Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Social Science Guide Pdf Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Questions and Answers, Notes.

TN Board 8th Social Science Solutions Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

8th Social Science Guide மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
ஒரு மாநிலத்தின் ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
அ) குடியரசுத் தலைவர்
ஆ) துணைக் குடியரசுத் தலைவர்
இ) பிரதம மந்திரி
ஈ) முதலமைச்சர்
விடை:
அ) குடியரசுத் தலைவர்

Question 2.
மாநில அமைச்சரவைக் குழுவின் தலைவர்
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) சபாநாயகர்
ஈ) உள்துறை அமைச்சர்
விடை:
ஆ) முதலமைச்சர்

Question 3.
மாநில சட்டமன்ற கூட்டத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் பெற்றவர்
அ) உள்துறை அமைச்சர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) சபாநாயகர்
ஈ) ஆளுநர்
விடை:
ஈ) ஆளுநர்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 4.
உயர் நீதி மன்ற நீதிபதிகளை நியமிப்பதில் பங்கு பெறாதவர் யார்?
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி
ஈ) குடியரசுத் தலைவர்
விடை:
ஆ) முதலமைச்சர்

Question 5.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது
அ) 62
ஆ) 64
இ) 65
ஈ) 58
விடை:
ஆ) 62

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை ____________ ஆகும்.
விடை:
29

Question 2.
ஆளுநரின் பதவிக்காலம் ____________ ஆண்டுகள் ஆகும்.
விடை:
5

Question 3.
மாவட்ட நீதிபதிகள் ____________ ஆல் நியமிக்கப்படுகின்றனர்.
விடை:
ஆளுநர்

Question 4.
ஆளுநர் ஒரு மாநிலத்தின் ____________ ஆவார்.
விடை:
நிர்வாகத் தலைவர்

Question 5.
ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராக ____________ வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
விடை:
25 வயது

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 1

IV. சரியா / தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார்.
விடை:
சரி

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 2.
ஆளுநர் சட்ட மன்றத்திற்கு இரண்டு ஆங்கிலோ இந்திய உறுப்பினர்களை நியமிக்கிறார்.
விடை:
தவறு

Question 3.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை நிலையாகவும் ஒரே மாதிரியாகவும் இருப்பதில்லை .
விடை:
சரி

V. சரியான கூற்றைத் தேர்ந்தெடு

Question 1.
மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்கண்டவர்களுள் யாரைத் தேர்ந்தெடுப்பதில் பங்கு பெறுகின்றனர்
i) குடியரசுத் தலைவர்
ii) துணை குடியரசுத் தலைவர்
iii) ராஜ்ய சபை உறுப்பினர்கள்
iv) சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள்

அ) i, ii & iii சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i, iii மற்றும் iv சரி
ஈ) i, ii, iii மற்றும் iv சரி
விடை:
இ) i, iii மற்றும் iv சரி

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக
விடை:

  • இந்தியாவில் மாநில சட்டமன்றம் என்பது ஆளுநரையும் ஒன்று அல்லது இரண்டு அவைகளையும் கொண்டிருக்கும்
  • சட்டமன்ற மேலவை, சட்டமன்ற கீழவை முதலியன இரு அவைகளாகும்.

Question 2.
மாநில சட்டமன்ற பேரவை உறுப்பினராவதற்கு உள்ள தகுதிகள் யாவை?
விடை:

  • சட்டமன்ற பேரவை உறுப்பினராக ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது.

Question 3.
முதலமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
விடை:

  • ஆளுநர் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை கொண்டுள்ள கட்சியின் தலைவரை மாநில முதலமைச்சராக நியமிக்கிறார்.
  • முதலமைச்சர் மாநில சட்டமன்றத்தில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
  • இவர் பதவியேற்கும் போது உறுப்பினராக இல்லாவிட்டால் மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.

Question 4.
மாநில அமைச்சரவை குழு எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
விடை:
முதலமைச்சர், அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து அமைச்சர்களை தேர்வு செய்கிறார்.

முதல்வர் மற்றும் அவரது தலைமையிலான பல்வேறு துறை அமைச்சர்களும் கொண்ட அமைப்பு மாநில அரசாங்கம் என அழைக்கப்படுகிறது. இதுவே அமைச்சரவை குழுவாகும்.

VII. விரிவான விடையளி

Question 1.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
விடை:

  • மாநிலத்தின் தலைமை நிர்வாகி முதலமைச்சர் ஆவார். மாநில அரசின் பல முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன.
  • அமைச்சரவையை உருவாக்குவதில் ‘முதலமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார். இவரது ஆலோசனையின் பெயரில் அமைச்சர்களை ஆளுனர் நியமிக்கிறார்.
  • பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்கி, அவற்றின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
  • முதலமைச்சர் மாநில அரசின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். மேலும் மாநில அரசின் கொள்கைகள் மக்களின் நலனுக்கு எதிராக இல்லாததை உறுதி செய்கிறார்.
  • மாநில அரசின் கொள்கை முடிவுகளில் அவரது முடிவே இறுதியானது ஆகும்.
  • இவர் மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
  • முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படியே ஆளுனர் பல்வேறு உயர் அதிகாரிகளை நியமிக்கிறார்.

Question 2.
மாநில சட்ட மன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
விடை:
சட்டமன்றம் ஆண்டிற்கு இரண்டு அல்லது மூன்று முறை கூடும். மாநிலத்திற்கான சட்டங்களை இயற்றுவது சட்டமன்றத்தின் முக்கிய பணி ஆகும்.

சட்டமன்றம் மாநிலப்பட்டியல் மற்றும் மத்தியப்பட்டியலில் உள்ள துறைகள் தொடர்பாக சட்டத்தை இயற்றலாம். எனினும் நெருக்கடி நிலை நடைமுறையில் உள்ள போது சட்டமன்றம் தனது சட்டமியற்றும் அதிகாரத்தை பயன்படுத்த இயலாது.

மாநில சட்டமன்றம் அமைச்சரவையின் மீது கட்டுப்பாட்டினை செலுத்துகிறது.

மாநில அமைச்சரவை சட்டமன்றத்திற்கு பொறுப்புள்ளதாகவும் மற்றும் பதில் அளிக்கவும் கடமைப்பட்டுள்ளது.

அமைச்சரவை செயல்பாடுகளில் திருப்தி ஏற்படாவிட்டால் மாநில சட்டமன்றத்தில் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இயற்றி அமைச்சரவையை நீக்கம் செய்திடலாம்.

மாநில சட்டமன்றம் ஆனது மாநிலத்தின் நிதியைக் கட்டுபடுத்துகிறது. நிதி மசோதாவை சட்டமன்றத்தில் மட்டுமே கொண்டு வர இயலும்.

சட்டமன்றத்தின் அனுமதி இல்லாமல் மாநில அரசு வரியினை விதிக்கவோ, அதிகரிக்கவோ, குறைக்கவோ, விலக்கிக் கொள்ளவோ இயலாது.

சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பங்கு கொள்கின்றனர்.

குறிப்பாக அரசியலமைப்பைத் திருத்தும் சில நேர்வுகளில் சட்டமன்றம் பங்கு வகிக்கிறது.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 3.
உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்களையும், பணிகளையும் எழுது?
விடை:
உயர் நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் பணிகள் அடிப்படை உரிமைகள் மற்றும் இதர நோக்கங்களை வலியுறுத்த உயர்நீதிமன்றம் பல வித நீதிப் பேராணைகளைப் பிறப்பிக்கின்றன.

குறிப்பாக ஆட்கொணர்வு, தகுதி முறை வினவும், தடை உறுத்தும், கட்டளையிடும் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய வலியுறுத்தும் நீதிப் பேராணை ஆகியவற்றைப் பிறப்பிக்கின்றன.

ஒவ்வொரு உயர்நீதிமன்றமும் தனது அதிகார எல்லைக்குள் உள்ள ராணுவ நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் நீங்கலாக அனைத்து சார்நிலை நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களை கண்காணிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது.

சார்நிலை நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள ஒரு வழக்கில் அதில் சட்ட முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்றம் திருப்தியுறும் போது இவ்வழக்கினை எடுத்து தானே முடிவு செய்யலாம்.

இது மாநிலத்திலுள்ள அனைத்து சார் நிலை நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது.

உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தைப் போலவே வழக்குகள் பற்றிய பதிவேடுகளின் ஆதாரச் சான்றாக உள்ள பதிவுரு நீதிமன்றமாக விளங்குகிறது.

குறிப்பாக அரசியலமைப்பின் பாதுகாப்பு என்பது நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயல்படுவதன் மூ லமே உறுதி செய்யப்படுகிறது.

VIII. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு (மாணவர்களுக்கானது)

Question 1.
தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களின் ஆளுநர், முதலமைச்சர் பெயர்களைப் பட்டியலிடுக.

Question 2.
தமிழ்நாட்டின் அமைச்சர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறைகளையும் பட்டியலிடுக.

8th Social Science Guide மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது? Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
தமிழக சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை
அ) 500
ஆ) 545
இ) 234
ஈ) 118
விடை:
இ) 234

Question 2.
மாநிலத்தின் பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுபவர்
அ) மாநில முதலமைச்சர்
ஆ) கல்வி அமைச்சர்
இ) மாநில ஆளுநர்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை:
இ) மாநில ஆளுநர்

Question 3.
மாநில அரசின் சட்டங்கள் யாரால் இயற்றப்படுகின்றன
அ) மாநில ஆளுநர்
ஆ) குடியரசுத் தலைவர்
இ) முதலமைச்சர்
ஈ) சட்டமன்ற உறுப்பினர்கள்
விடை:
ஈ) சட்டமன்ற உறுப்பினர்கள்

Question 4.
சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம்
அ) 5 ஆண்டுகள் தா
ஆ) 6 ஆண்டுகள்
இ) 2 ஆண்டுகள்
ஈ) 4 ஆண்டுகள்
விடை:
ஆ) 6 ஆண்டுகள்

Question 5.
மாநில அரசின் உயர் அதிகாரிகளை நியமிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்
அ) ஆளுநர்
ஆ) முதலமைச்சர்
இ) அமைச்சர் குழு
ஈ) குடியரசுத்தலைவர்
விடை:
ஆ) முதலமைச்சர்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.
பதவியேற்ற முதலமைச்சர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால் ______________ காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும்
விடை:
ஆறு மாத

Question 2.
சட்டமன்ற _____________ உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்
விடை:
மேலவை

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 3.
சட்டமன்ற கூட்டம் நடைபெறாத போது ______________ அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கிறார்
விடை:
ஆளுநர்

Question 4.
____________ ஆனது மாநிலத்தின் நிதியைக் கட்டுப்படுத்துகிறது
விடை:
மாநில சட்டமன்றம்

III. பொருத்துக

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 2

IV. சரியா தவறா எனக் குறிப்பிடுக.

Question 1.
மாநில அரசாங்கம் ஆளுநரை பதவியிலிருந்து நீக்கலாம்.
விடை:
தவறு

Question 2.
மேலவையில் ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பட்டதாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
விடை:
தவறு

Question 3.
அனைத்து சார்நிலை நீதிமன்றங்களும் உயர்நீதி மன்றங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
விடை:
சரி

V. சரியா கூற்றைத் தேர்வு செய்யவும்

Question 1.
சட்டமன்ற பேரவைக்கான நடைமுறைகள்
i) சட்டமன்ற கூட்டத்திற்கு அவைத்தலைவர் தலைமை ஏற்கிறார்.
ii) இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்
iii) சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
iv) இது மேலவையைக் காட்டிலும் அதிக அதிகாரமுடையது

அ) 1 மற்றும் ii சரி
ஆ) i, iii மற்றும் iv சரி
இ) ii, iii மற்றும் iv சரி
ஈ) அனைத்தும் சரி
விடை:
இ) ii, iii மற்றும் iv சரி

VI. கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

Question 1.
சட்டமன்ற மேலவை பற்றி சிறுகுறிப்பு வரைக.
விடை:
ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவையானது நாற்பது உறுப்பினர்களுக்குக் குறையாமலும், அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது.

சட்டமன்ற மேலவை ஒரு நிலையான அவையாகும். இதன் உறுப்பினர்கள் மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

Question 2.
ஆளுநரின் நிலைப்பாடுகள் பற்றி நீவிர் அறிவன யாவை?
விடை:

  • மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தில் பெயரளவு நிர்வாகத் தலைவராக உள்ளார்.
  • இவர் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே உள்ள உறவுகளைப் பராமரிப்பதற்குப் பொறுப்பு வாய்ந்தவர் ஆவார்.

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது?

Question 3.
உயர்நீதி மன்ற நீதிபதிகளின் தகுதிகள் யாவை?
விடை:

  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • இந்தியாவில் 10 ஆண்டுகள் நீதித்துறை அலுவலராக பணியாற்றி இருக்க வேண்டும்.
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உயர்நீதி மன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

Question 1.
சட்டமன்ற பேரவைக்கான தேர்தல் பற்றி விரிவாக எழுது
விடை:
சட்டமன்ற பேரவைக்கான தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் தமது வேட்பாளர்களை நியமிக்கின்றன.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மக்களிடம் தமக்கு வாக்களிக்குமாறு கோருகிறார்.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஒருவர் 25 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். ஒருவர் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட தொகுதிகளில் போட்டியிடலாம்.

எந்த கட்சியையும் சாராத ஒருவரும் தேர்தலில் போட்டியிடலாம். அவ்வாறு போட்டியிடும் வேட்பாளர் சுயேச்சை வேட்பாளர் என அழைக்கப்படுகிறார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஒரு சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 18 வயது நிரம்பிய அனைவரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கலாம்.

அரசியலமைப்பின்படி ஒரு மாநில சட்டமன்றத்தில் 500 உறுப்பினர்களுக்கு மேலாகவும் 60 உறுப்பினர்களுக்கு குறைவாகவும் இருத்தல் கூடாது.

சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் மாநில ஆளுநர், சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அதனை கலைத்து புதிதாக தேர்தல் நடத்த அழைப்பு விடுக்கலாம்.

சபாநாயகர் இல்லாத நேர்வுகளில் துணை சபாநாயகர் சட்டமன்ற கூட்டத்திற்கு தலைமை ஏற்கிறார்.

Question 2.
ஆளுநரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
விடை:
ஆளுநர் ஒரு மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மாநில அரசாங்கத்தின் அனைத்து நிர்வாக செயல்களும் ஆளுநரின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆளுநர் முதலமைச்சரையும் அவரது ஆலோசனையில் பேரில் ஏனைய அமைச்சர்களையும் நியமிக்கிறார்.

மாநில அரசின் தலைமை வழக்கறிஞர், மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்வதோடு சில இதர நியமனங்களையும் மேற்கொள்கிறார்.

ஆளுநரின் அறிக்கையின் படி குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏற்படுத்துகிறார்.

மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் செயல்படுகிறார்.

மாநில சட்டமன்ற கூட்டத்ததைக் கூட்டவும், ஒத்தி வைக்கவும் மற்றும் சட்டமன்றத்தைக் கலைக்கவும் அதிகாரம் கொண்டுள்ளார். > ஆளுநரின் ஒப்புதலுக்குப் பின்னரே பண மசோதாவைச் சட்டமன்றத்தில் கொண்டு வர முடியும்.

மாநில சட்ட மேலவைக்கு அறிவியல், இலக்கியம், கலை, சமூக சேவை ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றிய அறிஞர்களில், ஆறில் ஒரு பங்கு அளவிற்கு பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமிக்கிறார்.

மாநில அரசாங்கத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டமன்றத்திற்குள் சமர்பிக்கப்படுகிறது.

சட்டமன்ற கூட்டம் நடைபெறாத போது ஆளுநர் அவசரச் சட்டத்தை பிறப்பிக்கிறார்.

VIII. மனவரைபடம்

Samacheer Kalvi 8th Social Science Guide Civics Chapter 1 மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது 3