Students can Download Tamil Chapter 2.3 விலங்குகள் உலகம் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
ஆசிய யானைகளில் ஆண் – பெண் யானைகளை வேறுபடுத்துவது ….
அ) காது
ஆ) தந்தம்
இ) கண்
ஈ) கால்கள்
Answer:
ஆ) தந்தம்

Question 2.
தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் ………..
அ) வேடந்தாங்கல்
ஆ) கோடியக்கரை
இ) முண்டந்துறை
ஈ) கூந்தன்குளம்
Answer:
இ) முண்டந்துறை

Question 3.
‘காட்டாறு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) காடு + ஆறு
ஆ) காட்டு + ஆறு
இ) காட் + ஆறு
ஈ) காட் + டாறு
Answer:
அ) காடு + ஆறு

Question 4.
‘அனைத்துண்ணி ’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ……………..
அ) அனைத்து + துண்ணி
ஆ) அனை + உண்ணி
இ) அனைத் + துண்ணி
ஈ) அனைத்து + உண்ணி
Answer:
ஈ) அனைத்து + உண்ணி

Question 5.
‘நேரம் + ஆகி’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……….
அ) நேரமாகி
ஆ) நேராகி
இ) நேரம் ஆகி
ஈ) நேர் ஆகி
Answer:
அ) நேரமாகி

Question 6.
‘வேட்டை + ஆடிய’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
அ) வேட்டை ஆடிய
ஆ) வேட்டையாடிய
இ) வேட்டாடிய
ஈ) வேடாடிய
Answer:
ஆ) வேட்டையாடிய

கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
‘காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு’ – என்று அழைக்கப்படும் விலங்கு
Answer:
புலி

Question 2.
யானைக் கூட்டத்திற்கு ஒரு ……….. யானைதான் தலைமை தாங்கும்.
Answer:
பெண்

Question 3.
கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ………
Answer:
அடர்ந்த முடிகள்

குறுவினா

Question 1.
காடு – வரையறு.
Answer:
வளம் நிறைந்த நிலம், அடர்ந்த மரம், செடி கொடிகள், நன்னீர், நறுங்காற்று என் அனைத்தும் நிரம்பியது காடாகும். இது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற
பல்லுயிர்களின் வாழ்விடமாகும்.

Question 2.
யானைகள் மனிதர்களை ஏன் தாக்குகின்றன?
Answer:

  • பொதுவாக யானைகள் மனிதர்களைத் தாக்குவது இல்லை.
  • யானையின் வழித்தடங்களில் குறுக்கிடும் போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன.

Question 3.
கரடி ‘அனைத்துண்ணி ‘ என அழைக்கப்படுவது ஏன்?
Answer:
கரடி பழங்கள், தேன், உதிர்ந்த மலர்கள், காய்கள், கனிகள், புற்றீசல், கரையான் போன்ற வற்றை உணவாக உள்கொள்வதால் அனைத்துண்ணி என அழைக்கப்படுகின்றன.

Question 4.
மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
Answer:
இந்தியாவில் சருகுமான், மிளாமான், வெளிமான் என்பவை மானின் வகைகள் ஆகும்.

சிறுவினா

Question 1.
புலிகள் குறித்து நீங்கள் அறிந்து கொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:

  • புலிகள் தனித்து வாழும் இயல்பு உடையவை. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி
    மட்டுமே வாழும். மற்ற புலிகள் அந்த எல்லைக்குள் செல்லாது.
  • கர்ப்பம் அடைந்த புலியானது 90 நாட்களில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனும் (அல்லது) ஈன்றெடுக்கும். அந்தக் குட்டிகளை இரண்டு ஆண்டுகள் வரை வளர்த்து ஆளாக்கும்.
  • அப்புலிக்குட்டிகள் வேட்டையாடக் கற்றவுடன் அவற்றுக்கான எல்லைகளையும் பிரித்துத் தனியாக அனுப்பிவிடும். புலிதான் ஒரு காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு.
  • புலி தனக்கான உணவை வேட்டையாடிய பின்பு வேறு எந்த விலங்கையும்
    வேட்டையாடுவதில்லை. எனவே இதனைப் பண்புள்ள விலங்கு என்று கூறுவர்.

சிந்தனை வினா

Question 1.
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகளை பட்டியலிடுக.
Answer:
காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் :

(i) மரங்களை அழிப்பதால் கார்பன்-டை- ஆக்ஸைடு வாயுவின் அளவு அதிகரிக்கின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பல உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுகின்றன.

(ii) காடுகளை அழிப்பதன் விளைவாக மழை அளவு குறைகிறது. தட்ப வெப்பநிலை
மாற்றமடைகிறது. மண் அரிமானம் ஏற்படுகிறது.

(iii) புவி வெப்பமடைதல் நடைபெறுகிறது. இதன் விளைவாக தீயன உண்டாகின்றன.
மழைக் காலங்கள் மாறுபடுகின்றன. இயற்கைத் தாவரங்கள், மரங்கள் சட்டத்திற்குப் புறம்பாக அழிக்கப்படுகின்றன.

(iv) காடுகளை அழிப்பதால் காட்டில் வாழும் காட்டு விலங்கினங்கள் நாட்டுக்குள் புகுந்து பயிர்களை அழிக்கின்றன. மேலும் மனித உயிர்களை அச்சுறுத்திக் கொல்லுகின்றன. யானை, காட்டெருமை, புலி போன்ற விலங்குகள் கூட்டமாக உணவிற்காகவும் நீருக்காகவும் விளை நிலங்களுக்குள் வந்து அவற்றை அழிக்கின்றன.

(v) காடுகளை அழிப்பதாலும் மற்ற வெவ்வேறு காரணங்களாலும் பல்வேறு தாவர
இனங்கள் மற்றும் விலங்கினங்கள் அழிவுக்குத் தள்ளப்படுகின்றன.

கற்பவை கற்றபின்

Question 1.
விலங்குகள் தொடர்பான பழமொழிகளைத் திரட்டி வருக.
Answer:
(எ.கா) புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

  • கழுதைக் கெட்டா குட்டிச்சுவர்.
  • உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன், உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
  • நாய் வாலை நிமிர்த்த முடியாது.
  • கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.

Question 2.
காட்டு விலங்குகளின் படங்களைத் திரட்டி படத்தொகுப்பினை உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம் - 1
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.3 விலங்குகள் உலகம் - 2

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பண்புள்ள விலங்கு என்று எதனைக் குறிப்பிடுகிறோம்.
அ) புலி
ஆ) சிங்கம்
இ) கரடி
ஈ) மான்
Answer:
அ) புலி

Question 2.
‘காட்டுக்கு அரசன்’ என்று போற்றப்படும் விலங்கு எது?
அ) சிங்கம்
ஆ) சிறுத்தை
இ) புலி
ஈ) கரடி
Answer:
அ) சிங்கம்

Question 3.
யானை மிகுந்த நினைவாற்றல் கொண்ட விலங்கு .
அ) சரி
ஆ) இல்லை
இ) தவறு
ஈ) இவைகளில் ஏதுமில்லை
Answer:
அ) சரி

நீரப்புக :

Question 1.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் …….. சரணாலயத்தில் மட்டுமே ஆசிய சிங்கங்கள்
உள்ளன.
Answer:
கிர்

Question 2.
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் ………….
Answer:
மேட்டுப்பாளையம்

Question 3.
நன்கு வளர்ந்த கரடி ………. கிலோ எடை வரை இருக்கும்.
Answer:
160

விடையளி :

Question 1.
புலிகள் காப்பகம் எங்கு உள்ளது?
Answer:

  • புலிகள் காப்பகம் முண்டந்துறையில் உள்ளது.
  • முண்டந்துறை தமிழ்நாட்டில் உள்ளது.

Question 2.
பல்லுயிர்களின் வாழ்விடம் தான் இக்காடு-இக்கூற்றை மெய்ப்பிக்க.
Answer:

  • மனித முயற்சி இன்றி அதாவது மனித முயற்சி இல்லாமல் வளர்ந்த மரங்கள்,
    செடி, கொடிகள், புல், புதர்கள், பூச்சி இனங்கள், பறவைகள், விலங்குகள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடம் தான் இந்தக் காடாகும்.
  • இந்தக் காட்டின் இடை இடையே காட்டாறுகளும் நீரோடைகளும் இருக்கும்.

Question 3.
முண்டந்துறை புலிகள் காப்பகம் – குறிப்பு வரைக.
Answer:

  • தமிழ்நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம் முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகும்.
  • இது 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.
  • இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டு மாடு போன்ற அரிய விலங்குகள் வாழ்கின்றன.

Question 4.
உலகில் எத்தனை வகையான யானைகள் உள்ளன?
Answer:

  • உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன. ஆசிய யானை, ஆப்பிரிக்கா யானை.
  • ஆசிய யானைகளில் ஆண் யானைக்குத் தந்தம் உண்டு. பெண் யானைக்குத்
    தந்தம் இல்லை. ஆப்பிரிக்க யானைகளில் இரண்டுக்கும் தந்தம் உண்டு.

 

Question 5.
யானைகள் எப்போதும் கூட்டமாகத்தான் இருக்குமா? ஆம் எனில் விளக்கம் தருக.
Answer:

  • ஆம். யானைகள் எப்போதும் கூட்டமாகத்தான் வாழும். இந்தக் கூட்டத்திற்கு ஒரு பெண் யானைதான் தலைமை தாங்கும். யானைகள் தங்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் உணவு ஆகியவற்றிற்காக இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும்.
  • ஒரு யானை நாள் ஒன்றுக்கு 250 கிலோ புல், இலை தழைகளை உணவாக
    உட்கொள்ளும். அதற்குக் குடிக்க அறுபத்தைந்து லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
  • யானை மிகுந்த நினைவாற்றல் கொண்ட பாசமிகு விலங்கு ஆகும்.

Question 6.
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி எங்கு அமைந்துள்ளது?
Answer:
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ளது.

Question 7.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?
Answer:

  • கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் உள்ளது.
  • இங்கு இளநிலை வனவியல், முதுநிலை வனவியல் ஆகிய படிப்புகள் உள்ளன.

Question 8.
கரடி தன் உடலை தேனீக்களிடமிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்கிறது?
Answer:
கரடியின் உடலைப் போர்த்தி இருக்கும் அடர்ந்த முடிகள் தேனீக்களிடமிருந்து அதனைக் காப்பாற்றுகின்றன.

Question 9.
சிங்கம் பற்றி குறிப்பு வரைக.
Answer:
(i) உலகில் ஆசியச் சிங்கம். ஆப்பிரிக்கச் சிங்கம் என இரண்டு வகைச் சிங்கங்கள்
உள்ளன. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ‘கிர்’ சரணாலயத்தில் மட்டுமே ஆசியச் சிங்கங்கள் உள்ளன.

(ii) நீளம், உயரம், பருமன், எடை, பலம், வேட்டைத்திறன் ஆகிய அனைத்திலும் சிங்கத்தை விட புலியே உயர்ந்தது. எனவே புலியே காட்டுக்கு அரசன் என்கிறார்கள் இயற்கை விஞ்ஞானிகள்.