Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

8th Social Science Guide பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
உலோக பணத்திற்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன?
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) வெண்கலம்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

Question 2.
இந்திய ரூபாய் குறியீட்டினை (₹) வடிவமைத்தவர்
அ) உதயகுமார்
ஆ) அமாத்தியா சென்
இ) அபிஜித் பானர்ஜி
ஈ) இவற்றில் எவரும் இல்லை
விடை:
அ) உதயகுமார்

Question 3.
பணத்தின் மதிப்பு
அ) அக பணமதிப்பு
ஆ) புற பண மதிப்பு
இ) அ மற்றும் ஆ
ஈ) எதுவுமில்லை
விடை:
இ) அ மற்றம் ஆ

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Question 4.
வங்கி பணம் என்பது எது?
அ) காசோலை
ஆ) வரைவு
இ) கடன் மற்றும் பற்று அட்டைகள்
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
ஈ) மேற்கூறிய அனைத்தும்

Question 5.
தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். முதலீட்டுக் கருவி போன்றவைகள்
அ) பங்கு வர்த்தகம்
ஆ) பத்திரங்கள்
இ) பரஸ்பர நிதி
ஈ) வரி செலுத்துவது
விடை:
ஈ) வரிசெலுத்துவது

Question 6.
பின்வருவனவற்றில் கருப்புப் பணம் குவிப்பதற்கு காரணமானவர்கள்
அ) வரி ஏய்ப்ப வர்கள்
ஆ) பதுக்குபவர்கள்
இ) கடத்தல்காரர்கள்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
நிகழ்நிலை வங்கியை __________ என்று அழைக்கலாம்.
விடை:
இணைய வங்கி

Question 2.
பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே __________
விடை:
பணம்

Question 3.
மின்னணு வங்கியை _____________ என்றும் அழைக்கலாம்
விடை:
தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT)

Question 4.
கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் _____________ பணமாகும்
விடை:
நெகிழிப்

Question 5.
இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு ___________
விடை:
1935

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் 1

IV. கீழ்க்கண்ட வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
‘பணம்’ என்ற வார்த்தை எதன் மூலம் பெறப்பட்டது?
விடை:
பணம் என்ற வார்த்தை ரோம் வார்த்தையான ‘மொனேட்டா ஜீனோ’ என்பதில் இருந்து பெறப்பட்டது.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Question 2.
இந்தியாவில் ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடுவது யார்?
விடை:
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு வெளியிடுகிறது.

V. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

Question 1.
பண்டமாற்று முறையில் பல குறைபாடுகளாவன.
i) இருமுகத்தேவை பொருத்தமின்மை
ii) செல்வத்தை சேமிக்க சிரமமில்லை
iii) பொதுவான மதிப்பின் அளவுகோல்
iv) பொருட்களின் பகுப்படாமை

அ) i மற்றும் ii சரி
ஆ) 1 மற்றும் iv சரி
இ) i, iii மற்றும் iv சரி
ஈ) மேற்கூறிய அனைத்தும்
விடை:
இ) i, iii மற்றும் iv சரி

VI. தவறான ஒன்றினை கண்டுபிடிக்க

Question 1.
பரிமாற்றத்திற்கு பணத்தின் சமீபத்திய வடிவங்கள்.
அ) பற்று அட்டை
ஆ) பண்டமாற்று முறை
இ) கடன் அட்டை
ஈ) நிகழ் நிலை வங்கி
விடை:
ஆ) பண்ட மாற்று முறை

Question 2.
பொருளாதாரத்தில் இருப்புப் பணத்தின் விளைவுகள்.
அ) இரட்டை பொருளாதாரம்
ஆ) சமத்துவம் வலுவிழத்தல்
இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை
ஈ) ஆடம்பர நுகர்வுச் செலவு
விடை:
இ) உற்பத்தியில் விளைவுகள் இல்லை

VII. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி

Question 1.
பண்டமாற்று முறை என்றால் என்ன?
விடை:

  • பண்டைய காலத்தில் பணம் பயன்படுத்தப்படாமல் பண்டத்திற்கு பண்டம் பரிமாற்றம் நடைபெற்றதை பண்டமாற்று முறை என்பர்.
  • பணம் கண்டுபிடிப்பதற்கு முன்பாக இம்முறை பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டது.

Question 2.
அண்மை கால பணத்தின் வடிவங்கள் யாவை?
விடை:

  • பண்டப்பணம்
  • உலோகப் பணம்
  • காகித பணம்
  • கடன் பணம்
  • நிகர் பணம் போன்றவைகள்
  • அண்மைகால பணத்தின் வடிவங்கள் ஆகும்.

Question 3.
மின்-வங்கி மற்றும் மின்-பணம் சிறு குறிப்பு வரைக.
விடை:
மின்-வங்கி:
காசோலை அல்லது ரொக்கத்தை விட ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு நிதியை மாற்றுவதற்கு மின்னனு வழிமுறை பயன்படுகிறது. இதனை தேசிய மின்னனு நிதி பரிமாற்றம் என்றும் அழைக்கலாம்.

மின்-பணம்:
வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னனு முறையின் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்க்கொள்ளப்படுவதே மின்-பணம் ஆகும்.

Question 4.
பணத்தின் மதிப்பு என்றால் என்ன?
விடை:

  • பணத்தால் ஒரு நாட்டிலுள்ள பண்டம் மற்றும் பணிகளை வாங்கும் சக்தியே பணத்தின் மதிப்பு ஆகும்.
  • பண்டம் மற்றும் பணிகளின் விலையானது அதன் அளவைச் சார்ந்திருக்கும்.
  • பணத்தின் மதிப்பும் விலையின் அளவும் எதிர்மறை தொடர்புடையது.

Question 5.
சேமிப்பு மற்றும் முதலீடு என்றால் என்ன?
விடை:
சேமிப்பு:

  • வருவாயில் நடப்பு நுகர்வுக்கு பயன்படாத ஒரு பகுதி சேமிப்பு ஆகும்.
  • தற்போதைய நுகர்வுக்காக பயன்படுத்தப்படாமல் எதிர்கால பயன்பாட்டிற்கு ஒதுக்கி வைக்கப்படும் பணம் சேமிப்பாகும்.
  • நம்முடைய பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே சேமிப்பு.

முதலீடு:

  • பல்வேறு துறைகளில் முதலீடு செய்யும் முறைக்கு முதலீடுகள் என்பர்.
  • பணம், நேரம், முயற்சிகள் அல்லது பிற மூலங்களில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்தி முதலீடு செய்து அதற்கு மாற்றாக எதிர்காலத்தில் வருமானமாக திரும்பப்பெறுவது ஆகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Question 6.
கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
விடை:

  • கருப்பு பணம் என்பது அரசாங்கத்திற்கு செலுத்தாத எந்தவொரு பணத்தையும் குறிக்கும்.
  • நாட்டின் ஒழுங்கு கட்டுப்படுத்துகையில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம் அனைத்தும் கருப்பு பணமாகும்.

Question 7.
பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் யாவை?
விடை:

  1. இரட்டைப் பொருளாதாரம்
  2. உண்மை அளவை குறைத்து மதிப்பீடு செய்வது
  3. வரி ஏமாற்றுதல் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு
  4. சமத்துவம் வலுவிழத்தல்
  5. பணக்காரர் மற்றும் ஏழைகளிடையே இடைவெளி அதிகரித்தல்
  6. ஆடம்பர நுகர்வு செலவு

VIII. விரிவான விடையளி

Question 1.
பண்டமாற்று முறையிலுள்ள தீமைகள் யாவை?
விடை:
பண்டமாற்று முறை:

  • பண்டத்திற்கு பண்டம் பரிமாற்றம் நடைபெற்றதை பண்டமாற்று முறை எனப்படும்
  • பணம் கண்டறிவதற்கு முன்பு இம்முறையே பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

தீமைகள்:

  • இருமுகத் தேவை பொருத்தமின்மை
  • பொதுவான மதிப்பின் அளவுகோல்
  • பொருட்களின் பகுப்படாமை
  • செல்வத்தை சேமிப்பதற்கான சிரமங்கள்.

Question 2.
பணத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி எழுதுக.
விடை:

  • பணம் என்ற வார்த்தை ரோம் வார்த்தையான ‘மொனேட்டா ஜீனோ’ விலிருந்து பெறப்பட்டது.
  • ரோமின் பெண் கடவுள் மற்றும் ரோம் பேரரசின் குடியரசு பணம் ஆகும்.
  • இந்தியாவின் ‘ரூபாய்’ என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. ‘ரூபியா’ என்பது வெள்ளி நாணயம் ஆகும்.
  • இன்று நாம் காகித பணமாகவும், நாணயங்களாகவும் பயன்படுத்துகிறோம். இந்த பரிணாம வளர்ச்சியானது ஒரே இரவில் நடைபெறவில்லை .
  • பரிணாம வளர்ச்சி நிலையை அடைய ஆயிரக்கணக்கான ஆண்டுகளானது.
  • பணத்தின் பரிணாமம் பல நிலைகளைக் கடந்துள்ளது. அதன் ஆரம்ப மற்றும் பழங்கால நிலைதான் பண்டமாற்று முறை ஆகும்.
  • பண்டப் பணம், உலோக பணம், காகித பணம், கடன் பணம், நிகர் பணம் போன்றவை பணத்தின் பல நிலை வடிவங்களாகும்.
  • மேலும் நெகிழிப் பணம், மின்னனு பணம், நிகழ்நிலை வங்கி, மின் வங்கி முதலியவை பணத்தின் சமீபத்திய வடிவங்களாகும்.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Question 3.
பணத்தின் பணிகள் யாவை?
விடை:
அவற்றை விளக்குக. பணத்தின் பணிகள்:

  1. முதன்மை அல்லது முக்கிய பணிகள்
  2. இரண்டாம் நிலை பணிகள் மற்றும்
  3. வரையறுக்கப்பட்ட பணிகள்

I. முதன்மை அல்லது முக்கிய பணிகள்:
பணத்தின் முக்கிய பணிகள் பொருளாதாரத்தில் செயல்பட்டு அவை பிரதான பணிகளின் கீழ் வகைப்படுத்தப்படுகிறது

  1. பரிமாற்ற கருவி அல்லது பண செலுத்துகை:
    பணம், பண்ட மற்றும் பணிகளை வாங்க பயன்படுத்தப்படுகிறது.
  2.  மதிப்பின் அளவுகோல் :
    அனைத்து மதிப்பையும் பணத்தால் அளவிடலாம். பல வகையான பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு இடையில் பரிமாற்ற விகிதத்தை தீர்மானிப்பது எளிது.

II. இரண்டாம் நிலை பணிகள்:

  1. எதிர்கால செலுத்துகைக்கான நிலை மதிப்பு:
    எதிர்கால செலுத்துகைக்கு பணம் ஒரு கருவியாக பயன்படுகிறது. இன்று ஒரு கடனாளி கடன் வாங்குகிறார். குறிப்பிட்ட தொகையை கூறியபடி குறிப்பிட்ட காலத்தில் செலுத்துவது கடமையாகும்.
  2. மதிப்பின் நிலை கலன்:
    சில பண்டங்கள் அழிந்து போவதால் பண்டமாற்று முறையில் சேமிப்பை ஊக்குவிப்பதில்லை. பணத்தின் அறிமுகத்திற்கு பிறகு எதிர்காலத்திற்காகப் பணத்தை சேமித்தார்கள். அது அழிய கூடியதில்லை .
  3. மாற்று மதிப்பு அல்லது மாற்று வாங்கும் சக்தி:
    பணத்தால் உலகின் எப்பகுதிக்கும் பண்டங்களை பரிமாற்ற முடியும். எனவே வாங்கும் சக்தியை
    ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு அவசியம் என உணரப்பட்டது.

III. வரையறுக்கப்பட்ட பணிகள்:

  1. கடன் அடிப்படையில் இயக்கப்படுகிறது.
  2. மூலதனத்தின் உற்பத்தி திறன் அதிகரிப்பு.
  3. நாட்டு வருவாயின் அளவீடு மற்றும் விநியோகம்.

Question 4.
வங்கி வைப்புகளின் வகைகளை விவரி.
விடை:
வங்கி வைப்புகளின் வகைகள்:
1. மாணவர் சேமிப்பு கணக்கு
2. சேமிப்பு வைப்பு
3. நடப்பு கணக்கு வைப்பு
4. நிரந்தர வைப்பு

  1. 1. மாணவர் சேமிப்பு கணக்கு:
    • சில வங்கிகள் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான சேமிப்பு கணக்குகள் துவக்கியுள்ளனர்.
    • இந்த சேமிப்பு கணக்கு நெகிழ்வான விதிமுறைகளுடன் பூஜ்ஜிய இருப்புத் தொகையில் கொண்டது இதன் முக்கிய அம்சமாகும்.
  2. சேமிப்பு வைப்பு:
    • வாடிக்கையாளர் தன்னுடைய நடப்பு வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க ஆரம்பிக்கும் கணக்கிற்கு சேமிப்பு கணக்கு என்பர்.
    • நுகர்வோர் பணம் தேவைப்படும் போது அவர்கள் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளலாம். அந்த வைப்பு தொகைக்கு வங்கி பெயரளவு வட்டி அளிக்கிறது.
  3. நடப்பு கணக்கு வைப்பு:
    நடப்பு கணக்குகள் பொதுவாக வர்த்தக நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் பொது அதிகாரிகளால் ஆரம்பிக்கப்படுகிறது. தேவைக்கேற்ப வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள நடப்பு கணக்கு உதவுகின்றது.
  4. நிரந்தர வைப்பு:
    நிரந்தர வைப்பு கணக்கு என்பது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்திற்கு பாதுகாப்பும், நிலையான வருவாயும் விரும்புவார்கள். நிரந்தர வைப்பை, காலவைப்பு எனவும் அழைக்கலாம்.

Question 5.
சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
விடை:
Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் 2

Question 6.
பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் யாவை?
விடை:
கருப்பு பணம் :
கருப்பு பணம் என்பது அரசாங்கத்திற்கு செலுத்தாத எந்தவொரு பணத்தையும் குறிக்கும். நாட்டின் ஒழுங்கு கட்டுப்படுத்துகையில் சட்ட விரோதமாக சம்பாதிக்கும் பணம் அனைத்தும் கருப்பு பணமாகும்.
விளைவுகள் :

  1. இரட்டைப் பொருளாதாரம்
  2. உண்மை அளவை குறைத்து மதிப்பீடு செய்வது
  3. வரி ஏமாற்றுதல் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு
  4. சமத்துவம் வலுவிழத்தல்
  5. பணக்காரர் மற்றும் ஏழைகளிடையே இடைவெளி அதிகரித்தல்
  6. ஆடம்பர நுகர்வு செலவு
  7. உற்பத்தி முறையில் விலகல்
  8. பற்றாக்குறை பணத்தை விநியோகித்தல்
  9. சமுதாயத்தில் பொது ஒழுக்க நிலைகளின் வீழ்ச்சிகள்
  10. உற்பத்தி மீதான விளைவுகள்

IX. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

Question 1.
மாணவர்கள் இந்தியா மற்றும் மற்ற நாடுகளின் புதிய மற்றும் பழைய நாணயங்களின் மாதிரிகளைக் கொண்ட அட்டவணையை தயாரிக்க கூறுதல்.

Question 2.
உங்கள் அருகாமையிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று இந்தியாவில் நடைமுறையிலுள்ள சேமிப்பு திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள், மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் சேமிப்பு திட்டத்தைப் பற்றி கலந்துரையாடல்,

X. வாழ்வியல் திறன் (மாணவர்களுக்கானது)

Question 1.
பணத்தின் மதிப்பை அறிந்து கொள்ள மாணவர்கள் தங்கள் வகுப்பறையை கடை அல்லது அங்காடி போன்று அமைத்தல்.

Question 2.
மாணவர்களை கடையிலிருந்து சில பொருட்களை வாங்குமாறு கூறுதல் சந்தை செயல்களை மேற்கொள்ளுதல்.

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Question 3.
ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பணத்தின் மதிப்பைப்பற்றிக் கலந்துரையாடல்.

8th Social Science Guide பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ரூபியா என்பது ____________ நாணயம் என்று பொருளாகும்.
அ) தங்க ம்
ஆ) வெள்ளி
இ) செம்பு
ஈ) வெண்கலம்
விடை:
ஆ) வெள்ளி

Question 2.
பொற்கொல்லர்களின் ரசீது _____________ ஆக மாறியது
அ) கடன் பணம்
ஆ) நெகிழிப் பணம்
இ) காகித பணம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) காகித பணம்

Question 3.
பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் பெரும்பகுதியில் _____________ பணம் முக்கிய பங்கு வகித்தது.
அ) உலோக பணம்
ஆ) பண்ட பணம்
இ) காகித பணம்
ஈ) நிகர் பணம்
விடை:
அ) உலோக பணம்

Question 4.
‘எதையெல்லாம் செய்யவல்லதோ, அதுவே பணம்’ என வரையறுத்து கூறியவர்
அ) ஸ்டோவ்ஸ்கி
ஆ) சர்ஜான் ஹிக்ஸ்
இ) வாக்கர்
ஈ) இராபர்ட்ச ன்
விடை:
இ) வாக்கர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

Question 1.
உண்டியல், பத்திரங்கள் போன்றவற்றின் பயன்பாடுகள் _____________ இறுதி நிலையாகும்.
விடை:
பண பரிணாம வளர்ச்சியின்

Question 2.
காகிதப்பணத்தை கட்டுப்படுத்துவதும், ஒழுங்குப்படுத்துவதும் அந்நாட்டின் ___________ ஆகும்.
விடை:
மைய வங்கி

Question 3.
நிரந்தர வைப்பை _____________ என அழைப்பர்.
விடை:
கால வைப்பு

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Question 4.
____________ என்பது விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வதைக் குறிக்கும்.
விடை:
பணவாட்டம்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் 3

IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
வங்கியில் பல வகையான கணக்குகளின் மூலம் பணத்தை சேமிக்கலாம்
i) நெகிழ்வான விதிமுறைகளுடன் பூஜ்ஜிய இருப்புத் தொகையை கொண்டது மாணவர் சேமிப்பு கணக்கு.
ii) நடப்பு கணக்கு வைப்பை கால வைப்பு என்பர்.
iii) குறிப்பிட்ட காலத்திற்கு நிரந்தரமாக வங்கியில் பணம் இருப்பதே நிரந்தர வைப்பு என்பர்.
iv) தேவைக்கேற்ப வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள நடப்பு கணக்கு உதவுகின்றது.

அ) i மற்றும் ii சரி
ஆ) i, ii மற்றும் iv சரி
இ) i, iii மற்றும் iv சரி
ஈ) ii மற்றும் iv சரி
விடை:
இ) i, iii மற்றும் iv சரி

V. தவறான ஒன்றினை கண்டுபிடிக்க

Question 1.
ஆங்கில நாணயங்களின் பெயர்கள்
அ) செம்பு நாணயமான கப்ரூன்
ஆ) வெண்கல நாணயமான டின்னி
இ) தாமிர நாணயமான கரோலினா
ஈ) வெள்ளி நாணயமான ஏஞ்ஜேலினா
விடை:
இ) தாமிர நாணயமான கரோலினா

Question 2.
நம் வருமானத்தில் நுகர்வுக்கு பயன்படுத்தப்படாத ஒரு பகுதியான சேமிப்பு பல நன்மைகளை கொண்டுள்ளது
அ) அவசர தேவை நிறைவேற்றம்
ஆ) நிதி ரீதியாக விரைவில் தனித்து இருத்தல்
இ) அதிக இடர்பாடுகள்
ஈ) பணி ஒய்வில் வசதியாக இருத்தல்
விடை:
இ) அதிக இடர்பாடுகள்

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
இந்தியாவில் முதன் முதலாக நாணயங்கள் எப்போது அச்சடிக்கப்பட்டன?
விடை:
இந்தியாவில் கி.மு. 6ம் நூற்றாண்டில் முதன் முறையாக மஹாஜனபதங்கள் ஆட்சியில் பூரணாஸ், கர்ஷ பணம், பனாஸ் போன்ற நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன.

Question 2.
‘பணம்’ என்பதை வரையறுக
விடை:

  • பணம் அதன் பணிகளால் வரையறுக்கப்படுகிறது.
  • எவை பணமாக பயன்படுத்தப்படுமோ அவையெல்லாம் பணமாகும்.
  • பணம் எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே பணமாகும்.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு குறுகிய விடையளி

Question 1.
உலோக பணம் என்றால் என்ன?
விடை:
மனித நாகரிகத்தின் முன்னேற்றத்தில் பண்ட பணம். உலோக பணமாக மாறியது. தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்களை எளிமையாக கையாளப்பட்டதால் அவற்றின் அளவு எளிதாக அறிந்து கொள்ளப்பட்டது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் பெரும் பகுதியில் இவ்வகையான பணம் முக்கிய பங்கு வகித்தது.

Question 2.
கருப்பு பணத்திற்கு எதிராக சில சட்டரீதியான கூட்டமைப்பு பற்றி எழுதுக :
விடை:

  • பணமோசடி நடவடிக்கை தடுப்பு சட்டம் 2002.
  • லோக்பால் மற்றும் லோகாயுக்டா சட்டம்.
  • ஊழல் தடுப்புச் சட்டம் 1988.
  • வெளிக்கொணரப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா 2015.
  • பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டம் 1988, 2016ல் திருத்தப்பட்டது.

Question 3.
முதலீடு செய்ய வழிவகுக்கும் சில முதலீட்டுக் கருவிகளை கூறுக?
விடை:

  • பங்கு வர்த்தகம்
  • பத்திரங்கள்
  • பரஸ்பர நிதி
  • காப்பீடு
  • வைப்பு கணக்கு

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள்

Question 4.
உங்கள் வாழ்க்கையில் பணத்தின் அத்தியாவசியங்கள் யாவை?
விடை:

  • அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பணம் ஒரு அத்தியாவசிய கருவியாகும்.
  • பணம், பண்ட மற்றும் பணிகளை வாங்க பயன்படுத்தப்படுகிறது.
  • பணத்தை சேமித்து எதிர்கால தேவையை பூர்த்தி செய்து கொள்ள பணம் அத்தியாவசியமாகும்.
  • தொலைதூர இடங்களுக்கும், அயல்நாட்டிற்கும் பண்டங்களை பரிமாற்றம் செய்ய பணம் திறம்பட உதவுகிறது.

Question 5.
வணிக வங்கி என்றால் என்ன? மற்றும் வைப்புகளின் வகைகள் யாவை?
விடை:
வணிக வங்கி:

  • வாடிக்கையாளர் ஒருவருக்கு காசோலை வரைவதன் மூலம் தனது வைப்புகளை மீளப்பெறும் உரிமையினை வழங்கும் நிறுவனம் வணிக வங்கி ஆகும்.
  • இவற்றின் நடவடிக்கைகள் நாடுகளின் சட்டத்தினாலும் மத்திய வங்கியாலும் கட்டுப்படுத்தப்படும்.
    வைப்புகளின் வகைகள்:

    1. மாணவர்களின் சேமிப்புக் கணக்கு
    2. சேமிப்பு வைப்பு
    3. நடப்பு கணக்கு வைப்பு
    4. நிரந்தர வைப்பு

VIII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
பணத்தின் சமீபத்திய வடிவங்கள் பற்றி விவரி?
விடை:
நெகிழிப் பணம்:
கடன் அட்டைகள் மற்றும் பற்று அட்டைகள் சமீபத்திய நெகிழிப் பணமாகும். பணமில்லா பரிவர்த்தனை இதன் நோக்கமாகும்.

மின்னனு பணம்:
மின்னனுப் பணம் என்பது வங்கியில் கணினி அமைப்புகளில் உள்ள மின்னனு முறையின் லம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுவதாகும்.

நிகழ்நிலை வங்கி:
(இணைய வங்கி) நிகழ்நிலை வங்கி அல்லது இணைய வங்கி என்பது வாடிக்கையாளர் அல்லது பிற நிதி நிறுவனங்கள் வலைதளத்தின் மூலம் ஒரு பரந்த நிதிப் பரிவர்த்தனைகளை நடத்தும் ஒரு மின்னனு முறையாகும்.

மின் வங்கி:
மின்னணு வங்கியை தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் என்றும் அழைக்கலாம். காசோலை அல்லது ரொக்கத்தை விட ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு நிதியை மாற்றுவதற்கு மின்னணு வழிமுறை பயன்படுகிறது.

IX. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Economics Chapter 1 பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் 4