Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 7 நீதித்துறை Questions and Answers, Notes.
TN Board 8th Social Science Solutions Civics Chapter 7 நீதித்துறை
8th Social Science Guide நீதித்துறை Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
இந்தியாவின் மிக உயர்ந்த மற்றும் இறுதியான நீதித்துறை ………………….
அ) குடியரசுத் தலைவர்
ஆ) நாடாளுமன்றம்
இ) உச்ச நீதிமன்றம்
ஈ) பிரதம அமைச்சர்
விடை:
இ) உச்ச நீதிமன்றம்
Question 2.
………………… க்கு இடையே பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு செயல்முறையை நீதிமன்ற அமைப்பு வழங்குகிறது.
அ) குடிமக்கள்
ஆ) குடிமக்கள் மற்றும் அரசாங்கம்
இ) இரண்டு மாநில அரசாங்கங்கள்
ஈ) மேற்கண்ட அனைத்தும்
விடை:
ஈ) மேற்கண்ட அனைத்தும்
Question 3.
கீழ்க்கண்ட எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் தீர்க்க வழிவகை செய்கிறது?
அ) முதன்மை அதிகார வரம்பு
ஆ) மேல்முறையீட்டு அதிகார வரம்பு
இ) ஆலோசனை அதிகார வரம்பு
ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
அ) முதன்மை அதிகார வரம்பு
Question 4.
பின்வரும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் ஒரு பொதுவான உயர்நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது?
அ) பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர்
ஆ) அஸ்ஸாம் மற்றும் வங்காளம்
இ) பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்
ஈ) உத்தரபிரதேசம் மற்றும் பீகார்
விடை:
இ) பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர்
Question 5.
பொதுநல வழக்கு முறை இந்தியாவில் …………………. ஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அ) உச்சநீதிமன்றம்
ஆ) நாடாளுமன்றம்
இ) அரசியல் கட்சிகள்
ஈ) அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள்
விடை:
அ) உச்ச நீதிமன்றம்
Question 6.
இந்தியாவில் உச்ச நிலையில் உள்ள நீதிமன்றங்கள் எத்தனை?
அ) ஒன்று
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
விடை:
அ) ஒன்று
Question 7.
உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம் ………….
அ) சண்டிகர்
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) புதுதில்லி
விடை:
ஈ) புதுதில்லி
Question 8.
FIR என்பது
அ) முதல் தகவல் அறிக்கை
ஆ) முதல் தகவல் முடிவு
இ) முதல் நிகழ்வு அறிக்கை
ஈ) மேற்கூறிய எவையுமில்லை
விடை:
அ) முதல் தகவல் அறிக்கை
Question 9.
குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் …………. என அழைக்கப்படுகின்றன.
அ) மாவட்ட நீதிமன்றங்கள்
ஆ) அமர்வு நீதிமன்றம்
இ) குடும்ப நீதிமன்றங்கள்
ஈ) வருவாய் நீதிமன்றங்கள்
விடை:
ஆ) அமர்வு நீதிமன்றம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
…………. நீதிமன்றம் இந்தியாவின் பழமையான நீதிமன்றம் ஆகும்.
விடை:
கல்கத்தா
Question 2.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ………….. மற்றும் உடன் இந்திய நீதித்துறையை நிறுவினர்.
விடை:
சுதந்திரம், நடுநிலைத்தன்மை
Question 3.
புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானியான ………… “ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்தார்.
விடை:
மாண்டெஸ்கியூ
Question 4.
…………… பணம், சொத்து, சமூகம் தொடர்பான பிரச்சனைகளைக் கையாளுகிறது.
விடை:
உரிமையியல் சட்டங்கள்
Question 5.
பழங்காலத்தில் பெரும்பாலான அரசர்களின் நீதிமன்றங்கள் …………. ன்படி நீதியை வழங்கின.
விடை:
தர்மத்தின்
III. பொருத்துக
IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக
Question 1.
1951ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் இந்திய உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்டது.
விடை:
தவறு
Question 2.
துக்ளக் ஆட்சிக்காலத்தில் சட்ட நடைமுறைகள் அரபுமொழியில் எழுதப்பட்டன.
விடை:
சரி
Question 3.
1773ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச்சட்டம் உச்சநீதிமன்றம் அமைப்பதற்கு வழிவகுத்தது.
விடை:
சரி
Question 4.
சதர் திவானி அதாலத் ஒரு குற்றவியல் நீதிமன்றமாகும்.
விடை:
தவறு
Question 5.
இந்தியாவில் மிகப்பெரிய நீதிமன்றம் அலகாபாத் நீதிமன்றம் ஆகும்.
விடை:
சரி
Question 6.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்துக் குடிமக்களுக்கான நீதியைப் பாதுகாக்கிறது.
விடை:
சரி
V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
Question 1.
பின்வரும் கூற்றை ஆராய்க.
i) மெக்காலே பிரபுவால் ஒரு சட்ட ஆணையம் அமைக்கப்பட்டது.
ii) இது இந்தியச் சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது.
மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை
அ) i மட்டும்
ஆ) ii மட்டும்
இ) i மற்றும் ii
ஈ) இரண்டும் இல்லை
விடை:
இ) i மற்றும் ii
Question 2.
பின்வரும் கூற்றை ஆராய்க
i) இந்திய தண்டனைச் சட்டம் 1860இல் உருவாக்கப்பட்டது.
ii) கல்கத்தா உயர்நீதிமன்றம் 1862இல் நிறுவப்பட்டது.
iii) 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றத்தை உருவாக்கியது.
மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை
அ) i மட்டும்
ஆ) ii மற்றும் iii மட்டும்
இ) i, iii மட்டும்
ஈ) அனைத்தும்
விடை:
ஈ) அனைத்தும்
Question 3.
இந்திய உச்சநீதிமன்றம் பற்றிய பின்வரும் எந்த கூற்றுச் சரியானது அல்ல.
i) இந்தியாவின் உச்சநீதிமன்றம் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.
ii) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது அத்தியாயத்தின் கீழ் பகுதி V-இன்படி நிறுவப்பட்டது.
iii) ஒரு உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு வழக்குகளை உச்ச நீதிமன்றத்தால்
மாற்ற முடியாது.
iv) இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
அ) i)
ஆ) ii
இ) iii
ஈ) iv
விடை:
இ) iii
Question 4.
கூற்று : உச்சநீதிமன்றம் ஒரு ஆவண நீதிமன்றமாகும்.
காரணம் : இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளைப் பராமரிக்கிறது மற்றும் அதன் முடிவுகள் கீழ் நீதிமன்றங்களை கட்டுப்படுத்தும்.
அ) கூற்று சரி, காரணம் தவறு
ஆ) கூற்று காரணம் இரண்டும் தவறு
இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
விடை:
இ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
Question 5.
ஆம் / இல்லை எனக் கூறுக.
அ) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம்.
விடை:
ஆம்
ஆ) பணக்காரர் மற்றும் சக்தி படைத்த மக்கள் நீதித்துறை அமைப்பை கட்டுப்படுத்துகின்றனர்.
விடை:
இல்லை
இ) ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நீதிமன்றங்களின் மூலம் நீதியைப் பெற உரிமை உடையவராவர்.
விடை:
ஆம்
ஈ) அரசியல்வாதிகள் நீதிபதிகளைக் கட்டுப்படுத்த முடியாது.
விடை:
ஆம்
VI. பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி
Question 1.
நீதித்துறை அமைப்பு நமக்கு ஏன் தேவைப்படுகிறது?
விடை:
- நீதித்துறை அரசின் மூன்றாவது அங்கமாகும்.
- இது மக்களின் உரிமைகளையும். சுதந்தரத்தையும் பாதுகாக்கிறது.
- இது நீதியை நிர்வகித்தல், தகராறுகளைத் தீர்த்தல், சட்டங்களுக்கு விளக்கம் அளித்தல், அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாகவும் விளங்குகிறது. எனவே நமக்கு நீதித்துறை தேவைப்படுகிறது.
Question 2.
இந்திய நீதிமன்றங்களின் பல்வேறு படிநிலைகள் யாவை?
விடை:
- உச்ச நீதிமன்றம்
- உயர் நீதிமன்றம்
- மாவட்ட நீதிமன்றம்
- துணை நீதிமன்றம்
Question 3.
சட்டம், நீதித்துறை – வேறுபடுத்துக.
விடை:
சட்டம்:
இது மக்களை ஆள்வதற்கு ஓர் அரசாங்கத்தாலோ அல்லது நிறுவனத்தாலோ விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு ஆகும்.
நீதித்துறை:
சட்டப்படி, ஒரு நாட்டின் பெயரால் நீதியை வழங்குகின்ற நீதிமன்றங்களின் அமைப்பு நீதித்துறை எனப்படுகிறது.
Question 4.
மக்கள் நீதிமன்றம் பற்றி குறிப்பு எழுதுக.
விடை:
- விரைவான நீதியை வழங்க லோக் அதாலக் என்ற மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.
- இது மக்கள் முன்னிலையில் மக்கள் பேசும் மொழியிலேயே பிரச்சனையை விசாரித்து தீர்வு காண்கிறது.
- ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி. ஒரு சமூக பணியாளர். ஒரு வழக்கறிஞர் ஆகிய மூன்று நபர்கள் கொண்ட அமர்வு இதற்குத் தலைமை வகிக்கும்.
- வழக்குரைஞர் இல்லாமல் வழக்குகள் முன் வைக்கப்படுகின்றன.
- இந்த வழக்குகள் பரஸ்பர ஒப்புதல் மூலம் தீர்த்து வைக்கப்படுகின்றன.
Question 5.
நடமாடும் நீதிமன்றங்களின் நன்மைகள் யாவை?
விடை:
- நடமாடும் நீதிமன்றங்கள் கிராமப்புற மக்களின் இடர்களைத் தீர்க்கும் ஒன்றாக இருக்கும்.
- இது கிராமப்புற மக்களிடையே நீதி அமைப்பு பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்கி, அவர்களது செலவைக் குறைத்து அவர்களின் வாழிடங்களிலேயே நீதியை வழங்க வழி செய்கிறது.
VII. விரிவான விடையளி
Question 1.
நீதித்துறையின் பங்கு பற்றி எழுதுக.
விடை:
Question 2.
உரிமையியல் சட்டம், குற்றவியல் சட்டம் – வேறுபடுத்துக.
விடை:
Question 3.
உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புகளை விவரி.
விடை:
அ) முதன்மை அதிகார வரம்பு:
உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே முதன்முறையாக தொடுக்கப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம்பெற்றுள்ளது. மத்திய அரசிற்கும் ஒருமாநிலம் அல்லது அதற்குமேற்பட்ட மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சினைகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைகள் ஆகியன முதன்மை அதிகார வரம்புக்குள் அடங்கும்.
ஆ) மேல் முறையீட்டு அதிகார வரம்பு:
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது. அவ்வாறான வழக்குகள் மேல்முறையீட்டுக்குத் தகுதியுள்ளது என உயர்நீதிமன்றத்தால் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
இ) ஆலோசனை அதிகார வரம்பு:
குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்படும் பொது முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி குறித்து ஆலோசனை வழங்கும் அதிகாரத்தினை உச்ச நீதிமன்றம் பெற்றுள்ளது.
ஈ) நீதிப் பேராணை அதிகார வரம்பு:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டப்பிரிவு 32ன் படி உச்ச நீதிமன்றமும் சட்டப்பிரிவு 226ன் படி உயர்நீதிமன்றமும் நீதிப் பேராணைகளை வழங்குகின்றன.
உ) ஆவண நீதிமன்றம்:
இது நீதிமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளை பராமரிக்கிறது. மற்றும் அதன் முடிவுகள் கீழ்நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும்.
ஊ) சிறப்பு அதிகாரங்கள்:
இது கீழ் நீதிமன்றங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்கிறது.
VIII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு
Question 1.
விவாதி: ஒரு சுதந்திரமான நீதித்துறை என்பது அவசியமா? இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.
Question 2.
மாதிரி நீதிமன்ற அறை அமர்வுக்காக உங்கள் வகுப்பறையை ஒழுங்கமைக்கவும் (ஆசிரியரின் உதவியுடன் ஒரு வழக்கை எடுத்து விவாதிக்கலாம்).
8th Social Science Guide நீதித்துறை Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
Question 1.
ஒழுங்கு முறைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
அ) 1737
ஆ) 1773
இ) 1776
ஈ) 1784|
விடை:
ஆ) 1773
Question 2.
வில்லியம் கோட்டை நிறுவப்பட்டுள்ள இடம்
அ) சென்னை
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) டெல்லி
விடை:
இ) கல்கத்தா
Question 3.
இந்தியாவில் முதல் உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட இடம்
அ) சென்னை
ஆ) பம்பாய்
இ) கல்கத்தா
ஈ) டெல்லி
விடை:
இ) கல்கத்தா
Question 4.
யாருடைய காலத்தில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டு, மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன?
அ) மாண்டெஸ்கியூ
ஆ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
இ) இராபர்ட் கிளைவ்
ஈ) காரன் வாலிஸ்
விடை:
ஈ) காரன் வாலிஸ்
Question 5.
விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட ஆண்டு
அ) 1992
ஆ) 1994
இ) 1982
ஈ) 2000
விடை:
ஈ) 2000
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
Question 1.
பண்டைய காலத்தில் …………. நீதியின் மூலாதாரமாக விளங்கினார்.
விடை:
அரசர்
Question 2.
1801 மற்றும் 1824 ஆம் ஆண்டுகளில் …………….. மற்றும் …………………. ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
விடை:
மதராஸ், பம்பாய்
Question 3.
முதல் லோக் அதலாத் 1982 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள ……………….. என்னுமிடத்தில் நடைபெற்றது. ……………….. என்னுமிடத்தில் நடைபெற்றது.
விடை:
ஜுனாகத்
Question 4.
தேசிய சட்ட சேவைகள் அதிகாரம் அமைக்கப்பட்ட ஆண்டு …………..
விடை:
1987
Question 5.
ஒரு திறன்மிக்க நீதித்துறை ……………., …………… இருக்க வேண்டும்.
விடை:
சுதந்திரமாகவும், பொறுப்பு உணர்வுடனும்
Question 6.
இந்திய உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்ட நாள் ……………
விடை:
ஜனவரி 28, 1950
III. சரியா / தவறா எனக் குறிப்பிடுக
Question 1.
பண்டைய காலத்தில் நீதி என்ற கருத்து சமயத்துடன் தொடர்புடையதாக இருந்தது.
விடை:
சரி
Question 2.
எலிஜா இம்ஃபே என்பவர் சென்னை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
விடை:
தவறு
Question 3.
1862 ஆம் ஆண்டு சென்னை . பம்பாய். கல்கத்தா நகரங்களில் செயல்பட்ட உச்ச நீதிமன்றங்கள் உயர் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டன.
விடை:
சரி
Question 4.
வில்லியம் பெண்டிங் காலத்தில் நான்கு மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
விடை:
தவறு
Question 5.
மாண்டெஸ்கியூ அதிகாரப் பகிர்வு கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தார்.
விடை:
சரி
IV. சரியான கூற்றைத் தேர்ந்தெடு
Question 1.
பின்வரும் கூற்றை ஆராய்க.
i) நீதித்துறை அரசியலமைப்புச் சட்டத்தின் பொறுப்பாளராக உள்ளது.
ii) நாடாளுமன்றம் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலராக உள்ளது.
மேலே கொடுக்கப்பட்ட எந்த கூற்று / கூற்றுகள் சரியானவை?
அ) i மட்டும்
ஆ) ii மட்டும்
இ) i மற்றும் ii
ஈ) இரண்டும் இல்லை
விடை:
அ) i மட்டும்
Question 2.
உயர் நீதிமன்றம் பற்றிய பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல?
i) உயர் நீதிமன்றம் மாநிலங்களின் மிக உயர்ந்த நீதிமன்றமாகும்.
ii) இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு உயர் நீதிமன்றம் உள்ளது.
iii) இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் தங்களுக்கென ஒரு பொதுவான நீதிமன்றத்தைக் கொண்டிருக்கலாம்.
iv) தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் ஒரு பொதுவான நீதிமன்றத்தைக் கொண்டுள்ளன.
அ) i
ஆ) ii
இ) iii
ஈ) iv
விடை:
ஈ) iv
Question 3.
கூற்று : நீதிப்பேராணைகள் வழங்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு. உயர் நீதிமன்றங்களுக்குக் கிடையாது.
காரணம் : அரசியல் சட்டத்தில் அதற்கு இடம் இல்லை .
அ) கூற்று சரியானது, காரணம் தவறானது
ஆ) கூற்று மற்றும் காரணம் தவறானவை
இ) கூற்று சரி, காரணம் கூற்றினை விளக்குகிறது
ஈ) கூற்று சரி, காரணம் கூற்றினை விளக்கவில்லை
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் தவறானவை
V. பின்வருவனவற்றிக்கு ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி
Question 1.
மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் அமர்வு நீதிமன்றங்களுக்கிடையேயான வேறுபாடு என்ன?
விடை:
- மாவட்ட அளவில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- மாவட்ட அளவில் குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் அமர்வு நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
Question 2.
சுதந்திரமான நீதித்துறை ஏன் அவசியம்?
விடை:
- நியாயமான நீதி கிடைப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் முக்கியமானதாகும்.
- இந்தியா போன்ற மக்களாட்சி நாடுகளில் நீதித்துறை குடிமக்களின் உரிமைகளின் பாதுகாவலனாக உள்ளது. எனவே சுதந்திரமான நீதித்துறை அவசியமானதாகும்.
VI. பின்வருவனவற்றிற்க்கு விரிவான விடையளி
Question 1.
இந்தியாவில் நீதிமன்றங்களின் அமைப்பினை விவாதி.
விடை:
உச்ச நீதிமன்றம்:
- உச்ச நீதிமன்றம் இந்தியாவின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஆகும்.
- இது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் ஆகும்.
- இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.
- இது ஒரு ஆவண நீதிமன்றமாக செயல்படுகிறது.
- இது உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யலாம்.
- இதுவே நாட்டின் இறுதி மேல்முறையீட்டு நீதிமன்றமாகும்.
உயர் நீதிமன்றம் :
- உயர் நீதிமன்றம் மாநிலங்களின் உயர்ந்த நீதிமன்றமாகும்.
- இது கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல் முறையீடுகளை விசாரிக்கிறது.
- அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காக நீதிப்பேராணைகள் வழங்கும் அதிகாரம் பெற்றுள்ளது.
- இது கீழ் நீதிமன்றங்களைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றுள்ளது.
மாவட்ட நீதிமன்றங்கள்:
மாவட்ட அளவில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகிறது.
அமர்வு நீதிமன்றங்கள்:
குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் அமர்வு நீதிமன்றங்கள் என்று அழைக்கப்படுகிறது.
பஞ்சாயத்து நீதிமன்றங்கள்:
கிராம அளவில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை பஞ்சாயத்து நீதிமன்றங்கள் கையாளுகிறது.
வருவாய் நீதிமன்றங்கள்:
வருவாய் நீதிமன்றங்கள் சில ஆவணங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறது. இது நில வருவாயை நிர்ணயம் செய்து நில உரிமையாளர்களிடமிருந்து அதனை வசூலிக்கிறது.
லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றங்கள்):
விரைவான நீதியை வழங்க லோக் அதலாத் அமைக்கப்பட்டது. இது மக்கள் முன்னிலையில் மக்கள் பேசும் மொழியிலேயே பிரச்சனையை விசாரித்து தீர்வு காண்கிறது.
விரைவு நீதிமன்றங்கள்:
இந்நீதிமன்றங்கள் 2000 ஆம் ஆண்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் கீழ் நீதிமன்ற வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்திற்காகத் தோற்றுவிக்கப்பட்டன.
தொலைதூர சட்ட முன்னெடுப்பு:
கிராமப்புற மக்களுக்காக சட்ட உதவி மற்றும் சேவைகள் வழங்குவதற்காக இது தொடங்கப்பட்டது. இதில் காணொளிக் கலந்துரையாடல் மூலம் வழக்குரைஞர்களிடமிருந்து மக்கள் சட் ஆலோசனைகளைப் பெறலாம்.
குடும்ப நீதிமன்றங்கள்:
குடும்பம் தொடர்பான சட்ட விவகாரங்களை குடும்ப நீதிமன்றம் கையாளுகிறது. இவைக உரிமையியல் நீதிமன்றங்கள் ஆகும். குழந்தையின் பாதுகாப்பு, மணமுறிவு, தத்தெடுப்ப சிறார் பிரச்சனைகள் ஆகிய குடும்பம் தொடர்பான பல்வேறு உரிமைகள், கோரிக்கைகளுக்கா இந்நீதிமன்றங்கள் பயன்படுகின்றன.
நடமாடும் நீதிமன்றங்கள்:
நடமாடும் நீதிமன்றங்கள் கிராமப்புற மக்களுக்கு இடர்களைத் தீர்க்கும் ஒன்றாய் இருக்கும். இது கிராமப்புற மக்களிடையே நீதி அமைப்பு பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்கி. அவர்களது செலவைக் குறைத்து. அவர்களின் வாழிடங்களிலேயே நீதியை வழங்க வகை செய்கிறது.
இ-நீதிமன்றங்கள்:
இத்திட்டத்தின்படி அனைத்து நீதிமன்றங்களும் கணினிமயமாக்கப்படும். நீதித்துறை சேலை மையம் இ-நீதிமன்றத்தின் ஒரு பகுதியாகும். பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்கள் நேரடியா வழக்கு நிலை மற்றும் அடுத்த விசாரணை தேதிகளை கட்டணமின்றி கேட்டறியலாம்.
Question 2.
இந்திய நீதித்துறையின் பரிமாண வளர்ச்சியை ஆராய்க.
விடை:
பண்டைய காலத்தில் நீதித்துறை:
- பண்டைய காலத்தில் நீதி என்ற கருத்து சமயத்துடன் தொடர்புடையதாக இருந்தது.
- அரசர் நீதியின் மூலாதாரமாக விளங்கினார்.
- தர்மத்தின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டது.
இடைக்கால இந்தியாவில் நீதித்துறை:
- துக்ளக் ஆட்சிகாலத்தில் உரிமையியல் நடைமுறைச் சட்டங்கள் தொகுக்கப்பட்டன. இது ஃபைகா இ-பெரோஸ்-ஷாகி என அழைக்கப்பட்டது.
- ஔரங்கசீப் காலத்தில் இது ஃபட்வா-இ-ஆலம்கிர் என்ற சட்டத் தொகுப்பின்படி மாற்ற அமைக்கப்பட்டது.
நவீன இந்தியாவில் நீதித்துறை:
- 1727 ஆம் ஆண்டு மதராஸ், பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் மேயர் நீதிமன்றங்க அமைக்கப்பட்டன.
- 1773 ஒழுங்கு முறைச் சட்டத்தின் படி கல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
- 1801 மற்றும் 1824ஆம் ஆண்டுகளில் மதராஸ் மற்றும் பம்பாய் ஆகிய இடங்களில் உச் நீதிமன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
- 1862 ஆம் ஆண்டு இம்மூன்று இடங்களிலும் இருந்த உச்ச நீதிமன்றங்களுக்குப் பதிலா உயர்நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
- பின்னர் சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிசாமத் அதாலத் ஆகிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
- காரன்வாலிஸ் காலத்தில் கல்கத்தா, டாக்கா. மூர்ஷிதாபாத் மற்றும் பாட்னா ஆகிய இடங்களி மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
- பெண்டிங் பிரபு காலத்தில் இந்த நான்கு மேல்முறையீட்டு நீதிமன்றங்களும் நீக்கப்பட்டன.
- அலகாபாத்தில் சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிசாமத் அதாலத் ஆகிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
- மெக்காலே என்பவரால் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம் இந்திய சட்டங்களை நெறிமுறைப்படுத்தியது.
- இந்திய தண்டனைச் சட்டம், மற்றும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் ஆகியவை உருவாக்கப்பட்டன.
- 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் கூட்டாட்சி நீதிமன்றங்களை உருவாக்கியது.
- 1950 ஜனவரி 28ஆம் நாள் இந்திய உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டது.
VIII. மனவரைபடம்