச்சுக்காரர்களின் இந்தியத் தலைமையிடமாக இருந்தது.

அ) 1 மற்றும் 2 சரி
ஆ) 2 மற்றும் 3 சரி
இ) 1 மற்றும் 3 சரி
ஈ) 1, 2 மற்றும் 4 சரி
விடை:
இ) 1 மற்றும் 3 சரி

VI. குறுகிய விடையளி

Question 1.
ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கான காரணம் கூறுக.
விடை:
இந்தியாவின் ஏராளமான செல்வத்தைப் பற்றி மார்க்கோபோலோ மற்றும் சில வெளிநாட்டுப் பயணிகளின் பயணக் குறிப்புகளிலிருந்து ஐரோப்பியர்கள் அறிந்து கொண்டனர். இக்குறிப்புகள் ஐரோப்பியர்களை இந்தியாவை நோக்கி ஈர்த்தது.

இதுவே ஐரோப்பியர்களின் இந்திய வருகைக்கான காரணம் ஆகும்.

Question 2.
ஆனந்த ரங்கம் பற்றி குறிப்பு வரைக
விடை:
தமிழ் வரலாற்றுக் குறிப்பு ஆவணங்களில் முக்கிய பங்காற்றியவர் ஆனந்தரங்கம். இவர் பாண்டிச்சேரி பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தார்.

1736 லிருந்து 1760 வரை அவர் எழுதிய பிரெஞ்சு இந்திய உறவு முறை பற்றிய அன்றாட நிகழ்வுகளின் குறிப்புகள் அரசியல் தீர்வுகளை வெளிப்படையாக விளக்கும் வரலாற்றாதாரமாக உள்ளன.

Question 3.
தமிழ்நாடு ஆவணக்காப்பகம் பற்றி குறிப்பு வரைக?
விடை:

  • தற்போது தமிழ்நாடு ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படும் சென்னை பதிப்பாசனம் சென்னையில் அமைந்துள்ளது.
  • இது தென்னிந்தியாவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய களஞ்சியங்களுள் ஒன்றாகும்.
  • அங்குள்ள பெரும்பாலான ஆவணங்கள் ஆங்கிலத்தில் உள்ளன. மேலும் அங்கு டச்சு, டேனிஷ், பாரசீக, மராத்திய நிர்வாக பதிவுகளின் தொகுப்புகள் பிரெஞ்சு, போர்ச்சுக்கீசிய, தமிழ், உருது போன்ற மொழிகளில் உள்ளன.

VII. விரிவான விடையளி

Question 1.
பிரெஞ்சுக்காரர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?
விடை:
வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசி ஐரோப்பிய நாடு பிரான்சு ஆகும்.

பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம், மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் 1664 ல் உருவாக்கப்பட்டது.

கி.பி 1667 ல் பிரான்காய்ஸ் கரோன் தலைமையின் கீழ் ஒரு குழு இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது

இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை கரோன், சூரத் நகரில் நிறுவினார்.

கி.பி 1669 ல் மார்காரா கோல்கொண்டா சுல்தானின் அனுமதி பெற்று பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவினார்.

கி.பி 1673 ல் பிஜப்பூர் ஆட்சியாளர் ஷெர்கான் லோடிக்கு வழங்கப்பட்ட மானியத்தின் கீழ், மார்ட்டின் பாண்டிச்சேரியில் குடியேற்றத்தை நிறுவினார்.

பாண்டிச்சேரி இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் வளமான பிரெஞ்சு குடியேற்றமானது. பாண்டிச்சேரியில் செயிண்ட் லூயிஸ் எனப்படும் கோட்டையை பிரான்காய்ஸ் மாட்டின் என்பவர் காட்டினார்.

வங்காளத்தின் முகலாய ஆளுநரான செயிஸ்டகானின் அனுமதி பெற்று 1673 ல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி கல்கத்தாவுக்கு அருகே சந்திரநாகூர் என்ற நகரை நிர்மாணித்தது.

பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வர்த்தக மையங்களை நிறுவியது. குறிப்பாக கடலோரப் பகுதிகளான மாஹி, காரைக்கால், பாலசோர் மற்றும் காசிம் பசார் போன்றவை முக்கியமான பிரெஞ்சு வர்த்தக மையங்கள் ஆகும்.

கி.பி. 1742 ல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநராக ஜோசப் பிராங்காய்ஸ் டியூப்ளே என்பவர் நியமனம் செய்யப்பட்டார். அவரது நியமனத்தின் மூலம் பிரெஞ்சு அதிகாரம் மேலும் பலப்படுத்தப்பட்டது.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை 3
Samacheer Kalvi 8th Social Science Guide History Chapter 1 ஐரோப்பியர்களின் வருகை 4